TnpscTnpsc Current Affairs

8th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2021ஆம் ஆண்டு சர்வதேச தன்னார்வலர் நாளுக்கானக் கருப் பொருள் என்ன?

அ) Volunteer now for our common future 

ஆ) World needs Volunteers

இ) Volunteering during Pandemic

ஈ) Welcoming Volunteers

  • ஆண்டுதோறும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தன்னார்வலர்களின் பங்கை ஊக்குவிப்பதற்காக டிசம்பர் 5 அன்று சர்வதேச தன்னார்வலர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. UNGA, கடந்த 2001 ஆம் ஆண்டை சர்வதேச தன்னார்வலர்களின் ஆண்டாக குறித்தது.
  • “Volunteer now for our common future” என்பது இந்த ஆண்டுக்கான (2021) ‘சர்வதேச தன்னார்வலர்கள் நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

2. உலக மண் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 3

ஆ) டிசம்பர் 5 

இ) டிசம்பர் 7

ஈ) டிசம்பர் 9

  • மண்ணின் முக்கியத்துவம் மற்றும் அதன் நிலையான மேலாண்மை குறித்து மக்களின் கவனத்தை குவிப்பதற்காக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி உலக மண் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிரச்சாரமானது “Halt soil salinization, boost soil productivity” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • நலமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் மனித நல்வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2002’இல் சர்வதேச மண் அறிவியல் சங்கத்தால் (IUSS) இந்நாள் பரிந்துரைக்கப்பட்டது.

3. ‘சிப்ரியன் ஃபோயாஸ் பரிசு’டன் தொடர்புடைய துறை எது?

அ) விண்வெளி அறிவியல்

ஆ) கணிதம் 

இ) வைராலஜி

ஈ) வணிகம்

  • புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க கணிதவியலாளரான நிகில் ஸ்ரீவஸ்தவா, முதன் முறையாக வழங்கப்படும் $5,000 டாலர் மதிப்புடைய சிப்ரியன் ஃபோயாஸ் பரிசுக்கு கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆபரேட்டர் தியரியில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அமெரிக்க கணித சங்கம் அவருக்கு இவ்விருதை வழங்குகிறது. பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீவஸ்தவாவுடன், ஆடம் மார்கஸ் மற்றும் டேனியல் ஸ்பீல்மேன் ஆகிய இருவரும் இவ்விருது பெற்றனர்.

4. முதலாவது ‘இந்தியா-ரஷ்யா 2+2’ பேச்சுவார்த்தையை நடத்தும் நகரம் எது?

அ) மாஸ்கோ

ஆ) புது தில்லி 

இ) அகமதாபாத்

ஈ) புனித பீட்டர்ஸ்பர்க்

  • முதல் ‘2+2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தையானது தில்லியில் நடைபெற உள்ளது. வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறும் இது “பரஸ்பர நலன்சார்ந்த அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை” உள்ளடக்கும். இதுவரை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் (குவாட்) உறுப்பு நாடுகளுடன் இந்தியா ‘2+2’ வடிவ சந்திப்புகளை நடத்தியது.
  • முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான 21ஆவது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாடு, 2021 டிச.6 அன்று புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடந்தது.

5. அண்மையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல், எந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரராவார்?

அ) இங்கிலாந்து

ஆ) நியூசிலாந்து 

இ) வங்காளதேசம்

ஈ) தென்னாப்பிரிக்கா

  • நியூசிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல், 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இனிங்சில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் ஆனார்.
  • இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியின் 2ஆவது நாளில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார். இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளனர். 33 வயதான அவர் தனது 11ஆவது டெஸ்டில் விளையாண்டு வருகிறார்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘HAECHI-II’ என்பது பின்வரும் எந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்?

