5th & 6th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th & 6th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th & 6th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th & 6th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English


 1. அண்மையில் 6 வேள்விகுண்டங்கள் கண்டறியப்பட்ட சான்சிங்டு நகரம் அமைந்துள்ள நகரம் எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) வியட்நாம்

ஈ) வட கொரியா

 • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் சான்சிங்டூயில் ஆறு வேள்விகுண்டங்களைக்கண்டுபிடித்தனர். அவ்வேள்விகுண்டங்களில் தங்கம் மற்றும் வெண்கல முகமூடிகள் உட்பட சுமார் ஐந்நூறு கலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கே 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழங்கால சீன நகரந்தான் சான்சிங்டுய். இந்தக்கலைப்பொருட்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையவை. சீனாவின் இப்பகுதி பண்டைய இராச்சியமான ஷூவால் ஆளப்பட்டது.

2. மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) AYUSH அமைச்சகம்

இ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) வெளியுறவுத்துறை அமைச்சகம்

 • AYUSH மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் மற்றும் ஆயுஷ் சஞ்சீவனி செயலியின் மூன்றாவது பதிப்பை மத்திய AYUSH இணைய -மைச்சர் கிரண் ரிஜிஜூ அறிமுகம் செய்து வைத்தார். ஆயுஷ் மருத்துவர் -கள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில் ஆயுஷ் மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் அமைந்துள்ளது.

3. “The Very Hungry Caterpillar” என்ற நூலை எழுதியவர் யார்?

அ) ரோவன் அட்கின்சன்

ஆ) எரிக் கார்லே

இ) JK ரௌலிங்

ஈ) சல்மான் ருஷ்டி

 • “The Very Hungry Caterpillar” என்ற புகழ்பெற்ற குழந்தைகள் நூலை எழுதிய எரிக் கார்லே (91) சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். இந்நூல் உலகின் சிறந்த விற்பனையான நூல்களுள் ஒன்றாகும். முதன்முதலில் 1969ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது, இன்றுவரை, எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த நூல் மொழிபெய -ர்க்கப்பட்டுள்ளது.

4. 2020-21ஆம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை, ரிசர்வ் வங்கியின் எத்தனை மாத செயற்பாடுகளை உள்ளடக்கியது?

அ) 6

ஆ) 9

இ) 11

ஈ) 12

 • இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 மார்ச்.31ஆம் தேதியுடன் முடிவடைந் -த 2020-21ஆம் நிதியாண்டிற்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தை தனது நிதியாண்டாக ஏற்றுக்கொண்டிருந்தது.
 • ஆனால், 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து ஏப்ரல்-மார்ச் வரையிலான காலகட்டத்தை தனது நிதியாண்டாக ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. எனவே, 2020-21ஆம் நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை, இந்திய ரிசர் -வ் வங்கியின் செயல்பாடுகளை, 2020 ஜூலை முதல் 2021 மார்ச் வரையிலான ஒன்பது மாத காலத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.

5. பன்னி புன்னிலக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஒடிஸா

 • பன்னி புன்னிலக் காப்பகம் என்பது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத் -தில் அமைந்துள்ள வறண்ட புல்வெளிச் சூழலமைப்பு ஆகும். தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஆறுமாதகாலத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான கூட்டுக்குழு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.

6. மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ) சென்னை

ஆ) கொச்சி

இ) மும்பை

ஈ) கொல்கத்தா

 • மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனமானது தமிழ்நாட்டின் சென்னை -யில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், வைரல் நெர்வஸ் நெக்ரோசிஸ் எனும் நோய்க்கான ஓர் உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்நோய், பல்வேறு மீனினங்களைப்பாதிக்கும் ஒரு வைரஸ் நோயாகும்.

7. 2020ஆம் ஆண்டுக்கான எனி விருது வழங்க் கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்?

