TnpscTnpsc Current Affairs

7th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

7th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 7th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மையில் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட டெலிகாம் ஜெயண்ட் ஆப்டஸ் சார்ந்த நாடு எது?

அ. கனடா

ஆ. அமெரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ரஷ்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • அண்மைய சைபர் தாக்குதலில் 1.2 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள வடிவங்கள் திருடப்பட்டதாக ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ் தெரிவித்துள்ளது. கனடா கண்ட மிகப்பெரிய இணைய மீறல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த இணைய மீறல் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை பாதிப்புக்குள்ளாக்கியது; அது ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதத்துக்குச் சமமாகும். இம்மீறலுக்குப்பிறகு, தொலைத்தொடர்பு சட்டங்களில் மாற்றங்களை நடுவணரசு வெளியிட்டுள்ளது.

2. `2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு UPIஇல் RuPay கடனட்டை பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் கட்டண சதவீதம் எவ்வளவு?

அ. 0.5%

ஆ. 2%

இ. 5%

ஈ. கட்டணம் இல்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. கட்டணம் இல்லை

  • `2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) ரூபே கடன் அட்டை பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தெளிவுபடுத்தியுள்ளது. Nil Merchant Discount Rate (MDR) ஆனது இந்த வகைக்கு `2,000க்கும் குறைவான பணப் பரிமாற்றத்துக்குப் பொருந்தும். செப்டம்பரில், RBI ஆளுநர் UPI வலையமைப்பில் ரூபே கடன் அட்டை பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.

3. உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் (2022–23) இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு என்ன?

அ. 6.2%

ஆ. 6.5%

இ. 7.0%

ஈ. 7.2%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 6.5% 

  • உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் (2022–23) 6.5%ஆகக் குறைத்தது. அதன் முந்தைய ஜூன் மாத மதிப்பீட்டில் 7.5% என அது அறிவிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப்புள்ளிகளால் 5.9 சதவீதமாக உயர்த்திய பிறகு, முந்தைய மதிப்பீடான 7.2%இலிருந்து 7%ஆகக் குறைத்தது. மேலும் UNCTAD இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆனது 2021இல் 8.2%ஆக இருந்து இந்த ஆண்டு 5.7%ஆக குறையும் என்று கணித்துள்ளது.

4. 2022 – இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் சார்ந்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பிரான்ஸ்

  • பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 82 வயதான அன்னி எர்னாக்ஸ் வர்க்கம் மற்றும் பாலினம் குறித்த அவரது தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்திய அவரது புதினங்களுக்குப் பெயர்பெற்றவர். அன்னி எர்னாக்ஸ் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல தசாப்தங்களாக பிரான்சில் பள்ளிப் பாடநூல்களாக உள்ளன. இந்த ஆண்டு இலக்கியப் பரிசுக்கான போட்டியாளர்களில் ஒருவராக, இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான சல்மான் ருஷ்டியும் இருந்தார்.

5. 2022இல் டெல் அவிவ் ஓபன் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ. ரபேல் நடால்

ஆ. ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்

இ. ரோஜர் பெடரர்

ஈ. நோவக் ஜோகோவிச்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. நோவக் ஜோகோவிச்

  • 2022இல் இஸ்ரேலில் நடைபெற்ற டெல் அவிவ் ஓபன் பட்டத்தை மூத்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் வென்றார். இது டென்னிஸில் மிகப்பெரிய பரிசாகக் கருதப்படுகிறது. 35 வயதான ஜோகோவிச், இறுதிப்போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிக்கை 6–3, 6–4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி ஜூலை மாத விம்பிள்டனுக்குப்பிறகு தனது முதல் பட்டத்தை வென்றார். மூன்றடி உயரமுள்ள கோப்பை அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

6. 2022இல் நடைபெற்ற ஆறாவது ஆசிய கோப்பைப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. இலங்கை

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இலங்கை

  • துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது ஆறாவது கோப்பையை கைப்பற்றியது. இலங்கை 20 ஓவர்களில் 170–6 ரன்கள் எடுத்தது, பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பயிற்சியாளராக உள்ளார்.

7. IBM குவாண்டம் நெட்வொர்க்கில் இணைந்த இந்தியாவின் முதல் நிறுவனம் எது?

அ. ஐஐடி பாம்பே

ஆ. ஐஐஎம் அகமதாபாத்

இ. ஐஐஎம் பெங்களூரு

ஈ. ஐஐடி மெட்ராஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஐஐடி மெட்ராஸ்

  • இந்திய தொழில்நுட்பக்கழகம் – மெட்ராஸ் (IIT–M) ஆனது நியூயார்க்கைச் சார்ந்த IBM குவாண்டம் நெட்வொர்க்கில் இணைந்த முதல் இந்திய கல்வி நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. IIT–M மற்றும் IBM இடையேயான இந்த ஒத்துழைப்பு, IBM ரிசர்ச் இந்தியா நிறுவனத்தின் தொழிற்துறை ஆதரவுடன் பயன்பாட்டு குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்கும்.

