TnpscTnpsc Current Affairs

4th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

4th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 4th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.01

ஆ. நவம்பர்.03

இ. நவம்பர்.02

ஈ. நவம்பர்.07

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நவம்பர்.02

  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ‘ஊடகவியளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கான சர்வதேச நாள்’ என நவம்பர்.2ஐக் கடைப்பிடித்து வருகிறது. 2013 நவம்பர்.2 அன்று மாலியில் இரண்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கப்படாமல் குற்றம் புரிந்தோர் தப்பிப்பது குறித்து இந்த நாள் கவனத்தை ஈர்க்கிறது.

2. கல்வியமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசைக் குறியீட்டின்படி, 2020–21ஆம் ஆண்டில் எத்தனை மாநிலங்கள் நிலை–2 தரத்தை எட்டியுள்ளன?

அ. ஒன்றுமில்லை

ஆ. இரண்டு

இ. நான்கு

ஈ. ஏழு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஏழு

  • 2020–21ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டை கல்வியமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிக் கல்வி முறைகளின் ஆதார அடிப்படையிலான விரிவான பகுப்பாய்வை இந்தக் குறியீடு கொண்டுள்ளது. கேரளா, பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் என மொத்தம் ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2020–21இல் நிலை–2 என்ற தரத்தை எட்டியுள்ளன. இத்தரவரிசைக் குறியீடு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பத்துத் தரநிலைகளாக வகைப்படுத்தியுள்ளது; அதில், அதிகபட்சமாக அடையக்கூடிய தரம் நிலை–1 ஆகும்.

3. ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஆ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மற்றும் வீட்டு விவகார அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

  • 2022–23 இரபி பருவத்தில் (2022 அக்.1 முதல் 2023 மார்ச்.31 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற ஊட்டச்சத்துகளை கிலோ கிராமுக்கு மானிய விலையில் வழங்கவேண்டும் என்ற உரத்துறையின் பரிந்துரைக்கு பிரதமர் தலைமையிலான நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நைட்ரஜனுக்கு `98.02உம், பாஸ்பரசுக்கு `66.93உம், பொட்டாஷூக்கு `23.65உம். சல்பருக்கு `6.12உம் கிலோவுக்கு மானியமாக வழங்கப்படும். இதன்மூலம் இக்காலக்கட்டத்தில் மொத்தம் `51,875 கோடி அளவிற்கு மானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4. இந்தியாவில் ஆண்டுதோறும், ‘ஊழல் விழிப்புணர்வு வாரத்தை’ அனுசரிக்கும் நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. நடுவண் விழிப்புணர்வு ஆணையம்

இ. முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம்

ஈ. செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடுவண் விழிப்புணர்வு ஆணையம்

  • நடுவண் விழிப்புணர்வு ஆணையமானது ஒவ்வோர் ஆண்டும் ஊழல் விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடித்து வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஒருமைப்பாடு என்ற செய்தியைப் பரப்புகிறது. நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் புதிய புகார் மேலாண்மை அமைப்புக்கான வலைத்தளத்தை பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தொடங்கி வைத்தார். ‘நெறிமுறைகள் & நன்னடைமுறைகள்’ பற்றிய சிற்றேடுகங்களையும் அவர் வெளியிட்டார். ‘தடுப்பு விழிப்புணர்வு’ பற்றிய சிறந்த நடைமுறைகளின் தொகுப்பு மற்றும் அரசாங்க கொள்முதல் குறித்த ‘விஜே–வாணி’ என்ற சிறப்பு வெளியீடையும் அவர் அப்போது வெளியிட்டார்.

