TnpscTnpsc Current Affairs

6th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

6th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கீழ்காணும் எந்த நகரத்தின் மூன்று மாநகராட்சிகளை ஒரே மாநகராட்சியாக இணைக்கும் மசோதா மக்களவை -யில் நிறைவேற்றப்பட்டது?

அ) மும்பை

ஆ) தில்லி 

இ) கொல்கத்தா

ஈ) சென்னை

  • சிறந்த திட்டமிடல் மற்றும் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காக, தில்லியின் 3 மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், தில்லி மாநகராட்சிகள் (திருத்த) மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.
  • இந்த மசோதாவின்மூலம், புதிய மாநகராட்சியின் கூட்டம் நடைபெறும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் செயல்பாடுகளை நிறைவேற்றும் ஒரு ‘சிறப்பு அதிகாரி’ஐ நியமிக்க மத்திய அரசு முன்மொழிந்தது. இந்த மசோதா ஒருங்கிணைந்த அம்மாநகராட்சிக்கு கூடுதல் தன்னாட்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. 2022இல், சுவிஸ் ஓப்பன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியில் வென்ற இந்திய வீரர் / வீராங்கனை யார்?

அ) K ஸ்ரீகாந்த்

ஆ) P V சிந்து 

இ) சாய்னா நேவால்

ஈ) H S பிரணாய்

  • பாசலில் நடந்த சுவிஸ் ஓப்பன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற P V சிந்து, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானைத் வீழ்த்தி வெற்றி பெற்றார். P V சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்களில் பாசலில் தனது 2ஆவது பட்டத்தை வென்றார்.
  • முன்னதாக ஜனவரி மாதம் நடந்த சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் சிந்து வெற்றி பெற்றார். பாசலில் நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் H S பிரணாய், ஜொனாதன் கிரிட்டியிடம் தோல்வியடைந்தார்.

3. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் ஆறாவது கட்டம், எந்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ) ஜூன் 2022

ஆ) மே 2022

இ) ஆகஸ்ட் 2022

ஈ) செப்டம்பர் 2022 

  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், PMGKAY-ஐ 2022 செப்டம்பர் வரை நீட்டிக்க முடிவுசெய்துள்ளது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் (PMGKAY)கீழ், ஐந்து கிகி உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி, குருணை) மாதந்தோறும் ஒவ்வொரு பயனாளிக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. திட்டத்தின் Vஆம் கட்டம் 2022 மார்ச் மாதத்தில் முடிவடைய இருந்தது.

4. ‘பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை தொழில்நுட்ப பூங்கா’ திறக்கப்பட்டுள்ள மாநிலம்/UT எது?

அ) தமிழ்நாடு

ஆ) புது தில்லி 

இ) மத்திய பிரதேசம்

ஈ) இராஜஸ்தான்

  • இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தின் ‘வேஸ்ட் டூ வெல்த்’ திட்டம், கிழக்கு தில்லியில் ‘பரவலாக்கப்பட்ட கழிவுமேலாண்மை தொழில் நுட்ப பூங்காவைத் திறந்துள்ளது.
  • கீழை தில்லி மாநகராட்சியுடன் இணைந்து புதிய மாநகரா -ட்சி திடக்கழிவுகளை அங்கேயே செயலாக்குவதற்காக இது திறக்கப்பட்டது.

5. 2022 – சன்சத் இரத்னா விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் APJ அப்துல்கலாம் விருதைப் பெற்றவர்கள் யார்?

அ) Dr H V ஹண்டே மற்றும் வீரப்ப மொய்லி 

ஆ) H D தேவகௌவுடா மற்றும் வீரப்ப மொய்லி

இ) Dr H V ஹண்டே மற்றும் S M கிருஷ்ணா

ஈ) H D தேவகௌவுடா மற்றும் S M கிருஷ்ணா

  • சன்சத் இரத்னா விருதுகள் குழுவின் 12ஆவது அமர்வின் போது, தமிழ்நாடு சட்டமன்றத்தின் 95 வயதான மூத்த ச ம உ-உம், முன்னாள் சுகாதார அமைச்சருமான Dr H V ஹண்டேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் APJ அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
  • கர்நாடக மானியல் முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி அவர்கட்கும் இவ்விருது வழங்கப்பட்டது. பிரைம் பாயின்ட் அறக்கட்டளையால் வழங்கப்பட்ட 2022 – சன்சத் ரத்னா விருதுகளில் கௌரவிக்கப்பட்ட 11 MP-களில் சுப்ரியா சுலே மற்றும் அமர் பட்நாயக் ஆகியோர் அடங்குவர்.

6. 2022ஆம் ஆண்டு புவி மணிநேரத்தின் கருப்பொருள் என்ன?

அ) Shape our Future 

ஆ) Stand for Environment

இ) Save our Children

ஈ) Decarbonise the Planet

  • புவி நேரம் மார்ச் 26 அன்று இரவு 8:30 முதல் 9:30 மணி வரை அனுசரிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்கள் 1 மநேரம் வரை தேவையற்ற விளக்குகளை அணைத்து, காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும், சுற்றுச்சூழலுக்கான உலகின் ஒரு மிகப்பெரிய இயக்கம் இது. இது 2007-இல் சிட்னியில் ஒரு குறியீட்டு நிகழ்வாகத் தொடங்கியது. பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமையன்று 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுசரிக்கப்பட்டது.

7. கில்பர்ட் F ஹூங்போ, எந்த உலகளாவிய அமைப்பின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) UNEP

ஆ) ILO

இ) IMF

ஈ) WEF

  • ILO ஆளும் குழு கில்பர்ட் F ஹூங்போவை அமைப்பின் 11ஆவது தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுத்துள்ளது. தற்போது, உழவு மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் தலைவராக இருக்கும் ஹூங்போ, 2022 அக்டோபரில் பதவியேற்கவுள்ளார்.
  • ILOஇன் தலைமை இயக்குநர் பதவியை வகிக்கும் முதல் ஆப்பிரிக்கராவார் இவர். ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த தற்போதைய தலைமை இயக்குநர் கை ரைடர், 2012 முதல் பதவி வகித்து வருகிறார்.

8. 2022 – WINGS இந்தியா நிகழ்வில், ‘COVID சாம்பியன்’ விருதை வென்ற வானூர்தி நிலையம் எது?

அ) சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆ) கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் 

இ) இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஈ) கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்

  • 2022 – WINGS இந்தியா நிகழ்வில், கொச்சின் பன்னாட்டு வானூர்தி நிலையமானது ‘COVID சாம்பியன்’ விருதை வென்றது. இது சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் மற்றும் FICCI இணைந்து நடத்தும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடர்பான ஆசியாவின் மிகப்பெரிய நிகழ்வாகும். கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதற்காக COVID தொற்றுபோது ‘Mission Safeguarding’ என்ற திட்டத்தை செயல்படுத்தியதற்காக கொச்சி விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

9. 2022 – SAFF U-18 மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?

அ) வங்காளதேசம்

ஆ) இந்தியா 

இ) இலங்கை

ஈ) ஜப்பான்

  • வங்காளதேசத்திடம் 0-1 என்ற கணக்கில் வீழ்ந்தாலும், 2022 – SAFF U-18 மகளிர் சாம்பியனாக இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சிறப்பான கோல் வித்தியாசம் காரணமாக இம்முடிவு அறிவிக்கப்பட்டது.
  • வங்காளதேசத்தின் +3 உடன் ஒப்பிடுகையில் இந்தியா +11 என்ற சிறந்த கோல் வித்தியாசத்தை கொண்டிருந்தது. போட்டியின் மதிப்புமிக்க வீராங்கனை மற்றும் அதிக கோல் அடித்தவராக லிண்டா கோம் இருந்தார். அவர் 5 கோல்களை அடித்திருந்தார்.

10. ‘நலகர் மருத்துவ சாதன பூங்கா’ என்பது எந்த இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் திட்டமாகும்?

அ) சிக்கிம்

ஆ) ஹிமாச்சல பிரதேசம் 

இ) ஜம்மு-காஷ்மீர்

ஈ) பீகார்

  • சோலன் மாவட்டத்தில் உள்ள நலகர் என்ற இடத்தில் அமையவிருக்கும் மருத்துவ சாதன பூங்காவின் அறிவுசார் பங்காளராக இருப்பதற்காக ஹிமாச்சல பிரதேச அரசு, மொகாலியின் தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (NIPER) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மின்னல் பற்றி எச்சரிக்கை செய்ய டாமினி செயலி

2020இல் டாமினி மின்னல் செயலிகளை புனே ஐஐடிஎம் உருவாக்கியது. இந்தச் செயலி இந்தியா முழுவதுமான மின்னல்பற்றிய தகவல்களை கண்காணித்து 20 கிமீ மற்றும் 40 கிமீ சுற்றுவட்டாரத்தில் ஜிபிஎஸ் அறிவிப்புடன் மின்னல் பற்றிய எச்சரிக்கையை வெளியிடுகிறது.

அடுத்த 40 நிமிடங்களில் மின்னல் உருவாகும் இடம் பற்றிய எச்சரிக்கையையும் அது அளிக்கிறது. இந்தச் செயலியை இந்தியா முழுவதும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

2. பார்சலை வீடு வீடாக அனுப்பவிருக்கும் இரயில்வே

இந்தியா போஸ்ட் மற்றும் இந்திய ரயில்வே இணைந்த பார்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. பார்சலை வாங்கும் இடத்திலும், பார்சலை கொடுக்கும் இடத்திலும் அஞ்சல் துறை சேவை செய்யும். இந்தப் பார்சலை இரயில் நிலையங்களுக்கிடையே கொண்டுசெல்லும் சேவையை இரயில்வே செய்யும்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் வணிகர்களிடமிருந்து வணிகர்களுக்கு மற்றும் வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதாகும். அதாவது அனுப்புகின்றவரின் இடத்திலிருந்து கொண்டுசென்று பெறுகின்றவரின் இடத்தில் அளிப்பதாகும்.

முன்னோட்ட அடிப்படையில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் முதல் சேவை 2022 மார்ச் 31இல் சூரத்- வாரணாசி இடையே நடைபெற்றது.

3. தமிழ்நாட்டுக்கு என தனித்த கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு: முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டு அரசுக்கென தனித்த கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். அவரது அறிவிப்பு விவரம்:

இந்தக்குழுவின் தலைவராக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த முருகேசன் செயல்படுவார்.

4. பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டுக்கு `440 கோடி

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 2021-22-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு `440 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு மார்ச்.31 வரை நாடு முழுவதும் 7,88,185 கிமீ சாலைகள் மற்றும் 9,509 பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 7,01,205 கிமீ சாலைகள் மற்றும் 6,852 பாலங்களை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு 2018-19 ஆண்டில் `619.14 கோடி, 2019-20 ஆண்டில் `308.46 கோடி, 2020-21 ஆண்டில் `265.38 கோடி, 2021-22-இல் `440 கோடி வழங்கப்பட்டுள்ளது.

5. ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் சங்க காலத்தைச் சேர்ந்த நெல் உமிகள் கண்டெடுப்பு: மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த முது மக்கள்தாழியில் இருந்து அதிகளவில் நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய தொல்லியல் துறை சார்பில், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி கடந்த 2021 அக்டோபரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 62-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. குடுவைகள், பானைகள், இரும்புப்பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அகழாய்வுப் பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வு நடைபெறும் மூன்று பகுதிகளில் ஓர் இடம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. கடந்த 1902ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா என்ற ஆங்கிலேயர் அகழாய்வு செய்த இடத்தின் அருகே, இந்த அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

இந்தத் தாழியிலிருந்து, நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தாழியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மண் கலயங்கள், சிறுபானைகள், இரும்பு வாள் ஆகியவை கிடைத்தன. எனவே, பழங்காலத்தில் வாழ்ந்த தலைவன் அல்லது போர்வீரனின் தாழியாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தப் பணி விரைவில் நிறைவுற்று, அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. The Lok Sabha passed a bill to merge three municipal corporations of which city into a single entity?

A) Mumbai

B) Delhi 

C) Kolkata

D) Chennai

  • The Lok Sabha passed the Delhi Municipal Corporation (Amendment) Bill seeks to unify the three municipal corporations of Delhi into a single and integrated entity, for better planning and optimal utilisation of resources. Through the bill, the Centre proposed to appoint a ‘Special officer’ who will discharge the functions of the elected wing of councillors till the meeting of the new corporation is held. The bill is expected to give more autonomy to the unified corporation.

2. Which Indian player won the Swiss Open Super 300 badminton tournament in 2022?

A) K Srikanth

B) P V Sindhu 

C) Saina Nehwal

D) HS Prannoy

  • Double Olympic medallist PV Sindhu defeated Thailand’s Busanan Ongbamrungphan to win the Swiss Open Super 300 badminton tournament in Basel.
  • P V Sindhu won her second title in Basel in straight games with a score–line of 21–16, 21–8. Sindhu earlier won the Syed Modi India International in January. India’s HS Prannoy lost the men’s singles final in Basel to Jonathan Chritie.

3. The sixth phase of the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY) has been extended till which month?

A) June 2022

B) May 2022

C) August 2022

D) September 2022 

  • The Union Ministry of Consumer Affairs, Food and Public Distribution chaired by Prime Minister Narendra Modi, has decided to extend the PMGKAY till September 2022.
  • Under the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY), 5 kg of food grains (wheat, rice, coarse grain) is provided to each beneficiary each month free of cost. Phase–V of the scheme was to end in March 2022.

4. ‘Decentralised Waste Management Technology Park’ has been inaugurated at which state/UT?

A) Tamil Nadu

B) New Delhi 

C) Madhya Pradesh

D) Rajasthan

  • The Waste to Wealth Mission of the Office of the Principal Scientific Adviser to the Government of India, has inaugurated Decentralised Waste Management Technology Park in East Delhi. It was inaugurated in collaboration with the East Delhi Municipal Corporation (EDMC), for onsite processing of fresh Municipal solid waste.

5. Who were the recipients of Lifetime Achievement APJ Abdul Kalam Award at the Sansad Ratna Awards 2022?

A) Dr H V Hande and Veerappa Moily 

B) H D Deve Gowda and Veerappa Moily

C) Dr H V Hande and S M Krishna

D) H D Deve Gowda and S M Krishna

  • During the 12th session of the Sansad Ratna Awards Committee, the inaugural Lifetime Achievement APJ Abdul Kalam Award given to 95–year–old veteran MLA of the Tamil Nadu assembly, Dr H V Hande, a former health minister.
  • Former Karnataka chief minister Veerappa Moily, veteran MLA and MP, was also the recipient of this award. Supriya Sule and Amar Patnaik are among 11 MPs who were honoured at the Sansad Ratna Awards 2022, awarded by the Prime Point Foundation.

6. What is the theme of the Earth Hour in 2022?

A) Shape our Future 

B) Stand for Environment

C) Save our Children

D) Decarbonise the Planet

  • Earth Hour was observed from 8:30 to 9:30 p.m on March 26. It is the world’s largest movement for the environment where people across the globe unite to take a stand against climate change by turning off non–essential lights for one hour.
  • It commenced as a symbolic light–out event in Sydney in 2007, and then was observed every year on the last Saturday of March in more than 180 countries.

7. Gilbert F Houngbo has been elected as the Director–General of which global organisation?

A) UNEP

B) ILO 

C) IMF

D) WEF

  • The ILO Governing Body has elected Gilbert F. Houngbo as the Organization’s 11th Director–General. Houngbo, who is currently President of the International Fund for Agricultural Development (IFAD), will assume office in October 2022. He is also the first African to hold the Director–General post of ILO. The current Director–General, Guy Ryder, from the United Kingdom, has held the office since 2012.

8. Which Airport won the ‘Covid champion’ award at Wings India 2022 event?

A) Chhatrapati Shivaji International Airport

B) Cochin International Airport 

C) Indira Gandhi International Airport

D) Kempegowda International Airport

  • The Cochin International Airport Limited (CIAL) has bagged the ‘Covid champion’ award at Wings India 2022. It is Asia’s largest event on civil aviation jointly organised by the Ministry of Civil Aviation and FICCI.
  • CIAL was selected for the implementation of a project named ‘Mission Safeguarding’ during the Covid pandemic to ensure safe travel at Kochi Airport.

9. Which country is the winner of 2022 SAFF U–18 Women’s Championships?

A) Bangladesh

B) India 

C) Sri Lanka

D) Japan

  • Indian Team emerged as the Champions of the 2022 SAFF U–18 Women’s Championships, despite losing 0–1 to Bangladesh. The result was declared because of a better goal difference. India enjoyed a better goal difference of +11 in comparison to +3 of Bangladesh.
  • The valuable player of the tournament and the highest goal scorer was Lynda Kom who scored five goals.

10. ‘Nalagarh Medical Devices Park’ is a project of which Indian state/UT?

A) Sikkim

B) Himachal Pradesh 

C) Jammu and Kashmir

D) Bihar

  • The Himachal Pradesh Government signed a Memorandum of Understanding with National Institute of Pharmaceutical Education and Research (NIPER), Mohali as knowledge partner for the upcoming Medical Devices Park at Nalagarh in Solan district.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!