Tnpsc

9th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. உலக பால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.1

ஆ) ஜூன்.2

இ) ஜூன்.3

ஈ) ஜூன்.4

  • உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்கூறுவதற்கும், பால் மற்றும் பால் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை கொண்டு சேர்ப்பதற்குமாக ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது.

2. உலக பெற்றோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.1

ஆ) ஜூன்.2

இ) ஜூன்.3

ஈ) ஜூன்.4

  • 2012’இல், ஜூன்.1ஆம் தேதியை, உலக பெற்றோர் நாளாக ஐநா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • “Appreciate All Parents Throughout the World” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

3. உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.1

ஆ) ஜூன்.2

இ) ஜூன்.3

ஈ) ஜூன்.4

  • ஐநா பொது அவையானது ஜூன்.3ஆம் தேதியை உலக சைக்கிள் நாளா -க அறிவித்தது. நீடித்த வளர்ச்சி மற்றும் நலத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக, மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவிக்க ஐநா அதன் இணை அமைப்புகளை ஊக்குவிக்கிறது. தேசிய மற்றும் உள்ளூரளவில் மிதிவண்டிப்பேரணிகளை நடத்துவதற்கும், சமூகத்தில் மிதிவண்டி ஓட்டுதல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் இந்நாள் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

4. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட் -டு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) ஜூன்.1

ஆ) ஜூன்.2

இ) ஜூன்.3

ஈ) ஜூன்.4

  • ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.4ஆம் தேதி அன்று ஐநா அமைப்பால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது, 1982 ஆக.19 முதல் ஆண்டுதோ -றும் நினைவுகூரப்பட்டு வருகிறது.
  • உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உல
    -கெங்கிலும் உள்ள சிறார்கள் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள் -வதே இதன் நோக்கமாகும். இந்த நாள் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநா’இன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

5. நடப்பாண்டில் (2021) வரும் உலக சுற்றுச்சூழல் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Climate Action

ஆ) Ecosystem Restoration

இ) Enrich Our Environment

ஈ) Environment and SDG

  • விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஐநா அவை ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று உலக சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடப்படுகிறது. “Ecosystem Restoration” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. “சட்டத்துக்குப்புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலை தடுப்பதற்கான பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.2

ஆ) ஜூன்.3

இ) ஜூன்.4

ஈ) ஜூன்.5

  • “சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பி -டித்தலை தடுப்பதற்கான பன்னாட்டு நாள்”, ஒவ்வோராண்டும் ஜூன்.5 அன்று அனுசரிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளால் மீன்வளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உணர்துதலே இந் நாளின் நோக்கமாகும். கடந்த 2017 நவம்பரில், ஐநா பொது அவை, ஜூன் 5ஆம் தேதியை இந்தச் சிறப்பு நாளாக அறிவித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்நாள் கொண்டாடப்பட்டது.

7. நடப்பாண்டு (2021) வரும் உலக உணவு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Safe Food Today for a Healthy Tomorrow

ஆ) Food Safety, Everyone’s Business

இ) Food Safety, First and Foremost

ஈ) Food Safety is still far

  • நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, ஜூன்.7 அன்று உலக உணவு பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. “Safe Food Today for a Healthy Tomorrow” என்பது நடப்பாண்டு (2021) உலக உணவு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாகும். உணவுப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துதற்கு நாடுகள், உள்நாட்டு சமூகம் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்குமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

8. நடப்பாண்டில் (2021) வரும் உலக பெருங்கடல்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) The Ocean: Life and Livelihoods

ஆ) Innovation for a Sustainable Ocean

இ) Oceans are our real wealth

ஈ) Optimise our Oceans

  • உலக பெருங்கடல்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெருங்கடல்களைக் கொண்டாட மக்களை ஊக்குவிப்பதற்கும், கடல் நலத்தைப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • “The Ocean: Life and Livelihoods” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். கடந்த 1992ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சிமாநாட்டில், உலக பெருங்கடல்கள் நாளைக் கொண்டாடுவதற்கான கருத்தை கனடா நாடு முன்மொழிந்தது. கடந்த 2008 டிசம்பரில், ஐநா அவை ஜூன்.8ஆம் தேதியை உலக பெருங்கடல்கள் நாளாக நியமித்து அறிவித்தது.

9. நியூ கினியாவின் மழைக்காடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ‘லிட்டோரியா மிரா’ என்பது ஒரு____?