5. இடைமறித்துத் தாக்கும் AD–1 என்ற எறிகணையின் இரண்டாம் கட்ட சோதனையை நடத்திய நிறுவனம் எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. BEL

ஈ. HAL

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. DRDO

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இடைமறித்துத் தாக்கும் AD–1 என்ற எறிகணையின் இரண்டாம் கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த எறிகணை ஒடிஸா கடற்கரையில் உள்ள APJ அப்துல்கலாம் தீவிலிருந்து சோதிக்கப்பட்டது. AD–1 என்ற இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை வளிமண்டலத்தின் 100 கிமீ உயரத்துக்குக் கீழும், அதனைத் தாண்டியும் என இருவிதமாக பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் உள்ள எறிகணைகள் மற்றும் விமானங்களை இடைமறித்துத் தாக்கும்.

6. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்படும் HIMCAD திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. ஊட்டச்சத்து

ஆ. நீர்ப்பாசனம்

இ. திறன் மேம்பாடு

ஈ. வேலைவாய்ப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீர்ப்பாசனம்

  • ஹிமாச்சல பிரதேச மாநில அரசானது, ‘HIMCAD’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது; இது உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத் திறனுக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய நீர்ப்பாசனத் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. இது சிறந்த நீர்சேமிப்பு, பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த உழவு ஆகியவற்றிற்காக விவசாயிகளின் வயல்களில் ஒரு முற்றான இணைப்பை வழங்கும். இத்திட்டத்தின்கீழ், 15,242 ஹெக்டேர் பரப்பளவு கட்டளைப் பகுதி மேம்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

7. ‘அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு’வின் தலைவர் யார்?

அ. இராஜ்நாத் சிங்

ஆ. அமித் ஷா

இ. நிதின் கட்கரி

ஈ. பியூஷ் கோயல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமித் ஷா

  • நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை அண்மையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பொது அலுவலகங்கள், IIT மற்றும் IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியைத் திணிக்கும் நடுவணரசின் ஒரு முயற்சியாக தென் மாநிலங்கள் இதனைக் குற்றஞ்சாட்டி வருகின்றன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Sendai Framework’உடன் தொடர்புடைய துறை எது?

அ. நெகிழி ஒழிப்பு

ஆ. பேரிடர் அபாயக் குறைப்பு

இ. மின்னணுக் கழிவுகளைக் கையாளுதல்

ஈ. பயங்கரவாத எதிர்ப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பேரிடர் அபாயக் குறைப்பு

  • பேரிடர் அபாயக் குறைப்புக்கான பன்னாட்டு நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்.13 அன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு பேரிடர்களின்போது உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு இழப்புகளைத் தடுப்பதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அங்கீகரிப்பதற்காகவுமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Early Warning for All” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருளாகும். இது செண்டாய் கட்டமைப்பின் இலக்கு G ஆகும். பேரிடர் அபாயத்தைக் குறைப்பத –ற்கான ‘செண்டாய் கட்டமைப்பு 2015–2030’ என்பது பேரிடர் அபாயத்திலிருந்து வளர்ச்சி ஆதாயங்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

9. ‘Ambedkar: A Life’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் யார்?

அ. சசி தரூர்

ஆ. அமிதவ குமார்

இ. அபை K

ஈ. சஞ்சய பாரு

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சசி தரூர்

  • “Ambedkar: A Life” என்பது சசி தரூரால் எழுதப்பட்ட பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலாகும்.  அம்பேத்கரின் வாழ்க்கைப்பயணம், ஒடுக்கப்பட்டோரை இழிவுபடுத்திய சமூகத்தில் அவர் கடக்கவேண்டியிருந்த தடைகள், தீண்டாமையை சட்டவிரோதமாக்குவதற்கான அவரது போராட்டம் ஆகியவற்றின் நுண்ணறிவுகளை இந்த நூல் கூறுகிறது. அப்படிச்செய்வதன்மூலம், “அவர் இன்னும் பிறவாத லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றினார்; ஒரு பண்டைய நாகரிகத்தை நவீன சகாப்தமாக தனது அறிவுத்திறன் மற்றும் எழுத்தாற்றலால் மாற்றினார்” என்று எழுதுகிறார் சசி தரூர்.

