Tnpsc

7th & 8th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th & 8th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th & 8th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th & 8th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை அமைக்கும் திட்டத்தை (BOLD) செயல்படுத்துகிற நிறுவனம் எது?

அ) KVIC 

ஆ) NABARD

இ) SIDBI

ஈ) இந்திய இராணுவம்

  • பாலைவனமாவதைத் தடுக்கவும் மற்றும் ஊரக பொருளாதாரத்துக்கு உதவவும் ஜைசல்மரில் உள்ள தனோத் கிராமத்தில், மூங்கில் சோலை திட்டத்தை (Bamboo Oasis on Lands in Drought) காதி கிராம தொழிற்புற ஆணையம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கியது. இந்தத் திட்டமானது நிலம் பாலையாவதை குறைப்பதோடு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பன்னோக்கு ஊரக தொழிற்துறைக்கும் உதவியாக இருக்கும். இந்த மூங்கில் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் அமைந்து உள்ள இடம் எது?

அ) புது தில்லி

ஆ) கொல்கத்தா 

இ) ராஞ்சி

ஈ) ராய்பூர்

  • அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஜம்மு & காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) ஏழு லித்தியம் ஆய்வுத்திட்டங்களை எடுத்துள்ளது. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
  • அணுவாற்றல் துறையின்கீழ் வரும் ஆய்வு & ஆராய்ச்சிக்கான அணு கனிமங்கள் இயக்குநரகம் (AMDER) கர்நாடகா மற்றும் இராஜஸ்தானில் லித்தியம் ஆய்வை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு திட்டங்களின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது. `18,100 கோடி மதிப்பிலான இந்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமானது சமீபத்தில் இந்தியாவில் மின்சார வாகன போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக லித்தியம் அயன் மின்கலங்களை உருவாக்குவதாக அறிவித்தது.

3. ஹரப்ப நகரமான ‘தோலாவிரா’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) குஜராத் 

ஈ) கர்நாடகா

  • மேற்கு குஜராத் மாநிலத்தின் ரான் ஆப் கட்சில் உள்ள ஹரப்ப நகரமான ‘தோலவிரா’, UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியாவின் 40ஆவது தளமாக இது மாறியுள்ளது. இத்தளம், 1968ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நீர் மேலாண்மை, சிறப்பு வாய்ந்த புதை குழிகள்போன்ற தனித்துவமான பண்புகளுக்கு அது பெயர்பெற்றது.

4. புவி அமைப்பு அறிவியல் தரவுத்தளத்தை உருவாக்கி வெளியிட்டு உள்ள அமைச்சகம் எது?

அ) உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம் 

இ) சுரங்க அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • மத்திய புவி அறிவியல் அமைச்சகமானது “Earth System Science Data Portal” என்ற ஒருங்கிணைந்த தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளமானது பொதுமக்களுக்கு புவி தொடர்புடைய பல்வேறு தரவுகளை கிடைக்கச்செய்யும். ஜூலை.27 அன்று அமைச்சகத்தின் பதினைந்தாவது உதயதின விழாவின் ஒருபகுதியாக இத்தளம் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முயற்சியுடன் இணைந்து இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

5. ‘உலக பொருளாதார கண்ணோட்டம்’ என்னுமோர் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) UNESCO

இ) உலக வங்கி

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம் 

  • பன்னாட்டுச் செலவாணி நிதியமானது “Fault Lines widen in the Global Recovery” என்ற தலைப்பில் 2021 ஜூலை மாதத்திற்கான உலக பொருளாதார கண்ணோட்டத்தின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக பொருளாதாரமானது 2021’இல் 6.0 சதவீதமும், 2022’ இல் 4.9 சதவீதமும் வளரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. 2021-22’க்கு ஆன இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை, 12.5 சதவீதத்திலிருந்து 9.5% ஆக பன்னாட்டுச் செலவாணி நிதியம் குறைத்துள்ளது.

6. C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தான ‘Ravidasvir’ஐ பதிவுசெய்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) மலேசியா 

ஈ) ரஷ்யா

  • C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தை மலேசியா பதிவுசெய்துள்ளது. இது உலகம் முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு, அணுகக்கூடிய சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது. ‘Ravidasvir’ என்ற மருந்து தற்போதுள்ள ‘Sofosbuvir’உடன் பயன்படுத்த ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய மருந்து, மலேசிய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, எகிப்திய மருந்து உற்பத்தியாளரான பார்கோவுடன் இணைந்து புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான முன்னெடுப்பால் (ஜெனீவாவை சார்ந்த இலாபநோக்கமற்ற மருந்து அமைப்பு) உருவாக்கப்பட்டுள்ளது.

7. K2 சிகரத்தை அடைந்த இளம்வயது நபரான ஷெரோஸ் காஷிப் சார்ந்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) பாகிஸ்தான் 

இ) மியான்மர்

ஈ) நேபாளம்

  • பாகிஸ்தானைச் சார்ந்த மலையேற்ற வீரரான ஷெரோஸ் காஷிப் (19), உலகின் 2ஆம் உயரமான மலைச்சிகரமானதும் சராசரி கடல்மட்டத்தில் இருந்து 8,611 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதுமான K2 சிகரத்தை அடைந்த மிகவும் இளம்வயது நபராக மாறியுள்ளார். சமீபத்தில் 2021 மே மாதத்தில், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, பாகிஸ்தானிலிருந்து உலகின் மிக உயரமான சிகரத்தை எட்டிய இளம்வயது நபராக அவர் ஆனார்.

8. “அனைவருக்கும் நல்லுணவு – Good Food for All” போட்டியை நடத்திய அமைப்பு எது?

அ) உணவு மற்றும் உழவு அமைப்பு

ஆ) உலக நலவாழ்வு அமைப்பு

இ) ஐக்கிய நாடுகள் 

ஈ) உலக வங்கி

  • நலமான & நிலைத்த உணவுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக மாறுபட்ட மற்றும் தாக்கம் நிறைந்த தீர்வுகளை வழங்கும் ‘சிறந்த சிறு வணிகங்களை’ தேடும் நோக்கில், “அனைவருக்கும் நல்லுணவு” என்ற போட்டியை ஐநா அவை நடத்தியது.
  • இப்போட்டியில், இந்தியாவைச்சார்ந்த மூன்று நிறுவனங்கள் – சமையல் ரூட்ஸ், ஊர்ஜா டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் இந்தியா மற்றும் தாரு நேச்சுரல்ஸ் ஆகியவை “சிறந்த சிறு வணிகங்களுக்கான” வெற்றியாளர்களுள் ஒன்றாக இடம்பெற்றன.

9. நீரிடி & திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிஷ்த்வார் மாவட்டம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) ஜம்மு & காஷ்மீர் 

ஆ) அஸ்ஸாம்

இ) மேகாலயா

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான கிஷ்த்வார் மாவட்டம் நீரிடி மற்றும் கடுமையான வெள்ளத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. அம் மாநிலத்தின் பேரிடர் மீட்புப்படை இதற்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மலைப்பகுதி மற்றும் கடினமான நிலப்பரப்பின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு காணப்பட்டது.

10. ஐநா அவையால், “பன்னாட்டு நட்பு நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.08

ஆ) ஆகஸ்ட்.01

இ) ஜூலை.30 

ஈ) ஜூலை028

  • 2011’இல், ஐநா பொது அவையானது ஜூலை.30ஆம் தேதியை சர்வதேச நட்பு நாளென அறிவித்தது. இந்நாள் பல்வேறு கலாச்சாரங்கள், நாடுகள் மற்றும் மதங்களின் மக்களிடையே நட்பு பிணைப்பை உருவாக்கி உலக அமைதியை அடைய உதவும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை என்பது கடந்த 1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பது, சர்வதேச ஒத்துழைப்பை அடைதல் மற்றும் பல்வேறு நாடுகளின் செயல்களை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படுவது போன்றவை ஐநா அமைப்பின் முக்கிய நோக்கமாகும். தற்போது, 193 நாடுகள் ஐநா அவையின் உறுப்பினர்களாக உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் முறை ரத்து: மக்களவையில் மசோதா தாக்கல்

நிறுவனங்களிடமிருந்து முன்தேதியிட்டு வரிவசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்யும் வகையில் வரிவிதிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் விவகாரத்தில் கெய்ர்ன், வோடபோன் நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வோடபோன் வழக்கு:

ஹட்சிசன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் ஈட்டிய லாபத்துக்கு வட்டியுடன் சேர்த்து `22,100 கோடியை வரியாகச் செலுத்த வேண்டும் என வோடபோன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், வோடபோன் நிறுவனத்திடமிருந்து வரிவசூலிக்கும் நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக வோடபோன் நிறுவனம் செலவிட்ட தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை செப்டம்பரில் நடைபெறவுள்ளது.

கெய்ர்ன் வழக்கு:

பிரிட்டனைச்சேர்ந்த கெய்ர்ன் நிறுவனத்திடமிருந்து முன்தேதியிட்டு வரி வசூல் நடைமுறையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச தீர்ப்பாயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் `12,500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாயத்தில் மத்திய அரசு முறையிட்டுள்ளது. இந்நிலையில், முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

2. 07-08-2021 – ஏழாவது தேசிய கைத்தறி நாள்

3. இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் – விளையாட்டில் சாதிப்போருக்கு தயான் சந்த் விருது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் சாதிப்போருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்றே அழைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மதிப்புமிக்க கேல்ரத்னா விருதானது `25 லட்சம் பரிசுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

யார் இந்த தயான் சந்த்?

1905ஆம் ஆண்டு ஆக.29ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்த தயான் சந்த் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

1928ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் தங்கங்களை வென்ற இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர். ஹாக்கி மட்டையை கையாளுவதில் கைதேர்ந்தவராகவும், பந்தை லாவகமாக கட்டுப்படுத்தி எதிரணியிடம் பிடிகொடுக்காமல் கடத்தி செல்வதால் ‘மந்திரவாதி’ என்று அழைக்கப்பட்டார். தயான் சந்தின் மூத்த சகோதரர் ரூப் சிங்கும் ஹாக்கி வீரர்.

1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக தயான் சந்த் இருந்தார். இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கை நடத்திய ஜெர்மனியை இந்தியா எதிர்கொண்டது. இதில் தயான் சந்த் 3 கோல்களை அடித்து அசத்த இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்கம் வென்றது.

தயான் சந்த் தலைமையிலான இந்திய அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்ததால் அந்நாட்டு அதிபர் அடால்ப் ஹிட்லர் கடும் அதிருப்தியடைந்தார். எனினும் மறுநாளே தயான் சந்த்தை அழைத்த ஹிட்லர், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் ஹிட்லரின் இந்தசலுகையை ஏற்க மறுத்து விட்டார் தயான் சந்த்.

தயான் சந்த் தனது இறுதி சர்வதேச போட்டியில் 1948ல் விளையாடினார், அவரது சர்வதேச ஹாக்கி வாழ்க்கையில் நானூற்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு ‘பத்ம பூஷன’ விருது 1956’இல் வழங்கப்பட்டது.

4. மின்னணுத்துறை மேம்பாட்டில் ஒத்துழைப்பு: G20 அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

டிஜிட்டல் (மின்னணு) பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் அரசு நிர்வாகத்தில் அதிக ஒத்துழைப்புடன் செயல்படுவதாக ஜி20 நாடுகளின் அமைச்சா்கள் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜி20 நாடுகளின் மின்னணுத் துறை அமைச்சா்கள் கூட்டம் இத்தாலியின் ட்ரீஸ்டே நகரில் நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய குழுவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமைதாங்கினார்.

‘எழுச்சியுடன்கூடிய வலிமையான, நிலையான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய மீட்புக்கான டிஜிட்டல் மயமாக்கல் பிரகடனம்’ ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் அரசில், அதிக ஒத்துழைப்புடன் செயல்படுவதாக இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர். டிஜிட்டல்மயமாக்கத்தில் இந்தியா வெற்றிகரமாக செயல்படுவதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்து கொண்டார். டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து சமூக மேம்பாட்டில் சாதித்த மாற்றங்களையும் அவர் பகிர்ந்தார்.

5. நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறப்பு: மாநிலங்கள் அவையில் தகவல்

நாடு முழுவதும் 8,001 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் பாரத மக்கள் மருத்துவத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2ஆம் தேதி வரை 8,001 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 10,500 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும். அரசு மருத்துவமனை வளாகங்களில், கடந்த 2ஆம் தேதி வரை 1,012 மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மக்கள் மருந்தக உரிமையாளர்களுக்கான ஊக்கத்தொகையை `2.5 லட்சத்திலிருந்து `5 லட்சமாக மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

6. நீரிழிவு நோயாளிகளின் காயங்களுக்கு கட்டுப்போட நவீன பேண்டேஜ்: இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் நாள்பட்ட காயங்களுக்கு கட்டுப்போட நவீன பேண்டேஜை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் ‘அகர்’ என்ற கடல்பாசி செடியிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை பாலிமர் பயன்படுத்தப்படுகிறது.

இது நீரிழிவு நோயாளிகளின் காயங்கள் மற்றும் நாள்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்க மிகச்சிறந்ததாக உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பேண்டேஜுக்கு குறைந்த செலவு ஏற்படுகிறது. மக்கக்கூடிய, காயத்தை ஆற்றக்கூடிய இந்த பேண்டேஜை டாக்டர் விவேக் வர்மா தலைமையிலான கான்பூர் ஐஐடி குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதில் அயோடின் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மேம்பட்ட தயாரிப்பு தொழில்நுட்பங்கள் திட்டம் உதவியது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு தேசிய காப்புரிமை பெறப்பட்டுள்ளது. நவீன பேண்டேஜ்கள் தயாரிப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதால், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பானது புதிய வர்த்தகத்துக்கு வழிவகுத்துள்ளது.

7. “தங்க மகன்” நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

8.ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மல்யுத்தம் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றிபெற்றுள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா ஆடவர் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் களம்கண்டார். காலிறுதிச்சுற்றில் ஈரானிய வீரர் மொர்டேஸாவை வீழ்த்தினார். அரையிறுதிச்சுற்றில் அசர்பைஜானின் ஹாஜி அலியெவை எதிர்கொண்டார் பஜ்ரங். 5-12 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார் பஜ்ரங் புனியா.

வெண்கலப்பதக்கத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் நியாஸ்பெகோவுடன் மோதினார் பஜ்ரங் புனியா. ஏற்கனவே கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிச் சுற்றில் நியாஸிடம் தோல்வியைத் தழுவினார் பஜ்ரங். இதனால் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 8-0 என்கிற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 6ஆவது பதக்கம் இது.

1. Which institution is implementing the Bamboo Oasis on Lands in Drought (BOLD) project?

A) KVIC 

B) NABARD

C) SIDBI

D) Indian Army

  • Khadi and Village Industries Commission (KVIC) has been implementing the Bamboo Oasis on Lands in Drought (BOLD) project. It was launched from a tribal village in Rajasthan in July, with plantation of 5000 saplings of special bamboo species.
  • Recently, KVIC planted 1000 bamboo saplings at Tanot village in Jaisalmer, in collaboration with the Border Security Force (BSF). BSF will be responsible for maintaining the plants. It aims to reduce desertification and provide livelihood to the local population.

2. Where is the headquarters of the Geological Survey of India (GSI) located?

A) New Delhi

B) Kolkata 

C) Ranchi

D) Raipur

  • The Geological Survey of India (GSI) has taken up seven lithium exploration projects in Arunachal Pradesh, Andhra Pradesh, Chhattisgarh, Jharkhand, Jammu & Kashmir and Rajasthan.
  • GSI is headquartered in Kolkata. The Atomic Minerals Directorate for Exploration and Research (AMDER) under Department Atomic Energy (DAE) has undertaken lithium exploration in Karnataka and Rajasthan. This is seen as a part of India’s energy security plans. ₹18,100 crore production–linked incentive (PLI) scheme was announced recently to make lithium–ion cells to promote e–mobility in India.

3. “Dholavira”, a Harappan City, is presently located in which Indian state?

A) Andhra Pradesh

B) Madhya Pradesh

C) Gujarat 

D) Karnataka

  • Dholavira, which is a Harappan City in the Rann of Kutch of Western Gujarat, has been inducted into the list of UNESCO’s World Heritage sites. This makes it the 40th site from India to be inscribed into the list. This site was discovered in the year 1968 and is known for its unique characteristics like water management, special burial structures etc.

4. Earth System Science Data Portal has been developed and launched by which Ministry?

A) Ministry of Civil Aviation

B) Ministry of Earth Sciences 

C) Ministry of Mines

D) Ministry of Home Affairs

  • The Union Ministry of Earth Sciences (MoES) has launched an integrated portal named Earth System Science Data Portal. This portal would make available various earth related data for the public. The portal was launched as a part of the 15th Foundation Day celebration of the ministry on 27th July 2021 and has been developed in tune with the Digital India initiative of the Government of India.

5. Which organization releases the ‘World Economic Outlook’ report?

A) RBI

B) UNESCO

C) World Bank

D) IMF 

  • The International Monetary Fund (IMF) has released an update to the World Economic Outlook (WEO) for the month of July 2021, under the title “Fault Lines widen in the Global Recovery”. As per the WEO update, the global economy is projected to grow 6.0 percent in 2021 and 4.9 percent in 2022. IMF also downgraded India’s Growth Projection to 9.5% from 12.5% for 2021–22.

6. Which country has registered the world’s first affordable drug ‘Ravidasvir’, for treating Hepatitis C?

A) India

B) China

C) Malaysia 

D) Russia

  • Malaysia has registered the world’s first affordable drug for treatment of hepatitis C. This has paved the way for accessible treatment to millions of people affected by the disease across the globe. The drug named ‘Ravidasvir’ has been approved to be used with an existing drug sofosbuvir.
  • The new drug development was initiated by Malaysia’s Ministry of Health and has been developed by Drugs for Neglected Diseases initiative (Geneva–based Nonprofit drug organization) together with Pharco, an Egyptian generic drug manufacturer.

7. Shehroze Kashif, who has become the youngest person to reach the summit of K2, belongs to which country?

A) India

B) Pakistan 

C) Myanmar

D) Nepal

  • Shehroze Kashif (19), a Mountaineer from Pakistan has become the youngest person to reach the summit of K2 – the world’s 2nd highest mountain peak, which is at an altitude of 8,611–metre from mean sea level. Recently in May 2021, he scaled Mount Everest and became the youngest person from Pakistan to scale the world’s highest peak.

8. Which organization conducted the “Good Food for All” competition?

A) Food and Agricultural Organization

B) World Health Organization

C) United Nations 

D) World Bank

  • The “Good Food for All” competition was conducted by the United Nations, in search of the ‘Best Small Businesses’ that are providing inspiring, diverse and impactful solutions to improve access to healthy and sustainable food.
  • In the competition, 3 India–based enterprises – Edible Routes Private Limited, Oorja Development Solutions India and Taru Naturals are among the winners of the “Best Small Businesses”.

9. Kishtwar District, which has been affected by cloudburst and flash floods is located in which state / UT?

A) Jammu & Kashmir 

B) Assam

C) Meghalaya

D) Arunachal Pradesh

  • Jammu & Kashmir’s mountainous Kishtwar district has been affected by a cloud burst which is followed by a severe flash flood. The state’s Disaster Response Force has been swung into action, but the hilly region and difficult terrain are posing challenges in the rescue operations.

10. On which date, “International Friendship Day” is celebrated by the United Nations?

A) August.08

B) August.01

C) July.30 

D) July.28

  • In 2011, the UN General assembly proclaimed July 30 as the International Day of Friendship. The decision was taken with an idea that this day will create a friendship bond between peoples of different cultures, countries and religions.
  • The United Nations is an international organisation which was founded in 1945. It is headquartered in New York. The main aim of this organisation is to maintain international peace and security, develop friendly relations among nations, achieve international cooperation and act as a center for harmonising the actions of different nations. At present, 193 countries are the members of the United Nations (UN).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!