TnpscTnpsc Current Affairs

6th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

6th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. COVID-19’ஐ நிர்வகிப்பதற்கான AYUSH நடைமுறைகளின் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்ட நிறுவனம் எது?

அ. AIIMS

ஆ. ஆயுஷ் அமைச்சகம்

இ. NITI ஆயோக் 

ஈ. WHO

  • COVID-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் மேலாண்மையில், நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் AYUSH அடிப்படையிலான சிகிச்சைபற்றிய தகவல்களின் தொகுப்பை NITI ஆயோக் அண்மையில் வெளியிட்டது.

2. ‘பரிக்ஷா சங்கம்’ என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. UGC

ஆ. CBSE 

இ. NTA

ஈ. IGNOU

  • மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) ‘பரிக்ஷா சங்கம்’ என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்குமான ஒரே தளமமாக இவ்விணையதளம் செயல்படும். பள்ளிகள் (கங்கை), பிராந்திய அலுவலகங்கள் (யமுனை) மற்றும் தலைமை அலுவலகம் (சரசுவதி) என மூன்று பகுதிகளை இது கொண்டுள்ளது.

3. உற்பத்தி நிறுவனங்களுக்கான OBICUS (Order Books, Inventories மற்றும் Capacity Utilisation) கணக்கெடுப்பை நடத்துகிற நிறுவனம் எது?

அ. DPIIT

ஆ. FICCI

இ. RBI 

ஈ. DIPAM

  • இந்திய ரிசர்வ் வங்கி அதன் OBICUS (Order Books, Inventories மற்றும் Capacity Utilisation) கணக்கெடுப்பின் அடுத்த சுற்றைத் தொடங்கியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் பணவியல் கொள்கையாக்கத்திற்கான மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்குகின்றன. OBICUS-இன் 58ஆவது சுற்று 2022 ஏப்ரல் – ஜூன் காலகட்டத்திற்கானதாகும். இக்கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், குறிப்பு காலாண்டில் பெறப்பட்ட புதிய பணிப்புகள், பணிப்புகளின் பின்னுறுத்தல், நிலுவையில் உள்ள மற்றும் மொத்த சரக்குகளின் தரவு ஆகியவற்றை கொண்டிருக்கும்.

4. இந்தியாவில் தேசிய நுகர்வோர் உதவி அழைப்பு எண் யாது?

அ. 1980

ஆ. 1998

இ. 1915

ஈ. 1812

  • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமானது உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் உணவுக்கட்டணத்தில் ‘தாமாகவோ அல்லது இயல்பாகவோ’ சேவைக் கட்டணத்தைச் சேர்ப்பதைத் தடைசெய்துள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கூற்றுப்படி, இது குறித்த புகார்களை தேசிய நுகர்வோர் உதவி அழைப்பு மைய எண்ணான 1915 அல்லது NCH திறன்பேசி செயலிமூலம் அளிக்கலாம்.

5. மெட்ராஸ் ஐஐடி உருவாக்கிய ‘ஹோமோசெப்’ என்ற ரோபோவின் தனித்துவமான அம்சம் என்ன?

அ. குழந்தைகளில் நிமோனியாவைக் கண்டறிகிறது

ஆ. கழிவுநீர் தொட்டிகளை சுத்தஞ்செய்வது

இ. டவுன் நோய்க்குறியைக் கண்டறிகிறது

ஈ. மின்னணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்கிறது

  • மனித ஈடுபாடு இல்லாமல் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தஞ்செய்யும் ரோபோவை மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘HomoSEP’ எனப் பெயரிடப்பட்ட இதன் தயாரிப்பிற்கும் மேம்பாட்டிற்கும் GAIL (இந்தியா) உதவி புரிந்தது. முதற்கட்டமாக தமிழ்நாடு முழுமைக்கும் பத்து அலகுகள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கையால் தூய்மைப்படுத்தும் முறையை ஒழிக்கும் நோக்கோடு இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

6. சர்வதேச கடலோர தூய்மைப்படுத்துதல் நாள் கொண்டாடப்படுகிற மாதம் எது?

அ. ஜூன்

ஆ. ஜூலை

இ. ஆகஸ்ட்

ஈ. செப்டம்பர் 

  • ‘அமுதப்பெருவிழா’வின் நினைவாக நாட்டின் 75 கடற்கரைகளை சுத்தஞ்செய்யும் வகையில் இந்தியா தனது கடற் கரையைச் சுத்தஞ்செய்யும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. 2022 ஜூலை.3ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை 75 நாட்களுக்கு நாடு முழுவதும் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்படும்; இது சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கடற்கரையோரங்களிலிருந்து ஆயிரத்து ஐந்நூறு டன் குப்பைகளை அகற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

7. 110ஆவது பன்னாட்டு தொழிலாளர் மாநாட்டின் முழு அமர்வு நடைபெறும் இடம் எது?

அ. ஜெனீவா 

ஆ. பாரிஸ்

இ. சென்னை

ஈ. கோயம்புத்தூர்

  • நடுவண் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஜெனிவாவில் 110ஆவது பன்னாட்டு தொழிலாளர் மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றினார். பன்னாட்டு தொழிலாளர் மாநாடு பன்னாட்டு தொழிலாளர் தரநிலைகள் மற்றும் ILOஇன் பரந்த கொள்கைகளை அமைக்கிறது. 187 ILO உறுப்புநாடுகளைச்சேர்ந்த அரசாங்கங்கள், பணியமர்த்துநர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் மிகப்பெரிய சர்வதேசக் கூட்டம் இதுவாகும்.

8. UNESCO உலக உயிர்க்கோளக் காப்பகங்களில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட குவ்ஸ்குல் ஏரி தேசியப்பூங்கா அமைந்து உள்ள நாடு எது?

அ. உக்ரைன்

. மங்கோலியா 

இ. சிலி

ஈ. மெக்ஸிக்கோ

  • மங்கோலியாவின் குவ்ஸ்குல் ஏரி தேசியப்பூங்கா சமீபத்தில் UNESCOஇன் உயிர்க்கோளக் காப்பகங்களின் உலக வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்று வரும் மனிதனும் உயிர்க்கோளமும் திட்டத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் 34ஆம் அமர்வின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குவ்ஸ்குல் ஏரி வட மங்கோலியாவில் ரஷ்ய எல்லைக்கருகில் அமைந்துள்ளது; இது, மங்கோலியாவின் நன்னீரில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

9. 498 இரன்கள் என்ற ஒரு நாள் சர்வதேச ஸ்கோரை எடுத்து உலக சாதனை படைத்த கிரிக்கெட் அணி எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இங்கிலாந்து 

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. மேற்கிந்திய தீவுகள்

  • நெதர்லாந்துக்கு எதிராக 498 இரன்கள் என்ற ஒரு நாள் சர்வதேச ஸ்கோரை எட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆம்ஸ்டெல்வீனில் நடந்த போட்டியில் 232 இரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி, 2018இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரென்ட் பிரிட்ஜில் அடைந்த 481-6 என்ற தனது முந்தைய சாதனையை இதன்மூலம் முறியடித்தது. ஆட்டநாயகன் ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் சதத்துடன் ஆட்டமிழக்காமல் 162 இரன்கள் எடுத்தார்.

10. அண்மைய MFIN அறிக்கையின்படி, நிலுவையில் உள்ள சிறுநிதி கடன்களின் அடிப்படையில் முன்னிலையில் உள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. குஜராத்

இ. தெலுங்கானா

ஈ. கேரளா

  • Microfinance Institutions Network (MFIN) வெளியிட்ட காலாண்டு அறிக்கையின்படி, தமிழ்நாடு மேற்கு வங்கத்தை இடமாற்றஞ்செய்து, சிறுநிதி கடன்கள் நிலுவையில் உள்ள மிகப்பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ளது. 2022 மார்ச் 31 நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்தக் கடன் நிலுவை `36,806 கோடியாக இருந்தது; அதே சமயம் ஒட்டுமொத்த நுண்நிதித்துறையில் 2022 மார்ச்.31 நிலவரப்படி `2,85,441 கோடி கடன் நிலுவை உள்ளது. NBFC-MFI-களைத் தொடர்ந்து நுண் நிதிக் கடன்களை அதிகம் கொண்டவையாக வங்கிகள் உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் நூல் வெளியீடு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல நீதிபதி K இராமகிருஷ்ணன், “இந்தியாவில் அணுகல் மற்றும் நன்மை பகிர்வு நீதித்துறையின் பரிணாமம் – வளர்ந்து வரும் போக்குகள், சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி” என்ற நூலை வெளியிட்டார். இந்நூலை சென்னை தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின், எக்ஸலண்ட் பள்ளியின் பேராசிரியர் டாக்டர். எஸ் ஏழுமலை, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலர் ஜே ஜஸ்டின் மோகன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு சட்டங்களின்கீழ் காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பலன்களைப்பகிர்ந்தளிக்கும் பரிணாம வளர்ச்சியையும், வணிக மதிப்பைக்கொண்ட நமது உயிரியல் வளங்களைப் பாதுகாக்க நிறுவனங்களின் நன்மைப் பகிர்வின் முக்கியத்துவத்தையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்த புத்தகம் உலகின் பல்வேறு பகுதிகளில் சில வெற்றிகரமான பலன் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளில் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் வழங்கிய சில முக்கிய தீர்ப்புகளை உள்ளடக்கியது. தேசிய பல்லுயிர் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றிய கண்ணோட்டத்தையும் புத்தகம் வழங்குகிறது உயிரி பல்லுயிர் பெருக்க சட்டம், 2002-இன் கீழ் இந்தியாவில் பயன்பகிர்வு பொறிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் இது வழங்குகிறது.

2. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டஅமலாக்கம்: 9-ஆவது இடத்தில் தமிழகம்

நிகழாண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சிறப்பாக அமலாக்கம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஒடிஸாவும், இரண்டாமிடத்தில் உத்தர பிரதேசமும், மூன்றாமிடத்தில் ஆந்திர பிரதேசமும் உள்ளன.

3. யூரியா உற்பத்தியில் 2025-இல் தன்னிறைவு: மன்சுக் மாண்டவியா

வரும் 2025-இல் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைவைக் காணும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: தற்போது நாட்டின் யூரியா உற்பத்தி 260 இலட்சம் டன்னாக உள்ளது. அதேநேரம், உள்ளூர் தேவையை ஈடுசெய்ய 90 இலட்சம் டன் அளவிலான யூரியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. யூரியா இறக்குமதியைப் படிப்படியாக குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் இந்தத் தீவிர முயற்சியால் வரும் 2025-ஆண்டுக்குள் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உள்ளூர் தேவையை நிறைவுசெய்ய யூரியா மற்றும் நானோ திரவ யூரியா உற்பத்தி ஆண்டு தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் தன்னிறைவைக் காணும் என்றார் அவர்.

1. Which institution recently released compendium of Ayush practices to manage COVID–19?

A. AIIMS

B. Ministry of AYUSH

C. NITI Aayog 

D. WHO

  • Indian Government’s think tank NITI Aayog released compendium of Ayush practices to manage COVID–19. The compendium provides information focused on practices adopted by various states and UTs of India for strengthening the country’s fight against COVID–19.

2. Which institution has launched a portal named ‘Pariksha Sangam’?

A. UGC

B. CBSE 

C. NTA

D. IGNOU

  • The Central Board of Secondary Education (CBSE) has launched a new portal named Pariksha Sangam. The portal will act as a one–stop destination for all exam–related activities, which will include term results and more. It has 3 parts – Schools (Ganga), Regional Offices (Yamuna) and Head Office (Saraswati).

3. Which institution conducts OBICUS (order books, inventories and capacity utilisation) survey of manufacturing companies?

