TnpscTnpsc Current Affairs

9th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் உள்நாட்டு, ‘தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பின்’ பெயர் என்ன?

அ) சக்தி

ஆ) கவாச் 

இ) வீரா

ஈ) பிரம்மா

  • ‘கவாச்’ என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ‘தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு’ ஆகும். இது அண்மையில் தெற்கு மத்திய இரயில்வேயில் சோதனை செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டின்படி, 2022–23–இல் 2000 கிலோமீட்டர் ரயில்பாதை ‘கவாச்’ பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்படும். 2012 முதல் இந்தியாவின் சொந்த தானியங்கி பாதுகாப்பு அமைப்பாக திகழ்ந்து வரும் இது, ‘இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு’ என்ற பெயரிலிருந்து ‘கவாச்’ என மறுபெயரிடப்பட்டது.

2. கன்னியாகுமரி வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) மேற்கு வங்காளம்

  • தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வனவுயிரி சரணாலயத்தில் ‘Glycosmis albicarpa’ என்ற புதிய ஜின் பெர்ரி இனம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய தாவரவியல் ஆய்வு மைய அறிவியலாளர்கள் குழு ஒரு தனித்துவமான பெரிய வெண்ணிறமுடைய பழ இனத்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த இனம் தென்மேற்குத் தொடர்ச்சி மலைக –ளில் மட்டுமே காணப்படுகிறது. இது ஆரஞ்சு குடும்பமான ‘Rutaceae’ஐச் சேர்ந்தது.

3. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 (1) ஆனது எதனை கையாளுகிறது?

அ) இந்திய தேர்தல் ஆணையம்

ஆ) நிதி ஆணையம்

இ) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்

ஈ) ஈரவைகளிலும் ஆளுநரின் உரை 

  • அரசியலமைப்புச்சட்டத்தின் 176(1) பிரிவானது, ‘ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னும் முதல் கூட்டத்தொடர் தொடங்கும்போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுநர் உரையாற்ற வேண்டும்” எனக் கூறுகிறது.
  • வழக்கமான ஆளுநர் உரையின்றி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து தெலுங்கானா அரசு தனது முடிவை அறிவித்துள்ளதால் இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது.

4. டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) நீதிபதி இரஞ்சன் கோகோய்

ஆ) நீதிபதி சதாசிவம்

இ) நீதிபதி D N படேல் 

ஈ) நீதிபதி கே சந்துரு

  • இந்திய அரசு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி D N படேலை டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்துள்ளது.
  • டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் நுகர்வோர் இடையே உள்ள தகராறுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ இருக்கும் ஒருவரை இந்தத் தீர்ப்பாயம் தனது தலைவராகக் கொண்டுள்ளது.

5. ‘மழைகுண்டுகள்’ எனப்படும் அசாதாரண மழையால் பாதிக்கப்பட்ட நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) உக்ரைன்

இ) ஆஸ்திரேலியா 

ஈ) பெலாரஸ்

  • ஆஸ்திரேலியாவை ‘மழைகுண்டுகள்’ தாக்கியதால், அந்நாட்டின் மூன்றாவது அதிக மக்கள்தொகைகொண்ட நகரமான பிரிஸ்பேன் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது, இது கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளத்தைக் கொண்டுவந்து எட்டு பேரைக்கொன்றது.
  • பிரிஸ்பேன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளம் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ளமாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேன் மீது பொழிந்த இம்மழைப்பொழிவு அசாதாரணமானதாகும்; எனவே இது, ‘மழைகுண்டு’ என்று அழைக்கப்படுகிறது.

