Tnpsc

8th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு மனித சகோதரத்துவ நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) A Pathway to the Future

ஆ) Let’s work together

இ) Let’s work for the Future

ஈ) A Pathway to the Fraternity

  • ஆண்டுதோறும் பிப்.4 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் பன்னாட்டு மனித சகோதரத்துவ நாள் அனுசரிக்கப்படுகிறது. “எதிர்காலத்திற்கான பாதை” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும். 2019ஆம் ஆண்டு இதே நாளில், “உலக அமைதி மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான மனித சகோதரத்துவம்” என்ற தலைப்பிலான ஆவணம் கையெழுத்தானது.

2. இந்திய-அமெரிக்கரான பவ்யா லால், பின்வரும் எந்த அமைப்பின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) NASA

ஆ) Space X

இ) Blue Sky

ஈ) JAXA

  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA’இன் செயல் தலைவராக இந்திய-அமெரிக்கர் பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக உறுப்பினராக பணியாற்றிவந்தார்.

3. ‘The Little Book of Encouragement’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) சச்சின் டெண்டுல்கர்

ஆ) தலாய் லாமா

இ) மலாலா யூசுப் சாய்

ஈ) P V சிந்து

  • திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, அண்மையில், “The Little Book of Encouragement” என்ற நூலை எழுதினார். தொற்றுநோயால் முன்வைக்கப்படும் உலகின் யதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு, மக்க -ளுக்கு மேற்கோள்கள் மற்றும் ஞானபோதனைகள் இதில் இடம்பெற்று -ள்ளன. தீவிரவாதம், துருவமுனைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் திபெத் குறித்த அவரது கருத்துக்களை இந்தப் புதிய நூல் விவாதிக்கிறது.

4. கடந்த 2020ஆம் ஆண்டின் ‘ஹிந்தி சொல்’லாக, ஆக்ஸ்போர்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது?

அ) ஆத்மநிர்பார்தா

ஆ) நாரி சக்தி

இ) சம்விதான்

ஈ) ஆதார்

  • ஆக்ஸ்போர்டு குழுமம், கடந்த 2020ஆம் ஆண்டின் ஹிந்தி சொல்லாக ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல்லைத் தேர்வுசெய்துள்ளது. ஹிந்தியில், இது ‘தன்னம்பிக்கை’ எனப் பொருள்தருகிறது. ‘ஆதார்’ (2017), ‘நாரி சக்தி’ (2018) மற்றும் ‘சம்விதான்’ (2019) ஆகிய சொற்கள் ஆக்ஸ்போர்டால் முந்தைய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிந்தி சொற்களாகும்.
  • பிரதமரின் உரையைத் தொடர்ந்து, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல் அதிக அளவில் பயன்பாட்டில் வந்தது குறிப்பிடத்தக்கது.

5. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) சித்தார்த்த மொஹந்தி

ஆ) T C சுசீல் குமார்

இ) விபின் ஆனந்த்

ஈ) முகேஷ் குப்தா

  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியை நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் தற்போது LIC ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநராக மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வருகிறார். 2021 ஜனவரி.31 அன்று ஓய்வுபெற்ற T C சுசீல் குமாருக்கு பதிலாக சித்தார்த்த மொஹந்தி நியமிக்கப்பட்டார். LIC’க்கு நான்கு நிர்வாக இயக்குநர்கள் மற்றும் ஒரு தலைவர் உள்ளனர்.

6. ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான இந்தியாவின் முதலாவது மையம், எந்த இந்திய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

அ) கொச்சின்

ஆ) சென்னை

இ) விசாகப்பட்டினம்

ஈ) கெளகாத்தி

  • நாட்டின் முதலாவது ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆராய்ச்சியை வலுப்படுத்துவதை இந்த மையம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் ஒருபகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. அறிவு மையமான இது, மாநிலத்திலுள்ள ஈரநில அதிகாரிகளுக்கு இடையில் பரிமாற்றத்தை எளிதாக்கும்.

7. காமன்வெல்த் மனிதவுரிமைகள் முன்னெடுப்பு என்பது பின்வரும் எந்த நாட்டில் உள்ள ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்?

அ) இத்தாலி

ஆ) இந்தியா

இ) அமெரிக்கா

ஈ) பிரான்ஸ்

  • காமன்வெல்த் மனிதவுரிமைகள் முன்னெடுப்பு என்பது ஒரு தன்னாட்சி மிக்க, சர்வதேச அரசு சாரா அமைப்பாகும். இது, காமன்வெல்த் நாடுகளில் மனிதவுரிமைகளை அடைவதற்கு உதவுகிறது. காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பானது சமீபத்தில் இந்தியாவில் இதழாளர்கள் மீதான தேசத்துரோக வழக்குகளை திரும்பப்பெறக்கோரி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கை தேசத்துரோகம் & குற்றவியல் அவதூறு சட்டங்களை இரத்து செய்ய முனைகிறது.

8. நடப்பாண்டில் (2021) வரும் ‘உலக ஈரநிலங்கள் நாளுக்கான’ கருப்பொருள் என்ன?

அ) Wetlands for Us

ஆ) Wetlands and Water

இ) Wetlands and COVID-19

ஈ) Save Wetlands

  • ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் புவியில் அதன் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி.2 அன்று உலக ஈர நிலங்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “ஈரநிலங்கள் மற்றும் நீர்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
  • நடப்பாண்டின் (2021) கருப்பொருள், நன்னீரின் ஆதாரமாக விளங்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

9. இலகுரக தேஜஸ் வானூர்தியை பின்வரும் எவ்வமைப்பிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், நடுவண் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?

அ) DRDO

ஆ) HAL

இ) L&T

ஈ) GSRE லிட்

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL) என்ற இடத்தில் புதிய ஆலையைத் திறந்துவைத்தார். இது, இந்தியாவின் உள்நாட்டு போர் வானூர்தியான இலகு ரக தேஜஸ் வானூர்தியின் உற்பத்தியை இரட்டி -ப்பாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • HAL நிறுவனத்திடமிருந்து 83 இலகு ரக தேஜஸ் வானூர்திகளை வாங் -குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் `48000 கோடி மதிப்பிலான ஒப்பந் -தத்தில் கையெழுத்திட்டது. இது, மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு கொ -ள்முதல் என்று கூறப்படுகிறது.

10. கலிவேளி ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) ஒடிஸா

  • கலிவேளி ஏரி என்பது ஒரு கரையோர ஏரியும் ஈரநிலமுமாகும். இது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி வங்கக்கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பழவேற்காடு ஏரியை அடுத்து தென்னிந்தியா -வின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரி இதுவாகும்.
  • இந்த ஈரநிலங்களை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான முதல் அறிவிப்பை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், 1972ஆம் ஆண்டு வனவுயிரி பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அண்மையில் வெளியிட்டது.

1. What is the theme of the International Day of Human Fraternity 2021?

A) A Pathway to the Future

B) Let’s work together

C) Let’s work for the Future

D) A Pathway to the Fraternity

  • The International Day of Human Fraternity is observed every year by the United Nations on February 4. This year the theme is: A Pathway to the Future. In the year 2019, on the same day, the document entitled “Human fraternity for world peace and living together” was signed in 2019.

2. Indian–American Bhavya Lal has been appointed as the acting chief of staff of which organisation?

A) NASA

B) SpaceX

C) Blue Sky

D) JAXA

  • Indian–American Bhavya Lal has been appointed as the acting chief of staff of the US space agency, NASA. She was earlier serving as a member of the research staff at the Institute for Defence Analyses– Science and Technology Policy Institute (STPI). She had served in several important positions related to space sector.

3. Who is the author of the book titled ‘The Little Book of Encouragement’?

A) Sachin Tendulkar

B) Dalai Lama

C) Malala Yousafzai

D) P V Sindu

  • ‘The Little Book of Encouragement’ is a book authored by the Tibetan spiritual leader the Dalai Lama recently. The book includes quotes and words of wisdom to the people, to face the realities of the world posed by the pandemic. It also discusses how to combat extremism, polarity and climate change and his views on Tibet in his new book.

4. Which word is selected as the Oxford Hindi word of 2020?

A) Aatmanirbharta

B) Nari Shakti

C) Samvidhaan

D) Aadhar

  • The Oxford group has selected ‘Aatmanirbharta’ as the Oxford Hindi word of 2020. In Hindi language, it means self–reliance. Previous Hindi words of the year selected by Oxford are ‘Aadhar’ (2017), ‘Nari Shakti’ (2018) and ‘Samvidhaan’ (2019).
  • Following the prime minister’s address, there was a significant increase in the usage of ‘aatmanirbharta’ following the Prime minister’s address.

5. Who has been appointed as the new Managing Director of the Life Insurance Corporation (LIC) of India?

A) Siddhartha Mohanty

B) T C Suseel Kumar

C) Vipin Anand

D) Mukesh Gupta

  • The Appointments Committee of the Cabinet (ACC) has approved the appointment of Siddhartha Mohanty as the new Managing Director of the Life Insurance Corporation (LIC) of India.
  • He is currently serving as the Managing Director and Chief Executive Officer of LIC Housing Finance. Siddhartha Mohanty has replaced TC Suseel Kumar, who retired on January 31, 2021. LIC has four Managing Directors and one Chairman.

6. India’s first Centre for Wetland Conservation and Management has been set up in which Indian city?

A) Cochin

B) Chennai

C) Visakhapatnam

D) Guwahati

  • India’s first Centre for Wetland Conservation and Management has been set up in Chennai. It aims to strengthen research for conservation and management of the wetlands. This has been set up as a part of the National Centre for Sustainable Coastal Management, Chennai. The Centre would also serve as a knowledge hub and facilitate exchanges between state wetland authorities.

7. The Commonwealth Human Rights Initiative (CHRI) is an international non–governmental organisation based in which country?

A) Italy

B) India

C) United States

D) France

  • The Commonwealth Human Rights Initiative is an independent and international non–governmental organisation which works towards the realisation of human rights in the Commonwealth countries.
  • The Commonwealth Human Rights Initiative has recently issued a statement calling for the withdrawal of sedition cases file against journalists in India. It also sought the repealing of sedition and criminal defamation laws.

8. What is the theme of the ‘World Wetlands Day 2021’?

A) Wetlands for Us

B) Wetlands and Water

C) Wetlands and COVID–19

D) Save Wetlands

  • World Wetlands Day is observed every year on 2nd February to create awareness on the importance of wetlands and its role played in the planet. This year, the theme of the World Wetlands Day is ‘Wetlands and Water’. This year’s theme highlights the importance of wetlands as a source of freshwater.

9. Defence Ministry has signed a deal to procure Tejas Light Combat Aircraft from which organisation?

A) DRDO

B) HAL

C) L&T

D) GSRE Ltd

  • Defence Minister Rajnath Singh recently inaugurated a new plant at the Hindustan Aeronautics Limited (HAL) in Bengaluru. It aims to double the production of the Tejas Light Combat Aircraft, India’s indigenous fighter jet. The Defence Ministry also signed a Rs 48000 crore deal to procure 83 Tejas LCA from HAL. This is said to be the biggest indigenous defence procurement.

10. In which state, the Kaliveli Lake is located?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Odisha

  • The Kaliveli Lake is a coastal lake and a wet land, situated in Villupuram District of Tamil Nadu.
  • The lake is near the Bay of Bengal and is the second–largest brackish water lake in Southern India after the lake Pulicat. The district administration has recently issued the 1st declaration under Wildlife Protection Act, 1972, to declare the wetlands as a bird sanctuary.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!