TnpscTnpsc Current Affairs

8th & 9th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

8th & 9th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 8th & 9th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th & 9th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘DAKSH’ என்ற புதிய ‘SupTech முனைவை’ அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. SEBI

ஈ. NABARD

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘DAKSH’ என்ற புதிய சூப்டெக் முனைவைத் தொடங்கினார். ரிசர்வ் வங்கியின் அதிநவீன மேற்பார்வை கண்காணிப்பு அமைப்பான இது, மேற்பார்வை செயல்முறைகளை மேலும் வலுவாக மாற்றுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. DAKSH என்பது இணைய அடிப்படையிலான ஆதி முதல் அந்தம் வரையிலான செயற்பாட்டை மேற்கொள்ளும் ஒரு பணிப்பாய்வு பயன்பாடாகும். இதன்மூலம் வங்கிகள், NBFC–கள் போன்ற ஏற்கனவே மேற்பார்வையிலுள்ள நிறுவனங்களில் இணக்க கலாச்சாரத்தை மேம்படுத்துதற்கு தேவையானவற்றை RBI கண்காணிக்கும்.

2. சிவிங்கிகள் விடப்பட்ட குனோ தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. குஜராத்

இ. இராஜஸ்தான்

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குனோ தேசியப்பூங்கா மற்றும் பிற அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விடப்பட்ட சிவிங்கிப்புலிகளைக் கண்காணிக்க ஒன்பதுபேர்கொண்ட பணிக்குழுவை நடுவணரசு அமைத்துள்ளது. தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் சிவிங்கிப்புலிகளுக்கான இந்த அதிரடிப்படையின் பணிக்கு உதவும். இது ஈராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். சிவிங்கிப்புலிகளின் சுகாதார நிலை, தனிமைப்படுத்தல் மற்றும் அந்தப் பகுதியின் பாதுகாப்பு நிலை மற்றும் குனோ தேசியப்பூங்காவின் வாழ்விடத்தைச் சிவிங்கிப்புலிகள் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை அந்தக்குழு கண்காணிக்கும்.

3. ‘இணையவழி சூதாட்டத்தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், 2022’ நடைமுறைக்கு வந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிஸா

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தைத் தடைசெய்யவும், இணையவழி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்தவும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் R N இரவி ஓர் அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், தமிழ்நாடு ‘இணையவழி சூதாட்டத்தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், 2022’ அமலுக்கு வந்தது. சட்ட விதிமுறைகளின்கீழ், உள்ளூர் இணையவழி விளையாட்டுக்களை வழங்குவோர்கள் பதிவு செய்த பின்னரே சேவையை வழங்கவியலும்; அந்தப்பதிவு மூன்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும். பணஞ்செலுத்தி விளையாடப்படும் எந்த ஒரு இணையவழி விளையாட்டு ரீதியான சேவையையும் இந்தச் சட்டம் அனுமதிக்காது.

4. ‘இரத்ததான் அம்ரித் மகோத்சவத்தின்’கீழ், எந்தச்செயலிமூலம் தன்னார்வ இரத்ததானம் தொடங்கப்பட்டுள்ளது?

அ. ஆரோக்ய சேது

ஆ. டிஜிட்டல் இலாக்கர்

இ. மைகௌ

ஈ. ஆயுஷ்மான் பாரத்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஆரோக்ய சேது

  • செப்.17 முதல் அக்.1 வரை நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்ட தன்னார்வ இரத்ததான இயக்கத்தின் ஒருபகுதியாக ஆரோக்ய சேது செயலியிலும் இ–ரத்தகோஷ் இணையதளத்திலும் ‘இரத்ததான் அம்ரித் மகோத்சவத் –திற்கான’ பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அக்.1 அன்று தேசிய தன்னார்வ இரத்த தான நாள் அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வமாக இரத்ததானம் செய்பவர்களின் களஞ்சியத்தை உருவாக்குவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாம்.

