Science Questions

6th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

6th Science Lesson 6 Questions in Tamil

6] உடல் நலமும் சுகாதாரமும்

1) சூரிய ஒளியின் உதவியுடன் தயாரிக்கப்படும் வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

விளக்கம்: சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோல் தயாரிப்பது வைட்டமின் D ஆகும். எனவே இது சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.

2) ஹமியோஸ்டானிஸ் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

A) நோயற்ற நிலை

B) சமநிலையை பேணுதல்

C) நோயுள்ள நிலை

D) சமநிலையற்ற நிலை

விளக்கம்: உடல்நலம் என்பது உடல் சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் தகவமைத்து கொள்வது மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்றன சிறப்பான நிலையாகும். இதுவே ஹமியோஸ்டனிஸ் எனப்படுகிறது

3) உடல்நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும் என்று கூறிய அமைப்பு எது?

A) உலக வர்த்தக அமைப்பு

B) உலக சுகாதார அமைப்பு

C) யுனெஸ்கோ

D) ஐநா சபை

விளக்கம்: உலக சுகாதார நிறுவனம், உடல்நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும் என்று கூறியுள்ளது.

4) உணவில் உள்ள எதன் அடிப்படையில் சத்துப்பொருட்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

A) வேதிப்பொருட்கள்

B) இயற்பியல் தன்மை

C) பொருளின் நிறம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: உடலில் உள்ள வேதிப்பொருட்கள் நமக்கு ஆற்றல் அல்லது சக்தியைத் தருகிறது. உடல் வளர்ச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றன. இவைகளை நாம் சத்துப் பொருட்கள் என்கிறோம். உணவில் உள்ள வேதிப்பொருட்களின் அடிப்படையில் சத்துப் பொருட்கள் பிரிக்கப்படுகின்றன.

5) பீட்ரூட் என்பது கீழ்க்கண்ட எதன் மூலப்பொருள் ஆகும்?

A) சர்க்கரை

B) ஸ்டார்ச்

C) நார்ச்சத்து உணவு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பீட்ரூட் என்பது சக்கரையின் மூலம் ஆகும்.

சர்க்கரை – பழங்கள், தேன், கரும்புச் சர்க்கரை, பீட்ரூட்

ஸ்டார்ச் – அரிசி, கோதுமை, சோளம், உருளைக் கிழங்கு

நார்ச்சத்து உணவு – முழுதானியங்கள், கொட்டை உணவுகள்.

6) கொழுப்பு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஆற்றல் தரும் ஓர் உணவு ஆகும்

2. கார்போஹைட்ரேட்டை விட குறைவான ஆற்றலை தரக் கூடியது ஆகும்.

3. நமது உடலைப் பாதுகாத்து நம் செல்களையும் பாதுகாக்கின்றன.

4. கொழுப்பு உள்ள உணவுப் பொருட்கள் – வெண்ணெய், நெய், பன்னீர், பாலாடைக்கட்டி

A) 1, 2, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஆற்றல் தரும் ஓர் உணவு ஆகும்

2. கார்போஹைட்ரேட்டை விட அதிக ஆற்றலை தரக் கூடியது ஆகும்.

3. நமது உடலைப் பாதுகாத்து நம் செல்களையும் பாதுகாக்கின்றன.

4. கொழுப்பு உள்ள உணவுப் பொருட்கள் – வெண்ணெய், நெய், பன்னீர், பாலாடைக்கட்டி.

7) அதிகமாக புரதம் உள்ள உணவு எது?

A) சோயாபீன்ஸ்

B) கீரை

C) கோதுமை

D) தானியம்

விளக்கம்: அதிகமாக புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.

8) புரதங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) உடல் வளர்ச்சி

B) செல் பழுதுபார்த்தல்

C) செரிமானம்

D) உயிர் வேதிவினைகள் நடக்க

விளக்கம்: புரதங்கள் பொதுவாக உடல் வளர்ச்சிகான உணவு என்று அழைக்கப்படுகிறது. செல், பழுதுபார்த்தல் மற்றும் செரிமானம் போன்ற பல்வேறு விதமான உடற்செயல்களுக்கும் புரதங்கள் மிகவும் அவசியம்.

உயிர் வேதிவினைகள் – வைட்டமின்கள்.

9) உடல் வளர்ச்சிக்கான புரதங்கள்—————-என அழைக்கப்படுகின்றன?

A) வளர்ச்சிப் புரதங்கள்

B) ஆற்றல் புரதங்கள்

C) உணவுப் புரதங்கள்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: உடல் வளர்ச்சிகான புரதங்கள் உணவுப் புரதங்கள் ஆகும். புரதங்கள் மீன், முட்டை, பால், கோழி, சோயாபீன்ஸ் போன்ற உணவுகளில் காணப்படுகின்றன.

10) பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுவது எது?

A) வைட்டமின்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) புரதங்கள்

D) கொழுப்புகள்

விளக்கம்: வைட்டமின்களளானது, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சூரிய ஒளி போன்றவற்றில் காணப்படுகின்றன. இவை பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது.

11) கீழ்க்கண்டவற்றில் எது நீரில் கரையும் வைட்டமின்கள்?

A) A

B) D

C) E

D) C

விளக்கம்: நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – A, E, D, K.

12) கீழ்க்கண்டவற்றில் எது முக்கிய வைட்டமின் அல்ல?

A) A

B) D

C) B1

D) C

விளக்கம்: வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது. ஆறு முக்கிய வைட்டமின்கள்:

1. வைட்டமின் A

2. வைட்டமின் B

3. வைட்டமின் C

4. வைட்டமின் D

5. வைட்டமின் E

6. வைட்டமின் K

13) ஆரஞ்சு மற்றும் நெல்லிக்கனியில் காணப்படும் வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

விளக்கம்: வைட்டமின் C காணப்படும் உணவுகள்:

1. ஆரஞ்சு

2. நெல்லிக்கனி

3. பச்சை மிளகாய்

4. தக்காளி.

14) கீழ்க்கண்ட எது மாவுச்சத்துடன் தொடர்புடையது?

A) புரதங்கள்

B) கார்போஹைட்ரேட்டுகள்

C) வைட்டமின்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மாவுச்சத்துடன் தொடர்புடையது கார்போஹைட்ரேட் ஆகும். இது கீழ்க்கண்டவற்றில் காணப்படுகிறது.

1. கோதுமை

2. கொட்டைகள்

3. தானியம்

4. அரிசி

5. பழங்கள்.

15) கீழ்க்கண்டவற்றில் எது மாவுச்சத்தின் மூலப்பொருள் ஆகும்?

A) முழுதானியங்கள்

B) கொட்டை உணவுகள்

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: நார்ச்சத்து உணவின் மூலப்பொருட்கள் முழுதானியங்கள் மற்றும் கொட்டை உணவுகள் ஆகும்.

16) ஸ்கர்வி என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

விளக்கம்: ஸ்கர்வி என்ற நோய் வைட்டமின் C குறைபாட்டால் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வைட்டமின் C நிறைந்த கீழ்க்காணும் உணவுகளை உண்ண வேண்டும்::

1. ஆரஞ்சு

2. நெல்லிக்கனி

3. பச்சை மிளகாய்

4. தக்காளி

17) முருங்கையில் இல்லாத தாது உப்பு எது?

A) கால்சியம்

B) பொட்டாசியம்

C) இரும்பு

D) மெக்னீசியம்

விளக்கம்: முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

1. வைட்டமின் A

2. வைட்டமின் B

3. பொட்டாசியம்

4. இரும்புச்சத்து

5. கால்சியம்

6. புரதம்.

இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது.

18) கீழ்க்கண்டவற்றில் எது குவாஷியோர்கள் என்ற நோயின் குறைபாடு அல்ல?

A) வளர்ச்சிக் குறைபாடு

B) முகம் மற்றும் கால்களில் வீக்கம்

C) வயிற்றுப்போக்கு

D) எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை

விளக்கம்: குவாஷியோர்கள் என்பது ஒரு புரத குறைபாட்டு நோயாகும். இதன் அறிகுறிகள்:

1. வளர்ச்சிக் குறைபாடு

2. முகம், கால்களில் வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு

3. மூளைவளர்ச்சிக் குறைபாடு.

எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை மற்றும் மெதுவான உடல் வளர்ச்சி போன்றவை மராஸ்மஸ் நோயின் அறிகுறியாகும்.

19) கீழ்க்கண்டவற்றில் எது ஸ்டார்-ன் மூலப்பெர்ருள் அல்ல?

A) அரிசி

B) சோளம்

C) உருளைக்கிழங்கு

D) பழங்கள்

விளக்கம்: ஸ்டார்ச்சின் மூலப்பொருட்கள்:

1. அரிசி

2. கோதுமை

3. சோளம்

4. உருளைக்கிழங்கு

பழங்கள் என்பது சக்கரையின் மூலப்பொருள் ஆகும்.

20) உணவில் உள்ள வேதிப்பொருட்கள் அடிப்படையில் சத்துப்பொருட்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: உடலில் உள்ள வேதிப்பொருட்கள் நமக்கு ஆற்றல் அல்லது சக்தியைத் தருகிறது. உடல் வளர்ச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு உதவுகின்றன. இவைகளை நாம் சத்துப் பொருட்கள் என்கிறோம். உணவில் உள்ள வேதிப்பொருட்களின் அடிப்படையில் சத்துப் பொருட்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,

1. கார்போஹைட்ரேட்டுகள்

2. புரதங்கள்

3. கொழுப்புகள்

4. வைட்டமின்கள்

5. தாது உப்புகள்

6. நீர்

21) பொருத்துக.

அ. சர்க்கரை – 1. முழுதானியங்கள்

ஆ. ஸ்டார்ச் – 2. பீட்ரூட்

இ. நார்ச்சத்து உணவு – 3. உருளைக்கிழங்கு

A) 2, 1, 3

B) 3, 2, 1

C) 2, 3, 1

D) 1, 2, 3

விளக்கம்: சர்க்கரை – பழங்கள், தேன், கரும்புச் சர்க்கரை, பீட்ரூட்

ஸ்டார்ச் – அரிசி, கோதுமை, சோளம், உருளைக் கிழங்கு

நார்ச்சத்து உணவு – முழதானியங்கள், கொட்டை உணவுகள்.

22) தக்காளி மற்றும் பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் D

விளக்கம்: தக்காளி மற்றும் பச்சை மிளகாயில் உள்ளது வைட்டமின் C ஆகும். ஸ்கர்வி என்ற நோய் வைட்டமின் C குறைபாட்டால் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வைட்டமின் C நிறைந்த கீழ்க்காணும் உணவுகளை உண்ண வேண்டும்:

1. ஆரஞ்சு

2. நெல்லிக்கனி

3. பச்சை மிளகாய்

4. தக்காளி

23) மாலைக்கண் குறைபாட்டுடன் தொடர்புடைய வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் K

விளக்கம்: வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்:

1. மாலைக்கண் நோய்

2. தோல் வியாதி.

இதனைத் தவிர்க்க உண்ண் வேண்டிய உணவுகள்:

1. மீன் எண்ணெய்

2. முட்டை

3. பால்

4. நெய்

5. காரட்

6. சோளம்

7. மஞ்சள் நிற பழங்கள்

8. கீரைகள்

24) வைட்டமின் B-யுடன் தொடர்புடையது எது?

A) ஆரோக்கியமான நரம்பு

B) பல் ஈறுகள்

C) கண்பார்வை

D) இரத்தம் உறைதல்

விளக்கம்: வைட்டமின் B அதிகம் உள்ள உணவு உண்பதால் ஆரோக்கியமான நரம்பு மற்றும் இரத்த சிவப்பு அணுக்களை பெற முடியும்.

25) முட்டை முட்டை கோசு-வில் அதிகம் உள்ள வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் E

C) வைட்டமின் B

D) வைட்டமின் K

விளக்கம்: வைட்டமின் K-அதிகம் உள்ள உணவுகள்:

1. தக்காளி

2. முட்டை

3. முட்டைகோசு

4. பால்பொருட்கள்

வைட்டமின் K குறைபாட்டால் வரும் நோய் – இரத்தம் உறைதல் மற்றும் பற்கள் பலகீனம் அடைதல்.

26) கூற்றுகளை ஆராய்க.

1. வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப் பொருட்கள் 5 வகைப்படும்.

2. பீட்ரூட் என்பது சக்கரையின் மூலப்பொருள் ஆகும்.

3. கொழுப்பு கார்போஹைட்ரேட்டை விட அதிக ஆற்றலைத் தரக்கூடியது.

4. அதிகமான புரதம் உள்ள உணவு பருப்பு ஆகும்.

A) 2, 3 சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப் பொருட்கள் 6 வகைப்படும்.

2. பீட்ரூட் என்பது சக்கரையின் மூலப்பொருள் ஆகும்.

3. கொழுப்பு கார்போஹைட்ரேட்டை விட அதிக ஆற்றலைத் தரக்கூடியது.

4. அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ ஆகும்.

27) நரம்புத் தளர்ச்சி மற்றும் பார்வை குறைபாடு கீழ்க்கண்ட எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் E

C) வைட்டமின் D

D) வைட்டமின் K

விளக்கம்: வைட்டமின் E குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்:

1. நரம்புத் தளர்ச்சி

2. பார்வை குறைபாடு

இதனைத் தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகள்:

1. தாவர எண்ணெய்கள்

2. முழுகோதுமை

3. பச்சை காய்கறிகள்

4. ஆப்பிள்.

28) கூற்றுகளை ஆராய்க.

1. சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுவது – வைட்டமின் D

2. நெல்லிக்கனியை விட ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் C காணப்படுவதில்லை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுவது – வைட்டமின் D

2. நெல்லிக்கனியை விட ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் C காணப்படுவதில்லை.

29) ரிக்கெட்ஸ் என்ற நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) பாஸ்பரஸ்

B) கால்சியம்

C) இரும்புச் சத்து

D) அயோடின்

விளக்கம்: கால்சியம் – ரிக்கெட்ஸ்

பாஸ்பரஸ் – ஆஸ்டியோமலேசியா

அயோடின் – கிரிட்டினிசம் (குழந்தைகளுக்கு)

இரும்புச் சத்து – இரத்தச் சோகை.

30) தாது உப்புகள்______________என்றும் அழைக்கப்படுகின்றன.

A) பாதுகாப்பு உணவுகள்

B) ஆற்றல் உணவுகள்

C) வளர்ச்சிக்கான உணவுகள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தாது உப்புகள் உடல் வளர்ச்சிக்கும், பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தவும் தேவைப்படுகின்றன. இவை பாதுகாப்பு உணவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

31) இரும்புச்சத்து கீழ்க்கண்ட எதற்குப் பயன்படுகிறது?

A) வலுவான எலும்புகள்

B) வலுவான பற்கள்

C) மூளை வளர்ச்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இரும்புச் சத்துக்கள் ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றம் மூளை வளர்ச்சிக்கு பயன்படுகின்றன.

32) இனவிருத்திக்கு காரணமான வைட்டமின் எது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் D

C) வைட்டமின் E

D) வைட்டமின் K

விளக்கம்: இன விருத்திக்கு காரணமானது வைட்டமின் E ஆகும். இதன் குறைபாட்டால் வரும் நோய்கள்:

1. நரம்பு தளர்ச்சி

2. பார்வை குறைபாடு

33) வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு பயன்படும் தாது உப்பு எது?

A) பாஸ்பரஸ்

B) மெக்னீசியம்

C) இரும்புச் சத்து

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு பயன்படும் தாதுஉப்புகள்:

1. கால்சியம்

2. பாஸ்பரஸ்

34) ஆரஞ்சு பழங்களை விட எதில் 20 மடங்கு வைட்டமின் ஊ அதிகம் காணப்படுகிறது?

A) நெல்லிக்கனி

B) ஆப்பிள்

C) பப்பாளி

D) தக்காளி

விளக்கம்: நெல்லிக்கனிகளில் ஆரஞ்சு பழங்களைவிட 20 மடங்கு அதிக வைட்டமின் C காணப்படுகிறது. வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் நோய் ரிக்கட்ஸ் ஆகும்.

35) இரத்தம் உறைதலுக்கு பயன்படும் தாது உப்பு எது?

A) கால்சியம்

B) பாஸ்பரஸ்

C) இரும்பு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கால்சியத்தின் பயன்கள்:

1. வலுவான எலும்புகள்

2. வலுவான பற்கள்

3. இரத்தம் உறைதல்

36) இரத்தம் உறைதல் மற்றும் பற்கள் பலகீனம் அடைதல் கீழ்க்காணும் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் E

C) வைட்டமின் C

D) வைட்டமின் K

விளக்கம்: இரத்தம் உறைதல் மற்றும் பற்கள் பலகீனம் அடைதல் போன்ற நோய் வைட்டமின் K குறைவதால் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பால்பொருட்கள், முட்டை, முட்டைகோசு போன்ற உணவுகளை சாப்பிடலாம்.

37) பாஸ்பரஸ் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

A) ரிக்கெட்ஸ்

B) இரத்த சோகை

C) கிரிட்டினிசம்

D) ஆஸ்டியோமலேசியா

விளக்கம்: பாஸ்பரஸ் – ஆஸ்டியோமலேசியா

அயோடின் – கிரிட்டினிசம் (குழந்தைகளுக்கு)

இரும்புச் சத்து – இரத்தச் சோகை

கால்சியம் – ரிக்கட்ஸ்.

38) முருங்கையில் கீழ்க்கண்ட எந்த வைட்டமின் உள்ளது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் D

C) வைட்டமின் C

D) வைட்டமின் K

விளக்கம்: முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

1. வைட்டமின் A

2. வைட்டமின் B

3. பொட்டாசியம்

4. இரும்புச்சத்து

5. கால்சியம்

6. புரதம்.

இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது.

39) உலகளவில் எத்தனை சதவீத முருங்கை இலை உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது?

A) 70

B) 90

C) 80

D) 50

விளக்கம்: உலகளவில் 80 சதவீத முருங்கை உறபத்தி இந்தியாவில் தான் உள்ளது. முருங்கை இலைகளை பெரும்பாலும் இறக்குமதி செய்யக் கூடிய நாடுகள், சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

40) தைராய்டு சுரப்பியுடன் தொடர்புடைய தாது உப்பு எது?

A) கால்சியம்

B) பாஸ்பரஸ்

C) அயோடின்

D) இரும்பு

விளக்கம்: தைராய்டு சுரப்பியுடன் தொடர்புடைய தாது உப்பு அயோடின் ஆகும். தைராய்டு சுரப்பியின் குறைபாட்டால் ஏற்படும் நோய் காய்டர் என்று அழைக்கப்படும் முன்கழுத்து கழலை ஆகும்.

41) உலகில் அதிக எண்ணிக்கையில் பருமனான குழந்தையை கொண்ட நாடு எது?

A) சீனா

B) இந்தியா

C) ஜப்பான்

D) அமெரிக்கா

விளக்கம்: சமீபத்தில் இ;ந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றார்கள். இந்த வகையில் சீனாவிற்கு அடுத்ததாக, உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

42) கீழ்க்கண்டவற்றில் எது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாக உள்ளது?

A) முருங்கைக் கீரை

B) மணிதக்காளி கீரை

C) அகத்திக்கீரை

D) பிரண்டை

விளக்கம்: முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

1. வைட்டமின் A

2. வைட்டமின் B

3. பொட்டாசியம்

4. இரும்புச்சத்து

5. கால்சியம்

6. புரதம்.

இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது

43) பாக்டீரியா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. மிகச்சிறிய புரோகேரியோட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும்.

2. இதில் உட்கரு கிடையாது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பாக்டீரியா என்பவை மிகச் சிறிய புரோகேரியோட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும். பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது. இவை பொதுவாக செல் சவ்வுகள் அற்ற நுண்ணுறுப்புகளை கொண்டிருக்கும்.

44) டெட்டனஸ்/கக்குவான் என்பது கீழ்க்கண்ட எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது?

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) பூஞ்சைகள்

D) புரோட்டோசோவா

விளக்கம்: டெட்டனஸ்/கக்குவான் என்பது பாக்டீரியாக்களினால் தாக்கப்பட்ட காயங்கள் மூலம் ஏற்படுகிறது. பாக்டீரியா என்பவை மிகச் சிறிய புரோகேரியோட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும். பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது. இவை பொதுவாக செல் சவ்வுகள் அற்ற நுண்ணுறுப்புகளை கொண்டிருக்கும்.

45) பாக்டீரியா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. திசுக்களை ஊடுருவிச் செல்லும் தன்மை அற்றவை

2. ஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவே காணப்படும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. திசுக்களை ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டவை.

2. ஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவே காணப்படும்.

46) கூற்றுகளை ஆராய்க. (பாக்டீரியா)

1. இவை சீழ் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும்.

2. இவை பொதுவாக செல் சவ்வுகள் உள்ள நுண்ணுறுப்புகளை கொண்டிருக்கும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இவை சீழ் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும்.

2. இவை பொதுவாக செல் சவ்வுகள் அற்ற உள்ள நுண்ணுறுப்புகளை கொண்டிருக்கும்.

47) வைரஸ் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவை ஒரு செல் உயிரி ஆகும்.

2. இவை உயிரினங்களின் செல்களில் புகுந்து பெருக செய்கின்றன.

3. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் போன்ற எல்லா உயிரினங்களையும் வைரஸ் பதிக்கக் கூடியவை.

4. வைரஸ் செல்லுக்குள் நுழைந்து பெருக்கம் அடைகிறது. வைரஸ் செல்களை அழித்து, பாதிப்பு அடையச் செய்து அல்லது மாற்றம் அடையச் செய்து நோய் வாய்ப்பட வைக்கும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. இவை ஒரு செல்லற்ற உயிரி ஆகும்.

2. இவை உயிரினங்களின் செல்களில் புகுந்து பெருக செய்கின்றன.

3. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் போன்ற எல்லா உயிரினங்களையும் வைரஸ் பதிக்கக் கூடியவை.

4. வைரஸ் செல்லுக்குள் நுழைந்து பெருக்கம் அடைகிறது. வைரஸ் செல்களை அழித்து, பாதிப்பு அடையச் செய்து அல்லது மாற்றம் அடையச் செய்து நோய் வாய்ப்பட வைக்கும்.

48) அயோடின் குறைபாட்டால் குழந்தைகளுக்கு வரும் நோய் எது?

A) ரிக்கெட்ஸ்

B) இரத்த சோகை

C) கிரிட்டினிசம்

D) ஆஸ்டியோமலேசியா

விளக்கம்: அயோடின் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் கிரிட்டினிசம் ஆகும்.

பாஸ்பரஸ் – ஆஸ்டியோமலேசியா

அயோடின் – கிரிட்டினிசம் (குழந்தைகளுக்கு)

இரும்புச் சத்து – இரத்தச் சோகை

49) நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டிற்கு காரணமாக வைட்டமின் எது?

A) வைட்டமின் E

B) வைட்டமின் B

C) வைட்டமின் D

D) வைட்டமின் C

விளக்கம்: நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது மற்றும் குழந்தையின்மைக்குக் காரணமானது வைட்டமின் E ஆகும்.

இதன் காரணமாக நரம்பு பலவீனம், மங்கலான கண்பார்வை, மலட்டுத் தன்மை ஏற்படும்.

50) தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும், உடல் நலத்தை பராமரிக்கவும், செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைபிடித்தலாகும் என்று கூறிய அமைப்பு எது?

A) மத்திய சுகாதார துறை அமைச்சகம்

B) உலக சுகாதார அமைப்பு

C) ஐக்கிய நாடுகள் அவை

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: தூய்மை என்பது நோய்கள் பரவாமல் தடுப்பதும், உடல் நலத்தை பராமரிக்கவும், செய்யப்படும் பழக்க வழக்கங்களை கடைபிடித்தலாகும் என்று கூறிய அமைப்பு உலக சுகாதார அமைப்பு ஆகும்.

51) வாய்வழி நீரேற்ற கரைசலில் கீழ்க்கண்ட எது சேர்க்கப்படுவதில்லை?

A) நீர்

B) உப்பு

C) எலுமிச்சை சாறு

D) சீரகம்

விளக்கம்: வாந்தியெடுத்தாலோ அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ நம் உடலில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்பட்டு உப்பின் சமநிலை சீரற்றுப் போகும். அதிக நீர் வெளியேறுவது தீவிர உடல் பிரச்சினைகளை உருவாக்கும். அவற்றை தவிர்க்க வாய்வழி நீரேற்றல் கரைசல் (Oral Rehydration Salts(ORS)) உட்கொள்ள வேண்டும். இதில் நீருடன், உப்பு, சக்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது.

52) குவாஷியோர்கர் மற்றும் மராசுமஸ் போன்றவை கீழ்க்கண்ட எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) கார்போஹைட்ரேட்

B) புரதங்கள்

C) வைட்டமின்கள்

D) தாது உப்புகள்.

விளக்கம்: குவாஷியோர்கள் மற்றும் மராஸ்மஸ் போன்றவை புரதக் குறைபாட்டால் ஏற்படுகிறது.

குவாஷியோர்கள் – வளர்ச்சிக் குறைபாடு, முகம், கால்களில் வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, மூளை வளர்ச்சிக் குறைபாடு.

மராஸ்மஸ் – எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும், மெதுவான உடல் வளர்ச்சி.

53) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரிய நோய் அல்ல?

A) காலரா

B) டைபாய்டு

C) நிமோனியா

D) இன்புளுயன்சா

விளக்கம்: பாக்டீரிய நோய்கள் – காலரா, டைபாய்டு, நிமோனியா.

வைரஸ் நோய்கள் – இன்புளுயன்சா, சாதாரண சளி, சின்னம்மை

54) கீழ்க்கண்டவற்றில் தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) மாலைக்கண் நோய்

B) ஸ்கர்வி

C) ரிக்கட்ஸ்

D) நிமோனியா

விளக்கம்: மேற்கண்டவற்றில் பொருந்தாதது நிமோனியா ஆகும். இது பாக்டீரியாவால் ஏற்படுவது. மற்றவை வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது.

வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் – மாலைக்கண் நோய், ஸ்கர்வி, ரிக்கட்ஸ், பெரி-பெரி.

பாக்டீரியாவால் ஏற்படும் நோய் – காலரா, டைபாய்டு, நிமோனியா

55) பெரி பெரி என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் C

D) வைட்டமின் K

விளக்கம்: பெரி பெரி என்ற நோய் வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க முழுதானியம், பளபளப்பு செய்யப்படாத அரிசி போன்ற உணவுகளை உண்ண வேண்டும்.

56) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) இன்புளுயன்சா

B) சாதாரண சளி

C) சின்னம்மை

D) டைபாய்டு

விளக்கம்: டைபாய்டு என்பது பொருந்தாதது ஆகும். டைபாய்டு என்பது வைரஸால் ஏற்படும் நோய். மற்றவை பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும்.

வைரஸால் ஏற்படும் நோய் – இன்புளுயன்சா, சாதாரண சளி, சின்னம்மை

பாக்டீரியாவால் ஏற்படும் நோய் – காலரா, டைபாய்டு, நிமோனியா.

57) ரிக்கட்ஸ் என்ற குறைபாட்டு நோய் எந்த வைட்டமின்-ஆல் ஏற்படுகிறது?

A) வைட்டமின் A

B) வைட்டமின் E

C) வைட்டமின் D

D) வைட்டமின் K

விளக்கம்: ரிக்கட்ஸ் என்ற குறைபாட்டு நோய் வைட்டமின் D குறைபாட்டினால் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கீழ்க்கண்டவற்றை உண்ண வேண்டும்.

1. மீன் எண்ணெய்

2. பால்

3. முட்டை

சூரிய ஒளியின் உதவியுடன் இந்த வைட்டமின் நமது தோலால் தயாரிக்கப்படும்.

58) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) வைட்டமின் A – மாலைக்கண் நோய்

B) வைட்டமின் B – பெரி பெரி

C) வைட்டமின் C – ஸ்கர்வி

D) வைட்டமின் D – பார்வை குறைபாடு

விளக்கம்: வைட்டமின் A – மாலைக்கண் நோய்

வைட்டமின் B – பெரி பெரி

வைட்டமின் C – ஸ்கர்வி

வைட்டமின் D – ரிக்கட்ஸ்

வைட்டமின் E – பார்வை குறைபாடு.

59) இந்தியாவிற்கு பொருத்தமற்றதை தேர்வு செய்க.

1. முருங்கை உற்பத்தியில் இந்தியா 70 சதவீதத்தை பெற்றுள்ளது

2 உலகளவில் அதிகம் பருமனான நபர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முருங்கை உற்பத்தியில் இந்தியா 80 சதவீதத்தை பெற்றுள்ளது. முருங்கை இலைகளை பெரும்பாலும் இறக்குமதி செய்யக் கூடிய நாடுகள்: சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

2 சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர். இந்த வகையில் இந்தியா சீனாவிற்கு அடுத்ததாக, உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

60) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – A, D, E, K

B) நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C

C) பொதுவான உடல் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்துதல் – வைட்டமின்கள்

D) ஆற்றலை தருவது – கொழுப்புகள்

விளக்கம்: கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – A, D, E, K

நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C

பொதுவான உடல் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்துதல் – தாதுஉப்புகள்.

ஆற்றலை தருவது – கொழுப்புகள்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!