TnpscTnpsc Current Affairs

5th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “புதுமையான வேளாண்மை” என்ற தேசிய அளவிலான பயிலரங்கை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?

அ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஆ. NITI ஆயோக் 

இ. NABARD

ஈ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்

 • NITI ஆயோக், அமுதப்பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, புது தில்லி அறிவியல் பவனில், “புதுமையான வேளாண்மை” என்ற தேசிய அளவிலான பயிலரங்கை ஏற்பாடு செய்தது. NITI ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், “இயற்கை விவசாயம் காலத்தின் தேவை மற்றும் இயற்கை விவசாயத்தின்மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை உறுதிசெய்வதற்கான அறிவியல் வழிகளைக் கண்டறிவது முக்கியம்” என்றார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா விவசாயம் & விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் NITI ஆயோகின் துணைத்தலைவர் டாக்டர் இராஜீவ் குமார் ஆகியோர் இப்பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

2. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பரிமாற்றஞ்செய்துகொள்வதற்காக, எந்த நாட்டுடன், ‘Transmission Interconnection’ஐ அமைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது?

அ. இலங்கை

ஆ. நேபாளம்

இ. மாலத்தீவுகள் 

ஈ. வங்காளதேசம்

 • மாலத்தீவின் ஆற்றல் மாற்றத் திட்டத்தை எளிதாக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பரிமாறிக்கொள்வதற்கான ‘பரிமாற்ற இடைத்தொடர்பை’ அமைக்க இந்தியாவும் மாலத்தீவுகளும் திட்டமிட்டுள்ளன. எரிசக்தி மற்றும் புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர் கே சிங் மற்றும் மாலத்தீவு அமைச்சர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது “ஒரு சூரியன், ஓர் உலகு, ஒரே மின்கட்டமைப்பின் (OSOWOG)” கீழ், ஆற்றல் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் இடைத்தொடர்பு ஆகியவற்றை கொண்டுவரும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அவர்கள் முன்மொழிந்தனர்.

3. ஏழு கயிற்றுப்பாதை திட்டங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அண்மையில் கையெழுத்திட்ட இந்திய மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 

இ. குஜராத்

ஈ. அஸ்ஸாம்

 • ஹிமாச்சல பிரதேச அரசு மாநிலத்தின் காங்க்ரா, குலு, சம்பா, சிர்மூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் ஏழு கயிற்றுப் பாதை திட்டங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் புதுமையான போக்குவரத்து தீர்வாக கயிற்றுப் பாதை திட்டங்களை மேம்படுத்துவதற்காக ரோப்வேஸ் மற்றும் ரேபிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (ஆர்டிடிசி) ஹெச்பி லிமிடெட் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

4. ‘மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையின் 2022-க்கான சர்வதேச மாநாடு’ நடைபெறும் இடம் எது?

அ. வாரணாசி

ஆ. புது தில்லி 

இ. காந்தி நகர்

ஈ. புனே

 • வேதி & உரங்கள் மற்றும் சுகாதாரம் & குடும்ப நலத்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2022ஆம் ஆண்டுக்கான மருந்து & மருத்துவ சாதனங்கள் துறைக்கான சர்வதேச மாநாட்டின் 7ஆவது பதிப்பை தொடக்கி வைத்தார். இம்மாநாடு புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் அயராத முயற்சிகள் மற்றும் தலைமையின் காரணமாக இந்திய சுகாதாரத்துறை அனைவரும் அணுகக்கூடியதாக மாறிவருகிறது என டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். மருந்து உற்பத்தியைப் பொறுத்தவரை உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.

5. 2021-22 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஆக்கப்பெற்ற எஃகின் அளவு என்ன?

