4th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பிரதமர் உஜ்வாலா யோஜனாவை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ) எரிசக்தி அமைச்சகம்

ஆ) பெட்ரோலிய அமைச்சகம்

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

 • பிரதமர் உஜ்வாலா யோஜனாவின் அடுத்த சுற்றுக்கான வழிகாட்டுதல்க -ளை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இறுதிசெய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் பத்து மில்லியன் புதிய LPG இணைப்புகளை அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழுள்ள குடும்பங்களுக்கு LPG எரிவாயு இணை -ப்புகளை இலவசமாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுபோத் குமார் ஜெய்ஸ்வால், எந்த அமைப்பின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்?

அ) CVC

ஆ) CIC

இ) CBI

ஈ) NITI ஆயோக்

 • மகாராஷ்டிரத்தின் 1985 தொகுதி இ கா ப அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால், ஈராண்டுகாலத்திற்கு மத்திய புலனாய்வுப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைகளின் (CISF) தலைவராகவும் பணியாற்றிவருகிறார். அவர் புலனாய்வு பணியகம் & ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) ஆகியவற்றின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.

3. எந்த நாட்டின் அட்டு நகரத்தில், இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) மாலத்தீவுகள்

ஆ) இலங்கை

இ) பூட்டான்

ஈ) மியான்மர்

 • 2021ஆம் ஆண்டில் மாலத்தீவின் அட்டு நகரத்தில் இந்தியாவின் புதிய துணைத்தூதரகத்தைத் திறப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘Neighbourhood First Policy’ மற்றும் ‘SAGAR – Security & Growth for All in the Region’ ஆகியவற்றில் மாலத்தீவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அட்டு நகரத்தில் ஒரு துணைத்தூதரகம் திறக்கப்படுவது மாலத்தீவில் இந்தியாவின் அரசியல் இருப்பை மேம்படுத்த உதவும்.

4. தேசிய டிஜிட்டல் நலவாழ்வு திட்டத்தின்கீழ் அரசாங்கம் தொடங்க உள்ள UHI என்றால் என்ன?

அ) Union Health Institution

ஆ) Unified Health Interface

இ) United Health Institute

ஈ) Union Health Initiative

 • தேசிய டிஜிட்டல் நலவாழ்வு திட்டத்தின்கீழ் செயல்பாடுகளை விரைவாக விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இது ஓர் ஒருங்கிணைந்த நலவாழ்வு இடைமுகத்தை (UHI) தொடங்கவுள்ளது. இது, இணையவழி மருத்துவ ஆலோசனை மற்றும் ஆய்வகசோதனைகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட நலவாழ்வு சேவைகளை வழங்க டிஜிட்ட -ல் தளத்தைப்பயன்படுத்த மக்களுக்கு உதவும்.

5. SARS-CoV-2 வைரஸின் மரபணு பொருளான மூலக்கூறு எது?

அ) DNA

ஆ) RNA

இ) மேற்கண்ட இரண்டும்

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

 • வைரஸ்கள் அவற்றின் மரபணுப்பொருளாக RNA அல்லது DNA’ஐக் கொண்டுள்ளன. நியூக்ளிக் அமிலமானது ஒற்றை அல்லது இரட்டை இழைகளாக இருக்கலாம். SARS-CoV-2 வைரஸ் அதன் மரபணுப் பொருளாக RNA’ஐக்கொண்டுள்ளது.
 • சமீபத்தில், தைவானில், அறிவியலாளர்கள் ஒரு புதிய DNA அடிப்படையிலான COVID-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இது எலிகள் மற்றும் வெள்ளெலிகளில், நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை வெற்றிகரமாக தூண்டியது. தற்போது கிடைக்கக்கூடிய COVID-19 தடுப்பூசிகள், SARS-CoV-2 வைரஸை மனித நோயெதி -ர்ப்பு மண்டலம் அங்கீகரிக்க, மெசஞ்சர் RNA (mRNA)’ஐப் பயன்படுத்துகின்றன.

6. அதிவேகமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த பெண்ம -ணியான சாங் யின்-ஹங் சார்ந்த நாடு எது?

அ) சீனா

ஆ) ஹாங்காங்

இ) வியட்நாம்

ஈ) ஜப்பான்

 • ஹாங்காங் மலையேற்ற வீராங்கனையான சாங் யின்-ஹங், அதிவிரைவாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் பெண்மணி என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார். 44 வயதான அவர், 25 மணி 50 நிமிடங்களில் இந்தச் சாதனையை பதிவுசெய்தார்.
 • மற்றொரு மலையேற்ற வீரரான, 75 வயதான ஆர்தர் முயர், 8,848.86 மீட்டர் உயரங்கொண்ட உலகின் மிக உயர்ந்த சிகரத்தை ஏறிய மிக வயதான அமெரிக்கரானார்.

