5th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. மின்னணு வணிக நிறுவனங்களுக்கு சமமான வரி விதிப்பதற்காக, இந்தியாவுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வர்த்தக நடவடிக் -கையை முன்மொழிந்துள்ள நாடு எது?

அ) ரஷியா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) சீனா

ஈ) இங்கிலாந்து

 • அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியானது (USTR) மின்னணு வணிக நிறுவனங்களுக்கு சமமான வரி விதிக்கும் இந்தியா மற்றும் வேறு சில நாடுகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
 • 2020 ஜூனில், டிஜிட்டல் சேவைகள் மீதான வரி விதிப்பு (அ) இந்தியா, இத்தாலி, துருக்கி, இங்கிலாந்து, ஸ்பெயின் & ஆஸ்திரியாவின் சமமான வரிமுறைக்கு எதிராக, அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974’இன் பிரிவு 301’இன்கீழ், அமெரிக்கா ஒரு விசாரணையைத் தொடங்கியது.

2. உலகின் மிகப்பெரிய நிகழ்த்துக்கலை அமைப்பான பன்னாட்டு நாடக நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?

அ) ரோம்

ஆ) பாரிஸ்

இ) ஜெனீவா

ஈ) மாஸ்கோ

 • சர்வதேச நாடக நிறுவனமானது உலகின் மிகப்பெரிய நிகழ்த்துக்கலை அமைப்பு ஆகும். இது நாடக & நடன வல்லுநர்கள் மற்றும் UNESCO ஆகியவற்றால் கடந்த 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலக நாடக நாள் ஆண்டுதோறும் மார்ச்.27 அன்று சர்வதேச நாடக நிறுவனத்தாலும் உலகெங்கிலும் உள்ள நாடக சமூகத்தின் மையங்களாலும் கொண்டாட -ப்படுகிறது. அதே தேதியில் 1962’இல், “தியேட்டர் ஆப் நேஷன்ஸ்” சீசன் பாரிஸில் தொடங்கப்பட்டது.

3. IUCN’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, சிறிய, இலகுவான ஆப்பிரிக்க காட்டு யானையின் நிலை என்ன?

அ) அச்சுறு நிலையை அண்மித்த இனம்

ஆ) அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

இ) அருகிவிட்ட இனம்

ஈ) மிகவும் அருகிவிட்ட இனம்

 • இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN) தனது புதிய மதிப்பீட்டை அண்மையில் வெளியிட்டது. தந்தத்துகக்காக வேட்டையாடப்படுவதும், மனிதர்களின் ஆக்கிரமிப்பினாலும் ஆப்பிரிக்காவில் உள்ள இரு வகை யானைகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை இந்த மதிப்பீடு எடுத்துக்காட்டுகிறது. சவானா யானைகள் “அருகிவிட்ட இனம்” என்றும், மிகச்சிறிய, இலகுவான காட்டு யானைகள் “மிகவும் அருகிவிட்ட இனம்” என்றும் IUCN அறிவித்துள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “HEAL-COVID” என்ற நாடு தழுவிய சோதனை செயல்படுத்தப்படவுள்ள நாடு எது?

அ) USA

ஆ) UK

இ) ரஷியா

ஈ) தைவான்

 • ஐக்கியப் பேரரசானது HEAL-COVID (COVID-19 தொற்றின் நீண்டகால விளைவுகளைத் தணிக்க உதவுகிறது) என்ற ஒரு நாடு தழுவிய மருந்து சோதனையைத் தொடங்கவுள்ளது. பயனுள்ள சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சந்தையில் ஏற்கனவே கிடைக்கக்கூடிய பாதுகாப்பான, இருக்கும் அனைத்து மருந்துகளையும் தேர்வு செய்து செலுத்தி சோதிக்கப்படும்.
 • நோயாளிகளிடையே இறப்பைக் குறைப்பதற்கான மருந்துகளைக் கண் -டுபிடிப்பதை இந்தச் சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி என்பவர் யார்?