அ. ரூ.10 மில்லியன் டன்

ஆ. ரூ.13.5 மில்லியன் டன் 

இ. ரூ.15 மில்லியன் டன்

ஈ. ரூ.20.5 மில்லியன் டன்

 • இந்தியா `1 டிரில்லியன் மதிப்புடைய 13.5 மில்லியன் டன்கள் ஆக்கப்பெற்ற எஃகு மற்றும் `46000 கோடி மதிப்புடைய எஃகை இறக்குமதியும் செய்துள்ளதாக மத்திய எஃகு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. மேலும், 106 மில்லியன் டன்கள் எஃகை இந்தியாவும் பயன்படுத்தியுள்ளது. நம் நாட்டில் சிறப்பு எஃகு தயாரிக்க இந்திய அரசு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

6. “எண்டர்பிரைஸ் இந்தியா” என்ற நினைவுகூர் நிகழ்வைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம் 

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

 • அமுதப்பெருவிழாவின்கீழ், MSME அமைச்சகத்தின் மிகப்பெரும் நிகழ்வான, “எண்டர்பிரைஸ் இந்தியா” நிகழ்ச்சியை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் ஸ்ரீ நாராயண் ரானே தொடங்கி வைத்தார். இது தொழில்முனைவோர் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் நாடு முழுவதும் MSME அமைச்சகத்தின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வு ஆகும்.

7. ‘டிஜிட்டல் இந்தியா RISC-V நுண்செயலி (DIR-V) திட்டமானது’ எவ்வாண்டுக்குள் நுண்செயலிகளை உருவாக்கி சிலிக்கான் மற்றும் வடிவமைப்பில் வெற்றிகாண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. 2023 

ஆ. 2025

இ. 2026

ஈ. 2030

 • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘டிஜிட்டல் இந்தியா RISC-V நுண்செயலி (DIR-V)’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நுண்செயலிகளை உருவாக்குவதையும், தொழிற்முறை தரத்தில் சிலிக்கான் மற்றும் வடிவமைப்பில் வெற்றிகாண்பதை 2023 டிசம்பருக்குள் அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஷக்தி & வேகாவின் வணிக சிலிக்கானுக்கான மைல்கற்களை அமைக்கிறது.

8. ‘PM SVANIdhi’ திட்டத்தின் பயனாளிகள் யார்?

அ. SHG உறுப்பினர்கள்

ஆ. வீதியோர வியாபாரிகள் 

இ. பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள்

ஈ. வளரிளம்பருவத்தினர்

 • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ‘PM SVANIdhi’ என்ற திட்டத்தை 2024 டிசம்பர் வரை தொடர்வதற்கு ஒப்புதலளித்துள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம், வீதியோர வியாபாரிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய அடமானம் இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. 5,000 கோடிக்கு கடன் வழங்குவதை நோக்கமாகக்கொண்ட இந்தத்திட்டம், சமீபத்திய ஒப்புதலை அடுத்து அதன் கடன்தொகை `8,100 கோடியாக அதிகரித்துள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குவார் நீர் மின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. ஜம்மு மற்றும் காஷ்மீர் 

இ. சிக்கிம்

ஈ. குஜராத்

 • 540 MW உற்பத்தித் திறன்கொண்ட குவார் நீர்மின் திட்டத்திற்கு `4,526.12 கோடி முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதலளித்துள்ளது. இது ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின்மீது அமைந்துள்ளது. குவார் நீர்மின் திட்டம், NHPC லிமிடெட் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநில பவர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான செனாப் வேலி பவர் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிட் (CVPPL) மூலம் செயல்படுத்தப்படும்.

10. 2022 – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. கொல்கத்தா

இ. புது தில்லி 

ஈ. மும்பை

 • புது தில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற 39ஆவது மாநாட்டுக்கு, இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமை தாங்கினார். முதலாவது தலைமை நீதிபதிகள் மாநாடு 1953இல் நவம்பரில் நடைபெற்றது. இதுவரை 38 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு இம்மாநாடு நடைபெற்றது. நீதித்துறை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், நீதி வழங்கல் முறையை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4.40 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், தனிநபர்கடன், வீடு, வாகனக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரிக்கவுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அந்தக் குழு அறிவித்தது.

இந்நிலையில், அந்தக் குழுவின் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. முன் திட்டமிடலின்றி நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த 3 மாதங்களாக அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 4.40 சதவீதமாக உயர்த்த முடிவுசெய்யப்பட்டது. இந்த வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதுதவிர, ரிசர்வ் வங்கியில் பிற வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய விகிதம் (CRR) 4 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளிடம் இருக்கும் `87,000 கோடி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த நடைமுறை, வரும் மே மாதம் 21-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

2. மாநகரப் பேருந்துகள் வருகையை அறிய செயலி: அறிமுகம் செய்தார் அமைச்சர்

மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திட ஏதுவாக உருவாக்கப்பட்ட ‘சென்னை பஸ்’ செயலியை சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

3. வேதாரண்யத்தில் ஒளவையாருக்கு `1 கோடியில் மணிமண்டபம்

வேதாரண்யத்தில் ஔவையாருக்கு `1 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

ஔவையாருக்கு மணிமண்டபம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் துளசியாப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஔவையார் விஸ்வநாத சுவாமி கோயிலில், தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு `1 கோடியில் மணிமண்டபம் அமைத்து, அவரது பாடல்கள் கல்வெட்டாகப் பதிக்கப்படும். தற்போது ஔவையாருக்கு பங்குனி மாதம் சதய நட்சத்திரத்தன்று 2 நாள்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இனி ஆண்டுதோறும் இந்த விழா மூன்று நாள்களுக்கு வெகு சிறப்பாக நடத்தப்படும்.

வள்ளலாருக்கு முப்பெரும் விழா: உயிர்த்திரள் ஒன்றெனக் கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளலார் தருமசாலை தொடங்கிய 156-ஆவது ஆண்டு தொடக்கமும், வள்ளலார் இந்த உலகுக்கு வருவிக்க உற்ற 200ஆவது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆவது ஆண்டும் வரவிருப்பதால் இந்த மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-ஆவது ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும். இதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றார்.

4. பத்திரிகை சுதந்திரம்: 150-ஆவது இடத்தில் இந்தியா

பத்திரிகை சுதந்திரத்துக்கான் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. இதுகுறித்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள, ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளதாவது: 2022-ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150-ஆவது இடத்தை வகிக்கிறது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 142-ஆவது இடத்தை வகித்தது.

இந்தியா மட்டுமன்றி, நேபாளத்தைத் தவிர அதன் அனைத்து அண்டை நாடுகளும் பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் சரிவு கண்டுள்ளன. அந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 157-ஆவது இடத்திலும் இலங்கை 146-ஆவது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் மற்றும் மியான்மர் முறையே 162 மற்றும் 176-ஆவது இடங்களில் உள்ளன. பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் இந்த ஆண்டு முதலிடத்தில் நார்வேயும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. ஸ்வீடன், எஸ்டோனியா, பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தத் தரவரிசைப் பட்டியலில் வட கொரியா கடைசி இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 150-ஆவது இடத்தை வகித்த ரஷியா, இந்த ஆண்டு 155-ஆவது இடத்துக்குக் கீழிறங்கியுள்ளது; சீனா 175-ஆவது இடத்திலிருந்து 177-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.

1. Which institution organised a National Level Workshop on “Innovative Agriculture”?

A. Ministry of Agriculture and Farmers Welfare

B. NITI Aayog 

C. NABARD

D. Indian Council of Agriculture Research

 • NITI Aayog, as a part of Azadi ka Amrit Mahotsav celebrations, organized a National Level Workshop on “Innovative Agriculture” in Vigyan Bhawan, New Delhi. NITI Aayog CEO Amitabh Kant said ‘Natural farming is the need of the hour and it is important to identify scientific ways to assure farmers higher incomes from natural farming.’
 • Union Minister of Fisheries, Animal Husbandry and Dairying Parushottam Rupala, Union Minister of Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar and Vice Chairman, NITI Aayog –Dr. Rajiv Kumar also participated in the Workshop.

2. India has announced to set up ‘Transmission interconnection’ for transfer of renewable power with which country?

A. Sri Lanka

B. Nepal

C. Maldives 

D. Bangladesh

 • India and Maldives are planning to set up a transmission interconnection for transfer of renewable power between the two countries, to facilitate energy transition programme of Maldives. During the meeting between Power and New and Renewable Energy Minister R K Singh and his Maldives counterpart, the leaders proposed two Memoranda of Understanding — on energy cooperation and on transmission interconnection under One Sun, One World, One Grid (OSOWOG).

