5th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம்-2021’ஐ வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?

அ) IMF

ஆ) ILO

இ) WEF

ஈ) UNICEF

 • உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம் – 2021’ஐ பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை ILO’இன் முதன்மை வெளியீடுகளுள் ஒன்றாகும். இது, வேலையை ஒழு -ங்கமைப்பதற்கான விவரங்களை வழங்குகிறது. இணைய அடிப்படை -யிலான மற்றும் இருப்பிட அடிப்படையிலான தளங்களில், தொழிலாளர் -கள் மற்றும் வணிகங்களின் அனுபவத்தையும் இது சித்தரிக்கிறது.

2. நாணயம் மற்றும் நிதி தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) இந்திய ரிசர்வ் வங்கி

ஈ) புதிய வளர்ச்சி வங்கி

 • 2020-21ஆம் ஆண்டிற்கான நாணயம் மற்றும் நிதி (Currency and Finance) தொடர்பான அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. “Reviewing the Monetary Policy Framework” என்பது இந்த ஆண்டின் அறிக்கைக்கான கருப்பொருளாகும். நடைமுறையில் உள்ள நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைக்கு எதிராக, 2021 மார்ச்சில் நிலவும் பணவீக்கம் மற்றும் பணவீக்க இலக்குகளின் போக்குகளை இந்த அறிக்கை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்கிறது.

3. COVID-19 ஆக்ஸிஜன் அவசர பணிக்குழுவை தொடங்கவுள்ள அமைப்பு எது?

அ) UNICEF

ஆ) இந்திய மருத்துவ சங்கம்

இ) AIIMS

ஈ) உலக நலவாழ்வு அமைப்பு

 • உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தலைமையிலான ஒரு கூட்டமைப்பு COVID-19 உயிர்வளி அவசர பணிக்குழுவை தொடங்க முடிவுசெய்துள் -ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளின் சுகாதார அமைப்புகள் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில் இம்முடிவு வந்துள்ளது.
 • அந்நாடுகளுள் பல உயிர்வளி இன்றி சிகிச்சைக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. இப்பணிக்குழுவின்கீழ், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு உயிர்வளி வழங்கலை அதிகரிப்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. 78ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்’ (நாடகம்) விருதை வென்ற திரைப்படம் எது?

அ) நோமட்லேண்ட்

ஆ) பரியேறும் பெருமாள்

இ) தி கிரெளன்

ஈ) கனா

 • 78ஆவது கோல்டன் குளோப் வெற்றியாளர்களாக “Nomadland” மற்றும் “Borat Subsequent Moviefilm” ஆகிய திரைப்படங்கள் தெரிவாகின. நாடகப்பிரிவுக்கான விருதை ‘Nomadland’உம், நகைச்சுவை அல்லது இசைப்பிரிவுக்கான விருதை ‘Borat Subsequent Moviefilm’உம் வென்றது.
 • ‘Nomadland’இன் இயக்குநரான சோலி ஜாவோ, 1984’க்குப் பிறகு ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

5. இந்திய பெண்கள் லீக்கை நடத்தவுள்ள மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) ஒடிஸா

இ) இராஜஸ்தான்

ஈ) திரிபுரா

 • இந்த ஆண்டின் இந்திய பெண்கள் லீக், ஒடிஸா மாநிலத்தால் நடத்தப்பட உள்ளது. இந்திய பெண்கள் லீக் என்பது இந்தியாவின் ஒரு முன்னணி பெண்கள் கால்பந்து லீக் போட்டியாகும். இது, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. இதுமுதலில், தில்லியில், 6 அணிகளு -டன் விளையாடும் போட்டியாக இருந்தது. இதன் கடைசி பருவத்தின்
  -போது (4ஆவது IWL) பெங்களூரில் 12 அணிகளாக மாற்றப்பட்டது.

6. ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் – Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 02

ஆ) மார்ச் 01

இ) மார்ச் 05

ஈ) மார்ச் 04

 • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது.
 • 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமெனக்கொண்ட ஐநா அமைப்புதான் இந்த UNAIDS.

7. பின்வரும் எந்த அமைச்சகத்தால், ‘சுகம்ய பாரத்’ செயலி தொடங்க -ப்பட்டுள்ளது?

அ) பெண்கள் & குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

இ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

 • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது “சுகம்ய பாரத்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. அணுகலை மேம்படுத்துவ -தற்காக, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (DEPwD) இதை உருவாக்கியுள்ளது. இது “Access – The Photo Digest” என்ற தலைப்பி -லான கையேட்டுடன் வெளியிடப்பட்டது.

8. இந்தியா, பின்வரும் எந்நட்புநாட்டோடு இணைந்து, ‘சுற்றுச்சூழல் ஆண்டு’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது?

அ) பிரான்ஸ்

ஆ) இலங்கை

இ) மொரிஷியஸ்

ஈ) மியான்மர்

 • இந்திய சுற்றுச்சூழல் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், பிரான்ஸ் சுற்றுச் சூழல் அமைச்சருடன் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ அறிமுகம்செய்துவைத்தார். இந்தியாவும் பிரான்சும் அஸ்ஸாம், இராஜஸ்தான், மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் திட்டங்களைத்தொடங்கவுள்ளன. நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

9. சிறப்பு வேளாண்மை மண்டலங்களை (SAZ) நிறுவுவதற்கான கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) பஞ்சாப்

இ) உத்தரகண்ட்

ஈ) தெலங்கானா

 • 2011ஆம் ஆண்டில் சிறப்பு வேளாண் மண்டலங்களை (SAZ) அமைத்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். இது சிறப்பு பொருளாதார மண்டலங் -களின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். இது மலைப்பகுதிகளுக்கு உகந்த உயர்தர விதைகளை உருவாக்க உழவர்களை ஊக்குவித்தது.

10. MoSPIஆல் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2020-21 நிதியாண் -டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன?

அ) -7 சதவீதம்

ஆ) -8 சதவீதம்

இ) -9 சதவீதம்

ஈ) -10 சதவீதம்

 • புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுக -ளின்படி, 2020-21ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி -8 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
 • NSO, MoSPI ஆகியவை காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டன. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டு சுருக்கத்திற்குப் பிறகு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் (Q3) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நாடு மந்தநிலையிலிருந்து மீள்வதாகக் கூறப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்களிக்க ‘இ-எபிக்’ பயன்படுத்தலாம்

தமிழகத்தில் தற்போது 21 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ‘இ-எபிக்’ என்ற புதிய வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் தற்போதுள்ள 21 லட்சம் முதல் முறை வாக்காளர்களில் 4 லட்சம் பேருக்கு அவர்கள் முகவரிக்கே வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாகவே அனுப்பப்படும். இதுதவிர, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறை வாக்காளர்கள் ‘voterportal.eci.gov.in’ என்ற இணைப்பில், சென்று பதிவு செய்தால், கைபேசிக்கு வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி, மின்னணு வாக்காளர் அட்டையை கைபேசியில் பெறலாம். அதன்பின் அதை ‘பிரின்ட் அவுட்’ எடுத்து ஆவணமாக பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.

2. தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்

தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சத்துக்கு 63 ஆயிரம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், பிஇ, பிடெக்,பிஎஸ்சி விவசாயம், எம்பிபிஎஸ், பிஎல் உள்ளிட்ட தொழிற்படிப்பு தகுதிகள், முதுகலை பட்டப் படிப்புத் தகுதிகளை சென்னை மற்றும் மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், கடந்த பிப்.28 வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122. அதில் 24 வயது முதல் 35 வரையுள்ளவர்கள் 22 லட்சத்து 78 ஆயிரத்து 107 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 10 லட்சத்து 89 ஆயிரத்து 786 பேர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 983 இடைநிலை ஆசிரியர்களும், பிஎட் முடித்த 2 லட்சத்து 97 ஆயிரத்து 362 பட்டதாரிகளும், பிஎட் முடித்த2 லட்சத்து 18 ஆயிரத்து 324 முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர். மேலும், 2 லட்சத்து 8 ஆயிரத்து 556 பிஇ, பிடெக் பட்டதாரிகளும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 411 எம்இ, எம்டெக் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

3. மார்ச் 4 – தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம்

ஆண்டுதோறும் மார்ச் 4-ம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தஆண்டு 50-வது தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறை செயலர் நசிமுத்தீன் தலைமையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்கள், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் உறுப்பினர்கள் மற்றும் இதர அலுவலர்களுடன் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொழிலாளர் நலன் சார்ந்து அவர்கள் வாழ்க்கை உயர தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துகளை குறைத்த மற்றும் விபத்துகள் இன்றி செயல்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாநில அளவில் பாதுகாப்பு விருதுகள், பாதுகாப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்த சீரிய ஆலோசனைகளை கூறும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் ‘உயர்ந்த உழைப்பாளர் விருது’களும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

4. ‘தினமலர்’ நாளிதழின் கவுரவ ஆசிரியரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 88, சென்னையில் நேற்று (04.03.2021) மாரடைப்பால் காலமானார். இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருது, லண்டன் வரலாற்று அமைப்பின் ஆய்வியல் அறிஞர் விருதுகளை பெற்றவர். சங்ககால நாணயவியலின் தந்தை என, போற்றப்படுபவர்.

