TnpscTnpsc Current Affairs

8th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘குளோபல் ஃபைன்டெக்ஸ் டேட்டாபேஸ் – 2021’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. உலக வங்கி 

இ. IMF

ஈ. உலக பொருளாதார மன்றம்

  • உலக வங்கியானது, “உலகளாவிய ஃபைன்டெக்ஸ் தரவுத்தளம் – 2021: COVID-19 தொற்றுகாலத்தில் நிதியியல் உள்ளடக்கம், எண்ணியல் கொடுப்பனவுகள் மற்றும் நெகிழ்தன்மை” என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • 123 நாடுகளில் உள்ள மக்கள் 2021 முழுவதும் நிதிச்சேவைகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை இது ஆய்வுசெய்தது. இந்த அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் முறையான வங்கிச்சேவை கிடைக்காமல் உள்ள பெரும்பகுதியினர் இந்தியாவிலும் சீனாவிலும் வாழ்கின்றனர். ஆண்களைவிட பெண்களே வங்கிச்சேவை கிடைக்கப்பெறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

2. 2022இல் உலகளாவிய பல்லுயிர் மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. பாரிஸ்

ஆ. பான் 

இ. ஜெனீவா

ஈ. தாவோஸ்

  • நடப்பு 2022ஆம் ஆண்டில் உலகளாவிய பல்லுயிர் மாநாடு ஜெர்மனியின் பான் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல்-கொள்கை தளம் (IPBES) காட்டுயிரிகளின் நிலையான பயன்பாடு குறித்த மதிப்பீடு வெளியிடப்படும் என்று அறிவித்தது. வனவுயிரினங்களை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் சமூகங்களின் நல்வாழ்வை மனதில் வைத்து அவற்றை நீடித்து நிலையாகப் பயன்படுத்துதல் என்பது வெளியிடப்படும் இவ்வறிக்கையின் கருவாக இருக்கும்.

3. ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட விதிமுறைகளின்படி, தானியங்கி வழியின்கீழ் வெளிப்புற வணிகக் கடன் வாங்குவதற்கான புதிய உச்சவரம்பு என்ன?

அ. $500 மில்லியன்

ஆ. $1 பில்லியன்

இ. $1.5 பில்லியன் 

ஈ. $2 பில்லியன்

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நிய செலாவணி வரத்தை அதிகரிக்க விதிமுறைகளை தாராளமாக்கியது. கடன் சந்தையில் FPI முதலீட்டிற்கான விதிமுறைகளை தளர்த்துவது மற்றும் வெளிப்புற வணிகக் கடனின் உச்சவரம்பை தானியங்கி வழியின்கீழ், $750 மில்லியனில் இருந்து $1.5 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். அதிகரிக்கும் FCNR (B) மற்றும் NRE காலவைப்புகளில் ரொக்க இருப்பு விகிதம் (CRR) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (SLR) ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

4. ‘ஸ்டார்ட்அப் ஸ்கூல் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகிள் 

இ. அமேசான்

ஈ. மெட்டா

  • “கூகுள் ஃபார் ஸ்டார்ட்-அப்” முனைவின் ஒருபகுதியாக ஸ்டார்ட்-அப் ஸ்கூல் இந்தியா (எஸ்எஸ்ஐ) தொடங்குவதாக கூகுள் அறிவித்தது. இது முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் புரோகிராமர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும். மேலும் சிறிய நகரங்களில் உள்ள ஸ்டார்ட்-அப்கள் கூகுளைத் தொடர்புகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகளை கூகுள் வழங்கும். இந்தத் திட்டத்தின்மூலம் குறைந்தது 10,000 ஸ்டார்ட்-அப்களை அணுகுவதை கூகுள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. சமீபத்தில் மாநிலங்களைவைக்குப் பரிந்துரைக்கப்பட்ட இளையராஜா, எத்துறையில் சிறந்த ஆளுமையாவார்?

அ. இசை 

ஆ. விளையாட்டு

இ. வணிகம்

ஈ. இலக்கியம்

  • பழம்பெரும் இசையமைப்பாளர் இளையராஜா, மூத்த தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைப்படத் திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் மற்றும் ஆன்மீகத் தலைவர் வீரேந்திர ஹெக்கடே ஆகியோர் அண்மையில் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். நடுவண் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இளையராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், பி.டி.உஷா கேரளாவைச் சேர்ந்தவர், வீரேந்திர ஹெக்கடே கர்நாடகா மற்றும் விஜயேந்திர பிரசாத் ஆந்திராவைச்சேர்ந்தோர்.

6. சாரோன் என்பது கீழ்க்காணும் எதன் இயற்கைச் செயற்கைக்கோளாகும்?

அ. நெப்டியூன்

ஆ. வியாழன்

இ. புளூட்டோ 

ஈ. யுரேனஸ்

  • குள்ளக்கோளான புளூட்டோவின் ஐந்து இயற்கைச்செயற்கைக்கோள்களுள் ‘சரோன்’உம் ஒன்றாகும். ஒரு புதிய ஆய்வின்படி, தோலின்கள் எனப்படும் இரசாயனங்கள் காரணமாக சரோனுக்கு ‘சிவப்புத்தொப்பி’ ஏற்பட்டுள்ளது. இந்த இரசாயன கலவைகள் சூரியனின் புறவூதாக்கதிர்களின் ஒரு குறிப்பிட்ட நிறத்தை உறிஞ்சி, அவ்வியற்கைச் செயற்கைக்கோளின் வட துருவத்தைச் சுற்றி சிவப்பு நிறத்தைப் படியவைத்துள்ளது.

7. ஐரோப்பிய கவுன்சிலானது சமீபத்தில் கீழ்க்காணும் எந்த நாட்டிற்கு வேட்பாளர் தகுதியை வழங்கியது?

அ. எஸ்டோனியா

ஆ. லாட்வியா

இ. மால்டோவா குடியரசு 

ஈ. ஜார்ஜியா

  • உக்ரைன் மற்றும் மால்டோவா குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு, ஐரோப்பிய கவுன்சில், ‘வேட்பாளர் நாடு’ என்ற தகுதியை வழங்கியது. இது அந்நாடுகள் ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாக மாற வழிவகுக்கிறது.

8. அண்மையில் தொடங்கிய அம்புபச்சி மேளா, கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

அ. ஒடிஸா

ஆ. மிசோரம்

இ. அஸ்ஸாம்

 ஈ. பீகார்

  • அஸ்ஸாம் மாநிலத்தின் கௌகாத்தியில் அமைந்துள்ள காமாக்யா கோவிலில் நிகழும் ‘அம்புபச்சி மேளா’ என்பது ஒவ்வோர் ஆண்டும் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது தாய்மை மற்றும் கருவுறுதல் தெய்வத்தைக் கொண்டாடுகிறது. இது காமாக்யா தேவியின் மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கிறது.

9. பாரத்-NCAP என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்தின் முனைவாகும்?

அ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. கலாச்சாரத்துறை அமைச்சகம்

ஈ. சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் 

  • பாரத் – புதிய மகிழுந்து மதிப்பீட்டுத் திட்டத்தை (பாரத்-NCAP) அறிமுகப்படுத்துவதற்கான வரைவு அறிவிப்பிற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நடுவணமைச்சரால் சமீபத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது. இம்முனைவின்கீழ், மாதிரி விபத்து சோதனைகளின்மூலம் மகிழுந்துகளின் செயல்திறனடிப்படையில் அவற்றுக்கு நட்சத்திர தர மதிப்பீடுகள் வழங்கப்படும்.

10. உயர்தெளிவுத்திறன்கொண்ட DRACO என்னும் நிழற்படக்கருவி, கீழ்க்காணும் எந்த NASA திட்டத்தின் ஒரு பகுதியாகும்?

அ. DART 

ஆ. ஆர்ட்டெமிஸ்

இ. DAVINCI+

ஈ. வாயேஜர்

  • Didymos Reconnaissance and Asteroid Camera for Optical navigation (DRACO) என்ற ஒன்று மட்டுமே NASAஇன் DART திட்டத்தால் கொண்டுசெல்லப்பட்ட ஒரே கருவியாகும். இது நியூ ஹாரிஸான் திட்டத்தின் படிமமாக்கியை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. அண்மைய மாதங்களில், இந்த உயர்தெளிவுத்திறன்கொண்ட நிழற்படக்கருவி, பல்வேறு விண்மீன்களின் சுமார் 150,000 நிழற்படங்களை எடுத்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம்

COVID-19 தீநுண்மியின் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சர்வதேச அளவில் கரோனா தொற்று பரவல் கடந்த இரு வாரங்களில் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆறு துணை பிராந்தியங்களுள் நான்கில் கடந்த வாரம் தொற்றுபரவல் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பிஏ.4, பிஏ.5 உருமாற்றங்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிஏ.2.75 வகை கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் டுவிட்டரில் வெளியிட்ட காணொலிப் பதிவில், “பிஏ.2.75 வகை கரோனா பரவல் இந்தியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 நாடுகளிலும் அந்த வகை தொற்று பரவி வருகிறது. இந்த வகை தீநுண்மிகள் மேலும் சில முறை உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. இந்த வகைத் தொற்று மனிதர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது” என்றார்.

2. ஜி20 தூதராக அமிதாப் காந்த் நியமனம்

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளதால், அதற்கான தூதராக (ஷெர்பா) NITI ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஜி20 தூதராக நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை அமிதாப் காந்த் ஏற்கிறார். ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நிகழாண்டு இறுதியில் இந்தியா ஏற்கிறது. NITI ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆறு ஆண்டுகள் பதவி வகித்த அமிதாப் காந்த், கடந்த மாதம் ஓய்வுபெற்றார். 1980 கேரள பிரிவு இஆப அதிகாரியான அவர், அதற்கு முன்பாக தொழிற்கொள்கை, ஊக்குவிப்புத் துறை செயலராக பொறுப்பு வகித்தார்.

3. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தது: உடல் பருமன் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா. ஆய்வறிக்கை

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்று ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கையும், இரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 2022 என்ற ஆய்வு அறிக்கையை ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டது. அதில், ‘கடந்த ஆண்டு வறுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 828 மில்லியனாக அதிகரித்தது. 2020 ஒப்பிடுகையில் இது 46 மில்லியனும், கரோனா தாக்கத்துக்கு முன்பு ஒப்பிடுகையில், 150 மில்லியனும் அதிகரித்துள்ளது. 2015 வரையில் வறுமையால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படாமலிருந்தது. வறுமை ஒழிப்பில் உலகம் தற்போது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைனும், ரஷியாவும் உலகில் முன்னணி வகிக்கின்றன. சூரியகாந்தி எண்ணெயைப் பொருத்தவரை மொத்த உலக உற்பத்தியில் பாதியளவு இவ்விரண்டு நாடுகளும் 50% பங்களிப்பைக் கொண்டுள்ளன. உலக அளவிலான கோதுமை, பார்லி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ரஷியா, உக்ரைனின் பங்களிப்பாகும். உக்ரைன் போரால் விநியோக சங்கிலி பாதிப்பு ஏற்பட்டதால், உணவு தானியங்கள், வேளாண் உரங்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்தது.

அத்துடன், பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகில் சுமார் 92.4 கோடி மக்கள் (மொத்த உலக மக்கள்தொகையில் 11.7 சதவீதம் பேர்) உணவுப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20.7 கோடி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020-இல் உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பேர் ஊட்டச்சத்துள்ள உணவைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. முந்தைய 2019-ஆம் ஆண்டைவிட இது சுமார் 11.2 கோடி அதிகமாகும். உலகெங்கிலும் 5 வயதுக்குள்பட்ட சுமார் 4.5 கோடி குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் உயிரிழப்பு அபாயம் 12 மடங்கு அதிகமாகி உள்ளது.

இந்திய புள்ளி விவரங்கள்

ஊட்டச்சத்து குறைபாடு

வருடம் – எண்ணிக்கை

2004-06 24.78 கோடி (21.6%)

2019-21 22.43 கோடி (16.3%)

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் (ஊட்டச்சத்து குறைபாடு)

2020 – 3.61 கோடி (30.9%)

2012 – 5.23 கோடி (41.7%)

5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் (கூடுதல் எடை)

2020 – 22 லட்சம் (1.9%)

2012 – 30 லட்சம் (2.4%)

உடல் பருமன்

2016 – 3.43 கோடி (3.9%)

2012 – 2.52 கோடி (3.1%)

இரத்த சோகை பாதிப்பு (பெண்கள்)

2019 – 18.73 கோடி

2012 – 17.15 கோடி

5 மாதங்கள் தாய்ப்பால் அளிப்பு

2020 – 1.4 கோடி

2012 – 1.12 கோடி

ஊட்டச்சத்து உணவு பெற முடியாதவர்கள்

2020 – 97.33 கோடி (70.5%)

2019 – 94.86 கோடி (69.4%)

2018 – 96.66 கோடி

2017 – 100 கோடி

1. Which institution released the ‘Global Findex database 2021’?

A. RBI

B. World Bank 

C. IMF

D. World Economic Forum

  • The World Bank released the Global Findex Database 2021: Financial Inclusion, Digital Payments, and Resilience in the age of COVID–19. It surveyed how people in 123 economies use financial services throughout 2021. As per the report, large share of the global population without formal banking lives in India and China because of their size. The report also found that women are more likely to be unbanked than men.

2. Which city is the host of ‘2022 Global biodiversity conclave’?

A. Paris

B. Bonn 

C. Geneva

D. Davos

  • The 2022 Global biodiversity conclave is organised in Bonn, Germany. Intergovernmental Science–Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES) announced that Assessment on the Sustainable Use of Wild Species will be released. Sustainable use of wild species keeping in mind the well–being of communities that depend on them for livelihood will be the focus of the report to be released.

3. As per the RBI’s liberalised norms, what is the new limit of External Commercial Borrowing (ECB) under automatic route?

A. $500 million

B. $1 billion

C. $1.5 billion 

D. $2 billion

  • Reserve Bank of India (RBI) liberalised norms to boost inflows of foreign exchange. The measures include easing norms for FPI investment in debt market, and increasing the External Commercial Borrowing (ECB) limit under the automatic route from USD750 million or its equivalent per financial year to USD 1.5 billion. Exemption from Cash Reserve Ratio (CRR) and Statutory Liquidity Ratio (SLR) on Incremental FCNR (B) and NRE Term Deposits was also announced.

4. Which company launched ‘Startup School India (SSI)’ initiative?

A. Microsoft

B. Google 

C. Amazon

D. Meta

  • Google announced the launch of Start–up School India (SSI) as part of the Google for Start–ups initiative. This is a platform under which Google will bring together investors, entrepreneurs and programmers and provide opportunities to start–ups from small cities to interact and learn from them. Google aims to reach out to at least 10,000 start–ups with this programme.

5. Ilaiyaraaja, who was recently nominated to Rajya Sabha, is an eminent personality in which field?

A. Music 

B. Sports

C. Business

D. Literature

  • Legendary music director Ilaiyaraaja was recently nominated to Rajya Sabha, along with veteran athlete PT Usha, film screenwriter V Vijayendra Prasad and spiritual leader Veerendra Heggade. The nominations are done by the President on the advice of the Union Cabinet. While PT Usha is from Kerala, Ilaiyaraaja is from Tamil Nadu, Veerendra Heggade is from Karnataka and Vijayendra Prasad is from Andhra Pradesh.

6. Charon is the natural satellite of __?

A. Neptune

B. Jupiter

C. Pluto 

D. Uranus

  • Charon is one of the five natural satellites of the dwarf planet Pluto. According to a new study, Charon has a “red cap” because of chemicals called tholins. These chemical compounds absorbed a specific colour of the Sun’s UV rays to become red and get deposited around the natural satellite’s north pole.

7. The European Council recently granted the candidate status to which country?

A. Estonia

B. Latvia

C. Republic of Moldova

 D. Georgia

  • Two countries – Ukraine and Republic of Moldova – were granted the status of candidate country by the European Council. This paves the way towards them becoming the members of the European Bloc.

8. Ambubachi Mela, which kicked off recently, is organized in which state?

A. Odisha

B. Mizoram

C. Assam 

D. Bihar

  • The Ambubachi Mela is a 4–day long festival held every year at the Kamakhya Temple, which is situated at Assam’s Guwahati. It celebrates the goddess of motherhood and fertility. It marks Goddess Kamakhya experiencing the menstrual cycle.

9. Bharat–NCAP is the initiative of which union ministry?

A. Ministry of Corporate Affairs

B. Ministry of Home Affairs

C. Ministry of Culture

D. Ministry of Road Transport and Highways 

  • A draft notification was approved by the Union Minister for Road Transport and Highways recently for the introduction of Bharat New Car Assessment Program (Bharat–NCAP). Under this initiative, cars will be given star ratings based on their performance in crash tests.

10. The high–resolution camera DRACO, is part of which NASA mission?

A. DART 

B. Artemis

C. DAVINCI+

D. Voyager

  • The Didymos Reconnaissance and Asteroid Camera for Optical navigation (DRACO) is the only instrument carried by NASA’s DART mission. It was designed based on the New Horizon Mission’s imager. In recent months, this high resolution camera captured some 150,000 images of various stars.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!