TnpscTnpsc Current Affairs

5th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

5th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 5th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. IMFஇன் அண்மைய புள்ளிவிவரங்களின்படி (2022 செப்டம்பர்), உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. இந்தியா

இ. பிரான்ஸ்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (IMF) புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில், இங்கிலாந்தை (UK) விஞ்சி இந்தியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன. இருப்பினும், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில், ஒரு நாட்டில் ஒரு நபர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்பதைக் கணக்கிடும் வகையில், இந்தியா 190 நாடுகளில் 122ஆவது இடத்தில் உள்ளது.

2. இந்தியாவின் முதல், ‘இரவு வான் சரணாலயம்’ அமைக்கப்படவுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. புது தில்லி

இ. லடாக்

ஈ. இராஜஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. லடாக்

  • நடுவணரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, ஒரு தனித்துவமான மற்றும் முதல்–வகையான முனைவாக, லடாக்கில் இந்தியாவின் முதல், ‘இரவு வான் சரணாலயம்’ அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது; இது அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வுத்தேச, ‘இரவு வான் சரணாலயம்’, சாங்தாங் வனவுயிரிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படும். இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தும். இந்த ‘இரவு வான் சரணாலயம்’ தொடங்குவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம், லடாக், தன்னாட்சி மலையக மேம்பாட்டு கவுன்சில், லே மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

3. கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காக கீழ்க்காணும் எந்த மாநில அரசுக்கு `3500 கோடி அபராதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்தது?

அ. புது தில்லி

ஆ. மேற்கு வங்காளம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேற்கு வங்காளம்

  • திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான விதிமுறைகளை மீறியதற்காக, ‘இழப்பீடு’ தொகையாக `3,500 கோடியை வழங்குமாறு மேற்கு வங்க மாநில அரசை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கேட்டுக்கொண்டுள்ளது. மேற்கு வங்க அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யவும் உச்சநீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மைக்கென அர்ப்பணிக்கப்பட்ட தொகையை இரண்டு மாதங்களுக்குள் வைப்பு வைக்குமாறும், தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தல்களின்படி அது செயல்பட வேண்டும் என்றும் மேற்கு வங்க மாநில அவ்வமர்வு கேட்டுக்கொண்டுள்ளது.

4. அண்மையில் நடைபெற்ற 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. திருவனந்தபுரம்

ஆ. சென்னை

இ. பெங்களூரு

ஈ. ஹைதராபாத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. திருவனந்தபுரம்

  • நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 26 பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட்டது, 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டன. பரஸ்பர ஒப்பந்தத்தின்மூலம் மத்திய, மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்துவைப்பது, மாநிலங்களுக்கிடையே பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனைக்காக ஒரு மன்றத்தை உருவாக்குவது ஆகியவை மண்டல கவுன்சில் கூட்டத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

5. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. நீதியரசர் இரஞ்சன் கோகோய்

ஆ. நீதியரசர் D Y சந்திரசூட்

இ. நீதியரசர் N V இரமணா

ஈ. நீதியரசர் U U லலித்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீதியரசர் D Y சந்திரசூட்

  • இந்திய உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மிகமூத்த நீதியரசரான நீதியரசர் DY சந்திரசூட், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல்தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 1987 சட்டசேவைகள் அதிகாரச்சட்டம், 1987இன்கீழ் NALSAஇன் செயல் தலைவராக நீதியரசர் சந்திரசூட்டை நியமித்தார். இந்தியத்தலைமை நீதியரசர் NALSAஇன் தலைமைக் காப்பாளர் ஆவார்.

6. FSIBஆல் NABARDஇன் தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர் யார்?

அ. சாரதா குமார் ஹோதா

ஆ. முகமது முஸ்தபா

இ. K V காமத்

ஈ. சிவசுப்ரமணியன் இராமன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. முகமது முஸ்தபா

  • வேளாண்மை & கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் (NABARD) தலைவராக முகமது முஸ்தபாவை நிதிச்சேவை நிறுவனங்கள் பணியகம் (FSIB) பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையின் மீதான இறுதி முடிவு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக்குழுவால் எடுக்கப்படும். NABARD என்பது இந்தியாவில் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் தலைமை கூட்டுறவு வங்கிகளின் ஒட்டுமொத்த ஒழுங்குமுறைக்கான ஒரு தலைமை ஒழுங்குமுறை அமைப்பாகும்.

7. மாதவிடாய் காலப் பொருட்களை அனைவருக்கும் இலவசமாக வழங்கிய உலகின் முதல் நாடு எது?

அ. நியூசிலாந்து

ஆ. ஸ்காட்லாந்து

இ. ஜெர்மனி

ஈ. பின்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஸ்காட்லாந்து

  • மாதவிடாய் காலப் பொருட்களை அனைவருக்கும் இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது. மாதவிடாய் காலப் பொருட்கள் சட்டத்தின்படி, கல்வி நிறுவனங்கள்மூலம் அப்பொருட்கள் தரப்படும். தேவைப்படுவோர்க்கு பஞ்சுத்தக்கை மற்றும் அணையாடைகள்போன்ற இலவசப் பொருட்களை வழங்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை தற்போது உள்ளூர் அதிகாரிகளின் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

8. ‘நமஸ்தே’ என்ற நடுவண் துறை திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

  • ‘நமஸ்தே’ என்பது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நடுவண் துறைத்திட்டமாகும்; இத்திட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூட்டு முனைவாகும். இது, நகர்ப்புற இந்தியாவில் உள்ள தூய்மைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பின்மூலம் உறுதிப்படுத்த எண்ணுகிறது.

9. நாட்டின் முழு, ‘நடைமுறைக் கல்வியறிவு’ மாவட்டமாக மாறிய மண்டலா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. குஜராத்

இ. மத்திய பிரதேசம்

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் மண்டலா பகுதி நாட்டிலேயே முதல் முழுமையான ‘நடைமுறைக் கல்வியறிவு’ மாவட்டமாக மாறியுள்ளது. ஒரு நபர் தனது சொந்தப்பெயரை எழுதவும், ஹிந்தி மொழியில் எண்ணவும் படிக்கவும் எழுதவும் முடியும்போது அவர், ‘நடைமுறைக் கல்வியறிவு’ கொண்டவர் என்று அழைக்கப்படு –கிறார். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் உள்ள மக்களிடையே கல்வி கற்பதன் அவசியம் குறித்த பேரளவில் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

10. ‘சிப் 4’ கூட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து எந்தெந்த நாடுகள் பங்கேற்றன?

அ. தைவான், தென் கொரியா மற்றும் ஜப்பான்

ஆ. சீனா, தைவான் மற்றும் தென் கொரியா

இ. தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா

ஈ. ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தைவான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தைவான், தென் கொரியா மற்றும் ஜப்பான்

  • ‘சிப் 4’ சந்திப்பு என்பது அமெரிக்கா, தைவான், தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நான்கு சில்லு உற்பத்தி நாடுகளின் கூட்டமாகும். இருப்பினும், ‘சிப் 4’ சந்திப்பு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று தைவான் அறிவித்தது. தைவான் ஒரு மிகப்பெரிய குறைக்கடத்தி உற்பத்தியாளராகும். மேலும், உலகின் மிகப்பெரிய ஒப்பந்த சில்லு தயாரிப்பாளரின் தாயகமாகும் அது. இந்தக் குழுவானது அமெரிக்க தலைமையிலான முக்கிய நுண்சில்லு உற்பத்தியாளர்களின் குழுவாகக் கூடியதாக விவரிக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 2021-22 குறித்த 28ஆவது நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

நடுவண் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப்பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 2021-22 குறித்த 28ஆவது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2021 மார்ச் இறுதியில், $573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து $620.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியுள்ளது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2% என்பதிலிருந்து கணிசமாக குறைந்து 2022 மார்ச் இறுதியில், 19.9% ஆகியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில் ஓராண்டுக்கு முன் 100.6% என்பதைவிட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன் லேசாக குறைந்துள்ளது. நீண்டகால கடன் அளவு $499. 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், குறுகிய காலக்கடன் அளவு $121.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மொத்தக்கடனில் 90% வணிகக் கடன்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள் குறைந்தகால வர்த்தகக்கடன், பலவகை கடன்கள் ஆகியவையாகும்.

2. மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் நியமனம்

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் செப்.13ஆம் தேதியன்று பணி ஓய்வுபெறவுள்ளதால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 223ஆவது பிரிவின்படி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம் துரைசாமியை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

3. மாணவிகளுக்கு `1,000 உதவித்தொகை: ‘புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் `1,000 உதவித் தொகை வழங்கும், ‘புதுமைப்பெண்’ திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைக்கவுள்ளார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை, தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வர் முக ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி, அரசுப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் `1,000 நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு `698 கோடி ஒதுக்கியுள்ளது.

‘புதுமைப்பெண்’ திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மாதந்தோறும் `1,000 உதவித்தொகை பெற இதுவரை சுமார் நான்கு இலட்சம் மாணவிகள் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் மாணவிகளின் வங்கிக்கணக்குக்கு `1,000 உதவித் தொகை செலுத்தப்படவுள்ளது.

4. 05-09-2022 – ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ. சிதம்பரனாரின் 151ஆவது பிறந்தநாள்.

5th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per the latest figures from the IMF (September 2022), which country is the fifth largest economy in the world?

A. UK

B. India

C. France

D. Australia

Answer & Explanation

Answer: B. India

  • According to figures from the International Monetary Fund (IMF), India passed the United Kingdom (UK) to become the fifth–largest economy in the world in the last quarter of 2021. The United States, China, Japan, and Germany are the only nations ahead of India. However, in terms of per capita income, which is a measure of how much money is made per person in a country, India is ranked 122 out of 190 countries.

2. India’s first–ever ‘Night Sky Sanctuary’ is set to come up in which state/UT?

A. Himachal Pradesh

B. New Delhi

C. Ladakh

D. Rajasthan

Answer & Explanation

Answer: C. Ladakh

  • The Department of Science & Technology (DST) has undertaken to set up India’s first–ever ‘Night Sky Sanctuary’ in Ladakh which will be completed within next three months. The Dark Sky Reserve will be located at Hanle, Ladakh as a part of Changthang Wildlife Sanctuary. It will boost Astro–tourism in India. An MoU was signed among the UT administration, Ladakh Autonomous Hill Development Council (LAHDC) Leh and the Indian Institute of Astrophysics (IIA).

3. National Green Tribunal (NGT) smashed a Rs 3500 crore fine on which state government for violating waste management rules?

A. New Delhi

B. West Bengal

C. Uttar Pradesh

D. Assam

Answer & Explanation

Answer: B. West Bengal

  • The National Green Tribunal (NGT) has asked the West Bengal government to pay Rs 3,500 crore as ‘compensation’ for violating the norms for the management of solid and liquid waste. The Bengal government has the option to seek a review by the tribunal or move the Supreme Court. The bench has asked the state to deposit the amount within two months dedicated to solid waste management in the state and it will be operated according to the directions of the Chief Secretary.

4. Which is the venue of the 30th Southern Zonal Council meeting held recently?

A. Thiruvananthapuram

B. Chennai

C. Bengaluru

D. Hyderabad

Answer & Explanation

Answer: A. Thiruvananthapuram

  • Union Home Minister Amit Shah chaired the 30th Southern Zonal Council meeting in Thiruvananthapuram. In the meeting, 26 issues were discussed, 9 issues were resolved and 17 issues were reserved for further consideration. The main objectives of the Zonal Council meeting are settlement Centre– State disputes and inter–state disputes through mutual agreement, promotion of regional cooperation between States, among others.

5. Who has been nominated as executive chairman of the National Legal Services Authority?

A. Justice Ranjan Gogoi

B. Justice D Y Chandrachud

C. Justice N V Ramana

D. Justice U U Lalit

Answer & Explanation

Answer: B. Justice D Y Chandrachud

  • Justice D Y Chandrachud, the second senior–most judge in the Supreme Court, has been nominated as executive chairman of the National Legal Services Authority. President Droupadi Murmu nominated Justice Chandrachud to head the NALSA as executive chairman under the Legal Services Authorities Act, 1987. The Chief Justice of India is the patron–in–chief of the NALSA.

6. Who has been recommended as the Chairman of NABARD by FSIB?

A. Sarada Kumar Hota

B. Mohammad Mustafa

C. K V Kamath

D. Sivasubramanian Ramann

Answer & Explanation

Answer: B. Mohammad Mustafa

  • The Financial Services Institutions Bureau (FSIB) recommended Mohammad Mustafa as the Chairman of National Bank for Agriculture and Rural Development (NABARD). The final decision on the recommendation would be taken by the Appointments Committee of the Cabinet, headed by Prime Minister Narendra Modi. NABARD is the apex regulatory body for overall regulation of regional rural banks and apex cooperative banks in India.

7. Which is the first country in the world to make menstrual period products free for all?

A. New Zealand

B. Scotland

C. Germany

D. Finland

Answer & Explanation

Answer: B. Scotland

  • Scotland has become the first country in the world to make menstrual period products free for all. Products will be distributed through councils and education providers as per the Period Products Act. There is now a legal duty on local authorities to provide free items such as tampons and sanitary pads to anyone who needs them.

8. Which Union Ministry implements ‘NAMASTE’ central sector scheme?

A. Ministry of External Affairs

B. Ministry of Social Justice and Empowerment

C. Ministry of Rural Development

D. Ministry of Agriculture and Farmers Welfare

Answer & Explanation

Answer: B. Ministry of Social Justice and Empowerment

  • ‘NAMASTE’ is a Central Sector Scheme of the Ministry of Social Justice and Empowerment (MoSJE) as a joint initiative with the Ministry of Housing and Urban Affairs (MoHUA). It seeks to ensure safety and dignity of sanitation workers in urban India by enhancing their occupational safety through capacity building and access to safety gear and machines.

9. Mandla, which became the fully ‘functionally literate’ district in the country, is located in which state?

A. Kerala

B. Gujarat

C. Madhya Pradesh

D. Telangana

Answer & Explanation

Answer: C. Madhya Pradesh

  • Madhya Pradesh’s tribal–dominated Mandla region has become the first fully ‘functionally literate’ district in the country. A person is called functionally literate when they are able to write their own name, to count and read and write in Hindi. The region rolled out a major campaign in 2020 to educate the people in the region.

10. Which countries are included in the ‘Chip 4’ meeting along with USA?

A. Taiwan, South Korea and Japan

B. China, Taiwan and South Korea

C. Thailand, Taiwan and South Korea

D. Australia, China and Taiwan

Answer & Explanation

Answer: A. Taiwan, South Korea and Japan

  • ‘Chip 4’ meeting is a meeting of the four chip manufacturing nations including the United States, Taiwan, South Korea and Japan. However, Taiwan announced that it has not been informed about the ‘Chip 4’ meeting. Taiwan is a major semiconductor producer and home to the world’s largest contract chip maker. The group is described as the gathering as U.S.–led group of major microchip manufacturers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!