TnpscTnpsc Current Affairs

5th & 6th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

5th & 6th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 5th & 6th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th & 6th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. உயர்கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. K இராதாகிருஷ்ணன்

ஆ. கஸ்தூரி இரங்கன்

இ. அமிதாப் காந்த்

ஈ. V K பால்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. K இராதாகிருஷ்ணன்

  • உயர்கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஓர் உயர்மட்ட குழுவை நடுவணரசு அமைத்துள்ளது. ஐஐடி கான்பூரின் நிர்வாகக் குழுவின் தலைவர் K இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கவுன்சில் நிலைக்குழுவின் தலைவராகவும் அவர் உள்ளார்.

2. ‘காலின்ஸ் அகராதியால் 2022ஆம் ஆண்டின் சிறந்த சொல்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது?

அ. Lockdown

ஆ. Permacrisis

இ. Pandemic

ஈ. Non–Fungible Token

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Permacrisis

  • ‘உறுதியற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மையின் நீடித்த காலத்தை’ விவரிக்கும் ‘Permacrisis’ என்ற சொல், ‘காலின்ஸ் அகராதியால் 2022ஆம் ஆண்டின் சிறந்த சொல்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல், பருவநிலை மாற்றம், ஐரோப்பாவில் போர், வாழ்க்கைச் செலவின நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களுடன் தொடர்புடையது. இது முதன்முதலில் 1970களில் கல்விச்சூழல்களில் பயன்படுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டில், காலின்ஸ், “லாக்டௌன்” என்பதை அதன் ஆண்டின் சொல்லாகத் தேர்ந்தெடுத்தது மற்றும் கடந்த ஆண்டு (2021) அது “NFT– Non–Fungible Token” என்ற சொல்லைத் தேர்வுசெய்தது.

3. ‘Beidou’ என்ற செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீனா

  • சீனா தனது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘பெய்டோ’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பின் உலகளாவிய வரம்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்திற்கு (GPS) மாற்றாக சீனாவின் அமைப்பாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பெய்டோ’ கடந்த 2013ஆம் ஆண்டில் தாய்லாந்தில் அதன் வலையமைப்பிற்காக தொடர்ந்து செயல்படும் மூன்று குறிப்பு நிலையங்களுள் (Continuously Operating Reference Stations – CORS) ஒன்றை முதலாவதாக அமைத்தது.

4. 2022 நவம்பர் நிலவரப்படி, உலகின் மிகநீளமான பயணிகள் இரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. சுவிச்சர்லாந்து

ஈ. சுவீடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சுவிச்சர்லாந்து

  • 100 பெட்டிகள், 4550 இருக்கைகள், 1910 மீட்டர் நீளங்கொண்ட உலகின் மிகநீளமான பயணிகள் இரயிலை சுவிச்சர்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. சுவிச்சர்லாந்தின் முதல் இரயில்வேயின் 175ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சுவிஸ் போக்குவரத்து நிறுவனமான ரேடியன் இரயில்வே, மிகநீளமான பயணிகள் இரயிலுக்கான உலக சாதனையைப் படைத்துள்ளது. சுவிச்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி வழியாகச் செல்லும் இந்த இரயில் 25 புதிய ‘கேப்ரிகார்ன்’ மின்சார இரயில்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

5. 2022 நவம்பர் நிலவரப்படி, பூமியிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிக ஆற்றல்வாய்ந்த ஏவுகணை எது?

அ. மினிட்மேன் ஹெவி

ஆ. ஃபால்கன் ஹெவி

இ. லாங் மார்ச் 5 B

ஈ. PSLV 52

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஃபால்கன் ஹெவி

  • ஸ்பேஸ்எக்ஸ் தனது ஃபால்கன் ஹெவி ஏவுகணையை ஏவியது. அந்த ஏவுகணை பல்வேறு அமெரிக்க இராணுவ செயற்கைக்கோள்களை அதற்குரிய சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது. பூமியிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிக ஆற்றல்வாய்ந்த ஏவுகணை இதுவாகும். ஸ்பேஸ்எக்ஸால் நடப்பாண்டில் (2022) ஏவப்படும் 50ஆவது ஏவுகலம் இதுவாகும். ஸ்பேஸ்எக்ஸின் 49ஆவது ஏவுகலம் ஃபால்கன் 9 ஆகும். கணக்கிட்டுப்பார்த்தால் 6.10 நாட்களுக்கு ஒருமுறை அந்த நிறுவனம் ஒரு ஏவுகலத்தை ஏவுகிறது.

