General Tamil

7th Tamil Unit 3 Questions

81) “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” என்று முழங்கியவர் யார்?

A) திலகர்

B) கோகலே

C) நேதாஜி

D) வ.உ.சி

விளக்கம்: “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார். மராட்டிய வீரர் பாலகங்காதர திலகர்

82) “வந்தோ மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று பாடியவர் யார்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) வ.உ.சி

D) கொடிகாத்த குமரன்

விளக்கம்: பாரதியார் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர். இவரை வ.உ.சி நாவீறுடைய நணபர் எனப் புகழ்கிறார்.

83) “சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்ற எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்றுக் கூறியவர் யார்?

A) ஹியும்

B) பின்ஹே

C) நேதாஜி

D) காந்தி

விளக்கம்: சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே இவ்வாறு கூறினார்.

84) சிதம்பரனார், கோவைச் சிறையிலும் கண்ணூர்ச் சிறையிலும் எத்தனை ஆண்டுகள் கொடும்பணி செய்தார்?

A) 4

B) 5

C) 6

D) 8

விளக்கம்: சிதம்பரனாருக்கு விதிக்கப்பட்ட இரட்டைத் தீவாந்தர தண்டனை, அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக 6 ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டது.

85) சிறைச்சாலையை தவச்சாலையாக கருதி, கைவருந்த மெய் வருந்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தவர் யார்?

A) பாரதி

B) வ.உ.சி

C) காமராசர்

D) திலகர்

விளக்கம்: சிறைச்சாலையை தவச்சாலையாக கருதினார். வ.உ.சி கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி மகிழ்ந்தார்.

86) வக்கீல் வேலை பார்த்து வளமுறை வாழ்ந்த நாளில் யாரோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார் வ.உ.சி?

A) பாரதி

B) இராஜாஜி

C) அண்ணா

D) பாண்டித்துரை

விளக்கம்: வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார் வ.உ.சி.

87) “சிறைச்சாலையில் கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்த போது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ?” என உரைத்தவர் யார்?

A) வ.உ.சி

B) பாரதி

C) பாரதிதாசன்

D) காமராசர்

விளக்கம்: சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? என்று பாடியவர் வ.உ.சி.

88) எதைப் படித்துப் படித்து வ.உ.சி தன் தொல்லை எல்லாம் மறந்தார்?

A) இன்னிலை

B) தொல்காப்பியம்

C) மனம் போல் வாழ்வு

D) மெய்யறிவு, மெய்யறம்

விளக்கம்: தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன் என்றார் சிதம்பரனார்.

89) ஆங்கிலத்தில் “ஆலன்” என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றான எதை வ.உ.சி. தமிழில் மொழிபெயர்த்தார்?

A) இன்னிலை

B) தொல்காப்பியம்

C) மனம்போல் வாழ்வு

D) மெய்யறிவு, மெய்யறம்

விளக்கம்: ஆங்கிலத்தில் ஆலன் எழுதிய “மனம் பொல் வாழ்வு” என்னும் நூலை வ.உ.சி தமிழில் மொழிபெயர்த்தார்.

90) வ.உ.சி எந்த நூலை தமிழ்த்தாயின் திருவடிகளில் கைம்மாறாக வைத்தார்?

A) இன்னிலை

B) தொல்காப்பியம்

C) மனம்போல் வாழ்வு

D) மெய்யறிவு, மெய்யறம்

விளக்கம்: உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றினார் வ.உ.சி. இவற்றை தமிழ்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!