6. 22 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலை நிறுத்துவதற்காக ஏவுகலத்தை ஏவிய நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) அமெரிக்கா

இ) சீனா 

ஈ) ரஷ்யா

  • 22 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறு –த்துவதற்காக சீனா சமீபத்தில் லாங்மார்ச்–8 ஏவுகலத்தை ஏவியது; ஒரே ராக்கெட்மூலம் ஏவப்பட்ட அதிக விண்கலம் என்ற உள்நாட்டு சாதனையை சீனா படைத்தது.
  • இந்தச் செயற்கைக்கோள்கள் வணிக நோக்கிலான தொலையுணரி சேவைகள், கடற்சூழல் கண்காணிப்பு, காட்டுத் தீ தடுப்பு மற்றும் பேரிடர் தணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

7. 2022 – ஜன் ஔஷாதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Jan Aushadhi–Jan Upyogi 

ஆ) Atmanirbhar and Affordable Aushadhi

இ) Awareness of Jan Aushadhi Pariyojana

ஈ) Leaving No one Behind

  • மருந்துத் துறையின்கீழ் இயங்கும் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் ஜன் ஔஷாதி திவாஸ் வாரத்தை மார்ச் 7ஆம் தேதி முக்கிய நிகழ்வாகக் கொண்டாடியது. நான்காவது ஜன் ஔஷாதி திவாஸின் கருப்பொருள், “ஜன் ஔஷதி–ஜன் உப்யோகி” ஆகும்.
  • ‘பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனா’ ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் மருந்து எளிதில் சென்றடைவதை உறுதி செய்கிறது. 2025 மார்ச் இறுதிக்குள் பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி மையங்களின் எண்ணிக்கையை 10,500 ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

8. Geostationary Operational Environmental Satellite (GOES–T) செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) சீனா

இ) அமெரிக்கா 

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • அமெரிக்க தேசிய பெருங்கடல் & வளிமண்டல நிர்வாகம் (NOAA) Geostationary Operational Environmental Satellite (GOES–T) செயற்கைக்கோளை ஏவியது. இது யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ஏவுகலத்தில் ஏவப்பட்டது.
  • GOES–T என்பது GOES–R வரிசையின் ஓர் அண்மைய விண்கலமாகும். புவியின் வானிலை & காலநிலையை ஆய்வுசெய்வதற்காக பயன்படுத்தப்படும்.

9. ‘Remove Laws that Harm; Create Laws that Empower’ என்பது மார்ச்.1 அன்று கொண்டாடப்படுகிற எந்த நாளின் கருப்பொருளாகும்?

அ) பாகுபாடுகள் ஒழிப்பு நாள் 

ஆ) உலக எய்ட்ஸ் நாள்

இ) உலக சமத்துவ நாள்

ஈ) உலக சமூக நீதி நாள்

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற –து. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டு வருவதை நோக்கமெனக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்புதான் இந்த UNAIDS.
  • “Remove Laws that Harm; Create Laws that Empower” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில்வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. ‘தேசிய பாலினக்குறியீடு’ மற்றும் ‘மாநில ஆற்றல் மற்றும் காலநிலைக்குறியீடு’ ஆகியவை கீழ்காணும் எந்த நிறுவனத்தின் வரவிருக்கும் முயற்சிகளாகும்?

அ) ஐநா வளர்ச்சித் திட்டம்

ஆ) NITI ஆயோக் 

இ) UNICEF

ஈ) பொருளாதார புலனாய்வு பிரிவு

  • தேசிய பாலினக் குறியீட்டை உருவாக்கும் பணியில் NITI ஆயோக் ஈடுபட்டுள்ளது; இது பாலினம் தொடர்பான கொள்கை நடவடிக்கையை ஆதரிக்கும். மேலும், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கட்டமைப்பிற்கு ஏற்றவாறு இது சீரமைக்கப்படும். NITI ஆயோக், ‘மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீட்டெண்’ வரைவை பல்வேறு அளவுருக் –களில் மாநிலங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக உருவாக்கியுள்ளது.
  • மாநிலங்கள் தங்கள் ஆற்றல் வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கும் மக்களுக்கு சிறந்த ஆற்றல் அணுகலை வழங்குவதற்கும் இந்தக் குறியீடு உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இரண்டு இலட்சம் தடுப்பூசி செலுத்தி சென்னை செவிலியர் சாதனை

சென்னை பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றுபவர் சிவசங்கரி. கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 2 இலட்சத்து 306 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியுள்ளார்.

இதேபோல் திருச்சி பீமன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் தாரணி என்பவர் 302,005 தடுப்பூசிகள் செலுத்தி இருக்கிறார்.

