TnpscTnpsc Current Affairs

9th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

9th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 9th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. உலக வங்கி

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. பன்னாட்டு செலவாணி நிதியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உலக வங்கி

  • உலக வங்கி சமீபத்தில், ‘இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. கேரள மாநில அரசுடன் இணைந்து உலக வங்கி ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள், ‘இந்திய காலநிலை மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்கள்’ சந்திப்பின்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியா அதிக வெப்பநிலையை அனுபவித்து வருகிறது. முன்கூட்டியே இந்நிலைக்கு ஆளாகியுள்ளது இந்தியா. மனிதரின் உயிர்வாழும் வரம்பைத் தாண்டிய வெப்ப அலைகளை கொண்டிருக்கும் உலக நாடுகளுள் இந்தியாவும் ஒன்றென உள்ளது.

2. ‘ஸ்ட்ரெப் A’ என்ற பாக்டீரியா தொற்றுநோயால் குழந்தைகள் இறந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய இராச்சியம்

இ. ஜெர்மனி

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐக்கிய இராச்சியம்

  • ஐக்கிய இராச்சியத்தில் ‘ஸ்ட்ரெப் ஏ’ என்ற பாக்டீரியா தொற்று காரணமாக குறைந்தது 6 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்தப் பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் நுழையும் போது, ​​தொற்று தீவிரமடையும். அது அப்போது invasive Group A Strep (iGAS) என்று அழைக்கப்படுகிறது. ஸ்ட்ரெப் ஏ–இன் அறிகுறிகளில் காய்ச்சல், தோல் வெடிப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் எளிதில் சிகிச்சையளிக்கப்படும் புண் ஆகியவை அடங்கும். நவம்பரில் ஒரு வாரத்தில் மட்டும் 851 ஸ்ட்ரெப் ஏ பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் இதே வேளையில் சராசரியாக 186 பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

3. ‘காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல்: ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNICEF

ஆ. WHO

இ. UNESCO

ஈ. UN Women

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. WHO

  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘காயங்கள் மற்றும் வன்முறையைத் தடுத்தல்: ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது. ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் காயங்கள் மற்றும் வன்முறைகளால் சுமார் 12,000 இறப்புகள் ஏற்படுவதாக அவ்வறிக்கை கூறுகிறது. காயம் தொடர்பான இறப்புகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் 12 இறப்புகளில் 1 இதன் காரணமாக நிகழ்கிறது. சாலைப் போக்குவரத்து காயங்கள், கொலை மற்றும் தற்கொலை ஆகியவை 5–29 வயதுடையவர்களிடையே மரணத்திற்கான முதல் ஐந்து காரணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற துங்கரேஷ்வர் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மகாராஷ்டிரா

  • இந்தியாவில் உள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் சுற்றி 1 கிமீ சுற்றளவுக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை உருவாக்குவதை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றம், மகாராஷ்டிர மாநிலத்தின் துங்கரேஷ்வர் வனவுயிரி சரணாலயத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒரே மாதிரியான ஆணையைப் பெறுவதற்கு முன்பு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் கள உண்மைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இந்தச்சரணாலயம் மும்பையின் புறநகரப் பகுதியில் அமைந்துள்ளது.

5. 2022 – ஆர்டன் கேபிடல் கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 80

ஆ. 87

இ. 92

ஈ. 95

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 87

  • ஆர்டன் கேபிட்டல் வெளியிட்ட 2022 – கடவுச்சீட்டு குறியீடு என்பது உலகின் வலிமையான மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகளின் தரவரிசையாகும். உலகின் வலிமையான கடவுச்சீட்டு பட்டியலில் இந்தியா 87ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்திலும், ஜெர்மனி, சுவீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும், பாகிஸ்தான் 94ஆவது இடத்திலும் உள்ளது.

6. கராகஸ் என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் தலைநகரமாகும்?

அ. ஈரான்

ஆ. வெனிசுலா

இ. பப்புவா நியூ கினி

ஈ. அர்ஜென்டினா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வெனிசுலா

  • இந்தியாவும் வெனிசுலாவும் இணைந்து நான்காம் சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை வெனிசுலாவின் தலைநகரமான கராகஸில் நடத்தின. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்படி, அரசியல், வர்த்தகம், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் மருந்துகள், ஆயுர்வேதம் மற்றும் யோகா, வேளாண்மை, கலாச்சாரம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்போன்ற துறைகளை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளை இருதரப்பும் மதிப்பாய்வு செய்தன.