7. “Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது மே.28 அன்று கொண்டாடப்படும் எந்த நாளின் கருப்பொருளாகும்?

அ) உலக மாதவிடாய் சுகாதார நாள்

ஆ) உலக மகளிர் சுகாதார நாள்

இ) உலக தனிநபர் சுகாதார நாள்

ஈ) உலக சுகாதார நாள்

 • உலக மாதவிடாய் சுகாதார நாளானது மே.28 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
 • மாதவிடாயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை மாற்றுவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியான 28 நாட்களையும் மாதவிடாய் இருக்கும் ஐந்து நாட்களையும் குறிக்கும் வகை -யில் மே.28ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
 • இந்த நாள், WASH யுனைடெட் என்ற ஜெர்மனியின் இலாப நோக்கற்ற அமைப்பால், கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

8. ஸ்பெயினின் மிகவுயர்ந்த ‘Princess of Asturias’ விருதை வென்ற இந்திய பொருளாதார வல்லுநர் யார்?

அ) அமர்த்தியா சென்

ஆ) உர்ஜித் படேல்

இ) மன்மோகன் சிங்

ஈ) அரவிந்த் சுப்பிரமணியன்

 • இந்திய பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த் -தியா சென் சமூக அறிவியல் பிரிவில், ஸ்பெயினின் மிகவுயர்ந்த ‘Princess of Asturias’ விருதை வென்றுள்ளார்.
 • சமூக அறிவியல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 20 நாடுகளைச் சார்ந்த 41 நபர்களுள் ஒருவரான அமர்த்தியாசென் இவ்விருதை வென்றுள்ளார். பஞ்சங்கள்பற்றிய அவரது ஆராய்ச்சி மற்றும் மனித வளர்ச்சி, நலன்புரி பொருளாதாரம் மற்று -ம் வறுமையின் அடிப்படை வழிமுறைகள்பற்றிய அவரது கோட்பாடுகள் இந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டைக்ரே அமைந்துள்ள நாடு எது?

அ) எத்தியோப்பியா

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) இஸ்ரேல்

ஈ) ஜிம்பாப்வே

 • எத்யோப்பியாவின் சிக்கலான பிராந்தியமான டைக்ரேயில் பஞ்சத்தைத் தவிர்க்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் இறப்புக்குக் காரணமான டைக்ரே மோதல் ஏற்பட்டு ஏழு மாதங்கள் ஆன நிலையில், சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு உதவி தேவைப்படுவதாக மதிப்பிட -ப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது, கடந்த 2020ஆம் ஆண்டில் டைக்ரேயில் இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள யூனியன் பிரதேசம் எது?

அ) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஆ) இலட்சத்தீவுகள்

இ) சண்டிகர்

ஈ) புதுச்சேரி

 • இலட்சத்தீவுகளில், சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் மற்றும் இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை – 2021 ஆகியவற்றை அமல்படுத்தவுள்ளதாக இலட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழங்குடியினத்தைச்சார்ந்த தீவுவாசிகளுக்குச் சொந்தமான சிறு பங்கின் சொத்துரிமையை அகற்ற, இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை சட்டம் நிர்வாகத்திற்கு அதிகாரமளிப்பதால் அது நாடு முழுவதுமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
 • ஒரு நபரை எந்தவொரு காரணமும் இல்லாமல் ஓராண்டு வரை தடுத்து வைக்க, சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம், லட்சத்தீவுகள் நிர்வாகத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரி -யராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றித் தற்போது ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 2011’இலிருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன்.3 – உலக மிதிவண்டி நாள்.

2. ‘இலக்கிய மாமணி’ விருது

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப் -படும். விருதாளர்களுக்கு பாராட்டுப்பத்திரம், `5 இலட்சம் ரொக்கப்பரிசு அளிக்கப்படும்.

1. Pradhan Mantri Ujjwala Yojana is being implemented by which Ministry?

A) Ministry of Power

B) Ministry of Petroleum

C) Ministry of Rural Development

D) Ministry of New and Renewable Energy

 • The Union Ministry of Petroleum and Natural Gas has finalised the guidelines for the next round of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) scheme and it is expected that the government would disburse 10 million fresh LPG connections under the scheme.
 • The scheme aims to provide LPG gas connections to Below Poverty Line (BPL) families, free of cost.

