TnpscTnpsc Current Affairs

6th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. காது கேளாதோரின் பன்னாட்டு வாரமானது ஒவ்வோர் ஆண்டும் எந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது?

அ) செப்டம்பர் 

ஆ) ஆகஸ்ட்

இ) ஜூலை

ஈ) ஜூன்

  • பன்னாட்டு காதுகேளாதோர் வாரமானது செப்டம்பர் கடைசி வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. காது சர்வதேச கேளாதோர் வாரத்திற்கான இந்த ஆண்டின் (2021) கருப்பொருள் “Celebrating Thriving Deaf Communities” ஆகும். இந்த வாரம் “Nothing about us, without us!” என்ற முக்கிய கொள்கையின்கீழ் வருகிறது. உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு, 1951 ஆம் ஆண்டில் இத்தாலியின் ரோம் நகரில் நிறுவப்பட்டது. இந்த சர்வதேச அமைப்பு, செப்டம்பர் கடைசி வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச காதுகேளாதோர் நாளாக அறிவித்தது. பின்னர், அதனை ஒரு வாரமாக நீட்டித்து அறிவித்தது.

2. சர்வதேச அணுசக்தி முகமையின் வெளியக தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?

அ) வினோத் ராய்

ஆ) சஷி காந்த் சர்மா

இ) ராஜீவ் மெஹ்ரிஷி

ஈ) ஜி சி முர்மு 

  • இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலான ஜி சி முர்மு பன்னாட்டு அணுசக்தி முகமையின் (IAEA) வெளியக தணிக்கையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். IAEA என்பது ஒரு மதிப்புமிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இது அமைதியான அணுவாற்றல் பயன்பாட்டை ஊக்கு -விக்கிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, அவரது வேட்புமனு IAEA பொது மாநாட்டின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றது. அவரது பதவிக்காலம் 2022 முதல் 2027 வரை ஆறு ஆண்டுகள் இருக்கும்.

3. “Seafarers: at the core of shipping’s future” என்பது செப்டம்பர்.30 அன்று கொண்டாடப்படும் எந்த நாளின் கருப்பொருளாகும்?

அ) உலக கடற்படையினர் நாள்

ஆ) உலக கடல்சார் நாள் 

இ) உலக பெருங்கடலியல் நாள்

ஈ) உலக மீன்வள நாள்

  • பன்னாட்டு கடல்சார் அமைப்பு என்பது ஐநா அவையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். அது கப்பல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதன் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது. உலக கடல்சார் நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.30 அன்று கொண்டாடப்படுகிறது.
  • COVID தொற்றால் கஷ்டங்களை எதிர்கொள்ளும் கடற்படையினருக்காக, IMO, 2021’ஐ அவர்களுக்கான ஓர் ஆண்டாக அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக கடல்சார் நாளின் கருப்பொருள், “Seafarers: at the core of shipping’s future” என்பதாகும். கடல்சார் சமூகத்தை ஒன்றிணை -ப்பதற்காக, கடல்சார் நினைவுச்சின்னம் உட்பட IMO கட்டடம் உள்ளிட்ட -வை உலக கடல்சார் நாளன்று நீல நிறத்தில் ஒளியூட்டப்படும்.

4. இந்தியாவில் ‘எதிர்கால பொறியாளர் திட்டத்தை’த் தொடங்கி உள்ள நிறுவனம் எது?

அ) கூகிள்

ஆ) அமேசான் 

இ) மைக்ரோசாப்ட்

ஈ) பேஸ்புக்

  • மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இந்தியா, இந்தியாவில் ‘அமேசான் எதிர்கால பொறியாளர்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது, அந்த நிறுவனத்தின் உலகளாவிய கணினி அறிவியல் கல்வித்திட்டமாகும். அந்நிறுவனத்தின் கூற்றுப்படி, இத்திட்டம் தரமான கணினி அறிவியல் கல்வி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொழிற்துறை வாய்ப்புகளை அணுக உதவும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தங்கப்பரிமாற்றம் மற்றும் சமூகப் பங்குச்சந்தை ஆகியவற்றை அங்கீகரித்த நிறுவனம் எது?

