Tnpsc

5th & 6th December 2020 Current Affairs in Tamil & English

5th & 6th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th & 6th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயினியா மற்றும் கீழ்க்காணும் எந்த இந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்?

அ. ISRO

ஆ. DRDO

இ. BHEL

ஈ. HAL

 • ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ என்பது இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயினியா ஆகியோரால் அமைக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். அண்மையில், கப்பல்களைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த பிரம்மோஸ் ஏவுகணை, சவாலான போர்க்களங்களில் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்பெற்றது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.

2. ஜப்பானின் JCB இன்டர்நேசனலுடன் இணைந்து தொடுதலற்ற பற்றட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?

அ. பஞ்சாப் தேசிய வங்கி

ஆ. பாரத வங்கி

இ. HDFC வங்கி

ஈ. ஆக்ஸிஸ் வங்கி

 • புதிய ‘SBI RuPay JCB பிளாட்டினம் தொடுதலற்ற பற்றட்டையை’ அறிமுகப்படுத்துவதற்காக பாரத வங்கி நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் ஜப்பானின் JCB இன்டர்நேசனல் கோ ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது. இந்த அட்டை, இரட்டை இடைமுக அம்சத்தைக் கொண்டுள்ளது. இதன்கீழ், வாடிக்கையாளர்கள், உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாடுகளில் தொடுதல் மற்றும் தொடுதல் அற்ற பரிவர்த்தனைகளுக்கு இதைப்பயன்படுத்தலாம். இது RuPay வலையமைப்பில் தொடங்கப்பட்டது.

3. எந்த ஆண்டில், சீனா தனது இலட்சியத் திட்டமான, ‘ஒரு பட்டை மற்றும் ஒரு பாதை’ முன்னெடுப்பைத் தொடங்கியது?

அ. 2000

ஆ. 2005

இ. 2013

ஈ. 2017

 • தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, வளைகுடா பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை நிலம் மற்றும் கடல் வழித்தடங்களுடன் இணைப்பதற்காக, சீனா, 2013ஆம் ஆண்டில் தனது இலட்சியத் திட்டமான ‘ஒரு பட்டை மற்றும் ஒரு பாதை’ முன்னெடுப்பைத் தொடங்கியது. SCO அரசாங்கத் தலைவர்கள் குழுமத்தின் 19ஆம் கூட்டத்தின்போது, இந்தியாவைத்தவிர SCO’இன் பிற அனைத்து உறுப்புநாடுகளும் சீனாவின் OBOR திட்டத்திற்கு தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தின. OBOR’இன் ஒருபகுதியாக இருக்கும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, இந்தியா, கடுமையாக விமர்சித்தது.

4. நடப்பாண்டு (2020) இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில், முக்கிய குறிப்புரையை ஆற்றிய இந்திய அமைச்சர் யார்?

அ. பியூஷ் கோயல்

ஆ. நிர்மலா சீதாராமன்

இ. நிதின் கட்கரி

ஈ. ஜெய் சங்கர்

 • நடப்பாண்டில் (2020) மெய்நிகராக நடைபெற்ற இருபதாவது இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரையாற்றினார். சிலோன் வர்த்தக சபையால் ஆண்டுதோறும் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. “Roadmap for Take-off: Driving a People – Centric Economic Revival” என்பது நடப்பாண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

5. நாட்டின் முதல் 100 ஆக்டேன் பெட்ரோலை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய பொதுத்துறை நிறுவனம் எது?

அ. HPCL

ஆ. IOCL

இ. GAIL

ஈ. ONGC

 • இந்திய எண்ணெய் நிறுவனமானது (IOCL) அண்மையில் நாட்டின் முதல் ‘100 ஆக்டேன்’ பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. இந்த பெட்ரோலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். ‘XP 100 பிரீமியம் பெட்ரோல்’ என்றும் அழைக்கப்படும் ‘100-ஆக்டேன்’ பெட்ரோலானது தொடக்கத்தில் 10 நகரங்களில் IOC’இன் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள IOC’இன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
 • ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமானது (HPCL) முன்னதாக ‘ஆக்டேன் 99’ஐ அறிமுகப்படுத்தியது. எரிபொருளின் ஆக்டேன் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதன் செயல்திறன் அதிகமாக இருக்கும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பால்ஸ்னேகி (குழந்தைகட்கு உகந்த / தோழமையான) காவல் நிலையம்’ திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ. சென்னை

ஆ. புனே

இ. திருவனந்தபுரம்

ஈ. லக்னோ

 • புனே முகாமில் உள்ள லஷ்கர் காவல் நிலைய வளாகத்தில், புனே நகர காவல்துறை, ‘பால்ஸ்னேகி’ காவல் நிலையத்தை திறந்துவைத்துள்ளது. அங்கு புகாரளிக்க வரும் குழந்தைகளுக்கு என அந்தக் காவல் நிலையத்தில் பிரத்தியேக அறை ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்குவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டிணம் வளாகத்தில் இதுபோன்ற காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

7. ‘Defence Geo Informatics Research Establishment’ என்பது கீழ்க்காணும் எந்த அமைப்பின் ஒரு புதிய ஆய்வகமாகும்?

அ. ISRO

ஆ. DRDO

இ. BHEL

ஈ. HAL

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DROD) பாதுகாப்பு புவித்தகவலியல் ஆராய்ச்சி நிறுவனம் என்றவொரு புதிய ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது. மணாலியித் தலைமையிடமாகக் கொண்ட பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுகள் நிறுவனம் (SASE) மற்றும் தில்லியைச் சார்ந்த இராணுவ நிலப்பரப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரு ஆய்வகங்களை இணைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்புதிய ஆய்வகமானது சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் உள்ள நிலப்பரப்பு குறித்த ஆராய்ச்சியில் தனது முழு கவனத்தைச் செலுத்தும்.

8. ஆதி மகோத்சவத்தின் முதல் மெய்நிகர் பதிப்பானது கீழ்க்காணும் எம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. அஸ்ஸாம்

 • மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் மெய்நிகரான ஆதி மகோத்சவ விழா, market.tribesindia.com என்ற இணையதளத்தில் டிச.1-10ஆம் தேதி வரை நடக்கிறது. இதை, மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா காணொலிகாட்சிமூலம் தொடங்கிவைத்தார். இதில் 3500’க்கும் மேற்பட்ட பழங்குடியின கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
 • பழங்குடி நலத்துறை அமைச்சகமும், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பின் (TRIFED) கூட்டு முயற்சியில் இந்த விழா நடத்தப்படுகிறது. “மத்திய பிரதேச மாநிலத்தின் பழங்குடி கைவினை மற்றும் கலாச்சாரம் – Tribal Craft and Culture of Madhya Pradesh” என்பது இந்த விழாவின் கருப்பொருளாகும்.

9. இலையுதிர்வு நோயால் அண்மையில் எந்த நாட்டின் இரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டன?

அ. இந்தியா

ஆ. இந்தோனேஷியா

இ. பூட்டான்

ஈ. தாய்லாந்து

 • அண்மையில், தாய்லாந்தின் இரப்பர் தோட்டங்கள் இலையுதிர்வு நோயால் பாதிக்கப்பட்டன. நவம்பர் மாதத்தில் அதன் மொத்த பாதிப்பு 90,000 ஹெக்டேராக இருந்தது. இதன் காரணாமக 1.30 இலட்சம் டன் இரப்பர் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. இந்நோய், இந்தியாவுக்கு பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக ரப்பர் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

10. வேதிப்போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐநா அவையின் நினைவு நாள் (The United Nations’ Day of Remembrance for all Victims of Chemical Warfare) அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் 30

ஆ. டிசம்பர் 01

இ. டிசம்பர் 02

ஈ. டிசம்பர் 03

 • வேதிப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ரசாயன ஆயுதங்களின் அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் பலதரப்புவாதத்தை ஊக்குவித்தல் ஆகிவற்றுக்குமாக, வேதிப்போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐநா அவையின் நினைவு நாளானது ஆண்டுதோறும் நவ.30 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், முதன்முதலில் 30 நவம்பர் 2016 அன்று அனுசரிக்கப்பட்டது. ‘இரசாயன ஆயுதங்கள் தீர்மானம்’ என்பது கடந்த 1993ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1997 ஏப்ரல்.29 அன்று நடைமுறைக்கு வந்தது.

5th & 6th December 2020 Current Affairs in English

1. ‘BrahMos Aerospace’ is a joint venture company set up by Russia’s Mashinostroyeniya and which other company of India?

[A] ISRO

[B] DRDO

[C] BHEL

[D] HAL

 • ‘BrahMos Aerospace’ is a joint venture company set up by Defence Research and Development Organisation (DRDO) and Mashinostroyenia of Russia. Recently, Indian Navy test–fired the naval version of BrahMos missile in the Bay of Bengal. The missile was test–fired from a Rajput–class destroyer INS Ranvijay, hitting a decommissioned target ship. Earlier, the Indian Army and Air Force test–fired the missile.

2. Which Indian bank co–launched a contactless debit card along with Japan’s JCB International?

[A] Punjab National Bank

[B] State Bank of India

[C] HDFC Bank

[D] Axis Bank

 • State Bank of India has partnered with National Payments Corporation of India (NPCI) and Japan’s JCB International Co to launch new ‘SBI RuPay JCB Platinum Contactless Debit Card’. This card has a dual interface feature, under which customers can use it for both contact and contactless transactions, both in the domestic market as well as overseas. The card has been launched on the RuPay network.