அ) SBI’இன் முன்னாள் CMD

ஆ) ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர்

இ) முன்னாள் தலைமை விஜிலென்ஸ் ஆணையர்

ஈ) உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

 • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கமலேஷ் சந்திர சக்ரவர்த்தி சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பஞ்சாப் தேசிய வங்கி (2007-2009) மற்றும் இந்தியன் வங்கி (2005-2007) ஆகியவற்றின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

6. ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாய்களை ‘சிகிச்சை நாய்களாக’ நியமிக்க முடிவு செய்துள்ள ஆயுதப்படை எது?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய கடற்படை

இ) இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படை

ஈ) இந்திய கடலோர காவல்படை

 • இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படையானது ஓய்வுபெற்ற போர்குணமுள்ள நாயினங்களை ‘சிகிச்சை நாய்களாக’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உட்பட்டிருக்கும் பணியாளர்களை விரைவாக மீட்க அவை உதவும். மேலும் அவை, சிப்பாய்களின் மாற்றுத் திறன்கொண்ட சிறார்களின் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக, ஓய்வுபெற்ற நாயினங்கள் படையினருக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படவுள்ளன.

7. இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா கட்டப்பட்டுள்ள இடம் எது?

அ) சியோல்

ஆ) சென்னை

இ) பெய்ஜிங்

ஈ) புது தில்லி

 • இந்தோ-தென் கொரிய நட்பு பூங்கா புது தில்லி – கண்டோன்மென்ட்டில் கட்டப்பட்டுள்ளது. 1950-53 கொரியப் போரின்போது இந்திய அமைதி காக்கும் படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இப்பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் சு வூக் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

8. எந்த நாட்டின் இளைஞர்களுக்காக ‘ஸ்வர்ண ஜெயந்தி’ உதவித் தொகை திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்?

அ) இலங்கை

ஆ) வங்காளதேசம்

இ) நேபாளம்

ஈ) மியான்மர்

 • இந்தியப்பிரதமர் மோடி, வங்காளதேச தேசிய நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, வங்காளதேசத்துக்கு இரு நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் அரை நூற்றாண்டு கால உறவுகளை குறிக்கும் வகையில், வங்காளதேச இளைஞர்களுக்கு ‘சுவர்ண ஜெயந்தி’ உதவித்தொகை திட்டத்தை மோடி அறிவித்துள்ளார்.
 • இந்தியாவிற்கு வருகைதரவும், இந்தியாவின் துளிர் மற்றும் புத்தாக்க சூழலமைப்பில் சேரவும் வங்கதேசத்தின் 50 தொழில்முனைவோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

9. உலக மேம்பாட்டு அறிக்கையின்படி, கட்டற்ற தரவுக்கொள்கையைக்கொண்டுள்ள குறைந்த வருவாய்கொண்ட நாடுகளின் சதவீதம் என்ன?

அ) 5%

ஆ) 11%

இ) 22%

ஈ) 33%

 • உலக வங்கியின் அண்மைய உலக மேம்பாட்டு அறிக்கையின்படி, பெரும்பாலான நாடுகள் குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் கட்டற்ற தரவுக்கொள்கையை செயல்படுத்தவில்லை. குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுள் 11% நாடுகள் மட்டுமே திறந்தநிலை உரிமத்துடன் தங்கள் தரவை தொடர்ந்து கிடைக்கச் செய்து வருகின்றன.
 • குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச் சதவீதம் 19 சதவீதமாக உள்ளது; உயர்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச்சதவீதம் 22 சதவீதமாகவும், உயர் வருவாய் கொண்ட நாடுகளுள் இந்தச்சதவீதம் 44 சதவீதமாகவும் உள்ளது.

10. உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை கட்டப்படுகிற நாடு எது?

அ) போலந்து

ஆ) நார்வே

இ) பிரான்ஸ்

ஈ) ஜிம்பாப்வே

 • ஸ்டாதாவெட் கடலில் கப்பல்கள் செல்ல உதவும் உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை எனக்கூறப்படுவதை நிர்மாணிப்பதற்கு, நார்வே சமீபத்தி -ல் ஒப்புதல் பெற்றுள்ளது. இது ஒரு மைல் நீளமுள்ள 118 அடி அகலமுள்ள சுரங்கப்பாதையாக கட்டப்படவுள்ளது, இது, வடமேற்கு நார்வேயிலுள்ள ஸ்டாதாவெட் தீபகற்பத்தின் வழியாக செல்லும்.
 • இந்தத் திட்டத்திற்கு சுமார் 2.8 பில்லியன் நார்வே குரோனர்கள் (330 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும். மூன்று முதல் நான்கு ஆண்டு காலத்திற்குள் இது கட்டி முடிக்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அயோத்தி முதல் சித்திரகூடம் வரை ஸ்ரீராமர் வனவாசம் சென்ற பாதையில் புதிய சாலை!

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி முதல் சித்திரகூடம் வரை, ஸ்ரீராமர் வனவாசம் சென்ற பாதையில் 210 கிமீ தொலைவுக்கு புதிய சாலை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இராமாயண இதிகாசத்தின்படி, அயோத்தியில் ராஜ்ய பட்டாபிஷேகத்தைத் துறந்த ஸ்ரீராமர் தனது மனைவி சீதை, சகோதரர் லட்சுமணனுடன் 14 ஆண்டு வனவாசம் மேற்கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேறிச் சென்ற பாதையாக, அயோத்தியிலிருந்து சித்திரகூடம் வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இதிகாச நிகழ்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் “இராமர் வனவாசப்பாதை” என்ற பெயரில் புதிய நெடுஞ்சாலைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச்சாலை, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் தொடங்கி, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜேத்வாரா, சிருங்கவேர்பூர் உள்ளிட்ட இடங்கள் வழியாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்திரகூடம் வரை அமைக்கப்படுகிறது. இந்தத் தகவல் மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைத் துறை அமைச்சக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை, தேசிய நெடுஞ்சாலைச் சாலை எண்கள் 28, 96, 731A ஆகியவற்றின் ஊடாகச் செல்கிறது. தவிர, சிருங்கவேர்பூரில் கங்கை நதியின் மேல் பாலத்துடன் பசுமைச் சாலை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது.

2. மியாமி ஓபன்: ஆஷ்லி பர்ட்டி சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிபர்ட்டி மீண்டும் சாம்பியன் ஆனார். இதன்மூலம் உலகின் முதல்நிலை வீராங்கனை அந்தஸ்தையும் அவர் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருந்த பர்ட்டி இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்த கனடாவின் பியான்கா ஆன்ட்ரி
-ஸ்குவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பர்ட்டி 6-3, 4-0 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது பியான் -காவின் வலதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் பர்ட்டி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மியாமி ஓபனிலும் பர்ட்டி சாம்பியன் ஆகியிருந்த நிலையில், தற்போது அந்தப்பட்டத்தை அவர் தக்கவைத்துக்கொண்டார். கரோனா தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு போட்டி இரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது வீராங்கனை

மியாமி ஓபன் பட்டத்தை தொடர்ந்து வென்றவர்கள் வரிசையில் பர்ட்டி 6ஆவது வீராங்கனையாக இணைந்துள்ளார். இதற்கு முன் ஸ்டெஃபானி கிராஃப் (ஜெர்மனி), மொனிகா செலஸ் (அமெரிக்கா), அரான்ட்ஸா சென்ஷெ -ஸ் விகாரியோ (ஸ்பெயின்), செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரி -க்கா) ஆகியோர் இவ்வாறு மியாமி ஓபன் பட்டத்தை அடுத்தடுத்து இரு முறை வென்றுள்ளனர்.

3. மியாமி ஓபன்: பட்டம் வென்றார் ஹியூபர்ட் ஹர்காக்ஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போலாந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் கோப்பை வென்றார். அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை வென்ற பட்டங்களிலேயே இதுதான் மிகப்பெரியதாகும். அதாவது இது அவரது முதல் ATP மாஸ்டர்ஸ் பட்டமாகும். போட்டித்தரவரிசையில் 26ஆம் இடத்திலிருந்த ஹியூபர்ட் இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 21ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 1 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் ஹியூபர்ட் 7-6 (7/4), 6-4 என்ற செட்களில் வெற்றிபெற்றார். ‘மாஸ்டர்ஸ் 1000’ போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் போலாந்து வீரர் என்ற பெருமையை ஹியூபர்ட் பெற்றுள்ளார். உலகின் 37ஆம் நிலை வீரராக இருக்கும் ஹியூபர்ட், அடுத்த வாரத்தில் வெளியாகும் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக 16ஆவது இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷுகோ அயாமா – எனா ஷிபாஹரா

மியாமி ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜப்பானின் ஷுகோ அயாமா / எனா ஷிபாஹரா இணை சாம்பியனானது. போட்டித்தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருந்த அயாமா / ஷிபாஹரா ஜோடி இறுதிச்சுற்றில் 6-2, 7-5 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 8ஆம் இடத்திலிருந்த அமெரிக்கா -வின் ஹேலி கார்டர் / பிரேஸிலின் லுய்சா ஸ்டெஃபானி இணையை வீழ்த்தியது.

4. மகளிர் கிரிக்கெட்: கோப்பை வென்றது ரயில்வேஸ் அணி

மகளிர் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய ரயில்வே அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. 14ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ரயில்வேஸ் அணி கோப்பை வென்றது இது 12ஆவது முறையாகும்.

குஜராத் மாநிலம், இராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ரயில்வேஸ் 37 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 இரன்கள் எடுத்து வென்றது.

5. ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய அணியில் இளவேனில், மானு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் 10 பிரிவுகளில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப் -பட்டது. இதில், 10 மீ ஏர் ரைபிளில் உலகின் முதல்நிலை வீராங்கனையா -க உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் மானு பாக்கர்போன்ற முக்கிய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சிங்கி யாதவ், ரிசர்வ் வீராங்கனையாக தேர்வாகியுள்ளார்.

தேசிய தேர்வுக் குழுவானது, COVID-19 சூழலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரிவுக்கும் இரு ரிசர்வ் போட்டியாளர்களை அறிவித்துள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள்:

ஆடவர்: திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார் (ரிசர்வ்: சந்தீப் சிங், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர்)

மகளிர்: அபூர்வி சந்தேலா, இளவேனில் வாலறிவன் (ரிசர்வ்: அஞ்சும் முட்கி -ல், ஷ்ரேயா அகர்வால்)

50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ்:

ஆடவர்: சஞ்சீவ் ராஜ்புத், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர், (ரிசர்வ்: ஸ்வப்னில் குசேல், செயின் சிங்)

மகளிர்: அஞ்சும் முட்கில், தேஜஸ்வினி சாவந்த் (ரிசர்வ்: சுனிதி சௌஹான், காயத்ரி)

10 மீட்டர் ஏர் பிஸ்டல்:

ஆடவர்: சௌரவ் சௌதரி, அபிஷேக் வர்மா (ரிசர்வ்: ஷாஸார் ரிஸ்வி, ஓம் பிரகாஷ் மிதர்வால்)

மகளிர்: மானு பாக்கர், யஷஸ்வினி சிங் தேஸ்வால் (ரிசர்வ்: ஸ்ரீ நிவேதா, ஷ்வேதா சிங்)

25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் மகளிர்: ராஹி சர்னோபாத், மானு பாக்கர் (ரிசர்வ்: சிங்கி யாதவ், அபிந்த்யா பாட்டீல்)

ஸ்கீட் ஆடவர்: அங்கத்வீர் சிங் பாஜ்வா, மைராஜ் அகமது கான் (ரிசர்வ்: குர்ஜோத் சிங் காங்குரா, ஷீராஸ் ஷேக்)

10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில் வாலறிவன், தீபக் குமார், அஞ்சும் முட்கில்

10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி: சௌரவ் சௌதரி, மானு பாக்கர், அபிஷேக் வர்மா, யஷஸ்வினி சிங் தேஸ்வால்

6. 471 மில்லியன் கிலோ மீட்டர் பயணம்; செவ்வாயில் தரையிறங்கியது ‘இஞ்செனுயிட்டி’ ஹெலிகாப்டர்

செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த பிப்ரவரி.18ஆம் தேதி தரையிறங்கியது. இந்த நிலையில் அந்த விண்கலத்தோடு பொறுத்த -ப்பட்டிருந்த ‘இஞ்செனுயிட்டி’ என்ற சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிரக -த்தில் தரையிறங்கியுள்ளதாக NASA அறிவித்தது.

இஞ்செனுயிட்டி ஹெலிகாப்டரை செவ்வாய்க் கிரகத்தில் ஏப்ரல்.11ஆம் தேதி பறக்கச்செய்ய NASA திட்டமிட்டுள்ளது. அந்தச் சோதனை வெற்றி பெற்றால் கிரகங்களை ஆய்வு செய்வதில் NASA புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் என்று கூறப்படுகிறது. 471 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்து செவ்வாய்க் கிரகத்தை அடைந்திருக்கும் இந்த ஹெலிகாப்டர், பூமிக்கு வெளியே வேறொரு கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் ஆகும்.

இந்தச் சிறிய இரக ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டது. பூமியுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க் கிரகத்தில் 1/3 பங்கு மட்டுமே புவியீர்ப்பு விசை இருக்கும். அதேபோல் அதன் வளிமண்டல அடர்த்தி பூமியின் வளிமண்டல அடர்த்தியில் ஒரு சதவீதந்தான். செவ்வாய்க் கிரகத்தில் தட்பவெப்பநிலை கணிக்கமுடியாத அளவுக்கு இருக்கும். இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 90°C வரை குறையும். இதனால் மின்னணு பொருட்கள் உடையவும், உறையவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த ஹெலிகாப்டரி -ல் உட்புற ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஹீட்டர் ஹெலிகாப்டரின் மூடப்படாத பகுதிகளை குளிரிலிருந்து பாது -காக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டரை ஐந்து முறை பறக்கச் செய்ய NASA திட்டமிட்டுள்ளது. முதலில் ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் என்று 10 மீட்டர் உயரம் வரைச் செல்லும். அங்கே முப்பது வினாடிகளுக்கு சுழலும். அதன் பிறகு தரைப்பரப்பை நோக்கி இறங்கும். 85 மில்லியன் டாலர் செலவிட்டு NASA இந்த ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7. ஒரு நாளைக்கு: 37 கிமீ துாரத்துக்கு: நெடுஞ்சாலை பணி:

கடந்த 2014 ஏப்ரல் நிலவரப்படி தேசிய நெடுஞ்சாலை 91,287 கிமீட்டராக இருந்தது. இது மார்ச் 2021’இல் 1,37,625 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. 2021’இல் ஒரு நாளைக்கு கட்டுமானம் செய்யப்படும் நெடுஞ்சாலை தொலைவு 37 கிமீட்டராக உயர்ந்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்காக 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் `1,83,101 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிதி ஒதுக்கீடு 2015’இல் `33,414 கோடியாக மட்டுமே இருந்தது.

அந்தவகையில் இந்த ஆண்டு ஒதுக்கீடானது 5.5 மடங்கு உயர்ந்துள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. அதேசமயம் நெடுஞ்சாலை திட்டங்களுக்காகப் பகிரப்பட்ட 2020 நிதியாண்டை காட்டிலும் 126% உயர்ந்துள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

1. Which country has proposed retaliatory trade action against India for imposing Equalisation levy on e–commerce companies?

A) Russia

B) USA

C) China

D) UK

 • The United States Trade Representative (USTR) has proposed retaliatory trade actions against India and some other countries for imposing Equalisation levy on e–commerce companies.
 • In June 2020, the US initiated an investigation under Section 301 of the US Trade Act, 1974 against the taxation on the digital services or the Equalisation levy by India, Italy, Turkey, UK, Spain and Austria.

2. The International Theatre Institute (ITI), the world’s largest performing arts organization, is headquartered in which city?