6. இந்தியாவால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல், கீழ்காணும் எந்த வகையினைச் சார்ந்த கப்பலாகும்?

அ. சிசுமார்

ஆ. அரிஹந்த்

இ. சிந்துகோஷ்

ஈ. கல்வாரி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அரிஹந்த்

  • இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த், 2022ஆம் ஆண்டு அக்.14ஆம் தேதி வங்கக் கடலிலிருந்து, ‘மிக அதிக துல்லியத்துடன்’ வெற்றிகரமாக ஓர் எறிகணையை ஏவியது. அரிஹந்த் –வகுப்பு நீர்மூழ்கிக்கப்பல்கள் அணுசக்தியால் இயங்குவதோடு எறிகணைகளை ஏவுவதற்கான அதிநவீன தொழில் நுட்பக்கப்பல் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கப்பல்களாகும். இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இவை.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, SCO–RATSஇன் தலைமையகம் எங்குள்ளது?

அ. ஷாங்காய்

ஆ. பெய்ஜிங்

இ. தாஷ்கண்ட்

ஈ. அஸ்தானா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தாஷ்கண்ட்

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பின் (RATS) செயற்குழு என்பது உஸ்பெகிஸ்தானின் தலைநகரமான தாஷ்கண்டில் உள்ள, ‘SCO–RATS’இன் நிரந்தர அமைப்பாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் கவுன்சிலின் கூட்டம் 2022 அக்.14 அன்று புது தில்லியில் நடைபெற்றது. சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உறுப்புநாடுகளால் அப்போது முடிவு செய்யப்பட்டது.

8. அப்துல் இலத்தீஃப் ரஷீத் என்பார் சமீபத்தில் எந்த நாட்டின் / பிரதேசத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. பாலஸ்தீனம்

ஆ. ஈராக்

இ. எகிப்து

ஈ. ஏமன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஈராக்

  • ஈராக்கிய சட்டமியற்றுநர்கள் அப்துல் இலத்தீப் ரஷீத்தை ஈராக்கின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஈராக் நாட்டிற்கான புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் ரஷீத் 162 வாக்குகளைப் பெற்றார், 99 வாக்குகளைப் பெற்ற பர்ஹாம் சாலியை அவர் தோற்கடித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷீத், ஏற்கெனவே கடந்த 2003இல் நாட்டின் ஐந்தாவது அதிபராக பதவி வகித்துள்ளார்.

9. ஜோசப் ரெசின்ஸ்கி என்பார் பின்வரும் எதனுடன் தொடர்புடையவர்?

அ. எய்ட்ஸ் ஒழிப்பு

ஆ. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு

இ. வறுமையொழிப்பு

ஈ. ஆட்கடத்தல் ஒழிப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. வறுமையொழிப்பு

  • ஜோசப் ரெசின்ஸ்கி என்பார் ஒரு பிரெஞ்சு அருட்தந்தையும் மனிதாபிமான ஆர்வலருமாவார். கடந்த 1987ஆம் ஆண்டில், ஜோசப் ரெசின்ஸ்கி வறுமையொழிப்புக்கான சர்வதேச நாளை (அக்டோபர்.17) தொடங்கினார்; பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் அந்த நாள் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. “Dignity for all in practice” என்பது இந்த ஆண்டு (2022) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. பொது விவகாரங்கள் குறியீடு–2022இன்படி, இந்தியாவில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் சிறிய மாநிலம் எது?

அ. கோவா

ஆ. சிக்கிம்

இ. மேகாலயா

ஈ. மணிப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சிக்கிம்

  • பொது விவகாரங்கள் குறியீடு–2022இல் பெரிய மாநிலங்களின் பிரிவில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கருப்பொருள்களில் ஹரியானா மாநிலம் முன்னணியில் உள்ளது. இது 0.6948 மதிப்பெண்களுடன் முக்கிய மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் கர்நாடகாபோன்ற பல மாநிலங்கள் அதைத் தொடர்ந்த இடங்களில் உள்ளன.
  • மறுபுறம், சிக்கிம் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகம் கொண்ட சிறிய மாநிலமாக தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான பொது விவகாரங்கள் மையம் இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்  

1. இராஜாராம் மோகன் இராயின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட நாட்டிய நாடகம்