தேசிய அளவில் சாதனை படைத்த இந்த இரண்டு செவிலியர்களுக்கும் தில்லியில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் விருது வழங்கப்பட்டது.

2. உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

எகிப்தின் கெய்ரோ நகரில் உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்றனர். கடைசி நாளான இன்று 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது. தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இவர்கள் இருவரும் 17-7 என தாய்லாந்து ஜோடியை வென்றனர்.

25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி, ஜெர்மனியிடம் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கம் வென்றது.

இதன்மூலம் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. மூன்று தங்கம், ஒரு வெள்ளி, இரு வெண்கலப்பதக்கங்களுடன் நார்வே அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் அணி 3 தங்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்தது.

இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 22 நாடுகள் பதக்கங்கள் வென்றுள்ளன.

3. சந்திரனில் முதன்முறையாக NASA சார்பில் 4ஜி நெட்வொர்க்: இந்தியரான நிஷாந்த் பத்ரா அமைக்கிறார்

NASA விண்வெளி அமைப்புக்காக சந்திரனில் முதல் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு தில்லியில் பிறந்த நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார்.

தில்லியில் 1978இல் பிறந்தவர் நிஷாந்த் பத்ரா. இந்தூரில் உள்ளதேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் பட்டம் பெற்ற இவர், பிறகு இன்சீட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலையில் தொலைத்தொடர்பு துறையிலும் கணினி அறிவியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தற்போது பின்லாந்து நாட்டின் எஸ்பூ நகரில் வசிக்கும் நிஷாந்த் பத்ரா, நோக்கியா நிறுவனத்தில் உத்தி மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்கான சர்வதேச தலைவராக உள்ளார். மேலும் 9 நோபல் பரிசுகளையும் ஐந்து டூரிங் விருதுகளையும் பெற்றுள்ள ‘பெல் லேப்ஸ்’ நிறுவனத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

NASA விண்வெளி அமைப்புக்காக சந்திரனில் முதல் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார்.

4. உலக மகளிர் நாளை முன்னிட்டு 29 பெண்களுக்கு குடியரசு தலைவர் விருது

சர்வதேச மகளிர் தினமான நேற்று, நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருதுகளை (நாரி சக்தி புரஸ்கார்) குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் பெண்சக்தி விருது வழங்கப்படுகிறது. தொழில்முனைவு, வேளாண்மை, சமூகப் பணி, கல்வி, இலக்கியம், மொழியியல், கலைகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஊனமுற்றோர் உரிமைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்ற -னர்.

இந்நிலையில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கும் விழா, சர்வதேச மகளிர் தினமான நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது. இதில் நாட்டின் தலைசிறந்த 29 பெண்களுக்கு பெண் சக்தி விருதுகளை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

3 தமிழக பெண்களுக்கு விருது

தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கும் பெண் சக்தி விருது வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகிய இருவருக்கும் 2020-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கப்பட்டது. மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமிக்கு 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருது வழங்கப்பட்டது.

ஜெயமுத்து, தேஜம்மா ஆகிய இருவரும் பள்ளி நாட்களில் இருந்து தோடா எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்கி வருகின்றனர். டாக்டர் தாரா ரங்கசாமி, சென்னையில் உள்ள ஸ்கிசோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஸ்கார்ப்) இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக உள்ளார்.

5. திறன் மேம்பாட்டுக்கழகம் பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம் – ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக முதல்வர் தலைமையில் கையெழுத்தானது

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளையோர்க்கான புதிய முன்னெடுப்பாக, ‘நான் முதல்வன்’ என்ற திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டத்தை மார்ச்.1ஆம் தேதி, முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவது மட்டுமின்றி, நேர்முகத் தேர்வுகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும், அவர்களின் தனித்திறன்களை மெருகேற்றவும் பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டது.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லீஸ் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம் இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

