TnpscTnpsc Current Affairs

6th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

6th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 6th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. லிஸ் டிரஸ் என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்?

அ. பிரான்ஸ்

ஆ. ஆஸ்திரேலியா

இ. ஐக்கிய இராச்சியம் (UK)

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஐக்கிய இராச்சியம் (UK)

  • ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக பழைமைவாத கட்சியின் தலைவர் லிஸ் டிரஸ் நியமிக்கப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழைமைவாத கட்சியின் உட்கட்சித் தலைமைப் போட்டியில், 47 வயதான லிஸ் டிரஸ் தனக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்தார். தெரசா மே மற்றும் மார்கரெட் தாட்சரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் உள்ளார்.

2. ஆமதாபாத் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான சின்னத்தின் பெயர் என்ன?

அ. ஷெர்

ஆ. சவாஜ்

இ. விகாஸ்

ஈ. லியோ

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சவாஜ்

  • ஆமதாபாத்தில் முப்பத்தாறாவது தேசிய விளையாட்டுப்போட்டிக்கான சின்னம் மற்றும் கீதத்தை நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இந்தச் சின்னத்திற்கு குஜராத்தியில் ‘குட்டி’ என்று பொருள்படும், ‘சவாஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் கீதத்தின் கருப்பொருள், “ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்” என்ற அடிப்படையில் அமைந்து உள்ளது. தேசிய விளையாட்டுப்போட்டிகள், குஜராத் மாநிலத்தில் உள்ள ஆறு நகரங்களில் செப்.29 முதல் அக்.12 வரை நடத்தப்படும்.

3. ‘மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களின் மாநாட்டை’ நடத்திய மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. குஜராத்

  • மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (S&T) அமைச்சர்களின் குஜராத் அறிவியல் மாநாட்டை இந்தியப் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த மாநாட்டில், “2030–க்குள் R&D–இல் தனியார்துறை முதலீட்டை இரட்டிப்பாக்குதல்” என்ற கருப்பொருளில் விவாதங்கள் இடம்பெறும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்தத் தேசிய STI கொள்கையின்படி தனிப்பட்ட STI கொள்கையை வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும்.

4. ஊசியில்லாத, சுவாசிக்கும் வகையிலான COVID–19 தடுப்பூசியை அங்கீகரிக்கும் முதல் நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. சீனா

இ. ரஷ்யா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீனா

  • தியாஞ்சினைச்சார்ந்த CanSino பயோலாஜிக்ஸ் தயாரித்த COVID–19 தடுப்பூசியின் ஊசியில்லாத, சுவாசிப்பதன்மூலம் செலுத்தப்படும் பதிப்பை அங்கீகரித்த முதல் நாடு சீனா ஆகும். பூஸ்டர் தடுப்பூசியாக அவசரகால பயன்பாட்டிற்காக CanSino–இன் Ad5–nCoV–ஐ சீனா அங்கீகரித்துள்ளது. சுவாசிப்பதன்மூலம் செலுத்தப்படும் இந்தத்தடுப்பு மருந்து செல்லுலார் நோயெதிர்ப்பாற்றலைத் தூண்டுகிறது மற்றும் மியூகோசல் நோயெதிர்ப்பாற்றலையும் இது தூண்டும்.

5. ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெசு, கீழ்க்காணும் எந்நாட்டின் முன்னாள் அதிபரை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான தனது புதிய சிறப்புத்தூதராக நியமித்தார்?

அ. கிர்கிஸ்தான்

ஆ. பாகிஸ்தான்

இ. கஜகஸ்தான்

ஈ. தாய்லாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கிர்கிஸ்தான்

  • ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ், கிர்கிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரை ஆப்கானிஸ்தானுக்கான தனது புதிய சிறப்புத்தூதராக நியமித்தார். கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றிய ரோசா ஒடுன்பயேவா, இந்த ஆண்டு ஜூன் மாதம் பதவி விலகிய டெபோரா லியோன்ஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ‘உறியடி’யை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மத்திய பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. மகாராஷ்டிரா

  • மகாராஷ்டிர மாநிலத்தில், ‘தாஹி–ஹண்டி’ எனப்படும் ‘உறியடி’ அதிகாரப்பூர்வ விளையாட்டாக அங்கீகரிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். இவ்விளையாட்டில் பங்கேற்போர், ‘கோவிந்தாக்கள்’ என்னும் விளையாட்டுப்பிரிவின்கீழ் பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள்; மேலும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் `10 இலட்சம் ஆயுள்காப்பீட்டுத்தொகையும் அவர்கள் பகுதியளவு ஊனமுற்றவர்களாக இருந்தால் `5 லட்சம் காப்பீடும் அரசு வழங்கும். ‘கோபாலகலா’ என்றும் அழைக்கப்படும் ‘தாஹி–ஹண்டி’ என்பது கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது நடைபெறும் ஒரு சடங்கு விழாவாகும்.

7. 4 இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்களை தனது தூதுவர்களாக நியமித்துள்ள நிதிச்சேவை நிறுவனம் எது?

அ. பேபால்

ஆ. மாஸ்டர்கார்டு

இ. விசா

ஈ. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மாஸ்டர்கார்டு

  • இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்களான இலக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் இரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரை இந்தியாவில் தனது விளம்பரத் தூதுவர்களாக நியமித்து மாஸ்டர்கார்டு அறிவித்துள்ளது. 2022 – தாமஸ் கோப்பை மற்றும் 2022 – பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுகளில் வெற்றி பெற்ற இவர்கள் இந்தியாவில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பாதுகாப்பு மற்றும் வசதி குறித்து விழிப்புணர்வைப் பரப்புவார்கள்.

8. ‘மேடம் சார்’ என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?

அ. மஞ்சரி ஜருஹர்

ஆ. கிரண் பேடி

இ. காஞ்சன் சௌத்ரி

ஈ. R ஸ்ரீலேகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மஞ்சரி ஜருஹர்

  • இந்தியாவின் முதல் ஐந்து பெண் காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான மஞ்சரி ஜருஹரின் சுயசரிதை, “மேடம் சார்” ஆகும். சிறந்த சேவைக்காக இந்திய அரசின் காவல்துறை பதக்கத்தைப் பெற்றவர் அவர். கடந்த 1976–இல்
    இகாப–உக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பீகார் மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை அதிகாரியும் ஆவார். அவர், CISF இன் சிறப்பு தலைமை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றார். தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் (TCS) ஆலோசகராக உள்ளார்.

9. 2023இல் வரும் 17ஆவது வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடம் எது?

அ. மதுரை

ஆ. சென்னை

இ. மும்பை

ஈ. இந்தூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. இந்தூர்

  • 2023இல் வரும் 17ஆவது, ‘வெளிநாடுவாழ் இந்தியர் நாள்’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தூரில் நடைபெறும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பைக்குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.9ஆம் தேதி அன்று வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1915ஆம் ஆண்டு இதே நாளில் ‘மகாத்மா’ காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியதையும் இந்நாள் நினைவுபடுத்துகிறது.

10. இந்தியாவில், ‘அக்ஷய் உர்ஜா திவாஸ்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.15

ஆ. ஆகஸ்ட்.20

இ. செப்டம்பர்.15

ஈ. அக்டோபர்.15

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட்.20

  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சி மற்றும் அதன் திறன்மிகு பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆக.20ஆம் தேதி, ‘அக்ஷய் உர்ஜா திவாஸாக’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்தநாளையும் நினைவுகூருகிறது. இந்த நாளை முதன்முதலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 2004இல் கொண்டாடுவதாக அறிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்தது. கடந்த பிப்ரவரி.10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அவர் செப்.12 அன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் செப்.13-ஆம் தேதி பொறுப்பேற்பார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65; உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது.

2. பிரிட்டன் பிரதமராகிறார் லிஸ் டிரஸ்

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ள லிஸ் டிரஸ், அந்நாட்டின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு உள்கட்சியிலேயே அதிக எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அவர் அப் பதவியை இராஜிநாமா செய்தார். அதைத்தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க பல்வேறு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இறுதியில் லிஸ் டிரஸுக்கும் ரிஷி சுனக்குக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இறுதிக்கட்டமாக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 1,72,437 நிர்வாகிகள் இணையவழியிலும் தபால் மூலமாகவும் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், 81,326 வாக்குகளைப் பெற்று லிஸ் டிரஸ் வெற்றிபெற்றார். ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகள் கிடைத்தன. 654 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

இதன்மூலமாக கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக 47 வயதான லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டனின் புதிய பிரதமராகவும் அவர் பொறுப்பேற்கவுள்ளார். அப்பதவியை வகிக்கவுள்ள 3-ஆவது பெண் என்ற பெருமையையும் லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். ஏற்கெனவே மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோர் பிரிட்டன் பிரதமராகப் பதவி வகித்துள்ளனர்.

3. தில்லி இராஜபாதை, ‘கடமைப்பாதையாக’ பெயர்மாற்றம்

புது தில்லியில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க இராஜபாதையின் பெயரை ‘கர்த்தவ்ய பாதை’ (கடமைப்பாதை) எனப் பெயர்மாற்றம் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற வளாகம், குடியரசுத்துணைத்தலைவர் மாளிகை உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் கட்டடப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன்கீழ், இந்தியா கேட் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட இராஜபாதையை செப்.8-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இப்பாதையில் புதிய நாடாளுமன்ற கட்டடம், நடுவணரசின் தலைமைச்செயலக அலுவலகங்கள், குடியரசு துணைத்தலைவரின் புதிய இல்லம், பிரதமரின் புதிய இல்லம் மற்றும் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

தற்போது இந்தியா கேட் அருகே அமைந்துள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலையிலிருந்து குடியரசுத்தலைவர் மாளிகை வரை அமைந்துள்ள சாலை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ‘மன்னரின் பாதை’ என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு இது இராஜபாதையாக பெயர்மாற்றம் பெற்றது. இப்போது இந்தச் சாலையின் பெயரை ‘கர்த்தவ்ய பாதை’ (கடமைப்பாதை) எனப் பெயர்மாற்றம் செய்ய புது தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை லோக் கல்யாண் சாலை எனவும், ஔரங்கசீப் சாலை ஏ பி ஜெ அப்துல் கலாம் சாலை எனவும், 2017-இல் டல்ஹெளசி சாலை தாரா ஷிகோ சாலை எனவும் 2018-இல் தீன்மூர்த்தி சௌக் என்பது தீன்மூர்த்தி ஹைஃபா செளக் எனவும் பெயர்மாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

6th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Liz Truss was named as the new Prime Minister of which country?

A. France

B. Australia

C. United Kingdom

D. Germany

Answer & Explanation

Answer: C. United Kingdom

  • Leader of the Conservative Party Liz Truss was named as the new Prime Minister of the United Kingdom. The 47–year–old leaderbeat her rival, former finance minister Rishi Sunak in an internal leadership contest of the ruling Conservative party, after Boris Johnson’s resignation in July. Liz Truss will be only the UK’s third female Prime Minister following Theresa May and Margaret Thatcher.

2. What is the name of the mascot for the 36th National Games Ahmedabad?

A. Sher

B. Savaj

C. Vikas

D. Leo

Answer & Explanation

Answer: B. Savaj

  • Union Home Minister Amit Shah launched the mascot and the anthem for the 36th National Games in Ahmedabad. The mascot is named as ‘Savaj’ which means cub in Gujarati. The theme of the anthem is ‘Ek Bharat Shreshtha Bharat’. The National Games will be organised from September 29 to October 12, across six cities in the state.

3. Which state hosted the ‘Conclave of State Science & Technology (S&T) Ministers’?

A. Maharashtra

B. Gujarat

C. Bihar

D. Madhya Pradesh

Answer & Explanation

Answer: B. Gujarat

  • The Gujarat Science Conclave of State Science & Technology (S&T) Ministers is set to be inaugurated by Prime Minister Narendra Modi at Science City, Ahmedabad. The conclave will include discussions on the theme of ‘Doubling Private Sector investment in R&D by 2030’. All States and UTs will be asked to have individual STI policy on the lines of National STI policy.

4. Which is the first country to approve needle–free, inhaled version of COVID–19 vaccine?

A. USA

B. China

C. Russia

D. Israel

Answer & Explanation

Answer: B. China

  • China became the first country to approve a needle–free, inhaled version of a Covid–19 vaccine made by Tianjin–based CanSino Biologics. China approved CanSino’s Ad5–nCoV for emergency use as a booster vaccine. The inhaled version can stimulate cellular immunity and induce mucosal immunity to boost protection without intramuscular injection.

5. UN Secretary–General Antonio Guterres appointed a former president of which country as his new special envoy for Afghanistan?

A. Kyrgyzstan

B. Pakistan

C. Kazakhstan

D. Thailand

Answer & Explanation

Answer: A. Kyrgyzstan

  • U.N. Secretary–General Antonio Guterres appointed a former president of Kyrgyzstan as his new special envoy for Afghanistan. Roza Otunbayeva, who also served as foreign minister of Kyrgyzstan, replaces Deborah Lyons, who stepped down in June this year.

6. ‘Dahi–Handi’ has been announced as the official sport of which state?

A. Gujarat

B. Uttar Pradesh

C. Madhya Pradesh

D. Maharashtra

Answer & Explanation

Answer: D. Maharashtra

  • Maharashtra Chief Minister Eknath Shinde announced that ‘Dahi–Handi’ will be recognised as an official sport in the state. The ‘Govindas’ who participate will get jobs under the sports category and the state will provide life insurance cover of ₹10 lakhs for all participants and insurance ₹5 lakhs if they end up being partially handicapped. ‘Dahi–Handi’ also known as ‘Gopalakala’ is a ritual held during Janmashtami festival.

7. Which financial services company has appointed 4 Indian badminton stars as its ambassadors?

A. Paypal

B. Mastercard

C. Visa

D. American Express

Answer & Explanation

Answer: B. Mastercard

  • Mastercard has partnered with Indian badminton stars Lakshya Sen, Kidambi Srikanth, Satwiksairaj Rankireddy and Chirag Shetty and appointed them as brand ambassadors in India. The winners of the Thomas Cup 2022 and Birmingham 2022 Commonwealth Games will spread awareness about the safety, security, and convenience of digital payments in India.

8. Who is the author of the autobiography titled ‘Madam Sir’?

A. Manjari Jaruhar

B. Kiran Bedi

C. Kanchan Chaudhary

D. R Sreelekha

Answer & Explanation

Answer: A. Manjari Jaruhar

  • ‘Madam Sir’ is the auto–biography of Manjari Jaruhar, one of the first five women police officers in India. She is the recipient of the government of India’s Police Medal for meritorious service. She was also the first women police officer from the state of Bihar, when she was selected for the IPS in 1976. She retired as Special Director General of the CISF, and is presently an advisor to Tata Consultancy Services (TCS).

9. Which is the venue of the 17th Pravasi Bharatiya Divas 2023?

A. Madurai

B. Chennai

C. Mumbai

D. Indore

Answer & Explanation

Answer: D. Indore

  • The External Affairs Ministry of India announced that the 17th Pravasi Bhartiya Divas 2023 will be held at Indore in January next year. Pravasi Bharatiya Divas is celebrated every year on 9th January to mark the contribution of the overseas Indian community in the development of India. It also commemorates the return of Mahatma Gandhi from South Africa to India on the same day in the year 1915.

10. When is the ‘Akshay Urja Diwas’ celebrated in India?

A. August.15

B. August.20

C. September.15

D. October.15

Answer & Explanation

Answer: B. August.20

  • Every year, August 20 is observed as the Akshay Urja Diwas to raise awareness on development and efficient use of renewable energy in India. The day also commemorates the birth anniversary of former Prime Minister Rajiv Gandhi. The day was first organised by former Prime Minister Manmohan Singh in 2004.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!