Tnpsc

6th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான எல்லை வரையறை ஆணையத்தின் தலைவர் யார்?

அ) ஏ.கே.சிக்ரி

ஆ) ரஞ்சன் கோகோய்

இ) ரஞ்சனா தேசாய்

ஈ) கே வி காமத்

  • 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டு 2019 ஆகஸ்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற 6 மாதங்களுக்குப் பிறகு வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது.
  • இந்த ஆணையத்திற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமை தாங்குகிறார். சமீபத்தில் இந்த ஆணைக்குழு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனைத்து 20 மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது. பிரதமர் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன்னதாக இது நடைபெற்றது.

2. டிராகுனோவ் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை இந்திய இராணுவத்திற்கு வழங்கிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) இஸ்ரேல்

ஈ) ஜப்பான்

  • இந்திய இராணுவமானது 1990’களில் ரஷ்யாவிலிருந்து டிராகுனோவ் என்ற குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை வாங்கியது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தற்கால துப்பாக்கிகளைவிட இது பழையதாகும்.
  • சமீபத்தில், டிராகுனோவ் துப்பாக்கியின் நவீன வடிவத்தினை இந்திய இராணுவத்திடம் வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.

3. இந்திய வான்படையும் இந்திய கடற்படையும் பின்வரும் எந்த நாட்டின் கடற்படையுடன் இணைந்து திருவனந்தபுரத்திற்கு தெற்கே ‘பாஸேஜ்’ என்ற பயிற்சியில் பங்கேற்றன?

அ) அமெரிக்கா

ஆ) ஆஸ்திரேலியா

இ) பிரான்ஸ்

ஈ) ஜப்பான்

  • இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை அமெரிக்க கடற்படையின் கேரியர் ஸ்ட்ரைக் குழுவுடன் இணைந்து ‘பாஸேஜ்’ என்றவொரு பயிற்சியில் பங்கேற்றன. திருவனந்தபுரத்திற்கு தெற்கே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய முன்னணியில், சுகோய் விமானம், ஜாகுவார்ஸ், எரிபொருள் நிரப்பும் வானூர்தி மற்றும் போர்க் கப்பல்கள் மற்றும் கடற்புற ரோந்து வானூர்திகள் பங்கேற்றன.

4. ஹுருன் ஆராய்ச்சி & எடெல்கிவ் அறக்கட்டளை அறிக்கையின்படி, கடந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய கொடையாளி யார்?

அ) ஜாம்செட்ஜி டாடா

ஆ) முகேஷ் அம்பானி

இ) பில் கேட்ஸ்

ஈ) ரஜினிகாந்த்

  • ஹுருன் ஆராய்ச்சி மற்றும் எடெல்கிவ் அறக்கட்டளை அறிக்கையின்படி, இந்தியாவின் தொழிலதிபரும் டாடா குழும நிறுவனருமான ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா, கடந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய கொடையாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், $102.4 பில்லியன் மதிப்புள்ள நன்கொடைகளை வழங்கியுள்ளார். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். விப்ரோ நிறுவனர் மற்றும் தலைவரான அசிம் பிரேம்ஜி, பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளார்.

5. பின்வரும் எந்த நிறுவனத்துடன் மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் இணைக்கப்படவுள்ளது?

அ) மத்திய கிடங்கு கழகம்

ஆ) ஐ.ஆர்.சி.டி.சி.

இ) ஜி.எஸ்.ஆர்.இ லிமிடெட்

ஈ) என்டிபிசி

  • “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை” என்பதற்கு இணங்கவும், எளிதாக தொழில்புரிவதை மேம்படுத்தவுமாக, மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் மற்றும் மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்மூலம் இந்நிறுவனங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் உரிமைகள் ஒன்றாக இணைக்கப்படும். இந்த இணைப்பு, இரு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் இணையும்.

6. கடந்த 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓர் உயர்நிலை ஆலோசனைக்குழுவான MSDC உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்

இ) கல்வி அமைச்சகம்

ஈ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • கடல்சார் மேம்பாட்டு கவுன்சில் (MSDC) என்பது கடந்த 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓர் உயர்நிலை ஆலோசனைக் குழுவாகும். அது, முதன்மை மற்றும் முதன்மையற்ற துறைமுகங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதாகும்.
  • சமீபத்தில், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்கான மத்திய இணையமைச்சர் காணொளிவழியில் MSDC’இன் 18ஆவது கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். ‘இந்திய துறைமுக மசோதா-2021’ ஆனது கடலோரப்பகுதியின் உகந்த மேலாண்மை மற்றும் பயன்பாட்டை உறுதிசெய்யும் என அவர் எடுத்துரைத்தார்.

7. டோக்கியோ 2020’இல் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலின் இசையமைப்பாளர் யார்?

அ) ஏ ஆர் ரஹ்மான்

ஆ) மோஹித் சவுகான்

இ) விஷால் தத்லானி

ஈ) சங்கர் மகாதேவன்

  • டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய ஒலிம்பிக்குழுவின் பாடலை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புது தில்லியில் அறிமுகப்படுத்தினார்.
  • இந்தப் பாடலை பாடகர் மோஹித் சவுகான் இசையமைத்து, பாடியுள்ளார். டோக்கியோ போட்டிகளில், 100’க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?

அ) இந்தியா

ஆ) நியூசிலாந்து

இ) ஆஸ்திரேலியா

ஈ) இங்கிலாந்து

  • ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து, இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியனானது. இது, இருபதாண்டுகளில் நியூசிலாந்து வெல்லும் முதல் ஐ.சி.சி பட்டம் ஆகும். இறுதிப்போட்டியன்று நியூசிலாந்து 139 ரன்கள் இலக்கை, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எடுத்தது.

9. ஐநா தரவுகளின்படி, நடப்பு 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள கைம்பெண்களின் எண்ணிக்கை என்ன?

அ) 25 மில்லியன்

ஆ) 258 மில்லியன்

இ) 56 மில்லியன்

ஈ) 568 மில்லியன்

  • பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், கைம்பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக, ஐநா பொது அவை, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜூன்.23’ஐ பன்னாட்டு கைம்பெண்கள் நாள் என அறிவித்தது. இந்த நாள், இணையை இழந்த பெண்களுக்கு ஆதரவு காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, உலகெங்கும் 258 மில்லியன் கைம்பெண்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பத்தில் ஒருவர் கடுமையான வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

10. ‘எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்’ என்பது எந்த அமைப்புடன் இணைந்த UNDP’இன் முன்னெடுப்பாகும்?

அ) OECD

ஆ) IMF

இ) UNESCO

ஈ) UNICEF

  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமும் (UNDP) பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பும் (OECD) இணைந்து, பூட்டான் நாட்டில் “எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்” என்ற கூட்டு முயற்சியைத் தொடங்கின. இந்த முன்னெடுப்புக்கு, இந்தியாவும் ஒரு கூட்டாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பூட்டான் நாட்டுக்கு அதன் வரி நிர்வாகத்தை வலுப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மறைவு

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் காலமானார். எல்கர் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மனித உரிமை ஆர்வலருமான அவர் உயிரிழந்தார்.

2. டோக்கியோ ஒலிம்பிக்: மேரி கோம், மன்பிரீத் சிங் கொடியேந்துகின்றனர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியேந்திச் செல்லவுள்ளனர். அதேபோல், நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய கொடியேந்திச் செல்ல இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. இந்த முடிவு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. புதிய வானிலை ஆய்வு செயற்கைக்கோள்: வெற்றிகரமாக செலுத்தியது சீனா

புதிய வானிலை ஆய்வு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், கடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்திருப்பது: 11 செயற்கை உணர்திறன் கருவிகள் கொண்ட FY-3இ என்ற அச்செயற்கைக்கோள் வடமேற்கு சீனாவில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து லாங் மார்ச் 4-சி ஏவுகணைமூலம் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது.

8 ஆண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள், வளிமண்டல வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றைக் கண்காணிக்கும். மேலும், வானிலை பேரழிவுகளைத் தடுக்கும் வகையில் உலகளாவிய பனிப்படலம், கடல்நீர் வெப்பநிலை, இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றையும் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Who is the head of the Delimitation commission on Jammu and Kashmir?

A) AK Sikri

B) Ranjan Gogoi

C) Ranjana Desai

D) K V Kamath

  • The Delimitation commission was set up six months after the abrogation of Article 370 and withdrawal of J&K’s special status in August 2019. The commission is headed by retired Supreme Court judge Justice Ranjana Desai.
  • Recently, the Commission held a meeting with deputy commissioners (DCs) of all 20 districts in J&K. This is ahead of the all–party meeting called by the Prime Minister, with the leaders from J&K.

2. Which country supplied Dragunov sniper rifles to the Indian Army?

A) USA

B) Russia

C) Israel

D) Japan

  • Indian Army procured Dragunov sniper rifles from Russia in the 1990s. The rifles have fallen behind contemporary snipers used across the world. Recently, Russia agreed to offer the Indian Army, a comprehensive upgrade of the Dragunov sniper rifle.

3. Indian Air Force and Indian Navy have participated in a ‘Passage–Exercise’ south of Thiruvananthapuram, with which country’s Naval force?

A) USA

B) Australia

C) France

D) Japan

  • The Indian Air Force (IAF) and Indian Navy participated in a passage exercise with the carrier strike group (CSG) of the US Navy. This exercise was carried out south of Thiruvananthapuram on the western seaboard. On Indian front, Sukhoi aircraft, Jaguars, IAF refuelling aircraft and warships and maritime patrol aircrafts participated.

4. As per Hurun Research and EdelGive Foundation report, who is the world’s biggest philanthropist of the last century?

A) Jamsetji Tata

B) Mukesh Ambani

C) Bill Gates

D) Rajinikanth

  • As per Hurun Research and EdelGive Foundation report, India’s industrialist and Tata Group founder Jamsetji Nusserwanji Tata has been declared to be world’s biggest philanthropist of the last century.
  • He has made donations worth $102.4 billion. Bill and Melinda Gates have been ranked the second. Wipro Founder and Chairman Azim Premji has been ranked at 12th position in the list.

5. Central Railside Warehouse Company Ltd (CRWC) is set to be merged with which entity?

A) Central Warehousing Corporation

B) IRCTC

C) GSRE Ltd

D) NTPC

  • The Union Cabinet headed by Prime Minister Narendra Modi has approved the merger of Government owned Central Railside Warehouse Company Ltd (CRWC), with its holding company Central Warehousing Corporation (CWC). This decision has been made in line with the ‘Minimum Government, Maximum Governance’ policy of the Government, as spelt out in Budget 2021–22.

6. MSDC, an apex advisory body, formed in 1997, is associated with which Ministry?

A) Ministry of Skill Development

B) Ministry of Port, Shipping and Waterways

C) Ministry of Education

D) Ministry of Electronics and IT

  • Maritime State Development Council (MSDC) is an apex advisory body formed in 1997, for the development of the Major and non–Major Ports. Recently, Union Minister of State (I/C) for Port, Shipping and Waterways Mansukh Mandaviya chaired the 18th meeting of MSDC through a video conference.
  • He highlighted that the ‘Indian Port Bill 2021’ will ensure optimum management and utilization of the coastline.

7. Who is the composer of the official theme song of the Indian Olympic Team of Tokyo 2020?

A) A R Rahman

B) Mohit Chauhan

C) Vishal Dadlani

D) Shankar Mahadevan

  • Union Minister for Youth Affairs and Sports Kiren Rijiju launched the official theme song of the Indian Olympic Team of Tokyo 2020. The song has been composed and sung by popular playback singer Mohit Chauhan. Over 100 athletes are expected to represent India at the Tokyo Games.

8. Which country won the inaugural ICC World Test Championship?

A) India

B) New Zealand

C) Australia

D) England

  • New Zealand beat India in the inaugural ICC World Test Championship (WTC) Final to become the first World Test Champion. This is New Zealand’s first ICC title in two decades.
  • New Zealand chased down the 139–run target with eight wickets in hand on the reserve day of the final.

9. As per the UN data, what is the estimated number of widows across the world, as of 2021?

A) 25 million

B) 258 million

C) 56 million

D) 568 million

  • To empower women and safeguard the rights of widows, the UN General Assembly adopted a resolution and declared June 23 as International Widows Day. International Widows Day is aimed at showing solidarity with women who have lost their partners. As per the United Nations, there are an estimated 258 million widows around the world, and nearly one in ten live in extreme poverty.

10. ‘Tax Inspectors Without Borders’ is an initiative of UNDP in association with which organization?

A) OECD

B) IMF

C) UNESCO

D) UNICEF

  • The United Nations Development Programme (UNDP) and the Organisation for Economic Cooperation and Development (OECD) have launched a joint initiative named Tax Inspectors Without Borders (TIWB) in Bhutan. For this initiative, India has been chosen as a Partner Jurisdiction. This programme aims to aid Bhutan in strengthening its tax administration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!