TnpscTnpsc Current Affairs

8th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

8th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 8th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, 103ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது யாது?

அ. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து

ஆ. தேசிய மகளிர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து

இ. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத ஒதுக்கீடு

ஈ. சரக்கு மற்றும் சேவை வரி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத ஒதுக்கீடு

  • 103ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம், 2019இன்மூலம் சேர்க்கை மற்றும் அரசுப்பணிகளில் EWS இடஒதுக்கீட் –டிற்கான விதியை நடுவணரசு அறிமுகப்படுத்தியது. இத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்தது. தலைமை நீதிபதி உதை உமேஷ் லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 3:2 என்ற பிரிவின் தீர்ப்பில் EWSக்கான 10 சதவீத ஒதுக்கீட்டை உறுதிசெய்தது. தலைமை நீதிபதி திருத்தத்தை இரத்துசெய்தாலும், பெரும்பான்மை அமர்வு அச்சட்டத்தை உறுதி செய்தது.

2. ‘ஃபோர்ப்ஸின்’ உலகின் சிறந்த பணி வழங்குவோர் தரவரிசை – 2022இல் முதல் நூறு இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய நிறுவனம் எது?

அ. TATA கன்சல்டன்சி சர்வீசஸ்

ஆ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இ. ஆதித்யா பிர்லா குழுமம்

ஈ. HDFC வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  • ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனத்தின் உலகின் சிறந்த பணி வழங்குவோர் தரவரிசை – 2022இன்படி, ரிலையன்ஸ் தொழிற் துறைகள் இந்தியாவின் சிறந்த பணி வழங்குவோராகவும் உலகின் 20ஆவது சிறந்த பணி வழங்குவோராகவும் உள்ளது. வருவாய், லாபம் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்தியாவிலிருந்து முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். உலகளாவிய தரவரிசையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் முதலிடத்திலும், அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஐபிஎம், ஆல்பாபெட் மற்றும் ஆப்பிள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

3. UNFCCC–க்கான உறுப்புநாடுகளின் 27ஆவது மாநாட்டை (COP) நடத்துகிற நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. எகிப்து

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரேசில்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. எகிப்து

  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பிற்கான உறுப்புநாடுகளின் 27ஆவது மாநாடு (COP), 2022 நவம்பரில் எகிப்தின் ஷர்ம் எல்–ஷேக்கில் நடைபெறுகிறது. பல்லாண்டுகால விவாதத்திற்குப் பிறகு, ‘இழப்பு மற்றும் சேதம் குறித்த பிரச்சினை’ முதன்முறையாக காலநிலை மாநாட்டின் முறையான பிரதான விவாதத்தில் சேர்க்கப்பட்டது. பருவநிலை பேரிடர்களால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சர்வதேச பொறிமுறையை உருவாக்குவது குறித்து விவாதிக்க இது வழிவகுக்கும்.

4. யாரின் பிறந்தநாளில், ‘ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்’ அனுசரிக்கப்படுகிறது?

அ. B R அம்பேத்கர்

ஆ. பிர்சா முண்டா

இ. சர்தார் வல்லபாய் படேல்

ஈ. ஐயன் காளி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பிர்சா முண்டா

  • நடுவண் கல்வி மற்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் தலைமையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், திறன்மேம்பாடு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ‘பழங்குடியினர் கௌரவ தின’ (ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்) விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவுள்ளது. கடந்த ஆண்டு, அரசு நவ.15ஐ பழங்குடியினர் கௌரவ நாள் என்று அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகத்தினரால் பகவான் என்று போற்றப்படும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நவ.15 ஆகும்.
  • பிர்சா முண்டா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் நாட்டின் மதிப்பிற்குரிய பழங்குடியினத் தலைவர் ஆவார். அவர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசின் சுரண்டல் முறைக்கு எதிராக துணிச்சலாகப் போராடியதால், வாழ்நாள் புகழ்பெற்ற நபராக ஆனார். அவர் பெரும்பாலும், ‘பகவான்’ என்றே குறிப்பிடப்பட்டார்.

5. 2022இல் உலகளாவிய காலநிலை அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNEP

ஆ. WMO

இ. FAO

ஈ. UNFCCC

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. WMO

  • உலக வானிலை அமைப்பானது ‘2022இல் உலகளாவிய காலநிலையின் தற்காலிக நிலையை’ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, பைங்குடில் வாயுக்களின் செறிவு மற்றும் திரட்டப்பட்ட வெப்பம் ஆகியவற்றால் கடந்த எட்டு ஆண்டுகள் மிகுந்த வெப்பம் மிகுந்த ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன. தீவிர வெப்ப அலைகள், வறட்சி மற்றும் பேரழிவுதரும் வெள்ளம் ஆகியவை இந்த ஆண்டு லட்சக் கணக்கானோரை பாதித்துள்ளது மற்றும் அது கோடி மதிப்புடைய பொருட் சேதத்திற்கும் காரணமாக அமைந்துள்ளதாக இந்த அறிக்கை சிறப்பித்துக் கூறியுள்ளது.

6. 2023 – AFC ஆசிய கோப்பையை நடத்துகிற நாடு எது?

அ. உக்ரைன்

ஆ. சிரியா

இ. ஈரான்

ஈ. கத்தார்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. கத்தார்

  • 2023 – AFC ஆசிய கோப்பையானது அப்போட்டியின் 18ஆவது பதிப்பாகும். இது ஆசிய கால்பந்து கூட்டமைப்பால் நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற ஆசியாவின் சர்வதேச ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும். இது கத்தாரில் ஜூன் 16 முதல் ஜூலை 16, 2023 வரை நடைபெறும். 2019ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்தப் போட்டி, 24 தேசிய அணிகள் பங்கேற்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது இந்தப் போட்டியை நடத்தும் கத்தார் நடப்பு சாம்பியனாக உள்ளது.

7. அண்மையில் நடைபெற்ற முதல் தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி – 2022 நடைபெற்ற நகரம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. புது தில்லி

இ. ஜெய்சால்மர்

ஈ. உதய்பூர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • நிலக்கரி சுரங்க ஏலம் மற்றும் முன்கூட்டிய உற்பத்தியில் தனியார் துறையுடன் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியிட நடுவண் நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். புது தில்லியில் நடந்த தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி 2022இல் உரையாற்றிய அமைச்சர், முன்னெப்போதும் இல்லாத வகையில், சர்வதேச ரீதியில் விலை உயர்ந்துபோதும், உள்நாட்டு நிலக்கரி விலையை இந்திய நிலக்கரி நிறுவனம் உயர்த்தவில்லை என்றார். மேலும், அண்மைக் காலத்தில் நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரித்ததால், அனல்மின் நிலையங்கள் எதிர்கொண்ட நிலக்கரி பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.
  • “இந்திய நிலக்கரித்துறை–தற்சார்பு இந்தியாவை நோக்கிய நீடிக்கவல்ல சுரங்கப்பணி” என்ற மையப்பொருளுடன் முதன்முறையாக இந்தத் தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி 2022–க்கு நிலக்கரி அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய தேசிய உலக சுரங்கங்கள் பேரமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

8. நெல் வைக்கோல் விரைவாக சிதைவதற்காக சமீபத்தில் உருவாக்கப்பட்ட பூஞ்சை இனங்களின் நுண்ணுயிர் கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன?

அ. பூசா டீகம்போசர்

ஆ. பூசா டீகம்

இ. பூசா கிளின்ஸ்ட்ரா

ஈ. பூசா DPS

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பூசா டீகம்போசர்

  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமானது, நெல் வைக்கோலை விரைவாக சிதைப்பதற்காக பூசா வகைகளின் நுண்ணுயிர் கூட்டமைப்பான பூசா டிகம்போசரை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டமைப்பைப் பயன்படுத்துவதால் வயலில் நெல் வைக்கோல் சிதைவு செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது. 2021ஆம் ஆண்டில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் தில்லியின் NCT ஆகியன சுமார் 5.7 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் டீகம்போசரைப் பயன்படுத்தின. செயற்கைக்கோள் படமாக்கல் மற்றும் கண்காணிப்புமூலம் கண்டறியப்பட்டபோது, டீகம்போசர் பயன்படுத்தப்பட்ட 92% பரப்பளவு களத்திலிருந்த வைக்கோல் எரிக்கப்படாமலிருந்தது.

9. “Unite for Universal Hand Hygiene” என்பது கீழ்க்காணும் எந்தச் சர்வதேச நாளுக்கானக் கருப்பொருளாகும்?

அ. உலகளாவிய கை கழுவுதல் நாள்

ஆ. உலகளாவிய சுகாதார நாள்

இ. உலகளாவிய COVID வெளிப்பட்ட நாள்

ஈ. உலகளாவிய மாதவிடாய் சுகாதார நாள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. உலகளாவிய கை கழுவுதல் நாள்

  • உலகம் முழுவதும் அக்.15 அன்று உலகளாவிய கை கழுவும் நாளாகக் குறிக்கப்படுகிறது. நோய்களைத் தடுப்பதற்கு பயனுள்ள மற்றும் மலிவான வழியாக சோப்புகொண்டு கைகழுவுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Unite for Universal Hand Hygiene” என்பது இந்த ஆண்டு (2022) வரும் உலகளாவிய கைகழுவும் நாளுக்கானக் கருப்பொருளாகும். உலகளாவிய கைகழுவும் கூட்டாண்மைமூலம் இந்த நாள் நிறுவப்பட்டது.

10. ‘வேளாண் ஸ்டார்ட்அப் மாநாட்டை’ நடத்தும் மாநிலம்/யூடி எது?

அ. கர்நாடகா

ஆ. புது தில்லி

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. உத்தர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • புது தில்லியில் நடைபெற்ற வேளாண் ஸ்டார்ட்அப் மாநாட்டில் நடுவண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல்வேறு முனைவுகளை அறிவித்தார். வணிகமயமாக்கல் மற்றும் புதுமைகளை மக்கள்மயப்படுத்துவதற்காக வேளாண் துறையில் பணியாற்றும் துளிர் நிறுவல்களுக்கென `500 கோடி மதிப்பிலான முடுக்கி திட்டம் உருவாக்கப்படும் என அவர் அப்போது அறிவித்தார். வேளாண் துளிர் நிறுவல்களுக்கு ஆதரவளிப்பதற்காக வேளாண் அமைச்சகத்தின் கீழ் ஒரு வலையமைப்பு நிறுவப்படும் என்றும், ஒட்டுமொத்த திட்டமிடலுக்காக வேளாண் அமைச்சர் தலைமையில் ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 10% இடஒதுக்கீடு செல்லும்

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு (EWS) கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அமர்வில் இடம்பெற்றிருந்த ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் 10% இடஒதுக்கீடு செல்லும் என்றும், மற்ற இருவர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீர்ப்பளித்தனர். பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு அரசுக் கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 10% இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு 2019-ஆம் ஆண்டில் இயற்றியது. அதன் காரணமாக ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைக் கடந்தது.

இது இந்திரா சகானி வழக்கில் (மண்டல் வழக்கு) உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை மீறும் வகையில் உள்ளதால், நடுவணரசின் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் சார்பில் மாநில உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மொத்தம் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நடுவணரசின் கோரிக்கையை ஏற்று அந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. சமூக-கல்வி ரீதியில் பின்தங்கியுள்ளோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரச் சூழலை அடிப்படையாகக் கொண்டு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு மனுக்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மனுக்களை தலைமை நீதிபதி யு யு லலித் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு செப்.13ஆம் தேதி முதல் விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு செப்டம்பர்.27-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இடஒதுக்கீடு செல்லும்: வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா எம் திரிவேதி, ஜெ பி பர்திவாலா ஆகியோர் EWS பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் எனத் தீரப்பளித்தனர்.

அதேவேளையில், தலைமை நீதிபதி யு யு லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீடானது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது எனத் தீர்ப்பளித்தனர். மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததால், இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது.

2. பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் `40,991 கோடி: நடுவண் நிதியமைச்சர்

இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் `40,991 கோடியாக அதிகரித்து உள்ளது என்று நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 50% உயர்ந்து `25,685 கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்த வங்கிகளின் நிகர லாபம் 31.6% உயர்ந்து `40,991 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பாரத வங்கியின் லாபம் 74% உயர்ந்து `13,265 கோடியாக உள்ளது.

கனரா வங்கியின் லாபம் 89% உயர்ந்து `2,525 கோடியாகவும், யூகோ வங்கியின் லாபம் 145% உயர்ந்து ரூ.504 கோடியாகவும் உள்ளது. பரோடா வங்கியின் லாபம் 58.7% உயர்ந்து `3,312.42 கோடியை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

3. ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டது

ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இலச்சினை மற்றும் கருப்பொருளின் விளக்கம் இந்திய தேசியக்கொடியில் இடம் பெற்றுள்ள நிறங்களான ஆரஞ்சு, வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களிலிருந்து ஜி-20 இலச்சினை வரையப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் கூடிய புவிச்சின்னம் சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “பாரத்” என்ற சொல் தேவநாகிரி முறையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருள் – வசுதைவக் குடும்பகம் அல்லது ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் – என்பது மகா உபநிஷத்தின் பழமையான சமற்கிருத உரையிலிருந்து எடுக்கப்பட்டது. ஜி-20 இணையதளம் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான இணையதளமான www.g20.in பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. டிசம்பர் 1, 2022 அன்று ஜி-20 தலைமைத்துவதற்திற்கான இணையதளம் www.g20.org என்று மாறியுள்ளது. இதில் ஜி-20 குறித்த தகவல்கள், சரக்குப் போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றிய தகவல்களும் இடம் பெறும். ஜி-20 செயலி இணையதளத்துடன் ‘ஜி-20 இந்தியா’ என்ற திறன்பேசி செயலியும் வெளியிடப்பட்டது.

8th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What was introduced in the 103rd Constitutional Amendment, which was seen in the news recently?

A. Constitutional status to the National Commission for Backward Classes (NCBC)

B. Constitutional status to the National Commission for Women (NCW)

C. 10 percent quota for Economically weaker sections (EWS)

D. Goods and Services Tax

Answer & Explanation

Answer: C. 10 percent quota for Economically weaker sections (EWS)

  • The Central Government introduced the provision for EWS reservation in admissions and public services, through the 103rd Constitutional Amendment Act, 2019. The Supreme Court pronounced the judgement on a batch of pleas challenging the validity of the amendment. A five–judge Constitution bench headed by Chief Justice Uday Umesh Lalit upheld the 10 percent quota for EWS in a 3:2 split verdict. Though the Chief Justice had struck down the amendment, the majority bench upheld the act.

2. Which is the only Indian company in the top–100 rank of ‘Forbes’ World’s Best Employers rankings 2022’?

A. Tata Consultancy Services

B. Reliance Industries

C. Aditya Birla Group

D. HDFC Bank

Answer & Explanation

Answer: B. Reliance Industries

  • As per the ‘Forbes’ World’s Best Employers rankings 2022’, Reliance Industries is India’s best employer and the world’s 20th best firm to work with. It is the country’s largest company by revenues, profits and market value. Reliance is the only country in the top–100 rank from India. The global ranking was topped by South Korean giant Samsung Electronics, followed by US giants Microsoft, IBM, Alphabet and Apple.

3. Which country is the host of the 27th Conference of the Parties (COP) to the UNFCCC?

A. UAE

B. Egypt

C. Australia

D. Brazil

Answer & Explanation

Answer: B. Egypt

  • The 27th Conference of the Parties to the United Nations Framework Convention on Climate Change, is being held in Sharm el–Sheikh, Egypt in November 2022. After several years of discussion, the ‘Issue of loss and damage” was included in the formal main agenda of the climate conference for the first time ever. It will pave way to discuss creation of an international mechanism for compensating poor countries that suffer due to climate disasters.

4. ‘Janjatiya Gaurav Diwas’ is observed on the birth anniversary of which leader?

A. B R Ambedkar

B. Birsa Munda

C. Sardar Vallabhbhai Patel

D. Ayyan Kaali

Answer & Explanation

Answer: B. Birsa Munda

  • In 2021, the Union government had declared 15th November as Janjatiya Gaurav Divas dedicated to the memory of brave tribal freedom fighters. November 15 is the birth anniversary of Birsa Munda, an iconic freedom fighter, social reformer and revered tribal leader of the country. Education Ministry will celebrate Janjatiya Gaurav Diwas in schools and higher educational institutions across the country.

5. Which organisation released the ‘State of the Global Climate in 2022’ report?

A. UNEP

B. WMO

C. FAO

D. UNFCCC

Answer & Explanation

Answer: B. WMO

  • The World Meteorological Organization released the provisional State of the Global Climate in 2022 report. As per the report, the past eight years are on track to be the eight warmest on record, fuelled by rising greenhouse gas concentrations and accumulated heat. It also cited that extreme heat–waves, drought and devastating flooding have affected millions and cost billions this year.

6. Which country is host to the 2023 AFC Asian Cup?

A. Ukraine

B. Syria

C. Iran

D. Qatar

Answer & Explanation

Answer: D. Qatar

  • 2023 AFC Asian Cup will be the 18th edition of the AFC Asian Cup, the quadrennial international men’s football championship of Asia organised by the Asian Football Confederation (AFC). It will be held in Qatar from 16 June to 16 July 2023. The tournament will involve 24 national teams after expansion in 2019. Hosts Qatar are the defending champions.

7. Which city was host to the first ever National Coal Conclave & Exhibition – 2022 held recently?

A. Jaipur

B. New Delhi

C. Jaisalmer

D. Udaipur

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Union Minister of Coal, Mines and Parliamentary Affaris Shri Pralhad Joshi urged the public sector undertakings (PSUs) to compete with the private sector in coal mine auction and early production. Addressing the National Coal Conclave & Exhibition–2022, the minister pointed out that despite unprecedented increase in international prices, Coal India Ltd (CIL) did not increase domestic coal price and stepped–up coal proudction substantially in the recent past and managed to overcome coal shortage faced by thermal power plants.

8. What name has been given to the recently developed microbial consortium of fungal species for rapid decomposition of paddy straw?

A. Pusa Decomposer

B. Pusa Decom

C. Pusa Cleanstraw

D. Pusa DPS

Answer & Explanation

Answer: A. Pusa Decomposer

  • Indian Council of Agricultural Research has developed Pusa Decomposer, a microbial consortium of fungal species for rapid decomposition of paddy straw. Use of this consortium accelerates process of paddy straw decomposition in the field itself. In the year 2021, the decomposer has been used by the States of Punjab, Haryana, Uttar Pradesh and NCT of Delhi in an around 5.7 lakh hectare area and through satellite imaging and monitoring, it was observed that 92% area of the decomposer spread plots was not burnt.

9. ‘Unite for Universal Hand Hygiene’ is the theme of which international day?

A. Global Handwashing Day

B. Global Hygiene Day

C. Global COVID Outbreak Day

D. Global Menstrual Health Day

Answer & Explanation

Answer: A. Global Handwashing Day

  • October 15 is marked as Global Handwashing Day across the world. It aims to increase awareness and understanding about the importance of handwashing with soap as an effective and affordable way to prevent diseases. This year’s theme is ‘Unite for Universal Hand Hygiene’. The day was founded by the Global Handwashing Partnership, a coalition of international stakeholders who work to promote handwashing with soap.

10. Which state/UT is the host of ‘Agri Startup Conference’?

A. Karnataka

B. New Delhi

C. Andhra Pradesh

D. Uttar Pradesh

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Union Minister Narendra Singh Tomar announced number of initiatives at Agri Startup Conference in New Delhi. He announced creating fund of Rs 500 crore as accelerator program for Startups working in agriculture sector, for commercialisation and democratisation of innovations. He also announced that a network will be set up under the Agriculture Ministry to support the Agri Startups and a steering committee will be set under the Chairmanship of Agriculture Minister for overall planning.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!