TnpscTnpsc Current Affairs

7th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

7th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 7th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. சுற்றுச்சூழல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த நாட்டுக்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவினை வழங்க உலக வங்கி அண்மையில் தனது ஒப்புதலை அளித்தது?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. வங்காளதேசம்

இ. ஜப்பான்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வங்காளதேசம்

  • சுற்றுச்சூழல் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பசுமை முதலீட்டில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்கவுமாக $250 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வங்காளதேசத்திற்கு அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்காளதேச சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உருமாற்றத்திட்டம் அந்நாட்டின் முதன்மை மாசு பிரச்னைகளை கையாள உதவும். ஆண்டுக்கு 3500 மெட்ரிக் டன் மின்னணுக்கழிவுகளை செயலாக்கம் செய்வதற்கான மின்னணு கழிவு மேலாண்மை வசதி அந்நாட்டில் ஏற்படுத்தப்படும்.

2. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக உள்ள நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஐக்கிய இராச்சியம்

ஈ. ரஷ்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான வர்த்தகம் 2021–22இல் $72.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளராக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபி இந்தியாவில் இருந்து அதிக முதலீடுகளை நாடுகிறது. அபுதாபியில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யக்கூடிய வேளாண் தொழில்நுட்பம், சுற்றுலா, சுகாதாரம், மருந்து மற்றும் நிதியியல் சேவைகள் உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளை அது அடையாளம் கண்டுள்ளது.

3. காஷ்ட்–இ–எர்ஷாத் என அழைக்கப்படும் கலாச்சார காவல் பிரிவை ஒழித்த நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஈரான்

இ. ஈராக்

ஈ. கத்தார்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஈரான்

  • காஷ்ட்–இ எர்ஷாத் எனப்படும் ‘கலாச்சார காவல்’ பிரிவை ஈரான் நீக்கம் செய்துள்ளது. இந்தப் பிரிவு கடந்த 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் காவல் பிரிவின் ரோந்து பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து இம் முடிவெடுக்கப்பட்டது. 22 வயதான மாஷா அமினி முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக் கைதுசெய்து காவலில் வைக்கப்பட்டார். சிறைக்காவலில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட கிளர்ச்சியினைத் தொடர்ந்து இக்காவல்பிரிவு ஒழிக்கப்பட்டது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Olivier Giroud என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டைச்சேர்ந்த பிரபல கால்பந்து வீரராவார்?

அ. பிரான்ஸ்

ஆ. ரஷ்யா

இ. இங்கிலாந்து

ஈ. பிரேசில்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பிரான்ஸ்

  • 2022 – FIFA உலகக்கோப்பையில், பிரான்சு போலந்தைத் தோற்கடித்து போட்டியின் காலிறுதிக்குத் தகுதிபெற்றது. ஆலிவர் ஜிரோட் 52 கோல்கள் அடித்து பிரான்சு அணியின் ஆல் டைம் டாப் ஸ்கோரர் ஆனார். 24 ஆண்டுகளுக்கு முன் ஒன்பது உலகக்கோப்பை கோல்களை அடித்த முதல் வீரர் கைலியன் எம்பாப்பே ஆவார்.

5. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய கூட்டத்தை நடத்துகிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. தாய்லாந்து

ஈ. சிங்கப்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. சிங்கப்பூர்

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் 17ஆம் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய கூட்டமானது சிங்கப்பூரில் தொடங்கியது. “Integrated Policy Agenda for a Human–Centred Recovery that is Inclusive, Sustainable and Resilient” என்பது இந்த பதினேழாம் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய கூட்டத்தின் கருப்பொருளாக அமைந்தது.

6. ஆசியான்–இந்தியா இசை விழாவை நடத்தும் நகரம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி

இ. காந்தி நகர்

ஈ. சென்னை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • ஆசியான்–இந்தியா இசை விழாவின் இரண்டாவது பதிப்பானது வெளியுறவு அமைச்சகம் மற்றும் செஹர் இந்தியா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தில்லியிலுள்ள புரானா கிலாவில் நடைபெறும் மூன்று நாள் திருவிழாவாகும். இது தென்கிழக்காசியாவின் இசை பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டது. ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பத்து இசைக்குழுக்களும், இந்தியாவில் இருந்து ஐந்து குழுக்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

7. ‘பெண் தொழில்முனைவோர் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.01

ஆ. நவம்பர்.15

இ. நவம்பர்.19

ஈ. நவம்பர்.25

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நவம்பர்.19

  • ஒவ்வோர் ஆண்டும் நவ.19ஆம் தேதியன்று ‘பெண் தொழில்முனைவோர் நாள்’ மகளிர் தொழில்முனைவோர் நாள் அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது. முதன்முதலாக கடந்த 2014ஆம் ஆண்டில் சுமார் 144 நாடுகளில் பெண்கள் தொழில்முனைவோர் நாள் அனுசரிக்கப்பட்டது. இது வழக்கொழிந்துபோன கொள்கைகளைத் தகர்த்தெறிவதில் முனைப்பு காட்டும் பெண்களை சிறப்பிக்கிறது.

8. ‘யானைகள் இறப்பு தணிக்கை கட்டமைப்பை’ அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • யானைகள் இறப்புக்கான காரணங்களை ஆவணப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு யானைகள் இறப்பு தணிக்கை கட்டமைப்பைத் தொடங்கியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, 2021 ஜனவரி மற்றும் 2022 மார்ச்சுக்கு இடையில் தமிழ்நாட்டின் வனச்சரகங்களில் பதிவுசெய்யப்பட்ட 131 யானை இறப்புகளில், பதிமூன்றுக்கு மட்டுமே மனிதன் காரணமாகும். இந்தக் கட்டமைப்பானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, இறப்புக்கான காரணத்தை மிகவும் நம்பகமான ஒப்பீடுகளுடன் அளிக்கும்.

9. உலக மீன்பிடி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.15

ஆ. நவம்பர்.21

இ. நவம்பர்.25

ஈ. நவம்பர்.28

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்.21

  • அனைத்து மீனவ மக்கள், மீன் வளர்ப்பாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழிற்துறையினருடனான ஒற்றுமையை எடுத்துக் காட்டும் நோக்கோடு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.21 அன்று, ‘உலக மீன்பிடி நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள், ‘உலக மீன் அறுவடையாளர்கள் மற்றும் மீனவ தொழிலாளர்களின் மன்றம்’ புது தில்லியில் கூடி, 18 நாடுகளின் பிரதிநிதிகளுடன் 1997இல், ‘உலக மீன்பிடி மன்றம்’ உருவானதை நினைவுகூருகிறது.

10. 2022 – FIFA உலகக்கோப்பை போட்டிகளை நடத்துகிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. கத்தார்

இ. ஆஸ்திரேலியா

ஈ. அர்ஜென்டினா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கத்தார்

  • 2022 – FIFA உலகக்கோப்பையை கத்தார் நடத்துகிறது. உலகக்கோப்பையின் தொடக்க விழா கத்தாரின் அல் பேட் அரங்கத்தில் தொடங்கியது. முன்னதாக, பிரான்ஸ் ஜாம்பவான் மார்செல் டிசாய்லி, தொடக்க விழாவுக்கு முன்னதாக உலகக்கோப்பை கோப்பையை ரசிகர்கள் முன்னிலையில் வழங்கினார். ஐந்து பிராந்தியங்களைச் சார்ந்த முப்பத்து இரண்டு முன்னணி நாடுகள் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போட்டியிடவுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டில் செயல்படும் தபால் நிலையங்கள்.

நாட்டில் மொத்தம் 1,59,225 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 11,864 தபால் நிலையங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படுகின்றன. நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் 37 தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

2. உலகின் நீளமான ஈரடுக்கு பாலம்: நாகபுரி மெட்ரோ கின்னஸ் சாதனை

மகாராஷ்டிரத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கிமீ தொலைவிலான ஈரடுக்கு பாலம் உலகில் நீளமான ஈரடுக்கு பாலம் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நாகபுரியின் வார்தா சாலையில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் மேல் பகுதியில் மெட்ரோ இரயிலுக்கான இரு தடங்களும், 3 மெட்ரோ இரயில் நிலையங்களையும் கொண்டுள்ளது. அதற்குகீழ்ப்பகுதியில், வாகனப் போக்குவரத்துக்கான மேம்பாலம் உள்ளது. தரைப்பகுதியில் வாகனங்கள் வழக்கம்போல் சாலையில் செல்லும் வசதி என மூன்று நிலையிலான போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.

முன்னதாக, இந்த ஈரடுக்கு பாலம் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே நீளமான ஈரடுக்கு பாலம் என்பதற்காகவும் ஈரடுக்கு பாலத்தில் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ இரயில் நிலையங்களைக் கொண்டிருப்பதற்காகவும் இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி: கணிப்பை மாற்றியமைத்தது உலக வங்கி

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை 6.9 சதவீதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்த அமைப்பு வெளியிட்ட வளர்ச்சி கணிப்பில் முந்தைய கணிப்பான 7.5 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உலக நிகழ்வுகளின் தாக்கங்களை இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் தன்மை, அடுத்தடுத்த காலாண்டுகளின் வளர்ச்சி உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 6.5 சதவீதத்திலிருந்து 6.9 சதவீமாக உயர்த்தியுள்ளது. உலகில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச அமைப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு உயர்த்தி வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

பணவீக்கம்: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நடவடிக்கைகள் மற்றும் எரிபொருள் மீதான கலால் வரி உள்ளிட்ட பிற வரிகள் குறைக்கப்பட்டது உள்ளிட்டவை பணவீக்கத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் தாக்கத்தைப் மட்டுப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டில் (2023-24) 5.2 சதவீதமாகக் குறையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. செஸ்: ஆதித்யா மிட்டல் புதிய கிராண்ட்மாஸ்டர்

இந்தியாவின் 77ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக, மும்பையைச்சேர்ந்த ஆதித்யா மிட்டல் (16) உருவெடுத்துள்ளார். ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வரும் எலோபிரெகாட் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அவர், 6ஆவது சுற்றில் ஸ்பெயினின் நெ:1 போட்டியாளரான ஃபிரான்சிஸ்கோ வலேஜோ பொன்ஸுடன் டிரா செய்தபோது இந்தச் சாதனையை அவர் எட்டினார். நடப்பாண்டில் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ள 5ஆவது இந்தியர் ஆதித்யா மிட்டல். முன்னதாக, பரத் சுப்ரமணியம், ராகுல் ஸ்ரீவத்சவ், வீ பிரணவ், பிரணவ் ஆனந்த் ஆகியோர் இதே ஆண்டில் கிராண்ட்மாஸ்டர்களாகினர். இதில் பரத், வீ பிரணவ் ஆகியோர் தமிழர்களாவர்.

5. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1 இலட்சம் படுக்கை வசதியுடன் தமிழ்நாடு முதலிடம்.

தமிழ்நாட்டில் 7.5 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில் COVID காலத்தில் மருத்துவ படுக்கைகளின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் படுக்கைகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டன. இதன் விளைவாக, தற்போது அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கைகள் உள்ளன. இதன்மூலமாக இந்திய அளவில் அதிக மருத்துவ படுக்கைகள்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மாநிலம் முழுவதும், 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், ஓர் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 99.8% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது.

6. தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் 300 ஆண்டுகள் பழமையான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் கண்டுபிடிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

7. தமிழ்நாடு காவல்துறையின் ‘ஆபரேஷன் மறுவாழ்வு’: ஒரே நாளில் 726 பிச்சைக்காரர்கள் மீட்பு.

தமிழ்நாடு காவல்துறையின் ‘ஆபரேஷன் மறுவாழ்வு’ என்ற அதிரடி நடவடிக்கையின்கீழ் 726 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் 9 காவல் ஆணையரகங்களிலும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள் மற்றும் 16 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு வெகுதூரங்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சையெடுக்க வைக்கும் ஆட்கடத்தல் குற்றவாளிகள்பற்றிய தகவல் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

8. வங்கக்கடலில் புதிய புயல்: மாண்டஸ்.

வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘மாண்டஸ்’ என்றால் ‘புதையல் பெட்டி’ எனப் பொருள் வருகிறது.

7th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. World Bank recently approved USD 250 million financing to which country to strengthen environment management?

A. Philippines

B. Bangladesh

C. Japan

D. Australia

Answer & Explanation

Answer: B. Bangladesh

  • World Bank approved USD 250 million financing to help Bangladesh strengthen environment management and promote private sector participation in green investment. The Bangladesh Environmental Sustainability and Transformation (BEST) Project will help the country tackle key pollution issues. An E–waste management facility will be set up to process 3,500 metric tons of e–waste annually.

