TnpscTnpsc Current Affairs

5th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. UNESCOஇன் முக்கியமான அழிந்துவரும் பாரம்பரியக் கூர்நோக்கங்களின் பட்டியலில், கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் வானியல் ஆய்வுக்கூடம் சேர்க்கப்பட்டுள்ளது?

அ. மகாராஷ்டிரா

ஆ. பீகார் 

இ. மேற்கு வங்கம்

ஈ. கேரளா

  • முசாபர்பூரில் உள்ள LS கல்லூரியில் உள்ள வானியல் ஆய்வுக்கூடம் UNESCO–இன் உலகின் முக்கியமான அழிந்துவரும் பாரம்பரியக் கூர்நோக்ககங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1916ஆம் ஆண்டில் இந்த வானியல் ஆய்வகம் உருவாக்கப்பட்டது. பல பத்தாண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த வானியல் ஆய்வகத்தில், கடந்த 1995இல் சில வானியல் உபகரணங்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து அது மூடி முத்திரையிடப்பட்டது.

2. IT மற்றும் ITeS தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கீழ்க்காணும் எந்த மாநிலமும் லார்சன் & டூப்ரோவும் கையெழுத்திட்டன?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத் 

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • வதோதராவில் IT மற்றும் IT அடிப்படையிலான சேவைகளளிக்கும் (ITeS) தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லார்சன் & டூப்ரோவும் குஜராத் மாநில அரசாங்கமும் கையெழுத்திட்டன. `7,000 கோடி முதலீட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் L&T இந்த IT பூங்காவை உருவாக்கும். இது ஓர் ஆண்டில் 2,000 பொறியாளர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் பணி வழங்கும்; மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளையும் அது உருவாக்கும்.

3. உலகின் மிகப்பெரிய மிதவை சூரிய மின்னுற்பத்தி நிலையம் கட்டப்படவுள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. மத்திய பிரதேசம் 

இ. குஜராத்

ஈ. பீகார்

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, உலகின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையமானது மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவாவில் கட்டப்படவுள்ளது. இந்த ஆலை 2022–23ஆம் ஆண்டிற்குள் 600 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பீடு `3000 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் உற்பத்தித் திட்டம் தெலுங்கானாவில் உள்ள இராமகுண்டத்தில் NTPC–ஆல் இயக்கப்பட்டு வருகிறது.

4. வருமான வரித்துறையின் TIN 2.0 தளத்தில், முதன்முறையாக எந்த வங்கியின் கொடுப்பனவு நுழைவு வாயில் (payment gateway) இடம்பெற்றுள்ளது?

அ. பாரத வங்கி

ஆ. பெடரல் வங்கி 

இ. பஞ்சாப் தேசிய வங்கி

ஈ. ஆக்சிஸ் வங்கி

  • பெடரல் வங்கியானது வருமான வரித்துறையின் TIN 2.0 தளத்தில் அதன் கொடுப்பனவு நுழைவாயில் பட்டியலிட்ட இந்தியாவின் முதல் வங்கியாக மாறியுள்ளது. கடன்/பற்றட்டை, UPI, NEFT/RTGS மற்றும் இணையவழி வங்கிச் சேவை முறைமை போன்ற முறைகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் பணஞ்செலுத்துவதற்கு இந்தக் கொடுப்பனவு நுழைவாயில் உதவுகிறது.

5. 2022ஆம் ஆண்டிற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவிற்கு தலைமை வகிக்கிற நாடு எது?

அ. சீனா

ஆ. இரஷ்யா

இ. இந்தியா 

ஈ. கஜகஸ்தான்

  • அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகளைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தூதரக அதிகாரிகள் பங்கேற்கும், தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான சிறப்புக் கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது. இது அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா இரண்டாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அக்கவுன்சிலில் இந்தியாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைகிறது. 2022ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைவராக இந்தியா உள்ளது.

6. இந்தியாவில், ‘தேசிய ஒலிபரப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.23 

ஆ. ஆகஸ்ட்.23

இ. செப்டம்பர்.23

ஈ. அக்டோபர்.23

  • தேசிய ஒலிபரப்பு நாள் என்பது இந்தியாவில் ஜூலை.23 அன்று அனுசரிக்கப்படும் வருடாந்திர நிகழ்வாகும்; இது நம் வாழ்வில் வானொலியின் தாக்கத்தை நினைவூட்டுகிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிறுவனமான ‘பிரசார் பாரதி’யில் அகில இந்திய வானொலியும் (AIR) தூர்தர்ஷனும் அடங்கும். ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப் –பட்ட இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி லிட் (IBC) கடந்த 1936ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியாக (AIR) மாற்றப்பட்டது.

7. NITI ஆயோக்கின் சமீபத்திய அறிக்கையின்படி R&D (GERD)–க்கான இந்தியாவின் மொத்தச் செலவினம் என்ன?

அ. $43/ நபர் 

ஆ. $83/ நபர்

இ. $123/ நபர்

ஈ. $183/ நபர்

  • NITI ஆயோக்கின் இந்திய புத்தாக்க குறியீடு – 2021–இன்படி, ஆராய்ச்சி & மேம்பாட்டிற்கான (R&D) இந்தியாவின் மொத்தச் செலவினம் உலகிலேயே மிகக்குறைவானவற்றுள் ஒன்றாகும். அது $43/ தனிநபர் என்றளவில் உள்ளது. இந்தியா இந்தச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ரஷ்யா ($285) மற்றும் பிரேசில் ($173) போன்ற BRICS அல்லது ஆசியான் நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று இந்தக் குறியீட்டில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு R&D–க்கு 55%–க்கும் மேல் செலவு செய்கிறது.

8. சமீபத்தில் வெளியிடப்பட்ட, ‘E–AMRIT செயலியுடன் தொடர்புடைய துறை எது?

அ. மின்–வாகனப் போக்குவரவு

ஆ. விளையாட்டு

இ. தினை சாகுபடி

ஈ. பெண்கள் அதிகாரமளித்தல்

  • NITI ஆயோக் ஆனது ஐக்கிய இராஜ்ஜியத்துடன் இணைந்து மின்–வாகனப் போக்குவரவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த e–AMRIT (Accelerated e–Mobility Revolution for India’s Transportation) செயலியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அதிநவீன வேதியியல் மின்கல மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி சந்தை பற்றிய அறிக்கையையும் இது வெளியிட்டது. மின்–வாகனங்கள், மின்னேற்ற உட்கட்டமைப்பு மற்றும் மின்கல சேமிப்பு ஆகிய துறைகளில் NITI ஆயோக் இங்கிலாந்து அரசாங்கத்துடன் கூட்டிணைந்து செயல்பட்டு வருகிறது.

9. இந்தியா, எந்த உலகளாவிய குழுவுடன் இணைந்து, ‘நாடுகடந்த குற்றங்கள் குறித்த கூட்டத்தை’ நடத்தியது?

அ. பிம்ஸ்டெக்

ஆ. பிரிக்ஸ்

இ. ஆசியான் 

ஈ. ஜி–20

  • நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான 9ஆவது ஆசியான்–இந்திய மூத்த அதிகாரிகள் கூட்டம் அமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஆசியான்–இந்தியா வேலைத் திட்டத்தின் கட்டமைப்பின்கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்துதற்கான வழிகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். நாடுகடந்த குற்றங்கள் குறித்த 10ஆவது ஆசியான்–இந்தியா SOMTC ஆலோசனைக் கூட்டம் இந்தோனேசியாவில் 2023–இல் நடைபெறும்.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற Monitoring App for Seamless Inspection (MASI) உடன் தொடர்புடையது எது?

அ. நலப்பராமரிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல்

ஆ. குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல் 

இ. விளையாட்டு நிறுவனங்களில் ஆய்வு

ஈ. கல்வி நிறுவனங்களில் ஆய்வு

  • கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2,000 குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு/காப்பு நிறுவனங்களில் இறந்துள்ளனர் என்று மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 27,085 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது (NCPCR) ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அது குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைக் கண்காணிக்கும் ‘Monitoring App for Seamless Inspection (MASI)’ என்ற செயலியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்புநாடுகள் பங்கேற்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டத்தை அக்.29ஆம் தேதி இந்தியா நடத்தவுள்ளது. அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்புநாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்புநாடுகளும் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்புநாடாகக் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுடைய நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. அக்குழுவின் சார்பிலேயே சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அக்டோபர்.29-ஆம் தேதி நடக்கவுள்ள அக்கூட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்புநாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அல்பேனியா, பிரேஸில், கேபன், கானா, ஐயர்லாந்து, கென்யா, மெக்ஸிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

நவீன தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சிகண்டு வரும் நிலையில், அவற்றை பயங்கரவாத குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநாவுக்கான இந்தியத்தூதர் ருசிரா கம்போஜ், சிறப்பு கூட்டத்துக்குத் தலைமையேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு நடத்தும் சிறப்புக் கூட்டம் பெரும்பாலும் அமெரிக்காவின் நியூயார்க்கிலேயே நடைபெறும். ஆனால், நடப்பாண்டில் அக்கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே சிறப்புக் கூட்டம் நடைபெறுவது இது 7-ஆவது முறையாகும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பைக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா ஏற்றிருந்தது. நடப்பாண்டு டிசம்பரிலும் அப்பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. குரங்கு அம்மை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்

நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியலை நடுவண் சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் அடிக்கடி அல்லது நீண்ட தொடர்பில் இருந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் இந்நோய் தொற்றக்கூடும்; நோயாளியின் சுவாச துளிகள், கொப்பளங்களில் இருந்து வடியும் நீர் என நேரடியாகவோ அல்லது அவர்களது துணிகள்மூலம் மறைமுகமாகவோ இந்நோய் பரவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்ய வேண்டியவை என்ன?

குரங்கு அம்மை பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட நபரை மற்றவர்களிடமிருந்து முதலில் தனிமைப்படுத்த வேண்டும். சுத்திகரிப்பான் அல்லது சோப்புகள்மூலம் கைகளை கழுவுவதுடன், நோயாளிக்கு அருகில் செல்லும்போது முகக் கவசமும் கையுறையும் அணிவது அவசியம். கிருமிக்கொல்லிகளை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை என்ன?

குரங்கு அம்மை நோயாளிகளின் உடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை வேறு யாருடனும் பகிரக்கூடாது. நோயாளிகளின் துணிகளை நோய் பாதிப்பு இல்லாத நபர்களின் துணிகளுடன் சேர்த்து துவைக்கக் கூடாது. குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக தோன்றினால், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்களை புறக்கணித்து, களங்கப்படுத்தக் கூடாது.

21 நாள்கள் கண்காணிப்பு:

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் பாதிப்பு சாத்தியமுள்ள நபருடன் நெருங்கிய, உடல்ரீதியான தொடர்பிலிருந்தவர்கள் 21 நாள்களுக்கு கண்காணிக்கப்படவேண்டும். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இரத்த தானமோ, செல், திசு, உடல் உறுப்பு, உயிரணு தானமோ செய்யக்கூடாது.

அறிகுறிகள் என்னென்ன?

காய்ச்சல், அரிப்பு, நிணநீர் முடிச்சுகள் வீக்கம்போன்ற அறிகுறிகளுடன் குரங்கு அம்மை பாதிப்பு தொடங்கும். காய்ச்சல் ஆரம்பித்ததில் இருந்து 3 நாள்களுக்குள் வலியுடன் கூடிய கொப்பளங்கள் ஏற்படும். 2 முதல் 4 வாரங்களுக்கு பின் குணமாகும் காலம் தொடங்கும். 4 வாரங்களுக்குள் தானாகவோ சரியாகும் நோயாக இது பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், குரங்கு அம்மையால் ஏற்படும் இறப்பு விகிதம் 3 முதல் 6 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளை அச்சுறுத்தும் நோயாக குரங்கு அம்மை மாறியுள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்பை, சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

5th August 2022 Tnpsc Current Affairs in English

1. Which state’s astronomical observatory has been included in the UNESCO list of Important Endangered Heritage Observatories?

A. Maharashtra

B. Bihar 

C. West Bengal

D. Kerala

  • The astronomical observatory at the LS College, Muzaffarpur has been included in UNESCO list of Important Endangered Heritage Observatories of the World. It was developed in 1916 after a college professor felt the need of an astronomical observatory. After functioning for several decades, it was sealed in 1995, when some astronomical equipment were found missing.

2. Larsen & Toubro signed a MoU with which state to set up an IT and ITeS technology park?

A. Tamil Nadu

B. Gujarat 

C. Karnataka

D. Maharashtra

  • Larsen & Toubro signed a MoU with the Gujarat state government to set up an IT and IT–enabled service (ITeS) Technology Park in Vadodara. L&T will develop this IT Park in the next five years with an investment of Rs 7,000 crores. It will provide jobs for 2,000 engineers and other positions in a year and 10,000 direct and indirect employments in the next five years.

3. In which state, world’s largest floating solar power plant is set to be built?

A. Rajasthan

B. Madhya Pradesh 

C. Gujarat

D. Bihar

  • As per the recent announcement of Renewable Energy Ministry, world’s largest floating solar power plant is going to be built in Madhya Pradesh’s Khandwa. The plant is expected to generate 600–Megawatt power by 2022–23 and is estimated to be worth over Rs 3000 crores. At present, India’s largest floating solar power project is operational at Ramagundam in Telangana, being operated by NTPC.

4. Which is the first bank in India to list its Payment Gateway platform on the income tax department’s TIN 2.0 platform?

A. State Bank of India

B. Federal Bank 

C. Punjab National Bank

D. Axis Bank

  • Federal Bank has become India’s first bank to list its Payment Gateway platform on the income tax department’s TIN 2.0 platform. The Payment Gateway enables tax payers to make their payments using modes such as credit/ debit card, UPI, NEFT/RTGS and internet banking.

5. Which country chairs the UN Security Council Counter–Terrorism Committee for 2022?

A. China

B. Russia

C. India 

D. Kazakhstan

  • India is set to host diplomats of the 15–nation UN Security Council including US, China and Russia, in October for a special meeting on counter–terrorism. India is an elected non–permanent member of the UN Security Council for a two–year term. India’s tenure at the Council will end in December this year. India chairs the Security Council Counter–Terrorism Committee for 2022.

6. When is the ‘National Broadcasting Day 2022’ observed in India?

A. July.23 

B. August.23

C. September.23

D. October.23

  • National Broadcasting Day is an annual event observed on July 23 in India, to remind Indian citizens about the impact of radio on our lives. India’s official broadcaster ‘Prasar Bharati’ includes All India Radio (AIR) and Doordarshan. The Indian Broadcasting Company ltd (IBC) was taken over by the British and transformed into All India Radio (AIR) in 1936.

7. What is India’s gross expenditure on R&D (GERD), as per NITI Aayog’s recent report?

A. $43 per capita 

B. $83 per capita

C. $123 per capita

D. $183 per capita

  • According to NITI Aayog’s India Innovation Index 2021, India’s gross expenditure on research and development (R&D) is one of the lowest in the world, with just USD 43 per capita.
  • It said that India needs to boost this expenditure and at least be on a par with its BRICS or ASEAN counterparts like Russia (USD 285) and Brazil (USD 173). In India, the government spends more than 55% on R&D and private sector is to be encouraged to take up research.

8. ‘E–AMRIT mobile application’, which was recently launched, is associated with which sector?

A. Electric mobility 

B. Sports

C. Millet Cultivation

D. Women Empowerment

  • NITI Aayog launched E–AMRIT (Accelerated e–Mobility Revolution for India’s Transportation) mobile application to raise awareness on electric mobility, in collaboration with UK. It also launched a report on Advanced Chemistry Cell Battery Reuse and Recycling Market in India. NITI Aayog has been collaborating with the UK Government in the areas of e–vehicles, charging infrastructure and battery storage.

9. India held a ‘Meeting on Transnational Crimes’ with which global bloc?

A. BIMSTEC

B. BRICS

C. ASEAN 

D. G20

  • The 9th ASEAN–India Senior Officials Meeting on Transnational Crimes was recently held in a virtual mode. Both sides discussed ways to enhance cooperation under the framework of ASEAN–India Work Plan to combat Transnational Crimes. The 10th ASEAN–India SOMTC Consultation on Transnational Crimes will be held in 2023 in Indonesia.

10. Monitoring App for Seamless Inspection (MASI), which was seen in the news, is associated with which action?

A. Monitoring of Health Care Institutions

B. Monitoring of Child Care Institutions 

C. Inspection of Sports Institutions

D. Inspection of Educational Institutions

  • Women and Child Development Minister Smriti Irani replied in Lok Sabha that over 2,000 children have died in specialised adoption agencies since 2014. As many as 27,085 children have been adopted since 2014. The National Commission for Protection of Child Rights (NCPCR) developed an application namely Monitoring App for Seamless Inspection (MASI) for real–time monitoring of the Child Care Institutions (CCIs).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!