6th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பன்னாட்டு விண்வெளி மையத்தில் (ISS) கண்டறியப்பட்ட புதிய வகை பாக்டீரியத்துக்கு பின்வரும் எந்த இந்திய அறிவியலாளரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ) ஜெகதீஷ் சந்திரபோஸ்

ஆ) A P J அப்துல் கலாம்

இ) அஜ்மல் கான்

ஈ) C V இராமன்

 • NASA மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தின்கீழ், ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ISS’இல் நான்கு பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறிவியலாளர்கள் குழுமத்தில் இந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு குழுவும் இடம்பெற்றிருந்தது.
 • திரிபுகளுள் ஒன்றுக்கு, பல்லுயிர் பெருக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரான அஜ்மல் கானின் நினைவாக Methylobacterium ajmalii எனப் பெயர் சூட்டப்பட்டது.

2. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) மகளிர் ஆசிய கோப்பை 2022 போட்டியை நடத்தவுள்ள நாடு எது?

அ) UK

ஆ) இந்தியா

இ) இலங்கை

ஈ) வங்காளதேசம்

 • கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின், மகளிர் ஆசிய கோப்பை – 2022 போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளன -த்தின் தலைவர் பிரபுல் படேல், இப்போட்டியை 12 அணிகள் பங்கேற்கு -ம் போட்டியாக அறிவித்தார். முந்தைய காலங்களில் வெறும் எட்டு அணிகள் மட்டுமே போட்டிகளில் இடம்பெற்றன.
 • போட்டியை நடத்துவதால் இந்தியா நேரடியாக போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறும். இந்நிகழ்வு 2023 FIFA மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதிப்போட்டியாகவும் இருக்கும்.

3. 2021 மார்ச் 31 நிலவரப்படி, நாடு முழுவதும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தால் எட்டப்பட்ட புதிய சாதனை என்ன?

அ) 1 கோடி

ஆ) 2 கோடி

இ) 4 கோடி

ஈ) 5 கோடி

 • 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் வசதி வழங்கலை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் இயக்கம், 2019 ஆகஸ்ட்.15 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சமீபத்தில் நான்கு கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி வழங்கப்பட்டு அத்திட்டம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
 • 100% குடிநீர் குழாய் வசதியை வழங்கியுள்ள முதல் மாநிலமாக கோவா மாநிலம் மாறியுள்ளது.

4. ‘புவி மணிநேர நாளானது’ ஆண்டுதோறும் எந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது?

அ) பிப்ரவரி

ஆ) மார்ச்

இ) டிசம்பர்

ஈ) ஜனவரி

 • புவி மணிநேர நாளானது, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021), மார்ச்.27 அன்று புவி மணிநேர நாள் அனுசரிக்கப்ப -ட்டது. இது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
 • இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் இயற்கைசார்ந்த உலகளாவிய முயற்சிகளில் மக்கள் ஆற்றக்கூடிய பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாளாக இந்நாள் உள்ளது.

5. அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட ‘மிதாலி விரைவு’ என்ற புதிய பயணிகள் இரயிலானது டாக்காவையும் பின்வரும் எந்த இந்திய நகரத்தையும் இணைக்கிறது?

அ) புதிய ஜல்பைகுரி

ஆ) வாரணாசி

இ) ஜெய்ப்பூர்

ஈ) திருச்சிராப்பள்ளி

 • இந்தியப் பிரதமர் மோடியும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து அண்மையில், ‘மிதாலி எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய பயணிகள் இரயிலை தொடங்கி வைத்தனர். இது, மேற்கு வங்காளத்தின் டாக்கா கன்டோன்மென்ட்டையும் புதிய ஜல்பைகுரியையும் வங்காளதேசத்தின் எல்லைப்புற இரயில் நிலையமான சிலாகதி வழியாக இணைக்கிறது.
 • மைத்ரீ எக்ஸ்பிரஸ் (டாக்கா – கொல்கத்தா) மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் (குல்னா – கொல்கத்தா) ஆகியவற்றை தொடர்ந்து இது மூன்றாவது பயணிகள் இரயில் ஆகும்.

6. சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின் படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பழைய வாகனங்கள் உள்ள மாநிலம் எது?