2. Which country is the largest trading partner of India after China and US, as of 2022?

A. Australia

B. UAE

C. United Kingdom

D. Russia

Answer & Explanation

Answer: B. UAE

  • The India–UAE trade is valued at USD 72.8 billion in 2021–22, making the UAE India’s third largest trading partner after China and US. Abu Dhabi, UAE’s capital city is seeking more investments from India. Abu Dhabi has identified priority sectors including agri–tech, tourism, healthcare, pharma and financial services, where Indian enterprises can invest.

3. Which country abolished morality police known as the Gasht–e–Ershad or ‘Guidance Patrol’?

A. UAE

B. Iran

C. Iraq

D. Qatar

Answer & Explanation

Answer: B. Iran

  • Iran has abolished ‘morality police’ known as the Gasht–e Ershad or ‘Guidance Patrol’. The unit was established in 2006 and their patrols were feared among women. The custodial death of 22–year–old Mahsa Amini, who was picked up by the vice squads in Tehran and declared dead created public outcry and led to protestors.

4. Olivier Giroud, who was seen in the news, is a famous football player from which country?

A. France

B. Australia

C. England

D. Brazil

Answer & Explanation

Answer: A. France

  • In the FIFA World Cup 2022, France defeats Poland and qualifies for quarter–finals of the tournament. Olivier Giroud becomes all–time top scorer of France with 52 goals. Kylian Mbappé the first player to score nine World Cup goals before 24 years.

5. Which country is the host of the Asia and the Pacific Regional Meeting (APRM) of the International Labour Organisation (ILO)?

A. India

B. Sri Lanka

C. Thailand

D. Singapore

Answer & Explanation

Answer: D. Singapore

  • The 17th Asia and the Pacific Regional Meeting (APRM) of the International Labour Organisation (ILO) began in Singapore. “Integrated policy agenda for a human–centred recovery that is inclusive, sustainable and resilient” is the theme of the meeting.

6. Which city is the host of the ‘ASEAN India Music Festival’?

A. Mumbai

B. New Delhi

C. Gandhi Nagar

D. Chennai

Answer & Explanation

Answer: B. New Delhi

  • The second edition of ASEAN India Music Festival was organised in collaboration between the Ministry of External Affairs and Seher India. It is a three–day festival held at Purana Qila, Delhi. It is aimed to celebrate the musical diversity of Southeast Asia. 10 bands from ASEAN countries and five acts from India are participating in the festival.

7. The ‘Women Entrepreneurship Day’ is celebrated on which day?

A. November.01

B. November.15

C. November.19

D. November.25

Answer & Explanation

Answer: C. November.19

  • The ‘Women Entrepreneurship Day’ is observed every year on November 19 by the Women’s Entrepreneurship Day Organization. The first–ever Women Entrepreneurship Day has observed in around 144 nations in the year 2014. It commemorates women on the front lines doing their part to break the outdated stereotypes.

8. Which is the first state to launch the ‘Elephant Death Audit Framework’?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Karnataka

D. Kerala

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu has launched the ‘Tamil Nadu Elephant Death Audit Framework’ to document reasons for elephant deaths for better accountability. According to media reports, out of the 131 elephant deaths recorded in Tamil Nadu’s Forest divisions between January 2021 and March 2022, only 13 were human–induced. The framework will improve transparency and facilitate more credible comparisons of cause of mortality.

9. When is the ‘World Fisheries Day’ celebrated?

A. November.15

B. November.21

C. November.25

D. November.28

Answer & Explanation

Answer: B. November.21

  • ‘World Fisheries Day’ is celebrated on November 21 every year to demonstrate solidarity with all fisher folk, fish farmers and stakeholders. It started in 1997 where ‘World Forum of Fish Harvesters & Fish Workers’ met at New Delhi leading to formation of the ‘World Fisheries Forum’ with representatives from 18 countries.

10. Which country hosts the ‘FIFA World Cup 2022’?

A. India

B. Qatar

C. Australia

D. Argentina

Answer & Explanation

Answer: B. Qatar

  • Qatar is the host of the FIFA World Cup 2022. The opening ceremony of the World Cup has kicked off at the Al Bayt Stadium, Qatar. Earlier, France legend Marcel Desailly presented the World Cup trophy in front of the fans ahead of the opening ceremony. Thirty–two top countries from five regions will compete for the championship title.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!