6. பெண்கள், குழந்தைகளுக்காக பணியாற்றிய கிரிஜா குமார்பாபுவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருது: தங்கப்பதக்கம், `1 லட்சத்துக்கான காசோலையை மு க ஸ்டாலின் வழங்கினார்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகப் பணியாற்றிய கிரிஜா குமார்பாபுவுக்கு இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு, பெண்களுக்கான சேவையில் சிறந்துவிளங்கும் மகளிரை கௌரவிக்கும் வகையில், சமூக நலத்துறைமூலம் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் அதிகாரம், மதநல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதுடன், சேவை மனப்பான்மையோடு தொண்டாற்றியவர்களைப் பாராட்டி எட்டு கிராம் தங்கப் பதக்கம், `1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுப்பத்திரம் அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருதை, தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிரிஜா குமார்பாபுவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். பெண்கள், குழந்தைகளுக்கு இவர் ஆற்றிய சேவை களைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது

2020-21ஆம் ஆண்டுக்கான ‘எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர்’ விருதுகளும் வழங்கப்பட்டன. அதன்படி கருப்பு கவுனி ரகம் சாகுபடியில் அதிக மகசூல் செய்து மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த செ மூர்த்திக்கு விருதுடன் பரிசுத்தொகையாக `1 லட்சத்துக்கான காசோலையையும், வாசனை சீரக சம்பா சாகுபடியில் அதிக மகசூல் செய்து இரண்டாம் இடம் பெற்ற திருநெல்வேலியைச்சேர்ந்த கோ.பொன்னு புதியவனுக்கு விருதுடன் பரிசுத்தொகை `75,000-க்கான காசோலை
-யையும், ஆத்தூர் கிச்சடி சம்பா சாகுபடியில் அதிக மகசூல் செய்து 3ஆம் இடம் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த பி லட்சுமி தேவிக்கு விருதுடன் `50 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

7. அடிப்படை அம்சங்களைக் கொண்ட கைப்பேசிக்கும் UPI வசதி

அடிப்படை அம்சங்களைக்கொண்ட கைப்பேசி மூலமாகவு -ம் UPI பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதியை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடக்கிவைத்தார். மேலும் அவர் கூறியதாவது:

தற்போது வரை UPI பணப்பரிவர்த்தனை வசதியானது திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. அதன் காரணமாக கிராமப்பகுதிகளில் வசிக்கும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களை அந்த வசதி சென்றடைய முடியவில்லை. திறன்பேசிகளின் விலை தொடர்ந்து குறைந்தாலும், அவர்களுக்கு UPI வசதி சென்று அடையவில்லை.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘UPI 123பே’ வசதி மூலமாக அடிப்படை அம்சங்களைக்கொண்ட கைப்பேசியைப் பயன்படுத்துவோரும் பணப் பரிவர்த்த
-னையை மேற்கொள்ள முடியும். இது நிதி சேவைகளை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கொண்டுசேர்க்க உதவும்.

நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் இதுவரை `76 லட்சம் கோடிக்கு UPI பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட் -டுள்ளன. கடந்த நிதியாண்டில் `41 இலட்சம் கோடி அளவுக்கு மட்டுமே பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள -ப்பட்டிருந்தன. விரைவில் இது `100 இலட்சம் கோடியை எட்டும் என அவர் கூறினார்.

1. What is the name of India’s indigenous ‘Automatic Train Protection System’?

A) Shakti

B) Kavach 

C) Veera

D) Brahma

  • Kavach is the indigenously developed ‘Automatic Train Protection System’, which was recently tested on South Central Railway. As per the Union Budget, the system is scheduled for complete rollout on 2,000 km in 2022–23. It is India’s own automatic protection system in development since 2012, under the name Train Collision Avoidance System (TCAS), which got renamed to Kavach.

2. Kanyakumari Wildlife Sanctuary is located in which state?

A) Tamil Nadu 

B) Kerala

C) Andhra Pradesh

D) West Bengal

  • ‘Glycosmis albicarpa’, a new gin berry species, was recently discovered from Kanyakumari Wildlife Sanctuary, Tamil Nadu. A team of scientists from the Botanical Survey of India (BSI) has discovered the species with a distinct large white fruit. The species is endemic to the southern Western Ghats and it belongs to the orange family, Rutaceae.