10. அண்மையில் 36ஆவது தேசிய விளையாட்டு – 2022 போட்டிகளில் 8 பதக்கங்களை வென்ற சஜன் பிரகாஷ் சார்ந்த விளையாட்டு எது?

அ. துப்பாக்கி சுடுதல்

ஆ. மல்யுத்தம்

இ. நீச்சல்

ஈ. டென்னிஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நீச்சல்

  • கேரளாவைச் சேர்ந்த இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், 36ஆவது தேசிய விளையாட்டுப்போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 8 பதக்கங்களை வென்றார். இராஜ்கோட்டில் உள்ள சர்தார் படேல் அக்வாடிக் வளாகத்தில், குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலிடமிருந்து, ‘சிறந்த தடகள வீரர்’ விருதையும் அவர் பெற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. செஸ்: பிரக்ஞானந்தா, நந்திதா சாம்பியன்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுமான பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், நந்திதா மகளிர் பிரிவிலும் வாகை சூடினர். போட்டியின் ஒன்பது சுற்றுகள் முடிவில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடமும் (7 புள்ளிகள்), ஹர்ஷா பாரதகோடி 2ஆம் இடமும் (6.5), அதிபன் 3ஆம் இடமும் (6.5) பிடித்தனர். மகளிர் பிரிவில் நந்திதா (7.5), பிரியங்கா நுடாகி (6.5), திவ்யா தேஷ்முக் (6.5) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் எட்டினர்.

4th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. When is the ‘International Day to End Impunity for Crimes against Journalists’ observed?

A. November.01

B. November.03

C. November.02

D. November.07

Answer & Explanation

Answer: C. November.02

  • The United Nations General Assembly observes 2 November as the ‘International Day to End Impunity for Crimes against Journalists’ (IDEI), since 2013. The date for IDEI was chosen to commemorate the assassination of two journalists in Mali on November 2, 2013. The day draws attention to impunity, which means culprits going unpunished, to crimes against journalists.

2. As per the Education Ministry’s Performance Grading Index (PGI), how many states attained Level –2 grading in 2020–21?

A. None

B. Two

C. Four

D. Seven

Answer & Explanation

Answer: D. Seven

  • The Ministry of Education has released the Performance Grading Index (PGI) for States and Union Territories for 2020–21. The index has evidence–based comprehensive analysis of school education systems across States and UTs. A total of seven States and UTs namely Kerala, Punjab, Chandigarh, Maharashtra, Gujarat, Rajasthan, and Andhra Pradesh have attained Level –2 grading in 2020–21. PGI 2020–21 classified the States and UTs into ten grades of which the highest achievable Grade is Level 1.

3. Which Union Ministry is associated with the Nutrient Based Subsidy scheme?

A. Ministry of Agriculture and Farmers Welfare

B. Ministry of Chemicals and Fertilisers

C. Ministry of Rural Development

D. Ministry of Urban and Housing Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Chemicals and Fertilisers

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA) approved nutrient–based subsidy (NBS) rates for P&K fertilisers for the 2022–23 rabi season. The government approved a subsidy of Rs 51,875 crore for phosphatic and potassic (P&K) fertilisers for the second half of 2022–23. The scheme is implemented by the Ministry of Chemicals and Fertilisers. The government makes available fertilisers to farmers at subsidised prices through fertiliser manufacturers/importers.

4. Which institution observes the ‘Vigilance Awareness Week’ every year in India?

A. Reserve Bank of India

B. Central Vigilance Commission

C. Securities Exchange Board of India

D. Investor Education and Protection Fund Authority

Answer & Explanation

Answer: B. Central Vigilance Commission

  • The Central Vigilance Commission (CVC) observes Vigilance Awareness Week every year to spread the message of integrity in all spheres of life. Prime Minister Narendra Modi recently launched the new Complaint Management System portal of the Central Vigilance Commission (CVC). He also released the booklets on ‘Ethics and Good Practices’; Compilation of best practices on ‘Preventive Vigilance’ and a Special issue ‘VIGEYE–VANI’ on public procurement.

5. Which institution tested the Phase–II Ballistic Missile Defence (BMD) interceptor AD–1 missile?

A. ISRO

B. DRDO

C. BEL

D. HAL

Answer & Explanation

Answer: B. DRDO

  • The Defence Research & Development Organisation (DRDO) conducted a successful maiden flight–test of Phase–II Ballistic Missile Defence (BMD) interceptor AD–1 missile. The missile was tested with large kill altitude bracket from APJ Abdul Kalam Island off the coast of Odisha. The AD–1 is a long–range interceptor missile designed for both low exo–atmospheric and endo–atmospheric interception of long–range ballistic missiles as well as aircraft.

6. HIMCAD scheme, which is implemented in Himachal Pradesh, is associated with which field?

A. Nutrition

B. Irrigation

C. Skill Development

D. Employment

Answer & Explanation

Answer: B. Irrigation

  • The Himachal Pradesh State government has started a new scheme named HIMCAD to bridge the gap between the irrigation potential created and the irrigation potential to be utilized. This will provide end–to–end connectivity of farmers’ fields for better water conservation, crop diversification and integrated farming. Under the scheme, an area of 15,242 hectares has been brought under Command Area Development (CAD) activities.

7. Who is the head of the ‘Parliamentary committee on official languages’?

A. Rajnath Singh

B. Amit Shah

C. Nitin Gadkari

D. Piyush Goyal

Answer & Explanation

Answer: B. Amit Shah

  • The Report of the Official Language Committee headed by Home Minister Amit Shah was recently submitted to President Droupadi Murmu. The report has recommended that India’s scheduled languages, including Hindi, get priority in public offices, higher education institutions such as IITs and IIMs, and in local courts. It is flagged by southern states as an attempt by Union government to impose Hindi on non–Hindi–speaking states.

8. Sendai Framework, which was seen in the news, is associated with which field?

A. Plastic Elimination

B. Disaster Risk Reduction

C. e–waste handling

D. Anti–Terrorism

Answer & Explanation

Answer: B. Disaster Risk Reduction

  • The International Day for Disaster Risk Reduction is observed each year on October 13. The day is aimed to raise awareness about and acknowledge the progress in preventing the loss of lives, livelihoods, and infrastructure during various disasters. The theme of International Day for Disaster Risk Reduction 2022 is ‘Early Warning for All’, which is Target G of the Sendai Framework. The ‘Sendai Framework for Disaster Risk Reduction 2015–2030’ includes concrete actions to protect development gains from the risk of disaster.

9. Who wrote the biography ‘Ambedkar: A Life’?

A. Shashi Tharoor

B. Amitava Kumar

C. Abhay K

D. Sanjaya Baru

Answer & Explanation

Answer: A. Shashi Tharoor

  • ‘Ambedkar: A Life’ is biography of Bhim Rao Ramji Ambedkar written by Shashi Tharoor. The book gives the insights of Ambedkar’s life journey, the hurdles he had to overcome in the society that stigmatized Dalits, his fight to make untouchability illegal. In so doing, writes Tharoor, ‘he transformed the lives of millions yet unborn, heaving an ancient civilization into the modern era through the force of his intellect and the power of his pen.’

10. Sajan Prakash who recently won 8 medals at the 36th national games 2022 is related to which sport?

A. Shooting

B. Wrestling

C. Swimming

D. Tennis

Answer & Explanation

Answer: C. Swimming

  • Sajan Prakash an Indian swimmer hailing from Kerala won 8 medals including 5 Gold, 2 Silver, 1 Bronze in the 36th National games 2022. He also received the ‘best male athlete’ award by Gujarat CM Bhupendra Patel at Sardar Patel Aquatic Complex, Rajkot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!