TnpscTnpsc Current Affairs

9th & 10th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th & 10th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th & 10th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மிஷன் வாத்சல்யா’ என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 

ஆ. கல்வி அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10ஆம் ஆண்டு முதல், நடுவண் நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
  • இந்தத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அவ்வமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதிகள், மிஷன் வாத்சல்யா திட்ட ஒப்புதல் வாரியம்மூலம் அங்கீகரிக்கப்படும்; இது, WCD செயலாளர் தலைமையில் இருக்கும்; அவர் ஆண்டுத்திட்டங்கள் மற்றும் மானியங்களை வெளியிடுவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட நிதி முன்மொழிவுகளுக்கு ஒப்புதலளிப்பார்.

2. $300 மில்லியன் டாலர் மதிப்பிலான உலக வங்கி நிதியுதவி அளிக்கும் பள்ளிக்கல்வித்திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற மாநிலம் எது?

அ. சத்தீஸ்கர் 

ஆ. ஒடிஸா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திரப் பிரதேசம்

  • சத்தீஸ்கர் மாநில அரசானது $300 மில்லியன் டாலர் மதிப்பிலான பள்ளிக்கல்வித்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியாக ஒப்புதல் பெற்றுள்ளது. நடுவண் நிதியமைச்சகத்தின்கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய இந்தத்திட்டத்திற்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.

3. ‘தொட்டுணரவியலா கலாச்சார பாரம்பரியத்தைகக் காப்பதற்கான மாநாட்டுடன்’ தொடர்புடைய நிறுவனம் எது?

அ. UNICEF

ஆ. UNESCO 

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம்

  • 2022-2026 சுற்றுக்கான, தொட்டுணரவியலா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான UNESCOஇன் 2003 மாநாட்டின் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கு இந்தியா தேர்வாகியுள்ளது. இந்தியா ஏற்கனவே 2006 முதல் 2010 வரை மற்றும் 2014 முதல் 2018 வரை என இருமுறை அந்தக்குழுமத்தில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது. இந்தியா UNESCOஇன் 2 குழுக்களின் ஒருபகுதியாக இருக்கும். அவை தொட்டுணரவியலா கலாச்சார பாரம்பரியம் (2022-2026) மற்றும் உலக பாரம்பரியம் (2021-2025).

4. பியூஷ் கோயலுக்குப் பிறகு G20க்கான இந்தியாவின் புதிய ஷெர்பாவாக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. நிர்மலா சீதாராமன்

ஆ. இராகேஷ் சர்மா

இ. அமிதாப் காந்த்

 ஈ. பரமேஸ்வரன்

  • முன்னாள் NITI ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், வணிகம் மற்றும் தொழிற்துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பியூஷ் கோயலுக்குப் பதிலாக, G20-க்கான இந்தியாவின் புதிய ஷெர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 டிச.1 முதல் 2023 நவ.30 வரை G20 தலைவர் பதவியை இந்தியா ஏற்க உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் ஷெர்பா கலந்துகொள்வார்.

5. உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்திய அரசின் அனைத்து டிஜிட்டல் திட்டங்களின் ஒரே களஞ்சியத்தின் பெயர் என்ன?

அ. விஷ்வா. பாரத் ஸ்டேக்

ஆ. இந்தியாஸ்டேக். குளோபல் 

இ. குளோபல் தேசி ஸ்டேக்

ஈ. லோக்கல் டூ குளோபல் ஸ்டேக்

  • நடந்துகொண்டிருக்கும் 2022 – டிஜிட்டல் இந்தியா வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியா ஸ்டேக் நாலெட்ஜ் எக்ஸ்சேஞ்சில் ஒரு மெய்நிகர் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. ‘Indiastack.global’ என்பது பிரதமரால் தொடங்கப்பட்டது; இது இந்திய அரசின் அனைத்து முக்கிய திட்டங்களின் ஒரே களஞ்சியமாகும். ஆதார், டிஜிலாக்கர், கோவின் பிளாட்ஃபார்ம், அரசு இ-மார்க்கெட்ப்ளேஸ் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் மிஷன் உள்ளிட்ட பல மின்னாளுகைக் கருவிகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்திய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

6. செயலாண்மைத்திறத்தில் உள்ள பெண்களுக்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.23

ஆ. ஜூன்.24 

இ. ஜூன்.25

ஈ. ஜூன்.26

  • ஐநா பொதுச் சபையானது ஜூன்.24ஆம் தேதியைச் செயலாண்மைத்திறத்தில் உள்ள பெண்களுக்கான உலக தினமாக (International Day of Women in Diplomacy) அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. செயலாண்மைத் திறத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்களின் முழு மற்றும் சமமான பங்களிப்பை ஊக்குவிப்பதே இந்தச் சிறப்பு நாளின் நோக்கமாகும்.

7. சீனாவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட PNS தைமூர் என்பது என்ன?

அ. வணிகக்கப்பல்

ஆ. போர்க்கப்பல் 

இ. தாக்கியழிக்குங்கப்பல்

ஈ. விமானந்தாங்கிக்கப்பல்

  • PNS தைமூர் என்பது சீனாவிடமிருந்து பாகிஸ்தானால் பெறப்பட்ட இரண்டாவது வகை 054A/P போர்க்கப்பலாகும். ஷாங்காய் நகரத்தில் உள்ள Hudong-Zhonghua கப்பல்கட்டுந்தளத்தில் இந்தக் கப்பல் இயக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில், PNS துக்ரில், பாகிஸ்தான் கடற்படையின் ஒருபகுதியாக இருக்கும் முதல் வகை 054A/P போர்க்கப்பல் ஆக ஆனது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கோட்லாண்ட் என்பது கீழ்க்காணும் எந்த நாட்டுக்குச் சொந்தமான தீவாகும்?

அ. டென்மார்க்

. சுவீடன் 

இ. நார்வே

ஈ. ஐஸ்லாந்து

  • கோட்லேண்ட் என்பது பால்டிக் கடலில் அமைந்துள்ள சுவீடனுக்குச் சொந்தமான ஒரு தீவாகும். மிகப்பெரிய மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யும் திறன்கொண்ட புதிய ‘ஸ்மார்ட் ரோடு’ இந்தத்தீவில் போடப்பட்டுள்ளது. இந்தக் கம்பிகள் சாலைக்கு அடியில் புதைந்துள்ளதால், மின்கம்பிகளால் ஏற்படும் மின்னதிர்ச்சி ஏற்படாது.

9. ‘கெம்பேகௌடா சர்வதேச விருதை’ நிறுவிய மாநிலம் எது?

அ. ஆந்திரப் பிரதேசம்

ஆ. கர்நாடகா 

இ. கேரளா

ஈ. ஒடிஸா

  • கெம்பேகௌடா என்பவர் விஜயநகரப்பேரரசின்கீழ் ஒரு நிலக்கிழாராக இருந்தார். அவர் 1537-இல் கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூருவை நிறுவியதாகக் கருதப்படுகிறார். அவரது பிறந்தநாள் கடந்த 2017 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.27 அன்று கர்நாடகா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • பெங்களூருவின் வளர்ச்சியில் பங்களிப்போரைக் கௌரவிக்கும் வகையில், கெம்பே கௌடா சர்வதேச விருது நிறுவப்பட்டது. இவ்விருதின் தொடக்க பதிப்பை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் S M கிருஷ்ணா, இன்போசிஸ் நிறுவனர் N R நாராயணமூர்த்தி மற்றும் மூத்த பாட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

10. PMAY திட்டமானது எந்த ஆண்டுக்குள், ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. 2020

ஆ. 2022 

இ. 2025

ஈ. 2050

  • PMAY திட்டமானது நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள், ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை அடைவதை நோக்கம எனக்கொண்டுள்ளது. இது 2015 ஜூன்.25 அன்று தொடங்கப்பட்டது. இது வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரின் வீட்டு தேவைகளை பூர்த்திசெய்கிறது. இந்த ஆண்டு இந்த முதன்மைத் திட்டத்தின் 7ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. இதை நினைவுகூரும் வகையில், இத்திட்டத்தின் கீழ் சாதனைகள் அடங்கிய மின் நூலை அரசு வெளியிட்டது.
  • 2022ஆம் ஆண்டுக்குள் 2.7 கோடி வீடுகளை கட்டி முடிக்கவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் இலக்காகும். இன்றுவரை இந்த இலக்கில் 67 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி `13,000 கோடி: இந்தியா சாதனை

இலங்கை, வங்கதேசம், அமெரிக்கா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு `13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை கடந்த நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு உற்பத்தித்துறை கூறுகையில், “கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் `13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 54.1 சதவீதம் அதிகமாகும். இந்திய பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதியாகும் நாடுகள் 84 ஆகும்.

பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி

2015-16 `2,059 கோடி

2018-19 `9,000 கோடி

2019-20 `9,115 கோடி

2020-21 `8,434 கோடி

2021-22 `13,000 கோடி

2. மதுரை மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன்

‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்’ கீழ், குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க நடத்தப்பட்ட தொடர் வாசிப்பு இயக்கப்போட்டியில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம் முதலிடமும் (6.28 கோடி சொற்கள்), மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரம், இரண்டாமிடமும் (4.91 கோடி சொற்கள்), மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரம் (4.17 கோடி சொற்கள்) மூன்றாமிடமும் பெற்றன. இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை மதுரை மாவட்டம் பெற்றது. இதுதவிர, தன்னார்வலர்களுக்கான வெற்றிக்கோப்பைக்கு மதுரை மாவட்டமும், மாணவர்களுக்கான வெற்றிக்கோப்பைக்கு திருப்பத்தூர் மாவட்டமும் தேர்வுசெய்யப்பட்டன.

1. ‘Mission Vatsalya’, which was seen in the news, is a scheme implemented by which Union Ministry?

A. Ministry of Women and Child Development 

B. Ministry of Education

C. Ministry of MSME

D. Ministry of Commerce and Industry

  • Mission Vatsalya is an umbrella scheme for child protection services in the country implemented by the Women and Child Development (WCD) Ministry. The Ministry released the guidelines for the scheme. Funds to states will be approved through the Mission Vatsalya Project Approval Board (PAB), which will be chaired by the WCD Secretary, who will approve annual plans and financial proposals received from states and UTs for release of grants.

2. Which state received approval for a USD 300 million World bank–funded school education project?

A. Chhattisgarh 

B. Odisha

C. Karnataka

D. Andhra Pradesh

  • The Chhattisgarh Government has received an in–principle nod from the Central Government to go ahead with a USD 300 million school education project the State. Department of Economic Affairs (DEA) under the Union Finance Ministry had given an in–principle approval for the project, which is to be funded by the World Bank.

3. ‘Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage (ICH)’ is associated with which institution?

A. UNICEF

B. UNESCO 

C. World Economic Forum

D. Centre for Cultural Resources and Training

  • India has been elected to the Intergovernmental Committee of UNESCO’s 2003 Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage (ICH) for the 2022–2026 cycle. India has already served as a member of the ICH Committee twice from 2006 to 2010 and from 2014 to 2018. India will be a part of two Committees of UNESCO — Intangible Cultural Heritage (2022–2026) and World Heritage (2021–2025).

4. Who has been named as India’s new Sherpa for the G–20, after Piyush Goyal?

A. Nirmala Sitharaman

B. Rakesh Sharma

C. Amitabh Kant 

D. Parameswaran

  • Former NITI Aayog CEO Amitabh Kant has been named as India’s new Sherpa for the G–20, replacing Piyush Goyal, Minister for Commerce & Industry and Consumer Affairs. India is set to assume G–20 presidency from December 1, 2022 to November 30, 2023. The Sherpa will attend meetings that will be held in different parts of the country.

5. What is the name of the single repository of all Indian government’s digital projects, to be shared with the world?

A. Vishwa. Bharat Stack

B. Indiastack. Global 

C. Global Desi Stack

D. Local to Global Stack

  • As part of the ongoing Digital India Week 2022 celebrations, a virtual event on India Stack Knowledge Exchange was also organised. Indiastack.global was launched by the Prime Minister, which is a single repository of all major projects on India Stack. The Indian government has decided to share with the world the many e–governance tools including Aadhaar, the DigiLocker, CoWin Platform, the Government e–Marketplace, and Ayushman Bharat Digital Health Mission.

6. When is International Day of Women in Diplomacy observed?

A. June.23

B. June.24 

C. June.25

D. June.26

  • The UNGA has adopted the resolution to designate June 24 as the International Day of Women in Diplomacy. Its purpose is to promote the full and equal participation of women at all levels of diplomacy.

7. PNS Taimur, which was delivered by China to Pakistan, is a __?

A. Corvette

B. Frigate 

C. Destroyer

D. Aircraft Carrier

  • PNS Taimur is the second Type 054A/P frigate received by Pakistan from China. The vessel was commissioned at the Hudong–Zhonghua Shipyard in Shanghai. In January this year, PNS Tughril became the first Type 054A/P frigate to be part of the Pakistan Navy Fleet.

8. Gotland, which made news recently, is an island belonging to which country?

A. Denmark

B. Sweden 

C. Norway

D. Iceland

  • Gotland is an island belonging to Sweden in the Baltic Sea. A new ‘smart road’ capable of charging big electric vehicles has been constructed in this island. The threat of electrical shocks from these wires is eliminated as they are buried under the road.

9. Which state instituted the ‘Kempegowda International Award’?

A. Andhra Pradesh

B. Karnataka 

C. Kerala

D. Odisha

  • Kempe Gowda was a chieftain under the Vijayanagar Empire, who was known for the fortification of Karnataka’s capital, Bengaluru in 1537. His birth anniversary is observed every year across Karnataka on June 27 since 2017. In his honour, Kempe Gowda International Award was instituted earlier this year, to recognize the contributions towards development of Bengaluru. The recipients of the inaugural edition of this award are former Karnataka Chief Minister SM Krishna, Infosys founder NR Narayan Murthy and veteran badminton player Prakash Padukone.

10. PMAY aims to achieve ‘Housing for All’ by which year?

A. 2020

B. 2022 

C. 2025

D. 2050

  • PMAY aims to achieve ‘Housing for All’ by the year 2022. It was launched on June 25, 2015. It is implemented by the Ministry of Housing and Urban Affairs. It caters to the housing needs of the Economical Weaker Sections, Lower Income Groups and Middle–Income Groups. This year marks the 7th anniversary of this flagship scheme. To commemorate this, the government released an e–book featuring the achievements under this scheme. The goal of this scheme is to complete 2.7 crore houses by 2022. Till date, about 67 per cent of this goal has been achieved.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!