அ) CNR ராவ்

ஆ) நரேந்திர மோடி

இ) இரகுராம் ராஜன்

ஈ) விராத் கோலி

 • ‘இந்திய மாமணி’ விருதுபெற்றவரான பேராசிரியர் CNR ராவ் அவர்கட்கு, 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச எனி விருது வழங்கப்பட்டுள்ளது.
 • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பில் தனது அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஆராய்ச்சியின் நோபல் பரிசாகவும் இது கருதப்படுகிறது.

8. SeHAT OPD என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஒன்றிய அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு அமைச்சகம்

ஆ) பாதுகாப்பு அமைச்சகம்

இ) நிதி அமைச்சகம்

ஈ) வர்த்தக அமைச்சகம்

 • ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகமானது SeHAT OPD இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தொலை மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
 • SeHAT என்பது “Services e-Health Assistance & Tele-consultation” என்பதைக் குறிக்கிறது, பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளமான https://sehatopd.in/’இல் பதிவுசெய்துகொள்வதன்மூலம் இச்சேவையைப் பெறமுடியும்.

9. ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு 20 கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடு எது?

அ) சீனா

ஆ) பிரேஸில்

இ) இத்தாலி

ஈ) இந்தியா

 • ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு இருபது கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடாக இந்தியா ஆகியுள்ளது. இந்தச் சாதனையை, இந்தியா, 130 நாட்களில் அடைந்துள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, 124 நாட்களில் 20 கோடியை எட்டியது.
 • 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.

10.  “The Eclipse and After” என்ற திருவிழாவைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஈ) எரிசக்தி அமைச்சகம்

 • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், “The Eclipse and After” என்ற திரைப்பட விழாவைத் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் குறித்த திரைப்படங்களும் அடங்கும். இவை, 2021 மே.28-30 வரை இணைய வழியில் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் சமத்துவமின்மை மற்று -ம் அநீதியிலிருந்து வெளிவரும் பெண்களின் கதைகளை விவரிக்கும் 10 திரைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க ரூ.50 ஆயிரம் கோடி திட்டத்துக்கு அனுமதி

‘புராஜக்ட் 75 இந்தியா’ என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும், `50,000 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, இராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டுந்தளம் மற்றும் தனியார் நிறுவனமான L&T’க்கு விரைவில் ஒப்பந்தம் அளிக்கப்படவுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் வெளிநாடுகளின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும். மஸாகான் – L&T இணைந்து ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென்கொரியா ஆகிய ஐந்து நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் மேற்கொண்டு ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

2. நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி 9.5%-ஆக இருக்கும்: முந்தைய கணிப்பை குறைத்தது ஆா்பிஐ

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்துள்ளது. முன்பு பொருளாதார வளா்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக மதிப்பீட்டை ஆா்பிஐ குறைத்துள்ளது. இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதார வளா்ச்சி சரிவைச் சந்தித்தது. எனினும், கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீளத் தொடங்கியது. பல்வேறு துறைகள் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பின. அந்த வளா்ச்சியைத் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தொடா்ந்து கவனம் செலுத்தப்படும். இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய அரசு அதிக அளவில் கடன் பெறுவதைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசின் நிதிப் பத்திரங்களை வாங்குவதற்கான திட்டத்தை ஆா்பிஐ அமல்படுத்தி வருகிறது.

அத்திட்டத்தின்படி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. நடப்பு மே மாதத்தில் ரூ.40,000 கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்கள் வாங்கப்படவுள்ளன. இத்திட்டத்தை மேலும் நீட்டிக்க ஆா்பிஐ முடிவெடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் நிதிப் பத்திரங்களை ஆா்பிஐ வாங்கவுள்ளது. பணவீக்கம்: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பு, பொதுமுடக்கத்தால் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக பணவீக்கம் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புள்ளது.