அ) RBI

ஆ) SEBI 

இ) ECGC

ஈ) NSDL

  • SEBI’இன் வாரியம் சமீபத்தில் ஒரு ‘தங்கப்பரிமாற்றம்’ மற்றும் ‘சமூகப் பங்குச்சந்தை’ ஆகியவற்றை நிறுவுவதற்கான திட்டத்தை அறிவித்தது. தங்கப்பரிமாற்றத்தில், உலோகமானது மின்னணு தங்க பற்றுச் சீட்டுகள் வடிவில் வணிகம்செய்யப்படும் & அவை பத்திரங்களாக அறிவிக்கப்படும்.
  • தற்போதுள்ள மற்றும் புதியதாக அங்கீகரிக்கப்பட்ட எந்த பங்குச்சந்தையும் மின்னணு தங்க பற்றுச் சீட்டுகள் வடிவில் வர்த்தகத்தைத் தொடங்கலாம்.

6. வெறிநாய்க்கடி நோயை எந்த ஆண்டுக்குள் ஒழிப்பதற்காக, ஒரு தேசிய செயல் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது?

அ) 2025

ஆ) 2027

இ) 2030 

ஈ) 2032

  • உலக ரேபிஸ் நாளாக செப்.28 அன்று, 2030ஆம் ஆண்டுக்குள் நாய் மூலம் பரவும் ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடங்கிவைத்தது.
  • இது மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆலோசனையுடன் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் வரைவு செய்யப்பட்டது. இத்திட்டம் ஐந்து முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டதாகும் – அரசியல் விருப்பம், நிலையான நிதி, இடைநிலை திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் மறுஆய்வு, சமூக திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி.

7. இந்தியன் வங்கியின் முன்னாள் MD & CEOஆன பத்மஜா சந்துரு, எந்த நிறுவனத்தின் புதிய MD & CEOஆக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) SEBI MF

ஆ) NSDL 

இ) SBI

ஈ) LIC

  • பத்மஜா சுந்துரு தேசியப் பத்திரங்கள் வைப்புத்தொகையின் (NSDL) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக (MD & CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2018 செப்டம்பர் மற்றும் 2021 ஆகஸ்ட்டுக்கு இடையில் இந்தியன் வங்கியின் MD & CEOஆக பணியாற்றியுள்ளார். அவரது நியமனம் NSDL’இன் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. NSDL’இன் முந்தைய MD & CEOஆக GV நாகேஸ்வர ராவ் இருந்தார்.

8. எந்த நாட்டின் அண்மைய பொதுத்தேர்தலில் 48 சதவீத பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்?

அ) ஜெர்மனி

ஆ) இத்தாலி

இ) ஐஸ்லாந்து 

ஈ) பின்லாந்து

  • வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 48% பெண்கள் என்பதால், ஐஸ்லாந்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் அந்நாட்டிற்கு ஒரு சிறப்பு நிகழ்வாக உள்ளது. 63 இடங்களைக்கொண்ட நாடாளுமன்றத்தில், 30 இடங்களை பெண் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். பின்லாந்தில் 47% பெண் வேட்பாளர்க -ள் வென்றுள்ளனர். சுவீடன் நாடாளுமன்றம் 465 பெண் உறுப்பினர்க -ளைக் கொண்டுள்ளது.

9. உலகின் மிகப்பழமையான குடியரசுகளுள் ஒன்றான எந்த நாடு, சமீபத்தில், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வாக்களித்தது?

