Tnpsc

8th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th March 2021 Tnpsc Current Affairs in Tamil

  1. நடப்பாண்டில் (2021) வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ)  சதக் சுரக்ஷா

ஆ) நாரி சுரக்ஷா

இ) சோஷியல் சுரக்ஷா

ஈ) சைபர் சுரக்ஷா

  • பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.4 அன்று இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாக, ‘சதக் சுரக்ஷா’ (சாலை பாதுகாப்பு) என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2021) மார்ச்.4-10 வரை தேசிய பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படும்.

2. பன்னாட்டு பெண்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 7

ஆ) மார்ச் 8

இ) மார்ச் 9

ஈ) மார்ச் 10

  • பன்னாட்டு பெண்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம் நிறைந்த உலகத்தை வடிவமைப்பதில் உதவுவதற்காக இந்தச் சிறப்பு நாள் அனுச -ரிக்கப்படுகிறது. “Achieving an equal future in a COVID-19 world” என்ற கருப்பொருளின்கீழ் நடப்பாண்டு பெண்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது.

3. ஆர்க்டிகா-M என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ) பிரேஸில்

ஆ) பிரான்ஸ்

இ) இரஷ்யா

ஈ) ஆஸ்திரேலியா

  • ரஷ்ய விண்வெளி நிறுவனம் தனது ஆர்க்டிகா-M செயற்கைக்கோளை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலவும் காலநிலையை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டது. கஜகஸ்தா -னில் உள்ள ஏவுதளத்திலிருந்து சோயுஸ் ஏவுகலம்மூலம் இந்தச்செயற்
    -கைக்கோள் ஏவப்பட்டது. எரிசக்தி நிறைந்த பிராந்தியத்தை நாட்டின் வளர்ச்சி நலனுக்காக பயன்படுத்த இரஷ்யா முயற்சிசெய்துவருகிறது.

4. அண்மையில் வீழ்ச்சிப்படைப்புழு பாதிப்பு பதிவான இடம் எது?

அ) தேனி, தமிழ்நாடு

ஆ) வயநாடு, கேரளா

இ) நெல்லூர், ஆந்திர பிரதேசம்

ஈ) மைசூரு, கர்நாடகா

  • அண்மையில், கேரள மாநிலம் வயநாட்டில் வீழ்ச்சிப்படைப்புழு பாதிப்பு காணப்பட்டது. அது, பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்காச்சோளம் மற்றும் வாழைப்பழ சாகுபடிகளில் இந்தப் புழு தாக்குதல் பதிவாகியுள்ளது.

5. பிரதம அமைச்சரின் மக்கள் மருந்தகம் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் எது?

அ) இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம்

ஆ) இந்திய மருந்துகள் நிறுவனம்

இ) ஹிந்துஸ்தான் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் லிட்

ஈ) IFFCO

  • பிரதமர் மக்கள் மருந்தக திட்டம் (PM-BJP) என்பது மருந்துத் துறையின் ஒரு முயற்சியாகும்; இதன்கீழ், தரமான மருந்துகள் பொது மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம், இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகத்தின்மூலம் செயல்படுத்தப்படு -கிறது. மக்கள் மருந்தக திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, மக்கள் மருந்தக வாரம் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.
  • ‘மக்கள் மருந்தகம் – சேவையும், வேலைவாய்ப்பும்’ என்பது இதன் கருப் பொருளாகும். வாரத்தின் கடைசி நாளான மார்ச்.7 அன்று மக்கள் மருந்தக நாள் கொண்டாடப்படுகிறது.

6. பாலைவனக்கொடி (Desert Flag) என்னும் பன்னாட்டளவிலான பயிற்சியை நடத்தும் நாடு?

அ) UAE

ஆ) USA

இ) UK

ஈ) பிரான்ஸ்

  • ‘பாலைவனக்கொடி’ என்பது ஒரு பன்னாட்டுப்பயிற்சியாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, பிரான்ஸ் மற்றும் USA உட்பட பத்து நாடுகள் இந்தப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. இப்பயிற்சி, இம்மாதம் மூன்றுவாரகாலத்துக்கு நடைபெறும். இப்பயிற்சியானது பல, தீவிரமான வான்போர்வகை பயிற்சிகளை உள்ளடக்கும். இப்பயிற்சியில் பங்கேற்க இந்திய வான் படையின் Su-30-MKI மற்றும் C-17s போர் வானூர்திகள் சமீபத்தில் புறப்பட்டன.

7. டைட்டனோசரின் புதைப்படிவங்கள் அண்மையில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன?

அ) அர்ஜென்டினா

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இரஷ்யா

  • டைட்டனோசர் என்பது நான்கு கால்களில் நடந்துசெல்லும் நீண்ட கழுத்துடைய தாவரம் உண்ணும் டைனோசர்களின் குழுவாகும். 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ‘Ninjatitan zapatai’ என்ற டைனோசர் இனத்தின் புதைப்படிவங்களை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்கள், டைட்டனோசர்கள் என அழைக்கப்படும் டைனோசர் குழுவின் மிகப்பழமையான உறுப்பினர் என்று கூறப்படுகிறது.

8. பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், இந்திய தரைவழி துறைமுகங்கள் ஆணையம் செயல்படுகிறது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம்

ஈ) ஜல்சக்தி அமைச்சகம்

  • இந்திய தரைவழி துறைமுகங்கள் ஆணையம் 2012’இல் நிறுவப்பட்டது. இது உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
  • இந்தியாவில் தரைவழியாக எல்லையை கடந்துசெல்லும் பல்வேறு வாகனங்களை தணிக்கை செய்வது, எல்லைகடந்து செல்வபர்களை கண்காணிப்பது, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, நிர்வகிப்பது ஆகியவை இதன் பொறுப்பாகும். இதன் 9ஆவது நிறுவு நாள், 2021 மார்ச்.20 அன்று அனுசரிக்கப்பட்டது.

9. பின்வரும் எந்த உச்சிமாநாட்டில், சாகர்-மந்தன்: வணிக கடல்சார் தளம் விழிப்புணர்வு மையம் தொடங்கப்பட்டது?

அ) இந்திய துறைமுகங்கள் உச்சிமாநாடு

ஆ) இந்திய கடல்சார் உச்சிமாநாடு

இ) இந்திய கப்பல் வாணிப உச்சிமாநாடு

ஈ) இந்திய நீர்வழிப்போக்குவரத்து உச்சிமாநாடு

  • விளையாட்டு, கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட, ‘இந்திய கடல்சார் உச்சிமாநாடு – 2021’ஐ பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதன்சமயம், சாகர்-மந்தன்: வணிக கடல்சார் தளம் விழிப்புணர்வு மையம் தொடங்கப்பட்டது. இது கடல்சார் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்புத்திறன்கள், பாதுகாப்பு மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு தகவலமைப்பாகும்.

10. கீழ்க்காணும் எந்த PSLV’ஐ பயன்படுத்தி, ‘சிந்து நேத்ரா’ என்ற செயற்கைக்கோள் அண்மையில் வெற்றிகரமாக ஏவப்பட்டது?

அ) PSLV-C51

ஆ) PSLV-C52

இ) PSLV-C53

ஈ) PSLV-C54

  • ‘சிந்து நேத்ரா’ என்னும் செயற்கைக்கோள் சமீபத்தில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் கண்காணிப்பு திறனை அதிக -ரிப்பதற்கும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இதை உருவாக்கியது.
  • ISRO’இன் PSLV-C51’ஐப் பயன்படுத்தி இச்செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் உலவும் போர்க்கப்பல்கள் மற்றும் வணிகக்கப்பல்களை தானாக அடையாளம் காணும் திறன்கொண்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 76% அதிகரிப்பு: 47% பேருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கல்வியை தொடர முடியாதநிலை ஏற்பட்டது. குறிப்பாக, சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 280 மடங்கு அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பிரசார இயக்கம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தை தொழிலாளர்களின் நிலை தொடர்பாக தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரை 767 குடும்பங்களைச் சேர்ந்த 818 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 818 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 93 சதவீத ஆண் குழந்தைகளும், 92 சதவீத பெண் குழந்தைகளும் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக பள்ளி சென்று கொண்டு இருந்தனர். 2 சதவீத பேர் மட்டுமே பள்ளிக்கு செல்லவில்லை. 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் ஆண்களில் 67 சதவீதம் பேர், பெண்களில் 80 சதவீதம் பேர் பள்ளிக்கு சென்றனர். 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 40 சதவீத ஆண்களும், பெண்கள் 54 சதவீதம் பேர் பள்ளிக்கு சென்றனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பாக 818 குழந்தைகளில் 553 பேர் பள்ளிகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு 553 பேரில் 419 பேர் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். கோவிட் தொற்று முன்பாக வேலைக்கு சென்று கொண்டு இருந்த 265 பேரில் 231 தற்போதும் வேலைக்கு சென்று கொண்டுதான் உள்ளனர். இதன்படி, குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து, குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 76 சதவீதம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்து குழந்தை தொழிலாளர்கள் 28 சதவீதம் அதிகரித்து உள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற 553 குழந்தைகளில் 254 பேருக்கு (47%) ஊரடங்கின்போது எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. 49 பேருக்கு (9%) உலர் ரேஷன் பொருட்கள் கிடைத்துள்ளது. 177 பேருக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் கிடைத்துள்ளன. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் 24 சதவீதம் பேர் இணையதள வகுப்புகளில் கலந்துகொள்வதே இல்லை. 24 சதவீதம் பேர் 25 சதவீத வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். 21.6 சதவீதம் பேர் 50 சதவீத வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். 9.1 சதவீதம் பேர் அனைத்து வகுப்புகளிலும் கலந்துகொள்கின்றனர். பங்கேற்றவர்களில் 3ல் ஒருவர் இணைய வழி வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 90 சதவீதம் பேர் இணைய வகுப்புகளின் தரம் எதிர்பார்த்ததை விட கீழ்நிலையில் உள்ள தெரிவித்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். கிராம அளவில் குழு அமைத்து பணியாற்ற வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் உதவிகள் செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

* ரூ.400 வரை ஊதியம்

குழந்தைகள் தங்களின் வயதை பொறுத்து ரூ.100 முதல் ரூ.400 வரை சம்பாதிக்கிறார்கள். சில வேலைகளில் அதை விட அதிகம் சம்பாதிக்கின்றனர். சிலரிடம் ஊதியம் குறித்த தெளிவான தகவல் இல்லை.

* 17 மாவட்டங்களில் அதிகரிப்பு

ஊரடங்கு காலத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

* கொத்தடிமை முறையில் தள்ளப்படும் அபாயம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் பல குடும்பங்கள் அதிக வட்டி விகிதத்தில் நிறைய கடன் வாங்கி உள்ளனர். குறிப்பாக தங்களது முன்னாள் முதலாளிகளிடம் அதிக கடன் வாங்கியுள்ளனர். இதனால், இவர்களில் பலர் கொத்தடிமை முறைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.

2. சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் வேலூா் விஐடி க்யூ.எஸ். சா்வதேச அமைப்பு வெளியீடு

இந்திய அளவில் சிறந்த 12 கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலை குவாக்குவரேலி சைமெண்ட்ஸ் (க்யூ.எஸ்.) என்ற சா்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வித்தரம், மாணவா் – ஆசிரியா் விகிதம், ஆசிரியா்கள் பெற்ற விருதுகள், சாதனைகள், மாணவா்கள் விகிதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தரம் பிரித்து ஆண்டுதோறும் சா்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை குவாக்குவரேலி சைமண்ட்ஸ் (க்யூ.எஸ்.) என்ற சா்வதேச நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிறுவனம் நிகழாண்டு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் உலகின் சிறந்த 450 பல்கலைக் கழகங்களுக்குள் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. தவிர, தேசிய அளவில் சிறந்த 12 கல்வி நிறுவனங்களிலும் விஐடி பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், விஐடி பல்கலைக்கழகத்தின் 7 பாடப்பிரிவுகள் க்யூ.எஸ்., அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் மின்னணு பொறியியல், இயந்திரப் பொறியியல், வேதியியல் ஆகிய 4 பாடப்பிரிவுகள் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 இடங்களுக்கு மேல் முன்னேறியுள்ளன. இவை இந்திய அளவிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல் விஐடி பல்கலைக்கழகத்தின் கணிதவியல், உயிரியல் பாடப்பிரிவுகள் முதன்முதலாக க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் உலக அளவில் 500 முதல் 600 இடங்களுக்குள் வந்துள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலானது மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த பாடப்பிரிவு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருப்பதை எளிதாக அடையாளம் காண வழிவகை செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வருங்காலத்துக்கான நவீனப்படையை உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி

வருங்காலத்துக்கான நவீனப்படையாக இந்திய பாதுகாப்புப் படைகளை உருவாக்க வேண்டும் என்று முப்படைகள் தளபதிகளின் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம் கெவாடியாவில் பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகள் மாநாடு 3 நாள்கள் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி சனிக்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவரிடம் முப்படைத் தளபதி விபின் ராவத் மாநாட்டில் நிகழ்ந்த விவாதங்கள் குறித்து எடுத்துரைத்தாா். இதனைத்தொடா்ந்து மாநாட்டின் செயல்திட்டத்துக்கு பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு நாட்டின் வடக்கு எல்லையில் நிலவிய சவாலான சூழலிலும், கரோனா தொற்று பரவலின்போதும் முப்படைகள் வெளிபடுத்திய உறுதியான அா்ப்பணிப்பையும் பிரதமா் மோடி பாராட்டினாா். முப்படைகள் பயன்படுத்தும் ஆயுதங்கள், உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருப்பதையும், முப்படைகள் கடைப்பிடிக்கும் போா்க் கொள்கைகள், நடைமுறைகள் அனைத்தும் உள்நாட்டைச் சாா்ந்தவையாக இருப்பதையும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி கூறினாா். தேசிய பாதுகாப்பின் கட்டமைப்பில் ஒரு திட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க தேவைப்படும் நபா்களை மதிப்பிட்டு சரியாக பயன்படுத்த வேண்டிதற்கான தேவையையும் அவா் எடுத்துரைத்தாா். மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் உதவிபுரிந்து அவா்களுக்கும், முப்படைகளுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளியை உடைக்க வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

வேகமாக மாறிவரும் தொழில்நுட்பங்களை கருத்தில் கொண்டு, வருங்காலத்துக்கான நவீனப்படையாக நாட்டின் முப்படைகள் உருவாக வேண்டும் என பிரதமா் மோடி தெரிவித்தாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4. தகவல் தொழில்நுட்ப துறை விற்பனை 5.2% அதிகரிப்பு

தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை விற்பனை மூன்றாவது காலாண்டில் 5.2 சதவீதம் அதிகரிதத்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா பேரிடா் காலகட்டத்திலும் ஐடி துறையின் விற்பனை ஏற்றம் நிறைந்ததாகவே இருந்தது. அதனை எடுத்துக்காட்டும் வகையில் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் அத்துறையின் விற்பனை 5.2 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. கரோனா தொடா்பான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன் பயனாக, ஐடி துறையைச் சோ்ந்த 1,685 உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை மூன்றாவது காலாண்டில் 7.4 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக, இந்த மீட்சிக்கு உருக்கு, ஆட்டோமொபைல், சிமெண்ட், ரசாயனம், மருந்து நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

165 ஐடி நிறுவனங்களின் விற்பனை அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 1,05,724 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான ரூ.1,01,001 கோடியுடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், ஐடி துறை சாராத நிறுவனங்களின் விற்பனையில் ஏற்பட்ட பின்னடைவு இரண்டாவது காலாண்டில் -14.5 சதவீதமாக இருந்த நிலையில் மூன்றாவது காலாண்டில் அந்த பின்னடைவு -5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, தொலைத்தொடா்பு, ரியல் எஸ்டேட், வா்த்தக துறையைச் சோ்ந்த நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகளே முக்கிய காரணம் என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

5. ரூ.4 இடைக்கால ஈவுத்தொகை: ஐசிஐசிஐ லொம்பாா்டு

ஐசிஐசிஐ லொம்பாா்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது முறையாக ரூ.4 இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதற்கு அதன் இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: மும்பையில் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெற்ற ஐசிஐசிஐ லொம்பாா்டு நிறுவன இயக்குநா் குழு கூட்டத்தில் இரண்டாவது முறையாக 40 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம், ரூ.10 முகமதிப்பைக் கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.4 கிடைக்கும். ஈவுத்தொகை வழங்குவதற்கான பதிவு தேதி 2021 மாா்ச் 19-ஆம் தேதியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு முன்னதாகவே முதலீட்டாளா்களுக்கு இந்த இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என ஐசிஐசிஐ லொம்பாா்டு தெரிவித்துள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை கருத்தில் கொண்டு 2020-21 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையை அறிவிக்கலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) கடந்த வாரம் தெரிவித்திருந்தது. 2020 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஐசிஐசிஐ லொம்பாா்டு ரூ.314 கோடி நிகர லாபத்தை பெற்று 6.6 சதவீத வளா்ச்சியை பதிவு செய்தது.

6. பங்குகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 40% உயா்வு: மத்திய அரசு

பங்குகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 5,147 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈா்த்த அந்நிய நேரடி முதலீடான 3,677 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த அளவில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இந்தியா ஈா்த்த அந்நிய நேரடி முதலீடு (மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் உள்பட) கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 5,514 கோடி டாலரிலிருந்து 22 சதவீதம் வளா்ச்சி கண்டு 6,754 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

குறிப்பாக, மூன்றாவது காலாண்டில் மட்டும் (2020 அக்டோபா்-டிசம்பா்) அந்நிய முதலீட்டு வரத்து 37 சதவீதம் உயா்ந்து 2,616 கோடி டாலரைத் தொட்டது. டிசம்பரில் இது, 24 சதவீதம் அதிகரித்து 922 கோடி டாலராக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈா்க்கும் வகையில் அதன் கொள்கைகளில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டது. கடந்த ஆறரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக அந்நிய நேரடி முதலீட்டு வரத்து தற்போது தொடா்ந்து அதிகரித்து வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதில் அந்நிய முதலீடு மிக முக்கிய பங்கினை கொண்டுள்ளது. கடன் அல்லாத நிதிக்கான முக்கிய ஆதாரமாக அது விளங்குகிறது.

7. சா்வதேச மல்யுத்தம்: சரிதாவுக்கு வெள்ளி

மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றாா். இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா தனது இறுதிச்சுற்றில் 2-4 என்ற கணக்கில் பல்கேரியாவின் ஜியூலியா பெனால்பெரிடம் தோல்வி கண்டாா். இதனால் அவா் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேற நோ்ந்தது. ஆடவா் 72 கிலோ எடைப் பிரிவு கிரேக்கோ ரோமன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் குல்தீப் மாலிக், ரஷியாவின் சிங்கிஸ் லேபஸனோவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா். அதேநேரத்தில் ஆடவா் 97 கிலோ எடைப் பிரிவு ஃப்ரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் சத்திவாா்ட் காடியன் 1-8 என்ற கணக்கில் துருக்கியின் இப்ராஹிம் சிப்ட்சியிடம் தோல்வி கண்டாா்.

8. மார்ச் 8-ஐ ஏன் கொண்டாடுகிறோம்?

உலகெங்கும் மார்ச்-8 அன்று சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப்படுகிறது. கல்வியில், வேலை வாய்ப்பில், பொதுவெளிகளில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள், இன்றைக்கு போராடிப் பெற்று வருகிறார்கள். சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவதற்குப் பின்னே, மிக நீண்ட பெண் எழுச்சிக்கான வரலாறு இருக்கிறது. கி.பி. 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் பெண்கள் போர்க் கொடி ஏந்தினர். இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும், 16 மணி நேர வேலையைக் குறைக்க வேண்டும், வாக்குரிமை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போராட்டத்தில்இறங்கினர். ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தப் போராட்டம் பரவியது.

பெண்கள் வாரிசுகளைப் பெற்றெ டுப்பற்காகவும், வீட்டு வேலைக் காகவும் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த காலமாக அன்றைய காலமிருந்தது. பிறகு, பெண்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. 1907-க்குப் பிறகு போராட்டம் தீவிரமானது. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், 1910-ம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில அனைத்து நாட்டிலுள்ள பெண்களும் சேர்ந்து மகளிர் தினம் என்ற ஒன்றை உருவாக்கி, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார். அத்துடன் பெண்கள்சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராட வேண்டுமென்றும் குரல் கொடுத்தனர்.

பிறகு, ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் 8-ஐ உலக மகளிர் தினமாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ல் இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற் றப்பட்டது. உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917-ம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தது. அதற்கு முன்னோடியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள் என்றாலும் பெண்களே பிரதான பங்கு வகித்தனர். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னர் தனது அரியணையை விட்டிறங்கக் காரணமாக அமைந்தது. அதை நினைவுகூரும் விதமாக மார்ச் 8 தேர்ந்தெடுக்கப்பட்டது.

உலக அளவில், உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் பாதிப் பேர் மட்டுமே, வேலைக்குச் செல்கின்றனர் என்கிறது ஐ.நா. உழைப்புக்கான உடல் தகுதி, திறன், அறிவுக்கூர்மை இருந்தும் குடும்ப சூழல்களால் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இப்போது உழைக்கும் பெண்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதற்கான போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

9. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ம.பி. அரசு ரூ.1 கோடி

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிகளில் மறைந்து வாழும் நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்க கடந்த 2016-ம் ஆண்டில் மாவட்ட ரிசரவ் படையை (டிஆர்ஜி) சத்தீஸ்கர் அரசு உருவாக்கியது.

கடந்த 4-ம் தேதி சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் டிஆர்ஜி வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் லட்சுமிகாந்த் என்ற வீரர் உயிரிழந்தார். இவர் மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர். “தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமிகாந்த் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். அவரது குடும்பத்துக்கு வீடு வழங்கப்படும்” என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

10. செவ்வாய் கிரகத்தில் ‘ரோவர்’ சோதனை ஓட்டம்

அமெரிக்காவின் ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ வாகனம் செவ்வாய் கிரகத்தில் முதன் முறையாக சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் வாகனம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஏராளமான புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில் நாசா வெளியிட்டுள்ள அறிக்கை:செவ்வாய் கிரகத்தில் ஆறு சக்கரங்கள் உள்ள பெர்சவரன்ஸ் ரோவர் வாகனம் முதன் முறையாக 6.5 மீ. துாரம் நடத்திய சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.முதலில் 4 மீ. துாரம் முன்புறம் சென்ற ரோவர் பின் இடது புறம் திரும்பி 2.5 மீ. பின்னோக்கி நகர்ந்து புதிய தற்காலிக இருப்பிடத்தில் நின்றது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முதன் முறையாக மொத்தம் 33 நிமிடங்கள் நடந்த இந்த சோதனை ஓட்டம் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை அடுத்து ரோவர் 200 மீ. துாரம் சென்று செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.செவ்வாய் கிரகத்தின் மண், கல் ஆகியவற்றை சேகரிக்கும். பல கோணங்களில் படம் எடுத்து பூமிக்கு அனுப்பும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகம் தொடர்பான விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு ரோவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

11. 4-ஆவது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாதில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 75.5 ஓவா்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55, டான் லாரன்ஸ் 46 ரன்கள் எடுத்தனா். இந்திய தரப்பில் அக்ஸா் படேல் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் முன்னணி வீரா்கள் விரைவாக வெளியேறியபோதும், ரிஷப் பந்த்-வாஷிங்டன் சுந்தா் ஜோடி சிறப்பாக ஆடியது. இதனால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ரிஷப் பந்த் 118 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து வெளியேறினாா்.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 94 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தா் 60, அக்ஸா் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனா். 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தா் சதத்தை நெருங்கிய நிலையில், அக்ஸா் படேல் 97 பந்துகளில் 43 ரன்கள் சோ்த்த நிலையில் ரன் அவுட்டானாா். இதன்பிறகு வந்த இஷாந்த் சா்மா, முகமது சிராஜ் ஆகியோா் ரன் ஏதுமின்றி விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 114.4 ஓவா்களில் 365 ரன்களோடு முடிவுக்கு வந்தது. வாஷிங்டன் சுந்தா் 174 பந்துகளில் 1 சிக்ஸா், 10 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். அவா் 4 ரன்களில் டெஸ்ட் போட்டியில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தாா். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டா்சன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இங்கிலாந்து-135: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளா்கள் அஸ்வின், அக்ஸா் படேல் ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணியின் தொடக்க வீரரான ஜக் கிராவ்லே 5 ரன்களிலும், பின்னா் களம்புகுந்த ஜானி போ்ஸ்டோ ரன் ஏதுமின்றியும், டாம் சிப்லே 3 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனா். இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் 2, ஆலி போப் 15, ஜோ ரூட் 30 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 25.1 ஓவா்களில் 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டான் லாரன்ஸ்-பென் ஃபோக்ஸ் ஜோடி 44 ரன்கள் சோ்க்க, அந்த அணி 100 ரன்களைக் கடந்தது. பென் ஃபோக்ஸ் 13 ரன்களில் வெளியேற, அவரைத் தொடா்ந்து களம்புகுந்த டாம் பெஸ், ஜேக் லீச் ஆகியோா் தலா 2 ரன்களில் நடையைக் கட்டினா். கடைசி விக்கெட்டாக டான் லாரன்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸ் 54.5 ஓவா்களில் 135 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது. இந்திய தரப்பில் அஸ்வின், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்தப் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தப் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது. லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூஸிலாந்தை எதிா்கொள்கிறது இந்தியா.

8-ஆவது முறையாக தொடா் நாயகன் விருது வென்ற அஸ்வின் இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தொடா் நாயகன் விருதை வென்றாா். டெஸ்ட் போட்டியில் அவா் தொடா் நாயகன் விருதை வெல்வது 8-ஆவது முறையாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக முறை தொடா் நாயகன் விருதை வென்றவா்கள் வரிசையில் பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாா்ன், நியூஸிலாந்தின் ரிச்சா்ட் ஹேட்லி ஆகியோருடன் 3-ஆவது இடத்தைப் பகிா்ந்து கொண்டுள்ளாா் அஸ்வின். முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளீதரனும் (11 முறை), 2-ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸும் (9 முறை) உள்ளனா்.

சாதனைத் துளிகள்… * இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. கடந்த 112 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னா் 1909-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதேபோன்று ஆட்டமிழந்துள்ளது. * இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதத்தையும் விளாசினாா் இந்திய வீரா் அஸ்வின். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 30-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதமும் அடித்த முதல் வீரா் என்ற பெருமை அஸ்வின் வசமாகியுள்ளது. மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் 30 அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகளை இருமுறை வீழ்த்திய முதல் இந்தியா் என்ற பெருமையும் அஸ்வின் வசமாகியுள்ளது.

* இந்த டெஸ்ட் தொடரில் அக்ஸா் படேல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா் என்ற சாதனையை திலீப் தோஷியுடன் பகிா்ந்து கொண்டாா். திலீப் தோஷி 1979-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். * நான்காவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 30-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறாா் அஸ்வின். இதன்மூலம் ஓா் இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவா்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டா்சனுடன் 6-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா் அஸ்வின்.

12. கரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை ரத்து: இந்தியாவின் பரிந்துரைக்கு எதிா்ப்பு

கரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமைகள் வழங்கக் கூடாது என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சோ்ந்த 4 எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மைக் லீ, டாம் காட்டன், ஜோனி எா்ன்ஸ்ட், டாட் யாங் ஆகிய அந்த 4 எம்.பி.க்கள், இதுகுறித்து அதிபா் ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள நிறுவனங்கள், அதற்காகப் பெற்றுள்ள காப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அவ்வாறு காப்புரிமைகள் ரத்து செய்யப்பட்டால், கூடுதலாக பல நிறுவனங்கள் உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இவ்வாறு அந்த நாடுகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் இதற்கு நோ்மாறாக இருக்கும். கரோனா தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை மருந்துகளை உருவாக்குவதற்காக பாடுபட்ட அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதற்கான காப்புரிமைகள் பறிக்கப்பட்டால், அந்த நோய்க்கு எதிரான அறிவியல் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அதிபா் டிரம்ப் பதவிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டத்தின் கீழ் வரலாறு காணாத வேகத்தில் கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டது. காப்புரிமைகள் பறிக்கப்பட்டால் அந்தத் திட்டம் முடிவுக்கு வந்துவிடும். அமெரிக்க நிறுவனங்களின் காப்புரிமையை அபகரித்தால், தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று சில நாடுகள் நம்புகின்றன. ஆனால், இது தவறான நம்பிக்கையாகும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 15 முதல் நேரடி வழக்கு விசாரணை தொடக்கம்

உச்சநீதிமன்றத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் காணொலி வழக்கு விசாரணையுடன் சோ்த்து நேரடி வழக்கு விசாரணையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி வாயிலாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் குறைந்ததையடுத்து, நேரடி வழக்கு விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று வழக்குரைஞா்கள் பலா் கோரிக்கை விடுத்தனா். இத்தகைய சூழலில், வரும் 15-ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை காணொலி வாயிலாக மட்டுமின்றி நேரடியாகவும் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளாவது:

திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பட்டியலிடப்படும் வழக்குகளின் விசாரணைகள் வழக்கம்போல் காணொலி வாயிலாகவே நடைபெறும். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் பட்டியலிடப்படும் வழக்குகள், நீதிபதிகளின் விருப்பத்துக்கேற்ப காணொலி வாயிலாகவோ, நேரடியாகவோ நடைபெறும். குறிப்பிட்ட வழக்குகளின் தரப்பினா் எண்ணிக்கை, கரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படி நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய நபா்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையைக் காணொலி வாயிலாக நடத்துவதா, நேரடியாக நடத்துவதா என்று நீதிபதிகள் முடிவெடுப்பா்.

20 நபா்களுக்கு மட்டுமே அனுமதி: சோதனை அடிப்படையில் இந்தப் புதிய நடைமுறை வரும் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. வழக்கு விசாரணை நேரடியாக நடைபெற்றாலும், வழக்கில் தொடா்புடைய நபா்களும் வழக்குரைஞா்களும் காணொலி வழியாகக் கூட விசாரணையில் பங்கேற்க முடியும். வழக்குரைஞா்கள் எந்த முறையில் ஆஜராகின்றனா் என்பதை 24 மணி நேரத்துக்கு முன்பாகவோ, விசாரணை நடத்தப்படவுள்ள வழக்குகளின் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாள் நண்பகல் 1 மணிக்கு முன்னதாகவோ தெரியப்படுத்த வேண்டும். நேரடி வழக்கு விசாரணை நடைபெறும்போது, நீதிமன்ற அறைக்குள் 20 நபா்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. அந்த விதிமுறை மீறப்பட்டால், வழக்கு விசாரணை காணொலி வாயிலாகவே நடைபெறும். நேரடி வழக்கு விசாரணை நடைபெறும்போது, வழக்குரைஞருடன் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

சிறப்பு அனுமதிச் சீட்டு: நேரடி வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் மட்டுமே சம்பந்தப்பட்ட நபா்கள் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படுவா். நேரடி வழக்கு விசாரணையில் பங்கேற்கும் நபா்களுக்கும் வழக்குரைஞா்களுக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாகும். அடிக்கடி சுத்திகரிப்பானைப் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்ற வளாகத்துக்குள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. இந்தியாவிடமிருந்து தடுப்பூசி வாங்குவது ஏழை நாடுகளை பாதிக்காது: பிரிட்டன்

அஸ்ட்ராஸெனகா கரோனா தடுப்பூசிகளை இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதால், ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் பாதிக்கப்படாது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு தடுப்பூசி கொள்முதல் அமைச்சா் நதீம் ஸஹாவி கூறியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1 கோடி அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை பிரிட்டன் வாங்குவதால், ஏழை மற்றும் நடுத்தர நாடுகளின் கரோனா தடுப்பூசி திட்டங்கள் பாதிக்கப்படாது. அத்தகைய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதிமொழியை அஸ்ட்ராஸெனகா மற்றும் சீரம் நிறுவனங்களிடமிருந்து நாங்கள் கேட்டுப் பெற்றுள்ளோம்.

ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்காக சீரம் நிறுவனம் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. ஏற்கெனவே, கானா, பிலிப்பின்ஸ், ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளுக்கு அந்த நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. எதிா்காலத்தில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். எனவே, அந்த நிறுவனம் பிரிட்டனுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்குவதால் பின்தங்கிய நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுவது தவறாகும். அத்தகைய நாடுகளில் ஐ.நா. ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் மூலம் கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன என்றாா் அவா்.

 

TNPSC MARCH 8TH CURENT AFFAIRS IN TAMIL

1. மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி சேமிப்பு: 7,500-வது மக்கள் மருந்தகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்.

மக்கள் மருந்தகம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி மிச்சமாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டன. சந்தைவிலையை விடவும் 50 முதல் 90 சதவீதம் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் 7 வரையில் ‘மக்கள் மருந்தக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் உள்ள ‘நார்த் ஈஸ்டர்ன் இந்திரா காந்தி ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்’ நிறுவனத்தில், நாட்டின் 7,500-வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் மோடி நேற்றுநாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பெண்கள் மத்தியில் சுயசார்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 1,000-க்கும் மேற்பட்ட மையங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. இந்தமையங்கள் மூலம் இதுவரை 11 கோடி சானிட்டரி நாப்கின்கள் குறைவானவிலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, 75 ஆயுஷ் மருந்துகளும் இந்த மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆயுர்வேத மற்றும் ஆயுஷ் மருந்து தேவையையும் இந்த மருந்தகங்கள் பூர்த்தி செய்கின்றன. மக்கள் மருந்தகத் திட்டத்தினால் ஏழை மக்கள் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி வரை சேமிக்க முடிகிறது.

மருத்துவ காப்பீட்டு திட்டம் (ஆயுஷ்மான் பாரத்) மூலம் 50 கோடி மக்கள் பயனடைகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.

இதயத்தில் பொருத்தப்படும் ஸ்டென்ட் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,500 கோடிசேமிப்பாகிறது. இதுபோன்ற மத்தியஅரசின் பல்வேறு சுகாதார திட்டங்

களால் ஏழை, நடுத்தர மக்கள் மொத்தமாக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை சேமிக்க முடியும். மருத்துவசிகிச்சை குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பதையும் அவை அனைத்து மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதையும் இலக்காகக்

கொண்டு மத்திய அரசு கொள்கைகளை உருவாக்கி வருகிறது.மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முதன்மை நாடாக திகழ்கிறது. குறிப்பாக, கரோனா தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறோம். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றநோக்கத்தில், நாடு முழுவதும் உள்ளஅரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் புதிதாக180 மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் 2014-ல் நாடுமுழுவதும் 55 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் இருந்த நிலையில், இப்போது கூடுதலாக 30 ஆயிரம் இடங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல மருத்துவ மேற்

படிப்புக்கான இடங்கள் 30 ஆயிரம் ஆகஇருந்தது. இப்போது கூடுதலாக 24 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்கள் மருந்தக திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, மக்கள் மருந்தக வாரம் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. ‘மக்கள் மருந்தகம்- சேவையும், வேலைவாய்ப்பும்’ என்பது இதன் மையக்கருவாகும். வாரத்தின் கடைசி தினமான மார்ச் 7 அன்று மக்கள் மருந்தக தினம் கொண்டாடப்படுகிறது.

2. ஜிஎஸ்எல்வி – எஃப் 10 ராக்கெட் மூலம் மார்ச் மாத இறுதியில் விண்ணில் பாயும் ஜிஐசாட்-1.

ஜிஎஸ்எல்வி – எஃப்10 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக் கோள் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. புவி கண்காணிப்பு, பேரிடர் மீட்பு பணிகளுக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எஃப் 10 ராக்கெட் மூலம் கடந்த 2020 மார்ச் 5-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ராக்கெட் பயணம் நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிஐசாட்-1 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி – எஃப்10 ராக்கெட் மூலம் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செயற்கைக் கோள் வடிவமைப்பு, செயல்பாடுகளில் சில தொழில்நுட்ப அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

2,268 கிலோ எடை கொண்டது ஜிஐசாட்-1. இதில் உள்ள 5 விதமான 3டி கேமராக்கள், தொலைநோக்கி மூலம் புவிப் பரப்பை துல்லியமாக பார்க்கவும், படம் எடுக்கவும் முடியும்.

3. அகில இந்திய அளவில் ராஜஸ்தான் முதலிடம்; கரோனா தடுப்பூசி போடுவதில் 9-வது இடத்தில் தமிழகம்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதல் இடத்தையும் குஜராத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிரா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவில் கரோனா பரவலைதடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், கடந்த 1-ம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிதொடங்கியது. தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு, நகராட்சி, மாநகராட்சி, குருகுலப் பள்ளிகளில் 7-ம் வகுப்பு முதல் இன்டர்மீடியட் (பிளஸ்-2) வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தொடங்கப்படும். அதன் பிறகு நாப்கின் கொள்முதல் நடைமுறைகள் முடிந்து, ஜூலை 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வரும். ஒரு மாணவிக்கு மாதம் 10 நாப்கின்கள் வீதம் ஆண்டுக்கு 120 நாப்கின்கள் வழங்கப்படும். இவ்வாறு ஜெகன்மோகன் கூறினார்.

5. 2019-ம் ஆண்டில் 61 சதவீத வீடுகள், 26 சதவீத உணவு விடுதிகளில் இந்தியர்கள் விரயம் செய்த உணவு 6.80 கோடி டன்: ஐநா ஆய்வு அறிக்கையில் தகவல்.

இந்தியர்கள் 2019-ம் ஆண்டில் 6.80 கோடி டன் அளவில் உணவுகளை விரயம் செய்திருப்பதாக ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ‘உணவு விரயக் குறியீடு 2021’ என்று உணவு விரயம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது. உலக ளாவிய அளவில் 2019-ம் ஆண்டு 9.31 கோடி டன் அளவில் உணவுகள் விரயம் செய்யப்பட்டுள்ளன. இதில் 61 சதவீதம் வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு விடுதிகளிலிருந்தும், 13 சதவீதம் சில்லறை விற்பனையின் மூலமும் விரயம் ஆகியிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய வீடுகளில் 2019-ம் ஆண்டு 6.80 கோடி டன் அளவில் உணவு விரயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை விரயம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தனி நபர் ஆண்டுக்கு 59 கிலோ உணவையும், சீனாவில் தனி நபர் ஆண்டுக்கு 64 கிலோ உணவையும் விரயம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் தயாரிக்கப்படும் உணவில் 17 சதவீதம் விரயம் ஆக்கப்படுகிறது.

பசுமை குடில் வாயு வெளியேற்றத் துக்கு உணவு விரயம் முக்கிய காரண மாக இருக்கிறது என்றும் உணவு விரயத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப் புத் தெரிவித்துள்ளது. உணவு விரயம் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல சமூகம் மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுநாள் வரையில் வளர்ந்த நாடுகளில்தான் உணவு அதிக அளவில் விரயம் செய்யப்படுவதாக நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐநாவின் இந்த ஆய்வறிக்கை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் உணவு அதிக அளவில் விரயம் செய்யப்படுகிறது என்பதைக் காட்டியுள்ளது.

6. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் 35வது சர்வதேச குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் இந்தியாவின் மணிஷ் கவுசிக்.

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரில், 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் மணிஷ் கவுசிக் தங்கப்பதக்கம் பெற்றார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் 35வது சர்வதேச குத்துச்சண்டை தொடராகும் இது. இதில், ஆண்களுக்கான 63 கிலோ பிரிவு இறுதிக்கு தகுதிபெற்றார் இந்திய வீரர் மணிஷ். அதில், டென்மார்க் நாட்டின் நிகோலாய் டெர்டேரினை எதிர்கொண்டு வீழ்த்தி, தங்கப்பதக்கத்தைப் பெற்றார் மணிஷ் கவுசிக். ஆண்கள் 69 கிலோ பிரிவில், இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் வெள்ளி வென்றார். மற்றபடி, 75 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆஷிஸ் குமாரும், 57 கிலோ பிரிவில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீனும், 81 கிலோ எடைப்பிரிவில் சுமித் சங்வானும், 91 கிலோ பிரிவில் இந்தியாவின் சதிஷ் குமாரும் வெள்ளி வென்றனர்.

7. சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கி.கி.,) தங்கம் வென்றார்.

இத்தாலி தலைநகர் ரோமில், சர்வதேச மல்யுத்த தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 53 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் வினேஷ் போகத், கனடாவின் டயானா மேரி ஹெலன் வீக்கர் மோதினர். அபாரமாக ஆடிய வினேஷ் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இவர், சமீபத்தில் உக்ரைனில் நடந்த தொடரில் முன்னாள் உலக சாம்பியன் (2017) பெலாரசின் வனேசா கலாட்ஜின்ஸ்கயாவை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தார். தொடர்ச்சியாக 2 தொடர்களில் தங்கம் வென்ற வினேஷ், உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருந்து நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார்.

8. புர்கா தடைக்கு ஆதரவாக வாக்களித்த சுவிட்சர்லாந்து மக்கள்.

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டத்திற்கு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.

பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு 51.2 சதவீத மக்கள் ஆதர்வாக வாக்களித்துள்ளனர். இதனால், பொது இடங்களில் புர்கா அணிவதை சட்ட விரோதம் என வகை செய்யும் வகையிலான சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசு இயற்றும் எனத்தெரிகிறது.

9. பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பாக, மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனி நபர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு, 20 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தக வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்குப் பிறகும், தகுதிச் சான்று பெறவேண்டும். தகுதியில்லாத வாகனங்கள் அழிக்கப்படும். “பழைய வாகனங்கள் அழிக்கப் படும்போது, புதிய வாகனம் வாங்கினால், அதன் விலையில், 5 சதவீத தள்ளுபடி சலுகை வழங்கப்படும். என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

10. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நடிகர் அஜித்.

தமிழக அளவிலான, 46வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அஜித் தங்கம் வென்றுள்ளார். மார்ச், 3 முதல், 7 வரை நடந்த இந்த போட்டியில் தமிழகம் முழுதும் இருந்து, 900 வீரர்கள் பங்கேற்றனர்.

11. கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா – ஸ்பெயினின் கார்பின் முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

12. கே.பி.சர்மா ஒலி – பிரசண்டா தலைமையிலான கட்சிகளின் இணைப்பு ரத்து நேபாள உச்சநீதிமன்றம் அதிரடி.

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, புஷ்பகமல் தாஹால் (பிரசண்டா) ஆகியோர் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி இணைப்பை ரத்து செய்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியும் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி யும் கடந்த 2018 – ஆம் ஆண்டு மே மாதம் ஒருங்கிணைக்கப்பட்டு நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி உருவாக்கப்பட்டது. நேபாளத்தில் 2017 – இல் நடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சிகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கே.பி.சர்மா ஒலி – பிரசண்டா தலைமையில் உருவான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை (என்சிபி) தேர்தல் ஆணையம் பதிவு செய்ய முடிவெடுத்ததற்கு எதிராக ரிஷிராம் கட்டல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் ஏற்கெனவே இதே என்சிபி பெயரில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவருடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் குமார் ரெஜ்மி மற்றும் பாம்குமார் சிரேஷ்டா அடங்கிய அமர்வு முன்பு ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: கே.பி.சர்மா ஒலி மற்றும் பிரசண்டா ஒன்றாக இணைந்து அவர்களது தலைமையில் என்சிபி கட்சி உருவாக் கப்படுவதற்கு முன்பாகவே ரிஷிராம் கட்டல் அதே பெயரில் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்துள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு கட்சியின் பெயரில் மீண்டும் ஒரு கட்சியினை பதிவு செய்ய முடியாது. எனவே, கே.பி.சர்மா ஒலி – பிரசண்டா ஆகியோரது கட்சிகளின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

13. நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கி, புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’‌ தடுப்பூசிகள் நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு சார்பில் ‘கோவிஷீல்டு’‌ தடுப்பூசிகள் நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

1. What is the theme of the National Safety Day 2021?

A) Sadak Suraksha

B) Nari Suraksha

C) Social Suraksha

D) Cyber Suraksha

  • March 4 is observed every year as National Safety Day in India with the aim of creating awareness among people with respect to safety measures. This year, the focus of National Safety Day is on road safety and the theme is ‘Sadak Suraksha’ (road safety). The celebrations this year have also been spread over a week and National Safety Week will be observed from March 4 to March 10.

2. Which day is celebrated as International Women’s Day?

A) March 7

B) March 8

C) March 9

D) March 10

  • The International Women’s Day is being celebrated across the world on March 8, 2021. This day is observed on March 8 every year in order to help in shaping a gender equal world. The day is being observed this year under the theme “Achieving an equal future in a COVID–19 world”.

3. Which country has launched the satellite Arktika–M?

A) Brazil

B) France

C) Russia

D) Australia

  • The Russian Space Agency has launched its satellite Arktika–M. This satellite is intended to monitor the climate in the Arctic region.
  • A Soyuz rocket took off from the Russian cosmodrome in Kazakhstan carrying Russia’s first satellite launched for monitoring the Arctic’s climate. Russia seeks to utilise the energy–rich region for the nation’s developmental interest.

4. Fall Armyworm (FAW) infestation on crops has been reported recently in which place?

A) Theni, Tamil Nadu

B) Wayanad, Kerala

C) Nellore, Andhra Pradesh

D) Mysore, Karnataka

  • Recently, Wayanad of Kerala has witnessed infestation of fall armyworm (FAW), which has caused excessive damage to crops in the place. The attack has been reported on maize and plantain cultivations.

5. Which organisation is the implementing agency for Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana?

A) Bureau of Pharma PSUs of India

B) Drugs Corporation of India

C) Hindustan Antibiotics Ltd

D) IFFCO

  • Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PM–BJP) is an initiative of the Department of Pharmaceuticals, under which quality medicines are provided to the general public at affordable cost.
  • This scheme is being implemented through Bureau of Pharma PSUs of India (BPPI). The organisation is celebrating the 3rd Janaushadhi Diwas on 7th March 2021, with the theme being “Seva bhi – Rozgar bhi”.

6. Which country is the host of the multinational Exercise Desert Flag?

A) UAE

B) USA

C) UK

D) France

  • ‘Desert Flag’ is a multinational exercise, which is to be held in the United Arab Emirates. Ten countries are to take part in this exercise including India, France and the U.S. This exercise will be held for three weeks this month. This semi–annual exercise will involve multiple, intensive air combat sorties. IAF’s Su–30–MKI and C–17s fighter jets took off recently to participate in this exercise.

7. The fossils of Titanosaur have recently been unearthed in which country?

A) Argentina

B) USA

C) UAE

D) Russia

  • Titanosaur is a group of long–necked plant–eating dinosaurs that walked on four legs. Scientists have recently discovered the fossils of a dinosaur species named ‘Ninjatitan zapatai’ which lived 140 million years ago during the Cretaceous Period.
  • The fossils which have been unearthed, is said to be the oldest–known member of the dinosaur group known as titanosaurs.

8. The Land Ports Authority of India works under which Union Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Ports Shipping and Waterways

D) Ministry of Jal Shakti

  • The Land Ports Authority of India was founded in 2012. It is a statutory body working under the Ministry of Home Affairs. It is responsible for creating, upgrading, maintaining and managing border infrastructure in India. It manages several Integrated Check Posts all across Borders of India. The 9th foundation say of the Land Ports Authority of India was observed on March 1, 2021.

9. Sagar–Manthan: Mercantile Marine Domain Awareness Centre (MMDAC) has been launched in which summit?

A) Ports India Summit

B) Maritime India Summit

C) Shipping India Summit

D) Indian Waterways Summit

  • Prime Minister Modi inaugurated ‘Maritime India Summit 2021’, organised by the Ministry of Sports, Shipping and Waterways. India also launched a real–time vessel tracking system called ‘Sagar–Manthan: Mercantile Marine Domain Awareness Centre (MMDAC)’.
  • It is to be operated by DG Shipping and can also track foreign vessels as well as foreign vessels.

10. Sindhu Netra satellite has recently been successfully launched using which PSLV?

A) PSLV–C51

B) PSLV–C52

C) PSLV–C53

D) PSLV–C54

  • Sindhu Netra satellite was successfully launched into space recently. It was developed by the Defence Research and Development Organisation (DRDO) to boost India’s surveillance capability and improve monitoring of activities in the Indian Ocean Region. The launch was made using ISRO’s PSLV–C51. The satellite is capable of automatic identification of warships and merchant ships in IOR.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!