TnpscTnpsc Current Affairs

7th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘உலக மக்கள்தொகை நிலை’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) UNICEF

ஆ) UNFPA 

இ) IMF

ஈ) உலக வங்கி

  • ஐநா மக்கள்தொகை நிதியம் (UNFPA) சமீபத்தில், ‘State of World Population: Seeing the Unseen: The case for action in the neglected crisis of unintended pregnancy’ என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, உலகெங்கும் ஆண்டுதோறும் உண்டாகும் மொத்தம் 121 மில்லியன் கருவுறுதலில் கிட்டத்தட்ட சரிபாதி, திட்டமிடப்படாதவை ஆகும். உலக அளவில், கருவுறுதலைத் தவிர்க்க விரும்பும் 257 மில்லியன் பெண்கள், பாதுகாப்பான மற்றும் நவீன கருத் தடை முறைகளைப் பயன்படுத்துவதில்லை.

2. ‘Fast and Secured Transmission of Electronic Records’ (FASTER)’ என்ற டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) இந்திய உச்சநீதிமன்றம் 

இ) இந்திய தேர்தல் ஆணையம்

ஈ) மத்திய புலனாய்வுப் பணியகம்

  • இந்திய தலைமை நீதிபதி NV ரமணா, டிஜிட்டல் தளமான ‘Fast and Secured Transmission of Electronic Records’ (FASTER)’ஐ அறிமுகஞ்செய்துவைத்தார்.
  • இந்தத் தளம் நீதிமன்ற அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்ட மின்னணு தகவல்தொடர்பு அலைவரிசைமூலம் வழக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆணைகளின் மின் நகல்களை அனுப்ப பயன்படும். இது நீதிமன்றத்தின் அனைத்து வகையான ஆணைகளையும் உள்ளடக்கியது.

3. ‘மந்தன்’ என்ற ஐடியாதானை தொடங்கிய ஒழுங்காற்று அமைப்பு எது?

அ) RBI

ஆ) NABARD

இ) SEBI 

ஈ) IRDAI

  • SEBI தலைவர் மாதபி பூரி புச் BSE, NSE, NSDL, CDSL, KFintech, CAMS, LinkInTime மற்றும் MCX உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஆறு வார கால ‘மந்தன்’ என்னும் ஐடியாதானை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் பத்திரச்சந்தை தொடர்பான யோசனைகள் மற்றும் புதுமையான தீர்வுகளை உருவாக்க இது உதவும்.

4. ‘பிரதான் மந்திரி சங்கராலயா’ அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ) புது தில்லி 

ஆ) உத்தர பிரதேசம்

இ) உத்தரகாண்ட்

ஈ) குஜராத்

  • இந்தியப் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி சங்கராலயா அருங்காட்சியகம், B R அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி ஏப்.14 அன்று திறக்கப்படவுள்ளது.
  • தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தை ஒட்டி 10,000 ச மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் இதுவரை 14 இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது.

5. 2022 – ‘MSMEகள் குறித்த பிரம்மாண்ட சர்வதேச உச்சிமாநாட்டை’ நடத்துகிற நகரம் எது?

அ) மும்பை

ஆ) சென்னை

இ) புது தில்லி 

ஈ) டேராடூன்

  • MSME அமைச்சகம், இந்திய அரசு மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனம் (EDII), ஆகியவை புது தில்லியில் அமைந்துள்ள இந்திய பன்னாட்டு மையத்தில், ‘MSMEகள் குறித்த பிரம்மாண்ட சர்வதேச உச்சிமாநாட்டை’ ஏற்பாடு செய்தன.
  • இரண்டு நாள் உச்சிமாநாட்டில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழில்முனைவோர், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழிற்சங்கங்கள், துளிர் நிறுவனங்கள், சமூக தாக்க நிறுவனங்கள், MSMEகள் மற்றும் சுயஉதவி குழுக்கள் பங்கேற்றன.

6. கடலோரங்களில் தட்பவெப்ப நிலையை மேம்படுத்தும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்கள் எவை?

அ) தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒடிஸா

ஆ) ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிஸா 

இ) ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா

ஈ) கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிஸா

  • ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளின் காலநிலைத் தன்மையை மேம்படுத்தும் திட்டத்தை நடுவண் அரசு தொடங்கியுள்ளது.
  • இத்திட்டம் மொத்தம் $130.269 மில்லியன் டாலர் (சுமார் `1,000 கோடி) செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 43.419 மில்லியன் டாலர் மானியமும் அடங்கும்.

7. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல்.01

ஆ) ஏப்ரல்.02 

இ) ஏப்ரல்.03

ஈ) ஏப்ரல்.04

  • உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளானது ஆட்டிசம் உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு உள்ளது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.2ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படுகிறது.
  • ‘Inclusion in the Workplace’ என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாளுக்கா -னக் கருப்பொருளாகும்.

8. ‘தேசிய கடல்சார் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல்.01

ஆ) ஏப்ரல்.03

இ) ஏப்ரல்.05 

ஈ) ஏப்ரல்.07

  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.5 அன்று தேசிய கடல்சார் நாளை இந்தியா கொண்டாடுகிறது. இந்த ஆண்டு இதன் 59ஆவது நாளைக் குறிக்கிறது. “Sustainable Shipping beyond Covid-19” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1964ஆம் ஆண்டில் இந்நாள் முதலில் அனுசரிக்கப்பட்டது.

9. உலக சுகாதார நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல்.01

ஆ) ஏப்ரல்.03

இ) ஏப்ரல்.05

ஈ) ஏப்ரல்.07 

  • உலக சுகாதார அமைப்பு மற்றும் இன்னபிற தொடர்புடைய அமைப்புகளின் அனுசரணையின்கீழ் உலகம் முழுவதும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏப்.7 உலக சுகாதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. “Our Planet, Our Health” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. ‘டைம்100 – இம்பாக்ட் விருதுகளில்’ இடம்பெற்றுள்ள இந்திய ஆளுமை யார்?

அ) விராட் கோலி

ஆ) சிவகார்த்திகேயன்

இ) தீபிகா படுகோன் 

ஈ) PV சிந்து

  • இந்திய நடிகை தீபிகா படுகோன், ‘Live Love Laugh’ அறக்கட்டளைமூலம் தாம் மேற்கொண்ட மனநலந்தொடர் -பான தனது பணிக்காக, ‘TIME 100 – இம்பாக்ட் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். இது, தீபிகா படுகோன், டைம் இதழிடமிருந்து பெறும் இரண்டாவது விருது ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒமைக்ரானின் புதிய வகை: மும்பையில் முதல் பாதிப்பு

ஒமைக்ரானின் புதிய உருமாற்ற வகையான எக்ஸ்இ கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார்.

ஒமைக்ரான் வகையான பிஏ.2 தீநுண்மியைவிட எக்ஸ்இ வகை தீநுண்மி 10 சதவீதம் வேகமாகப் பரவக்கூடியது. இந்தப் புதிய வகை தீநுண்மி முந்தைய கரோனா வகைகளைவிட வேகமாகப் பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.

2. மூன்று மாதங்களில் கடலில் விடப்பட்ட21,000 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

சென்னையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பொறிப்பகம்மூலம் கடந்த மூன்று மாதங்களில் 21,338 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

உலகில் உள்ள 7 வகையான கடல் ஆமைகளில் மிகவும் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளது ஆலிவ் ரிட்லி ஆமைகள். பங்குனி மாதத்தில் இவை முட்டை இடுவதால் ‘பங்குனி ஆமைகள்’ என்றும் தமிழில் இவை அழைக்கப்படுகின்றன.

அழியும் நிலையில் உள்ள உயிரினமாக சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ள இவை, 2 ½ அடி நீளமும், அகலமும் கொண்டவையாகும். 12 முதல் 15 ஆண்டுகளில் பருவத்தை அடையும் இந்த ஆமைகள், தான் பிறந்த கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டதாகும். தமிழகத்தின் கடற்கரைகளில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிடும். ஒரு பெண் ஆமை 50 முதல் 190 வரை முட்டையிட்டு 45 நாள் முதல் 60 நாள்களுக்குள் குஞ்சு பொறிக்கும்.

அச்சுறுத்தல்: 1,000 ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் பிறந்தால் அதில் 1 மட்டுமே உயிர்வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. மீன்பிடிக்கப் பயன்படும் இழுவை வலையில் சிக்கி உயிரிழப்பது, வெளிச்சத்தை நோக்கி நகருந்தன்மைகொண்ட ஆமைக்குஞ்சுகள் கடலோரத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிக திறனுள்ள மின்விளக்குகளை நோக்கிச்செல்வதால் பிற இரை உன்னிகள், நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கின்றன. கடற்கரையில் இடும் முட்டைகளை நாய், நரி உண்பது, பொதுமக்கள் சிலர் எடுத்துச்செல்வதுபோன்ற காரணங்களாலும், சுற்றுச் சூழல் பாதிப்பாலும் இவற்றின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது.

21,000 ஆமைக் குஞ்சுகள்: தற்போது வரை 21,338 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

3. 2023ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் எனப் பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: வரும் மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடக்கவுள்ள உலகப்பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘Global of Shore Wind’ நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்கா நாட்டிலும், முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக 2023-ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்படும் என்றார் முதல்வர் மு க ஸ்டாலின்.

4. தமிழகத்தில் புதைசாக்கடைகள் தூய்மைப்படுத்தும் பணியில் 214 பேர் பலி: நாட்டில் அதிகபட்சம்

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 214 பேர் புதைசாக்கடையை தூய்மைப்படுத்தும் பணியின்போது உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டில் 971 பேர் புதைசாக்கடைகளைத் தூய்மைப்படுத்தும் பணியின் போது இறந்துள்ளனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 214 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து குஜராத்தில் 156 பேர், உத்தர பிரதேசத்தில் 106 பேர் பலியாகியுள்ளனர்.

5. இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு: நிதின் கட்கரி

பன்னாட்டளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி கவலை தெரிவித்தார்.

ஜெனீவாவில் உள்ள சர்வதேச சாலைக்கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை விபத்துகள் புள்ளிவிவரங்கள் – 2018-இன்படி, சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கிறது. சாலை விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடமும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 3ஆம் இடமும் வகிக்கிறது.

மேலும் கடந்த 2020-இல் சாலை விபத்தில் பலியானவர் -களில் 69.8 சதவீதத்தினர் 18-45 வயதுக்குட்பட்டோர் ஆவர். நாட்டில் 22 பசுமைவழி நெடுஞ்சாலைகளை (`1,63,350 கோடி மதிப்பில் 2,485 கிமீ தூர 5 விரைவுச் சாலைகள், `1,92,876 கோடி மதிப்பில் 5,816 கிமீ அணுகு நெடுஞ்சாலைகள்) மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

6. வேளாண் ஏற்றுமதி `3.79 லட்சம் கோடியை எட்டி சாதனை

இந்தியாவின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி `3.79 லட்சம் கோடியை (5,000 கோடி டாலர்) எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

அரிசி, கோதுமை, சர்க்கரை, இதர தானியங்கள் மற்றும் இறைச்சிபோன்ற முக்கிய பொருள்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் (2021-22)-இல் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி (கடல் & தோட்டப்பொருட்கள் உட்பட) 5,000 கோடி டாலர்களை (சுமார் `3.79 லட்சம் கோடி) கடந்துள்ளது. இது வேளாண் ஏற்றுமதியில் இதுவரை எட்டப்படாத அதிகபட்ச அளவாகும்.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2021-22 ஆண்டில் வேளாண் ஏற்றுமதி 19.92% அதிகரித்து 5,021 கோடி டாலர்களைத் தொட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க கடந்த இரு ஆண்டுகளில் இந்தச் சாதனை பெரிதும் உதவிடும். அரிசி `73,321 கோடி (965 கோடி டாலர்), கோதுமை `16,639 கோடி (219 கோடி டாலர்), சர்க்கரை `34,951 கோடி (460 கோடி டாலர்) மற்றும் பிற தானியங்கள் `8,205 கோடி (108 கோடி டாலர்) போன்ற முக்கிய பொருள்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக ஏற்றுமதி எட்டப்பட்டுள்ளன. அரிசிக்கு உலகச் சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது.

கடல்சார் பொருள்களின் ஏற்றுமதி `58,581 கோடியாக (771 கோடி டாலர்) உள்ளது. இதன்மூலம் மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய கடலோர மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயனடைகின்றனர்.

மசாலா பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (`30,392 கோடி) 400 கோடி டாலர்களை எட்டியுள்ளது. மிகப்பெரிய அளவில் விநியோகப் பிரச்னைகளை எதிர்கொண்டபோதிலும், காபி ஏற்றுமதி முதல் முறையாக `7,598 கோடியை (100 கோடி டாலர்) கடந்துள்ளது. இதன்மூலம் கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள காபி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. முகேஷ் அம்பானி முதலிடம், அதானி இரண்டாம் இடம்: இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் யார்? – போர்ப்ஸ் பட்டியல்

2022-க்கான இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை நிறுவனமான ‘போர்ப்ஸ்’ ஆண்டுதோறும் உலகின் முதல்நிலை கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான பட்டியலையும் போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 2,668 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 12.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் $219 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் $171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளார். உலக அளவில் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள் யார் யார்?

10ஆம் இடத்தில் கோட்டக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக், 9ஆமிடத்தில் மருந்துகளைத் தயாரித்து வரும் சன் பார்மா நிறுவனர் திலீப் சாங்க்வி, 8ஆம் இடத்தில் ஆதித்யா பிர்லா, 7ஆவது இடத்தில் ஓ பி ஜிண்டால், 6ஆவது இடத்தில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத் தலைவராக உள்ள லட்சுமி மிட்டல், 5ஆவது இடத்தில் டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, 4ஆவது இடத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குநர் சைரஸ் பூனவல்லா, 3ஆவது இடத்தில் தமிழகத்தில் பிறந்தவரான HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், 2ஆவது இடத்தில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி, முதல் இடத்தில் பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளனர்.

டாப் 10 உலக கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்தில் உள்ளார் அம்பானி.

8. கல்கி வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் வெளியீடு

புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படைத்த எழுத்தாளர் கல்கி கிரு‌ஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் படைக்கப்பட்டுள்ளது.

‘Kalki Krishnamurthy: His Life on Times’ என்னும் பெயரில் அந்நூல் படைக்கப்பட்டுள்ளது. முதல் நூலை பெற்றுக் கொண்டார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு.

கல்கியின் வாழ்க்கை வரலாறு கடந்த 1973இல் தமிழில் வெளியீடு கண்டது. அந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் கல்கியின் பேத்தியான கௌரி இராமநாராயணன்.

1. Which institution releases the ‘State of World Population Report’?

A) UNICEF

B) UNFPA 

C) IMF

D) World Bank

  • United Nations Population Fund (UNFPA) recently released the ‘State of World Population: Seeing the Unseen: The case for action in the neglected crisis of unintended pregnancy’ Report.
  • As per the report, nearly half of all pregnancies, totalling 121 million each year throughout the world, are unintended. Globally, an estimated 257 million women who want to avoid pregnancy are not using safe and modern methods of contraception.

2. Which institution launched the digital platform ‘Fast and Secured Transmission of Electronic Records’ (FASTER)?

A) Reserve Bank of India

B) Supreme Court of India 

C) Election Commission of India

D) Central Bureau of Investigation

  • The Chief Justice of India N.V. Ramana launched digital platform ‘Fast and Secured Transmission of Electronic Records’ (FASTER).
  • The platform would be used by the court officials to instantly to send e-copies of the orders to intended parties, through a secured electronic communication channel. It covers all types of orders of the court.

3. Which regulator body launched the ideathon named ‘Manthan’?

A) RBI

B) NABARD

C) SEBI 

D) IRDAI

  • SEBI Chairperson Madhabi Puri Buch launched the ‘Manthan’, a six-week long ideathon, in association with various institutions including BSE, NSE, NSDL, CDSL, KFintech, CAMS, LinkInTime and MCX.
  • It will facilitate the creation of a set of ideas and innovative solutions related to the securities market in India.

4. ‘The Pradhan Mantri Sangrahalaya’ is located in which state/UT?

A) New Delhi 

B) Uttar Pradesh

C) Uttarakhand

D) Gujarat

  • The Pradhan Mantri Sangrahalaya, a museum dedicated to prime ministers of India, is set to be inaugurated on April 14 to coincide with B R Ambedkar’s birth anniversary. Being built on a 10,000-square metre land adjacent to the Nehru Memorial Museum in Delhi, the museum covers the life and times of all 14 Indian prime ministers so far.

5. Which city is the host of the ‘Mega International Summit on MSMEs 2022’?

A) Mumbai

B) Chennai

C) New Delhi 🗹

D) Dehradun

  • Ministry of MSME, Government of India and the Entrepreneurship Development Institute of India (EDII), Ahmedabad, organised a ‘Mega International Summit on MSMEs’ at the India International Centre, New Delhi.
  • The two-day summit was attended by entrepreneurs, academicians, policymakers, industry leaders, industry associations, start-ups, social impact organizations, MSMEs and self-help groups from India and across the world.

6. A new Project to enhance climate resilience of coastal communities, has been initiated across which states?

A) Tamil Nadu, Maharashtra, and Odisha

B) Andhra Pradesh, Maharashtra, and Odisha 

C) Andhra Pradesh, Maharashtra, and Kerala

D) Karnataka, Maharashtra, and Odisha

  • The Centre has initiated a project across the states of Andhra Pradesh, Maharashtra, and Odisha to enhance climate resilience of coastal communitiesThe project has been undertaken at a total cost of USD 130.269 million (around Rs 1,000 crore) which includes a grant of USD 43.419 million.

7. The World Autism Awareness Day is observed on which date?

A) April 01

B) April 02 

C) April 03

D) April 04

  • World Autism Awareness Day aims to create awareness about the obstacles that people with autism face every day. Each year, World Autism Awareness Day is celebrated on April 2 globally to spread awareness about autism spectrum disorder. This year, the theme of World Autism Awareness Day is ‘Inclusion in the Workplace’.

8. When is the National Maritime Day celebrated every year?

A) April.01

B) April.03

C) April.05 

D) April.07

  • India recently celebrated the 59th National Maritime Day which falls on April 5 every year. This year’s theme is ‘Sustainable Shipping beyond Covid-19’. The first anniversary of the day was held in 1964 to raise awareness about international trade and economy.
  • An award ceremony is held to honour those who made important contributions to the Indian maritime industry.

9. Which day is celebrated as World Health Day?

A) April.01

B) April.03

C) April.05

D) April.07 

  • 7 April is celebrated as the World Health Day to create public awareness regarding health all over the world under the sponsorship of World Health Organization and other related organizations. The theme for this year’s World Health Day is “Our Planet, Our Health”.

10. Which Indian personality has featured in the ‘Time100 – Impact Awards’?

A) Virat Kohli

B) Sivakarthikeyan

C) Deepika Padukone 

D) PV Sindhu

  • Indian Actor Deepika Padukone was honoured at the TIME 100 impact awards, for her work on mental health through her organisation ‘Live Love Laugh’ foundation. This is the second honour by the TIME magazine for the ace actress.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!