TnpscTnpsc Current Affairs

8th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘நீடித்த நகர்ப்புற குளிரூட்டும் கையேடு’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) UNEP 

ஆ) FAO

இ) NITI ஆயோக்

ஈ) நபார்டு

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) ‘நீடித்த நகர்ப்புற குளிரூட்டும் கையேடு’ என்ற புதிய அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, புவி வெப்பமடைதல் கட்டுப்பாடில்லாமல் தொடர்வதால் நகரங்கள் இதனால் வெகுவாக பாதிப்படையும். அதிக வெப்பமடைந்த நகரங்கள் காலநிலை மாற்ற செலவினங்களை எதிர்கொள்ளும். உலகில் உள்ள 1692 பெரிய நகரங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2. 2021 நவம்பர் நிலவரப்படி, பவரிங் பாஸ்ட் நிலக்கரி கூட்டணியில் எத்தனை நாடுகள் அங்கம் வகிக்கின்றன?

அ) 8

ஆ) 18

இ) 48 

ஈ) 88

  • Powering Past Coal Alliance (PPCA) என்பது நிலக்கரியை படிப்படியாக அகற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு கூட்டணியாகும். COP உச்சிமாநாட்டில் 28 நாடுகள் இந்தக்கூட்டணியில் இணைந்தன. இதன் மூலம் இந்தக் கூட்டணியின் மொத்த எண்ணிக்கை 48 ஆனது.
  • உக்ரைன், போலந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியவை PPCA’இன் புதிய உறுப்பினர்களுள் அடங்கும். எனினும், உலகளவில் மூன்று மிகப்பெரிய நிலக்கரி உபயோகிப்பாளர்களான சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் PPCA’இல் சேரவில்லை.

3. Inti tanager (Heliothraupis oneilli) என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பின்வரும் எந்த உயிரினமாகும்?

அ) பறவை 

ஆ) மீன்

இ) பாம்பு

ஈ) சிலந்தி

  • Inti tanager (Heliothraupis oneilli) எனப் பெயரிடப்பட்ட, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வினம், 370’க்கும் மேற்பட்ட பாடும்பறவை இனங்களை உள்ளடக்கிய Thraupidae பெருங்குடும்பத்தைச்சேர்ந்தவை. இந்தப்பறவைகள் கிட்டத்தட்ட அமெரிக்க வெப்பமண்டலங்கள் முழுவதும் பரவியுள்ளன. இந்தக குறிப்பிட்ட பறவை பொலிவியா மற்றும் பெருவின் யுங்காஸ் பயோரிஜியனில் வாழ்கிறது.

4. இந்திய வான்படையுடன் இணைந்து ஸ்மார்ட் விமானத்திடல் எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ) இஸ்ரோ

ஆ) டிஆர்டிஓ 

இ) BHEL

ஈ) HAL

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விமானப்படை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் விமானத்திடல் எதிர்ப்பு ஆயுதத்தின் சோதனைகளை மேற்கொண்டன. இந்த ஆயுதம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள சந்தன் மலைத்தொடரில் இருந்து IAF விமானம்மூலம் ஏவப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு அதிகபட்சமாக 100 கிமீ வரம்பு வரை செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. நடப்பாண்டில் (2021) வரும் உலக நகரங்கள் நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) Designed to Live Together

ஆ) Adapting Cities for Climate Resilience 

இ) Changing the world

ஈ) Promoting a better urban future

  • உலகளாவிய நகரமயமாக்கலில் ஆர்வங்கொண்ட சர்வதேச சமூகங்ககளை ஊக்குவிப்பதற்காகவும் நகரமயமாக்கலில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்.31 அன்று ஐநா அமைப்பின் உலக நகரங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Adapting Cities for Climate Resilience” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். “Better City, Better Life” என்பது இந்நாளுக்கு வழங்கப்பெறும் பொதுவான கருப் பொருளாகும்.

6. உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) அக்டோபர் 30 

ஆ) அக்டோபர் 31

இ) நவம்பர் 01

ஈ) நவம்பர் 02

  • மக்களிடம் சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்
    -தையும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் அக்.30 அன்று இந்தியாவில் (அக்டோபர்.31 அன்று உலகளவில்) உலக சிக்கன நாள் (World Thrift Day) கொண்டாடப்படுகிறது.

7.உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 02

ஆ) நவம்பர் 03

இ) நவம்பர் 04

ஈ) நவம்பர் 05 

  • ஆழிப்பேரலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவ.5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை நேரக்கூடிய ஓர் இயற்கை சீற்றந்தான் இந்த ஆழிப்பேரலை. ஆனால் இது மிகமிகக் கோரமானது. கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட 58 ஆழிப்பேரலைகளால் மட்டும் சுமார் 2,60,000 பேர் மாண்டுள்ளனர்.

8. நடப்பாண்டில் (2021) வரும் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Science, a Human Right

ஆ) Science for Global Understanding

இ) Celebrating Science Centres and Science Museums

ஈ) Building Climate-Ready Communities 

  • பொது மக்களிடையே அறிவியலின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.10 அன்று உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந்த நாள் சிறப்பித்துக் கூறுகிறது. நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருள், “Building Climate-Ready Communities” என்பதாகும்.

9. “The State of Climate Ambition” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ) UNGA

ஆ) UNDP 

இ) IMD

ஈ) WHO

  • ஐநா வளர்ச்சித்திட்டமானது (UNDP) “The State of Climate Ambition” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 93% குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், மேம்படுத்தப்பட்ட தேசிய கால நிலை உறுதிமொழிகளை சமர்ப்பித்துள்ளதாக இவ்வறிக்கை கூறியுள்ள -து. COP26 காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை தற்போதைய காலநிலை போக்குகளுக்கும் 2019ஆம் ஆண்டு NDC அறிக்கையில் செய்யப்பட்ட மதிப்பீட்டிற்கும் இடையே ஓர் ஒப்பீட்டு ஆய்வை மேற்கொள்கிறது.

10. சமுத்ராயன் முயற்சியின்கீழ், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் கலத்தின் பெயர் என்ன?

அ) ஜடாயு 6000

ஆ) சமுத்ரா 6000

இ) மத்ஸ்யா 6000 

ஈ) மேரு 6000

  • ‘மத்ஸ்யா 6000’ என்பது சமுத்ராயன் முயற்சியின்கீழ் வடிவமைக்கப்பட் -ட ஆழ்கடல் கலமாகும். 2024 டிசம்பருக்குள் தகுதிச்சோதனைகளுக்கு இக்கலம் தயாராகிவிடும். 1000 முதல் 5500 மீட்டர் ஆழத்தில் இதனால் வேலைசெய்யவியலும். பாலி-மெட்டாலிக் மாங்கனீசு முடிச்சுகள், வாயு ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள் மற்றும் கோபால்ட் மேலோடுகள் போன்ற உயிரற்ற வளங்களின் ஆய்வுகளை மேற்கொள் -வதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விவசாயப் பாதுகாப்பு செயல்திட்டம்: பருவநிலை மாநாட்டில் இந்தியா கையொப்பம்

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட உலகளாவிய விவசாயப் பாதுகாப்பு செயல்திட்ட உறுதிமொழி ஆவணத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐநா’இன் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாட்டில், விவசாயப் பாதுகாப்புக்கான செயல்திட்டம் முன்வைக்கப்பட்டது. ‘உழவை நீடித்து நிலைத்திருக்கச் செய்வதற்கும் உழவுத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வ -தற்குமான விவசாயக் கொள்கை செயல்திட்டம்’ என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட அச்செயல்திட்டத்துக்கான உறுதிமொழி ஆவணத்தில் இந்தியா உள்ளிட்ட 27 நாடுகள் கையொப்பமிட்டன.

அந்த செயல்திட்டத்தில், நாடுகள் தங்கள் விவசாயத்தை மேம்படுத்துவதோடு, அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாத வகையில் விவசாயப் பணிகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான உறுதிமொழிகள் இடம் பெற்றுள்ளன.

பிரிட்டனின் இந்திய வம்சாவளி கேபினட் அமைச்சரும், 26-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டின் தலைவருமான அலோக் சா்மா கூறுகையில், ‘புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தவும் உலகின் வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை சாத்தியமாக்கவும், வேளாண் நிலத்தை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வளத்தை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்’ என்றாா்.

இந்த செயல்திட்ட உறுதிமொழி ஆவணத்தில் இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், ஆஸ்திரேலியா, உகாண்டா, மடகாஸ்கா், தான்ஸானியா, வியத்நாம், நைஜீரியா, லாவோஸ், இந்தோனேசியா, கினியா, கானா, ஜொ்மனி, பிலிப்பின்ஸ், எத்தியோப்பியா, கொலம்பியா, கோஸ்டாரிகா, மொராக்கோ, நெதா்லாந்து, நியூஸிலாந்து, நைஜீரியா, சியரா லியோன், ஸ்பெயின், ஸ்விட்சா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் நவ.12-ஆம் தேதி வரை பருவநிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது.

2. இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் 17 மடங்கு அதிகரிப்பு

நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறன் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 17 மடங்கு அதிகரித்துள்ளதாக ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநாட்டில் இந்தியாவின் சாா்பில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சக ஆலோசகா் ஜே.ஆா். பட் கூறியதாவது:

உலகின் 17 சதவீத மக்கள் இந்தியாவில் வசிக்கிறாா்கள். இருந்தபோதும், இதுவரை இந்தியாவிலிருந்து காற்றில் கலந்துள்ள பசுமைக் குடில் வாயுக்கள் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் வெறும் 4 சதவீதம் மட்டுமே ஆகும்.

மேலும், இந்தியாவின் வருடாந்திர பசுமைக் குடில் வாயு வெளியேற்றமும் சுமாா் 5 சதவீதமாக மட்டுமே உள்ளது.

பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகரிக்காமல் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சூரிய மின் உற்பத்திக்கு நாடு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் 17 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறன் 45 ஜிகாவாட்ஸாக உள்ளது என்றாா் அவா்.

பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு உதவும் காா்பன் டைஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் பசுமைக் குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன.

அந்த வாயுக்களும் வளிமண்டலத்தில் இருக்கும் நீராவியும்தான் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி பூமியில் தாவரங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் நிலைத்திருப்பதற்கு உதவி செய்கின்றன.

அந்த வாயுக்கள் இல்லாவிட்டால் பூமியின் சராசரி வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே 18 டிகிரி செல்சியஸாக இருந்திருக்கும்.

இந்தச் சூழலில், உலகில் தொழில் புரட்சி ஏற்பட்டு தொழிற்சாலைகளும் வாகனங்களும் காா்பன் மோனாக்ஸைடு போன்ற பசுமைக் குடில் வாயுக்களை அதிக அளவில் காற்றில் கலந்து வருவதால் அவை சூரியனிடமிருந்து வெப்பத்தை அதிகம் உறிஞ்சி புவியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, புயல், வெள்ளம், அனல் காற்று போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், அண்டாா்டிகாவில் பனி மலைகள் உருகி கடலின் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் உலகின் பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ளன.

3. உலகின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்

உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து அவ்வப்போது கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோஆகிய 13 நாடுகளின் மக்களிடம் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 70 சதவீதம் பேர் அவரது தலைமையை அங்கீகரித்து ஆதரவு அளித்துள்ளனர். 24 சதவீதம் பேர் மட்டும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், இந்த ஆண்டில் இதுவரை 3 முறை கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இந்த 3 கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 66 சதவீத வாக்குகளை பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் மரியோ திராகி (58%), ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் (54%), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்மோரிசன் (47%), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (44%), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (43%), ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா (42%), தென்கொரிய அதிபர் மூன் ஜோ-இன் (41%), பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (40%), ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (37%), பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் (36%), பிரேசில் அதிபர் ஜேர்போல்சோனரோ (35%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

கடந்த கருத்துக் கணிப்புகளைவிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பின்தங்கியுள்ளனர். இந்திய பிரதமர் மோடி மட்டும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

4. எல்லைப் போராட்டமா, பெயர் மாற்றமா?

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் பெயர்மாற்றத் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகச் சமீபத்தில் அறிவித்தது திமுக அரசு. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவ.1-ம் தேதியைக் கொண்டாடுவதுதானே முறையானது என்று வாதிடுகின்றன அதிமுகவும் அமமுகவும்.

கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு

அனைத்துக் கட்சித் தலைவர்களோடு தமிழறிஞர்களையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் அழைத்து ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விசிக தலைவர் தொல் திருமாவளவன். தமிழ்நாடு தினம் மாற்றப்பட்டதை மதிமுக தலைவர் வைகோ வரவேற்றிருந்தாலும் அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை எல்லைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூரும் வகையிலேயே அமைந்துள்ளது. நவம்பர் 1-ம் தேதியை எல்லைப் போராட்ட வீரர்கள் நினைவு தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக அதிமுக அறிவித்தபோது வரவேற்ற சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அந்த நாளை திமுக அரசு ஜூலை 18-க்கு மாற்றியதையும் வரவேற்றுள்ளார். எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் நவம்பர் 1, பெயர் மாற்றத்தை நினைவுகூரும் ஜூலை 18 என்று இரண்டு நாட்களையும் கொண்டாடலாம் என்றொரு கருத்தைத் தெரிவித்துள்ளார் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன். தமிழ்நாடு பெயர் மாற்றத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அவர்களிடையே இது குறித்த கருத்தொருமிப்பு இல்லை என்று தெரிகிறது.

தமிழ்நாடு தினம் ஜூலை 18-க்கு மாற்றப்பட்டதை முழு மனதோடு ஆதரித்து நிற்பது தி.க. தலைவர் கி வீரமணி மட்டும்தான். ‘தாம் கேட்டுக்கொண்டதைச் சிந்தித்து முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருப்பதாகக்’ கூறுகிறது அவரின் அக்.30 தேதியிட்ட அறிக்கை. மதுரை சென்றிருந்த முதல்வரைத் தமிழ் ஆர்வலர்கள் சிலரும் சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தார்கள். ஆக, இது திமுக தம் விருப்பத்தின் பெயரால், தம் கட்சியின் நிறுவனரை முன்னிறுத்துவதற்காகக் கொண்டுவந்த மாற்றமல்ல; தாய்க் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, தமிழறிஞர்கள் சிலரின் கோரிக்கையைப் பரிசீலித்து எடுத்த முடிவு.

கல்குளம் துப்பாக்கிச் சூடு

1967-ல் அண்ணா தலைமையிலான திமுக அரசு ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வு. ஆனால், எந்தவொரு மாநில அரசும் தனது பெயரைத் தன்னிச்சையாக மாற்றிக்கொள்வதற்கு இந்திய அரசமைப்பில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. சட்டமன்றத் தீர்மானம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே பெயர் மாற்றம் நிகழும். அவ்வாறு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெயர்மாற்றம் நடைமுறைக்கு வந்த நாள் 1969 ஜனவரி 14.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே 1963-ல் நாடாளுமன்றத்தில் அத்தகையதொரு பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. பம்பாய் மாநிலத்தை மஹாராஷ்டிரம், குஜராத் என்று பிரித்த பிறகு, அம்மாநிலத்தின் பெயரை மஹாராஷ்டிரம் என்று மாற்றிய நிலையில், சென்னையிலிருந்து ஆந்திரம் பிரிந்த பிறகு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதுதானே முறை என்ற கேள்வியை எழுப்பினார் அவர். தமிழ்நாட்டு மக்களுக்காகப் பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் அவரது பேச்சின் இடையே குறுக்கிட்டதும் நாடாளுமன்ற விவாதங்களில் பதிவாகியுள்ளது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அண்ணா அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி சென்னை சட்டமன்றத்தில் அண்ணாவுக்கு முன்பிருந்தே பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பேசியுள்ளனர்.

இன்றைக்கு, தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான சட்டமன்றத் தீர்மானத்தை மட்டுமே முதன்மையெனக் கொள்ளும்பட்சத்தில், வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் முன்னிறுத்துபவர்கள் ஆவோம். சென்னைத் தலைநகரத்தையும் வடக்கு, தெற்கு எல்லைகளையும் காத்து நின்ற தலைவர்கள் பலரையும் நாம் நினைவுகூரத் தவறியவர் ஆகிவிடுவோம்.

ஆந்திரம் தவிர்த்த சென்னை மாநிலத்துக்குச் சென்னையே தலைநகராக இருக்க வேண்டும் என்று போராடியவர் மபொ சிவஞானம். அதற்கு ஆதரவாக அன்றைய முதல்வர் ராஜாஜியும் உறுதியாக நின்றார். ஆந்திரம் பிரிக்கப்பட்டபோது திருத்தணியை மீட்கக் காரணமாக அமைந்ததும் ம.பொ.சி. முன்னெடுத்த போராட்டங்கள்தான். திமுகவும் அவரோடு களத்தில் கைகோத்து நின்றது. அதைப்போலவே, தெற்கே திருவிதாங்கூருடன் சேர்ந்திருந்த தமிழ் பேசும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டம் 1954-ல் தீவிரமடைந்தது. அதிலும் திமுக பங்கேற்றது. தெற்கெல்லைப் போராட்டத்தை பிஎஸ் மணியும் மார்ஷல் நேசமணியும் வழிநடத்தினார் -கள். அப்போது, கல்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 10’க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்

ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத் திட்டத்தை 1956-ல் திமுக மட்டுமே எதிர்க்கவில்லை. தமிழரசுக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து எதிர்த்தன. அப்போதே தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை ஒரே குரலில் முன்வைத்தன. தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கும்தோறும் தியாகி சங்கரலிங்கனாரை நினைவுகூர வேண்டும். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளுக்காக, 1956 ஜூலை 27-ல் விருதுநகர் குளக்கரை மேட்டில் தனது 61-வது வயதில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அவர். கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் கமிட்டி அவரைத் தேசபந்து மைதானத்துக்கு அழைத்துவந்தது. அண்ணாவும் மபொசி’உம் அந்தத் தியாகியைச் சந்தித்து, அவரது போராட்டத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரலிங்கனார் அங்கேயே இறந்தார். அவரையடுத்து தமிழ்நாடு பெயர் மாற்ற முழக்கத்தை ம.பொ.சி. இன்னும் தீவிரப்படுத்தினார். அண்ணா அந்த விருப்பத்தைத் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினார்.

சென்னையைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்று 1952-ல் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவை ஆந்திரம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக 76 நாட்கள் பட்டினி கிடந்து, உயிர்துறந்த சங்கரலிங்கனாரை நாம் மறந்துவிட்டோம். எத்தனை உயிரிழப்புகள்… எத்தனை கைதுகள்… எத்தனை தடியடிகள்… அந்த நீண்ட நெடிய போராட்டத்தின் உச்சம்தான் தமிழ்நாடு எனும் பெயர் மாற்றம். இதை நடைமுறை சாத்தியமாக ஆக்கியது அண்ணாதான் என்பது வரலாறு.

5. 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய நேயர்களுக்காக ஒலிபரப்பை மீண்டும் தொடங்கும் கொழும்பு வானொலி

13 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலி கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீனதமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா,ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின.

இருப்பினும் முதன் முதலில் தமிழ் வானொலி ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் ஆகும். 1925-ல் ‘சிலோன் ரேடியோ’ என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனத்துக்குத்தான் உலகின் 2-வது வானொலி நிலையம் என்றபெருமையும் உண்டு. பிபிசி வானொலி 1922-ல் லண்டனில் நிறுவப்பட்டது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாப னம் தனது வர்த்தக சேவை பிரிவை 30.9.1950-ல் தொடங்கியதும் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலை உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஆகியோர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பை முதலில் செவிமடுத்தார்கள்.

பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, அன்றும் இன்றும், புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் உருவாக்கிக் கொண்டது.

மேலும் அதில் பணியாற்றிய ஒலிபரப்பாளர்கள் எஸ்.பி.மயில்வாகனன், கே.எஸ். ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருக்கு தமிழகத்தின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையைவிட நேயர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தனர்.

இன்றளவும் உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ், சிங்களம், ஆங்கிலப் பாடல்களின் இசைத் தட்டுக்களைக் கொண்டே ஒரே வானொலி நிலையம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் மட்டுமே.

இலங்கை உள்நாட்டுப் போரினால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தனது இந்திய நேயர்களுக்கான கொழும்பு சர்வதேச ஒலிபரப்பை கடந்த 31.5.2008 அன்று நிறுத்திக் கொண்டது. மேலும் தமிழகத்தில் பண்பலை வானொலி நிலையங்கள் பரவலாக தொடங்கப்பட்ட பிறகும்கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு தமிழகத்தில் தவழாதா என்ற ஏக்கம் பல்வேறு நேயர்களுக்கு இருந்து வருகிறது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய கடற்கரை மாவட்டத்தில் உள்ள வானொலி நேயர்கள் இலங்கை ஒலிபரப்பிய சக்தி, தென்றல் போன்ற பண்பலைகளை தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஒலிபரப்பை மீண்டும் தொடங்கஇலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான தீர்மானம் தீபாவளி அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகவலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச் சேவைகளின் பொறுப்பாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் உறுதி செய்துள்ளார்.

6. ஒரு கோடி சைகோவ்-டி தடுப்பூசிக்கு ஒப்பந்தம்:

நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சைடஸ் கெடிலா நிறுவனம் உருவாக்கி உள்ள ஊசி முறை அல்லாத சைகோவ்-டி தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடிடோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. உலகின் முதல் டி என் ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சைகோவ்-டி 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் செலுத்த தகுதியான தடுப்பூசி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று தவணையாக செலுத்தப்படும் இத்தடுப்பூசிக்கு ஒப்பதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்ட நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சைடஸ் கெடிலா தொடங்கி உள்ளது. தற்போது மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற அளவில் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. உற்பத்தி திறன் அடிப்படையில் இளைஞர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தசைகோவ்-டி தடுப்பூசி வரி உட்பட ரூ.358க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியை, அவசர கால அடிப்படையில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் 2 வயது முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு வழங்கலாம் என கரோனா சிறப்பு நிபுணர் குழு ஒப்பதல் அளித்துள்ளது.

7. மகாராஷ்டிரத்தில் நான்கு வழிச்சாலை மேம்பாடு: பிரதமா் இன்று அடிக்கல்

மகாராஷ்டிர மாநிலத்தில் வைணவ துறவிகள் ஞானேஷ்வா், துகாராம் ஆகியோரது நினைவிடங்களுக்கு யாத்திரை செல்வதற்கு உதவும் நான்குவழிச் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா்.

தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் நினைவிடங்களுக்கு பக்தா்கள் யாத்திரை செல்வதற்கான பிரத்யேக நடைபாதைகள் கட்டப்படவுள்ளன.

இதுதவிர, பண்டா்பூருக்குப் போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதற்கான பலமுனை சாலைத் திட்டங்களையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிப்பாா்

பண்டா்பூருக்கு வரும் பக்தா்களுக்கு வசதி செய்யும் முயற்சியாக துறவி ஞானேஷ்வா் நினைவிடத்தின் (என் எச் 965) ஐந்து பிரிவுகளில் நான்குவழிச் சாலைக்கும், துறவி துகாராம் நினைவிடத்தின் (என் எச் 965ஜி) மூன்று பிரிவுகளுக்கும் காணொலி முறையில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா்.

221 கிலோமீட்டா் மற்றும் 130 கிலோ மீட்டா் தொலைவுக்கு முறையே ரூ.6,690 கோடி, ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் பிரத்யேக நடைபாதைகளுடன் நான்குவழிச் சாலை அமைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின்போது, பண்டா்பூருக்கு போக்குவரத்துத் தொடா்பை அதிகரிப்பதற்காக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் ரூ.1,180 கோடிக்கும் கூடுதல் மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ள 223 கிலோ மீட்டருக்கும் அதிகமான, மேம்படுத்தப்பட்ட சாலைத் திட்டங்களையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிப்பாா்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாா்கள்.

8. பில்லி ஜீன் கிங் கோப்பை: ரஷியா சாம்பியன்

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சா்லாந்தை வீழ்த்தி ரஷியா முதல் முறையாக சாம்பியன் ஆனது. அணிகள் போட்டியில் ரஷியா சாம்பியன் ஆவது இது 5-ஆவது முறையாகும்.

அணியாக நடைபெறும் இந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் டரியா கசாட்கினா 6-2, 6-4 என்ற செட்களில் ஸ்விட்சா்லாந்தின் ஜில் டெய்ச்மானை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் லுட்மிலா சாம்சனோவா 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்விட்சா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா்.

இதனிடையே, பென்சிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் விதிகளை மீறிய வகையில் கடைசி நேரத்தில் பாவ்லியுசென்கோவாவுக்குப் பதிலாக சாம்சனோவாவை ரஷியா களமிறக்கியதாக ஸ்விட்சா்லாந்து குற்றம்சாட்டியுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு 15 நிமிஷங்களுக்கு முன்புதான் போட்டியாளா் மாற்றப்பட்டு தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக அந்த அணி கூறியுள்ளது.

எனினும், முதலில் முழங்கால் அசௌகா்யத்தால் அவதிப்பட்டதாலேயே பாவ்லியுசென்கோவாவை ஆட்டத்திலிருந்து விலக்கி சாம்சனோவாவை ஆடச் செய்ததாக ரஷிய தரப்பு விளக்கமளித்துள்ளது.

1. Which organisation released a report titled ‘Sustainable Urban Cooling Handbook’?

A) UNEP 

B) FAO

C) NITI Aayog

D) NABARD

  • United Nations Environment Programme (UNEP) released a new report titled ‘Sustainable Urban Cooling Handbook’. As per the report, cities will be the hotspots as global warming continues uncontrolled. Overheated cities will face climate change costs. The report is based on an analysis of the world’s 1692 largest cities.

2. As of November 2021, how many countries are part of the Powering Past Coal Alliance (PPCA)?

A) 8

B) 18

C) 48 

D) 88

  • Powering Past Coal Alliance (PPCA) is an international alliance dedicated to phasing out coal. 28 countries have recently joined the alliance at the COP summit. This addition brings the total number of national governments involved to 48.
  • The new members of PPCA include Ukraine, Poland and Singapore However, China, India and the United States, the three biggest burners of coal worldwide, have not joined the PPCA.

3. Inti tanager (Heliothraupis oneilli), a recently discovered species is a?

A) Bird 

B) Fish

C) Snake

D) Spider

  • The newly–discovered species, named the Inti tanager (Heliothraupis oneilli), belong to the large family of Thraupidae which includes more than 370 songbird species. The birds are restricted almost entirely to the American tropics. This particular bird inhabits the Yungas bioregion of Bolivia and Peru.

4. Which organisation has launched a smart anti–airfield weapon, along with Indian Air Force (IAF)?

A) ISRO

B) DRDO 

C) BHEL

D) HAL

  • The Defence Research and Development Organisation (DRDO) and Indian Air Force (IAF) have jointly carried out two flight tests of the indigenously–developed smart anti–airfield weapon.
  • The weapon was launched by an IAF aircraft from Chandan ranges at Jaisalmer, Rajasthan, as per Defence Ministry statement. The system is designed for a maximum range of 100 kilometres and in both the tests, the intended target was hit with high accuracy.

5. What is the theme of 2021 edition of World Cities Day?

A) Designed to Live Together

B) Adapting Cities for Climate Resilience 

C) Changing the world

D) Promoting a better urban future

  • The United Nations’ World Cities Day is observed on November 31 to promote the international community’s interest in global urbanization, push forward cooperation among countries in meeting opportunities and addressing challenges of urbanization, and contributing to sustainable urban development around the world.
  • This year, in 2021, the UN has selected “Adapting Cities for Climate Resilience” as the theme. The general theme of World Cities Day is ‘Better City, Better Life’.

6. On which date, the 2021 edition of World Thrift Day is observed in India?

A) November 30 

B) November 31

C) November 01

D) November 02

  • World Thrift Day is observed on 30 November every year in India and in worldwide it is observed on 31st November. This day is devoted to the promotion of savings all over the world.

7. On which date, World Tsunami Awareness Day is observed?

A) November 02

B) November 03

C) November 04

D) November 05 

  • The World Tsunami Awareness Day is observed every year on Nov.5 to raise awareness about precautionary measures against tsunami and share innovative approaches to risk reduction.
  • Tsunamis are rare events, but can be extremely deadly. In the past 100 years, 58 tsunamis have claimed more than 260,000 lives, which is the highest number of deaths than in any other natural hazard.

8. What is the theme of 2021 edition of World Science Day for Peace and Development?

A) Science, a Human Right

B) Science for Global Understanding

C) Celebrating Science Centres and Science Museums

D) Building Climate–Ready Communities 

  • The World Science Day for Peace and Development is observed every year on 10th of November to highlight the significant role of science in society and the need to engage the wider public in debates on emerging scientific issues. It also underlines the importance and relevance of science in our daily lives. The theme for 2021 is “Building Climate–Ready Communities”.

9. “The State of Climate Ambition” is a report released by which organization?

A) UNGA

B) UNDP 

C) IMD

D) WHO

  • The United Nations Development Progrmme (UNDP) has released a report titled “The State of Climate Ambition”, which has observed that close to 93% of Least developed countries have submitted enhanced national climate pledges.
  • The report is released ahead of the COP26 climate negotiations. The report makes a comparative study between the current climate trends and the assessment made in the 2019 NDC Global Outlook report.

10. What is the name of the deep–sea vehicle being designed in India, under the Samudrayan initiative?

A) Jadayu 6000

B) Samudra 6000

C) Matsya 6000 

D) Meru 6000

  • The Matsya 6000 is the deep–sea vehicle being designed under the Samudrayan initiative. The vehicle will be ready for qualification trials by December 2024. The vehicle could work at a depth between 1000 and 5500 mts. The technology would help in carrying out deep ocean exploration of non–living resources like poly–metallic manganese nodules, gas hydrates, hydro–thermal sulphides and cobalt crusts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!