2. Subodh Kumar Jaiswal, who was in the news recently, is the newly appointed Director of which organisation?

A) CVC

B) CIC

C) CBI

D) NITI Aayog

 • Subodh Kumar Jaiswal, a 1985–batch IPS officer of the Maharashtra cadre, has been appointed as the chief of the Central Bureau of Investigation for a two–year period. He is also serving as the chief of Central Industrial Security Forces (CISF). He had also a been part of the Intelligence Bureau and the Research and Analysis Wing (RAW).

3. Cabinet has approved the opening of a new Consulate General of India in Addu City in which country?

A) Maldives

B) Sri Lanka

C) Bhutan

D) Myanmar

 • The Union Cabinet has approved the opening of a new Consulate General of India in Addu City, Maldives in 2021. Maldives has an important place in the Neighbourhood First Policy and the SAGAR– Security and Growth for All in the Region– initiative of the Government of India.
 • This opening of a Consulate General in Addu City will help promote India’s diplomatic presence in Maldives.

4. What is UHI, that the Government is set to launch under the National Digital Health Mission?

A) Union Health Institution

B) Unified Health Interface

C) United Health Institute

D) Union Health Initiative

 • The Government has decided to fast track the expansion of operations under the National Digital Health Mission. It is set to launch of a unified health interface (UHI) which will enable people to use the digital platform for hosting health services, including online medical consultation and booking of laboratory tests.

5. Which molecule is the genetic material of the SARS–CoV–2 virus?

A) DNA

B) RNA

C) Both the above

D) None of the above

 • Viruses have either RNA or DNA as their genetic material. The nucleic acid may be single– or double–stranded. The SARS–CoV–2 virus has RNA as its genetic material. Recently, Scientists in Taiwan have developed a new DNA–based COVID–19 vaccine that successfully induced antibodies against novel coronavirus in mice and hamsters. Currently available COVID–19 vaccines use messenger RNA (mRNA) to teach human immune system to recognise the SARS–CoV–2 virus.

6. Tsang Yin–hung, who became the world’s fastest woman to scale the Mount Everest, belongs to which country?

A) China

B) Hong Kong

C) Vietnam

D) Japan

 • Hong Kong mountaineer Tsang Yin–hung has recorded the world’s fastest ascent of Everest by a woman. The 44–year–old mountaineer scaled the summit in a record time of 25 hours and 50 minutes. Another mountaineer, the 75–year–old Arthur Muir, became the oldest American to climb the world’s highest peak at 8,848.86–metres.

7. “Action and Investment in Menstrual Hygiene and Health” is the theme of which special day celebrated on May 28?

A) World Menstrual Hygiene Day

B) World Women Health Day

C) World Personal Health Day

D) World Hygiene Day

 • World Menstrual Hygiene Day is observed on May 28 across the world. The theme for this year is: “Action and Investment in Menstrual Hygiene and Health.” The day aims to change the social stigma associated with menstruation.
 • The date May 28 was chosen to represent the menstrual cycle of 28 days and the menstruation period of 5 days. The day was initiated by the German non–profit WASH United in 2013.

8. Which Indian economist has been conferred with Spain’s top Princess of Asturias Award?

A) Amartya Sen

B) Urjit Patel

C) Manmohan Singh

D) Arvind Subramanian

 • Indian economist and Nobel Laureate Amartya Sen has been conferred with Spain’s top Princess of Asturias Award in the social sciences category.
 • He was selected out of the 41 candidatures from 20 countries nominated for the Social Sciences Award. His research on famines and his theory of human development, welfare economics and the underlying mechanisms of poverty was recognised by the institute.

9. Tigray, which was making news recently, is a city located in which country?

A) Ethiopia

B) UAE

C) Israel

D) Zimbabwe

 • The United Nations has warned that urgent measures are needed to avoid famine in Tigray, an embattled region of Ethiopia. The conflict in Tigray has reached over seven months and is estimated to have killed thousands of people and left around five million in need of aid.
 • Ethiopian Prime Minister Abiy Ahmed ordered a military operation in Tigray in 2020.

10. Prevention of Anti–Social Activities Act (PASA), which was in the news recently, is set to be introduced in which Indian UT?

A) Andaman & Nicobar Islands

B) Lakshadweep

C) Chandigarh

D) Puducherry

 • The Lakshadweep administration has announced to introduce Lakshadweep Development Authority Regulation 2021 (LDAR) and the Prevention of Anti–Social Activities Act (PASA) in the islands.
 • It has drawn criticism from across the country as LDAR gives powers to the administration to remove the small holding for property owned by the islanders belonging to the Scheduled Tribes. PASA gives powers to the administration to detain a person without any public disclosure for a period of up to one year.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *