TnpscTnpsc Current Affairs

6th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

6th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த வங்கியின் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக `820 கோடி கூடுதல் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கி 

ஆ. யூனிட்டி சிறு நிதி வங்கி

இ. NSDL கொடுப்பனவு வங்கி

ஈ. AU சிறு நிதி வங்கி

  • நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் அதன் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கிக்கு (IPPB) `820 கோடி கூடுதல் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1.56 இலட்சம் அஞ்சல் நிலையங்களுள், IPPB தற்போது 1.3 இலட்சம் அஞ்சல் நிலையங்களில் இருந்து செயல்படுகிறது. தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 5.25 கோடி கணக்குகள் இவ்வங்கி கொண்டுள்ளது. ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக `500 கோடி மதிப்பிலான எதிர்கால நிதியை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2. தரையிறங்கும்போது, ‘GAGAN’ செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பைப் பயன்படுத்திய ஆசியாவின் முதல் வானூர்தி நிறுவனம் எது?

அ. ஏர் இந்தியா

ஆ. இண்டிகோ 

இ. ஏர் ஆசியா

ஈ. ஸ்பைஸ்ஜெட்

  • தரையிறங்கும்போது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பான, ‘GAGAN’ஐப் பயன்படுத்திய ஆசியாவின் முதல் விமான நிறுவனமாக ‘IndiGo’ ஆனது. இந்த அமைப்பை இந்திய வானூர்தி நிலைய ஆணையமும் (AAI) இந்திய விண்வெளி ஆய்வுமையமும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. இது விமானப் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்த உலகளாவிய நிலையறியும் அமைப்பு (GPS) சமிக்ஞைகளில் திருத்தங்களை வழங்குகிறது.

3. ‘காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை’ வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. பணியாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் 

இ. NASSCOM

ஈ. FICCI

  • மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூன்றாவது காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு (QES) அறிக்கையின்படி, 2021 அக்டோபர்-டிசம்பரில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக்கொண்ட நிறுவனங்களில் 4 இலட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டன.
  • அமைச்சகத்தின் இந்த ஆய்வு, 2013-14-க்கு முன் நிறுவப்பட்ட 10,834 அலகுகளை உள்ளடக்கியதாகும். மூன்றாம் சுற்றில், 2021 ஜூலை-செப்டம்பரில் 3.10 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு அடுத்த காலாண்டில் 3.145 கோடியாக அதிகரித்துள்ளது.

4. முதன்முதலாக மரபணு வங்கித் திட்டத்தை நிறுவிய இந்திய மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. தெலுங்கானா

இ. மகாராஷ்டிரா 

ஈ. மேற்கு வங்கம்

  • பூர்வீக மற்றும் அழிந்துவரும் விலங்குகள், பயிர்கள் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க, ‘மரபணு வங்கித் திட்டத்தை’ அமைப்பதாக மகாராஷ்டிரா அறிவித்துள்ளது. இது மகாராஷ்டிர மாநில பல்லுயிர் வாரியத்தால் (MSBB) செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு `172.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கடல்சார், பயிர், கால்நடை மருத்துவம், நன்னீர், புல்வெளி பல்லுயிர், வன உரிமைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் காடுகளின் மீட்டுருவாக்கம் ஆகிய ஏழு கருப்பொருள்களின்கீழ் இந்தத் திட்டம் செயல்படும். பருவநிலை மாற்றத்தால் உணவுச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதில் இந்தத் திட்டம் கவனஞ்செலுத்தும்.

5. MSME-களுக்காக, ‘Open for All’ என்ற டிஜிட்டல் சூழலமைப்பை அறிமுகப்படுத்திய இந்திய வங்கி எது?

அ. பாரத ஸ்டேட் வங்கி

ஆ. ஐசிஐசிஐ வங்கி 

இ. HDFC வங்கி

ஈ. கனரா வங்கி

  • ஐசிஐசிஐ வங்கியானது MSME-களுக்காக, ‘Open for All’ என்ற டிஜிட்டல் சூழலமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) இந்த டிஜிட்டல் சேவையை மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம். இது வழங்கும் புதிய சேவைகளுள் ஒன்றான, ‘InstaOD Plus’மூலம் `25 இலட்சம் வரை உடனடி மற்றும் காகிதமில்லா மிகைப்பற்று வசதியை அனுமதிப்பதாகும். எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளர்களும் உடனடியாக மிகைப்பற்றைப்பெற இந்த அம்சம் உதவுகிறது.

6. தேசிய பாடத்திட்ட கட்டமைப்பிற்காக, ‘கட்டாய ஆவணத்தை’ அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. பல்கலைக்கழக மானியக் குழு

ஆ. AICTE

இ. மத்திய கல்வி அமைச்சகம் 

ஈ. தேசியத் தேர்வு முகமை

  • தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான ‘கட்டாய ஆவணத்திட்டத்தை’ மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்கிவைத்தார். தேசிய கல்விக்கொள்கை – 2020, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வளர்ச்சிக்காக பள்ளிக்கல்வி, முன்கூட்டிய குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் வயதுவந்தோர் கல்வி ஆகிய நான்கு பிரிவுகளை பரிந்துரைத்துள்ளது.
  • தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் வளர்ச்சியானது Dr K கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசிய வழிகாட்டுதல் குழுவால் வழிநடத்தப்படுகிறது; மேலும், NCERT உடன் இணைந்து ஆணைக்குழுவால் இது ஆதரிக்கப்படுகிறது.

7. ‘2022 – செமிகான் இந்தியா மாநாடு’ நடைபெறும் இடம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி

இ. பெங்களூரு

ஈ. சென்னை

  • பிரதமர் மோடி பெங்களூருவில், ‘செமிகான் இந்தியா மாநாடு-2022’ஐ தொடங்கிவைத்தார். குறைகடத்திகளின் நுகர்வு 2030ஆம் ஆண்டளவில் 110 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் துளிர் நிறுவனச்சூழலமைப்பைக் கொண்டுள்ளது. இந்திய அரசு அண்மையில் 14 முக்கிய துறைகளில் $26 பில்லியன் டாலர்களுக்கு மேல் சலுகைகளை வழங்கும், ‘உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’த் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

8. குப்பையில்லா நகரங்களுக்கான தேசிய நடத்தை மாற்ற தகவல் தொடர்பு கட்டமைப்பானது கீழ்காணும் எந்தத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது?

அ. தூய்மை இந்தியா இயக்கம் – கிராமப்புறம் 2.0

ஆ. தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0 

இ. அம்ருத் 2.0

ஈ. HRIDAY 2.0

  • தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ், ‘குப்பையில்லா நகரங்களுக்கான தேசிய நடத்தை மாற்ற தகவல்தொடர்பு கட்டமைப்பை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தனிநபர்களுக்கிடையேயான தகவல்தொடர்பு பிரச்சாரங்களுடன் பெரிய அளவிலான பல்லூடக பிரச்சாரங்களை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு வழிகாட்டு ஆவணமாகவும் செயல்திட்டமாகவும் செயல்படுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. SBM-நகர்ப்புறம் 2.0 ஆனது வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

9. உலகம் முழுவதும், ‘உலக இரத்தம் உறையா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல் 15

ஆ. ஏப்ரல் 17 

இ. ஏப்ரல் 19

ஈ. ஏப்ரல் 25

  • உலக இரத்தம் உறையா நாள், ஆண்டுதோறும் ஏப்ரல்.17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இரத்தம் உறையா தன்மை மற்றும் பிற பரம்பரை இரத்தக்கசிவு கோளாறுகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரத்தம் உறையா தன்மை என்பது பரம்பரைக்கோளாறு ஆகும். இதில் இரத்தம் உறையும் திறன் கணிசமாகக் குறைந்து காணப்படும்; இதன் காரணமாக சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. உலக இரத்தம் உறையா கூட்டமைப்பு, 1989ஆம் ஆண்டு முதல் அதன் நிறுவனர் பிராங்க் ஷ்னாபெல் அவர்களின் பிறந்தநாளைக்கொண்டாடும் வகையில் உலக ரத்தமுறையா நாளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.

10. 2022 – ‘உலக பாரம்பரிய நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?

அ. Heritage and Climate 

ஆ. Rural Landscapes

இ. Heritage for Generations

ஈ. Complex Pasts: Diverse Futures

  • உலக பாரம்பரிய நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.18 அன்று விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்குமான வழிகளை மேற்கொள்ளவுமாகக் கொண்டாடப்படுகிறது. இது நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான பன்னாட்டு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. “மரபு மற்றும் காலநிலை – Heritage and Climate” என்பது நடப்பு 2022இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
  • இந்தியாவில், UENSCOஆல் அங்கீகரிக்கப்பட்ட 40 உலக பாரம்பரிய களங்கள் உள்ளன. அண்மையில் அவற்றுள் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரமும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹரப்பா தளமான தோலாவிராவும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக தன்னார்வ அமைப்புடன் இரயில்வே பாதுகாப்புப் படை புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆட்கடத்தலைத் தடுக்கும் விதமாக ரயில்வே பாதுகாப்புப் படை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆட்கடத்தலைத் தடுக்கும் வகையில் இருநிறுவனங்களிடையே தகவல் பரிமாற்றம், RPF வீரர்கள் மற்றும் இரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், விழிப்புணர்வு மற்றும் குற்றத்தடுப்பு செயல்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் முன்னெடுத்து செல்லும். குழந்தைகள் மீட்பு இயக்கம் எனப் பொருள்படும் ‘பச்பன் பச்சாவோ அந்தோலன்’, கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகளுக்கான அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த 1979ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே சொத்துக்கள், பயணிகள் பகுதிகள் மற்றும் பயணிகளையும் பாதுகாக்கும் பணியை ஏற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு இரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட குழந்தைகள் மீட்பு வழிகாட்டு நெறிமுறைகள்படி உருவான, ‘சிறிய தேவதைகள்’ எனப் பொருள்படும் ‘ஆபரேஷன் நன்னே பரிஷ்டே’ மூலம் 50,000 குழந்தைகளை இரயில்வே பாதுகாப்பு படை மீட்டுள்ளது. மேலும், ரயில்களில் நடைபெறும் குழந்தைக் கடத்தலை தடுக்கும் வகையில், “ஆப்ரேஷன் ஆஹட்” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்மூலம் 298 குழந்தைகள் உள்பட 1400 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆட்கடத்தலைத் தடுக்கும் விதமாக 740-க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில்வே பாதுகாப்புப் படை, ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்துள்ளது.

2. டெஃப்லிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு இரு தங்கம்

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல், பாட்மின்டனில் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 247.5 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தென்கொரியாவின் கிம் வூ ரிம் (246.6), மற்றொரு இந்தியரான சௌரியா சைனி (224.3) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனர். ஸ்ரீகாந்த் எட்டியிருக்கும் புள்ளி, இறுதிச்சுற்றில் உலக சாதனையாகும்.

அதேபோல், பாட்மின்டன் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றிலும் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. போட்டியின் 4-ஆம் நாள் நிறைவில், இந்தியா 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 65 பேர்கொண்ட இந்திய அணி கலந்துகொண்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு இப்போட்டியில் இந்தியா தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலம் மட்டும் வென்றிருந்தது.

1. The Union Cabinet approved an additional funding of Rs 820 crore for which bank, to expand its services?

A. India Post Payments Bank 

B. Unity Small Finance Bank

C. NSDL Payment Bank

D. AU Small Finance Bank

  • The Union Cabinet approved an additional funding of Rs 820 crore for India Post Payments Bank (IPPB) for expansion of its services to all post offices in the country. Out of the 1.56 lakh post offices, IPPB currently operates from 1.3 lakh post offices. Since the launch, it has opened over 5.25 crore accounts with 82 crore aggregate number of transactions. The Cabinet has approved a future fund infusion worth Rs 500 crore for meeting regulatory requirements and technological upgradation.

2. Which is the first airline in Asia to use the ‘GAGAN’ satellite–based navigation system during landing?

A. Air India

B. IndiGo 

C. Air Asia

D. SpiceJet

  • IndiGo became the first airline in Asia to use the indigenously developed satellite–based navigation system ‘GAGAN’ during landing. The system has been jointly developed by the Airports Authority of India (AAI) and the Indian Space Research Organisation. It provides corrections to the global positioning system (GPS) signal to improve air traffic management.

3. Which institution releases the ‘Quarterly Employment Survey’?

A. NITI Aayog

B. Ministry of Labour & Employment 

C. NASSCOM

D. FICCI

  • According to the Labour and Employment Ministry’s third Quarterly Employment Survey (QES) report, over 4 lakh jobs were created in firms with 10 or more workers in 9 selected sectors in October–December 2021. The Ministry’s survey, which covered 10,834 units established before 2013–14 in the third round, found employment had increased from 3.10 crore in July–September 2021 to 3.145 crore in the next quarter.

4. Which Indian state is the first to set up a Gene Bank Project?

A. Kerala

B. Telangana

C. Maharashtra 

D. West Bengal

  • Maharashtra has announced to set up a ‘Gene bank project’, to conserve native and endangered animals, crops, marine and biological species. It will be implemented by the Maharashtra State Biodiversity Board (MSBB) and Rs 172.39 crore has been allocated for the next five years.
  • The project will work on seven themes — marine, crop, veterinary, freshwater, grassland biodiversity, protection and management of forest right areas, and regeneration of forests. The project will focus on mitigating the impact on the food chain due to climate change.

5. Which Indian Bank launched the ‘Open–for–all’ Digital ecosystem for MSMEs?

A. State Bank of India

B. ICICI Bank 

C. HDFC Bank

D. Canara Bank

  • ICICI Bank has launched ‘Open–for–all’ Digital ecosystem for MSMEs. The digital service for Micro, Small and Medium Enterprises (MSMEs) can be used by customers of other banks. One of the new services it provides is sanction of instant and paperless overdraft facility up to Rs 25 lakh through ‘InstaOD Plus’. The feature enables customers of any bank to avail of an overdraft instantly.

6. Which institution launched the ‘Mandate document’ for National Curriculum Framework (NCF)?

A. University Grants Commission

B. AICTE

C. Union Education Ministry 

D. National Testing Agency

  • Union Education Minister Dharmendra Pradhan released the ‘Mandate document’ for National Curriculum Framework (NCF). The National Education Policy 2020 recommended the development of NCF in four areas — school education, early childhood care and education, teacher education and adult education. The development of the NCF is guided by the National Steering Committee (NSC), chaired by Dr K Kasturirangan, and supported by the Mandate Group, along with NCERT.

7. Which is the venue of the ‘Semicon India Conference–2022’?

A. Mumbai

B. New Delhi

C. Bengaluru 🗹

D. Chennai

  • The Prime Minister Narendra Modi inaugurated ‘Semicon India Conference–2022’ in Bengaluru. The consumption of semiconductors is expected to cross USD 110 billion by 2030 and India has the world’s fastest growing start–up ecosystem.
  • The Government of India recently launched ‘Production Linked Incentives’ (PLI) schemes that offer incentives of over 26 billion dollars in 14 key sectors.

8. ‘National Behaviour Change Communication Framework for Garbage Free Cities’ has been launched under which scheme?

A. Swachh Bharat Mission–Gramin 2.0

B. Swachh Bharat Mission–Urban 2.0 

C. AMRUT 2.0

D. HRIDAY 2.0

  • Swachh Bharat Mission–Urban 2.0, under the aegis of the Ministry of Housing and Urban Affairs, has launched the ‘National Behaviour Change Communication Framework for Garbage Free Cities’. It aims to serve as a guiding document and blueprint for States and Cities to undertake large scale multimedia campaigns along with inter–personal communication campaigns. SBM Urban 2.0 is implemented by Ministry of Housing and Urban Affairs (MoHUA).

9. When is the ‘World Hemophilia Day’ observed across the world?

A. April 15

B. April 17 

C. April 19

D. April 25

  • World Hemophilia Day, which is marked on 17 April annually, is dedicated to raising awareness about hemophilia and other inherited bleeding disorders. Hemophilia is an inherited genetic disorder in which the blood’s capacity to clot is substantially impaired, causing one to bleed excessively even from minor injuries. The World Federation of Hemophilia (WFH) began observing World Hemophilia Day since 1989 to honour WFH founder Frank Schnabel’s birthday.

10. What is the theme of the ‘World Heritage Day 2022’?

A. Heritage and Climate 

B. Rural Landscapes

C. Heritage for Generations

D. Complex Pasts: Diverse Futures

  • ‘World Heritage Day 2022’ is celebrated on April 18 every year to raise awareness and take up ways to preserve cultural heritage. It is also known as International Day for Monuments and Sites. This year, the World Heritage Day theme is “Heritage and Climate”. In India, there are 40 UNESCO recognised world heritage sites. The most recent additions to India’s world heritage sites are Jaipur city and the Harappan site of Dholavira in Gujarat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!