5. ‘GEF சிறுமானியத் திட்டத்துடன்’ தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

இ. நிதியமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

  • ‘உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (Global Environment Facility) சிறுமானியத் திட்டம்’ என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) ஆகியவற்றால் கூட்டாகச் செயல்படுத்தப்படுகிறது. இது உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவிமூலம் பல்லுயிர்ப்பெருக்கம், பருவநிலை மாற்றம் மற்றும் நிலச்சீரழிவு ஆகியவற்றில் பணியாற்றுவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. பன்னாட்டு பாதுகாப்புப்பயிற்சியான, ‘ககாடு–2022’ஐ நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. பாகிஸ்தான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • ‘ககாடு–2022’ என்னும் பயிற்சியானது ஆஸ்திரேலிய நாட்டின் டார்வினில் இராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுகிறது. இந்திய கடற்படையானது தனது 14 கடற்படைக் கப்பல்களுடன் இப்பயிற்சியில் இணைந்தது. இப்பன்னாட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்தியக் கடற்படையின் INS சாத்புரா மற்றும் கடல்சார் ரோந்து விமானம் டார்வின் சென்றடைந்தது. இரண்டு வார காலம் நீளும் இந்தப் பயிற்சி, துறைமுகத்திலும் கடற்புறத்திலும் நடைபெறும்.

7. காசநோய் முக்த் பாரத் அபியான் திட்டத்தின்கீழ், 100,000 காசநோயாளிகளை தத்தெடுப்பதாக அறிவித்துள்ள தொழிற்சங்கம் எது?

அ. CII

ஆ. FICCI

இ. NASSCOM

ஈ. ASSOCHAM

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. FICCI

  • காசநோய் முக்த் பாரத் அபியானின்கீழ், 100,000 காசநோயாளிகளைத் தத்தெடுப்பதற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு (FICCI) சமீபத்தில் உறுதியளித்துள்ளது. இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு செப்.9 அன்று பிரதம மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியானைத் தொடங்கினார். காசநோயை ஒழிப்பதில் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. எந்தப் புகழ்பெற்ற ஆளுமையைப் போற்றும் வகையில், செப்.15 அன்று இந்தியா தேசிய பொறியாளர் நாளைக் கொண்டாடுகிறது?

அ. ஹோமி J பாபா

ஆ. Dr APJ அப்துல் கலாம்

இ. M விஸ்வேஸ்வரையா

ஈ. சதீஷ் தவான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. M விஸ்வேஸ்வரையா

  • இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களுள் ஒருவரான M விஸ்வேஸ்வரையாவின் சாதனைகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்.15 அன்று ‘தேசிய பொறியாளர்கள் நாளை’ இந்தியா கொண்டாடுகிறது. இந்தியாவுடன், இலங்கை மற்றும் தான்சானியாவும் பொறியாளர்கள் நாளைக் கொண்டாடுகின்றன.
  • விஸ்வேஸ்வரையா மைசூருவில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர அணையின் கட்டுமானத்தின் தலைமைப் பொறியாளராகவும், ஹைதராபாத் வெள்ளப்பாதுகாப்பு கட்டமைப்பின் முதன்மை வடிவமைப்பாளராகவும் இருந்தார். கடந்த 1955இல் அவருக்கு, ‘பாரத இரத்னா’ விருது வழங்கப்பட்டது. அவர் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் (KCIE) ‘நைட் கமாண்டர்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

9. ‘உலக மக்களாட்சி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர்.10

ஆ. செப்டம்பர்.15

இ. செப்டம்பர்.20

ஈ. செப்டம்பர்.25

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. செப்டம்பர்.15

  • உலக மக்களாட்சி நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022), “The Importance of Media Freedom to Democracy, Peace, and Delivering on the Sustainable Development Goals” என்பது இந்த நாளுக்கானக் கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்களாட்சி, அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை வழங்குவதற்கு ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது. இது உலகின் மக்களாட்சியின் நிலையை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

10. 2022ஆம் ஆண்டில், SAFF 17 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நாடு எது?

அ. வங்காளதேசம்

ஆ. நேபாளம்

இ. இந்தியா

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • கொழும்புவில் நடந்த இறுதிப்போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா 17 வயதுக்குட்பட்ட SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. இப்போட்டியின் மிகவும் மதிப்புமிக்க வீரராக இந்திய கேப்டன் வன்லால்பேகா கிட் தேர்வு செய்யப்பட்டார்; அதே வேளையில் 16 வயதான சாகில் பூனியா சிறந்த கோல்கீப்பர் விருதை வென்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இணைய சூதாட்டத்துக்குத் தடை: அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாட்டில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர் என் இரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச்சட்டம் தமிழ்நாட்டின் அரசிதழில் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டு, அப்போது முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில் இணைய சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக்கொண்டு, இணைய வழியில் விளையாடப்படும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இணைய சூதாட்டங்கள் எதையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பரங்கள் கூடாது: இணைய சூதாட்டங்கள் தொடர்பாக யாரும் எந்தவகை விளம்பரங்களையும் மின்னணு ஊடகம் உள்பட எந்த ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது. நேரடியாக/மறைமுகமாக இத்தகைய விளம்பரங்களைச் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இணைய பணப்பரிவர்த்தனை அமைப்புகள் ஈடுபடக்கூடாது.