அ) இத்தாலி

ஆ) ஸ்பெயின்

இ) சான் மரினோ 

ஈ) சுவிச்சர்லாந்து

  • சான் மரினோ குடியரசில் பன்னிரண்டு வார கர்ப்பத்தை கருக்கலைக்க அனுமதிப்பதற்கான ஒரு வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 77% பேர் இந்தக் கருத்தை ஆதரித்தனர் மற்றும் கருக்கலைப்பை அனுமதிக்க விரும்பினர். இன்றுவரை, சான் மரினோ குடியரசில், கர்ப்பத்தை களைப்பது என்பது சட்டவிரோதமானது ஆகும். அதனை மீறி முயற்சி செய்வோருக்கு மூவாண்டுகள் சிறைத் தண்டனையும், கலைப்பவருக்கு ஆறாண்டு சிறையும் விதிக்கப்பட்டது.

10. 2022 ஸ்வச் சர்வேக்ஷனில் கீழ்காணும் எந்தப் புதிய குறிகாட்டி (indicator) இணைக்கப்பட்டுள்ளது?

அ) மக்களின் மகிழ்ச்சி

ஆ) பணிச்சூழல்கள் & தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரம் 

இ) மருத்துவர்களின் நலன்

ஈ) சேரிகளின் நிலை மற்றும் மறுவடிவமைப்பு

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட ஏழாவது தூய்மை ஆய்வை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய பதிப்பில், தொற்றுகாலத்தின்போது தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, ‘பணிச்சூழல்கள் & தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரம்’ குறித்த குறிப்பிட்ட குறிகாட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வள்ளலார் பிறந்த நாள்: தனிப்பெருங்கருணை நாளாக முதல்வர் அறிவிப்பு

வள்ளலார் பிறந்த நாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வள்ளலார் பிறந்த நாளான இன்று(அக்.5) பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823–இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கைநெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கி கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

2. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிப்பு

2021ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்குப் புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் போன்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக ஜார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2021ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3. ஊரக சுயாட்சி ஏன் முக்கியமானது?

புதிய மாவட்டங்களிலும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இன்றும் வருகிற 9-ம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த உச்ச நீதிமன்றம் மேலும் நான்கு மாதங்களுக்கு அவகாசம் அளித்துள்ளது என்றபோதும் அதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் இந்தியாவுக்கே முன்னோடியாகக் கொள்ளப்பட்ட தமிழ்நாடு, இன்று அது குறித்து அக்கறையும் ஆர்வமும் இல்லாமல் போய்விட்டது வரலாற்றின் முரண்நகை.

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய மிகப் பெரும் ஆய்வை நடத்தியவர் காந்தியச் சிந்தனையாளரான தரம்பால். அறுபதுகளில் அனைத்திந்திய பஞ்சாயத் பரிஷத் அமைப்பின் ஆய்வுத் துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். காலனிய காலகட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடர்பான அரசு ஆவணங்களைப் பார்வையிட்டும் ஊர் ஊராகச் சென்று நேரடிக் கள ஆய்வுகளை நடத்தியும் தனது ஆய்வறிக்கையை அவர் சமர்ப்பித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் வரைக்கும் அவர் பார்வையிட்டு, உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் திரட்டினார்.

அவரது முடிவுகளின்படி, ஏற்கெனவே இங்கு நெடுங்காலமாக சிறப்பாகச் செயல்பட்டுவந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கால நில வருவாய் அமைப்பால் சீர்குலைக்கப்பட்டன. காலனிய அதிகார எந்திரம் உள்ளூர்ச் சமூகங்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவில்லை. சுதந்திர இந்தியாவிலும் அந்த நிலை தொடராமல், சுயாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் மறுவுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது பிரதான பரிந்துரை.