அ) மத்திய புலனாய்வுப் பணியகம்

ஆ) இன்டர்போல் 

இ) ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • ‘HAECHI-II’ என்ற குறியீட்டுப் பெயரில் INTERPOL மேற்கொண்ட சமீப நடவடிக்கையின்கீழ், 20’க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அமலாக்க முகவர்கள் 1000’க்கும் மேற்பட்ட நபர்களைக் கைது செய்து, சுமார் $27 மில்லியன் சட்டவிரோத நிதியைக் கைப்பற்றியுள்ளனர். இந்தத் திட்டம் சைபர் அடிப்படையான நிதிக் குற்றங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகும். இந்த உலகளாவிய நடவடிக்கையில் இந்திய நாடும் பங்கேற்றது. காதல் மோசடிகள், முதலீட்டு மோசடி மற்றும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்துடன் தொடர்புடைய பணமோசடி போன்ற குறிப்பிட்ட வகையான ஆன்லைன் மோசடிகளை இது தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டது.

7. சமீபத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர், டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஆனார்?

அ) ரவீந்திர ஜடேஜா

ஆ) R அஸ்வின் 

இ) இஷாந்த் சர்மா

ஈ) முகமது ஷமி

  • R அஸ்வின், சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார். 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 418 ஆவது விக்கெட்டை வீழ்த்தி, மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்தார்.
  • அனில் கும்ப்ளே (619), கபில்தேவ் (434) ஆகியோர் மட்டுமே அஸ்வினை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

8. பீட்டர் ஃபியாலா, எந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இத்தாலி

இ) கிரீஸ்

ஈ) செக் குடியரசு 

  • செக் குடியரசின் குடிமை ஜனநாயக கட்சியின் தலைவரான பீட்டர் ஃபியாலா அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 200 இடங்களைக் கொண்ட அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஐந்து கட்சிக் கூட்டணியானது 108 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து அவர் பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். முன்னர் 2012 முதல் 2013 வரை அந்த நாட்டின் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக பணியாற்றிய பீட்டர் ஃபியாலா 2014 முதல் குடிமை ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

9. கீழ்காணும் எந்த சர்வதேச அமைப்பின் தலைவராக அல் ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ) ஐக்கிய நாடுகள்

ஆ) சர்வதேச நாணய நிதியம்

இ) இன்டர்போல் 

ஈ) யுனிசெஃப்

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகத்தின் காவல்துறைத் தலைவரான அல் ரைசி, 3 சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு, இன்டர்போல் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுப்புநாடுகள் அளித்த வாக்குகளில் 68.9% வாக்குகளை அவர் பெற்றார். பொதுவாக ‘INTERPOL’ என அழைக்கப்படுகிற பன்னாட்டுக் காவலகம், உலகளாவிய காவல் துறை ஒத்துழைப்பில் உதவுகிறது. இதன் தலைமையகம் பிரான்சின் லியோனில் உள்ளது.

10. சமீபத்தில் தனது முதல் சேலஞ்சர் நிலை ஒற்றையர் பட்டத்தை வென்ற இராம்குமார் ராமநாதனுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ் 

ஆ) டேபிள்-டென்னிஸ்

இ) பூப்பந்து

ஈ) வில்வித்தை

  • இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சேலஞ்சர் நிலை ஒற்றையர் பட்டத்தை, ATP80 மனமா நிகழ்வின் இறுதி நிகழ்வில் வென்றார். ஆறாம் நிலை வீரரும், உலகத் தரவரிசையில் 222ஆவது இடத்திலுள்ளவருமான 27 வயதான இராம்குமார் இராமநாதன் தனது ரஷ்ய போட்டியாளரை 6-1 6-4 என்ற கணக்கில் 68 நிமிடங்களில் வீழ்த்தினார். இவர் இதற்கு முன்பு தனது வாழ்க்கையில் ஆறு சேலஞ்சர் இறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘டான்ஜெட்கோ’வுக்கு மத்திய அரசு `26,428 கோடி கடனுதவி