அ) பாம்பு

ஆ) தவளை

இ) நீர் நாய்

ஈ) பேரலகுப் பறவை

  • ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் குழுவானது நியூ கினியாவின் மழைக் காடுகளிலிருந்து ஒரு புதிய மரத்தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளது. அதன் சாக்லேட் நிறம் காரணமாக, “சாக்லேட் தவளை” என்றும் அது அழைக்கப்படுகிறது. அது லிட்டோரியா என்ற ஆஸ்திரேலிய மரத்தவளை இனத்தைச்சேர்ந்ததாகும். எனவே இப்புதிய இனத்திற்கு ‘லிட்டோரியா மிரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய இனத்தின் நெருங்கிய இனமாக ஆஸ்திரேலிய பச்சை மரத்தவளை இனம் உள்ளது.

10. நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கும் நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ரஷியா

ஈ) இஸ்ரேல்

  • நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி என்பது NASA’இன் புதிய அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாகும். அது தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. முன்னர், Wide Field Infrared Survey தொலைநோக்கி என்று அழைக்கப்பட்ட இது, NASA’இன் முதல் வானியல் துறை தலைவரான நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி எனப் பெயரிடப்பட்டது. அண்மையில், சூப்பர்நோவா எனப்படும் ஆயிரக்கணக்கான வெடிக்கும் விண்மீன்கள் இந்தத்தொலை நோக்கிமூலம் கண்காணிக்கப்படுவதாக NASA அறிவித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

முன்னாள் IAS அதிகாரி அனூப் சந்திர பாண்டே (62) தேர்தல் ஆணைய -ராக நியமிக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரியான அனூப் சந்திர பாண்டேயை தேர்தல் ஆணையராக குடியரசுத்தலைவர் நியமித்ததாக மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது இந்நியமனம் உடனடி -யாக அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்.12 அன்று ஓய்வுபெற்றதையடுத்து, சுஷீல் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி உயர்வுபெற்றார். இதனால் ஒரு தேர்தல் ஆணை -யர் பதவி காலியானது. அந்த இடத்துக்கு, தற்போது அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூர்த்தியாகும் வரை அவர் தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பார். உத்தர பிரதேச தலைமைச் செயலர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.

2. கரோனா உறுதியானால் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள்

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை

முகக்கவசம், கைகள் தூய்மை, பிறரிடமிருந்து விலகியிருத்தல் குறைந்த பாதிப்புடைய நோயாளிகள்

வீட்டில் தனிமைப்படுத்துதல்

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை

முகக்கவசம், கைகள் தூய்மை, தனிநபர் இடைவெளி

4 மணி நேரத்துக்கு ஒருமுறை நாடித்துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்ப பரிசோதனை

காய்ச்சல், சளிக்கு தேவைப்பட்டால் மருந்து உட்கொள்ளவும்

சளி, இருமல் அதிகரித்தால் மூச்சிளைப்பு நோய்க்கான இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம்

மிதமான, தீவிர பாதிப்புக்குள்ளானவர்கள்

மிதமான பாதிப்புடையவா்கள் மருத்துவமனைகளை நாட வேண்டும்

தீவிர பாதிப்புக்கு ICU பிரிவில் சிகிச்சை அவசியம்

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை

கைவிரலில் பல்ஸ்-ஆக்ஸி மீட்டரை பொருத்திக்கொண்டு தொடர்ந்து 6 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது ரத்த ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கும்கீழ் குறைந்தாலோ, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவ -மனைக்குச் செல்லவேண்டும்.

ஒவ்வொரு 6 – 8 மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தேவையான ஆய்வகப் பரிசோதனைகள்

முழு ரத்த அணு பரிசோதனை (சிபிசி)

ரத்த சர்க்கரை அளவு

சிறுநீர் பரிசோதனைகள்

சி-ரியாக்டிவ் புரோட்டின் (CRP)

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்திறன் பரிசோதனை

ஃபெரிட்டின் எனப்படும் ரத்த உறைதல் தொடர்பான பரிசோதனை

டி-டைமர், LDG, சிபிகே உள்ளிட்ட இரத்தத்தில் கிருமிகள் உள்ளதைக் கண்டறியும் பரிசோதனைகள்.

CRP, டி-டைமர் பரிசோதனைகள் 48 முதல் 72 மணி நேரத்துக்கு முறை மருத்துவரின் ஆலோசனைப்படி திரும்பவும் மேற்கொள்ள வேண்டும்.

நெஞ்சக ஊடு கதிர் (எக்ஸ்-ரே) பரிசோதனைகள் 48 மணி நேரத்துக்குப் பிறகு தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.