உள்ளூர் இணைய விளையாட்டுக்குச்சலுகை: உள்ளூர் இணைய விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கென கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளூர் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான ஆணையத்தில் உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்துள்ள உள்ளூர் விளையாட்டு வழங்குநர்கள் மட்டுமே இணைய விளையாட்டுகளை வழங்க முடியும். இதற்கென உரிய அனுமதிச்சான்றைப் பெற ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் ஆணையம், உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதிச்சான்றை அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

சூதாட்டம் நடத்தக்கூடாது: உள்ளூரளவில் இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக, பணம் அல்லது வேறு வகை பொருள்களைக் கொண்டு சூதாட்ட அடிப்படையில் இணையவழி விளையாட்டுகளை நடத்தக்கூடாது. அனுமதிச்சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தவறான தகவல்களை அளித்தோ அல்லது மோசடியாகவோ அனுமதி சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலோ, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டாலோ, அவசரச் சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முரணாக இயங்கினாலோ சான்றிதழ் திரும்பப்பெறப்படும்.

இணைய வழி விளையாட்டுக்கான சான்றிதழைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பாகவோ பாதிக்கப்படும் நபருக்கு உரிய வாய்ப்பை வழங்கலாம். சான்றிதழ் தொடர்பான நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பாதிக்கப்படும் நபர்கள் முறையீடு செய்யலாம். இதற்கான மேல் முறையீட்டு ஆணையத்தை அரசே அமைக்கும். இதன்மூலம், உள்ளூரளவிலான இணையவழி விளையாட்டுகளை தவிர்த்து, சூதாட்ட அடிப்படையிலான எந்த விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அனுமதியில்லை.

தண்டனை என்ன? பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு இணையவழி சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் 3 மாதங்கள் வரை சிறை, `5,000 வரையிலான அபராதம் / இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை மையப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை யாரேனும் வெளியிட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது `5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மீண்டும் இந்தத் தவறைச் செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், `10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்துடன் இணைத்து இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது `10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். மீண்டும் இதே தவறைச்செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சம் `20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதிலுள்ள குற்ற முகாந்திரங்களை நீதிமன்றங்கள் கண்டறிய முடியாது என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. அமைதிக்கான நோபல் பரிசு மூன்றாகப் பகிர்வு

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடர்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆர்வலர் அலெஸ் பியலியட்ஸ்கிக்கு நடப்பாண்டுக்குரிய (2022) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவைச் சேர்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சேர்ந்த மனித சுதந்திர மையம் ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலெஸ் பியலியட்ஸ்கி

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பெலாரஸில் ஜனநாயக உரிமைகளுக்காக 1980ஆம் ஆண்டுகளில் இருந்து போராடி வரும் முக்கியத் தலைவர். நாட்டில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாகக் கடந்த 2020–ஆம் ஆண்டில் பெலாரஸ் அரசு அவரை கைதுசெய்தது. தற்போது வரை எந்தவித விசாரணையுமின்றி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரஷியாவின், ‘மெமோரியல்’ அமைப்பு

சோவியத் யூனியனில் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையம், கம்யூனிஸ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியது. ரஷிய அரசின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விவரங்களை இந்த மையம் தொடர்ந்து சேகரித்து வருகிறது. ரஷியாவில் அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

ரஷியாவில் அடக்குமுறைக்கு முடிவுகொண்டு வந்து, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென இம்மையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமல்படுத்த வேண்டுமெனவும் மையம் கோரி வருகிறது.

உக்ரைன், ‘மனித சுதந்திர மையம்’

உக்ரைன் கடும் நெருக்கடியைச் சந்தித்துவந்த சமயத்தில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தி 2007ஆம் ஆண்டில் இம்மையம் தொடங்கப்பட்டது. உக்ரைனை ஜனநாயக நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைக –ளை இம்மையம் மேற்கொண்டது. நாடு சட்டத்தின் அடிப்படையில் ஆளப்படுவதையும் இந்த மையம் உறுதிசெய்தது.

உக்ரைனில் ரஷியா போர்தொடுத்தபிறகு, ரஷியாவின் போர் விதிமீறல்களை இம்மையம் தொடர்ந்து ஆவணப்படுத் –தி வருகிறது. விதிமீறலில் ஈடுபட்ட ரஷிய அதிகாரிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்ற நோக்கில் மையம் செயல்பட்டு வருகிறது.

3. மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு SC அந்தஸ்து: ஆய்வுசெய்ய நடுவணரசு குழு அமைப்பு

மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு SC அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆய்வுசெய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் K G பாலகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை நடுவணரசு அமைத்துள்ளது.

இந்த 3 பேர் குழுவில் ஓய்வுபெற்ற இ ஆ ப அதிகாரி ரவீந்தர் குமார் ஜைன், யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாக நடுவண் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 341–இன்கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத்தலைவர் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வுசெய்யும்.

மேலும், தலித் சமூகத்தினர் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவர்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வுநிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவர்களுக்கு மீண்டும் SC அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய SC பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வுசெய்து, அதுதொடர்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நடுவணரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்ட 1950–ஆம் ஆண்டு திருத்த (SC) உத்தரவின்படி, ஹிந்து அல்லது சீக்கியம் அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறிய தலித் சமூகத்தினர் SC அந்தஸ்து கோரமுடியாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி K G பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்றத்தின் முதல் தலித் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

4. விமானப்படையில் ஆயுத அமைப்பு பிரிவுக்கு ஒப்புதல்

இந்திய வான்படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்புப்பிரிவை அமைக்க நடுவணரசு ஒப்புதல் அளித்ததாக அப்படையின் தலைமைத்தளபதி வி ஆர் சௌதரி தெரிவித்துள்ளார்.

தனி ஆயுதப்பிரிவு: வான்படை அதிகாரிகளுக்கென தனி ஆயுத அமைப்புப்பிரிவை உருவாக்க நடுவணரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பிரிவு அமைக்கப்படுவது சுதந்திரத்துக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.

தரையிலும் வானிலும் உள்ள இலக்குகளைத் தரையில் இருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தொலைவில் இருந்து ‘ரிமோட்’ வாயிலாகக் கட்டுப்படுத்தக் கூடிய விமானங்கள், விமானங்களில் இடம்பெறும் ஆயுதங்கள் உள்ளிட்டவை ஆயுத அமைப்புப்பிரிவில் இடம்பெறும். இதன்மூலமாக அதிகாரிகளுக்கு எளிதில் பயிற்சியளிக்க முடியும். அதனால் `3,400 கோடி வரை சேமிக்கப்படும்.

8th & 9th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution launched a new ‘SupTech initiative’ named ‘DAKSH’?

A. NITI Aayog

B. RBI

C. SEBI

D. NABARD

Answer & Explanation

Answer: B. RBI

  • Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das launched a new SupTech initiative named ‘DAKSH’. The Reserve Bank’s Advanced Supervisory Monitoring System aims to make the Supervisory processes more robust. DAKSH is a web–based end–to–end workflow application through which RBI shall monitor compliance requirements to improve the compliance culture in Supervised Entities (SEs) like Banks, NBFCs.

2. Kuno National Park, where Cheetahs were introduces, is located in which state?

A. Madhya Pradesh

B. Gujarat

C. Rajasthan

D. Maharashtra

Answer & Explanation

Answer: A. Madhya Pradesh

  • The Centre has constituted a 9–member Task Force to monitor Cheetah introduction in Kuno National Park in Madhya Pradesh and other designated areas. The National Tiger Conservation Authority (NTCA) would facilitate the working of Cheetah Task Force. It will be in–force for a period of two years and will monitor health status of Cheetah, quarantine and soft release enclosure, protection status of the area and adaptation of Cheetahs to the habitat of Kuno National Park.

3. ‘Prohibition of online gambling and regulation of online games ordinance, 2022’ came into effect in which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Odisha

D. Telangana

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu Governor RN Ravi gave his assent to an ordinance to ban online gambling and regulate online gaming in the state. With this, the Tamil Nadu prohibition of online gambling and regulation of online games ordinance, 2022 came into effect. Under the regulations, local online games providers can provide service only after registration which will be valid for three years. They shall not provide any online gaming service or allow playing of any online game of chance specified in the Schedule with money or other stakes.

4. Voluntary blood donation has been launched on which application under ‘Raktdaan Amrit Mahotsav’?

A. Aarogya Setu

B. Digital Locker

C. MyGov

D. Ayushman Bharat

Answer & Explanation

Answer: A. Aarogya Setu

  • Registrations for the ‘Raktdaan Amrit Mahotsav’ have begun on the Aarogya Setu app and e–Raktkosh portal as part of a mega voluntary blood donation drive planned across the country from September 17 till October 1. October 1 is observed as the National Voluntary Blood Donation Day (NVBDD). The main purpose of the drive is to create a repository of voluntary blood donors.

5. Which Ministry is associated with ‘GEF Small Grants Programme’?

A. Ministry of MSME

B. Ministry of Environment, Forest and Climate Change

C. Ministry of Finance

D. Ministry of Corporate Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Environment, Forest and Climate Change

  • ‘Global Environment Facility (GEF) Small Grants Programme’ is jointly implemented by the Ministry of Environment, Forest and Climate Change, the United Nations Development Programme and The Energy and Resources Institute (TERI). It provides financial and technical support to projects that restore environment while enhancing lives of local communities. The project aims to work on biodiversity, climate change and land degradation through funding of NGOs.

6. Which country is the host of multinational Defence ‘Exercise Kakadu 2022’?

A. India

B. Pakistan

C. Australia

D. Bangladesh

Answer & Explanation

Answer: C. Australia

  • Exercise Kakadu 2022 is being officially hosted by the Royal Australian Navy in Darwin, Australia. The Indian Navy joined the exercise with 14 navies. Indian Navy’s INS Satpura and a maritime patrol aircraft reached Darwin to take part in multinational Exercise. The two week–long exercise, both in harbour and sea, involves participation of ships and maritime aircraft.

7. Which industry union has announced to adopt 100,000 TB Patients under the Tuberculosis Mukt Bharat Abhiyaan?

A. CII

B. FICCI

C. NASSCOM

D. ASSOCHAM

Answer & Explanation

Answer: B. FICCI

  • The Federation of Indian Chambers of Commerce & Industry (Ficci) recently committed to adopting 100,000 TB Patients under the Tuberculosis Mukt Bharat Abhiyaan. Indian President Droupadi Murmu launched the Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan on September 9. The scheme aims to bring together all community stakeholders to accelerate the country’s progress towards elimination of TB.

8. India celebrates National Engineer’s Day on September 15 to honour which famous personality?

A. Homi J Bhabha

B. Dr APJ Abdul Kalam

C. M Visvesvaraya

D. Satish Dawan

Answer & Explanation

Answer: C. M Visvesvaraya

  • India celebrates ‘National Engineers Day’ on September 15 every year to recognise and honour the achievements of M Visvesvaraya, one of India’s foremost engineers. Along with India, Sri Lanka and Tanzania also celebrate Engineers Day. Visvesvaraya was the chief engineer of the construction of the Krishna Raja Sagara dam in Mysore, as well as the chief designer of Hyderabad’s flood protection framework. In 1955, he was awarded the Bharat Ratna honor. He was also knighted as a Knight Commander of the British Indian Empire (KCIE).

9. When is the ‘International Day of Democracy’ observed?

A. September.10

B. September.15

C. September.20

D. September.25

Answer & Explanation

Answer: B. September.15

  • The International Day of Democracy is observed every year on September 15. This year, the theme is “the importance of media freedom to democracy, peace, and delivering on the Sustainable Development Goals”. The Day focuses on the importance of freedom of media to democracy, peace, and delivering on the Sustainable Development Goals. It also provides an opportunity to review the state of democracy in the world.

10. Which country won the SAFF under–17 Championship title in 2022?

A. Bangladesh

B. Nepal

C. India

D. Sri Lanka

Answer & Explanation

Answer: C. India

  • India clinched the SAFF under–17 Championship title, defeating Nepal in the final in Colombo. With this victory, India retains the title, lifting the title for the fourth time. India captain Vanlalpeka Guite was named the Most Valuable Player of the Tournament, while 16–year–old Sahil Poonia won the Best Goalkeeper award.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!