TnpscTnpsc Current Affairs

8th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறந்த திரைப் படத்திற்கான’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?

அ) கூழாங்கல் 

ஆ) ஜெய் பீம்

இ) நிமிர்

ஈ) அண்ணாத்த

  • 20ஆவது டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய திரைப்படப் போட்டிப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ‘கூழாங்கல்’ என்ற படம் ‘சிறந்த திரைப்படத்திற்கான’ விருதை வென்றது. தமிழ்நாட்டைச்சார்ந்த PS வினோத் ராஜ் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
  • ‘சிறந்த நடிகருக்கான’ விருதை ரஞ்சித் சங்கர் இயக்கிய சன்னி படத்திற்காக ஜெயசூர்யா பெற்றார். சிறந்த உரை எழுத்தாளர் விருதை இந்திய-வங்காளதேசம் படமான மயர் ஜோஞ்சலுக்காக இந்திரனில் ராய்சௌத்ரி மற்றும் சுகதா சின்ஹா ஆகியோர் பெற்றனர்.
  • ஐமி பருவா இயக்கிய செம்கோர் திரைப்படத்திற்கு சிறப்பு பார்வையாளர் விருது வழங்கப்பட்டது. 17 விருதுகளில் 4 விருதுகளை இந்தியா வென்றுள்ளது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘UNCITRAL’ என்ற ஐநா நிறுவனத்துடன் தொடர்புடைய துறை எது?

அ) குழந்தைகள் நலன்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) திவால் நிலை 

ஈ) பாரம்பரியம்

  • சர்வதேச வாணிபச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNCITRAL) எல்லைதாண்டிய திவால் நிலைக்கான மாதிரிச் சட்டம் (1997) என்பது எல்லை தாண்டிய திவால்நிலை குறித்த மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டக்கட்டமைப்பாகும்.
  • பொருளாதார ஆய்வானது சிலமாற்றங்களுடன் UNCITRAL சட்டத்தை ஏற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது. சிங்கப்பூர், UK, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் கொரியா போன்ற 49 நாடுகள் இதை ஏற்றுக்கொண்டுள்ளன. திவால்நிலை சட்டக்குழுவும் UNCITRAL’ஐ ஏற்றுக்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

3. ‘Services e-Health Assistance and Teleconsultation (SeHAT)’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய நடுவண் அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம் 

ஆ) சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம்

இ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • நடுவண் பாதுகாப்பு அமைச்சகமானது ‘Services e-Health Assistance and Teleconsultation (SeHAT)’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மருந்துகளை வீட்டுக்கே சென்று தருவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இத்திட்டம் முதன்முதலில் தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முப்படைகளின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இணையவழி மருத்துவ ஆலோசனை சேவையையும் வழங்குகிறது.

4. “வயம் ரக்ஷமா” அல்லது “நாங்கள் பாதுகாக்கிறோம்” என்பது எந்த ஆயுதப்படையின் குறிக்கோளாகும்?

அ) இந்திய கடலோரக் காவல்படை 

ஆ) இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

இ) அஸ்ஸாம் சென்டினல்ஸ்

ஈ) எல்லைப் பாதுகாப்புப் படை

  • இந்திய கடலோரக் காவல்படை அதன் 46ஆவது உதய நாளை 2022 பிப்ரவரி.1 அன்று கொண்டாடியது. இது “வயம் ரக்ஷமா” அல்லது “நாங்கள் பாதுகாக்கிறோம்” என்ற குறிக்கோளுடன் உலகின் நான்காவது பெரிய கடலோர காவல்படையாக விளங்குகிறது.
  • இந்திய கடலோரக்காவல்படையானது 7 இயங்குதளங்க -ளுடன் 1978’இல் தொடங்கப்பட்டது. இது, 2025ஆம் ஆண்டிற்குள் 80 வானூர்திகள் & 200 இயங்குதளங்கள் என்ற இலக்கை அடைய எண்ணம் கொண்டுள்ளது.

5. US FDA’இடமிருந்து முழு அனுமதி பெற்ற ‘Spikevax’, எந்த மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது?

அ) பைசர்

ஆ) மாடர்னா 

இ) ஜான்சன் & ஜான்சன்

ஈ) அஸ்ட்ராசெனெகா

  • மாடர்னாவின் COVID 19 தடுப்பூசியான ‘ஸ்பைக்வாக்ஸ்’ஐ 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முழு அனுமதியைத்தந்துள்ளது.
  • ஆகஸ்டில் அங்கீகரிக்கப்பட்ட பைசரின் COVID தடுப்பூசியான ‘Comirnaty’க்குப்பிறகு FDA’இடமிருந்து முழு ஒப்புதலைப் பெற்ற இரண்டாவது COVID தடுப்பூசி இதுவாகும். அமெரிக்காவில் உரிமம் பெறும் மாடர்னாவின் முதல் தயாரிப்பு இதுவாகும்.

6. ‘AK 203’ என்ற ஒப்பந்தத்தில் எந்த நாட்டுடன் சேர்ந்து இந்தியா கையெழுத்திட்டது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) பிரான்ஸ்

ஈ) இஸ்ரேல்

  • ‘AK 203’ இரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற் -காக AK-203 ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, 70,000 துப்பாக்கிகள்கொண்ட முதல் தொகுதியை ரஷ்யா வழங்கியுள்ளது. அமேதி தொழிற்சாலையில் தயாரிக்கப்ப -டும் AK 203 இரக துப்பாக்கிகள் இராணுவத்துக்கு வழங்கப்படும் அதே வேளையில், முதல் தொகுதி விமானப் படையால் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது.
  • இந்தோ-ரஷ்ய ரைபிள்ஸ் பிரைவேட் லிட், அட்வான்ஸ்டு வெபன்ஸ் & எக்யூப்மென்ட் இந்தியா லிட் (முன்னர் OFB) & ரஷிய ரோசோபோரோனெக்ஸ்போர்ட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனத்தால் இது உற்பத்தி செய்யப்படும்.

7. ‘பத்ம பூஷன்’ விருதை மறுத்த புத்ததேவ் பட்டாச்சார்ஜி, எந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்?

அ) ஒடிஸா

ஆ) மேற்கு வங்கம் 

இ) உத்தர பிரதேசம்

ஈ) பீகார்

  • இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி (77) 2022இல் அறிவிக்கப்பட்ட ‘பத்ம பூஷன்’ விருதை மறுத்துவிட்டார். அவர் 2000 முதல் 2011ஆம் ஆண்டுவரை மே வங்கத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். பழம்பெரும் பாடகி சந்தியா முகர்ஜியும் தபேலா கலைஞர் அனிந்தியா சட்டர்ஜியும் தங்களின் விருதுகளை பெற மறுத்துவிட்டனர்.

8. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியானது (PMC வங்கி) எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது?

அ) யூனிட்டி சிறு நிதி வங்கி 

ஆ) ஜனா சிறு நிதி வங்கி

இ) ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி

ஈ) கேரளா வங்கி

  • பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை (PMC வங்கி) யூனிட்டி சிறு நிதி வங்கியுடன் (USFBL) இணைக் -கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • USFBL என்பது சென்ட்ரம் நிதியியல் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் தளமான BharatPe ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமாகும். PMC வங்கியின் அனைத்து கிளைகளும் USFBL’இன் கிளைகளாக உடனடியாக செயல்படும்.

9. 2021 – ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ) 64

ஆ) 75

இ) 85 

ஈ) 101

  • 2021ஆம் ஆண்டின் ஊழல் புலனாய்வுக் குறியீட்டில், 180 நாடுகளில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டை ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ வெளியிடுகிறது. இது 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களை அவற்றின் பொதுத்துறை ஊழல் அளவுகளின் அடிப்படை
    -யில் தரவரிசைப்படுத்துகிறது.
  • 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்ணில், ‘0’ என்பது அதிக ஊழல் மிகுந்திருப்பதையும் ‘100’ என்பது ஊழல் மிகவும் குறைவாக இருப்பதையும் கூறுகிறது.
  • இதில் இந்தியாவின் மதிப்பெண் 40 ஆகும். இவ்வறிக்கை இந்தியாவின் ஜனநாயக நிலை குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது.

10. “மன்யம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு” ஆகியவை எந்த மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பழங்குடியின மாவட்டங்களாகும்?

அ) கர்நாடகா

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) தெலுங்கானா

ஈ) மத்திய பிரதேசம்

  • ஆந்திர பிரதேசம் ‘AP மாவட்டங்கள் உருவாக்கும் சட்டம், பிரிவு 3(5)’இன்கீழ் 13 புதிய மாவட்டங்களைப் பெறுகிறது என ஆந்திர பிரதேசம் அறிவித்துள்ளது.
  • ஆந்திர பிரதேசத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை இதன்மூலம் 26ஆக உயர்ந்துள்ளது. ‘மன்யம்’ மற்றும் ‘அல்லூரி சீதாராம ராஜு’ என்னும் பழம் பெரும் தெலுங்கு விடுதலைப் போராட்ட வீரரின் பெயரால் இந்த இரண்டு புதிய பழங்குடி மாவட்டங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 07-02-2022 – தேவநேயப்பாவாணரின் 120ஆவது பிறந்தநாள்.

2. ஜேஎன்யு முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்!

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வரும் சாந்திஸ்ரீ பண்டிட் (59) தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. சேதி தெரியுமா?

ஜன.29: 2019-20ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளின் சொத்துக் கணக்கு அடிப்படையில் பாஜக ரூ. 4,874 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஜன.30: சீனாவில் ‘நியோகோவ்’ என்கிற புதிய கரோனா வைரஸ் வகை வௌவால்களிடம் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜன.30: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயினின் ரபேல் நடால் வென்றார். இதன்மூலம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று நடால் சாதனை புரிந்தார்.

ஜன.31: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

பிப்ரவரி.1: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி.2: ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி.3: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் RN ரவி, சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார்.

பிப்ரவரி.4: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவராக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி.4: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பிப்ரவரி.5: நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியது.

1. Which Indian movie won the Best Film award at Dhaka International Film Festival?

A) Koozhangal 

B) Jai Bhim

C) Nimir

D) Annaatthe

  • ‘Koozhangal’ from India won the best film award in the Asian Film Competition section at the 20th Dhaka International Film Festival. It was directed by P S Vinothraj from Tamil Nadu. Best Actor Award went to Jayasurya for Ranjith Sankar–directed film Sunny.
  • The Best Script Writer Award went to Indranil Roychowdhury and Sugata Sinha for India–Bangladesh film Mayar Jonjal. The special audience award was given to Aimee Baruah Directed film Semkhor. India won 4 out of 17 awards.

2. UNCITRAL, seen in the news, is a UN Agency associated with which field?

A) Children Welfare

B) Climate Change

C) Insolvency 

D) Heritage

  • United Nations Commission on International Trade Law (UNCITRAL) Model Law on Cross border Insolvency (1997) is the most widely accepted legal framework on cross–border insolvency.
  • The Economic Survey suggested the adoption of UNCITRAL Law with certain modifications. It has been adopted by 49 countries such as Singapore, UK, US, South Africa and Korea. Insolvency Law Committee had recommended the adoption of UNCITRAL.

3. Which Union Ministry launched the ‘Services e–Health Assistance and Teleconsultation (SeHAT)’ initiative?

A) Defence Ministry 

B) Health and Family Welfare Ministry

C) Science and Technology Ministry

D) Electronics and IT Ministry

  • The Union Defence Ministry had launched the ‘Services e–Health Assistance and Teleconsultation (SeHAT)’ scheme. It aims to provide home delivery of medicines for veterans and serving military personnel. The scheme was first rolled out in Delhi. It also provides online medical consultation platform to the tri–services personnel and their families.

4. “Vayam Rakshamah” or “We Protect” is the theme of which armed force?

A) Indian Coast Guard 

B) Indo–Tibetan Border Police Force

C) Assam Sentinels

D) Border Security Force

  • The Indian Coast Guard (ICG) celebrated its 46th Raising Day on 1 February 2022. It is the fourth largest Coast Guard in the world with the motto of “Vayam Rakshamah” or “We Protect”.
  • The Indian Coast Guard was inaugurated with seven surface platforms in 1978. It is set to achieve the targeted force levels of 80 aircraft and 200 surface platforms by the year 2025.

5. Spikevax, which received full approval from US FDA, was manufactured by which pharma company?

A) Pfizer

B) Moderna 

C) Johnson and Johnson

D) Astrazeneca

  • Moderna’s Covid–19 vaccine named ‘Spikevax’ has received full approval from the US Food and Drug Administration, for use in people ages 18 and older. This is the second Covid–19 vaccine to receive full approval from the FDA after Pfizer’s Covid–19 vaccine, Comirnaty, which was approved in August. This is also the first product of Moderna to receive licensure in the U.S.

6. ‘AK 203 Deal’ was signed by India with which country?

A) USA

B) Russia 

C) France

D) Israel

  • Russia has supplied the first batch of 70,000 rifles, as a part of the AK–203 Deal to manufacture the AK 203 assault rifles in India. The first batch is likely to be used by the air force, while the rifles to be manufactured at the Amethi factory will be delivered to the army.
  • The manufacturing will be done by Indo Russian Rifles Private Limitedm, Joint Venture between Advanced Weapons and Equipment India Ltd (erstwhile OFB) and Russian Rosoboronexport.

7. Buddhadeb Bhattacharjee, who refused the Padma Bhushan award, was the Chief Minister of which state?

A) Odisha

B) West Bengal 

C) Uttar Pradesh

D) Bihar

  • The 77–year–old Communist Party of India (Marxist) leader Buddhadeb Bhattacharjee refused the Padma Bhushan award announced in 2022. He served as the Chief Minister of West Bengal from 2000 to 2011. Legendary singer Sandhya Mukherjee and tabla exponent Anindya Chatterjee also refused the awards.

8. The Punjab and Maharashtra Co–operative Bank (PMC Bank) was amalgamated with which bank?

A) Unity Small Finance Bank 

B) Jana Small Finance Bank

C) Equitas Small Finance Bank

D) Kerala Bank

  • The Government approved the plan for the amalgamation of the Punjab and Maharashtra Co–operative Bank (PMC Bank) with Unity Small Finance Bank (USFBL).
  • USFBL is a joint venture between Centrum Financial services and digital payments platform BharatPe. All the branches of the PMC Bank will function as branches of USFBL with immediate effect.

9. What is the rank of India in the Corruption perception index (CPI) of 2021?

A) 64

B) 75

C) 85 

D) 101

  • India’s rank improved one place to 85 among 180 countries in the Corruption perception index (CPI) of 2021. Transparency International releases the index, which ranks 180 countries and territories by their perceived levels of public sector corruption.
  • In a scale of 0 to 100, where 0 is highly corrupt and 100 is very clean, India’s score was 40. The report also raised concerns over India’s democratic status

10. “Manyam and Alluri Sitarama Raju” are the newly formed tribal districts of which state?

A) Karnataka

B) Andhra Pradesh 

C) Telangana

D) Madhya Pradesh

  • Andhra Pradesh has notified Andhra Pradesh has 13 new districts under AP Districts Formation Act, Section 3(5). The total number of districts in Andhra Pradesh is now 26. The state has 25 Lok Sabha constituencies and each is supposed to be made a revenue district.
  • Only Araku constituency is split into two new districts. Manyam and Alluri Sitarama Raju, named after the legendary Telugu freedom fighter, are the two new tribal districts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!