A) Rome

B) Paris

C) Geneva

D) Moscow

 • The International Theatre Institute (ITI) is the world’s largest performing arts organization. It was founded in 1948 by theatre and dance experts and the UNESCO. World Theatre Day is celebrated annually on March 27th by the centres of ITI and the theatre community across the world.
 • On the same date in 1962, the “Theatre of Nations” season was inaugurated in Paris.

3. As per the recent report of the IUCN, what is the status of the smaller, lighter African forest elephant?

A) Near Threatened

B) Vulnerable

C) Endangered

D) Critically Endangered

 • The International Union for Conservation of Nature (IUCN) released its new assessment recently. It highlighted the pressures faced by the two species of elephants in Africa due to poaching for ivory and human encroachment.
 • It announced that the Savanna elephant was “endangered” and the much smaller, lighter forest elephant was “critically endangered”.

4. HEAL–COVID, which was making news recently, is a nation–wide trial to be implemented in which country?

A) USA

B) UK

C) Russia

D) Taiwan

 • The United Kingdom is set to launch HEAL–COVID (Helping to Alleviate the Longer–term consequences of COVID–19), a national drug trial. The trials would test the selection of safe, existing drugs already available in the market on patients across the country, in order to find effective treatments. The trial aims to find drugs to reduce deaths and hospital readmissions among patients.

5. Who was Kamalesh Chandra Chakrabarty, whose name is in news recently?

A) Former CMD of SBI

B) Former Deputy Governor of RBI

C) Former Chief Vigilance Commissioner

D) Former Chief Justice of Supreme Court

 • Reserve Bank of India’s former Deputy Governor Kamalesh Chandra Chakrabarty passed away recently after suffering a heart attack. He was 68 years old.
 • He also served as the Chairman and Managing Director of Punjab National Bank (2007–2009) and Indian Bank (2005–2007).

6. Which armed force has decided to employ retired combat dogs as ‘therapy dogs’?

A) Indian Army

B) Indian Navy

C) Indo–Tibetan Border Police

D) Indian Coast Guard

 • The Indo Tibetan Border Police (ITBP) has decided to utilise the services of retired combat canines / dogs as ‘therapy dogs’. They would help early recovery of personnel undergoing medical treatment. Also, they are to be used in treatment of the soldier’s specially abled children. This is the first time in India, that retired canine elements are being used to serve the soldiers.

7. Where is the Indo–South Korean friendship park constructed?

A) Seoul

B) Chennai

C) Beijing

D) New Delhi

 • The Indo–South Korean friendship park has been constructed in New Delhi – Cantonment. It has been built to commemorate the contribution of Indian peacekeeping force during the Korean war of 1950–53. The park was jointly inaugurated by Defence Minister Rajnath Singh and Minister of National Defence of South Korea Suh Wook.

8. The Indian Prime Minister launched the ‘Swarna Jayanti’ scholarships for the youth of which country?

A) Sri Lanka

B) Bangladesh

C) Nepal

D) Myanmar

 • The Prime Minister of India Narendra Modi is on a 2–day official visit to Bangladesh as a part of National Day celebrations in Bangladesh. He has announced the ‘Swarna Jayanti’ scholarships for the youth of Bangladesh to mark half a century ling ties between the two countries. PM has invited 50 entrepreneurs of Bangladesh to visit India and to join India’s start–up and innovation ecosystem.

9. As per the World Development Report, what is the percentage of low–income countries had an open–data policy?

A) 5%

B) 11%

C) 22%

D) 33%

 • As per the recent World Development Report by the World Bank, most countries have not implemented the open–data policy, particularly the developing economies. Only 11% low–income countries consistently made their data available with an open license.
 • The percentage in lower–middle–income countries was 19%; for upper–middle–income countries is 22% and high–income countries at 44 %.

10. The world’s first ship tunnel is being constructed in which country?

A) Poland

B) Norway

C) France

D) Zimbabwe

 • Norway has recently got the approval to construct what’s being claimed as the world’s first ship tunnel, to help vessels navigate the Stadhavet Sea. It is to be constructed as a mile–long 118–feet–wide tunnel, that will burrow through the Stadhavet peninsula in north–west Norway.
 • This project will cost around 2.8 billion Norwegian kroner (USD 330 million) and will take between three to four years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *