TnpscTnpsc Current Affairs

4th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. வங்கிகள் வாரிய பணியகத்திற்கு மாற்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு எது?

அ. நிதியியல் சேவைகள் நிறுவன பணியகம் (FSIB) 

ஆ. நிதி நிறுவனங்கள் பணியகம் (FIB)

இ. வங்கிகள் நியமன பணியகம் (BAB)

ஈ. வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பணியகம்

  • வங்கிகள் வாரிய பணியகத்திற்கு (BBB) மாற்றாக நிதியியல் சேவைகள் நிறுவன பணியகத்தை (FSIB) அமைக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. மூத்த நிர்வாக நிலை பதவிகளுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பதாரர்க
    –ளைத் தேர்ந்தெடுக்கும் பணி BBB–இடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாங்கம் நடத்தும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்க –ளுக்கான பொது மேலாளர்கள் மற்றும் இயக்குநர்களை BBB–ஆல் தேர்வு செய்ய முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. BBB–இன் முன்னாள் தலைவர் சர்மா இந்தப் புதிய அமைப்புக்கு தலைமை தாங்கவுள்ளார்.

2. ‘நாரி கோ நமன்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய மாநிலம் எது?

அ. உத்தரப்பிரதேசம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 

இ. பஞ்சாப்

ஈ. ஒடிஸா

  • ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், ‘நாரி கோ நமன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இது மாநிலத்திற்குள் பயணஞ்செய்ய பெண்களுக்கு பேருந்துக்கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. பெண் பயணிகள் மற்றும் மூத்த குடிமக்களை அழைத்துச்செல்லும் முயற்சியான ‘ரைட் வித் பிரைட்’ அரசு வாடகையுந்து சேவையில் 25 புதிய பெண் ஓட்டுனர் பணியிடங்களை அனுமதிப்பதாகவும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

3. நிதிசார் நடவடிக்கைகளுக்கான செயற்குழுவின் (FATF) புதிய தலைவர் யார்?

அ. T இராஜா குமார் 

ஆ. உர்ஜித் படேல்

இ. வைரல் ஆச்சார்யா

ஈ. சுபாஷ் சந்திர கார்க்

  • பணமோசடி தடுப்பு கண்காணிப்பு அமைப்பான Financial Action Task Force (FATF) தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த T ராஜா குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மார்கஸ் பிளேயருக்குப் பதிலாக அடுத்த ஈராண்டுகளுக்கு இந்தப் பதவியிலிருப்பார். FATF–இன் கூற்றுப்படி, உலகளாவிய பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி நடவடிக்கைகள், சொத்து மீட்பு மற்றும் பிற முயற்சிகளின் செயல்திறனை மேம்படுத்துவதில் தலைவர் தனது கவனத்தைச் செலுத்துவார்.

4. 2022 ஜூனில் ஈட்டப்பட்ட மொத்த GST வரி வருவாய் எவ்வளவு?

அ. ரூ. 1.45 இலட்சம் கோடி 

ஆ. ரூ. 1.30 இலட்சம் கோடி

இ. ரூ. 1.20 இலட்சம் கோடி

ஈ. ரூ. 1.15 இலட்சம் கோடி

  • 2022 ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாய் `144,616 கோடியாக உயர்ந்துள்ளது; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு GST அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக அதிகபட்சமாக வரி வருவாய் பெறப்பட்டுள்ளது. இந்தப் புதிய அதிகபட்ச வரிவசூல் விரைவான பொருளாதார மீட்சியைக் காண்பிப்பதாக நடுவண் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு `1,67,540 கோடி வசூலானது. 2022 மார்ச்சுக்குப்பிறகு, ஐந்தாவது முறையாக மாதாந்திர GST வசூல் `1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

5. ‘SDG National Indicator Framework (NIF) முன்னேற்ற அறிக்கை, 2022’ஐ வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

  • இந்தியா ஜூன்.29ஆம் தேதியை, ‘தேசிய புள்ளியல் நாள்’ எனக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு, “Data for Sustainable Development” என்பது கருப்பொருளாக இருந்தது. அமைச்சகம் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்–தேசிய சுட்டி கட்டமைப்பு (NIF) முன்னேற்ற அறிக்கை, 2022’ஐ வெளியிட்டது. இவ்வறிக்கையுடன், புதுப்பிக்கப்பட்ட NIF–2022 மற்றும் SDGஇன் NIF அறிக்கை – 2022 மற்றும் “Youth in India–2022” வெளியீடு ஆகியவையும் வெளியிடப்பட்டன.

6. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, எந்தத் தேதியிலிருந்து ‘ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழி’ப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது?

அ. 2022 ஏப்ரல்.01

ஆ. 2022 ஜூலை.01 

இ. 2023 ஜனவரி.01

ஈ. 2023 ஏப்ரல்.01

  • 2022 ஜூலை.01 முதல் தடைசெய்யப்படும் பொருட்களின் பட்டியலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வரையறுத்துள்ளது. கடந்த ஆண்டு இதற்கான தடை அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் உட்பட அனைத்து ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை 2022 ஜூலை.01 முதல் தடைசெய்யப்படும்.

7. ‘நூரி’ எண்ணும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விண்வெளி ஏவுகணையை ஏவிய நாடு எது?

அ. தென் கொரியா 

ஆ. ஈரான்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. இஸ்ரேல்

  • தென் கொரியா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையான ‘நூரி’யை அண்மையில் ஏவியது. இந்த ஏவுதல் வெற்றிபெற்றால், சொந்த தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் உலகின் 10ஆம் நாடாக தென் கொரியா மாறும். செயல்திறன் சரிபார்ப்பு செயற்கைக்கோளான இது தென் கொரியாவுக்கு மேலும் பல செயற்கைக்கோள்களை ஏவுதற்கு உதவும்.

8. மிகப்பெரிய தங்க மறுசுழற்சியாளர்கள் குறித்த உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. முதலாவது

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது

ஈ. நான்காவது 

  • ‘தங்க சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி’ என்ற தலைப்பிலான உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, தங்கத்தை மிகப்பெரிய அளவுக்கு மறுசுழற்சி செய்யும் உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியா 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்துள்ளது. அதே வேளையில் சீனா 168 டன்களை மறுசுழற்சி செய்து தரவரிசையில் முதலிடத்திலும், இத்தாலி 80 டன்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 78 டன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

9. Whoever, whatever, whenever. Everyone has a right to seek safety’ என்பது கீழ்க்காணும் எந்தச் சர்வதேச நாளுக்கானக் கருப்பொருளாகும்?

அ. உலக அகதிகள் நாள் 

ஆ. உலக மண் நாள்

இ. உலக ஐநா அமைதிப்படை தினம்

ஈ. உலக வளி நாள்

  • ஒவ்வோர் ஆண்டும், தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம்பெயர்ந்த அகதிகள் எதிர்கொள்ளும் சிக்கல் / சிரமங்களை முன்னிலைப்படுத்த, ஜூன்.20 அன்று உலக அகதிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா அவை 2001ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. 1951ஆம் ஆண்டு அகதிகள் தீர்மானத்தின் ஐம்பதாமாண்டு நிறைவை இது குறிக்கிறது. “Whoever, whatever, whenever. Everyone has a right to seek safety” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் உலக அகதிகள் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி அவர்கள் பின்வரும் எந்த மாநிலம்/UTஇல் திறந்து வைத்தார்?

அ. கர்நாடகா 

ஆ. குஜராத்

இ. தெலுங்கானா

ஈ. கேரளா

  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக (IISc) வளாகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை (CBR) பிரதமர் மோடி திறந்து வைத்தார். `280 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மூளை ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சிக்கான வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன் வயது மூப்பினருக்கான மூளை சம்பந்தமான நோய்களை களைவதற்கு ஆராய்ச்சிகளில் கவனஞ்செலுத்தவுள்ளது. நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை இது அளித்திடும். புதிய கண்டுபிடிப்புகளுடனான தீர்வுகளுடன் நாட்டில் சுகாதார சேவைகள் மேம்பட இந்தச் சிறப்பு மையம் உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 75 ஆயிரம் வேலை; 60 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

தமிழ்நாட்டில் சுமார் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில், 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் `1,25,244 கோடி முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமல்லாமல், `1,497 கோடி முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கிவைத்து, `22,252 கோடி முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

TNTecxperience தொடக்கம்

மாநிலத்தில் நிதித்தொழில்நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் (TNTecxperience) திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதித்தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம். மேலும், TNTecxperience திட்டத்திற்கான இணையதளத்தையும் ( https://tntecxperience. com) முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில் நுட்ப முதலீட்டுக் களவிழா – TN PitchFest – தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PtichFest), முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. வழிகாட்டி நிறுவனமும், StartupTN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன.

2. குடியரசுத்தலைவர் தேர்தல்: தமிழகக் கட்சிகளின் வாக்கு மதிப்புகள் எவ்வளவு?

தமிழகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தலில் பதிவாக உள்ள வாக்குகளின் மதிப்பு 81 ஆயிரத்து 84. இதில், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 41 ஆயிரத்து 184. மக்களவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 27 ஆயிரத்து 300. மாநிலங்களவைஉறுப்பினர்கள் வாக்கு மதிப்பு 12 ஆயிரத்து 600. குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் 50 சதவீதம் அளவு வாக்கு மதிப்புகளைப் பெறவேண்டும். மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431. அதில் 50 சதவீதம் பெறும் வேட்பாளர், இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

இந்தியாவில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வாக்கு மதிப்பு என்பது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வாக்கு மதிப்பில் இருந்தே தொடங்குகிறது. 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாகக்கொண்டு, வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி வரக்கூடிய தொகையைக்கொண்டு, மக்கள்தொகையின் எண்ணிக்கையை வகுத்தால் ஒரு மாநிலத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரது வாக்கு மதிப்பு தெரிந்துவிடும்.

இந்தியாவிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 83 ஆயிரத்து 824. இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 294 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த மாநிலத்தில் பேரவை உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 44 ஆயிரத்து 394. மகாராஷ்டிரம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் வருகிறது. இங்கு, ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கான வாக்கு மதிப்பு 176. மொத்த பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 41 ஆயிரத்து 184.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்: இந்தியாவில் 543 மக்களவை உறுப்பினர் பதவியிடங்களும், 233 மாநிலங்களவை பதவியிடங்களும் உள்ளன. மொத்தமாக நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 776. நாட்டிலுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த வாக்கு எண்ணிக்கையான 5.43 லட்சத்தை மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக்கொண்டு (776) வகுக்கும்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு கிடைக்கும். அதன்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை அல்லது மாநிலங்களவை) வாக்கு மதிப்பு 700.

எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு?

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 39 மக்களவை, 18 மாநிலங்களவை இடங்களும் உள்ளன. இதில், ஆளும் திமுகவுக்கு பேரவையில் 133 உறுப்பினர்களும், மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையில் 10 பேரும் உள்ளனர். அதிமுகவுக்கு பேரவையில் 66 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 4 பேரும், மக்களவையில் ஒருவரும் உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பேரவையில் 18 பேரும், மக்களவையில் 8 பேரும், மாநிலங்களவையில் ஒருவரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, குடியரசுத்தலைவர் தேர்தலில் திமுக 47 ஆயிரத்து 208 வாக்கு மதிப்புகளை வைத்துள்ளது.

1. Which new body has been approved to replace the Banks Board Bureau (BBB)?

A. Financial Services Institution Bureau (FSIB) 

B. Financial Institutions Bureau (FIB)

C. Banks Appointment Bureau (BAB)

D. Banks and Insurance Companies Bureau

  • The government has decided to set up the Financial Services Institution Bureau (FSIB) to replace the Banks Board Bureau (BBB). The BBB was entrusted with the task of selecting candidates for appointments to the senior management–level posts. Delhi High Court last year ruled that BBB couldn’t select the General Managers and directors of state–run general insurers. Former BBB chairman Sharma is set to head the new body.

2. Which Indian state has launched a new scheme named ‘Naari Ko Naman’?

A. Uttar Pradesh

B. Himachal Pradesh 

C. Punjab

D. Odisha

  • Himachal Pradesh Chief Minister Jai Ram Thakur launched the ‘Naari Ko Naman’ scheme. It aims to 50 per cent concession on bus fares to women for travel within the state. The state government also announced to sanction 25 new posts of women drivers in the ‘Ride With Pride’ government taxi service – an initiative to ferry women passengers and senior citizens.

3. Who is the new President of Financial Action Task Force (FATF)?

A. T Raja Kumar

 B. Urjit Patel

C. Viral Acharya

D. Subhash Chandra Garg

  • T Raja Kumar of Singapore has been appointed as the president of Financial Action Task Force (FATF), the anti–money laundering watchdog. He has replaced Marcus Pleyer and will discharge his service for next two years. As per FATF, the President will focus on enhancing the effectiveness of global anti–money laundering and counter–terrorist financing measures, improving asset recovery and other initiatives.

4. What is the total GST revenue collected in June 2022?

A. Rs 1.45 Lakh Crore 

B. Rs 1.30 Lakh Crore

C. Rs. 1.20 Lakh Crore

D. Rs. 1.15 Lakh Crore

  • The Goods and Services Tax (GST) revenue in June rose to ₹144,616 crore, the second–highest since the inception of GST five years ago. The new high collection is on the back of rapid economic recovery and stricter compliance, as per the Union Finance Ministry said. In April, the collection was the highest ever at ₹1,67,540 crore. This is the fifth time the monthly GST collection crossed the ₹1.40 lakh crore mark and fourth month at a stretch since March 2022.

5. Which Union Ministry released ‘SDG National Indicator Framework (NIF) Progress Report, 2022’?

A. Ministry of Finance

B. Ministry of Statistics and Programme Implementation 

C. Ministry of Home Affairs

D. Ministry of Environment, Forest and Climate Change

  • India has been celebrating 29th June as “Statistics Day”. This year, the theme was ‘Data for Sustainable Development’. The Ministry released ‘Sustainable Development Goals–National Indicator Framework (NIF) Progress Report, 2022’. Along with the report, the updated NIF 2022 and Data Snapshot on SDGs NIF Report 2022 and “Youth in India 2022” publication were also released.

6. As per the Ministry for Environment, Forest and Climate Change notification, use of ‘single–use plastic’ is banned with effect from which date?

A. 2022 April.01

B. 2022 July.01 

C. 2023 January.01

D. 2023 April.01

  • The Ministry for Environment, Forest and Climate Change has defined a list of items that will be banned from next month. The announcement of ban was made last year. As per the notification, the manufacture, import, stocking, distribution, sale and use of following single–use plastic, including polystyrene and expanded polystyrene, commodities shall be prohibited with effect from the 1st July, 2022.

7. Which country launched its first domestically built space rocket ‘Nuri’?

A. South Korea 

B. Iran

C. UAE

D. Israel

  • South Korea launched its first domestically built space rocket ‘Nuri’ in the country’s second attempt. Earlier, the country failed to place a payload into orbit. If the launch is successful, South Korea will become the world’s 10th nation to place a satellite into space with its own technology. The performance verification satellite will also help South Korea launch more satellites.

8. What is the rank of India in the World Gold Council (WGC) report of largest gold recyclers?

A. First

B. Second

C. Third

D. Fourth 

  • According to a World Gold Council (WGC) report titled ‘Gold refining and recycling’, India has emerged as the fourth largest recycler in the world. India has recycled 75 tonnes in 2021 while China topped the chart as it recycled 168 tonnes followed by Italy in the second position with 80 tonnes and the US at the third rank with 78 tonnes in 2021.

9. ‘Whoever, whatever, whenever. Everyone has a right to seek safety’ is the theme of which international day observed in June?

A. World Refugee Day 

B. World Soil Day

C. World UN Peacekeepers Day

D. World Wind Day

  • Every year, World Refugee Day is observed on June 20, to highlight the difficulties faced by refugees who have been displaced from their homes. The United Nations has celebrated this day since 2001 and the day marks the 50th anniversary of the 1951 refugee convention. The theme for this year’s World Refugee Day is ‘Whoever, whatever, whenever. Everyone has a right to seek safety.

10. Prime Minister Narendra Modi inaugurated the Centre for Brain Research (CBR) in which state/UT?

A. Karnataka 

B. Gujarat

C. Telangana

D. Kerala

  • Prime Minister Narendra Modi inaugurated the Centre for Brain Research (CBR) at the Indian Institute of Science (IISc) campus, Bengaluru. The Centre has been set up at a cost of Rs 280 crore. It is developed as the first research facility which focuses on conducting vital research to provide evidence–based public health interventions to manage age–related brain disorders.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!