TnpscTnpsc Current Affairs

7th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. EIU ‘உலகளாவிய வாழத்தகு குறியீடு – 2022’இல் இந்தியாவில் முதலிடம் பிடித்த நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. புது தில்லி 

இ. மும்பை

ஈ. சென்னை

  • ஐரோப்பியப் புலனாய்வுப்பிரிவு (EIU) சமீபத்தில் ‘Global Liveability Index-2022’ஐ வெளியிட்டது. இது 173 நகரங்களை அவற்றின் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியது. ஐந்து இந்திய நகரங்கள் – தில்லி, மும்பை, சென்னை, அகமதாபாத் மற்றும் பெங்களூர் ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தில்லி 140ஆவது இடத்திலும், மும்பை 141ஆவது இடத்திலும், சென்னை மற்றும் ஆமதாபாத் முறையே 142 மற்றும் 143ஆம் இடத்திலும் உள்ளன. இந்திய நகரங்களில் பெங்களூரு கடைசியாக 146ஆவது இடத்தில் உள்ளது.

2. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தரவரிசைக் குறியீட்டில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா 

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய உணவுப்பாதுகாப்புச்சட்டம், 2013-ஐச் செயல்படுத்துவதற்கான முதல் மாநில தரவரிசைக்குறியீட்டை வெளியிட்டார். நடப்பு 2022ஆம் ஆண்டில் 3 அளவுருக்களின் அடிப்படையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 20 பெரிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஒடிஸா முதலிடத்தையும் உத்தரப்பிரதேசமும் ஆந்திரமும் அதைத் தொடர்ந்த இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் கோவா உள்ளது. 14 சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திரிபுரா முதலிடத்திலும் லடாக் கடைசி இடத்திலும் உள்ளது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற பீல்ட்ஸ் பதக்கத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. கட்டிடக்கலை

ஆ. நிழற்படமெடுத்தல்

இ. கணிதம் 

ஈ. விளையாட்டு

  • ‘பீல்ட்ஸ் பதக்கம்’ என்பது கணிதத்திற்கான நோபல் பரிசு என்றும் விவரிக்கப்படுகிறது. சுவிச்சர்லாந்தில் பணிபுரியும் உக்ரேனிய கணிதவியலாளரான மெரினா வியாசோவ்ஸ்கா, 2022 ‘பீல்ட்ஸ் பதக்கம்’ பெற்ற நால்வருள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். ‘பீல்ட்ஸ் பதக்கம்’ சர்வதேச கணித ஒன்றியத்தால் வழங்கப்படுகிறது. இது ஒரு சர்வதேச அரசுசாரா மற்றும் இலாபநோக்கற்ற அறிவியல் அமைப்பாகும்; இது, கணிதத்தில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

4. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட Dr இராஜேந்திர பிரசாத் நினைவு விருதுடன் தொடர்புடைய துறை எது?

அ. கற்பித்தல்

ஆ. பொது நிர்வாகம் 

இ. சமூக சேவை

ஈ. தொழில்முனைவு

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Dr ஜிதேந்திர சிங், கல்வித்துறையில் பொது நிர்வாகத்திற்கான Dr இராஜேந்திர பிரசாத் நினைவு விருதை நிறுவுவதாக அறிவித்தார். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவரின் நினைவாக, புது தில்லியில் நடைபெற்ற இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் (IIPA) நிர்வாகக்குழு கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கிய போது, இந்த விருதை அறிவித்தார்.

5. சேவைத்துறையில் 11 ஆண்டுகளில் இல்லாத விரைவான வளர்ச்சியை, கீழ்க்காணும் எந்த மாதத்தில் இந்தியா பதிவுசெய்துள்ளது?

அ. ஜனவரி, 2022

ஆ. ஏப்ரல், 2022

இ. மே, 2022

ஈ. ஜூன், 2022 

  • வலுவான தேவைக்கு இடையே 2022 ஜூனில் இந்தியாவின் சேவைத்துறை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக விரைவாக விரிவடைந்துள்ளது. S&P குளோபல் இந்தியா சர்வீசஸ் பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் ஜூன் மாதத்தில் 59.2-ஆக உயர்ந்தது; இது கடந்த 2011 ஏப்ரல் மாதத்துக்குப்பிறகு உயர்ந்துள்ளது. இதன்படி, பிடிவாதமான பணவீக்கம் கவலைக்குரியதாக உள்ளது; ஏனெனில் விலைகள் ஏறக்குறைய 5 ஆண்டுகளில் மிகக்கடுமையாக உயர்ந்துள்ளன.

6. ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மைத்துறையின் கூட்டுப்பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள மாநிலம் எது?

அ. ஆந்திரப் பிரதேசம்

ஆ. ஹரியானா 

இ. ஒடிஸா

ஈ. கேரளா

  • ஹரியானா மாநில அரசும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு துறையின் கூட்டுப்பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. நீர்வள மேலாண்மைத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஹரியானாவின் அடல் பூஜல் யோஜனா திட்ட இயக்குநர் இஸ்ரேலின் பிரதிநிதியுடன் இந்தக் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பவேரியன் ஆல்ப்ஸ் அமைந்துள்ள இடம் எது?

அ. ரஷ்யா

ஆ. பிரான்ஸ்

இ. ஜெர்மனி 

ஈ. சுவிச்சர்லாந்து

  • பவேரியன் ஆல்ப்ஸ் என்பது ஜெர்மன் மாகாணமான பவேரியாவில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் ஆகும். G7 தலைவர்களின் உச்சிமாநாடு 2022 ஜூன்.26 முதல் 28 வரை பவேரியன் ஆல்ப்ஸில் நடைபெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில், G7 தலைவர் பதவியை கைப்பற்றிய ஜெர்மனி இந்த நிகழ்வை நடத்தியது.

8. ஸ்வதேஷ் தர்ஷன் திட்டமானது எந்த நடுவண் அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?

அ. கலாச்சார அமைச்சகம்

. சுற்றுலா அமைச்சகம் 

இ. இரயில்வே அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • இந்தியாவில் உள்ள கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலாக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக சுற்றுலா அமைச்சகத்தால் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நடுவண் துறை திட்டத்தின்கீழ், சுற்றுலா சுற்றுகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடுவண் அரசின் நிதி உதவி வழங்கப்படும்.

9. BRICS குழுமத்தில் கடைசியாக இணைந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இங்கிலாந்து

இ. தென்னாப்பிரிக்கா 

ஈ. மேற்கிந்திய தீவுகள்

  • 2010ஆம் ஆண்டு BRICS-இல் இணைந்த கடைசி உறுப்பு நாடு தென்னாப்பிரிக்கா ஆகும். மற்ற BRICS நாடுகள்: பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா. மொத்தத்தில், இந்த நாடுகள் உலக மக்கள்தொகையில் சுமார் நாற்பது சதவீதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முப்பது சதவீதத்தையும் கொண்டுள்ளன.

10. அண்மையில் ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஆனவர் யார்?

அ. T S திருமூர்த்தி

ஆ. ருச்சிரா காம்போஜ் 

இ. தரஞ்சித் சிங் சந்து

ஈ. பூஜா கபூர்

  • ருச்சிரா காம்போஜ், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆனார். ஐநா தூதராக, அவர் நியூயார்க் நகரத்தில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவின் தலைவராக இருப்பார். T S திருமூர்த்தியைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மிஷன் வாத்சல்யா திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10ஆம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், நலமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது, அவர்களின் முழுத்திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உறுதிசெய்தல், குழந்தைகள் வளர்ச்சிக்கு ஆதரவான மற்றும் ஏற்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், இளம் சிறார் நீதிச்சட்டம் 2015-ஐ செயபல்படுத்துவதில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உதவுதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, கடினமான சூழல்களில், நிறுவனம் சாராத பராமரிப்பை ஊக்குவிப்பது.

‘மிஷன் வாத்சல்யா’ சட்டபூர்வ அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், சேவையளிக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உயர்தர நிறுவன பராமரிப்பு மற்றும் சேவை அளித்தல், நிறுவனம் சாராத சமூக ரீதியான பராமரிப்பை ஊக்குவித்தல், அவசரகால சேவைகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடுகளை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

2. மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இளையராஜா, P T உஷா தேர்வு

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக (எம்.பி) பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளைய ராஜாவுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருதும், 2018-ஆம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதும் வழங்கப்பட்டது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். தர்மசாலா கோவில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை நியமன எம்.பி-க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்படுவது நடைமுறை.

3. பூஸ்டர் தடுப்பூசிக்கு இடைவெளி குறைப்பு

இந்தியாவில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் கரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில், இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப குழு ஏற்றுக்கொண்டது.

இதனால் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. புற்றுநோய் கண்டறிதலுக்கு ‘பிவோட்’ கருவியை உருவாக்கிய சென்னை ஐஐடி ஆய்வுக்குழுவினர்

புற்றுநோய் கண்டறிதலுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘பிவோட்’ என்ற கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இது ஒரு தனிநபருக்கு புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணிக்கக்கூடியதாகும். இந்தக் கருவி புற்றுநோய் சிகிச்சை உத்திகளை வகுப்பதிலும் உதவும்.