A. DPIIT

B. FICCI

C. RBI 

D. DIPAM

  • The Reserve Bank has launched the next round of its order books, inventories and capacity utilisation survey (OBICUS) of manufacturing companies. The results of the survey provide valuable inputs for monetary policy formulation. The 58th round of the OBICUS is for April – June 2022 period. The information collected in the survey includes data on new orders received during the reference quarter, backlog of orders, pending and total inventories among others.

4. What is the National Consumer Helpline (NCH) in India?

A. 1980

B. 1998

C. 1915

 D. 1812

  • The Central Consumer Protection Authority (CCPA) has barred hotels and restaurants from adding service charge ‘automatically or by default’ in the food bill. The consumer may lodge a complaint on the National Consumer Helpline (NCH) 1915 or through the NCH mobile application, as per the Union Ministry of Consumer Affairs, Food and Public Distribution.

5. What is the unique feature of ‘HomoSEP’, a robot developed by IIT–Madras?

A. Detects Pneumonia in children

B. Cleans Septic Tanks 

C. Detects Down Syndrome

D. Recycles e–waste

  • Researchers at the Indian Institute of Technology (IIT), Madras have developed a robot to clean septic tanks without human intervention. Named HomoSEP, the product development was further supported by GAIL (India). Initially, ten units are planned to be deployed across Tamil Nadu. The robots have been developed to eliminate manual scavenging.

6. International Coastal Clean–up Day is celebrated in which month?

A. June

B. July

C. August

D. September 

  • India launched one of its longest running coastal clean–up campaigns recently, in which 75 beaches of the country to be cleaned up to commemorate ‘Azadi Ka Amrit Mahotsav’. The coastal clean–up drive will be carried out in the country for 75 days from 3rd of July to 17th of September 2022, which is also the International Coastal Clean–up Day. The drive is aims to remove one thousand 500 tonnes of garbage from the sea coasts.

7. Which is the venue of the Plenary Session of 110th International Labour Conference?

A. Geneva 

B. Paris

C. Chennai

D. Coimbatore

  • Union Minister Bhupender Yadav addressed the Plenary Session of 110th International Labour Conference in Geneva. The International labour Conference sets the international labour standards and the broad policies of the ILO. It is the largest international gathering attended by representatives of governments, employers and workers from the 187 ILO Member States.

8. Khuvsgul lake National Park, which was recently added to UNESCO World Network of Biosphere Reserves, is located in which country?

A. Ukraine

B. Mongolia 

C. Chile

D. Mexico

  • Mongolia’s Khuvsgul Lake National Park has been recently added to the World Network of Biosphere Reserves of UNESCO. The decision was taken during the 34th session of the International Co–ordinating Council of the Man and the Biosphere Programme taking place in Paris, France. Khuvsgul Lake is located in the northern Mongolia near the Russian border, holding nearly 70 per cent of Mongolia’s fresh water.

9. Which cricket team created a world record with a One–day international score of 498 runs?

A. Australia

B. England 

C. South Africa

D. West Indies

  • England hit a world record one–day international score of 498 against Netherlands and won the match by 232 runs in Amstelveen. The England team beat their previous mark of 481–6 set against Australia at Trent Bridge in 2018. Player of the match Jos Buttler finished on 162 not out, with century off 47 balls.

10. As per recent MFIN report, which is the largest state in terms of the outstanding portfolio of microfinance loans?

A. Tamil Nadu 

B. Gujarat

C. Telangana

D. Kerala

  • According to the quarterly report published by Microfinance Institutions Network (MFIN), Tamil Nadu has displaced West Bengal to emerge as the largest State in terms of the outstanding portfolio of microfinance loans.
  • The gross loan portfolio (GLP) of Tamil Nadu as of March 31, 2022 stood at ₹36,806 crore while the overall microfinance industry has a total GLP of ₹2,85,441 crore as of March 31, 2022. Banks held the largest share of the portfolio in micro–credit followed by NBFC–MFIs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!