நாணயவியல் அறிஞர்:

சங்ககால பாண்டிய மன்னரான பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள், சேர மன்னர்கள் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள், ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. இதுதொடர்பாக பல்வேறு நூல்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்திய நாணயவியல் கழகத் தலைவர், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதழியல், தமிழ் எழுத்துசீர்திருத்தம், கல்வெட்டியல், நாணயவியல் தொடர்பான இவரது பங்களிப்பை போற்றும் வகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

5. ‘நிதி நடவடிக்கைப் பணிக்குழு’ (எஃப்.ஏ.டி.எஃப்.):

பிரான்ஸின் பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ‘நிதி நடவடிக்கைப பணிக்குழு’ (எஃப்.ஏ.டி.எஃப்.) பாகிஸ்தானைத் தனது ‘சாம்பல் நிறப் பட்டிய’லில் தொடர்ந்து வைத்திருக்கும் முடிவை எடுத்திருப்பது நிச்சயம் அந்நாட்டுக்குப் பின்னடைவையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அந்நியச் செலாவணி முறைகேடுகள், பயங்கரவாதத்துக்குச் செய்யப்படும் நிதியுதவி போன்றவற்றைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. மேற்கண்ட முறைகேடுகளில் ஈடுபடும் நாடுகள் ‘கறுப்புப் பட்டிய’லில் சேர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பொருளாதாரரீதியில் அழுத்தம் தரப்படும். இந்தப் பட்டியலைவிட சற்றுத் தீவிரம் குறைந்தது ‘சாம்பல் நிறப் பட்டியல். 2015-ல் இந்தப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டு 2018-ல் மறுபடியும் சேர்க்கப்பட்டது. 27 நடவடிக்கைகளை அது நிறைவேற்ற வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் இன்னும் மூன்று விஷயங்களில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமீபத்தில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் தலைவர் மார்கஸ் ப்ளெயர் தெரிவித்தார்.

6. உடல் செல்கள் தமக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவை உணர்ந்து தகவமைத்துக் கொள்ளும் மரபணு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தற்காக, 2019 – ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு வழங்கப்பட்டது .

7. ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக கடந்த ஆண்டு, தொகுதி வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையம் தனது பணிகளை முடிக்க மேலும் ஓராண்டு எடுத்துக்கொள்ளும்” என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

8. ராணுவக் கமாண்டர்கள் மாநாடு (முப்படை தளபதியர் மாநாடு):

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் ராணுவக் கமாண்டர்கள் மாநாடு கடந்த வியாழக்கிழமை (04.03.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை (சனிக்கிழமை – 06.03.2021), பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவனே, விமானப்படை தளபதி பதோரியா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ராணுவ வீரர்களும், இளநிலை அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். ராணுவக் கமாண்டர்கள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.

9. 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்:

இந்த ஆண்டு இதுவரையில் இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான அமெரிக்க அரசின் அக்கறையை காட்டுகிறது என்று பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பைடன் அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, ‘இந்த ஆண்டு இதுவரையில் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பாக அமெரிக்க அரசின் அக்கறையைக் காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.

10. ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.

இலங்கைக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில், கேப்டன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையின் அகிலா தனஞ்செயா வீசிய 4வது ஓவரில், 6 சிக்சர் விளாசினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில், ஒரே ஓவரில் 6 சிக்சர் பறக்கவிட்ட 2வது வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங், இச்சாதனை படைத்திருந்தார். இவர், 2007ல் டர்பனில் நடந்த ‘டுவென்டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தார். சர்வதேச அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 3வது வீரரானார் போலார்டு. ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்துள்ளார். இவர், 2007ல் செயின்ட் கிட்சில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் நெதர்லாந்தின் வான் பங்க் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.

11. ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023’

நியூயார்க்: வரும், 2023ம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கக் கோரி, ஐ.நா., பொதுச் சபையில் இந்தியா தாக்கல் செய்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது. இந்தியா உடன், வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்தை, 70 நாடுகள் வழி மொழிந்தன. ஐ.நா.,வின், 193 நாடுகளும், இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், ‘2023 – சர்வதேச சிறுதானிய ஆண்டு’ ஆக கடைப்பிடிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் – டி.எஸ். திருமூர்த்தி

12. ரங்கராஜன் குழு அறிக்கையின் நிலை என்ன?

கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில், மாநிலத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த மே மாதம் அமைத்தது. இந்தக்குழு, கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி, முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான செலவினங்கள், தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

13. பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு, மக்கள் வாழ சிறந்த நகரம் சென்னைக்கு 4 வது இடம்.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அங்கு சாலைகள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், குடிநீர் வசதி, சுகாதாரம் உள்பட பல்வேறு வசதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த நகரங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் அந்த நகரில் செயல்படுத்தப்படும் பல்வேறு வசதிகள் அடிப்படையில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஸ்மார்ட் சிட்டிகளை தேர்வு செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டுக்காக நடந்த போட்டி: ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020’

நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சென்னைக்கு 4 ம் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்பது குறித்து ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இதை நடத்துகிறது. இந்தாண்டில், நாடு முழுவதிலும் இருந்து 111 நகரங்கள் இந்த ஆய்வில் இடம் பெற்றன. தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10 க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம் பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக் கான பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி நேற்று (மார்ச்ச 4, 2021) டெல்லியில் வெளியிட்டார். அதில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்களின் பட்டியலில், சென்னையும், கோவையும் இடம் பெற்றுள்ளன. இதில், சென்னைக்கு 4 வது இடமும், கோவைக்கு 7 வது இடமும் கிடைத்துள்ளது. பெங்களூரு மாநகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது, என கூறப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயமுத்தூர், வதோதரா, இந்தூர், மும்பை ஆகியவை இடம் பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரமான டெல்லி, 13 வது இடத்தை பிடித்துள்ளது. மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சிம்லா முதலிடத்தையும், சேலம், வேலூர் ஆகியவை முறையே 5, 6-வது இடங்களையும், திருச்சி 10-வது இடத்தையும், திருநெல்வேலி 17, திருப்பூர் 18, ஈரோடு 24-வது இடங்களையும் பிடித்துள்ளன.

சிறந்த நகராட்சி நிர்வாகம்:

கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, துப்புரவு, பதிவு, அனுமதி, உட்கட்டமைப்பு ஆகிய சேவைகள், நிதியில் வருவாய்- செலவின மேலாண்மை, நிதி பரவ லாக்கல், மின்னணு ஆளுமை- பயன்பாடு- மின்னணு குறித்த கல்வியறிவு, திட்டங்கள் தயா ரிப்பு- நடைமுறைப்படுத்துதல்- கட்டாயமாக்குதல், நிர்வாகத்தில் திறன்- வெளிப்படைத்தன்மை- கடமை, மனிதவளம், பங்கேற்பு உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் சிறந்த நகராட்சி நிர்வாகங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்களில் இந்தூர் முதலிடத்தையும், கோவை 12-வது இடத்தையும், சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பெற்றுள்ளன. மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்களில் சேலம் 5-வது இடத்தையும், திருநெல்வேலி 10-வது இடத்தையும், ஈரோடு 13-வது இடத்தையும், வேலூர் 14-வது இடத்தையும், திருச்சி 17-வது இடத்தையும், தூத்துக்குடி 20-வது இடத்தையும் பெற்றுள்ளன.

14. 2021 ஆம் ஆண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு

15. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழக பிரிவு தலைவராக டாக்டர் எஸ்.சந்திரகுமார் தேர்வு

16. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!.

பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘ஏக் ஒளா் நரேன்’ (மற்றுமொரு நரேன்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகவுள்ளது. வங்க மொழித் திரைப்பட இயக்குநா் மிலன் பௌமிக், பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவுள்ளாா். அந்தப் படத்தில் பிரதமா் மோடியின் வேடத்தில் தொலைக்காட்சி நடிகா் கஜேந்திர சௌஹான் நடிக்கவுள்ளாா்.