மிதமான மற்றும் தீவிர பாதிப்புடையவர்கள் மட்டுமே நெஞ்சக CT ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மேற்கொண்ட பரிசோதனைகளை செய்தல் வேண்டும்.

தன்னிச்சையாக எடுக்கக் கூடாத மருந்துகள்

ரெம்டெசிவிர்

ஸ்டீராய்டு மருந்துகள்

இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆன்ட்டிகாக்ளன்ட் மருந்துகள்

டோஸிலிசுமேப் அறிகுறிகளும், பாதிப்புகளும்.

3. ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐநா’வின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது.

சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கு -களை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐநா சார்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.

ஐநா சமூக-பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும். ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும். ஐநா சமூக-பொருளாதார கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், ஆசிய கண்டத்திலிருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அந்நாடுகள் 2022-2024 வரை கவுன்சிலின் உறுப்பினர்களாகச் செயல்படவுள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து துனிசியா, மோரீஷஸ், எஸ்வதினி, தான்சானியா உள்ளிட்ட நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்து குரோஷியா, செக் குடியரசு ஆகிய நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளும் ஐநா சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

4. 2021-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.3%: உலக வங்கி கணிப்பு

2021ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாகவும், அதுவே 2022ஆம் ஆண்டு 7.5 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதே நேரத்தில் சர்வதேச பொருளாதாரம் 2021ஆம் ஆண்டு 5.6 சதவீதம் வளரும் என்று உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் சா்வதேச பொருளாதார அறிக்கை வாஷிங்டனில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா பொருளாதாரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டு வருகிறது.

முன்னதாக, முதல் அலைத்தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக எழும்ப முயன்றபோது இரண்டாவது அலை தாக்கியது. எனினும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது பகுதியில் இந்தியப்பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. முக்கியமாக சேவைகள் துறை சிறப்பாக செயல்பட்டது.

இப்போது இந்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளால் உள்கட்டமை ப்பு, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரத் துறையில் செலவிடப்படுவது அதிகரித்துள்ளது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் எதிர்பார்த்ததைவிட வலுவான வேகமான மீட்சி இருக்கும். எனவே, 2021ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாகும், 2022இல் 7.5 சதவீதமாகவும், 2023இல் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா பிரச்சனையால் இந்தியாவில் நுகர்வு, முதலீடு குறைந்துள்ளது. அடுத்து ஆண்டுகளில் இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். பணி நிரந்தரமின்மை தொடர்பான அச்சம், வருமான அதிகரிக்காதது போன்றவை பிரச்சனைக்குரிய விஷயங்களாக தொடரும். வீட்டில் போடப்படும் பட்ஜெட் தொடங்கி பெரு நிறுவனங்கள், வங்கிகள் நிதிநிலை அறிக்கை வரை இதன் தாக்கம் அடுத்து வரும் ஆண்டுகளில் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சில நாடுகளில் சிறப்பான பொருளாதார மீட்சி இருக்கும். வளரும் நாடுகளில் வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2021’இல் 5.6 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

5. நாட்டிலேயே முதல் முறையாக 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டிய காஷ்மீர் கிராமம்

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 100% பேருக்கும் கரோனா தடுப்பூசி (முதல் டோஸ்) செலுத்தப்பட்ட முதல் கிராமம் என்ற பெருமையை காஷ்மீரின் வேயான் கிராமம் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டத்தில் தொலைதூர மலைப்பகுதியில் உள்ளது வேயான் என்ற கிராமம்.

6. பேஸ்புக் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமனம்

பேஸ்புக் நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OTT மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றை முறைப்படுத்தும் வகையி -ல் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப விதிகளைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி 50 இலட்சத்துக்கும் மேல் பயனாளர்களுள்ள சமூக ஊடகங்கள் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும். இந்த அதிகாரிகள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இவர்களைப் பயனாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவையும் வழங்கவேண்டும்.

இதன்படி பேஸ்புக் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பயனாளர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல கூகுள், வாட்ஸ் அப் நிறுவனங்களும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளன. இவை குறித்த விவரங்கள் அவற்றின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயனாளர்களின் புகார்களைப் பெற்றதற்கான ஒப்புகையை 24 மணி நேரத்துக்குள் இந்த அதிகாரிகள் கொடுக்க வேண்டும். மேலும் 15 நாட்களுக்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகளால் பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் பதிவுகளும் சாதாரண மக்களின் பதிவுகளைப் போலவே கருதப்படும் என இந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

1. When is the World Milk Day celebrated every year?

A) June 01

B) June 02

C) June 03

D) June 04

  • World Milk Day is celebrated on June 1, every year across the world. The first World Milk Day was held in the year 2001.
  • The Food and Agriculture Organisation of the UN chose June 1 as the World Milk Day, to highlight the role of milk and to publicise activities connected with milk and the milk industry.