3. In which year, did China launch its ambitious ‘One Belt and One Road’ initiative?

[A] 2000

[B] 2005

[C] 2013

[D] 2017

 • China launched the ambitious ‘One Belt and One Road’ (OBOR) initiative in 2013, to link Southeast Asia, Central Asia, the Gulf region, Africa and Europe with a network of land and sea routes. During the 19th meeting of the Council of Heads of Governments of the SCO, all other member nations of SCO, except India reaffirmed their support to the OBOR project of China. India is critical of the China Pakistan Economic Corridor (CPEC), a part of OBOR.

4. Which Indian Minister delivered key note address Sri Lanka Economic Summit (SLES) 2020?

[A] Piyush Goyal

[B] Nirmala Sitharaman

[C] Nitin Gadkari

[D] S Jai Shankar

 • Union Minister for Finance & Corporate Affairs Nirmala Sitharaman delivered a Keynote Address at the 20th Edition of Sri Lanka Economic Summit (SLES) 2020 in virtual format. SLES is annually organized by the Ceylon Chamber of Commerce (CCC). The theme for this year’s event is “Roadmap for Take–off: Driving a People –Centric Economic Revival”.

5. Which Indian PSU has launched the country’s first 100 Octane petrol?

[A] HPCL

[B] IOCL

[C] ONGC

[D] GAIL

 • Indian Oil Corporation (IOC) has recently launched the nation’s first 100 Octane petrol. Union Oil Minister Dharmendra Pradhan launched the petrol. The 100–octane petrol also called as XP100 premium petrol will be initially available at select outlet of IOC in 10 cities.
 • The fuel is manufactured at IOC’s Mathura refinery in Uttar Pradesh. Hindustan Petroleum Corporation Ltd (HPCL) had earlier launched Octane 99. Higher the octane number of a fuel, higher will be its compression and performance.

6. ‘Balsnehi (Child–Friendly) Police Station’, which was seen in the news recently, was inaugurated in which city?

[A] Chennai

[B] Pune

[C] Thiruvananthapuram

[D] Lucknow

 • Pune City Police has recently inaugurated the ‘Balsnehi (Child–Friendly) Police Station’, on the premises of Lashkar Police Station in Pune Camp.
 • The Police Station has a room designated for children, who would come to report cases to the station. It also aims to create a set–up to rehabilitate children in need. Earlier, a Child–friendly Police Station was set up in Krishna District on the premises of Machilipatnam.

7. ‘Defence Geo Informatics Research Establishment’ is the new lab of which organisation?

[A] ISRO

[B] DRDO

[C] BHEL

[D] HAL

 • The Defence Research and Development Organisation (DRDO) has created a new laboratory named Defence Geo Informatics Research Establishment. It has been formed by merging two existing labs namely Manali–headquartered Snow and Avalanche Studies Establishment (SASE) and the Delhi–based Defence Terrain Research Establishment. The new lab will focus on research on the terrain along the borders with China and Pakistan.

8. In which state, the first ever virtual edition of Aadi Mahotsav is celebrated?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Maharashtra

[D] Assam

 • The Union Minister for Tribal Affairs Arjun Munda has launched a virtual edition of the first ever Aadi Mahotsav celebrated in the state of Madhya Pradesh. This is a festive being celebrated for 10 days. It would be hosted by Tribes India. The key focus on this year’s Aadi Mahotsav is “tribal craft and culture of Madhya Pradesh”.

9. Which county’s rubber plantations have been recently affected by Leaf Fall Disease?

[A] India

[B] Indonesia

[C] Bhutan

[D] Thailand

 • The recent spread of Leaf Fall Disease in rubber plantations of Thailand has been a cause of worry to Indian Plantations. In November, the total affected area of rubber plantation of Thailand was 90,000 ha and there is a potential production loss of 1.30 lakh tons of rubber. It has been cited by Rubber Board officials that the disease has the potential to spread to India.

10. The United Nations’ Day of Remembrance for all Victims of Chemical Warfare is observed on which day?

[A] November 30

[B] December 01

[C] December 02

[D] December 03

 • The United Nations Day of Remembrance for all Victims of Chemical Warfare is annually celebrated across the globe on 30th November to pay tribute to the victims of chemical warfare and to reaffirm the commitment of the Organisation for the Prohibition of Chemical Weapons to the elimination of the threat of chemical weapons and promote world peace, security and multilateralism.
 • The day was first observed on 30th November 2016. The Chemical Weapons Convention was adopted in 1993 and came into force on 29th April 1997.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!