கிராமப்புறக் குடியாட்சி

பஞ்சாயத்து என்கிற வார்த்தைக்கு உரிமையியல், குற்றவியல் பிரச்சினைகளைக் கிராம அளவில் பேசித் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு அமைப்பு என்றுதான் பொதுவாகப் பொருள்கொள்ளப்படுகிறது. அவை பின்பற்றிய வழக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தன என்றாலும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் நிர்வாகரீதியிலும் அரசியல்ரீதியிலும் தன்னைச் சுயாட்சி பெற்ற பகுதியாகக் கருதிவந்திருப்பதை இத்தகைய அமைப்புகளின் வரலாற்றிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. சார்லஸ் மெட்காப் போன்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் பஞ்சாயத்து அமைப்பைக் கிராமப்புறக் குடியாட்சி என்றே அழைத்துவந்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளே தங்களது நில நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டன என்கிறார் தரம்பால். நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் கர்ணம் என்று அழைக்கப்படுபவர்களின் பொறுப்பில் இருந்தன. வடஇந்தியாவில் இவர்கள் பத்வாரி (Patwari) என்று அழைக்கப்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து நிலங்களும் தங்களது விவசாய வருமானத்தில் சரிபாதியை வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தங்களது ஆளுகையை இழந்து, வரி வசூலிக்கும் முகவாண்மைகளாக மட்டுமே சுருங்கிப் போயின.

ஆட்சியர்களின் கட்டுப்பாடு

சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1880, 1907, 1946 ஆகிய ஆண்டுகளில் முழுமையான மறுபரிசீலனைக்கு ஆளாகியுள்ளன. 1880-களில் ஏற்கெனவே இருந்த திட்டங்களைத் தீவிரப்படுத்தவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் மாவட்ட அளவில் கூடுதல் நிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டன. மைய அரசின் வழக்கமான அரசு எந்திரத்திலிருந்து விடுபட்டு, மாவட்ட ஆட்சியர்கள் சூழலுக்கேற்பச் சுயமாக முடிவெடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 1884-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, சென்னை மாகாணத்தில் மாவட்ட, வட்ட, கிராம அளவில் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை பெருமளவில் தொடங்கப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான். ஆனாலும்கூட, உள்ளாட்சி அமைப்பின் அதிகாரங்கள் பெரிதும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்படுத்தப்படும் நிலை இருந்தது. 1907-ல் நியமிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்கான ராயல் கமிஷன், உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும் கவனம் செலுத்தியது. அப்போது உள்ளாட்சி அமைப்புகள் குறித்துப் பெறப்பட்ட கருத்துகள் 1920 வரையிலும் விவாதிக்கப்பட்டன. 1920-ல் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கான விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரித்தன. 1946-ல் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கான விவாதங்களின்போதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கியத்துவம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

பல்வந்த் ராய் பரிந்துரை

சுதந்திர இந்தியாவில் 1958-ல் மதராஸ் பஞ்சாயத்துகள் சட்டம் இயற்றப்பட்டது. எனினும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் அந்தச் சட்டம் கொண்டிருந்தது. உள்ளாட்சி அமைப்பின் ஒவ்வொரு நோக்கத்தையும் எட்டுவதற்கு அச்சட்டம் முன்பிருந்த பிரிட்டிஷ் நடைமுறைகளைப் பின்பற்றியதே குழப்பங்களுக்குக் காரணமாயிற்று என்கிறார் தரம்பால். தவிர, உள்ளாட்சி அமைப்புகளின் மொத்தச் செலவினங்களும் குறைவாகவே இருந்தன. எனினும், 1958-ல் இயற்றப்பட்ட பஞ்சாயத்து சட்டம்தான், சென்னை மாநிலத்தில் உள்ள எல்லாக் குடிசைகளையும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர உதவியது.

அதற்கு முன்னால், மாநிலத்தின் பாதிப் பரப்பளவு மட்டுமே கிராமப் பஞ்சாயத்துகளைப் பெற்றிருந்தது. 1957-ல் அளிக்கப்பட்ட பல்வந்த் ராய் மேத்தா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று இயற்றப்பட்ட சட்டம் அது. அரசு மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது அந்த கமிட்டியின் முக்கியப் பரிந்துரை. 73 மற்றும் 74-ம் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுப் பெண்களுக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடுகளும் அதிகரித்துவருகின்றன

உள்ளாட்சி அமைப்புகள் இன்று அரசமைப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எனவே, அரசமைப்பில் நிகழும் அத்தனை தவறுகளும் உள்ளாட்சி அமைப்பிலும் பிரதிபலிக்கக்கூடும். மத்திய மாநில அளவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களின் வெற்றி என்பது ஒவ்வொரு நிலையிலும் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வதால் மட்டுமே சாத்தியம். அந்தப் பொறுப்பேற்பு, உள்ளாட்சி அமைப்புகளின் நியாயமான நிர்வாகத்தாலேயே சாத்தியமாகும்.

ஒருவேளை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என்றால், அது அமைப்பின் தவறால் அல்ல, அவ்வமைப்பின் பணிகளைப் பற்றிய அறியாமையின் காரணமாகத்தான் என்கிறார் தரம்பால். உள்ளாட்சி குறித்த விழிப்புணர்வால் மட்டுமே அந்த அமைப்புகளின் சுயாட்சியை மீட்டெடுக்க முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கிராமங்கள் சமுதாயங்களாகவும் மகமைகளாகவும் தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொண்டன. அந்நியர்களிடம் இழந்த அந்த உரிமையைச் சுதந்திர இந்தியா திரும்பவும் கிராமங்களின் கைகளிலேயே திரும்பக் கொடுத்திருக்கிறது.

4. இந்தியா-ஜப்பான் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இந்தியா-ஜப்பான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி புதன்கிழமை தொடங்கவுள்ளது. அரபிக் கடலில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி அக்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக இந்திய பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியா-ஜப்பான் கடற்படைகளின் கடல்சாா் கூட்டுப் பயிற்சி (ஜிமெக்ஸ்) 5-ஆவது முறையாக நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொச்சி, தேக் கப்பல்கள் பங்கேற்கின்றன. ஜப்பான் கடற்படை சாா்பில் ககா, முராசேம் கப்பல்கள் கலந்து கொள்கின்றன. அத்துடன் கடற்படையின் பி8ஐ, டாா்னியா் வகை ரோந்து விமானங்கள், மிக் 29கே ரக போா் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. ஆயுதப்பயிற்சி, நீா்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போரிடும் முறைகள் உள்ளிட்டவற்றில் இருநாட்டு கடற்படைகளும் ஈடுபடும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்றாா் ஐஷ்வரி பிரதாப்

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமா் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா். பெருவில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவின் களம் கண்ட ஐஷ்வரி பிரதாப் சிங் தோமா், இறுதிச்சுற்றில் 463.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். அவா் இந்தப் புள்ளிகளை வென்ன் மூலம் ஜூனியா் பிரிவில் புதிய உலக சாதனை படைத்து தங்கத்தை தனதாக்கினாா். பிரான்ஸ் வீரா் லூகாஸ் கிரைஸஸ் 456.5 புள்ளிகளுடன் வெள்ளியும், அமெரிக்காவின் காவின் பாா்னிக் 446.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

முன்னதாக தகுதிச்சுற்றிலும் ஐஷ்வரி பிரதாப் 1,185 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை சமன் செய்ததுடன், முதல் நபராக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தாா். இதர இந்தியா்களான சன்ஸ்காா் ஹவேலியா 1,160 புள்ளிகளுடன் 11-ஆவது இடமும், பங்கஜ் முகேஜா 1,157 புள்ளிகளுடன் 15-ஆவது இடமும், சா்தாஜ் திவானா 1,157 புள்ளிகளுடன் 16-ஆவது இடமும், குா்மான் சிங் 1,153 புள்ளிகளுடன் 22-ஆவது இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினா். இளம் வீராங்கனை அசத்தல்: அதேபோல், மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் நாம்யா கபூா் தங்கமும், மானு பாக்கா் வெண்கலமும் வென்றனா்.