‘நவீன இந்தியாவின் விடிவெள்ளி’ என்று அழைக்கப்படும் இராஜாராம் மோகன் ராயின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகம், கடமைப்பாதை மற்றும் இந்திய நுழைவு வாயிலில் நடைபெறவுள்ளது. இராஜாராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளையால் நடத்தப்படும், ‘யுகபுருஷர் இராஜாராம் மோகன் இராய்’ என்ற பெயரிலான இந்நிகழ்வு, ‘பெண்களுக்கு மரியாதை’ என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும். விடுதலையின் அமுதப்பெருவிழா நிகழ்வின் ஒருபகுதியாக, ராஜா ராம் மோகன் ராயின் 250ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம், மத்திய கலாச்சார அமைச்சகம் ஓராண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியது.

2. இந்திய சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறுகிறது

1952இல் நிறுவப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஆசியாவின் மிகமுக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். சுற்றுலா மாநிலமான கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்கள், வெளியிடப்படும். உலக திரையரங்குகளுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதன் மூலம், திரைப்படக்கலையின் சிறப்பை முன்வைக்க அவர்களுக்கு உதவுவதன்மூலம் இவ்விழா இந்நோக்கங்களைத் தொடர்கிறது; பல்வேறு நாடுகளின் திரைப்பட கலாச்சாரங்களை அவர்களின் சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளின் பின்னணியில் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் பங்களிக்கிறது; அதன்மூலம் உலக மக்களிடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு கோவாவில் முதன்முறையாக நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவின் நிரந்தர இடமாக கோவாவை 2014இல் அறிவிக்கப்பட்டது.

3. இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நெகி மறைவு

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நெகி காலமானார். அவருக்கு வயது 106. நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல்முறையாக பொதுத்தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அப்போது கடுமையான குளிர்காலம், பனிப்பொழிவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, ஹிமாசல பிரதேச மாநிலம் கின்னௌர் பகுதியில் கடந்த 1951ஆம் ஆண்டு அக்.25ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெற்றது. நாட்டின் இதர பகுதிகளில் 1952ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் வாக்குப்பதிவு நடந்தது.

இந்தத் தேர்தலின்போது கின்னௌரில் உள்ள சினி கிராமத்தில் (தற்போது ‘கல்பா’ என்றழைக்கப்படுகிறது) ஷியாம் சரண் நெகி முதல் நபராக வாக்களித்தார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் வாக்களித்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதுவரை அவர் 34 முறை வாக்களித்துள்ளார்.

4. 27ஆவது ஐநா பருவநிலை மாற்ற மாநாடு: எகிப்தில் இன்று தொடக்கம்

எகிப்தில் 27ஆவது ஐநா பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கவுள்ளது. எகிப்தில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் நவ.6-8 வரை 27ஆவது ஐநா பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், 2020ஆம் ஆண்டுக்குள் வருடந்தோறும் 100 பில்லியன் டாலர்களை கூட்டாக திரட்ட வளர்ந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால் அதனை அந்த நாடுகள் செய்யவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மாநாட்டில் இதர வளரும் நாடுகளுடன் இணைந்து வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5th & 6th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Who is the head of the panel set up to strengthen the assessment and accreditation of higher educational institutions?

A. K Radhakrishnan

B. Kasturi Rangan

C. Amitabh Kant

D. V K Paul

Answer & Explanation

Answer: A. K Radhakrishnan

  • The Central Government has set up a high–level panel to strengthen the assessment and accreditation of higher educational institutions. The committee has been formed under the chairmanship of K Radhakrishnan, chairperson, Board of Governors, IIT Kanpur. He is also the chairperson of IIT Council Standing Committee.

2. Which word has been selected as the ‘Word of the Year 2022 by Collins dictionary’?

A. Lock Down

B. Permacrisis

C. Pandemic

D. Non–Fungible Token

Answer & Explanation

Answer: B. Permacrisis

  • ‘Permacrisis’, a term that describes ‘an extended period of instability and insecurity’, has been named Word of the Year 2022 by Collins dictionary. The word relates to the challenges posed by climate change, the war in Europe, a cost–of–living crisis and political chaos. It was first used in academic contexts in the 1970s. In 2020, Collins picked “lockdown” as its word of the year and last year, it opted for “NFT– Non–fungible token”.

