TnpscTnpsc Current Affairs

5th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘அல்லூரி சீதாராம இராஜு’ என்பவர் இன்றைய எந்த மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரராவார்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம் 

ஈ. கர்நாடகா

  • விடுதலைப்போராட்ட வீரர் அல்லூரி சீதாராம இராஜுவின் 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முப்பது அடி உயர வெண்கலச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆந்திர பிரதேச மாநிலம் பீமாவரத்தில் உள்ள க்ஷத்ரிய சேவா சமிதியால் 15 டன் எடைகொண்ட இந்தச் சிலை `3 கோடி செலவில் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டது. இரம்பசோடவரம் காட்டுப்பகுதியில், வலிமைமிக்க ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ராம்பா கிளர்ச்சி’ அல்லது ‘மான்யம் எழுச்சிக்காக அவர் அறியப்படுகிறார்.

2. ‘எண்ணியல் இந்தியா வாரம் – 2022’இன் கருப்பொருள் என்ன?

அ. Catalyzing New India’s Techade 

ஆ. India’s Digital Start Ups

இ. Local to Global

ஈ. Atmanirbhar Start up Ecosystem

  • குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில், 2022 – டிஜிட்டல் இந்தியா வாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். “Catalyzing New India’s Techade” என்பது 2022 – டிஜிட்டல் இந்தியா வாரத்தின் கருப்பொருளாகும்.
  • இந்திய மொழிகளில் இணையம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை எளிதாக அணுகும் வகையில், ‘டிஜிட்டல் இந்தியா பாஷினி’யையும் பிரதமர் தொடங்கிவைத்தார். ‘டிஜிட்டல் இந்தியா ஜெனிசிஸ்’ – நாடு தழிவிய தொழில்நுட்பம் உள்ளார்ந்த துளிர் நிறுவல் தளம், அடுக்கு–II மற்றும் அடுக்கு–III நகரங்களில் `750 கோடி செலவில் வெற்றிகரமான துளிர் நிறுவல்களை ஆதரிக்கும் வகையில் இது தொடங்கப்பட்டது. இந்தியா ஸ்டேக்கின்கீழ் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களின் உலகளாவிய களஞ்சியமான ‘Indiastack.global’உம் அப்போது தொடங்கப்பட்டது.

3. மாநிலங்களின் துளிர்–நிறுவல்கள் தரவரிசை – 2021’ஐ வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 

இ. நிதி அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

  • தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT), வணிகம் & தொழிற்துறை அமைச்சகம், ‘மாநிலங்களின் துளிர்–நிறுவல்கள் தரவரிசை – 2021’ஐ வெளியிட்டுள்ளது. தரவரிசை ஏழு சீர்திருத்தப் பகுதிகளில் கவனஞ்செலுத்துகிறது. குஜராத், கர்நாடகா மற்றும் மேகாலயா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; பீகார், ஆந்திர பிரதேசம், மிசோரம் மற்றும் லடாக் ஆகியவை வளர்ந்து வரும் துளிர்–நிறுவல்கள் சூழலமைப்பைக் கொண்டுள்ளன. கேரளா, மகாராஷ்டிரா, ஒடிஸா, தெலுங்கானா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவை சிறந்த செயல்திறன்கொண்ட பிரிவில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘லிஸ்பன் பிரகடனம்’ என்பது பின்வரும் எதன் பாதுகாப்போடு தொடர்புடையது?

அ. வளி

ஆ. மலைகள்

இ. பெருங்கடல்கள்

 ஈ. நன்னீர் பனிப்பாறைகள்

  • “நமது பெருங்கடல், நமது எதிர்காலம், நமது பொறுப்பு” என்ற லிஸ்பன் பேரறிவிப்பை ஒருமனதாக ஏற்றுக் கொண்டதன்மூலம் ஐநா–இன் பெருங்கடல் மாநாடு – 2022 நிறைவடைந்தது. 150–க்கும் மேற்பட்ட நாடுகள் கடல்சார் அவசரநிலைக்குத் தீர்வுகாண அறிவியல் அடிப்படையிலான மற்றும் புதுமையான நடவடிக்கைகளை அதிகரிக்க ஒப்புக்கொண்டன. லிஸ்பன் பேரறிவிப்பு வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் திறன் சவால்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

5. தையற்கார எறும்புகளைக் கொண்டு செய்யப்படும், ‘கை சட்னி’ என்பது எம்மாநிலத்தின் பிரபல உணவாகும்?

அ. ஜார்கண்ட்

ஆ. ஒடிஸா 

இ. சத்தீஸ்கர்

ஈ. மேற்கு வங்கம்

  • ஓகோபில்லா ஸ்மரக்டினா என்ற அறிவியல் பெயர்கொண்ட தையற்கார எறும்புகள், ஒடிஸா மாநிலத்தின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் காணப்படுகின்றன. அம்மாவட்ட மக்கள் குறிப்பாக பழங்குடியினர், ‘கை சட்னி’ என்று அழைக்கப்படும் எறும்புகளைக்கொண்டு செய்யப்படும் உணவுப்பொருளைச் செய்கிறார்கள். ஒடிஸாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ‘கை சட்னி’க்குப் புவிசார் குறியீட்டைப் (GI) பெறுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

6. அண்மையில் கொலம்பியாவின் முதல் கறுப்பின துணை அதிபரானவர் யார்?

அ. குஸ்டாவோ பெட்ரோ

ஆ. பிரான்சியா மார்க்வெஸ் 

இ. விர்ஜிலியோ பார்கோ வர்காஸ்

ஈ. ஜுவான் குவைடோ

  • கொலம்பியாவின் துணை அதிபராக பதவியேற்கும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை பிரான்சியா மார்க்வெஸ் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தங்கச்சுரங்கத்திற்கு எதிராக போராடியதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு மதிப்புமிக்க ‘கோல்ட்மேன் சுற்றுச்சூழல்’ பரிசைப் பெற்றார்.

7. இந்திய கடலோரக் காவல்படையின் ‘840 படையணி’ எங்கு உருவாக்கப்பட்டது?

அ. விசாகப்பட்டினம்

ஆ. சென்னை 

இ. தஞ்சாவூர்

ஈ. மும்பை

  • இந்திய கடலோரக் காவல்படையின் புதிய வான்படை ‘840 படையணி’ என்ற பெயரில் 2022 ஜூன்.20 அன்று சென்னையில் உருவாக்கப்பட்டது. இந்தப் படையணி தொடக்கத்தில் உள்நாட்டு ALH மார்க்–III வானூர்திகொண்டு உருவாக்கப்பட்டது. கிழக்குப்பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள முதல் வானூர்தி இதுவாகும்.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற கும்பு பனியாறு அமைந்துள்ள இடம் எது?

அ. இந்தியா

ஆ. பூட்டான்

இ. நேபாளம்

 ஈ. திபெத்

  • கும்பு பனியாறானது நேபாளத்தின் கும்பு பகுதியில் எவரெஸ்ட் சிகரத்திற்கும் லோட்சே–நுப்ட்சே மலைமுகட்டுக்கும் இடையே அமைந்துள்ளது. இமயமலையிலுள்ள பல பனியாறுகளைப் போலவே, கும்பு பனியாறும் வெகுவேகமாக உருகி வருகிறது. இது நேபாளத்தின் எவரெஸ்ட் முகாமுக்கு மிகவும் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது.

9. ASEAN–இந்தியா நட்புறவு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?

அ. 2021

ஆ. 2022 

இ. 2023

ஈ. 2025

  • ASEAN–இந்தியாவின் நட்புறவு ஆண்டாக நடப்பு 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு, இந்தியா மற்றும் ASEAN நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் முப்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவுகள் கடந்த 1990–களின் முற்பகுதியில் தொடங்கியது.

10. சர்வதேச இலக்கிய விழாவான, ‘Unmesha’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநிலம்/UT எது?

அ. ஹிமாச்சல பிரதேசம் 

ஆ. குஜராத்

இ. தெலுங்கானா

ஈ. கேரளா

  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 3 நாள் நடக்கும் சர்வதேச இலக்கிய விழாவான, ‘Unmesha’ ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் இராம் மேகவால் தொடங்கி வைத்தார்.
  • 15 நாடுகளைச் சேர்ந்த 425–க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரமுகர்கள், 60–க்கும் மேற்பட்ட மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ‘விடுதலைப் பெருவிழா’ நிகழ்வின் ஒருபகுதியாக, ஹிமாச்சலப் பிரதேச மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறையின் ஆதரவுடன் மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் சாகித்ய அகாடமி இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. RIMPAC துறைமுக ஒத்திகையில் இந்திய கடற்படையின் INS சாத்புரா மற்றும் பி–81 பங்கேற்பு

பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக்கில் (RIMPAC) உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடற்படை ஒத்திகையில் பங்கேற்பதற்காக, இந்திய கடற்படையின் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட INS சாத்புரா போர்க்கப்பலும், பி–81 LRMRASW விமானமும், ஹவாய் தீவின் முத்துத் துறைமுகத்திற்கு சென்றுள்ளன. இதில் சாத்புரா கப்பல் 27 ஜூன் 2022 அன்று ஹவாயை சென்றடைந்த நிலையில், பி–81 விமானம் 2022 ஜூலை.2 அன்று சென்றடைந்தது. துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், திட்டமிடல், விவாதங்கள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஆறு வார காலம் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில் INS சாத்புரா மற்றும் ஒரு பி–81 கடலோர ரோந்து விமானமும் பங்கேற்றுள்ளன. நட்பு நாட்டு கடற்படைகளிடையே, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் போர்ப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 28 நாடுகளைச் சேர்ந்த 38 போர்க்கப்பல்கள், 9 நாடுகளின் தரைப் படையினர், 31 ஆளில்லா சாதனங்கள், 170 விமானங்கள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்றுள்னனர். கடல் ஒத்திகை ஜூலை.12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆகஸ்ட்.4ஆம் தேதி பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

2. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் கதிரியக்க ஒளியை புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக மாற்றும்

வெப்பத்தை வெளியிடுகிற கதிரியக்க ஒளியை மாற்றியமைக்கின்ற புதிய பொருள் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மற்றும் வெப்பசக்தியை பயன்படுத்தும் உயர்திறன் கொண்டதாக இது இருக்கும்.

மின்னுற்பத்தி, தொலைத்தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து தொழில்நுட்பங்கள், உணர்வுக்கருவிகள், சுகாதார கவனிப்பு சேவைகள் போன்றவற்றுக்கு பயன்படத்தக்க, புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரமாக மின்காந்த இயல் அலைகள் உள்ளன. இத்தகைய அலைகளை உயர்தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி துல்லியத்தன்மை உடையதாக அறிவியலாளர்கள் மாற்றமுடியும். தனித்தன்மைகொண்ட பொருட்களை பயன்படுத்தி இதன் அளவு மனித ரோமத்தைவிட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கும். இருப்பினும் இதனை கண்டறிவதும், மாற்றியமைப்பதும் சிரமம் என்பதால், அனைத்து ஒளி அலைகளையும் குறிப்பாக கதிரியக்க ஒளியை எளிதாக பயன்படுத்த முடியாது.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பெங்களூருவில் உள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக SCN (single–crystalline scandium nitride) என்றழைக்கப்படும் புதிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தை தவிர, இந்திய அறிவியல் கல்விக்கழகத்தைச் சேர்ந்த நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், சிட்னி பல்கலைக் கழகமும், இந்த ஆய்வில் பங்கேற்றன. இந்த ஆய்வுபற்றிய விவரம் நானோ லெட்டர்ஸ் எனப்படும் அறிவியல் இதழில் அண்மையில் வெளியிடப்பட்டது.

3. உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவைக்கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது. உணவகங்களும் தங்கும் விடுதிகளும் கட்டண ரசீதில் சேவைக் கட்டணத்தை விதிப்பதாக மத்திய அரசிடம் வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிசிபிஏ தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக சேவைக் கட்டணத்தை விதிக்கக் கூடாது. வேறு எந்தப் பெயரிலும் சேவைக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. எந்த உணவகமும், தங்கும் விடுதியும் சேவைக்கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்த முடியாது. வாடிக்கையாளர் விரும்பினால் மட்டுமே சேவைக்கட்டணத்தை வழங்கலாம். இதை உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். வழிகாட்டுதல்களை மீறி எந்த உணவகமோ தங்கும் விடுதியோ சேவைக் கட்டணத்தை வசூலித்தால், அதை நீக்குமாறு வாடிக்கையாளர்கள் கோரலாம். அதையும் மீறி சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் அதுதொடர்பாக நுகர்வோர் ஆணையத்தில் புகாரளிக்கலாம்.

தேசிய நுகர்வோர் உதவிமையத்தின் தொலைபேசி எண்ணான 1915 வாயிலாகவோ அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் செயலி வாயிலாகவோ புகார் தெரிவிக்கலாம். இணைய வழியாகவும் புகார் தெரிவிக்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. புதிய தொழில் நிறுவனங்களுக்கான முன்னெடுப்புகள்: தெளிவான பார்வையுடன் தமிழ்நாடு: மத்திய அரசு

புதிய தொழில் நிறுவனங்களுக்கான (ஸ்டார்ட்-அப்) முன்னெடுப்புகளில் தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை தமிழ்நாடு கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட்-அப்களுக்கான உகந்த சூழலை வழங்கும் மாநிலங்களின் தரவரிசை அறிக்கையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லியில் வெளியிட்டார். ஸ்டார்ட்-அப் முன்னெடுப்புகளை உருவாக்குதல், ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதரவான முன்னெடுப்புகளைக் கண்டறிந்து முறைப்படுத்துதல், ஸ்டார்ட்-அப்களுக்கான முன்னெடுப்புகளில் தெளிவான பார்வை மற்றும் இலக்குகளை கொண்டிருத்தல், ஸ்டார்ட் அப்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம், ஸ்டார்ட்-அப்களுக்கான மிகச்சிறந்த முன்னெடுப்புகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள் என அந்தத் தரவரிசையில் 5 பிரிவுகளில் 24 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் பிறமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ள சிறந்த நடைமுறைகளைக் கற்று ஸ்டார்ட்-அப்களுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவும் நோக்கில் இந்த தரவரிசை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

5. காரியாபட்டி அருகே சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுப்பு

காரியாபட்டி அருகே புல்லூர் கிராமத்தில் ஆயிராத்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் பள்ளி தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் புல்லூர் கிராமத்தில் பழைமையான இடிந்த கோவிலில் கல்வெட்டுகள் இருப்பதாக அக்கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்படி, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மதுரை அருண் சந்திரன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தக் கோவில் வளாகத்தில் ஆய்வுமேற்கொண்டதில் மொத்தம் ஒன்பது துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்திலும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளன. இதில் முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், இராஜராஜ சோழன் இக்கோவிலுக்குக் கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது. புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர் என்று கல்வெட்டின்மூலம் தெரிய வருகிறது. இது 1100 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் பள்ளியின் தடயங்கள் ஆகும். இது ஒரு சமணர் பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோவிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி, உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்பதை அறிய முடிகிறது. கோவிலில் நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதும் இக்கல்வெட்டுகள்மூலம் அறிந்துகொள்ளலாம். பாண்டிய நாட்டில் சமண மதம் சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமணப்பள்ளியே ஒரு சிறந்த உதாரணம். ஏற்கனவே, விருதுநகர் மாவட்டம் குரண்டியில் திருக்காட்டாம்பள்ளி என்ற சமணர் பள்ளி கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இப்பள்ளி இரண்டாவது சமணப்பள்ளியாகும். மேலும் குண்டாற்றின் மேல் கரையான மேல உப்பிலிகுண்டு கிராமத்தில் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 9 துண்டு கல்வெட்டுகளையும் முறையாகபடி எடுத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

1. ‘Alluri Sitarama Raju’ was a freedom fighter from which present–day state?

A. Tamil Nadu

B. Kerala

C. Andhra Pradesh 

D. Karnataka

  • Prime Minister Narendra Modi unveiled a 30–ft bronze statue of legendary freedom fighter Alluri Sitarama Raju on his 125th birth anniversary. The 15–tonne statue was carved out at a cost of Rs 3 crore and installed by the Kshatriya Seva Samiti in Bhimavaram, Andhra Pradesh. The leader was known for the ‘Rampa Rebellion’ or ‘Manyam Uprising’, in the Rampachodavaram forest area, which was undertaken against the mighty British forces.

2. What is the theme of ‘Digital India Week 2022’?

A. Catalyzing New India’s Techade 

B. India’s Digital Start Ups

C. Local to Global

D. Atmanirbhar Start up Ecosystem

  • Prime Minister Narendra Modi inaugurated the Digital India Week 2022 in Gandhinagar in Gujarat. The theme for Digital India Week is Catalyzing New India’s Techade.
  • The Prime Minister also launched ‘Digital India Bhashini’ to enable easy access to the internet and digital services in Indian languages. ‘Digital India GENESIS’ – a National Deep–tech Startup Platform, to support successful start–ups in Tier–II and Tier–III cities with a total outlay of 750 crore rupees was also launched. A global repository of key projects implemented under India Stack ‘Indiastack.global’ was launched.

3. Which Union Ministry released the ‘States’ Start–ups Ranking 2021’?

A. Ministry of MSME

B. Ministry of Commerce and Industry 

C. Ministry of Finance

D. Ministry of Corporate Affairs

  • Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Ministry of Commerce and Industry has released ‘Start–ups Ranking 2021’. The ranking focuses on seven reform areas. Gujarat, Karnataka and Meghalaya were categorised as best performers while Bihar, Andhra Pradesh, Mizoram and Ladakh have an emerging start–up ecosystem. Kerala, Maharashtra, Odisha, Telangana and Jammu and Kashmir were ranked as the top performers section.

4. ‘Lisbon Declaration’ which was seen in the news, is associated with the conservation of which entity?

A. Air

B. Mountains

C. Oceans

D. Freshwater Glaciers

  • The UN Ocean Conference 2022 concluded with the unanimous adoption of the Lisbon Declaration “Our Ocean, our future, our responsibility.” More than 150 countries agreed to scale up science–based and innovative actions to address the ocean emergency. The Lisbon Declaration takes into account the capacity challenges being faced by the developing countries.

5. ‘Kai Chutney’ made of Weaver ants is a popular food made in which state?

A. Jharkhand

B. Odisha 

C. Chhattisgarh

D. West Bengal

  • Weaver ants, whose scientific name is Oecophylla smaragdina, are present in Mayurbhanj district, Odisha. The people of the district especially the tribals, make a food item with the ants called the Kai Chutney. Scientists from Odisha are in the process of presentation for the geographical indications (GI) registry of Kai Chutney.

6. Who recently became the first black vice president of Colombia?

A. Gustavo Petro

B. Francia Marquez 

C. Virgilio Barco Vargas

D. Juan Guaido

  • Francia Marquez is set to be the first black woman to become the vice president of Colombia. The environmental activist received the prestigious Goldman Environmental Prize in 2018 for standing up against gold mining.

7. Where was the Indian Coast Guard’s 840 Squadron created?

A. Visakhapatnam

B. Chennai 

C. Thanjavur

D. Mumbai

  • The Indian Coast Guard’s new air squadron named 840 Squadron was created in Chennai on June 20, 2022. The squadron was initially created with an indigenous ALH Mark–III aircraft. This is the first such aircraft to be stationed in the eastern region.

8. Khumbu glacier, which was recently making news, is located at?

A. India

B. Bhutan

C. Nepal 

D. Tibet

  • Khumbu Glacier is situated at Nepal’s Khumbu region between Mount Everest and the Lhotse–Nuptse ridge. Like many other glaciers in the Himalayas, Khumbu Glacier is melting at a rapid pace. This is making it highly hazardous for Nepal’s Everest base camp.

9. Which year has been designated as ASEAN–India Friendship year?

A. 2021

B. 2022 

C. 2023

D. 2025

  • The year 2022 has been designated as the ASEAN–India Friendship year. This year marks the 30th anniversary of dialogue relations between India and ASEAN countries. The diplomatic ties between the two sides commenced in the early 1990s.

10. ‘Unmesh’ is an international literary festival, organised at which state/UT?

A. Himachal Pradesh 

B. Gujarat

C. Telangana

D. Kerala

  • Three–day international literary festival ‘Unmesh’ was organised at the state of Himachal Pradesh. The festival was inaugurated by Union Minister of State for Culture Arjun Ram Meghawal. Over 425 writers, poets, translators, critics and personalities from 15 countries, representing over 60 languages, are participating in the event. The festival is being organised by the Union Ministry of Culture and the Sahitya Akademi with the support of the Himachal Pradesh Department of Art and Culture as part of the ‘Azadi Ka Amrit Mahotsav’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!