TnpscTnpsc Current Affairs

6th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

6th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 6th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 அறிவியலாளர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. அம்மூவரும் சார்ந்த துறை எது?

அ. அணு இயற்பியல்

ஆ. குவாண்டம் இயக்கவியல்

இ. அணு அறிவியல்

ஈ. விண்வெளி அறிவியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. குவாண்டம் இயக்கவியல்

  • 2022ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, குவாண்டம் இயக்கவியலில் பணியாற்றியதற்காக, அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப் கிளாசர் மற்றும் அன்டன் ஜெயிலிங்கர் ஆகிய மூன்று அறிவியலாளர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த 3 அறிவியலாளர்களும் சிக்கிய குவாண்டம் நிலைகளில் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தினர்; அந்தச் சோதனையில் இரண்டு தனித்தனி துகள்கள் ஓர் அலகுபோல செயல்படுகின்றன. அவற்றின் விளைவுகள் குவாண்டம் கணினிகள், குவாண்டம் வலையமைப்புகள் மற்றும் பாதுகாப்பான குவாண்டம் மறைகுறியாக்கப்பட்ட தகவல்தொடர்பு ஆகிய துறைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

2. இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, கீழ்க்காணும் எந்நகரத்தில், பெண் தொழில்முனைவோருக்கான துளிர் நிறுவல்கள் தளமான, ‘herSTART’ஐத் தொடங்கினார்?

அ. மும்பை

ஆ. அகமதாபாத்

இ. வாரணாசி

ஈ. லக்னோ

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அகமதாபாத்

  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குஜராத் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான துளிர் நிறுவல்கள் தளமான, ‘herSTART’ஐ அகமதாபாத்தில் வைத்து தொடங்கி வைத்தார். பெண் தொழில்முனைவோருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இத்தளம், பெண் தொழில்முனைவோரின் புதுமை மற்றும் துளிர் நிறுவல்கள் முனைவுகளை ஊக்குவிக்கும். மேலும், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பெண் தொழில்முனைவோரை இது இணைக்கும்.

3. அகதிகளுக்கான ஐநா உயராணையரால் வழங்கப்பட்ட 2022 – நான்சென் விருதைப் பெற்றவர் யார்?

அ. ஜி ஜின்பிங்

ஆ. ஏஞ்சலா மேர்க்கல்

இ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ஈ. அந்தோணி அல்பானீஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஏஞ்சலா மேர்க்கல்

  • அகதிகளுக்கான ஐநா உயராணையரகத்தால் வழங்கப்பட்ட நான்சென் விருதைப் பெறுபவராக முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவிக்கப்பட்டுள்ளார். பதினாறு ஆண்டுகளாக தனது நாட்டை வழிநடத்திய முன்னாள் அறிவியலாளரான அவர், 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் மற்றும் சிரிய மோதலின்போது வன்முறையில் இருந்து தப்பியோடிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்கியதற்காக இவ்விருதைப்பெற்றார்.

4. ‘பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY)’ஐச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம்

  • பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான நிலைக்குழு, ‘பிரதமர் கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) அமலாக்கம்’ குறித்த தனது அறிக்கையைச்சமர்ப்பித்தது. இது திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. அவ்வறிக்கையின்படி, PMKVY 3.0இன்கீழ், 2021–22இல், 72 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. PMKVY 3.0இன்கீழ், சுமார் நான்கு இலட்சம் விண்ணப்பதாரர்களில், 8% பேர் மட்டுமே பணி பெற்றுள்ளனர். PMKVY 1.0, 2.0 மற்றும் 3.0 இன்போது, மொத்த பதிவு செய்தவர்களில் சுமார் 20% பேர் பயிற்சித்திட்டத்திலிருந்து வெளியேறினர்.

5. அண்மைய அரசாங்கத் தரவுகளின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு இடையிலான குழந்தை இறப்பு விகிதத்தில் அதிக இடைவெளியைக் கொண்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. சத்தீஸ்கர்

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சத்தீஸ்கர்

  • மாதிரி பதிவுமுறை புள்ளிவிவர அறிக்கை – 2020இன்படி, பெண் குழந்தை இறப்பு விகிதம் 41 உடன் ஒப்பிடும்போது ஆண் குழந்தை இறப்பு விகிதம் 35 என்ற வகையில், சத்தீஸ்கர் மாநிலம் 2020இல் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு இடையிலான குழந்தை இறப்பு விகிதத்தில் அதிக இடைவெளியைக் கொண்டுள்ள மாநிலம் ஆனது. இந்தியாவில் ஆண் மற்றும் பெண் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2020இல் சமமாக உள்ளது. குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒவ்வொரு 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கும் நிகழும் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கையாகும்.
  • கிராமப்புற இந்தியாவில், இடைவெளி குறைந்திருந்தாலும், ஆண் IMRஐவிட பெண் IMR சற்றதிகமாகவே உள்ளது. நகர்ப்புற இந்தியாவில், 2020ஆம் ஆண்டளவில் பெண்களின் IMR ஆண்களைவிட குறைவாக உள்ளது.

6. பொது சேவை மையத்தின் (CSC) SPVஇன் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. K சுப்ரமணியன்

ஆ. சஞ்சை குமார் இராகேஷ்

இ. K V காமத்

ஈ. சாரதா குமார் ஹோதா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சஞ்சை குமார் இராகேஷ்

  • பொது சேவை மையத்தின் (CSC) சிறப்பு நோக்க வாகனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சை குமார் ராகேஷ், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் நடைபெற்ற CSCஇன் வாரியக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சஞ்சை குமார் ராகேஷ் இஆப–இலிருந்து விருப்ப ஓய்வுபெற்றபிறகு கடந்த 2020ஆம் ஆண்டில் CSC SPVஇன் CEOஆக பொறுப்பேற்றார். திரிபுராவின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

7. ஜெனரல் பிபின் இராவத்தின் பெயரிடப்பட்ட கிபித்து இராணுவப்படை அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. லடாக்

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அருணாச்சல பிரதேசம்

  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் லோகித் பள்ளத்தாக்கின் கரையிலுள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கிபித்து இராணுவப்படைக்கு இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத்தளபதி ஜெனரல் பிபின் இராவத்தின் பெயர் சூட்டப்பட்டது. இது மெய்யெல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைந்துள்ளது. ஜெனரல் இராவத் 1999–2000 வரை கிபித்துவில் தனது பட்டாலியன் கோர்க்கா ரைபிள்களுக்கு தலைமைதாங்கினார் மற்றும் அப்பகுதியில் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பங்களித்தார்.

8. ‘சர்வதேச PCOS விழிப்புணர்வு மாதமாக’ அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. ஆகஸ்ட்

ஆ. செப்டம்பர்

இ. அக்டோபர்

ஈ. நவம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. செப்டம்பர்

  • செப்டம்பர் மாதம் சர்வதேச PCOS விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (சினைப்பை நோய்க்குறி PCOS) என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறாகும்; இது பெண் மலட்டுத்தன்மைக்கும் ஒரு காரணமாக அமைகிறது. PCOS மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது. உலகளவில், பத்தில் 3 முதல் 4 பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

9. 2022 – உலக முதலுதவி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Leaving No one Behind

ஆ. Lifelong First Aid

இ. Learning First Aid

ஈ. First Aid; Second Life

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Lifelong First Aid

  • உலக முதலுதவி நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2022), உலக முதலுதவி நாள் 2022 செப்டம்பர்.10 அன்று வந்தது. “Lifelong First Aid” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். முதலுதவியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதுகுறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

10. ‘இராச மிளகாய்க்கு’ புகழ்பெற்ற எந்த இந்திய மாநிலம், ‘மிர்ச்சி திருவிழாவை’ (மிளகாய்த்திருவிழா) நடத்தியது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. ஹரியானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நாகாலாந்து

  • நாகாலாந்து மாநிலம், ‘நாகா மிர்ச்சா’ என்றும் அழைக்கப்படும் ‘இராச மிளகாய்க்குப்’ புகழ்பெற்றதாகும். இது உலகின் காரமான மிளகாய் வகைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. தோட்டக்கலைத் துறையின் நிதியுதவியுடன் செய்யாமா கிராமச்சபையால் முதன்முதலில், ‘நாகா மிர்ச்சா’ திருவிழா அண்மையில் நடத்தப்பட்டது. ‘நாகா இராச மிளகாய்’ உட்பட பல்வேறு வகையான பயிர்களுக்கு செய்யாமா கிராமம் புகழ்பெற்றதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு (Annie Ernaux) அறிவிக்கப்பட்டுள்ளது.

2. வேதியியல்: மூவருக்கு நோபல்

மருந்துகளை உருவாக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர் பெர்டோசி, மோர்டென் மெல்டல் மற்றும் பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் பெர்டோசி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். ஷார்ப்லெஸ் கலிபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர். மெல்டல் டென்மார்க்கின் கோபென்ஹெகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், DNA வரைபடமாக்கல் மற்றும் ஒருகுறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்கலை உருவாக்குவதற்கும் பயன்படும் ‘கிளிக் கெமிஸ்ட்ரி’ மற்றும் உயிரி ஆர்த்தோகனல் எதிர்வினைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த நோபல் பரிசு அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் ஷார்ப்லெஸ் ஏற்கெனவே கடந்த 2001ஆம் ஆண்டும் நோபல் பரிசை வென்றுள்ளார். அதன்மூலமாக, நோபல் பரிசை இரண்டு முறை வென்ற 5ஆவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மனிதர்களின் பரிணாமம் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட சுவீடன் விஞ்ஞானியான சுவான்டெ பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரான்ஸைச் சேர்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசெர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் சீலிங்கெர் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

3. புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப்பதிவு நடைமுறை: 24 மாநிலங்களில் நடைமுறை

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப்பதிவு நடைமுறை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்ப -ட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சிலின் 41ஆவது ஆண்டு கூட்டத்தின் தீர்மானம்மூலமாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அதில் மேலும் கூறியிருப்பதாவது: ஒருவர் தனது சொந்த வாகனத்தில் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு அல்லது யூனியன் பிரதேசத்துக்கு குடிபெயரும்போதும், அந்த வாகனத்தை மறுபதிவு செய்யவேண்டும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர். வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், புதிய வாகனப்பதிவு நடைமுறை தொடர்பான அறிவிக்கையை நடுவணரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

இந்தப் புதிய ‘பாரத் சீரிஸ்’ வாகனப்பதிவு நடைமுறை மூலமாக, நாடு முழுவதும் சொந்த வாகனத்தில் பயணிப்போர் அல்லது சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படமாட்டாது. மேலும், மாநில மற்றும் உள்ளூர் நடைமுறைகள் அடிப்படையிலான வாகன வரிகளைச்செலுத்துவதிலிருந்தும் விலக்களிக்கப்படும்.

இந்தப் புதிய நடைமுறையின்கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பர்மிட்டுகள் மற்றும் 2.75 இலட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

வாகன வேகம் அதிகரிப்பு: மேலும், தேசிய விரைவுச் சாலைகளில் வாகனங்களின் இயக்க வேகத்தை மணிக்கு 140 கிமீ என்ற அளவுக்கு உயர்த்த நடுவண் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக அந்தத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் கூறியிருந்தார்.

மேலும், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன இயக்க வேகம் குறைந்தபட்சம் மணிக்கு 100 கிமீ என்ற அளவிலும், இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகம் மணிக்கு 80 கிமீ முதல் 75 கிமீ வரை இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

6th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. The Nobel Prize for Physics 2022 is being shared by three scientists, for their work in which field?

A. Nuclear Physics

B. Quantum mechanics

C. Atomic science

D. Space Science

Answer & Explanation

Answer: B. Quantum mechanics

  • The Nobel Prize for Physics 2022 is being shared by three scientists, Alain Aspect, John F Clauser and Anton Zeilinger, for their work on quantum mechanics. The three scientists conducted a series of experiments on entangled quantum states, where two separate particles behave like a single unit. Their results will have implications in the fields of quantum computers, quantum networks and secure quantum encrypted communication.

2. President Droupadi Murmu launched ‘herSTART’, a startup platform for women entrepreneurs in which city?

A. Mumbai

B. Ahmedabad

C. Varanasi

D. Lucknow

Answer & Explanation

Answer: B. Ahmedabad

  • President Droupadi Murmu launched ‘herSTART’, a startup platform for women entrepreneurs created by Gujarat University in Ahmedabad. The platform dedicated to women entrepreneurs, will boost innovation and startup efforts of women entrepreneurs and connect women entrepreneurs with various government and private enterprises.

3. Who is the recipient of 2022 Nansen Award given by UN High Commissioner for Refugees?

A. Xi Jinping

B. Angela Merkel

C. Volodymyr Zelenskyy

D. Anthony Albanese

Answer & Explanation

Answer: B. Angela Merkel

  • Former German Chancellor Angela Merkel was named as the recipient of Nansen Award given by UN High Commissioner for Refugees. The former scientist, who led her country for 16 years, was awarded for offering haven to over 1.2 million refugees and asylum seekers fleeing violence during Syrian conflict, when other countries were turning their backs on them.

4. Which Union Ministry implements the ‘Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) ‘?

A. Ministry of Finance

B. Ministry of Skill Development and Entrepreneurship

C. Ministry of Education

D. Ministry of MSME

Answer & Explanation

Answer: B. Ministry of Skill Development and Entrepreneurship

  • The Standing Committee on Labour, Textiles and Skill Development chaired by Bhartruhari Mahtab submitted its report on ‘Implementation of Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)’. It is implemented by Ministry of Skill Development and Entrepreneurship. As per the report, Under PMKVY 3.0, in 2021–22, only 72 % was utilised.  Under PMKVY 3.0, out of about four lakh candidates, only 8% have been placed.  During PMKVY 1.0, 2.0, and 3.0, about 20% of the total enrolled candidates dropped out of the training programme.

5. As per recent government data, which state has the highest gap in infant mortality rate between boys and girls in 2020?

A. Tamil Nadu

B. Chhattisgarh

C. Maharashtra

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Chhattisgarh

  • According to Sample Registration System Statistical Report 2020, Chhattisgarh had the highest gap in 2020, with a male infant mortality rate of 35 compared to female infant mortality rate of 41. The male and female infant mortality rate (IMR) equalised in 2020 in India. Infant mortality rate is the number of infant deaths for every 1,000 live births. In rural India, female IMR remained marginally higher than male IMR though the gap had reduced. In urban India, the female IMR fell below that of males by 2020.

6. Who has been appointed as the Managing Director of the Common Service Centre (CSC) SPV?

A. K Subramanian

B. Sanjay Kumar Rakesh

C. K V Kamath

D. Sarada Kumar Hota

Answer & Explanation

Answer: B. Sanjay Kumar Rakesh

  • Sanjay Kumar Rakesh, CEO of Common Service Centres (CSC) Special Purpose Vehicle, has been appointed as the Managing Director of the company. The decision to this effect was taken at the Board Meeting of CSC held at the Ministry of Electronics & IT. Sanjay Kumar Rakesh took over as the CEO of CSC SPV in 2020 after taking voluntary retirement from IAS. He served as the Additional Chief Secretary of Tripura and Joint Secretary in the Ministry of Electronics & IT.

7. Kibithu military garrison, which was named after General Bipin Rawat, is located in which state/UT?

A. Uttarakhand

B. Arunachal Pradesh

C. Ladakh

D. Punjab

Answer & Explanation

Answer: B. Arunachal Pradesh

  • The strategically important Kibithu military garrison on the banks of Lohit Valley, Arunachal Pradesh was named after India’s first Chief of Defence Staff Gen Bipin Rawat. It is located along the Line of Actual Control. General Rawat commanded his Battalion Gorkha Rifles at Kibithu from 1999–2000 and contributed in strengthening the security structure in the area.

8. Which month is observed as ‘International PCOS Awareness Month’?

A. August

B. September

C. October

D. November

Answer & Explanation

Answer: B. September

  • The month of September is recognized as International PCOS Awareness Month. Polycystic ovary syndrome (PCOS) is a common hormonal disorder in women, which is also a cause of female infertility. PCOS is caused by a combination of genetic and environmental factors. Globally, three to four women out of 10 women suffer from the disorder.

9. What is the theme of the ‘World First Aid Day 2022’?

A. Leaving No one Behind

B. Lifelong First Aid

C. Learning First Aid

D. First Aid; Second Life

Answer & Explanation

Answer: B. Lifelong First Aid

  • ‘World First Aid Day 2022’ is celebrated every year on the second Saturday of September. This year, World First Aid Day 2022 falls on 10 September 2022 and is celebrated under the theme ‘Lifelong First Aid’. The day is observed to promote the significance of first aid and create awareness on a global level about how it can save precious lives.

10. Which Indian state famous for its ‘King Chilli’, organised a ‘Mirchi Festival’ (Chlli Festival)?

A. Assam

B. Nagaland

C. Arunachal Pradesh

D. Haryana

Answer & Explanation

Answer: B. Nagaland

  • Nagaland is famous for its King Chilli also called as ‘Naga Mircha’. It is considered as one of the hottest chilli varieties in the world. The first ever Naga Mircha Festival was recently hosted by Seiyhama Village Council sponsored by the Department of Horticulture. Seiyhama village has become the dominant cultivator with a variety of species including the Naga King chilli.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!