3. What does Article 176 (1) of the Constitution of India deal with?

A) Election Commission of India

B) Finance Commission

C) Presentation of Budget in Parliament

D) Governor’s Address in both the Houses of State 

  • Article 176(1) of the Constitution states that ‘Governor shall address both the houses of the state legislative assembly together at the commencement of the first Session after each general election and at the first session of each year’.
  • The article is in the news recently because Government of Telangana has announced its decision on conducting the budget session of the legislature without the customary Governor’s address.

4. Who has been appointed as the Chairperson of Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)?

A) Justice Ranjan Gogoi

B) Justice Sadasivam

C) Justice D N Patel 

D) Justice K Chandru

  • The Government of India has appointed Delhi High Court Chief Justice D N Patel as the chairperson of the Telecom Disputes Settlement and Appellate Tribunal. The Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT) was set up to adjudicate disputes among telecom operators and consumers.
  • The tribunal consists of a chairperson who should be or should have been a Judge of the Supreme Court or the Chief Justice of a High Court.

5. Which country has been hit by extra–ordinary rains called ‘Rain Bombs’?

A) Russia

B) Ukraine

C) Australia 

D) Belarus

  • Australia has been hit by ‘Rain Bombs’, which caused evacuations and power outages. Australia’s third–most populous city Brisbane was most hit by the rains, which brought record flooding to some east coast areas and killed eight people.
  • The flooding in Brisbane and its surroundings is said to be the worst since 2011. The rainfall over Brisbane has been extraordinary and hence called as ‘Rain Bomb’.

6. Which country launched a rocket to place record 22 satellites in space?

A) UAE

B) USA

C) China 

D) Russia

  • China recently launched a Long March–8 rocket to place 22 satellites in space, setting a domestic record for the most spacecraft launched by a single rocket. These satellites will be used for commercial remote sensing services, marine environment monitoring, forest fire prevention and disaster mitigation.

7. What is the theme of the Janaushadhi Diwas 2022?

A) Jan Aushadhi–Jan Upyogi 

B) Atmanirbhar and Affordable Aushadhi

C) Awareness of Jan Aushadhi Pariyojana

D) Leaving No one Behind

  • Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI), under the aegis of Department of Pharmaceuticals is set to celebrate the Jan Aushadhi Diwas Week, with the main event on March 7. The theme of 4th Janaushadhi Diwas is “Jan Aushadhi–Jan Upyogi”.
  • PM Bharatiya Jan Aushadhi Pariyojana ensures easy reach of affordable medicine to the people in every district. The Government has set a target to increase the number of Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendras (PMBJKs) to 10,500 by the end of March 2025.

8. Which country launched the Geostationary Operational Environmental Satellite GOES–T satellite?

A) Russia

B) China

C) USA 

D) UAE

  • The U.S. National Oceanic and Atmospheric Administration (NOAA) launched the Geostationary Operational Environmental Satellite GOES–T satellite. It was launched aboard a United Launch Alliance (ULA) Atlas V rocket.
  • GOES–T is the latest spacecraft of the GOES– R series. It will be used by the researchers to study Earth’s weather and climate.

9. ‘Remove laws that harm; Create laws that empower’ is the theme of which day celebrated on March 1?

A) Zero Discrimination Day 

B) World AIDS Day

C) World Equality Day

D) World Social Justice Day

  • The ‘Zero Discrimination Day’ is observed annually across the world on March 1, by UNAIDS. UNAIDS is the leading global forum which aims to end AIDS as a public health threat by 2030. This year theme of the day is, “’Remove laws that harm; Create laws that empower”.

10. ‘National Gender Index’ and ‘State Energy and Climate Index’ are the upcoming initiatives of which institution?

A) UNDP

B) NITI Aayog 

C) UNICEF

D) Economist Intelligence Unit

  • Niti Aayog is in the process of developing a National Gender Index, which will support policy action and advocacy around gender and will be aligned to the framework of Sustainable Development Goals.
  • NITI Aayog has also developed a draft State Energy and Climate Index to assess the performance of states on various parameters. The index will help states to efficiently manage their energy resources and provide people better access to energy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!