7. வழிகாட்டுதல், ஆலோசனை, உதவி, நெகிழ்திறன் மற்றும் வளர்ச்சி (Mentorship, Advisory, Assistance, Resilience and Growth – MAARG) என்ற இணையதளத்தை தொடங்கிய நடுவண் அமைச்சகம் எது?

அ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம்

ஈ. தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழியங்கும் தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான துறை MAARG இணையதளத்தில் பதிவுசெய்வதற்கு ஸ்டார்ட்–அப் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. MAARG (வழிகாட்டுதல், ஆலோசனை, உதவி, நெகிழ்திறன் மற்றும் வளர்ச்சி) இணையதளமானது பல்வேறு துறைகள், செயற்பாடுகள், நிலைகளிலுள்ள ஸ்டார்ட்அப்களுக்கான வழிகாட்டுதலை எளிதாக்குவதற்கான ஒரே தளமாக விளங்கும்.

8. அன்வர் இப்ரகிம் என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார்?

அ. சிங்கப்பூர்

ஆ. மலேசியா

இ. ஆப்கானிஸ்தான்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மலேசியா

  • மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சித்தலைவர் அன்வர் இப்ரகிம், அந்நாட்டின் புதிய பிரதமராக அண்மையில் பதவி ஏற்றார். எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து ஏற்பட்ட தேக்கநிலையைத் தொடர்ந்து புதிய பிரதமரை மலேசிய மன்னர் அறிவித்தார். மலேசியாவின் வாழ்வினச்செலவு அதிகரித்து வருவதைச் சமாளித்து ஊழலுக்கு எதிராகப் போராடப் போவதாக அன்வர் கூறியுள்ளார்.

9. டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (C–DOT) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி

இ. குருகிராம்

ஈ. கொல்கத்தா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C–DOT) என்பது இந்திய அரசுக்குச்சொந்தமான தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. நடுவண் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், C–DOT டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் தில்லி வளாகத்தில் தொழில்முனைவோர் பிரிவு மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார்.

10. முதலாவது இந்தியா–ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. கம்போடியா

இ. தாய்லாந்து

ஈ. லாவோஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கம்போடியா

  • இந்தியா–ஆசியான் உறவுகளின் முப்பதாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இந்தியா–ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கம்போடியாவில் உள்ள சீம் ரீப்பில் நடைபெற்றது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பெண்களுக்கான முன்முனைவு மற்றும் கடலில் நெகிழி மாசுபாடு குறித்த முன்முனைவு உட்பட இரண்டு திட்டங்களை முன்வைத்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. கலங்கரை விளக்க சுற்றுலாத் திட்டங்கள்

நாடு முழுவதுமுள்ள 65 கலங்கரை விளக்கங்களில் அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு (11), குஜராத் (13), கேரளா (10), மகாராஷ்டிரா (5), கர்நாடகா (5), ஒடிஸா (5), மேற்கு வங்காளம் (3), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (2), இலட்சத்தீவுகள் (1), கோவா (1). தமிழ்நாட்டில் பதினொரு கலங்கரை விளக்கங்கள் இத்திட்டத்தின்கீழ் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கூத்தங்குழி, மணப்பாடு, கீழக்கரை, தனுஷ்கோடி, பாம்பன், மல்லிப் பட்டினம், கோடியக்கரை, நாகப்பட்டினம், பூம்புகார், பழவேற்காடு போன்ற கலங்கரை விளக்கங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. கடல் அலையிலிருந்து மின்சாரம்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு.

கடல் அலைகளிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினர் வடிவமைத்துள்ளனர். ‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே ஆறு கிமீ தொலைவில் 20 மீட்டர் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த மூன்றாண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

9th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution released the report titled ‘Climate Investment Opportunities in India’s Cooling Sector’?

A. NITI Aayog

B. World Bank

C. World Economic Forum

D. International Monetary Fund

Answer & Explanation

Answer: B. World Bank

  • The World Bank recently released a report titled ‘Climate Investment Opportunities in India’s Cooling Sector’. The report was released during the two–day ‘India Climate and Development Partners’ Meet’ being organised by World Bank in partnership with the Kerala government. As per the report, the country is experiencing higher temperatures that arrive earlier and stay far longer. India could become one of the first places in the world to experience heat waves that break the human survivability limit.

2. Which country has recorded deaths of children by the bacterial infection ‘Strep A’?

A. India

B. United Kingdom

C. Germany

D. Bangladesh

Answer & Explanation

Answer: B. United Kingdom

  • At least six children have died of a common bacterial infection, Strep A, in the United Kingdom. When the bacteria enter the bloodstream, the infection can get severe and it is called invasive Group A Strep (iGAS). The symptoms of Strep A include fever, skin rashes and a sore easily treated with antibiotics. As many as 851 cases of Strep A were reported in a week of November, compared to an average of 186 for the same time in preceding years.

3. Which institution released the report titled ‘Preventing injuries and violence: an overview’?

A. UNICEF

B. WHO

C. UNESCO

D. UN Women

Answer & Explanation

Answer: B. WHO

  • The World Health Organization (WHO) released a new report titled ‘Preventing injuries and violence: an overview’. The report says that injuries and violence cause about 12, 000 deaths around the world each day. It also highlighted the need for scaling up efforts for prevention of injury related deaths, which account for 1 in 12 deaths worldwide. Road traffic injuries, homicide and suicide were listed among the top 5 causes of death among people aged 5–29 years.

4. Tungareshwar Wildlife Sanctuary, which was seen in the news, is located in which state?

A. Karnataka

B. Maharashtra

C. Kerala

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: B. Maharashtra

  • Supreme Court exempted Maharashtra’s Tungareshwar Wildlife Sanctuary (TWS) from its earlier order mandating the creation of a 1 km eco–sensitive zones (ESZ) around all protected areas in India. It also stated that practical difficulties and ground realities will have to be taken into account before having a uniform order for creating ESZs as mandated. The Sanctuary is located in the suburbs of Mumbai.

5. What is the rank of India in the ‘Arton Capital Passport Index 2022’?

A. 80

B. 87

C. 92

D. 95

Answer & Explanation

Answer: B. 87

  • Passport Index 2022, published by Arton Capital, is the ranking of the world’s strongest and weakest passports. India has ranked 87 in the world’s strongest passport list, while UAE ranked first, followed by Germany, Sweden, Finland, Luxembourg, Spain France. While Afghanistan stood last, Pakistan stood at 94.

6. Caracas is the capital city of which country?

A. Iran

B. Venezuela

C. Papua New Guinea

D. Argentina

Answer & Explanation

Answer: B. Venezuela

  • India and Venezuela held the fourth round of foreign office consultations in Caracas, the capital city of Venezuela. As per the Ministry of External Affairs, both sides reviewed their bilateral relations, covering areas such as political, trade, energy, health and pharmaceuticals, Ayurveda and Yoga, agriculture, culture and science and technology.

7. Which Union Ministry launched Mentorship, Advisory, Assistance, Resilience and Growth (MAARG) portal?

A. Ministry of Commerce and Industry

B. Ministry of MSME

C. Ministry of Skill Development and Entrepreneurship

D. Ministry of Labour and Employment

Answer & Explanation

Answer: A. Ministry of Commerce and Industry

  • The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)–(Ministry of Commerce and Industry) has invited applications from start–ups for registration on the MAARG portal. MAARG portal – Mentorship, Advisory, Assistance, Resilience and Growth, is a one–stop platform to facilitate mentorship for startups across various sectors, functions and stages.

8. Anwar Ibrahim has sworn in as the new Prime Minister of which country?

A. Singapore

B. Malaysia

C. Afghanistan

D. UAE

Answer & Explanation

Answer: B. Malaysia

  • Malaysia’s veteran opposition leader Anwar Ibrahim has recently sworn in as the country’s new Prime Minister. The new PM was sworn in by the king after days of post–election deadlock following inconclusive elections. Anwar says he will tackle Malaysia’s rising cost of living and combat corruption.

9. Which is the headquarters of Centre for Development of Telematics (C–DOT)?

A. Mumbai

B. New Delhi

C. Gurugram

D. Kolkata

Answer & Explanation

Answer: B. New Delhi

  • The Centre for Development of Telematics (C–DOT) is an Indian Government owned telecommunications technology development centre. It is headquartered in New Delhi. Union Minister Ashwini Vaishnaw inaugurates Entrepreneurship Cell and Centre of Innovation at the Delhi campus of the Centre for Development of Telematics, C–DOT.

10. Which country is the host of the inaugural India–ASEAN Defence Ministers’ Meeting?

A. India

B. Cambodia

C. Thailand

D. Laos

Answer & Explanation

Answer: B. Cambodia

  • The inaugural India–ASEAN Defence Ministers’ Meeting is being held at Siem Reap in Cambodia to commemorate the 30th Anniversary of India–ASEAN relations. India’s Defence Minister Rajnath Singh made two proposals including an initiative for women in United Nations Peace Keeping (UNPK) operations and initiative on marine plastic pollution.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!