3. Which country launched the ‘Beidou’ satellite navigation system?

A. Japan

B. China

C. Russia

D. Israel

Answer & Explanation

Answer: B. China

  • China has released plans to further expand the global reach of its home–grown Beidou satellite navigation system. It is named as the country’s alternative to America’s Global Positioning System (GPS). Beidou set up a first of three Continuously Operating Reference Stations (CORS) for its network in Thailand in the year 2013.

4. Which country has launched the world’s longest passenger train, as of November 2022?

A. Japan

B. China

C. Switzerland

D. Sweden

Answer & Explanation

Answer: C. Switzerland

  • Switzerland has launched the world’s longest passenger train with 100 coaches, 4,550 seats, measuring 1910 metres. Rhaetian Railway, a Swiss transport company, has set a world record for the longest passenger train, to celebrate the 175th anniversary of Switzerland’s first railway. The record–breaking train was formed of 25 new ‘Capricorn’ electric trains, which passed through the landscape in the Swiss Alps.

5. Which is the most powerful rocket ever launched from the Earth, as of November 2022?

A. Minuteman Heavy

B. Falcon Heavy

C. Long March 5b

D. PSLV 52

Answer & Explanation

Answer: B. Falcon Heavy

  • SpaceX launched its Falcon Heavy rocket, sending several US military satellites into orbit. This is the most powerful launched ever from the Earth. This was SpaceX’s 50th launch of 2022 as SpaceX’s workhorse Falcon 9 rocket has launched 49 missions so far this year. The present pace of the space company is a launch every 6.10 days.

6. Which class of vessel is the first nuclear submarines designed and built by India?

A. Shishumar

B. Arihant

C. Sindhughosh

D. Kalvari

Answer & Explanation

Answer: B. Arihant

  • India’s nuclear–powered submarine INS Arihant on October 14, 2022 carried out a successful launch of a submarine–launched ballistic missile (SLBM) in the Bay of Bengal with a “very high accuracy”. The Arihant–class submarines are nuclear powered ballistic missile submarines built under the Advanced Technology Vessel (ATV) project. They will be the first nuclear submarines designed and built by India.

7. Where are the headquarters of SCO–RATS that was making news recently?

A. Shanghai

B. Beijing

C. Tashkent

D. Astana

Answer & Explanation

Answer: C. Tashkent

  • The Executive Committee of the Regional Anti–Terrorist Structure (RATS) of the Shanghai Cooperation Organisation (SCO) is the permanent body of the SCO RATS based in Tashkent, the capital of Uzbekistan. It was in news because meeting of the Council of the Regional Anti–Terrorist Structure of the Shanghai Cooperation Organisation (RATS SCO) was held in New Delhi on October 14, 2022.

8. Abdul Latif Rashid was recently elected new President of which country / territory?

A. Palestine

B. Iraq

C. Egypt

D. Yemen

Answer & Explanation

Answer: B. Iraq

  • Iraqi lawmakers have elected Abdul Latif Rashid as the new President of Iraq, marking a crucial step toward forming a new government for the country. Rashid received 162 votes in the second round of voting, defeating Barham Salih who gained 99 votes, while eight votes were considered invalid. The newly–elected Rashid was later sworn in as the President of Iraq, the fifth President of the country since 2003.

9. The name of Joseph Wresinski is related to which of the following activism?

A. Elimination of AIDS

B. Eradication of Child Labour

C. Eradication of Poverty

D. Eradication of Human Trafficking

Answer & Explanation

Answer: B. Eradication of Child Labour

  • Joseph Wresinski was a French priest and humanitarian activist. In 1987, Fr. Wresinski launched the International Day for the Eradication of Poverty (17 October), later recognised by the United Nations General Assembly. This year – 2022 theme was “Dignity for all in practice”.

10. As per the Public Affairs Index–2022, which is the best–governed small state in India?

A. Goa

B. Sikkim

C. Meghalaya

D. Manipur

Answer & Explanation

Answer: B. Sikkim

  • Haryana has been on top position in the category of big states in the Public Affairs Index–2022. The state has emerged at the forefront in social, economic and political justice themes. It has topped among the major states with a score of 0.6948, followed by Tamil Nadu, Kerala, Chhattisgarh, Punjab and Karnataka among many other states. On the other hand, Sikkim has retained its position as the best–governed small state in India. The index is released by Bengaluru–based non–profit think tank Public Affairs Centre (PAC).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!