8. புற்றுநோய் இறப்புகளைக் குறைப்பதற்காக, ‘ARPA–H (நலத்திற்கான மேம்பட்ட ஆராய்ச்சித் திட்ட முகமைகள்)’ என்பதை தொடங்கிய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • அமெரிக்காவில் புற்றுநோய் இறப்புகளை குறைக்கும் நோக்கில் ஒரு இலட்சிய திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக, ‘ARPA–H, நலத்திற்கான மேம்பட்ட ஆராய்ச்சித்திட்ட முகமைகள்’ என்ற புதிய முகமை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக இறப்புகளுக்கு காரணம் புற்றுநோயாகும். ARPA–H ஆனது புற்றுநோய், அல்சைமர், நீரழிவு மற்றும் பிறநோய்கள் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. இந்தியாவில், ‘ஹிந்தி திவாஸ் அல்லது தேசிய ஹிந்தி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.14

ஆ. செப்டம்பர்.12

இ. செப்டம்பர்.14

ஈ. செப்டம்பர்.18

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. செப்டம்பர்.14

  • ‘ஹிந்தி திவாஸ் அல்லது தேசிய ஹிந்தி நாளானது’ 1949 செப்.14 அன்று அரசியலமைப்பு அவையால் அதிகாரப்பூர்வ மொழியாக (தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டது) ஹிந்தி ஏற்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்.14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக ஹிந்தி நாள் 2020 ஜனவரி.10 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் 1975 ஜன.10 அன்று நாக்பூரில் நடந்த முதல் உலக ஹிந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

10. அண்மையில் ஜப்பான் மற்றும் சீனாவைத் தாக்கிய சூறாவளியின் பெயர் என்ன?

அ. முய்ஃபா

ஆ. ரீட்டா

இ. பங்கா

ஈ. டிஃபானி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. முய்ஃபா

  • ஜப்பான் வானிலை ஆய்வுமையத்தின்படி, தைவான் அருகேயுள்ள இஷிகாகி தீவை, ‘முய்ஃபா’ சூறாவளி தாக்கியது. ஜப்பானின் தென்தீவுகளை அந்தச் சூறாவளி நெருங்கியது. ‘முய்ஃபா’ சூறாவளியானது ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள தீவுகளில் பலத்த மழையையும் காற்றையும் கொண்டுவந்தது. இந்தச் சூறாவளி நெருங்கிவரும் நிலையில் சீனாவும் அவசர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. நில ஆவணங்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க நடுவணரசு திட்டம்!

நாடு முழுவதும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடுவணரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நடுவணரசின் நில வளத்துறை இணைச்செயலாளர் கூறியதாவது:

நாடு முழுவதிலும் உள்ள பலர் நில ஆவணங்களில் மொழியியல் தடைகளை எதிர்கொள்கின்றனர், இதனை போக்கும் விதமாக நடுவணரசு, இப்போது நில ஆவணங்களில் மொழிபெயர்ப்பு முறையைக் கொண்டு வருவதன் மூலம் தீர்க்க திட்டமிட்டுள்ளது.

அதாவது, நாட்டில் உள்ள அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம், ஹிந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது நடுவணரசு.

இந்தப்புதிய திட்டத்தை சோதனை முறையாக தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரம், குஜராத், உத்தர பிரதேசம், பிகார் திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் தொடங்கவுள்ளது.

7th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Telecom Giant Optus, which was recently hit by a cyber–attack, is based in which country?

A. Canada

B. USA

C. Australia

D. Russia

Answer & Explanation

Answer: C. Australia

  • Australian telecom giant Optus said personal information and form of identification of 1.2 million customers was compromised in the recent cyber attack. It is considered as one of the biggest cyber breaches the country has faced. The breach affected 10 million customers, equivalent to around 40% of Australia’s population. The federal government has released changes to telecommunications laws, after the breach.

2. What is the charge levied for RuPay credit card use on UPI for transactions up to ₹2,000?

A. 0.5%

B. 2%

C. 5%

D. No charge

Answer & Explanation

Answer: D. No charge

  • The National Payments Corporation of India (NPCI) has clarified that there will be no charge for RuPay credit card use on Unified Payments Interface (UPI) for transactions up to ₹2,000. Nil Merchant Discount Rate (MDR) would apply for this category up to the transaction amount less than and equal to ₹2,000. In September, RBI Governor launched the Rupay credit card on UPI network.

3. As per the recent World Bank report, what is India’s GDP projection in the current fiscal year (2022–’23)?

A. 6.2%

B. 6.5%

C. 7.0%

D. 7.2%

Answer & Explanation

Answer: B. 6.5%

  • The World Bank downgraded India’s economic growth forecast to 6.5% for the current fiscal year (2022–’23) from its earlier estimate of 7.5% announced in June. The Reserve Bank of India had also cut its growth forecast to 7% from an earlier estimate of 7.2% after increasing the repo rate by 50 basis points to 5.9% to fight inflation. UNCTAD also projected that India’s economic growth will decline to 5.7% this year from 8.2% in 2021.

4. Annie Ernaux, the winner of 2022 Nobel Prize in literature, is an author from which country?

A. USA

B. Australia

C. France

D. Germany

Answer & Explanation

Answer: C. France

  • French author Annie Ernaux has been announced as the winner of the 2022 Nobel Prize in literature. The 82–year–old writer is known for her novels drawing on personal experience of class and gender. Over 20 books authored by Annie Ernaux have been school texts in France for decades. One of the contenders for the literature prize this year was the India–born writer and free–speech advocate Salman Rushdie.

5. Which tennis player won the Tel Aviv Open title in 2022?

A. Rafael Nadal

B. Stefanos Tsitsipas

C. Roger Federer

D. Novak Djokovic

Answer & Explanation

Answer: D. Novak Djokovic

  • Ace tennis player Novak Djokovic won the Tel Aviv Open title in 2022 held in Israel. It is regarded as the biggest prize in tennis. The 35–year–old Serbian beat Croatia’s Marin Cilic 6–3, 6–4 in the final to win his first title since Wimbledon in July. He was handed a large three–foot–tall trophy.

6. Which country is the Champion of the sixth Asia Cup tournament held in 2022?

A. India

B. Pakistan

C. Sri Lanka

D. Bangladesh

Answer & Explanation

Answer: C. Sri Lanka

  • Sri Lanka beat Pakistan by 23 runs in the Asia Cup final to secure its sixth title in Dubai. Sri Lanka scored 170–6 off their 20 overs, with Bhanuka Rajapaksa’s unbeaten 71 from 45 balls. The Sri Lankan cricket team is being coached by former England coach Chris Silverwood.

7. Which is the first institution in India to join IBM Quantum Network?

A. IIT Bombay

B. IIM Ahmedabad

C. IIM Bengaluru

D. IIT Madras

Answer & Explanation

Answer: D. IIT Madras

  • The Indian Institute of Technology Madras (IIT–Madras) has become the first Indian educational institute to join the New York–based IBM Quantum Network. This collaboration between IIT–M and IBM will benefit researchers from IIT Madras in research in the field of applied quantum computing with industry support from IBM Research India.

8. Which country launched ‘ARPA–H (Advanced Research Projects Agencies for Health)’ to reduce Cancer deaths?

A. Japan

B. USA

C. Australia

D. France

Answer & Explanation

Answer: B. USA

  • US President Joe Biden has announced an ambitious plan to reduce cancer deaths in the United States. A new agency named ‘ARPA–H, Advanced Research Projects Agencies for Health’ regarding the plan. Cancer is the second most cause of death in the country after heart disease. ARPA–H aims to prevent, detect, and treat diseases including Cancer, Alzheimer’s, diabetes, and other diseases.

9. When is the ‘Hindi Diwas or National Hindi Day’ celebrated in India?

A. September.14

B. September.12

C. September.14

D. September.18

Answer & Explanation

Answer: C. September.14

  • ‘Hindi Diwas or National Hindi Day’ is celebrated every year on September 14 to mark the adaptation of Hindi (written in Devanagari script) as the official language by the Constituent Assembly on Sep.14, 1949. World Hindi Day 2020 is observed on Jan.10. The day commemorates the anniversary of the first World Hindi Conference held in Nagpur of January 10, 1975.

10. What is the name of the typhoon which has hit Japan and China recently?

A. Muifa

B. Rita

C. Banga

D. Tiffany

Answer & Explanation

Answer: A. Muifa

  • According to Japan Meteorological Agency, Typhhon Muifa hit Ishigaki Island, near Taiwan. The typhoon approached Japan’s southern islands. Typhoon Muifa has also brought heavy downpours and winds to islands in Japan’s Okinawa. China has also launched emergency response as the typhoon approaches.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!