Book Back QuestionsTnpsc

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back Questions 10th Social Science Lesson 23

10th Social Science Lesson 23

23] மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1934ஆம் ஆண்டில் சைமன் குஸ்நட் என்பவரால் GDPயின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

1867-68இல் முதன் முதலாக தாதாபாய் நௌரோஜி “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற தனது புத்தகத்தில் தனி நபர் வருமானத்தைப் பற்றி கூறியுள்ளார்.

GDPயின் மதிப்பீடு: புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழேயுள்ள மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO), GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாக்கிறது. தொழிற்துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), நுகர்வோர் விலை குறியீடு (CPI) போன்ற குறியீடுகளை வெளியிடுகிறது.

மொத்த மதிப்பு கூடுதல்: பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும். GVA = GDP + மானியம் – வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI): மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப் – உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDPயின் மடக்கை செயல்பாடு என கணக்கிடபட்டு, வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது. UNDPயில் வெளியிடப்பட்ட சமீபத்தில் மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் இந்தியா 189 நாடுகளில் 130வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என வெளியிட்டுள்ளது. 1990-2017ன் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் HDIயின் மதிப்பு 0. 427லிருந்து 0. 640ஆக உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்து, மில்லியன் மக்களின் வறுமையை போக்கி நாட்டின் குறிப்பிடத்தக்க குறியீடாக உள்ளது.

மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH): ‘GNH’ என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ஹக் என்ற பூட்டான் அரசர். அவர் பம்பாய் விமான நிலையத்தில் நிதிகாலங்கள் (Financial Times) என்ற பத்திரிக்கைக்கு பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரின் நேர்காணலில் GNPஐ விட GNH மிக முக்கியம் என்றார். 2011ல் ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும், நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர் (“அடிப்படை மனித குறிக்கோள்”).

GNHயின் 4 தூண்கள்: (1) நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி; (2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு; (3) கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்; (4) நல்ல ஆட்சித் திறன். உளவியல் நலன், உடல் நலம், நேரப்பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத் தன்மை, நல்ல ஆட்சித் திறன், சமூகத்தின் உயர்வு, சுற்றுச் சூழல் பன்முகத் தன்மை, வாழ்க்கைத் தரம் ஆகியவை GNH இன் 9 களங்களாகக் கருதப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. GNPயின் சமம்

(அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP

(ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP

(இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

(ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2. நாட்டு வருமானம் அளவிடுவது

(அ) பணத்தின் மொத்த மதிப்பு

(ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு

(இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு

(ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது

(அ) வேளாண்மை

(ஆ) தானியங்கிகள்

(இ) வர்த்தகம்

(ஈ) வங்கி

4. ____________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும் போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.

(அ) செலவு முறை

(ஆ) மதிப்பு கூட்டு முறை

(இ) வருமான முறை

(ஈ) நாட்டு வருமானம்

5. GDPயில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

(அ) வேளாண் துறை

(ஆ) தொழில் துறை

(இ) பணிகள் துறை

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19இல் __________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

(அ) 91.06

(ஆ) 92.26

(இ) 80.07

(ஈ) 98.29

7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ___________ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

(அ) 1வது

(ஆ) 3வது

(இ) 4வது

(ஈ) 2வது

8. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் __________ ஆண்டுகள் ஆகும்.

(அ) 65

(ஆ) 60

(இ) 70

(ஈ) 55

9. கீழ்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?

(அ) நீர்பாசன கொள்கை

(ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

(இ) நில சீர்திருத்தக் கொள்கை

(ஈ) கூலிக்கொள்கை

10. இந்திய பொருளாதாரம் என்பது

(அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்

(ஆ) தோன்றும் பொருளாதாரம்

(இ) இணை பொருளாதாரம்

(ஈ) அனைத்தும் சரி

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவில் __________ துறை முதன்மை துறையாகும்.

2. __________ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.

3. இரண்டாம் துறையை வேறுவிதமான __________ துறை என அழைக்கலாம்.

பொருத்துக:

1. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர் – நாட்டு வருமானம்/மக்கள் தொகை

2. விலைக்கொள்கை – மொத்த உள்நாட்டு உற்பத்தி

3. GST – தொழில்துறை

4. தலா வருமானம் – வேளாண்மை

5. C + l + G + (X-M) – பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பனி மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2. பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

3. வேளாண்மை 4. மதிப்பு கூட்டு முறை 5. பணிகள் துறை 6. (92, 26) 7. (2 வது)

8. (65) 9. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை 10. அனைத்தும் சரி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. வேளாண் 2. தலா வருமானம் 3. தொழில்

பொருத்துக: (விடைகள்)

1. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர் – தொழில் துறை

2. விலைக் கொள்கை – வேளாண்மை

3. GST – பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி

4. தலா வருமானம் – நாட்டு வருமானம்/மக்கள் தொகை

5. C + l + G + (X-M) – மொத்த நாட்டு உற்பத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!