அ) தெலுங்கானா

ஆ) மகாராஷ்டிரா

இ) கர்நாடகா

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

 • மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கர்நாடக மாநிலத்தில் பதினைந்தாண்டுக்கும் பழமையான அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் உள்ளன.
 • இந்தியாவில் இதுபோன்று நான்கு கோடிக்கும் அதிகமான பழைய வாகனங்கள் உள்ளன. அவற்றுள் எழுபது இலட்சம் வாகனங்களுடன் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

7. மத்திய தகவல் ஆணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி, அதி -கபட்சமாக கோரிக்கைகளை நிராகரித்த மத்திய அமைச்சகம் எது?

அ) வேளாண் அமைச்சகம்

ஆ) பாதுகாப்பு அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) வெளியுறவு அமைச்சகம்

 • மத்திய தகவலாணையத்தின் ஆண்டு அறிக்கையின்படி, 2019-20ஆம் ஆண்டில் அனைத்து தகவலறியும் உரிமை (RTI) கோரிக்கைகளிலும் 4.3% மட்டுமே மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புகளில் கிட்டத்தட்ட 40% எந்தவொரு சரியான காரணத்தையும் கொண்டிருக்க -வில்லை மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்குகளின்கீழ் வரவில்லை.
 • 90% நிராகரிப்புகள் பிரதமர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து தகவலறியும் உரிமை கோரிக்கைகளுள் இருபது சதவீதத்துடன், மத்திய உள்துறை அமைச்சகமானது மிகவதிகமான நிராகரிப்பு வீதங்களைக் கொண்டிருந்தது.

8. “சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

அ) இலங்கை

ஆ) வங்காளதேசம்

இ) நேபாளம்

ஈ) மியான்மர்

 • வங்காளதேசத்துடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்கவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு, “சாந்திர் ஓக்ரோஷேனா-2021” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, 2021 ஏப்.4 முதல் வங்காளதேசத்தில் தொடங்கவுள்ளது.
 • இது, இருபடைகளுக்கும் இடையில் நடைபெறும் 9 நாள் பயிற்சியாகும். மேலும், ‘வங்காளதேசத்தின் தந்தை – ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரகுமானின்’ பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் விதமாக இந்தப் பயிற்சியின் தொடக்க தேதி அமைக்கப்பட்டுள்ளது.

9. ‘வஜ்ர பிரகார் – 2021’ என்பது இந்தியாவின் சிறப்புப் படைகட்கும் வேறெந்நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் ராணுவப்பயிற்சியாகும்?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) ரஷியா

ஈ) பிரான்ஸ்

 • இந்திய சிறப்புப் படைகளானது, அமெரிக்காவின் சிறப்புப் படைகளுடன் இணைந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பக்லோவில் ஒரு கூட்டு இராணுவப்பயிற்சியை மேற்கொண்டன. இந்த கூட்டு சிறப்பு படைப் பயிற்சியின் பதினோராவது பதிப்பு, ‘வஜ்ர பிரகார் – 2021’ என்ற பெயரில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் நடைபெற்றது. 2021 பிப்ரவரியில், இவ்விரு நாடுகளின் படைகளும், ‘யுத் அபியாஸ்’ என்ற பயிற்சியை மேற்கொண்டன.

10. ‘ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்’ திறக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?

அ) IIT மெட்ராஸ்

ஆ) IISc, பெங்களூரு

இ) IIM ஜம்மு

ஈ) IIM அகமதாபாத்

 • மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஜம்மு இந்திய மேலாண்மை கழகத்தில் (IIM) “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்றவொன்றைத் திறந்து வைத்தார். மனவழுத்தத்தைக் கையாளவும், நேர்மறை எண்ணங்களை பரப்புவதற்கு மக்களுக்கு உதவுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.
 • இதன் முதன்மை நோக்கங்களாவன ஆலோசனை, முழுமையான நலன், மகிழ்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவம் & ஆசிரிய மேம்பாடு குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் என ஐந்து பரந்துபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்களிக்க 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று போதும்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க நிழற்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் தங்களது வாக்கினைச்செலுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்காளர்கள் தங்களது வாக்கினைச்செலுத்தலாம். தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம்:

1. ஆதார் அட்டை.

2. கடவுச்சீட்டு.

3. ஓட்டுநர் உரிமம்.

4. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வருவதற்கான நிழற்படத்துடன்கூடிய அடையாள அட்டை.

5. வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

6. தேசிய மக்கள்தொகை பதிவேடு அளித்துள்ள ஸ்மார்ட் அட்டை.

7. நூறு நாள் வேலை திட்டத்துக்கான அட்டை.

8. PAN (நிரந்தர கணக்கு எண்) அட்டை

9. தொழிலாளர் நலத்துறையின் சுகாதார காப்பீட்டு அட்டை.

10. நிழற்படத்துடன்கூடிய ஓய்வூதிய ஆவணம்.

11. நா.உ’கள், ச.ம.உ’களாக இருந்தால் அவர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.

வாக்காளர்கள் வழக்கமாக பயன்படுத்தும் நிழற்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை கையிலிருந்தால் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமில்லை.

2. வாக்குப் பதிவு நேரமும், நடைமுறைகளும்…

தேர்தல் வாக்குப் பதிவு நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.

2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகும்.

இரவு 7 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வரும் அனைவருக்கும் டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தலா 12 கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் கவச உடைகள் அளிக்கப்படும்.

மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் கரோனா பாதித்தோர் வாக்களிக்க வரலாம். அவர்கள் கரோனா கவச உடையை அணிந்துவருவது கட்டாயம்.

கரோனா நோய்த்தொற்று பாதித்தோர் வாக்களிக்க வரும்போது, வாக்குச் சாவடியில் உள்ள அனைவரும் கரோனா கவச உடையை அணிந்திருப்பர். இதர நடைமுறைகள் அனைத்தும் வாக்களிப்பின்போது பின்பற்றப்படுப -வையாகவே இருக்கும்.

3. ஜம்மு-காஷ்மீர்: உலகின் உயரமான இரயில்வே பாலத்தின் வளைவை கட்டமைக்கும் பணி நிறைவு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றுப் படுகையில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான இரயில் பாலத்தின் வளைவை கட்டமைக்கும் பணி நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றுப் படுகையில் இருந்து 359 மீ உயரத்தில் இரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. `1,486 கோடி மதிப்பில் 1.3 கிமீ நீளத்தில் கட்டப்பட்டுவரும் இப்பாலத்தை தாங்கும் இரும்பு வளைவை கட்டமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

4. கிழக்கிந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா கூட்டு கடற்படை பயிற்சி

இந்தியா உட்பட ‘QUAD’ அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகள், பிரான்சு -டன் இணைந்து கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய அளவிலான மூன்று நாள் கூட்டு கடற்படை பயிற்சியை தொடங்கின. இந்த நாடுகளிடையே கிழக்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

பிரான்ஸ் சார்பில் நடத்தப்படும் ‘லா பெரெளஸ்’ என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படையின் தாக்குதல் கப்பல்கள் சாத்புரா, கில்டன் ஆகியவற்றுடன் நீண்டதூர கண்காணிப்பு விமானந்தாங்கி போர்க்கப்பலான பி-8ஐ கப்பலும் பங்கேற்கிறது. இவை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுடன் பயிற்சியில் ஈடுபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டுப்பயிற்சியில் வான்வழித்தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் எதிர்ப்பு பயிற்சி, தரைவழி தாக்குதல் எதிர்ப்பு பயிற்சி, ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு வீரர்கள் பறந்து செல்லுதல் உள்ளிட்ட மேம்பட்ட மற்றும் சிக்கலான கடற்படை பயிற்கள் இடம்பெறும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமானதாகவும், அனைவருக்குமா
-னதாகவும் மாற்றுவது, பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலான நடைமுறைகளை அந்தப் பகுதியில் உறுதிபடுத்துவது ஆகியவையே இந்த கூட்டுப்பயிற்சியின் முக்கிய குறிக்கோளாகும்.

5. விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நாள்

உலகில் நாகரிகம் வளர்வதற்கு முன்பே, கிமு 776’இல் சில நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டில் நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் காலம் செல்லச்செல்ல, இப்போட்டியின் மதிப்பு குறைந்து பின்னர் ஒலிம்பிக் போட்டிகளே நின்றுபோனது.

இதைத்தொடர்ந்து நவீன யுகத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கிரேக்க நாட்டினர் 18ஆம் நூற்றாண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடக்கமாக உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பைரே டி குபெர்டின் என்பவர், நவீன ஒலிம்பிக் போட்டிக்கான அடிப்படை விதிகளை வகுத்தார். 1892ஆம் ஆண்டில் பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளிடம், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்குவதுபற்றி அவர் விவாதித்தார். இதைத்தொடர்ந்து 1894ஆம் ஆண்டில் நடந்த பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளின் கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 1896ஆம் ஆண்டு, ஏப்.6ஆம் தேதி முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸ் நகரத்தில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளிங், கத்திச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், தடகளம், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய 9 பிரிவுகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. 13 நாடுகளைச் சார்ந்த 241 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதல் நாளன்று நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை தாண்டும் போட்டி) அமெரிக்க தடகள வீரரான ஜேம்ஸ் கோனோளி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையைப்பெற்றார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற உயரந்தாண்டும் போட்டியிலும் பங்கேற்ற ஜேம்ஸ் கோனோளி, இதில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

6. சேதி தெரியுமா?

மார்ச் 26: வங்கதேச சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதையொட்டி வங்கதேசத்தின் டாக்கா – மேற்குவங்கத்தின் புதிய ஜல்பைகுரி இடையே புதிய பயணிகள் இரயில் தொடங்கப்பட்டது.

மார்ச் 28: ஒரு நாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய இணை என்கிற பெருமையை ரோஹித் சர்மா-ஷிகர் தவான் ஜோடி பெற்றது. இதற்கு முன் இந்தப் பெருமையை சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஜோடி பெற்றிருந்தது.

மார்ச் 29: சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ என்ற பெரிய கப்பல் ஒருவாரகால போராட்டத்துகுப்பிறகு மீட்கப்பட்டது. மண்ணள்ளிகள், இழுவை படகுகள்மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மார்ச் 30: உலகிலேயே முதன்முறையாக கரோனா தொற்றிலிருந்து விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும், “கார்னிவாக்-கோவ்” என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளது.

மார்ச் 31: இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி ஆகியவற்றை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்தது. இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை அந்நாடு கைவிடுவதாக அறிவித்தது. ஆனால், இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏப்.1: நாடு முழுவதும் 45 வயது மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

ஏப்.1: இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவுயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வுசெய்யப்பட்டார். ஏற்கனவே பத்மபூஷண், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

ஏப்.1: தமிழ்நாடு தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ ராசா, 48 மநே பரப்புரை மேற்கொள்ள தலைமைத்தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

7. இந்தியா, ஐக்கிய அமீரகம், இஸ்ரேல் இடையே 2030இல் முத்தரப்பு வர்த்தகம் `8 இலட்சம் கோடியாக உயரும்

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் & இசுரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு வர்த்தகம் 2030இல் `8 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-இஸ்ரேல் வர்த்தக சபையின் சர்வதேச கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்நாடுகளுக்கிடையிலான வர்த்தக சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

1. New bacteria found in the ‘International Space Station’ has been named after which Indian scientist?

A) Jagdish Chandra Bose

B) APJ Abdul Kalam

C) Ajmal Khan

D) CV Raman

 • In a recent research performed at the Jet Propulsion Laboratory (JPL), under a contract with NASA and University of Southern California, four strains of bacteria have been discovered at the ISS. The team of Scientists also included a team from India’s University of Hyderabad. One of the strains – Methylobacterium ajmalii, is named after Ajmal Khan, a renowned Indian scientist specialised in biodiversity.

2. Which country is to play host to the Asian Football Confederation (AFC) Women’s Asian Cup 2022?

A) UK

B) India

C) Sri Lanka

D) Bangladesh

 • India has bagged the hosting rights of the Asian Football Confederation 2022 Women’s Asian Cup for the first time since 1979. All India Football Federation President Praful Patel announced that the tournament will feature 12 teams, as compared to the previous slot of eight teams.
 • India will qualify to participate in the tournament directly as hosts. This event will also serve as the qualification tournament for the 2023 FIFA Women’s World Cup.

3. What is the new milestone reached by the Jal Jeevan Mission scheme across the country, as on March 31, 2021?

A) 1 Crore

B) 2 Crore

C) 4 Crore

D) 5 Crore

 • Jal Jeevan Mission was announced on 15th August, 2019, with the aim to provide tap water supply to every rural home by 2024. The scheme has recently reached a new milestone of providing over 4 Crore rural households with tap water supply. Goa has become the first State in the country to provide 100 per cent tap water supply.

4. ‘Earth Hour Day’ is annually observed on the last Saturday of which month?

A) February

B) March

C) December

D) January

 • Earth Hour, is being held annually on the last Saturday of March across the world. This year, the Earth Hour Day was observed on March 27. The Earth hour began as a symbolic lights–out event in Sydney by WWF and partners in 2007.
 • The event calls for actions to raise awareness about the importance of nature and the role people can play in global efforts for nature.

5. ‘Mitali Express’, a new passenger train which was inaugurated recently, connects Dhaka with which Indian city?

A) New Jalpaiguri B) Varanasi

C) Jaipur D) Tiruchirapalli

 • Prime Minister Narendra Modi and his Bangladeshi counterpart Sheikh Hasina has recently inaugurated the new passenger train named ‘Mithali Express’. It connects Dhaka Cantonment and New Jalpaiguri in West Bengal via Chilahati, a border railway station in Bangladesh. This is the third passenger train after Maitree Express (Dhaka–Kolkata) and Bandhan Express (Khulna–Kolkata).

6. Which state has the largest number of old vehicles in India, as per the recent Road Ministry Data?

A) Telangana

B) Maharashtra

C) Karnataka

D) Himachal Pradesh

 • As per the data released by the Union Ministry of Road Transport and Highways, Karnataka has the highest number of vehicles which are older than 15 years are plying on roads. The number of such vehicles pan India is more than four crore vehicles and Karnataka has topped the list with 70 lakh vehicles.

7. As per the annual report of the Central Information Commission, which Union ministry made the highest rejections of requests?

A) Agricultural Ministry

B) Defence Ministry

C) Home Ministry

D) External Affairs Ministry

 • According to the Central Information Commission’s annual report, the Centre has only rejected 4.3% of all Right to Information (RTI) requests in 2019–20. Almost 40% of these rejections did not include any valid reason and did not come under the permissible exemption clauses in the RTI Act.
 • 90% of rejections were done by the Prime Minister’s Office. Home Ministry had the highest rate of rejections, at 20% of all RTIs received.

8. “Shantir Ogroshena –2021” is a joint Military exercise between India and which country?

A) Sri Lanka

B) Bangladesh

C) Nepal

D) Myanmar

 • India is set to participate in a joint Military Exercise with Bangladesh. The exercise is named “Shantir Ogroshena –2021” and would commence in Bangladesh from 4th April 2021.
 • This is a nine–day exercise between the two armies, and the start date of the exercise marks to commemorate the birth centenary of Bangladesh Father of the Nation – Bangabandhu Sheikh Mujibur Rahman.

9. ‘VAJRA PRAHAR 2021’ is a military exercise held between the special forces of India and which other country?

A) United States of America

B) China

C) Russia

D) France

 • Special forces of India carried out a joint military exercise with the US Special forces at Bakloh in Himachal Pradesh.
 • The 11th edition of the joint special forces exercise ‘Vajra Prahar 2021’ was held with an aim to share the best practices and experiences in joint mission planning and operational tactics. In February 2021, the Armies of both the countries carried out ‘Exercise Yudh Abhyas’.

10. “Anandam: The Center for Happiness” has been inaugurated at which institution?

A) IIT Madras

B) IISc, Bengaluru

C) IIM Jammu

D) IIM Ahmedabad

 • Union Education Minister Ramesh Pokhriyal recently inaugurated “Anandam: The Center for Happiness” at the Indian Institute of Management (IIM), Jammu virtually. The Center aims to help people overcome mental stress and help spread positivity.
 • The prime objectives will be divided into five broad categories: Counselling, Holistic wellness, Elective courses on Happiness Development, Research and Leadership & Faculty Development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *