TnpscTnpsc Current Affairs

7th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையானது STREET (Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) கோவா

இ) கேரளா 

ஈ) சிக்கிம்

  • கேரள மாநில சுற்றுலாத்துறை அண்மையில் அதன் 7 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் STREET (Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டமானது பார்வையாளர்களுக்கு இந்த இடங்களில் கிடைக்கும் பல்வேறு வகையான சலுகைகளை அனுபவிக்க உதவும்.
  • முதற்கட்டமாக கோழிக்கோடு கடலுண்டி, பாலக்காட்டில் திரிதாலா, பட்டிதாரா, கண்ணூரில் பினராயி, அஞ்சரக்கண்டி, கோட்டயத்தில் மறவந்துருத்து, மஞ்சிரா, காசர்கோட்டில் வலியபரம்பா, இடுக்கியில் காந்தளூர், வயநாட்டில் சேக்காடி ஆகிய இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. “காற்றுத்தரம் & வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு” (SAFAR) என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முன் முயற்சியாகும்?

அ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம் 

இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

  • புவி அறிவியல் அமைச்சகமானது “SAFAR” எனப்படும் “காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு” என்ற ஒரு பெரிய தேசிய முயற்சியை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் பெருநகர நகரங்களுக்கு காற்றின் தரம் குறித்த குறிப்பிட்ட இருப்பிடத் தகவலை வழங்க உதவுகிறது.
  • SAFAR’இன்படி, தேசிய தலைநகரில் ஒட்டுமொத்த காற்றுத்தரக்குறியீடு ‘மிகவும் மோசமான’ பிரிவில் 372 ஆக உள்ளது. சுழியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட மதிப்பெண் ‘நல்லது’ எனவும், 51-100க்கு இடையிலான மதிப்பெண் ‘திருப்திகரமானது’ எனவும், 101 மற்றும் 200 இடையிலான மதிப்பெண் ‘மிதமானது’, 201 மற்றும் 300 இடையிலான மதிப்பெண் ‘மோசமானது’ எனவும், 301 மற்றும் 400 இடையிலான மதிப்பெண் ‘மிகவும் மோசமானது’ எனவும் மற்றும் 401 மற்றும் 500 இடையிலான மதிப்பெண் ‘கடுமையானது’ எனவும் கருதப்படுகிறது.

3. தேசிய சுகாதார கணக்குகள் (NHA) மதிப்பீட்டின்படி, 2017-18’இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதார செலவினத்தின் பங்கு என்ன?

அ) 1.2%

ஆ) 1.35% 

இ) 1.75%

ஈ) 2.5%

  • 2017-18ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தேசிய சுகாதார கணக்குகளின் (NHA) மதிப்பீட்டின்படி, 2013-14’இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.15% ஆக இருந்த அரசின் சுகாதார செலவினங்களின் பங்கு 2017-18’இல் 1.35% ஆக அதிகரித்துள்ளது.
  • 2013-14 மற்றும் 2017-18’க்கு இடையில் சுகாதாரத்திற்கான அரசின் செலவினம் 3.78%’இலிருந்து 5.12% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தக் கண்டறிவுகள் காட்டுகின்றன. தனிநபர் OOPE’ஐப் பொறுத்தவரை, 2013 -14 மற்றும் 2017-18’க்கு இடையில் `2,336 இலிருந்து `2,097ஆகக் குறைந்துள்ளது.

4. ‘The India Young Water Professional’ திட்டமானது பின்வரும் எந்த நாட்டுடன் இணைந்து முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) ஆஸ்திரேலியா

ஈ) ஜப்பான்

  • இந்திய இளம் நீர் நிபுணத்துவ திட்டத்தின் முதல் பதிப்பு தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நீர் கூட்டாண்மை -யின் ஆதரவில் இது உள்ளது. இது நீர்வளம், ஆற்று மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் துறையின் திட்டமாகும். தேசிய நீரியல் திட்டத்தின் மத்திய மற்றும் மாநில அமலாக்க முகவர்களிடமிருந்து மொத்தம் இருபது பங்கேற்பாளர்கள் (10 ஆண்கள் & 10 பெண்கள்) இந்தத் திட்டத்தின் முதல் பதிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

5. இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பழம் எது?

அ) ஆப்பிள்

ஆ) ஸ்ட்ராபெர்ரி

இ) கிவி 

ஈ) வாழை

  • இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பழமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிவிப் பழங்களை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார். வடகிழக்கு பிராந்தியத்திற்கான மிஷன் ஆர்கானி -க் வேல்யூ செயின் டெவலப்மென்ட் திட்டத்தின்கீழ் கிவிப்பழத்திற்கு ஆர்கானிக் சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய மாநிலமாக அருணாச்சல பிரதேசம் ஆனது.

6. அண்மையில், ‘கிரந்தி சூரிய கௌரவ் கலச’ யாத்திரையைத் தொடங்கிய மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத்

இ) மத்திய பிரதேசம் 

ஈ) பீகார்

  • சுதந்திரப் போராட்ட வீரர் ஜனநாயக் தந்தியா மாமாவின் பிறந்த இடமான பரோட் அகிர் கிராமத்திலிருந்து ‘கிரந்தி சூரிய கௌரவ் கலச யாத்ரா’வை மத்திய பிரதேசம் தொடங்கியது. இந்த யாத்திரையில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார். டிச.4 அன்று இந்தூரில் ஜனநாயக் தந்தியா மாமாவின் நினைவு நாளையொட்டி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

7. ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட் (ZED) என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டம்?

அ) வேளாண்மை & விவசாயிகள் நல அமைச்சகம்

ஆ) MSME அமைச்சகம் 

இ) வர்த்தகம் & தொழில்துறை அமைச்சகம்

ஈ) எஃகு அமைச்சகம்

  • MSME அமைச்சகம் ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட் (ZED) திட்டத்தை செயல்படுத்துகிறது. இது கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட MSME சான்றிதழ் திட்டமாகும். இது MSME’கள் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் மேலும் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கிறது.
  • MSME அமைச்சர் நாராயண் ரானே, ராஜ்யசபாவில் பகிர்ந்துகொண்ட தரவுகளின்படி, இந்தத் திட்டம் சுமார் 25,000 MSME பதிவுகளைப் பதிவு செய்துள்ளது. மேலும் MSMEகள் பயனடைவதற்காக FY19’இல் இந்தத் திட்டம் உயர்த்தப்பட்டது.

8. ‘சமூக ஊடக (அடிப்படை எதிர்பார்ப்புகள் & அவதூறு) மசோதா -2021’ஐ முன்மொழிந்த நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ஆஸ்திரேலியா 

இ) சீனா

ஈ) இந்தியா

  • ஆஸ்திரேலிய அரசாங்கம் ‘சமூக ஊடக (அடிப்படை எதிர்பார்ப்புகள் மற்றும் அவதூறு) மசோதா – 2021’இன் வரைவை வெளியிட்டது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்திற்கு பொறுப்பேற்பது மற்றும் பயனர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதை இம்மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட முழு கிரையோஜெனிக் ஏவுகலமான தவான்-1, பின்வரும் எந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்?

அ) ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் 

ஆ) ஸ்கந்தா ஏரோஸ்பேஸ்

இ) துருவ் ஸ்பேஸ்

ஈ) காலின்ஸ் ஏரோஸ்பேஸ்

  • ஹைதராபாத்தைச்சார்ந்த விண்வெளி தொழில்நுட்ப துளிர் நிறுவனமா -ன ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், இந்தியாவின் முதல் தனியாரால் உருவா -க்கப்பட்ட முழு கிரையோஜெனிக் ஏவுகல எஞ்சினை பரிசோதனை செய்துள்ளது. இந்திய ஏவுகல விஞ்ஞானி சதீஷ் தவானின் நினைவாக இந்த எஞ்சினுக்கு தவான்-1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது 3D பிரிண்டிங் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஆக்ஸிஜனை இது தனது எரிபொருளாக பயன்படுத்தும்.

10. வருவாய் புலனாய்வு இயக்குநரகமானது எந்த அமைப்பின்கீழ் அமலாக்க முகமையாக உள்ளது?

அ) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் 

ஆ) செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா

இ) அமலாக்க இயக்குநரகம்

ஈ) மத்திய நேரடி வரிகள் வாரியம்

  • வருவாய் புலனாய்வு இயக்குநரகமானது, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) கீழ், கடத்தல் எதிர்ப்பு விஷயங்களில் இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை மற்றும் அமலாக்க நிறுவனமாக உள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 64ஆவது நிறுவன நாளில் உரை நிகழ்த்தினார். 2020-21ஆம் ஆண்டில் மத்திய கிழக்கிலிருந்து மியான் -மருக்கு தங்கக்கடத்தல் நிகழ்ந்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பறவைகள் சரணாலயமாகிறது ‘கழுவேலி ஈரநிலம்’: அரசாணை வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் 16ஆவது பறவைகள் சரணாலயமாக கழு வேலி ஈரநிலம் உருவெடுத்துள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட வேண்டிய பகுதிகளின் வரையறைகள் மற்றும் வரம்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 5151.60 ஹெக்டேர் நிலப் பரப்பில் அந்தச் சரணாலயம் அமையவுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் மரக்காணம் தாலூகா பகுதிகளில் அமைந்துள்ளது கழுவேலி உவர்நீர் ஈரநிலம். இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் அரிய பறவைகள் இங்கு வலசை வருவது வழக்கம். அதன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உயிரியல் முக்கியத்துவத்தை உணர்ந்து அவ்விடத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2. இந்தியா-ரஷியா இடையே `5,000 கோடி பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பம்

`5,000 கோடி மதிப்பில் ஏகே-203 ரக துப்பாக்கிகளை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார்ந்த 4 ஒப்பந்தங்கள் இந்தியா-ரஷியா இடையே கையொப்பமாகின. இவைதவிர, 24 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்தியா-ரஷியா ராணுவம் மற்றும் ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆணையத்தின் 20ஆவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின்போது நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதியில் 6,01,427 ஏகே-203 ரக தாக்குதல் துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கு சுமார் `5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்திய வீரர்கள் பயன்படுத்துவதற்கான இந்தத் துப்பாக்கிகளின் தொழில்நுட்பத்தை ரஷியா பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு (2021-2031) நீட்டிப்பதற்கான ஒப்பந்தமும் கூட்டத்தின்போது கையொப்பமானது.

‘கலாஷ்னிகோவ்’ ரக சிறிய ரக ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளுக்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டில் கையொப்பமான ஒப்பந்தத்தில் தற்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா-ரஷியா ராணுவம் மற்றும் ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆணையத்தின் 20ஆவது கூட்டம் தொடர்பான வழிமுறைகள் குறித்த ஓர் ஒப்பந்தமும் கையொப்பமானது.

மொத்தம் உடன்பாடுகளில் ஒன்பது இரு நாட்டு அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்கள் தொடர்பானவை. மீதமுள்ள 19 ஒப்பந்தங்கள் பல்வேறு துறைகளில் வணிக ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பானவை.

3. மானிய விலையில் மாடித் தோட்ட விதைகள்: புதிய திட்டத்தைத் தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மானிய விலையில் மாடித்தோட்டத்துக்கான விதைகள் மற்றும் செடிகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் ஊட்டந்தரும் காய்கறி தோட்டத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் மானிய விலையில் மாடித் தோட்ட விதைகள், செடிகள் வழங்கப்பட உள்ளன. ஆறு வகையான காய்கறி விதைகள், 6 எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், 6 எண்ணிக்கையிலான இரண்டு கிலோ அளவிலான தென்னை நார் கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மில்லி லிட்டர் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைக்கான கையேடு ஆகியன `225 விலையில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் சந்தை விலை நகரப் பகுதிகளில் `900 ஆகும். நகரப்பகுதியைச்சேர்ந்த ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித்தோட்ட விதைகள் மற்றும் செடிகள் வரை வழங்கப்படும்.

ஊரகப் பகுதிகள்: ஊரகப் பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க கத்திரி, மிளகாய், வெண்டை, தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய பன்னிரு வகை காய்கறி விதைகளை வழங்கப்பட உள்ளன. ஒருவருக்கு இரண்டு தொகுப்புகள் அளிக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி: காய்கறிகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் மூலிகைச் செடிகள், நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளும் வழங்கப்படும். அதன்படி, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்று கற்றாழை ஆகிய எட்டுச் செடிகள் அடங்கிய தொகுப்பு `25 விலையில் வழங்கப்படும். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு அளிக்கப்படும்.

4. நாட்டில் 2.13 லட்சம் ஏடிஎம்’கள்!

இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டில் உள்ள மொத்த ஏடிஎம்களின் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள்) எண்ணிக்கை 2.13 லட்சத்துக்கு மேல் உள்ளதாக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கராட் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி நாட்டில் உள்ள வங்கிகள் 2021 செப்டம்பர் வரை 2,13,145 ஏடிஎம்களை நிறுவியுள்ளன. இதில் 47.4 சதவீத ஏடிஎம்’கள் கிராமப்புறங்கள் மற்றும் வளர்ந்துவரும் சிறிய ஊர்களில் உள்ளன. இவைதவிர வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின்கீழ் 27,837 ஏடிஎம்’கள் உள்ளன.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் புதிதாக 1,000 ஏடிஎம்களை நிறுவும் நோக்குடன் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதைய சூழ்நிலையில் பெருநகரங்களைவிட கிராமப்புறங்களில் ஏடிஎம்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

5. அந்நியச் செலாவணி கையிருப்பில் இந்தியாவுக்கு 4ஆவது இடம்

அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் திங்கள்கிழமை அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பான கேள்விகளுக்கான பதிலில் அவர் மேலும் கூறியதாவது:

நவம்பர் 19-ஆம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 640.4 பில்லியன் அமெரிக்க டாலராக (`48.28 லட்சம் கோடி) இருந்தது. கடந்த 7 நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரி, செஸ் வரியாக `16.7 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

2013-14’இல் பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு `9.2-ஆக இருந்தது. டீசல் மீது ஒரு லிட்டருக்கு `3.46-ஆக இருந்தது. அது இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் மீது `27.9 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மீது `21.9 ஆகவும் அதிகரித்துவிட்டது.

இதன்மூலம் கிடைக்கும் வருவாய் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பங்கேற்பு ஆவணங்கள்மூலம் மூதலீடு செய்பவர்கள், அதன்மூலம் பயனடைபவர்கள் ஆகியோரின் விவரம் கருப்புப் பணத்தைத் தடுக்கும் விதிகளின்கீழ் கண்காணிக்கப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடும் செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விவரம் மாதந்தோறும் இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) அறிக்கையாக அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

6. டேவிஸ் கோப்பை: ரஷியா சாம்பியன்

டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்றில் குரோஷிய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரஷியா.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் ரஷியாவின் ஆன்ட்ரெ ரூப்லேவும்-குரோஷிய வீரர் போர்னா கோஜோவும் மோதினர்.

இதில் முதல் 6-4 என கைப்பற்றினார் ரூப்லேவ். இரண்டாவது செட்டில் 4-4 என சமநிலை ஏற்பட்ட போதிலும், சுதாரித்து ஆடிய ரூப்லே 7-6 என்ற செட் கணக்கில் போர்னாவை வென்றார். 2ஆவது ஒற்றையர் ஆட்டத்தில் டேனில் மெத்வதேவும்-மரின் சிலிக்கும் மோதினர். முதல் செட்டை டை பிரேக்கரில் 7-6 என வென்றார் மெத்வதேவ்.

தொடர்ந்து இரண்டாவது செட்டை எவ்வித எதிர்ப்பும் இன்றி 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 2-0 என வென்ற ரஷிய அணி 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1. Which state’s tourism department launched the STREET (Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism) project?

A) Tamil Nadu

B) Goa

C) Kerala 

D) Sikkim

  • Kerala Tourism recently launched the ‘STREET’ (Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, and Tourism) project in select places in seven districts. The project would help visitors experience the diversity of offerings in these places.
  • In the first phase, the project would be implemented in Kadalundi in Kozhikode, Thrithala and Pattithara in Palakkad, Pinarayi and Ancharakkandi in Kannur, Maravanthuruthu and Manchira in Kottayam, Valiyaparamba in Kasaragod, Kanthalloor in Idukki and Chekadi in Wayanad.

2. “System of Air Quality and Weather Forecasting and Research” (SAFAR) is an initiative of which Union Ministry of India?

A) Ministry of Environment, Forest and Climate Change

B) Ministry of Earth Sciences 

C) Ministry of Science and Technology

D) Ministry of Agriculture and Farmers Welfare

  • Ministry of Earth Sciences (MoES) introduced a major national initiative, “System of Air Quality and Weather Forecasting and Research” known as “SAFAR”. It enables greater metropolitan cities of India to provide location specific information on air quality.
  • As per SAFAR, the overall Air Quality Index (AQI) in the national capital stood at 372 in the ‘very poor’ category. An AQI between zero and 50 is considered ‘good’, 51 and 100 ‘satisfactory’, 101 and 200 ‘moderate’, 201 and 300 ‘poor’, 301 and 400 ‘very poor’, and 401 and 500 ‘severe’.

3. As per the National Health Accounts (NHA) estimates, what was the share of government health expenditure in the GDP of India in 2017–18?

A) 1.2%

B) 1.35%

C) 1.75%

D) 2.5%

  • As per National Health Accounts (NHA) estimates for India for 2017–18, the share of government health expenditure in the GDP of the country has increased to 1.35% in 2017–18 from 1.15% in 2013–14.
  • The findings also show the government spending on health as a share of total expenditure also increased to 5.12% from 3.78% between 2013–14 and 2017–18. In case of per capita OOPE, there was a decline from ₹2,336 to ₹2,097 between 2013–14 and 2017–18.

4. ‘The India Young Water Professional Programme’ has been launched for the first time, in association with which country?

A) USA

B) Russia

C) Australia 

D) Japan

  • The first edition of the India Young Water Professional Programme was launched virtually, under National Hydrology Project and supported by the Australian Water Partnership. It is a Central Scheme of Department of Water Resources, river development and Ganga rejuvenation. A total of 20 participants (10 men and 10 women) have been selected for the first edition of this Programme from central and state implementing agencies of the National Hydrology Project.

5. Which is India’s first certified organic fruit?

A) Apple

B) Strawberry

C) Kiwi 

D) Banana

  • India’s 1st Certified Organic Fruit – Arunachal Pradesh Kiwis have been launched by the union minister Kiren Rijiju. Arunachal Pradesh has become the first Indian state to obtain organic certification for Kiwi under the scheme – Mission Organic Value Chain Development for North East Region.

6. Which state launched the ‘Kranti Surya Gaurav Kalash Yatra’ recently?

A) Maharashtra

B) Gujarat

C) Madhya Pradesh 

D) Bihar

  • Madhya Pradesh launched the ‘Kranti Surya Gaurav Kalash Yatra’ from the birthplace of freedom fighter Jannayak Tantya Mama, Barod Ahir village. Chief Minister Shivraj Singh Chouhan has called upon the citizens to participate in this yatra. The state has also announced a programme to be organised on death Anniversary of Jannayak Tantya Mama at Indore on December 4.

7. Zero Defect, Zero Effect (ZED) is a scheme implemented by which Union Ministry?

A) Ministry of Agriculture and Farmers Welfare

B) Ministry of MSME 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Steel

  • Ministry of MSME implements the Zero Defect, Zero Effect (ZED) scheme. It is an MSME certification scheme launched by Prime Minister Narendra Modi in 2016 to encourage the manufacturing of goods by MSMEs without any defects and without any effects on the environment.
  • According to the data shared by MSME Minister Narayan Rane in Rajya Sabha, the scheme has recorded around 25,000 MSME registrations. The scheme was upscaled in FY19 to benefit more MSMEs.

8. Which country proposed the ‘Social Media (Basic Expectations and Defamation) Bill 2021’?

A) USA

B) Australia 

C) China

D) India

  • The Australian government released the draft of ‘Social Media (Basic Expectations and Defamation) Bill 2021’. The Bill aims at holding social media companies accountable for the content posted on their platforms, and protecting users from trolls. The reforms will consider social media companies as publishers and they can avoid this liability if they provide information so that the victim can identify and begin defamation proceedings against the troll.

9. Dhawan–1, India’s first first privately developed fully cryogenic rocket engine, was developed by which company?

A) Skyroot Aerospace 

B) Skanda Aerospace

C) Dhruv Space

D) Collins Aerospace

  • Skyroot Aerospace, a Hyderabad–based space technology startup, has test fired India’s first privately developed fully cryogenic rocket engine. The engine has been named as Dhawan–1, in honour of Indian rocket scientist Satish Dhawan. It was developed using 3D printing technology and is fuelled by liquefied natural gas and liquid oxygen.

10. Directorate of Revenue Intelligence (DRI), is an enforcement agency under which organisation?

A) Central Board of Indirect Taxes and Customs 

B) Securities Exchange Board of India

C) Enforcement Directorate

D) Central Board of Direct Taxes

  • The Directorate of Revenue Intelligence (DRI), under the Central Board of Indirect Taxes and Customs (CBIC), is an intelligence and enforcement agency of the Government of India on anti–smuggling matters. The Union Finance Minister Ms Nirmala Sitharaman was addressing the 64th ‘Directorate of Revenue Intelligence (DRI), Foundation Day’.
  • DRI released a report on the occasion, which said that gold smuggling shifted from the Middle East to Myanmar during 2020–21.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!