3. Which Indian state has recently signed MoUs for development of seven ropeway projects?

A. Maharashtra

B. Himachal Pradesh 

C. Gujarat

D. Assam

 • Himachal Pradesh government has signed MoU for the development of seven ropeway projects in Kangra, Kullu, Chamba, Sirmour and Bilaspur districts of the state. The MoU was signed between Ropeways and Rapid Transport System Development Corporation (RTDC) HP Limited and National Highways Logistic Management Limited (NHLML) for the development of ropeways as innovative transport solution in Himachal Pradesh.

4. Which is the venue of the ‘International Conference on Pharma and Medical Devices sector 2022’?

A. Varanasi

B. New Delhi 

C. Gandhi Nagar

D. Pune

 • Dr Mansukh Mandaviya, Union Minister for Chemicals & Fertilizers and Health & Family Welfare, inaugurated the 7th edition of the International Conference on Pharma and Medical Devices sector 2022. The annual flagship three–day conference is being held at Dr Ambedkar International Centre, New Delhi.
 • Dr Mansukh Mandaviya said that the Indian healthcare sector is becoming affordable and accessible for everyone due to the relentless efforts and leadership of Prime Minister Narendra Modi. India is the pharma hub in the world with our production being fifth in the world.

5. What is the total export of finished steel from India in FY 22?

A. Rs 10 million tonnes

B. Rs 13.5 million tonnes 

C. Rs 15 million tonnes

D. Rs 20.5 million tonnes

 • The Ministry of Steel recently announced that the country exported 13.5 million tonnes (mt) of finished steel amounting to ₹1 trillion and imported steel of around ₹46000 crores. India also recorded an all–time steel high consumption at around 106 million. Government of India launched Production Linked Scheme (PLI) to produce speciality steel in our country.

6. Which Union Ministry launched the commemorative event – “Enterprise India”?

A. Ministry of Commerce and Industry

B. Ministry of MSME 

C. Ministry of External Affairs

D. Ministry of Science and Technology

 • Union Minister for Micro, Small and Medium Enterprises Shri Narayan Rane inaugurated the Ministry’s Mega Event– “Enterprise India” under Azadi Ka Amrit Mahotsav. It is a series of commemorative entrepreneurship development events and activities being organised to promote entrepreneurship culture and create awareness about the schemes and initiatives of Ministry of MSME across the country.

7. ‘Digital India RISC–V Microprocessor (DIR–V) Program’ aims to create Microprocessors and achieve Silicon and Design wins by which year?

A. 2023 

B. 2025

C. 2026

D. 2030

 • The Ministry of Electronics and IT launched the ‘Digital India RISC–V Microprocessor (DIR–V)’ program. It aims to enable creation of Microprocessors and achieve industry–grade Silicon and Design wins by December 2023. It also set milestones for commercial silicon of SHAKTI & VEGA.

8. Who are the beneficiaries of the ‘PM SVANidhi’ scheme?

A. SHG Members

B. Street Vendors 

C. Lactating Mothers and New Born Children

D. Adolescent Boys and Girls

 • The Cabinet Committee on Economic Affairs approved the continuation of the Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme till December 2024.
 • Through the scheme, affordable collateral–free loans are given to street vendors. The scheme aimed to facilitate loans for an amount of Rs 5,000 crore while the recent approval has increased the loan amount to Rs 8,100 crore.

9. Kwar Hydro–electric project, which was seen in the news, is located in which state/UT?

A. Arunachal Pradesh

B. Jammu and Kashmir 

C. Sikkim

D. Gujarat

 • The Cabinet Committee on Economic Affairs approved the investment of Rs 4,526.12 crore for the 540 MW Kwar Hydro–electric project. It is located on Chenab River in Jammu & Kashmir’s Kishtwar district. The Kwar hydropower project will be implemented by Chenab Valley Power Projects Private Ltd (CVPPL), a joint venture company between NHPC Ltd and Jammu & Kashmir State Power Development Corporation (JKSPDC).

10. Which is the venue of the Conference of High Court Chief Justices 2022?

A. Chennai

B. Kolkata

C. New Delhi 

D. Mumbai

 • Chief Justice of India NV Ramana chaired the 39th conference of Chief Justices of various High Courts of the country, at the premises of the Supreme Court, New Delhi. The first Chief Justices’ conference was held in November 1953 and 38 such conferences have been organised so far. The last Conference was held in the year 2016. It aims to address the issues concerning the judiciary and to discuss the steps to be taken to improve the justice delivery system.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button