TnpscTnpsc Current Affairs

8th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

8th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 8th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. உலக வங்கியின் இந்திய வளர்ச்சிக் கணிப்பு அறிக்கையின்படி, 2022–23க்கான இந்தியாவின் GDP வளர்ச்சி சதவீதம் என்ன?

அ. 8.1%

ஆ. 7.5%

இ. 7.2%

ஈ. 6.9%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 6.9%

  • இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை 6.9 சதவீதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது. 2023–24 நிதியாண்டில் பொருளாதாரம் சற்றுக் குறைந்த வீதத்தில் 6.6 சதவீதமாக வளரும் என்று உலக வங்கியின் இந்திய வளர்ச்சிக் கணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

2. 2022 டிசம்பரில் நடந்த பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் என்ன?

அ. 5.9%

ஆ. 6.25%

இ. 6.50%

ஈ. 6.75%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 6.25%

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ரெப்போ விகிதத்தை 35 காசுகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து நிலையான வைப்புத்தொகை வசதி வீதம் 6 சதவீதமாக இருக்கும். வங்கிகளுக்கு இடையிலான தினசரி வணிகத்தின்போது, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரிசெய்வதற்காக அறிமுகப் படுத்தப்பட்ட மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிட்டி எனப்படும் MSF வீதம் 6.50 சதவீதமாக இருக்கும். இந்த நிதி ஆண்டில் மத்திய வங்கியின் ஐந்தாவது வட்டி விகித உயர்வு இதுவாகும்.

3. அண்மையில் வங்கக்கடலில் உருவாகி, தென் மாநிலங்களின் கரையைக் கடக்கவுள்ள புயல் எது?

அ. மாண்டஸ்

ஆ. அஸானி

இ. சித்ராங்

ஈ. மோக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மாண்டஸ்

  • சென்னைக்கு தென்கிழக்கே 620 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் மாண்டூஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மிகக்கனமழை பெய்யும். கடலோர ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஏற்கெனவே, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

4. அண்மையில் காலமான Y K அலக் என்பார் ஒரு_____?

அ. பொருளாதார நிபுணர்

ஆ. விளையாட்டு வீரர்

இ. தொழிலதிபர்

ஈ. அறிவியலாளர்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பொருளாதார நிபுணர்

  • மூத்த பொருளாதார நிபுணரும், முன்னாள் நடுவண் அமைச்சருமான யோகிந்தர் K அலக், அண்மையில் தனது 83ஆவது வயதில் காலமானார். அவர் 1996–98 காலகட்டத்தில், திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்கம், அறிவியல் மற்றும் தொழினுட்பம் மற்றும் எரிசக்தித்துறை நடுவணமைச்சராக இருந்தார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

5. ‘12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை’ நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. தாய்லாந்து

ஈ. ஃபிஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஃபிஜி

  • ‘12ஆவது உலக ஹிந்தி மாநாடு’ 2023 பிப்ரவரியில் பிஜியில் பிஜி அரசாங்கத்துடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த மாநாட்டிற்கான முதன்மை கருப்பொருள், “Hindi: From Traditional Knowledge to Artificial Intelligence” என்பதாகும். இதுவரை பதினொரு உலக ஹிந்தி மாநாடுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன.

6. 2022 – தேசிய மின்னாளுகை மாநாட்டை நடத்துகிற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா

இ. அஸ்ஸாம்

ஈ. ஜம்மு–காஷ்மீர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ஜம்மு–காஷ்மீர்

  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறையும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ராவில் 25ஆவது தேசிய மின்னாளுகை மாநாட்டை (NCeG) நடத்த உள்ளன. இந்த மாநாட்டின் கருப்பொருள், “Bringing Citizens, Industry and Government closer” என்பதாகும். தேசிய மின்னாளுகை விருதுகள் அனைத்தும் NAeG திட்டம் – 2022இன் ஐந்து வகைகளின்கீழ் வழங்கப்படும்.

7. அண்மையில் கண்டறியப்பட்ட, ‘Lophopetalum tanahgambut’ என்பது சார்ந்த இனம் எது?

அ. மரம்

ஆ. மீன்

இ. பூஞ்சை

ஈ. சிலந்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மரம்

  • Lophopetalum tanahgambut என்பது தனிச்சார்பற்ற குடும்பமான Celastraceaeஇல் உள்ள Lophopetalum இனத்தைச் சார்ந்த புதிதாக அடையாளம் காணப்பட்ட மர இனமாகும். 40 மீ உயரம் வரை வளரும் இம்மரத்தின் தண்டு விட்டம் 1.05 மீட்டர் வரை இருக்கும். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் சேற்றுச் சதுப்பு நிலக் காடுகளில் மட்டுமே இந்தப் புதிய இனங்கள் காணப்படுகின்றன.

8. காசிம்–ஜோமார்ட் டோகாயேவ் என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. ஈரான்

ஆ. இஸ்ரேல்

இ. கஜகஸ்தான்

ஈ. துருக்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கஜகஸ்தான்

  • கஜகஸ்தான் அதிபர் தேர்தலில் 81.3% வாக்குகளைப் பெற்று Kassym–Jomart Tokayev இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். டோகாயேவ், 2019இல் தனது முதல் தேர்தலில் தனது முன்னோடி நர்சுல்தான் நசர்பயேவின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். நசர்பயேவ் கசக் மொழியில் ‘எல்பாஸி’ (தேசத்தின் தலைவர்) என்ற பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

9. 2021–22க்கான ‘தேசிய ஸ்வச் வித்யாலயா புரஸ்காரை’ வழங்குகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. ஜல் சக்தி அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கல்வி அமைச்சகம்

  • 2021–22 கல்வியாண்டுக்கான ஸ்வச் வித்யாலயா புரஸ்காரை நாடு முழுவதுமிருந்து 39 பள்ளிகள் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 8.23 லட்சம் பதிவுகளில், 28 அரசு மற்றும் உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் 11 தனியார் பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டன. ஆறு பரந்த அளவுகோல்களின் அடிப்படையில் விருதுக்கான பள்ளிகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவை COVID–19 (தயார்நிலை மற்றும் பதிலளிப்பு நிலை), சோப்பினால் கைகழுவுதல், கழிப்பறைகள், செயல்பாடு மற்றும் பராமரிப்பு, நடத்தை மாற்றம் மற்றும் தண்ணீர் ஆகியனவாகும்.

10. ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மகாராஷ்டிரா

  • மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – மெட்ராஸ் உடன் இணைந்து, தொடர்ச்சியான கடல் நீர் தர கண்காணிப்பு நிலையத்தை (Continuous Marine Water Quality Monitoring Station) உருவாக்கியது. தொடர்ச்சியான கடல் நீர்தர கண்காணிப்பு அமைப்பும் மின்சார கண்காணிப்பு வாகனமும் துறைமுகப் பகுதியில் கடல்நீர் மற்றும் காற்றின் தரத்தை நிர்வகிக்க உதவும். மின்சாரத்தில் இயங்கும் ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனமும் (EV) துறைமுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 9ஆவது உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் ஆரோக்யா கண்காட்சி – 2022 கோவாவில் தொடங்கியது.

9ஆவது உலக ஆயுர்வேத மாநாடானது கோவாவின் பனாஜியில் நடுவண் சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் முன்னிலையில் தொடங்கியது. 9ஆவது உலக ஆயுர்வேத மாநாடு, உலகளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்; முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கும் வகையில், அதற்கென தனி இயக்கம் உருவாக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைக்கிறார். மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார். மாவட்ட காலநிலை அதிகாரியாக மாவட்ட வன அலுவலர் இருப்பார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டப்பணியிலும், காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என மாவட்ட இயக்கம் ஆராய வேண்டும்.

காற்றாலை, சூரியவொளி மின்சாரம், மின்வாகனம்போன்ற சுற்றுச்சூழலுக்குகந்த தொழினுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் காலநிலைமாற்ற தணிப்பு திட்டங்களை உருவாக்குவதே காலநிலை மாற்ற இயக்கத்தின் குறிக்கோள்களாகும். மாநில அளவிலான இயக்கத்துக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார்.

3. சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்.

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் தொழில்நுட்பம், தொழில்முனைவு, திறன் சமர்பிப்பு-Umagine மாநாடு என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து 250 தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 10,000 பேர் கலந்துகொள்கின்றனர். இதில் தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதன்மீது விவாதங்கள் நடத்தப்படும். இக்கருத்தரங்கத்தை நடத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

8th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the GDP forecast for 2022–23 for India, as per the World Bank India Development Update?

A. 8.1%

B. 7.5%

C. 7.2%

D. 6.9%

Answer & Explanation

Answer: D. 6.9%

  • World Bank raised its gross domestic product (GDP) growth forecast for India during the current financial year (FY23) to 6.9 per cent from 6.5 per cent.  The report forecasts that the economy will grow at a slightly lower rate of 6.6 per cent in fiscal FY24 from the earlier projected 7 per cent.

2. After the Monetary Policy Committee (MPC) Meeting in December 2022, what is the repo rate?

A. 5.9%

B. 6.25%

C. 6.50%

D. 6.75%

Answer & Explanation

Answer: B. 6.25%

  • The Reserve Bank of India’s (RBI) Monetary Policy Committee (MPC) hiked the repo rate by 35 basis points (bps) to 6.25 per cent with immediate effect. The policy rate is now at its highest level since August 2018 and this is the fifth–rate hike by the central bank in this financial year. MPC decided to remain focused on the withdrawal of accommodative stance.
  • The standing deposit facility (SDF) rate stands adjusted to 6.00 per cent and the marginal standing facility (MSF) rate and the Bank Rate to 6.50 per cent.

3. Which cyclone recently formed over Bay of Bengal, crossing the coasts of southern states?

A. Mandous

B. Asani

C. Sitrang

D. Mocha

Answer & Explanation

Answer: A. Mandous

  • Cyclone Mandous lies over southwest Bay of Bengal, about 620 km southeast of Chennai. The storm is likely to cross the coasts of north Tamil Nadu, Puducherry and Andhra Pradesh between Puducherry and Sriharikota. Under its influence, rainfall is expected over parts of coastal Tamil Nadu, Puducherry and Andhra Pradesh for two days. Red alert has already been issued for Coastal Andhra Pradesh, Tamil Nadu and Puducherry.

4. Y K Alagh, who passed away recently, was associated with which profession?

A. Economist

B. Sports–person

C. Business–person

D. Scientist

Answer & Explanation

Answer: A. Economist

  • Yoginder K Alagh, a veteran economist and former Union minister, recently passed away at the age of 83. He was the union minister of state for Planning and Programme Implementation, Science and Technology and Power during 1996–98. He also served as the Vice Chancellor at the Jawaharlal Nehru University in Delhi.

5. Which country is the host of the ‘12th World Hindi Conference’?

A. India

B. Sri Lanka

C. Thailand

D. Fiji

Answer & Explanation

Answer: D. Fiji

  • The ‘12th World Hindi Conference’ is being organized by the Ministry of External Affairs in collaboration with the Government of Fiji in February 2023 in Fiji. According to the Ministry of External Affairs, the main theme of the Conference is “Hindi: From Traditional Knowledge to Artificial Intelligence”. Eleven World Hindi Conferences have been organized in various countries, so far.

6. Which state/ UT is the host of the ‘National Conference on e–Governance (NCeG) 2022’?

A. Karnataka

B. Maharashtra

C. Assam

D. Jammu and Kashmir

Answer & Explanation

Answer: D. Jammu and Kashmir

  • The Department of Administrative Reforms & Public Grievances (DARPG) and Ministry of Electronics & Information Technology (MeitY), are set to organise the 25th National Conference on e–Governance (NCeG) in Katra, Jammu & Kashmir. The theme of this Conference is ‘Bringing Citizens, Industry and Government closer’. The National Awards for e–Governance (NAeG) will be presented under 5 categories of the NAeG Scheme – 2022.

7. ‘Lophopetalum tanahgambut’, which was recently identified, belongs to which species?

A. Tree

B. Fish

C. Fungus

D. Spider

Answer & Explanation

Answer: A. Tree

  • Lophopetalum tanahgambut is a newly identified tree species belonging to the genus Lophopetalum in the cosmopolitan family Celastraceae. It is a large top canopy tree that grows to 40 m tall, with a trunk diameter at breast height of up to 1.05 m. The new species is only known from peat swamp forests of the Indonesian island of Sumatra.

8. Kassym–Jomart Tokayev has been elected as the President of which country?

A. Iran

B. Israel

C. Kazakhstan

D. Turkey

Answer & Explanation

Answer: C. Kazakhstan

  • Kassym–Jomart Tokayev has secured a second term in Kazakhstan presidential elections, winning 81.3 percent of the vote. Tokayev won his first election in 2019 with the backing of his predecessor, Nursultan Nazarbayev. Nazarbayev retained the title of ‘Elbasy’ (head of the nation) in the Kazakh language.

9. Which Union Ministry presents the ‘National Swachh Vidyalaya Puraskar 2021–22’?

A. Ministry of Jal Shakti

B. Ministry of Education

C. Ministry of Youth Affairs and Sports

D. Ministry of Women and Child Development

Answer & Explanation

Answer: B. Ministry of Education

  • The Ministry of Education announced that 39 schools from across the nation have received the Swachh Vidyalaya Puraskar for the 2021–22 academic year. Of the 8.23 lakh entries, 28 government and aided institutions and 11 private schools were chosen. Schools are evaluated for the award based on six broad criteria– Covid–19 (preparedness and response), hand–washing with soap, toilets, operation and maintenance, behavioural change, and water.

10. Jawaharlal Nehru Port Authority (JNPA) is located in which state/UT?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Kerala

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Maharashtra

  • Jawaharlal Nehru Port Authority (JNPA), Mumbai, in association with IIT Madras, developed a Continuous Marine Water Quality Monitoring Station (CMWQMS). The Continuous water quality system and electric monitoring vehicle will assist in managing the marine water and air quality in the port area. An Electric Environmental Monitoring Vehicle (EV) was also launched at the Port.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!