1. Which city was ranked first in India in the EIU ‘Global Liveability Index 2022’?

A. Bengaluru

B. New Delhi 

C. Mumbai

D. Chennai

  • The European Intelligence Unit (EIU) recently released the Global Liveability Index 2022, which ranked 173 cities on the basis of their living conditions. Five Indian cities– Delhi, Mumbai, Chennai, Ahmadabad and Bangalore were included in the list. Delhi was ranked the best at 140, followed by Mumbai at 141, Chennai and Ahmadabad at 142 and 143 respectively. Bengaluru was the last of Indian cities at 146th rank.

2. Which state topped the Ranking Index for implementation of the National Food Security Act (NFSA)?

A. Tamil Nadu

B. Odisha 

C. Andhra Pradesh

D. Rajasthan

  • Union Food Minister Piyush Goyal released the first State Ranking Index for implementation of the National Food Security Act, 2013. The states and UTs were ranked based on three parameters for the year 2022. Among the 20 big states and Union Territories (UTs), Odisha topped the index followed by Uttar Pradesh and Andhra Pradesh, while Goa was at the last. Tripura ranked first and Ladakh was at the last among the 14 smaller states and UTs.

3. Fields Medal, which was seen in the news recently, is associated with which field?

A. Architecture

B. Photography

C. Mathematics 

D. Sports

  • Fields Medal is also described the Nobel Prize in mathematics. Ukrainian mathematician Maryna Viazovska, who works in Switzerland, was named as one of four recipients of the 2022 Fields Medal. The Fields Medal is awarded by the International Mathematical Union (IMU), an international non–governmental and non–profit scientific organisation to promote international cooperation in mathematics.

4. Dr. Rajendra Prasad Memorial Award, which was recently announced, is associated with which field?

A. Teaching

B. Public Administration 

C. Social Service

D. Entrepreneurship

  • Union Science and Technology Minister Dr. Jitendra Singh announced setting up of Dr. Rajendra Prasad Memorial Award in public administration in the field of academic excellence. He announced the award in memory of the first President of India, while he chaired the meeting of Executive Council of Indian Institute of Public Administration (IIPA) in New Delhi.

5. India recorded its fastest growth in 11 years in services industry in which month?

A. January 2022

B. April 2022

C. May 2022

D. June 2022 

  • India’s services industry expanded at the fastest rate in over eleven years in June 2022 amid strong demand. The S&P Global India Services Purchasing Managers’ Index rose to 59.2 in June, its highest since April 2011. As per the survey, stubborn inflation remains a concern as prices charged rose at the sharpest rate in almost five years.

6. Which state has signed a joint declaration in the field of integrated water resources management?

A. Andhra Pradesh

B. Haryana 

C. Odisha

D. Kerala

  • The Haryana state government and Israel have signed a joint declaration in the field of integrated water resources management and capacity building. The Joint Cooperation Agreement was signed by the Project Director of Atal Bhujal Yojana, Haryana with the representative of Israel, to make significant transformation in water management sector.

7. Bavarian Alps, which recently made news, is situated in__?

A. Russia

B. France

C. Germany 

D. Switzerland

  • Bavarian Alps are mountain ranges located with the German state of Bavaria. The G7 Leaders’ Summit 2022 is set to take place from June 26 to 28 in the Bavarian Alps. Germany, which took over the G7 presidency at the beginning of this year, will host the event.

8. Swadesh Darshan scheme is the initiative of which union ministry?

A. Ministry of Culture

B. Ministry of Tourism 

C. Ministry of Railways

D. Ministry of Home Affairs

  • Swadesh Darshan Scheme was launched by the Ministry of Tourism for the integrated development of theme–based tourist circuits in India. Under this central sector scheme, central financial assistance will be provided to states and union territories for the infrastructural development of the tourist circuits.

9. Which country was the last to join the BRICS group?

A. Australia

B. England

C. South Africa 

D. West Indies

  • South Africa was the last member country to join the BRICS in the year 2010. Other BRICS countries are Brazil, Russia, India and China. Together, these countries account for around 40 per cent of the global population and some 30 per cent of the global GDP.

10. Who recently became India’s Permanent Representative to the United Nations?

A. T S Tirumurti 

B. Ruchira Kamboj

C. Taranjit Singh Sandhu

D. Pooja Kapur

  • Ruchira Kamboj recently became India’s Permanent Representative to the United Nations. As the UN ambassador, she will be the head of the Permanent Mission of India to the UN in New York City. She will succeed T S Tirumurti.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!