1. Which international organisation has released the World Employment and Social Outlook 2021?

A) IMF

B) ILO

C) WEF

D) UNICEF

 • The World Employment and Social Outlook 2021 is released by the International Labour Organisation. This report is one of ILO’s flagship publications that gives details on transformation of way work is organised. It also depicts the experience of workers and businesses on online web–based and location–based platforms.

2. Which organisation has released the Report on Currency and Finance (RCF)?

A) International Monetary Fund

B) World Bank

C) Reserve Bank of India

D) New Development Bank

 • The Reserve Bank of India has recently released a report titled Report on Currency and Finance (RCF) for the year 2020–21. This theme for this year’s report is “Reviewing the Monetary Policy Framework”. The report critically analyses the trends in inflation and inflation target for March 2021 against the prevailing uncertain economic atmosphere.

3. Which organisation is set to launch COVID–19 Oxygen Emergency Taskforce?

A) UNICEF

B) Indian Medical Association

C) AIIMS

D) WHO

 • A consortium led by the World Health Organisation (WHO) has decided to launch a COVID–19 Oxygen Emergency Taskforce. This decision comes amidst the pressure on health systems of low–and–middle–income countries, many of those are running out of oxygen. WHO, under the proposed taskforce aims to increase the supply of oxygen to health systems across the globe.

4. Which movie won the best picture (Drama) award in the 78th Golden Globe award?

A) Nomadland

B) Pariyerum Perumal

C) The Crown

D) Kanaa

 • The winners of the 78th Golden Globes were recently announced with the “Nomadland” and “Borat Subsequent Moviefilm” bagging many awards. While “Nomadland” won the award for the drama category, “Borat Subsequent Moviefilm” won for the comedy or musical division.
 • Chloe Zhao, the director of “Nomadland,” became the first woman to win the best director award since 1984.

5. Which state is set to host the Indian women’s League (IWL)?

A) Kerala

B) Odisha

C) Rajasthan

D) Tripura

 • This year’s Indian Women’s League (IWL) will be hosted by the state of Odisha. IWL is a top division women’s professional football league in India, which is conducted by All India Football Federation (AIFF). It was first played with 6 teams in Delhi. The last such season was the 4th IWL played with 12 teams in Bangalore.

6. When is the ‘Zero Discrimination Day’ observed annually across the world?

A) March 02

B) March 01

C) March 05

D) March 04

 • The ‘Zero Discrimination Day’ is observed annually across the world on March 1, by UNAIDS. UNAIDS is the leading global forum which aims to end AIDS as a public health threat by 2030.

7. “Sugamya Bharat App” is being launched as a part of which ministry?

A) Ministry of Women & Child Welfare Development

B) Ministry of Skill Development

C) Ministry of Social Justice & Empowerment

D) Ministry of Science & Technology

 • The Union Ministry of Social justice and Empowerment has developed an app named “Sugamya Bharat App”. It has been developed by the Department of Empowerment of Persons with Disabilities (DEPwD), for enhancing accessibility. It is being launched along with a hand book named “Access – The Photo Digest”.

8. India launched the ‘Year of Environment’ with which friendly country?

A) France

B) Sri Lanka

C) Mauritius

D) Myanmar

 • Environment Minister Prakash Javadekar launched the Indo–French year of Environment along with his French counterpart. India and France have environment projects being undertaken in Assam, Rajasthan and a project to be started in Jharkhand.
 • The objective of this event is to strengthen Indo–French cooperation in sustainable development.

9. Which is the first state in India to launch a policy to establish Special Agriculture Zones (SAZs)?

A) Tamil Nadu

B) Punjab

C) Uttarakhand

D) Telangana

 • Uttarakhand was the first state to set up Special Agricultural Zones (SAZs) in 2011. It was launched on the lines of the Special Economic Zones (SEZs). It encouraged the farmers to develop high–quality crop seeds typical to hilly regions.

10. As per the second advanced estimates of GDP released by the MoSPI, what is the GDP of the financial year 2020–21?

A) – 7 per cent

B) – 8 per cent

C) – 9 per cent

D) –10 per cent

 • As per the second advanced estimates of GDP released by the Ministry of Statistics and Programme Implementation (MoSPI), the GDP for the financial year 2020–21 is recorded as –8 per cent. NSO, MoSPI also released the quarterly estimates. After two consecutive quarters of contraction, India’s GDP for the October–December quarter (Q3) grew by 0.4 per cent. With this the country is said to have exited recession.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *