TnpscTnpsc Current Affairs

9th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 22ஆவது ஏவுகலக்கப்பற்படை (கில்லர் ஸ்குவாட்ரன்) முறையாக எங்கு நிறுவப்பட்டது?

அ) மும்பை 

ஆ) விசாகப்பட்டினம்

இ) கோவா

ஈ) கொச்சின்

  • 22ஆவது ஏவுகலக் கப்பற்படையானது 1999 அக்டோபரில் மும்பையில் முறையாக நிறுவப்பட்டது. இந்திய குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ‘கில்லர் ஸ்குவாட்ரான்’ என்றும் அழைக்கப்படும் 22ஆவது ஏவுகலக் கப்பற்படைக்கு குடியரசுத்தலைவரின் தரத்தை வழங்குவார். குடியரசுத்தலைவரின் தரமானது சிறிய இராணுவப் பிரிவுக்கு வழங்கப்ப -டும் குடியரசுத்தலைவரின் வண்ண விருதைப்போன்ற கௌரவமாகும்.

2. ஆத்ம நிர்பார் கிரிஷக் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) உத்தரப்பிரதேசம் 

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • உத்தரப்பிரதேச மாநில அரசானது 2021-22 முதல் மாநிலத்தில் ஆத்ம நிர்பார் கிரிஷக் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் 1475 உழவர் உற்பத்தியாளர்க -ள் அமைப்புகள் உருவாக்கப்படும். மேலும், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் மத்திய அரசு ஒதுக்கியுள்ள `1000 கோடியை பயன்படுத்து -வதற்கான இலக்கை அடைவதற்கு இது உதவும்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கொன்யாக்குகள் என்போர், எந்த இந்திய மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடியினத்தவராவர்?

அ) அசாம்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) நாகாலாந்து 

ஈ) மத்திய பிரதேசம்

  • நாகாலாந்தின் ஓட்டிங் கிராமத்தில் இந்திய ஆயுதப்படையின் துப்பாக்கிச் சூட்டில் 14 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; இதில் மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடியினரான கொன்யாக்களும் அடங்குவர். அவர்கள் நாகாலாந்தில் வாழும் கடுமையான போர்முறை பழங்குடியினராக அறியப்படுகிறார்கள். 1980ஆம் ஆண்டு வாக்கில், அவர்கள் எதிரிகளின் தலையைக் கொய்யும் பழக்கத்தைக் கைவிட்டனர். சுமார் 3 இலட்சம் மக்கள்தொகையுடன், அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மரின் சில பகுதிகளிலும் கொன்யாக்கள் வசித்து வருகின்றனர்.

4. இந்திய கடற்படையால் அண்மையில் தொடங்கப்பட்ட ‘சந்தாயக்’ என்றால் என்ன?

அ) ஆய்வுக்கப்பல் 

ஆ) ஏவுகல ஏவல் கப்பல்

இ) ஆம்பிபியஸ் போர் கப்பல்

ஈ) விமானந்தாங்கிக் கப்பல்

  • இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ‘சந்தாயக்’ என்ற புதிய சர்வே கப்பல், ஹூக்ளி ஆற்று நீரில் இறக்கப்பட்டது. இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக நான்கு மிகப் பெரிய சர்வே கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் `2,435 கோடி மதிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது.
  • இந்த ஆய்வுக் கப்பல்களின் முதன்மைப் பணியானது துறைமுகங்கள் பற்றிய முழு அளவிலான கடலோர மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்வதாகும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மின்ஸ்க் ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) ஈரான்

இ) உக்ரைன் 

ஈ) ஆப்கானிஸ்தான்

  • உக்ரைன் மீது படையெடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா சமீபத்தில் ரஷ்யாவை எச்சரித்துள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களால் பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டுவர வடிவ -மைக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இருநாடுகளும் திரும்ப வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. 2014’இல், உக்ரைனும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளும் பெலாரஸின் தலைநகரமான மின்ஸ்கில் 12 அம்ச போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டனர்.
  • ரஷ்யா, உக்ரைன், OSCE ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இரண்டு ரஷ்ய சார்பு பிரிவினைவாத பிராந்தியங்களின் தலைவர்கள் மின்ஸ்கில் 2015’இல் 13 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவை மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

6. உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உலகளாவிய கண்காணிப்பு அமைப்பின்படி, உறுப்பு தானத்தில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) மூன்றாவது 

இ) ஐந்தாவது

ஈ) ஏழாவது

  • ‘இந்திய உறுப்புதான நாள்’ கொண்டாட்டம் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) மூலம் புது தில்லியில் நவம்பர் 27 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டில், ஓராண்டுக்கு செய்யப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2013’இல் 4990 ஆக இருந்து 2019’இல் 12746 ஆக அதிகரித்துள்ளது. தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான உலகளாவிய கண்காணிப்பு (GODT) இணைய தளத்தில் உள்ள தரவுகளின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு இந்தியா, உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

7. சவுரவ் கோசலுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) சதுரங்கம்

ஆ) ஸ்குவாஷ் 

இ) மட்டைப்பந்து

ஈ) குத்துச்சண்டை

  • இந்திய தொழிற்முறை ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோசல் மலேசிய ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில், உலகின் முன்னாள் நெ:4 வீரரான கொலம்பியாவின் மிகுவல் ரோட்ரிகஸை வீழ்த்தி சவுரவ் கோசல் அந்தப் பட்டத்தை வென்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில், இரண்டு வீரர்களும் ஒன்றாக விளையாடியுள்ளனர். டேவிட் பால்மரால் இருவரும் பயிற்சி அளிக்கப் பெற்றுள்ளனர்.

8. மக்டலினா ஆண்டர்சன் என்பார் எந்த நாட்டின் முதல் பெண் பிரதமரானார்?

அ) ஐஸ்லாந்து

ஆ) ஸ்வீடன் 

இ) சுவிட்சர்லாந்து

ஈ) ஆஸ்திரேலியா

  • மத்திய-இடதுசாரி சமூக ஜனநாயகக்கட்சியின் தலைவரான மக்டலினா ஆண்டர்சன் ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரானார். ஆனால், எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அவரது வரவுசெலவுத்திட்டம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பிரதமரான சில மணி நேரங்களிலேயே அவர் இராஜினாமா செய்தார். தற்போது மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. ‘வேதிப்போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவுநாள்’ ஆனது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 28

ஆ) நவம்பர் 30 

இ) டிசம்பர் 2

ஈ) டிசம்பர் 4

  • ‘வேதிப்போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவுநாளானது’ நவ.30 அன்று ஐநா அவையால் அனுசரிக்கப்படுகிறது. வேதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தச் சிறப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இரசாயன ஆயுதங்களின் அச்சுறுத்தலை ஒழிப்பத -ற்காக இரசாயன ஆயுதங்களை தடைசெய்வதற்கான அமைப்பு (OPCW) எடுத்த உறுதிமொழியையும் இந்த நாள் சிறப்பித்துக் காட்டுகிறது.

10. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற அலிபூர் விலங்கியல் பூங்கா அமைந்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) மத்திய பிரதேசம்

ஆ) பீகார்

இ) மேற்கு வங்கம் 

ஈ) உத்தர பிரதேசம்

  • கொல்கத்தாவில் உள்ள அலிபூர் விலங்கியல் பூங்கா, விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு மாத காலம் விலங்குகளைத் தத்தெடுக்கும் செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விலங்கியல் பூங்காக்களில் நடைமுறையில் ஓராண்டு காலம் வரை விலங்குகளைத் தத்தெடுக்கும் செயல்முறை இருந்து வருகிறது.
  • விலங்கியல் பூங்கா அதிகாரிகளின் கூற்றுப்படி, தத்தெடுப்பு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மான்கள், புலிகள் மற்றும் சிம்பன்சிகள் போன்ற பிரபலமான விலங்குகள் தவிர, பிரபலமற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை தத்தெடுக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், 12 பேர் பலி: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் (63), அவரின் மனைவி மதுலிகா உள்பட 13 பேர் டிச.8 அன்று உயிரிழந்தனர்.

விபத்து நடந்த ஆறு மணி நேரத்துக்குப் பிறகு இந்த விவரம், இந்திய விமானப் படைத் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சூலூர் விமானப் படைத்தளத்திலிருந்து எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டரில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், இராணுவ உயர் அதிகாரிகள் எல் எஸ் லிடர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சத்பால், பிரித்விராஜ் எஸ் செளஹான், தாஸ், பிரதீப் ஏ, கே சிங், வருண் சிங் ஆகிய 14 பேர் பயணித்தனர்.

மரத்தில் மோதிய ஹெலிகாப்டர்: சூலூரில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் வெலிங்டனை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள காட்டேரி மலைப் பாதையை ஒட்டி அமைந்துள்ள நஞ்சப்பசத்திரம் பகுதி மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மலைப்பகுதியில் இருந்த மரத்தில் ஹெலிகாப்டர் மோதி தீ விபத்துக்குள்ளானது.

குரூப் கேப்டன் வருண் சிங் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2. 6 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத் தொகைகளை அளித்தார் முதல்வர்

ஆறு தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி அதற்கான உரிமைத் தொகைகளை குடும்பத்தினரிடம் முதல்வர் மு க ஸ்டாலின் அளித்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ் வளர்ச்சித்துறைக்கான மானியக்கோரிக்கையில் தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி சு செல்லப்பன், முனைவர் தொ பரமசிவன், புலவர் இளங் குமரனார், முருகேசபாகவதர், சங்கரவள்ளி நாயகம், செ ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

3. தந்தையின் வழியில் பணியைத் தொடங்கிய விபின் ராவத்!

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், தந்தையின் பிரிவிலேயே ராணுவப் பணியைத் 1978-ஆம் ஆண்டு தொடங்கினார்.

பணியைத் தொடங்கிய ராவத்:

விபின் ராவத்தின் முழுப் பெயர் விபின் லக்ஷ்மண் சிங் ராவத் ஆகும். தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் இந்திய ராணுவ அகாதெமியில் பட்டம் பெற்ற பிறகு, 1978-இல் இந்திய ராணுவத்தில் விபின் பணியில் சேர்ந்தார். 11-ஆவது கோர்க்கா ரைஃபிள்ஸின் 5-ஆவது பட்டாலியனாக அவருடைய தந்தை லக்ஷ்மண் சிங் ராவத் இருந்த நிலையில், அதே பிரிவில் விபின் ராவத்தும் சேர்க்கப்பட்டார்.

ராணுவத்தில் 40 ஆண்டு காலம் பணியில் பிரிகேட் கமாண்டர், ராணுவ தெற்கு படைப் பிரிவின் தலைமை அதிகாரி, ராணுவ நடவடிக்கை இயக்குநரக கிரேடு-2 அதிகாரி, ராணுவ செயலக பிரிவில் ராணுவச் செயலர், ராணுவ துணைச் செயலர், இளநிலை கமாண்ட் பிரிவில் முதுநிலை பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை விபின் ராவத் வகித்துள்ளார்.

ஐநா அமைதி காக்கும் படையின் ஒருங்கிணைந்த பகுதியில் ஓர் உறுப்பினராகவும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பன்னாட்டுப் படை அணிக்கு தலைமையும் வகித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்குக்குப் பிறகு நாட்டின் 27-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்றார். அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்தியாவின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியில் நியமிகப்பட்டார்.

முக்கிய ராணுவ நடவடிக்கைகள்: இவருடைய தலைமையில் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவம் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக, இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு எதிரான இந்திய ராணுவம் கடும் நடவடிக்கைகளை எடுத்ததுடன், கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அதிரடித் தாக்குதலை நடத்தியது.

அதுபோல, டோக்லாம் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலையும் இவருடைய தலைமையிலான இந்திய ராணுவம் திறம்படக் கையாண்டது. ராணுவ அதிகாரிகளிடையேயான தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்திய – சீன ராணுவத்தினரிடையே நல்லுறவு ஏற்படுத்துதற்கான தீவிர முயற்சிகளை விபின் ராவத் எடுத்ததோடு, கூட்டு போர்ப் பயிற்சிகளையும் மேற்கொள்ள வழி வகுத்தார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கான திட்டமிடலிலும் விபின் ராவத் முக்கியப் பங்காற்றினார்.

சென்னைப் பல்கலையில் எம் பில்:

உத்தரகண்ட் மாநிலம் பௌரியில் 1958 ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி பிறந்த விபின் ராவத், தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் இந்திய ராணுவ அகாதெமியில் பட்டங்களைப் பெற்றதுடன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கல்வியில் எம் பில் படிப்பையும், மீரட் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பிஎச் டி (ஆராய்ச்சி) படிப்பையும் முடித்துள்ளார். மேலாண்மை, கணினி துறைகளில் பட்டயப் படிப்புகளையும் மேற்கொண்டார்.

4. கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் இலவசம்: புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

கோயில்கள், அவற்றுக்குச் சொந்தமான மண்டபங்களில் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் இல்லாமல் திருமணம் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களிடம் திருமணத்துக்
-கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், கோயிலுக்குச் சொந்தமான மண்டபத்தில் திருமணம் நடந்தால் பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், புதிய திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின், தொடக்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி திருமணத் -துக்கு கட்டணம் இல்லை என்பதற்கான உத்தரவை முதல்வர் மு க ஸ்டாலின் அளித்தார். மேலும், திருமண வாழ்த்துகளுடன் பரிசுப் பொருள்களையும் அளித்தார்.

ஆறு மாற்றுத் திறனாளிகள் விருது: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, தேசிய அளவிலான விருதினை தமிழகத்தைச் சேர்ந்த ஏ எம் வேங்கடகிருஷ்ணன், எஸ் ஏழுமலை, கே தினேஷ், மானகஷா தண்டபாணி, கே ஜோதி, டி பிரபாகரன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரால் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை முதல்வரிடம் காண்பித்து அவர்கள் வாழ்த்துப்பெற்றனர்.

1. Where was the 22nd missile vessel Squadron (Killer Squadron) formally established?

A) Mumbai 

B) Visakhapatnam

C) Goa

D) Cochin

  • The 22nd missile vessel Squadron was formally established at Mumbai in December 199. Indian President Ram Nath kovind will award the President’s standard to the 22nd missile vessel Squadron also known as the Killer Squadron. The President’s standard is the same honour as the President’s colours award given to a smaller military unit.

2. Which state has approved to implement Atma Nirbhar Krishak Integrated Development Scheme?

A) Gujarat

B) Uttar Pradesh 

C) Madhya Pradesh

D) Maharashtra

  • The Uttar Pradesh government has given its approval to implement Atma Nirbhar Krishak Integrated Development Scheme in the state from 2021–22. Under the scheme 1475 farmer producer organisations will be formed in the next three years in each block of the state. It will also help to achieve the target of utilising the budget of 1000 crores allotted by the centre under Agriculture infrastructure fund.

3. Konyaks, who were in the news recently, are the largest tribes of which Indian state?

A) Assam

B) Himachal Pradesh

C) Nagaland 

D) Madhya Pradesh

  • The Indian Armed Force’s firing killed 14 civilians in Oting village of Nagaland, which included Konyaks, the largest tribes in the state. They are known to be one of the fiercest warrior tribes in Nagaland. By 1980, they were the last to give up the practice of head–hunting, the practice of severing heads of enemies after attacking rival tribes. With a population of roughly 3 lakhs, Konyaks also inhabit parts of Arunachal Pradesh and Myanmar.

4. What is ‘Sandhayak’, which was recently launched by the Indian Navy?

A) Survey vessel 

B) Missile Launch Vehicle

C) Amphibious warfare ship

D) Aircraft Carrier

  • The Indian Navy launched ‘Sandhayak’, the first of the four large survey vessels, in Kolkata. The primary role of these survey ships would be to conduct full–scale coastal and deep–water hydrographic survey of ports and harbours.
  • The ships would be deployed for collecting oceanographic and geophysical data and determination of navigational routes. The contract for building four survey ships was signed between the Defence Ministry and Garden Reach Shipbuilders and Engineers (GRSE) in 2018.

5. Minsk agreements, seen sometimes in the news, are associated with which country?

A) Israel

B) Iran

C) Ukraine 

D) Afghanistan

  • The United States has recently warned Russia not to invade Ukraine and urged both countries to return to the agreements designed to end a separatist war by Russian–speakers in eastern Ukraine. In 2014, Ukraine and the Russian–backed separatists agreed a 12–point ceasefire deal in the capital of Belarus– Minsk.
  • Representatives of Russia, Ukraine, OSCE and the leaders of two pro–Russian separatist regions signed a 13–point agreement in 2015 in Minsk. These are called Minsk agreements.

6. What is the rank of India in Organ Donation, as per Global Observatory on Donation and Transplantation (GODT)?

A) First

B) Third 

C) Fifth

D) Seventh

  • ‘Indian Organ Donation Day’ celebration has been organized by National Organ and Tissue Transplant Organization (NOTTO) in New Delhi on November 27. The total number of organ transplants done per year in the country increased from 4990 in 2013 to 12746 in 2019.
  • India now ranks third in the world only after USA and China as per the data available on the Global Observatory on Donation and Transplantation (GODT) website.

7. Saurav Ghosal is associated with which sport?

A) Chess

B) Squash 

C) Cricket

D) Boxing

  • Indian professional squash player Saurav Ghosal has become the first Indian player to claim the Malaysian open. At the final event, Saurav Ghosal clinched the title by defeating former world No.4 Miguel Rodriguez of Colombia.
  • On many occasions, the two players have played together and at one point were even trained by the same coach David Palmer.

8. Magdalena Andersson is the first female Prime Minister of which country?

A) Iceland

B) Sweden 

C) Switzerland

D) Australia

  • Magdalena Andersson, leader of the centre–left Social Democratic Party, became the country’s first female prime minister. But she resigned within hours of taking the job, after her budget was rejected in favour of one proposed by the opposition. Now Magdalena Andersson has been reappointed Prime Minister of the country.

9. When is the ‘Day of Remembrance for all Victims of Chemical Warfare’ observed every year?

A) November 28

B) November 30 

C) December 2

D) December 4

  • The ‘Day of Remembrance for all Victims of Chemical Warfare’ is observed by the United Nations on 30 November. The day is marked to pay tribute to the victims of chemical warfare.
  • The day also highlights the pledge taken by the Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) to eliminate the threat of chemical weapons.

10. Alipore Zoological Garden, which was making news, is located in which Indian state/UT?

A) Madhya Pradesh

B) Bihar

C) West Bengal 

D) Uttar Pradesh

  • Alipore Zoological Garden in Kolkata has introduced month–long adoption of animals to create public awareness about them. The Zoo also had year–long adoption process in practice. As per the zoo officials, adoption fees have been lowered, and people are being encouraged to adopt lesser–popular birds and animals, besides popular ones such as deer, tigers and chimpanzees.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!