பணவீக்கத்தை நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. பணப்புழக்கத்தை அதிகரிக்க…: கரோனா தொற்று பரவல் காரணமாக கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள சுற்றுலா, விடுதிகள், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் ரூ.15,000 கோடி கடன் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கடனளிக்கும் நோக்கில் இந்திய சிறு தொழிலக வளா்ச்சி வங்கிக்கு (எஸ்ஐடிபிஐ) ரூ.16,000 கோடி நிதி வழங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது நிதி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்க முடிவெடுக்கப்பட்ட ரூ.50,000 கோடிக்கு கூடுதலாக வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக பாதிப்புகளைச் சந்தித்துள்ள தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் நோக்கில் அந்நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான மறுசீரமைப்புத் திட்டத்தை ஆா்பிஐ அறிவித்துள்ளது. ரூ.50 கோடி வரை கடன்நிலுவை வைத்துள்ள நிறுவனங்களுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. குறைவான பாதிப்பு: கடந்த ஆண்டில் கரோனா தொற்றின் முதல் அலை பரவியபோது நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. ஆனால், கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவலின்போது தளா்வுகளுடன்கூடிய பொதுமுடக்கமே அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பொருளாதாரத்தில் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது என்றே நம்புகிறோம்.

கரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆா்பிஐ தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் ஆா்பிஐ உறுதியுடன் உள்ளது. கரோனா தொற்றின் 2-ஆவது அலையில் பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்ததன் காரணமாக பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழல் சற்று தாமதமடைந்துள்ளது. ஜிடிபி வளா்ச்சி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 18.5 சதவீதமாகவும் 2-ஆவது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3-ஆவது காலாண்டில் 7.2 சதவீதமாகவும், இறுதி காலாண்டில் 6.6 சதவீதமாகவும் ஜிடிபி வளா்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தின் போது ஜிடிபி வளா்ச்சி 10.5 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு கரோனா தொற்று பரவல், நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அதிகரித்துக் காணப்பட்டதால் தற்போது ஜிடிபி வளா்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாள்களிலும் சேவை: தேசிய பணப் பரிவா்த்தனைக் கழகம் வழங்கி வரும் என்ஏசிஹெச் பணப் பரிவா்த்தனை சேவை, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் அளிக்கப்படும். இதன்மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஊதியம் அளிப்பது, ஓய்வூதியம் வழங்குவது, மின்சாரக் கட்டணம் வசூலிப்பது, கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பது உள்ளிட்ட சேவைகள் இனி எளிதாகும் என்றாா் ஆளுநா் சக்திகாந்த தாஸ்.

3. மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமனம் :

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்தஅசன் முகமது ஜின்னா (44) நியமிக்கப்பட்டுள்ளார்.

4. கேரளாவைச் சேர்ந்த நபர் ‘உலகம் தலைகீழாக போகிறது’ என்ற தலைப்பில் எடுத்த ஒராங்குட்டான் புகைப்படத்துக்கு சர்வதேச விருது

கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் எடுத்தப் புகைப்படம் ஒன்று சர்வதேச விருதைப் பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஓராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது. அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன. ‘உலகம் தலைகீழாகப் போகிறது’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு நேச்சர் டிடிஎல் என்ற சர்வதேச அமைப்பு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வழங்கியுள்ளது.

‘இந்தப் புகைப்படத்தை ஒருவர் எளிதில் கடந்து செல்ல முடியாது’ என்று நேச்சர் டிடிஎல் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் குழப்பத்துக்கு ஆட்படுத்தும். ஒராங்குட்டான் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றச் செய்யும். ஆனால், ஒராங்குட்டான் தலைக்கீழாக தொங்கவில்லை. மரத்தின் இலைகளும், வானமும் நீரில் பிரதிபலிக்கின்றன. கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார். வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

