Tnpsc

9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) ஐ நா வளர்ச்சித் திட்டம்

ஈ) UNESCO

  • அண்மையில், UNESCO அமைப்பானது “World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, 2020 மே முதல் 2020 செப்டம்பர் வரை உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, காலநிலை மாற்றம், வன்முறை மற்றும் மோதல், பல்லுயிர் இழப்பு, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை போன்றவை அமைதியான சமூகத்தை பாதிக்கும் சில முக்கியமான சவால்களாக இனங்காணப்பட்டுள்ளன.

2. “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2020” அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ) புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது அண்மையில், “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2020” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, கடந்த 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டின் அறிக்கை, இத்தொடரில், 20ஆவது இடத்தில் உள்ளது. இது, கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு பாலினம் தொடர்பான தரவை வழங்குகிறது.

3. நாட்டின் நகர்ப்புற வீதியோர விற்பனையாளர்களுக்கு ஆண்டுக் -கு `10,000 வரை நடப்பு மூலதன வசதியை வழங்க முடிவு செய்து உள்ள திட்டத்தின் பெயர் என்ன?

அ) பிரதமர் கிஸான்

ஆ) முத்ரா யோஜனா

இ) பிரதமர் ஸ்வநிதி

ஈ) TLTRO

  • PM SVANIDHI திட்டத்தின்கீழ், நகர்ப்புற வீதியோர விற்பனையாளர்கள், வங்கிகளில் ஆண்டுக்கு `10,000 வரை நடப்பு மூலதன கடன்பெற அனுமதிக்கப்படுகிறார்கள். COVID-19 பொது முடக்கத்தின்போது விற்பனையாளர்களுக்கு நுண்கடன் வசதியை வழங்குவதற்காக இந்தத் திட்டம் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மொத்த கடன்களில், தனியார் வங்கிகள், 1.6% மட்டுமே பங்களித்துள்ளன.

4. தேசிய சேமிப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக பங்களிப்பு செய்துள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஹரியானா

  • நிதியமைச்சகத்தின்கீழ் தேசிய சேமிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு -களின்படி, மேற்கு வங்க அரசாங்கம் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் 15%’க்கும் அதிகமான வைப்புகளில் அது பங்குகொண்டுள்ளது. இப்பட்டியலில், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

5. 2020ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரி -சையில், இந்திய பல்கலைக்கழகங்களுள் முதலிடம் பிடித்த பல்கலைக்கழகம் எது?

அ) அண்ணா பல்கலைக்கழகம்

ஆ) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

இ) ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

ஈ) கல்கத்தா பல்கலைக்கழகம்

  • ஷாங்காய் தரவரிசை என்றும் அழைக்கப்படுகிற உலக பல்கலைக்கழக -ங்களின் தரவரிசை – 2020 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைப்படி, கல்கத்தா பல்கலைக்கழகம் இந்திய பல்கலைக்கழகங்க -ளுள் முதலாவது இடத்தையும், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. 15 இந்திய பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

6. “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ) UNICEF

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) NABARD

ஈ) TRIFED

  • மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) சமீபத்தில் “சங்கல்ப் சே சித்தி” – கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகம் செய்தது. இந்த இயக்கம், 2021 ஏப்ரல்.1 அன்று தொடங்கியது. இது, 150 அணிகள் பங்கேற்கும் நாட்டின் 1500 கிராமங்களை உள்ளடக்கும் 100 நாள் இயக்கமாகும். அந்தக் கிராமங்களின் வன் தன் மையங்களை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

7. 2022ஆம் ஆண்டளவில், பெட்ரோலில் எத்தனை சதவீத அளவிற்கு எத்தனால் கலப்பதற்கு இந்திய இலக்கு நிர்ணயித்துள்ளது?

அ) 1%

ஆ) 1.5%

இ) 2%

ஈ) 10%

  • 2022ஆம் ஆண்டளவில் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. சமீபத்தில், எதனால் விநியோகம் ஆரம்பித்த முதல் 4 மாதங்களுக்குள், பெட்ரோலில் 7.2 சதவீதத்திற்கும் அதிகமான எத்தனால் கலப்பை இந்தியா அடைந்துள்ளது.
  • கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் 9-9.5% எத்தனால் கலப்பை அடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 10% எத்தனால் கலப்பு இலக்கை எட்டும் பாதையில் உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

8. தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 2

ஆ) ஏப்ரல் 3

இ) ஏப்ரல் 4

ஈ) ஏப்ரல் 5

  • ஆண்டுதோறும் ஏப்.5 அன்று தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின் (2021) தேசிய கடல்சார் நாள் அதன் 58ஆவது பதிப்பைக்குறிக்கிறது, அதே வேளையில், 1964ஆம் ஆண்டில் இந்நாள் முதல் கொண்டாட்டம் நிகழ்த்தப்பபட்டது. உலகளாவிய கடல்சார் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • முழுக்க முழுக்க இந்தியாவுக்குச் சொந்தமான “SS லாயல்டி” கப்பலின் முதல் பயணத்தை நினைவுகூரும் வகையில், ஏப்ரல்.5ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கொண்டாடப்படுகிறது.

9. முதன்முறையாக, 2020ஆம் ஆண்டில், ஏப்ரல்.5ஆம் தேதியை எந்த நாளாக ஐநா அவை கடைப்பிடித்தது?

அ) பன்னாட்டு மனச்சான்று நாள்

ஆ) அன்பை ஊக்குவிப்பதற்கான பன்னாட்டு நாள்

இ) பன்னாட்டு அமைதி நாள்

ஈ) கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான பன்னாட்டு நாள்

  • கடந்த 2019’இல் நடைபெற்ற ஐநா அவையின் 73ஆவது அமர்வின்போது, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள்’ என அறிவிக்கக்கோ -ரும் கோரிக்கையை பக்ரைன் ஐநா அவையிடம் வழங்கியது.
  • “அன்பு மற்றும் மனச்சான்றுடன் கூடிய அமைதியான கலாசாரத்தை ஊக்குவித்தல்” என்ற தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு, ஏப்.5ஆம் தேதியை ‘பன்னாட்டு மனச்சான்று நாள் – International Day of Conscience’ என ஐநா அறிவித்தது. 2020ஆம் ஆண்டில் இச்சிறப்பு நாள் முதன்முறையாக கொண்டாடப்படுகிறது.

10. BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு -ள்ளவர் யார்?

அ) ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா

ஆ) V K சிங்

இ) அஜை குமார் பல்லா

ஈ) விஜை குமார்

  • குஜராத்தின் முன்னாள் DGP ஷபீர் உசேன் சேகாதம் கண்ட்வாவாலா, BCCI’இன் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு இப்பதவியிலிருந்த அஜித் சிங்கின் பதவிக்காலம் 2021 மார்ச் மாதம் முடிவடைந்தது. 1973ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரியான இவர், கடந்த 2010’இல் தனது இகாப சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஏப்.9 முதல் IPL தொடங்கப்படுவதை முன்னிட்டு ஷபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியா-இலங்கை உறுதி

பயங்கரவாத குழுக்கள், தலைமறைவாக உள்ளவர்களுக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதியேற்றுள்ளன. இந்தியா-இலங்கை காவல் உயரதிகாரிகள் இடையேயான காணொலிக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா தரப்பில் உளவுத்துறையின் இயக்குநர் அர்விந்த் குமார் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை சார்பில் அந்நாட்டின் காவல்துறைத்தலைவர் சி டி விக்ரமரத்னே தலைமையிலான குழு பங்கேற்றது.

2. ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு மேலும் 2 தமிழக வீரர்கள் உள்பட 3 பேர் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதிச்சுற்று பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி ஓமனில் நடந்தது. இதில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தமாக 2ஆவது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதேபோல் 49 ER கிளாஸ் பிரிவில் இந்தியாவின் கே சி கணபதி – வருண் தாக்கர் ஜோடி முதலிடத்தை பிடித்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது. இவர்கள் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஏற்கனவே இந்த போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை 23 வயதான நேத்ரா குமணன் (சென்னை கல்லூரி மாணவி) லேசர் ரேடியல் பிரிவில் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றதுடன், ஒலிம்பிக் பாய்மரபடகு போட்டியில் அடி எடுத்துவைக்கவிருக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

3. இராமநாதபுரம் வனச்சரகருக்கு சர்வதேச விருது

இராமநாதபுரம் வனச்சரகருக்கு வன பாதுகாப்பு தொடர்பான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. சுவிச்சர்லாந்தை தலைமையிடமாகக்கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க அமைப்பு நடப்பு ஆண்டு முதல் சர்வதேச அளவில் சிறந்த வனச்சரகர் விருதை வழங்குகிறது.

இந்த அமைப்பானது உலக வனச்சரகர் கூட்டமைப்பு, உலக வனவுயிரின பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனவுயிரின அமைப்புமூலம் சிறந்த வனச்சரகருக்கான விருதை தெரிவுசெய்து வழங்குகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார்வளைகுடா தேசியபூங்கா பகுதியில் கடல் அட்டை கடத்தலை தடுத்து, அலையாத்தி காடுகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்டதற்காக இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சு சதீஷ் விருதுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவன மூத்த ஆய்வாளர் சிவகுமார் பரிந்துரை அடிப்படையில் அவரை விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். சதீஷுக்கு ஏப்.7 அன்று இணை -யதளம்மூலம் பாராட்டுச்சான்றுடன், `7.25 இலட்சம் நிதியும் வழங்கப்பட்டு -ள்ளது. சதீஷூடன் கம்போடியா, மியான்மர், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட 8 நாட்டு வனச்சரகர்களும், நம் நாட்டில் உத்தரகாண்ட் ராஜாஜி புலிகள் காப்பக வனச்சரகர் மகேந்திரகிரி ஆகியோரும் விருது பெற்றுள்ள -னர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. உயர்நீதிமன்றத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான புதிய உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் R ராஜேஷ் விவேகானந்தனை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதற்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் தவிர்த்து, மத்திய அரசு பேனல் வழக்கறிஞர்கள் துறை வாரியாக நியமிக்கப்படுவது வழக்கம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவிசொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கார்த்திகேயனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் ஆர் ராஜேஷ் விவேகானந்தனை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.

1. Which international organization has released the “World 2030: Public Survey” Report?

A) IMF

B) World Bank

C) UNDP

D) UNESCO

  • The UNESCO has recently released a report titled “World 2030: Public Survey Report”. This report is based on surveys conducted around the world from May 2020 to September 2020.
  • As per the report, climate change, violence and conflict, loss of biodiversity, discrimination and inequality etc are some of the important challenges affecting a peaceful society.

2. Which Ministry has released the “Women and Men in India 2020” report?

A) Ministry of Home Affairs

B) Ministry of Women and Child Development

C) Ministry of Statistics and Programme Implementation

D) Ministry of Defence

  • The Union Ministry of Statistics and Programme Implementation (MoSPI) has recently released a report titled “Women and Men in India 2020”. This report has been published by MoSPI since 1995 and this year’s report is 20th in the series. It provides gender related data for policy makers, planners and other stakeholders.

3. What is the name of the scheme that intends to provide working capital facility of Rs.10,000 per year to urban street vendors of the country?

A) PM KISAN

B) MUDRA Yojana

C) PM SVANIDHI

D) TLTRO

  • Under the PM SVANIDHI scheme, urban street vendors are sanctioned with working capital credit facilities upto Rs,10,000 per year by banks. This scheme was launched by the Government of India to provide micro–credit facility to vendors during COVID–19 lockdown. As per a recent data by the Ministry of Home Affairs, out of the total disbursement under the scheme, private banks have contributed only 1.6%.

4. As per the data by National Savings Institute, which state has made highest contribution to government’s small savings schemes?

A) Uttar Pradesh

B) Madhya Pradesh

C) West Bengal

D) Haryana

  • As per the data released by National Savings Institute under the Ministry of Finance, West Bengal has made the highest contribution to government’s small savings schemes and has a share of more than 15% in deposits at post offices and banks. West Bengal is followed by Uttar Pradesh, Maharashtra, Gujarat and Tamil Nadu in the list.

5. Which University has secured the 1st place among Indian Universities in Academic Ranking of World Universities 2020?

A) Anna University

B) JNU

C) JNTU

D) Calcutta University

  • The Academic Ranking of World Universities (ARWU) 2020, also known as the Shanghai Ranking has been released recently. As per the ranking, Calcutta University has been ranked 1st among the Indian Universities and 3rd among higher educational institutions in the country. 15 India Universities have made it into the ARWU 2020 list.

6. Which organisation has launched the “Sankalp se Siddhi” – Village & Digital Connect Drive?

A) UNICEF

B) RBI

C) NABARD

D) TRIFED

  • The Tribal Co–operative Marketing Federation of India (TRIFED) under the Union Ministry of Tribal Affairs has recently launched “Sankalp se Siddhi” – Village & Digital Connect Drive. This drive has commenced on April 1, 2021. This is a 100–day drive that would include participation of 150 teams and would cover 1500 villages of the country. The main aim of this drive is to activate the van dhan kendras of these villages.

7. What is India’s target for ethanol blending in petrol for the year 2022?

A) 1%

B) 1.5%

C) 2%

D) 10%

  • India has fixed a target of 10% ethanol blending in petrol by the year 2022. Recently, India has achieved more than 7.2 percent of ethanol blending in fuel, for the first four months of ethanol supply.
  • Some stated like Goa, Karnataka, Maharashtra have achieved 9–9.5% ethanol blending. This shows that India is on track to reach 10% ethanol blend by 2022.

8. When is the National Maritime Day celebrated every year?

A) April 2

B) April 3

C) April 4

D) April 5

  • The National Maritime Day is celebrated every year on 5th of April. This year marks the 58th edition of National Maritime Day, while the first such event was celebrated in the year 1964. The National Maritime Day is celebrated on April 5, to commemorate the maiden voyage of the first wholly owned ship of Indians.

9. For the first time in 2020, April 5 is observed as which day by the United Nations?

A) International Day of Conscience

B) International Day of Promotion of Love

C) International Day of Peace

D) International Day of Promotion of Culture

  • During the 73rd session of the United Nations General Assembly in 2019, Bahrain sponsored its Prime Minister’s imitative to designate April 5 as the ‘International Day of Conscience’. The Assembly unanimously adopted resolution “Promoting the Culture of Peace with Love and Conscience” and declared April.5 as the International Day of Conscience. It is celebrated in 2020 for the 1st time.

10. Who has been appointed as the head of the BCCI’s Anti–Corruption Unit?

A) Shabir Hussein Shekhadam Khandwawala

B) V K Singh

C) Ajay Kumar Bhalla

D) Vijay Kumar

  • Shabir Hussein Shekhadam Khandwawala– former DGP of Gujarat, has been appointed as the head of the BCCI’s Anti–Corruption Unit. He succeeds Ajit Singh, whose term ended in March 2021. Khandwawala is a 1973 batch IPS officer and retired from his IPS service in 2010. He has been appointed ahead of the IPL beginning April 9.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!