இதில் 14 வயது இளம் வீராங்கனையான நாம்யா, 19 வயது அனுபவ வீராங்கனையான மானுவை பின்னுக்குத்தள்ளி தங்கம் வென்று ஆச்சா்யமளித்தாா். அவா்கள் களம் கண்ட பிரிவின் இறுதிச்சுற்றில் நாம்யா கபூா் 36 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, பிரான்ஸின் கேமிலி ஜெடா்ஸெஜெவ்ஸ்கி 33 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தையும், மானு பாக்கா் 31 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தையும் பிடித்தனா். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் 4-ஆம் இடம் பிடிக்க, இப்பிரிவில் இந்தியாவின் ஆதிக்கமே இருந்தது. இப்போட்டியில் ஏற்கெனவே வேறு 3 பிரிவுகளில் தங்கம் வென்ற மானு பாக்கருக்கு இந்த வெண்கலம் 4-ஆவது பதக்கமாகும். முன்னதாக இப்பிரிவின் தகுதிச்சுற்றில் நாம்யா 580 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடிக்க, மானு பாக்கா் 587 புள்ளிகளுடன் முதலிடமும், ரிதம் சங்வான் 586 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்திருந்தனா்.

முதலிடத்தில் இந்தியா: 8 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 4 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்திலும், இத்தாலி 2 தங்கம் உள்பட 6 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.

6. முதல் முறையாக விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு நடத்தும் ரஷியா..!

சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இதற்காக, ரஷியா ஒரு நடிகை மற்றும் ஒரு திரைப்பட இயக்குநரை வெகு விரைவில் விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. முன்னதாக புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘மிஷன் இம்பாசிபில்’ பட கதாநாயகன் டாம் குரூஸ், நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த திட்டம் குறித்து அறிவித்திருந்தார். நடிகை யூலியா பெரிசில்ட் (37 வயது) மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ (38 வயது) ஆகியோர் பழைய சோவியத்-கசகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமில் இருந்து வெகுவிரைவில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர்.

மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் இப்பயணத்துக்கு தலைமை தாங்குகிறார்.அவர்கள் மூவரும் சோயுஸ் எம் எஸ்-19 விண்கலத்தில் 12 நாள் பயணமாக செல்ல உள்ளனர்.அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளனர். “தி சேலஞ்ச்” என்று அந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.படத்தின் பட்ஜெட் மற்றும் கதைக்களம் போன்ற விஷயங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ‘ராஸ்காஸ்மோஸ்’ அவற்றை வெளியிட்டுள்ளது.அதன்படி படத்தின் கதையாக, பெண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அங்கு ஆபத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரரை பாதுகாக்க உள்ளார். இவ்வாறு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

1. The ‘International Week of Deaf People’ is observed in which month every year?

A) September 

B) August

C) July

D) June

  • The International Week of Deaf People is observed during the last week of September. This year’s theme for the International Week of Deaf People is “Celebrating Thriving Deaf Communities”. The week falls under the key principle, “Nothing about us, without us!”.
  • The World Federation of the Deaf (WFD) was established in 1951 in Rome, Italy. This international organisation declared Sunday in the last week of September as the International Day of the Deaf. Later, the day has been extended to a week.

2. Which Indian has been selected as the external auditor of the International Atomic Energy Agency (IAEA)?

A) Vinod Rai

B) Shashi Kant Sharma

C) Rajiv Mehrishi

D) GC Murmu 

  • India’s Comptroller and Auditor General G C Murmu selected as the external auditor of the International Atomic Energy Agency (IAEA). IAEA is a prestigious international institution that promotes peaceful use of nuclear energy. As per the Union Ministry of External Affairs (MEA), his candidature received majority support of the IAEA general conference and his tenure will be for six years, from 2022 to 2027.

3. “Seafarers: at the core of shipping’s future” is the theme of which day, celebrated on 30 September?

A) World Seafarers Day

B) World Maritime Day 

C) World Oceanography Day

D) World Fishery Day

  • The International Maritime Organization is a specialised agency of the United Nations responsible for regulating shipping. It is headquartered at London. World Maritime Day 2021 is celebrated every year on 30 September. IMO has declared 2021 a year of action for seafarers, who are facing hardship due to the COVID–19 pandemic.
  • The World Maritime Theme for 2021 is “Seafarers: at the core of shipping’s future”. The IMO building, including the Seafarer Memorial, will be lit in blue light on World Maritime Day, to unite the maritime community.

4. Which company has launched ‘Future Engineer Programme’ in India?

A) Google

B) Amazon 

C) Microsoft

D) Facebook

  • E–commerce major Amazon India announced the launch of Amazon Future Engineer in India. It is the company’s global computer science education programme. According to the company, the programme will enable access to quality computer science education and career opportunities for students from underserved communities.

5. Gold Exchange and Social Stock Exchange, which were in the news recently, are approved by which organisation?

A) RBI

B) SEBI 

C) ECGC

D) NSDL

  • SEBI’s board recently cleared a proposal for setting up a ‘Gold exchange’ and a ‘Social Stock Exchange’. In the Gold Exchange, the metal will be traded in the form of Electronic Gold Receipts (EGRs) and they will be notified as securities. Any recognised stock exchange, existing as well as new, can launch trading in EGRs.

6. India unveiled a ‘National Action Plan for Dog Mediated Rabies Elimination’(NAPRE), to eliminate rabies by which year?

A) 2025

B) 2027

C) 2030 

D) 2032

  • India unveiled a ‘National Action Plan for Dog Mediated Rabies Elimination’(NAPRE) by 2030. It has been drafted by the National Centre for Disease Control (NCDC) in consultation with the Ministry of Fisheries, Animal Husbandry, and Dairying. World Rabies Day is observed on September 28. NAPRE is based on 5 major pillars – political will, sustained funding, intersectoral planning, coordination and review, community planning, and operational research.

7. Padmaja Chunduru, former MD & CEO of Indian Bank, has been appointed as the new MD & CEO of which organisation?

A) SEBI MF

B) NSDL 

C) SBI

D) LIC

  • Padmaja Chunduru has been appointed managing director and chief executive officer (MD & CEO) of National Securities Depositories (NSDL). She has earlier served as the MD & CEO of Indian Bank between September 2018 and August 2021. Her appointment has been approved by the shareholders of NSDL. She is succeeding GV Nageswara Rao, who was the previous MD & CEO of NSDL.

8. Which country has witnessed 48% women candidate victory in its recent General elections?

A) Germany

B) Italy

C) Iceland 

D) Finland

  • The general election results in Iceland have been a special event for the country, since 48% of the winning candidates were women. Out of the 63–seat parliament, 30 seats were won by women candidates.
  • This makes Iceland’s Parliament have the highest number of women’s representation in Europe. Finland has 47% women representation and Sweden has 465 women representations in their respective Parliament.

9. Which country, one among the world’s oldest republics, recently voted to legalise abortion?

A) Italy

B) Spain

C) San Marino 

D) Switzerland

  • A referendum for a proposal to allow abortion up to 12 weeks of pregnancy was conducted in the Republic of San Marino. Nearly 77% of the total voters backed the proposal and favoured to allow abortion. Till date, in the Republic of San Marino, ending pregnancy was illegal and invited an imprisonment of 3 years, and an imprisonment of 6 years for the one who carries out abortion.

10. Which new indicator has been incorporated in the Swachh Survekshan 2022?

A) Happiness of People

B) Working conditions and livelihood of sanitation workers 

C) Wellness of Doctors

D) Condition and redevelopment of slums

  • The Union Ministry of Housing and Urban Affairs has launched the 7th edition of Swachh Survekshan, which is the cleanliness survey conducted under the Swachh Bharat Mission–Urban.
  • In the current edition of Swachh Survekshan, specific indicators on ‘working conditions and livelihood of sanitation workers’ has been incorporated, in order to recognize the contributions made by them during the pandemic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!