2. When is the Global Parents Day celebrated every year?

A) June 01

B) June 02

C) June 03

D) June 04

  • June 1 was declared as the Global Day of Parents by the UN General Assembly in 2012. Since then, June 1 is being celebrated as Global Day of Parents every year. The day is celebrated with an objective of honouring all the parents around the world for their commitment and sacrifice they do for their children. The 2021 theme of the Global Parents Day is, “Appreciate All Parents Throughout the World”.

3. When is the World Bicycle Day celebrated every year?

A) June 01

B) June 02

C) June 03

D) June 04

  • The UN’s General Assembly had declared June 3 as World Bicycle Day. The UN encourage its stakeholders to encourage the use of bicycles as a means of promoting sustainable development and health. It also welcomes various initiatives to organise bicycle rides at the national and local levels and develop a culture of cycling in society.

4. When is ‘International Day of Innocent Children Victims of Aggression’ observed?

A) June 01

B) June 02

C) June 03

D) June 04

  • The UNGA decided to commemorate 4 June of each year as the ‘International Day of Innocent Children Victims of Aggression’. The objective of the day is to acknowledge the pain of the children across the world who are the victims of physical, mental and emotional abuse. UN had also ratified the Convention on the Rights of the Child.

5. What is the theme of the Environment Day, 2021?

A) Climate Action

B) Ecosystem Restoration

C) Enrich Our Environment

D) Environment and SDG

  • World Environment Day is celebrated on June 5 every year by the United Nations, to encourage awareness & environmental protection. The theme of World Environment Day, 2021 is “Ecosystem Restoration”.

6. When is the ‘International Day for the fight against Illegal, Unreported and Unregulated fishing’ observed?

A) June 02

B) June 03

C) June 04

D) June 05

  • The International Day for the fight against Illegal, Unreported and Unregulated (IUU) fishing is observed every year on June 5. The purpose of this day is to sensitise about the threats posed by unregulated fishing activities to the fisheries resources.
  • The United Nations General Assembly (UNGA) declared June 5 as the International Day for the fight against IUU fishing in November 2017. The first such day was celebrated in the year 2018.

7. What is the theme of the World Food Safety Day, 2021?

A) Safe Food Today for a Healthy Tomorrow

B) Food Safety, Everyone’s Business

C) Food Safety, First and Foremost

D) Food Safety is still far

  • World Food Safety Day has officially celebrated on 7th June 2020 to strengthen efforts to ensure that the food we eat is safe. The 2021 theme of the World Food Safety Day is, “Safe Food Today for a Healthy Tomorrow”. The day is celebrated to promote global food safety awareness and to bring together countries, civil society and private firms to take required action.

8. What is the theme of the World Oceans Day, 2021?

A) The Ocean: Life and Livelihoods

B) Innovation for a Sustainable Ocean

C) Oceans are our real wealth

D) Optimise our Oceans

  • World Oceans Day is celebrated across the world on June 8, every year. The day is observed to encourage people to celebrate oceans and take steps to protect ocean health. The theme of World Oceans Day 2021 is “The Ocean: Life and Livelihoods”.
  • Canada proposed the concept for World Oceans Day in 1992 at the Earth Summit in Rio de Janeiro. In December 2008, the United Nations designated June 8 as World Oceans Day for the oceans.

9. ‘Litoria Mira’, that has been discovered from the rainforest of New Guinea, is a ……….?

A) Snake

B) Frog

C) Otter

D) Toucan

  • A team of Australian scientists has discovered a new species of a tree frog from the rainforests of New Guinea. Also called as the “chocolate frog” due to its chocolate colour, it belongs to the Australasian tree frog genus Litoria. Hence the new species was named as ‘Litoria mira’. The closest known relative of this new species is the Australian green tree frog.

10. Nancy Grace Roman Space Telescope is being developed by which country?

A) Japan

B) USA

C) Russia

D) Israel

  • Nancy Grace Roman Space Telescope is NASA’s new next-generation space telescope, which is currently under development. Formerly known as Wide Field Infrared Survey Telescope, it is named after NASA’s first Chief of Astronomy, as the Nancy Grace Roman Space Telescope. Recently, NASA announced that thousands of exploding stars called supernovae are to observed through this telescope.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!