போர்னியா தீவுக்குச் சென்றபோது, அவருக்கு இப்படி ஒரு காட்சியை புகைப்படமாக எடுக்க தோன்றியிருக்கிறது. அதற்காக நீர் நடுவே இருக்கும் மரத்தை தேர்வு செய்துள்ளார். அந்த மரத்தில் ஏறி நின்று, அந்தப் பகுதிக்கு வழக்கமாக வரும் ஓராங்குட்டானுக்காக காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடி ஒராங்குட்டான் அந்த மரத்துக்கு வந்து ஏறியது. அந்தக் கணத்தைகலாப்பூர்வமாக படம் பிடித்துள்ளார் தாமஸ். 8000 க்கு மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியில், தாமஸ் விஜயனின் இந்தப் புகைப்படம் விருது பெற்றுள்ளது. 1,500 பவுண்ட் விருதுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

5. 72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக, தெற்கு ரயில்வேயில் 72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் பசுமை முயற்சிகளை அதிகப்படுத்துவதற்காக, இந்திய ரயில்வே-இந்திய தொழில் கூட்டமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்தானது. இதன்பிறகு, ரயில்வேயில் பசுமை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால், 30 பணிமனைகள், 7 உற்பத்தி நிறுவனங்கள், 8 லோகோ பணிமனைகள், ஒரு ஸ்டோா்ஸ் டிப்போ ஆகியவை ‘கிரீன்கோ’ சான்றிதழ் பெற்றுள்ளன. இதுதவிர, 19 ரயில்வே நிலையங்களைப் பசுமையாக மாற்றியதற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக ஐஎஸ்ஓ 14001சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 718 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக 72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 14001சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 19, திருவனந்தபுரம் கோட்டத்தில் 17, பாலக்காடு கோட்டத்தில் 15, மதுரை ரயில்வே கோட்டத்தில் 8, திருச்சி கோட்டத்தில் 7, சேலம் கோட்டத்தில் 6 ரயில் நிலையங்களும் என்று மொத்தம் 72 ரயில் நிலையங்கள் அடங்கும். இதுதவிர, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது நிகழ்ச்சியில், ரயில்வே ஒா்க்ஷாப் பிரிவில், திருச்சி பொன்மலை ஒா்க்ஷாப்-க்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. 2025-ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வரும் 2025-ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் சேர்க்கப்படும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். விவசாயிகளின் வருவாய் பெருகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக சுற்றுச் சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல், பெட்ரோலிய துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பிரதமர்மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது, பெட்ரோலில் எத்த னாலை கலப்பது தொடர்பான நிபுணர்களின் திட்ட அறிக்கையை பிரதமர் வெளியிட்டார். மேலும் நாடு முழுவதும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க இ-100 என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் எத்தனால் பயன்பாடு அதிகரிக்கப்படும். இதன்மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். விவசாயி களின் வருவாய் பெருகும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் பயன்பாட்டை முழுமையாக அமலுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 2025-ம் ஆண்டுக் குள்ளேயே இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம். கடந்த 2014-ம் ஆண்டில் 1.5 சதவீத எத்தனால், பெட்ரோலுடன் சேர்க்கப்பட்டது. தற்போது 8.5 சதவீதத்தை எட்டியுள்ளோம். வரும் 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதத்தை எட்டுவோம்.

கடந்த 2013-14-ம் ஆண்டில் 38 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்தோம். இப்போது 320 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்கிறோம். இதன் மூலம் நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் பெரிதும் பலன் அடைந்து வருகிறார்கள். எத்தனால் உற்பத்தியை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் முயற்சியால் சர்வதேச சோலார் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சூரியன், ஓர் உலகம், ஒரே மின் கட்டமைப்பு என்ற கொள்கையுடன் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படும் முதல் 10 நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது.

கடந்த 6 ஆண்டுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி 15 மடங்கு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நீர்வழிப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டின் 18 நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 7 விமான நிலையங்களில் மட்டுமே சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் வசதி இருந்தது. இப்போது 50 விமான நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

6. பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வரலாற்று ஒப்பந்தம்

பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் சா்வதேச வரி சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் உலகின் மிகப் பெரிய 7 பணக்கார நாடுகள் சனிக்கிழமை கையெழுத்திட்டன. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தொழில் வளா்ச்சியில் முன்னணி வகிக்கும் 7 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அமைப்பின் 46-ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் மாகாணம், பாா்பிஸ் பே நகரில் வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, அதன் உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் மாநாடு தலைநகா் லண்டனில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்கள் பங்கேற்றனா். அந்த மாநாட்டில், பன்னாட்டு நிறுவனங்கள் நியாயமான முறையில் வரி செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் வரி விதிப்பு சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான சா்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது. கரோனா நெருக்கடியால் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தால் நாடுகளுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்தால், அமேஸான், கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் கூறியதாவது:

சா்வதேச வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இதுதொடா்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை ஜி-7 நாடுகளின் நிதியமைச்சா்கள் எட்டியுள்ளனா். தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ற வகையிலான வரி சீா்திருத்தங்களை மேற்கொள்ள அந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றாா் அவா். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என்று ஜி-7 நாடுகளுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. மேலும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்ளன.

இந்தச் சூழலில், அமைப்பின் 46-ஆவது மாநாடு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த சா்வதேச வரி சீா்திருத்த ஒப்பந்தத்தை பிற நாடுகளும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. எதற்காக இந்த சீா்திருத்தம்? பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பதில், அரசுகள் நீண்ட காலமாக சவாலை சமாளித்து வருகின்றன.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு, மிகப் பிரம்மாண்டமான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவானதைத் தொடா்ந்து, இந்தச் சவால் மேலும் அதிகரித்தது. தற்போதைய நிலையில், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் தொழில் செய்தாலும், மிகக் குறைந்த தொழில்வரி விதிக்கும் நாடுகளில் ஒரு கிளையைத் திறந்து அங்கு தங்களது லாபத்தை அறிவிக்க முடியும். அதன் மூலம், பிற நாடுகளில் பெற்ற லாபத்தையும் அந்த நாட்டில் கணக்கு காட்டி, குறைந்த தொழில் வரியைக் அந்த நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இதற்கு சட்டப்பூா்வமாக எந்தத் தடையும் இல்லை. இதனால், அந்த நிறுவனங்கள் பெருமளவில் தொழில் செய்து லாபம் ஈட்டும் நாடுகளுக்கு உரிய வரி கிடைக்காமல் போகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே சா்வதே வரி சீா்திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஜி-7 நாடுகள் ஏற்படுத்தியுள்ளன.

ஒப்பந்த அம்சங்கள்… – நிறுவனங்கள் எந்த நாட்டில் செயல்பட்டு லாபமீட்டுகிறதோ, அந்த லாபத்துக்கான வரியை அந்த நாட்டில்தான் செலுத்த வேண்டும். – குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபமீட்டும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் – நாடுகளிடையே தொழில் வரி விதிப்பில் ஏற்றத்தாழ்வுகளை களையும் வகையில், சா்வதேச குறைந்தபட்ச தொழில் வரி 15 சதவீதமாக நிா்ணயிக்கப்படவேண்டும்.

‘‘இந்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்தால், அமேஸான், கூகுள் போன்ற மிகப் பெரிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.’’

1. Six sacrificial pits have been discovered in Sanxingdui city, is located in which country?

A) Japan

B) China

C) Vietnam

D) North Korea

 • Archaeologists have recently discovered six sacrificial pits in Sanxingdui. The pits are said to contain about 500 artifacts, including gold and bronze masks. Sanxingdui is an ancient Chinese city, located about 1,500 kilometers southwest of Beijing. The artifacts date back around 3,000 years, to a time when this part of China was ruled by the ancient kingdom of Shu.