கரோனா தொற்று காரணமாக எழுந்த பணப்புழக்கச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு (டான்ஜெட்கோ) ரூ. 26,428 கோடி நீண்ட கால கடன் அளிக்கப்பட்டதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு மாநில அரசு கோரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கியதா? அதன்விவரம், தமிழகம் உள்ளிட்டு நாடு முழுவதும் மின் நிறுவனங்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆகியவை குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்தின் திட்டங்களின் தகுதியைக் கருத்தில் கொண்டு கடன் அளிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வரை மத்திய அரசின் நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிட். (பிஎஃப்சி) நிறுவனம் ரூ. 34,936.64 கோடியும், ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிட். (ஆர்இசி) ரூ. 36,970 கோடி வரையிலும் கடன் அளித்துள்ளது. இந்த வகையில் மொத்தம் ரூ. 71,906.64 கோடி கடன் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு கரோனா தொற்று காரணமாக எழுந்த பணப்புழக்கச் சிக்கல்களைத் தீர்க்க, நீண்ட காலக் கடனுதவித் திட்டத்தின் கீழ், பிஎஃப்சி, ஆர்இசி மூலம் ரூ.26,428 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும், மற்றோரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தியில் 2019-20-இல் 6,447 மெகாவாட்டாக இருந்தது. இது, 2020-21-இல் 5,457 மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. இதேபோல், காற்றாலை மின் உற்பத்தியிலும் 2019-20-ஆம் ஆண்டை விட 2020-21-இல் 32 MW மின் உற்பத்தி குறைந்துள்ளது என்றார்.

2. தமிழகத்தில் முழு கொள்ளளவை எட்டிய 8,690 ஏரிகள்

தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீா்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்தநிலையில் பாசன ஏரிகள் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. 2,989 ஏரிகளில் 75 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. 90 நீா்த்தேக்கங்களில் 212 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீா் இருப்பில் உள்ளது. இது முழு கொள்ளளவில் 94.5 சதவீதமாகும்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 89சதவீதமும், புழல் ஏரியில் 90 சதவீதமும் நீா் நிரம்பி உள்ளது.

பூண்டி ஏரியில் 92 சதவீதம், சோழவரம் ஏரியில் 75 சதவீதம், தோ்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. அதேபோன்று மேட்டூா் அணையில் 100 சதவீதமும், பவானிசாகரில் 99 சதவீதமும், வைகையில் 96 சதவீதமும் நீா் நிரம்பியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மாநிலத்துக்கு வெளியே வாழும் தமிழா் நலனுக்கு தனி இணையம்

மாநிலத்துக்கு வெளியே வாழும் தமிழா்களின் நலனுக்கென தனி இணையதளத்தை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் புதிய இணையதளத்தை தொடக்கினாா்.

புலம்பெயா்ந்த தமிழா்கள், மாநிலத்தின் வளா்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இனி ஆண்டுதோறும் புலம்பெயா்ந்த உலகத் தமிழா் நாளாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதன்படி, எதிா்வரும் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புலம்பெயா்ந்த உலகத் தமிழா் நாள், சென்னை கலைவாணா் அரங்கத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது பெயா்களைப் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அழைப்பு வெளியிட்டுள்ளது. மேலும், புலம் பெயா்ந்த தமிழா்களுக்காக முன்னெடுக்கப்படும் நலத் திட்டங்கள், அவா்களது பிரச்னைகளுக்கான தீா்வுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில் தனி இணையதளத்தை (www.nrttamils.tn.gov.in) வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடக்கி வைத்தாா்.

4. கிளாஸ்கோ ஒப்பந்தத்துக்கு இந்தியா உடன்படாதது ஏன்? அமைச்சர் விளக்கம்

பருவநிலை மாற்றத்திற்கான கிளாஸ்கோ உச்சிமாநாட்டில், காடுகள், நிலம் ஆகியவற்றின் பயன்பாடுகளை வர்த்தகத்துடன் இணைத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதால், இந்தியா அந்த ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லை என மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறைக்கான இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும், இந்திய வனம், காடுகளின் பரப்பளவு 24.56 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே அளித்த பதில்: கிளாஸ்கோ நகர் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாட்டு ஒப்பந்தத்தில், காடுகள் மற்றும் நிலத்தின் பயன்பாடுகளை வர்த்தகத்துடன் இணைத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்கவில்லை.

1988-ஆம் ஆண்டின் தேசிய காடுகள் கொள்கையின்படி, நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவில் வனத்தைப் பெருக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டேராடூன் இந்திய வனவள நில அளவை அறிக்கையின்படி தற்போது 8,07,276 சதுர கிலோ மீட்டரில் சுமார் 24.56 சதவீதம் அளவுக்கு வனநிலங்களின் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டை விட 13,209 சதுர கி.மீட்டர் பரப்பளவு வனம் அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின்படி, 300 கோடி டன் கரியமில வாயுவை மூழ்கடிக்கத் தேவையான மரங்களுடன் கூடிய காடுகளின் பரப்பளவை, 2030-ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான பல்வேறு திட்டங்களை மாநிலங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்றத் துறை அளித்தது என்றார் அமைச்சர்.

5. சுகோய் போர் விமானம் மூலம் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிஸா மாநிலம் சண்டிபூர் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை சுகோய் 30 எம்கே-1 போர் விமானம் மூலம் செலுத்தி புதன்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பிரமோஸ் திட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று கூறியுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதிகாரிகள், புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சுகோய் 30 எம்கே-1 போர் விமானத்தின் வாயிலாக இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை விண்ணில் செலுத்துவதற்கு இந்த சோதனை வழிவகுக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை செயலாளருமான சதீஷ் ரெட்டி, கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், இந்திய விமானப் படை ஆகியன இந்தப் பணியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் பாராட்டு: இதனிடையே, பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிக்கு டிஆர்டிஓ, விமானப் படை அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல், மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்தியாவும் ரஷ்யாவும் பிரமோஸ் திட்டத்தை கூட்டாக முன்னெடுத்து வருகின்றன.

இந்தியக் கடற்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் பொருட்டு நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணையை டிஆர்டிஓ செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.

6. ரூ.2,000 கரன்சி புழக்கம் 1.75% மட்டுமே: மத்திய அரசு

நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் ரூ.2,000 நோட்டுகளின் பங்கு வெறும் 1.75 சதவீதமே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இது தொடா்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் மாநிலங்களவையில் அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:

2018 மாா்ச் மாதத்தில் நாட்டில் 336.3 கோடி என்ற எண்ணிக்கையில் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இது அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகும். ஆனால், இந்த ஆண்டு நவம்பரில் 223.3 கோடி என்ற எண்ணிக்கையில்தான் 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இது இப்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 1.75 சதவீதம் மட்டுமே ஆகும்.

பொதுமக்களின் தேவை மற்றும் புழக்கத்துக்கு ஏற்ப இந்திய ரிசா்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு முடிவெடுப்பது வழக்கம்.

2018-19-ஆம் ஆண்டில் இருந்து புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. எனவே, புழக்கத்தில் இருந்து அந்த நோட்டுகள் குறைந்துள்ளன. அதிகம் சிதைந்துவிடுவது, அழுக்காகிவிடுவது போன்ற காரணங்களால் வங்கிகளுக்கு வரும் பழைய நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு விடப்படுவதில்லை என்றாா்.

புதிதாக அச்சிடப்படாததும், பழைய நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வராததும் இப்போது மக்கள் கையில் அதிகஅளவில் ரூ.2,000 நோட்டு கிடைக்காமல் இருப்பதற்குக் காரணமாகும்.

7. ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.2,074 கோடி கடன் ஒப்பந்தம்

தமிழகம், உத்தரகண்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய வளா்ச்சி வங்கியுடன் (ஏடிபி) ரூ.2,074 கோடி மதிப்பிலான இரு கடன் ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தின் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்காக சுமாா் ரூ.1,132 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஆசிய வளா்ச்சி வங்கியுடன் கையொப்பமாகியுள்ளது.

நகரப்பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கான இலக்குகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

தமிழகத்தின் 7.2 கோடி மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோா் நகரப் பகுதிகளில் வசிக்கின்றனா். தமிழகத்தின் பொருளாதாரம் வளா்ந்து வருவதும், நகரமயமாக்கல் அதிகரித்து வருவதும் குறைந்த வருமானம் கொண்டவா்களுக்கு வீடுகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.

ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, தமிழகத்தின் நகரப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டித் தர உதவும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 9 இடங்களில் வீடுகள் கட்டப்படவுள்ளன.

உத்தரகண்டில் வளா்ச்சித் திட்டங்கள்: உத்தரகண்டின் டேராடூன், நைனிடால் நகா்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வசதியை ஏற்படுத்தவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் சுமாா் ரூ.942 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகத் திகழும் டேராடூன், நைனிடால் ஆகிய நகரங்களை மேம்படுத்த உதவும். சுகாதார சேவைகள் மேம்படுத்தப்படுவதால், எதிா்காலத்தில் தோன்ற வாய்ப்புள்ள நோய்களின் தாக்குதலில் இருந்து நகரப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் டேராடூனில் 136 கி.மீ.-க்கு குடிநீா் குழாய் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 40,000 போ் பலனடைவா். குடிநீரின் பயன்பாட்டை அளப்பதற்கான கருவிகள் 5,400 வீடுகளில் பொருத்தப்படவுள்ளன. மேலும், 256 கி.மீ.-க்கு நிலத்தடி கழிவுநீா் அமைப்பு, 117 கி.மீ.-க்கு மழைநீா் வடிகால் வசதி ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

8. சென்னை வீரா் சபரி டபிள்யூபிசி சாம்பியன்

உலக குத்துச்சண்டை கவுன்சில் (டபிள்யூபிசி) முதல் முறையாக நடத்திய டபிள்யூபிசி இந்தியா வெல்டா்வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீரா் சபரி (24) சாம்பியன் ஆனாா்.

தொழில்முறை ரீதியிலான இப்போட்டியில் 8 சுற்றுகள் கொண்ட இறுதிச் சுற்றில் அவா் சண்டீகரைச் சோ்ந்த அனுபவமிக்க வீரரான ஆகாஷ்தீப் சிங்கை (27) வீழ்த்தினாா். போட்டி முடிவானது 76-76, 79-73, 79-73 என்ற பெரும்பான்மை புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது சாம்பியன் ஆகியிருக்கும் சபரி, அவ்வப்போது இந்தியாவின் இதர போட்டியாளா்களுடன் மோதி தனக்கான பட்டத்தை தக்க வைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தனது தொழில்முறை குத்துச்சண்டையை தொடங்கிய சபரி, முந்தைய மோதல்களில் 4 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளாா். அவருடன் மோதி தோல்வியை சந்தித்த ஆகாஷ்தீப் கடந்த 3 ஆண்டுகளில் 8 வெற்றிகள், 1 தோல்வியை பதிவு செய்துள்ளவா்.

இதேபோட்டியில் ஆசிய சில்வா் லைட்வெயிட் பட்டத்துக்கான பிரிவில் இந்தியாவின் காா்த்திக் சதீஷ் குமாா் – இந்தோனேசியாவின் ஹீரோ டிடோவை தோற்கடித்து பட்டம் வென்றாா். இதில் அவா் 80-72, 79-73, 79-73 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இத்துடன் 8 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள காா்த்திக், அனைத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளாா். டபிள்யூபிசி ரேங்கிங்கில் தற்போது 4-ஆவது இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த வெற்றி முன்னேற்றத்தை அளிக்கும்.

9. ஆசிய இளையோா் பாரா போட்டி: இந்தியா 41 பதக்கங்களுடன் நிறைவு

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோா் பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தமாக 12 தங்கம், 16 வெள்ளி, 13 வெண்கலம் என 41 பதக்கங்கள் வென்று நிறைவு செய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக தடகள பிரிவில் 22 பதக்கங்கள் (8 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம்) வென்று தந்துள்ளனா் இந்திய போட்டியாளா்கள். அடுத்தபடியாக பாட்மின்டனில் 16 பதக்கங்கள் (4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்), நீச்சலில் 3 பதக்கங்கள் (1 வெள்ளி, 2 வெண்கலம்), பவா் லிஃப்டிங்கில் 1 வெள்ளியும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

கடந்த 2-ஆம் தேதி தொடங்கி, திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த இப்போட்டியில் சுமாா் 30 நாடுகளில் இருந்து 700-க்கும் அதிகமான போட்டியாளா்கள் கலந்துகொண்டனா். இப்போட்டியில், மாற்றுத் திறனின் வகைப்படுத்துதல் அடிப்படையில் ஒரே விளையாட்டில் பல பிரிவுகளில் பந்தயங்கள், ஆட்டங்கள் நடைபெற்றன.

இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்ட தகவல்படி, தடகள விளையாட்டில் உயரம் தாண்டுதலில் பிரவீண் குமாா் தங்கமும், ராகுல் வெள்ளியும் வென்றனா். நீளம் தாண்டுதலில் கரன்தீப் குமாா் முதலிடமும், பிரவீண் குமாா், தா்ஷ் சோனி 2-ஆம் இடமும் பெற்றனா். ஓட்டத்தில் 100 மீட்டா் பிரிவில் மீட் ததானி தங்கமும், தா்ஷ் சோனி வெண்கலமும் வென்றனா். 200 மீட்டரிலும் மீட் ததானி தங்கம் வெல்ல, 400 மீட்டரில் மாஃபி வெள்ளியும், பிஜு பென்னட் ஜாா்ஜ் வெண்கலமும் பெற்றனா்.

ஈட்டி எறிதலில் விக்ரம் சிங் முதலிடம் பிடிக்க, சித்தாா்த் 2-ஆம் இடம், லக்ஸித் 3-ஆம் இடம் பிடித்தனா். வட்டு எறிதலில் விகாஷ் பாட்டிவால் முதலிடமும், காா்திக் எம்.கிருஷ்ணா 3-ஆம் இடமும் பெற்றனா். குண்டு எறிதலில் விகாஷ் பாட்டிவால், அனன்யா பன்சால் ஆகியோா் வெள்ளி வெல்ல, மேதா ஜெயந்த், லக்ஸித், சஞ்ஜய் ஆா்.நீலம் ஆகியோா் வெண்கலம் வென்றனா்.

கிளப் எறிதலில் காஷிஷ் லக்ரா தங்கம் வெல்ல, நீச்சலில் தேவான்ஷி சதிஜா 1 வெள்ளியும், 2 வெண்கலமும் வென்றாா். பவா் லிஃப்டிங்கில் ராகுல் ஜோக்ராஜ்யா வெள்ளி பெற்றாா். பாட்மின்டனில் நித்யா, சஞ்ஜனா, பாலக் – சஞ்ஜனா ஜோடி, நேஹல் – அபிஜீத் ஜோடி ஆகியோா் தங்கம் வென்றனா்.

ஜோதி (2 பதக்கம்), நவீன், ஹாா்திக் மக்காா், கரன் – ருதிக் இணை, நித்யா – ஆதித்யா இணை, ஹாா்திக் – சஞ்ஜனா இணை ஆகியோா் வெள்ளி பெற்றனா். பாலக், நவீன் – ஹாா்திக் இணை, சந்தியா, நேஹல் – பாலக் இணை வெண்கலம் பெற்றுள்ளனா்.

1. What is the theme of the ‘International Volunteer Day’ in 2021?

A) Volunteer now for our common future 

B) World needs Volunteers

C) Volunteering during Pandemic

D) Welcoming Volunteers

  • Every year, International Volunteer Day is observed on December 5 to encourage the role of volunteers at national and international level for achieving sustainable development goals (SDGs). This day recognises the contribution of volunteers across the globe. UNGA signified 2001 as International Year of Volunteers. The theme of this year’s ‘International Volunteer Day’ is ‘Volunteer now for our common future’.

2. When is the ‘World Soil Day’ observed every year?

A) December 3

B) December 5 

C) December 7

D) December 9

  • World Soil Day is celebrated every year on December 5, to highlight people’s attention to the importance of soil and its sustainable management. This year’s campaign is based on the theme of “Halt soil salinization, boost soil productivity”. It aims to raise awareness about the importance of maintaining healthy ecosystems and human well–being. The international observance was recommended by the International Union of Soil Sciences (IUSS) in 2002.

3. ‘Ciprian Foias Prize’ is associated with which field?

A) Space Science

B) Mathematics 

C) Virology

D) Business

  • Eminent Indian–American mathematician Nikhil Srivastava, has been jointly selected for the inaugural $5,000 Ciprian Foias Prize. He was awarded for his contribution in Operator Theory by the American Mathematical Society (AMS).Along with Professor Srivastava, who teaches at the University of California, Berkeley, two other awardees are Adam Marcus and Daniel Spielman.

4. Which city played host to the first–ever ‘India–Russia ‘2+2’ dialogue’?

A) Moscow

B) New Delhi 

C) Ahmadabad

D) St Petersburg

  • The first ‘2+2’ ministerial dialogue scheduled to take place in Delhi. It will be held at the level of the foreign and defence ministers, will cover “political and defence issues of mutual interest”. Until now, India held 2+2 format of meetings with member nations of the Quadrilateral Security Dialogue (Quad) — the US, Japan and Australia.
  • Earlier, the 21st India Russia Annual Summit between Prime Minister Narendra Modi and Russian President Vladimir Putin was held at Hyderabad House in New Delhi on December 6, 2021.

5. Ajaz Patel, who recently clinched 10 wickets in an innings, is a cricketer from which country?

A) England

B) New Zealand 

C) Bangladesh

D) South Africa

  • New Zealand’s left–arm spinner Ajaz Patel became only the third bowler in the 144–year–old history of Test cricket to take all 10 wickets in an innings. He achieved this feat on the second day of the second match against India. England’s Jim Laker and India’s Anil Kumble had achieved this significant feat in Test cricket. The 33–year–old player is playing in his 11th Test.

6. ‘HAECHI–II’, which was seen in the news recently, is an operation undertaken by which institution?

A) Central Bureau of Investigation

B) INTERPOL 

C) Federal Bureau of Investigation

D) International Monetary Fund

  • Under a recent operation undertaken by the INTERPOL codenamed ‘HAECHI–II’, enforcement agencies in more than 20 countries have arrested over 1,000 individuals and seized about $27 million of illicit funds. The programme is a part of a crackdown on cyber–enabled financial crime. India also participated in the global operation.
  • The exercise targeted specific types of online fraud, such as romance scams, investment fraud and money laundering linked to illegal online gambling.

7. Which Indian cricketer recently became the third highest wicket–taker in Tests?

A) Ravindra Jadeja

B) R Ashwin 

C) Ishant Sharma

D) Mohammad Shami

  • R Ashwin recently became the India’s third–highest wicket–taker in Test cricket. The 35–year–old clinched his 418th wicket in the first Test against New Zealand, surpassing another Indian off–spinner Harbhajan Singh. Only Anil Kumble (619) and Kapil Dev (434) have more wickets than Ashwin, as of now.

8. Petr Fiala has been appointed as the Prime Minister of which country?

A) Australia

B) Italy

C) Greece

D) Czech Republic 

  • Petr Fiala – the leader of the Civic Democratic of Czech Republic, has been appointed as the new Prime Minister of the country. His appointment comes after a 5–party coalition secured a majority of 108 votes in the 200–seat parliament. Petr Fiala previously served as the country’s Minister of Education, Youth and Sports from 2012 to 2013 and has been leader of the Civic Democratic Party since 2014.

9. Al Raisi, has been elected as the President of which international organization?

A) United Nations

B) International Monetary Fund

C) INTERPOL 

D) UNICEF

  • Al Raisi – the Inspector General of the United Arab Emirates’ Interior ministry has been elected as the President of Interpol, following three rounds of voting. He received 68.9 percent of votes cast by member countries. The International Criminal Police Organization, commonly known as the Interpol, facilitates worldwide police cooperation and crime control. It is headquartered in Lyon, France.

10. Ramkumar Ramanathan, who recently won his maiden Challenger level singles title, is associated with which sports?

A) Tennis 

B) Table–Tennis

C) Badminton

D) Archery

  • Indian tennis player Ramkumar Ramanathan won his maiden Challenger level singles title, in the final clash of the ATP80 Manama event. The 27–year–old Ramkumar, seeded sixth and ranked 222 in the world, beat his Russian rival 6–1 6–4 in 68 minutes. The Indian player had lost six Challenger finals in his career before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!