2. Which Ministry has launched the Clinical Case Repository portal?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of AYUSH

C) Ministry of Labour and Employment

D) Ministry of External Affairs

 • The Union Minister of State (IC) for Ayush – Kiren Rijiju has recently launched a portal named “Ayush Clinical Case Repository portal”. This portal aims to support Ayush medical professionals and the public. It would provide information about the clinical outcomes achieved by Ayush medicine. In addition to this portal, the Minister has also launched the third version of Ayush Sanjivani mobile App.

3. Who authored the book “The Very Hungry Caterpillar”?

A) Rowan Atkinson

B) Eric Carle

C) JK Rowling

D) Salman Rushdie

 • The artist and author who created the very famous children book “The Very Hungry Caterpillar” –Eric Carle, died recently owing to kidney failure. He was 91 years old. The book has been one of the best sellers in the world. First published in the year 1969, till date it has been translated into more than 70 languages.

4. The Annual Report of the Reserve Bank of India for 2020–21 covers how many months of RBI’s operations?

A) 6

B) 9

C) 11

D) 12

 • The Reserve Bank of India has released its Annual Report for the financial year 2020–21, which ended on 31st March 2021. Previously the financial year adopted by RBI was from July to June. But RBI has amended its financial year to April – March from FY 2020–21. Hence, the annual report for FY 2020–21 covers the functions of RBI for 9 months period from July 2020 to March 2021.

5. In which state is the Banni grassland Reserve located?

A) Tamil Nadu

B) Gujarat

C) West Bengal

D) Odisha

 • The Banni Grasslands Reserve is a arid grassland ecosystem located in the Kutch District of Gujarat. Recently, the National Green Tribunal (NGT) has ordered that all encroachments in this region should be removed within a period of six months. The NGT has also ordered that a joint committee should form an action plan for the same.

6. Where is the Central Institute of Brackish water Aquaculture located?

A) Chennai

B) Kochi

C) Mumbai

D) Kolkata

 • The Central Institute of Brackish water Aquaculture (CIBA) is located in Chennai. The institute functions under the aegis of Indian Council of Agricultural Research (ICAR). The institute has recently developed an indigenous vaccine for viral nervous necrosis (VNN) disease – a viral disease that affects several fish species.

7. Which Indian personality has been conferred with the Eni Award 2020?

A) CNR Rao

B) Narendra Modi

C) Raghuram Rajan

D) Virat Kohli

 • Professor C.N.R. Rao, who is a Bharat Ratna recipient has been conferred with International Eni Award 2020. This has been awarded for his dedicated research in renewable energy sources and energy storage. This award is also known as the Energy Frontier award and is considered to be the Noble Prize in Energy Research.

8. Which Ministry has launched the SeHAT OPD portal?

A) Health Ministry

B) Defence Ministry

C) Finance Ministry

D) Commerce Ministry

 • The Union Defence Ministry has launched the SeHAT OPD portal, which aims to provide telemedicine services to the armed force personnel, veterans and their family members. SeHAT stands for ‘Services e–Health Assistance & Tele–consultation, whose service can be availed by registering in the Defence Ministry’s website – https://sehatopd.in/.

9. Which country became the second in the world after the USA to achieve 20 crore vaccinations?

A) China

B) Brazil

C) Italy

D) India

 • India has become the second country after the USA to achieve 20 crore vaccination mark. This fete has been achieved by India in a period of 130 days. USA who is in the top spot had achieved the 20–crore mark in 124 days. Union Health Ministry has stated that more than 34% of above 45 age population have been vaccinated at least once.

10. Which Union Ministry has launched the “The Eclipse and After” festival?

A) Ministry of Information & Broadcasting

B) Ministry of Home Affairs

C) Ministry of External Affairs

D) Ministry of Power

 • The Union Ministry of Information & Broadcasting has launched a film festival named “The Eclipse and After”. This includes a series of films on women, which have been made by women. These are screened online from 28 to 30 May 2021. The festival comprises a package of 10 films which narrates stories of women coming out from inequality and injustice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *