TnpscTnpsc Current Affairs

9th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்திய இரயில்வே ஆனது எந்த நகரங்களுக்கு இடையே ‘கதி சக்தி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு இரயிலை’ அறிமுகப்படுத்தியுள்ளது?

அ) தில்லி-பாட்னா 

ஆ) தில்லி-வாரணாசி

இ) வாரணாசி-கேவாடியா

ஈ) தில்லி-நைனிடால்

  • இந்திய இரயில்வே ஆனது தில்லி மற்றும் பாட்னா இடையே ‘கதி சக்தி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு இரயிலைத்’ தொடங்கியுள்ளது. இந்தப் பண்டிகைக் காலத்தில் பயணிகளின் வசதிக்காக ஆனந்த் விஹார் முனையம் – பாட்னா – ஆனந்த் விஹார் முனையம் வரை இந்தக் ‘கதி சக்தி சூப்பர் பாஸ்ட் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.

2. 2021ஆம் ஆண்டு முதல் எத்தனை ஆண்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) இரண்டு ஆண்டுகளுக்கு

ஆ) மூன்று ஆண்டுகளுக்கு 

இ) நான்கு ஆண்டுகளுக்கு

ஈ) ஐந்து ஆண்டுகளுக்கு

  • அமைச்சரவையின் நியமனக்குழு, 10.12.2021’க்குப்பிறகு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநரான சக்திகாந்த தாஸை 3 ஆண்டுகளுக்கு மறுநியமனம்செய்து உத்தரவிட்டு உள்ளது. ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சக்திகாந்த தாஸ், டிசம்பர் 12, 2018 முதல் ரிசர்வ் வங்கியின் 25ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவர் 15ஆவது நிதிக்குழுவின் உறுப்பினராகவும் ஓர் ஆண்டு காலம் பணியாற்றினார்.
  • ஜூலை 1, 1949 முதல் ஜனவரி 14, 1957 வரை RBI’இன் ஆளுநராகப் பணியாற்றிய பெனகல் ராமா ராவ் அவர்களே RBI வரலாற்றில் அதிக நாள் ஆளுநராகப் பணியாற்றியவர் ஆவார்.

3. MSME’களுக்கு உதவும் வகையில் பொதுத்துறை கொள்முதல் மற்றும் திட்ட நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம் 

இ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம்

  • நிதி அமைச்சகமானது பொது கொள்முதல் மற்றும் திட்ட நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. இது திட்டங்களைச் செயல்படுத்த -வும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) சரியான நேரத்தில் பணஞ்செலுத்தவும் நோக்கம் கொண்டது.
  • இப்புதிய வழிகாட்டுதல்கள் ஒப்பந்ததாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாற்று வழிமுறைகளைத் தருகிறது. பழைய முறை குறைந்த வணிக ஏலத்திற்கு அதிக ஆதரவளிக்கிறது.

4. தற்கொலைகள் குறித்த NCRB’இன் தரவுகளின்படி, நிகழ்ந்த மொத்த தற்கொலைகளில், பின்வரும் எந்தத் துறைசார்ந்தோர் அதிக பங்கினைக் கொண்டுள்ளனர்?

அ) தினக்கூலிகள் 

ஆ) இல்லத்தரசிகள்

இ) வேலையற்றோர்

ஈ) உழவர் பெருமக்கள்

  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில் மொத்தம் 37,666 தினக்கூலிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மொத்த தற்கொலைகளில் மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. அவர்களைப் பின்தொடர்ந்து இல்லத்த -ரசிகளும் உழவர் பெருமக்களும் உள்ளனர். இவ்வறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 1.53 இலட்சத்திற்கும் அதிகமான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
  • 2020ஆம் ஆண்டில், இந்தியாவில் தினமும் சராசரியாக 31 குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வதாகவும் அது மேற்கோளிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து 2020’இல் 11,396 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

5. தேசபக்தி கீதம் இயற்றுவதற்கான போட்டிகளை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) வெளியுறவு அமைச்சகம்

ஆ) கலாச்சார அமைச்சகம் 

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • ஆசாதி கா அம்ரித் மகோத்சவத்தின்கீழ் மூன்று போட்டிகளை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. அவை தேசபக்தி கீதம் இயற்றுதல், இரங்கோலி வரைதல் மற்றும் லோரி எழுதுதல் ஆகும். இந்தப் போட்டிகள் தாலுகா மட்டத்திலிருந்து தேசிய அளவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியை பிரதமர் மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்தப் போட்டி ஓரிரு மாதங்களுக்கு நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

6. அண்மையில் தொடங்கப்பட்ட ‘டையரி சகாகர்’ திட்டத்தைச் செய -ல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ) உழவு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) கூட்டுறவு அமைச்சகம் 

ஈ) உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம்

  • அமுலின் 75ஆவது நிறுவன ஆண்டு கொண்டாட்டத்தின்போது, குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற இடத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா, “டையரி சகாகர்” திட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டுறவு அமைச்சகத்தின்கீழ், மொத்தம் `5000 கோடி முதலீட்டில், என்சிடிசியால் டையரி சகாகர் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இந்தத்திட்டத்தின்கீழ், பால் கொள்முதல், பதப்படுத்துதல், தர உத்தரவாதம், மதிப்புக்கூட்டல், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்தல், பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகளின் போக்குவரத்து மற்றும் சேமிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகட்கு தகுதியுள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

7. முதன்முறையாக தும்பியினங்களை ஆவணப்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • பூச்சியியல் வல்லுநர்கள் குழு முதன்முறையாக கேரள மாநிலத்தில் தும்பியினங்களை ஆவணப்படுத்தியுள்ளது. கேரளாவில் 181 வகையான தும்பியினங்கள் உள்ளன. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சொந்தமான 68 இனங்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இந்த ஆய்வின்படி, மேற்குத்தொடர்ச்சி மலையின் தும்பியினங்கள் 207 ஆக உள்ளன; அவற்றுள் 80 இனங்கள் உள்ளூர் இனங்களாம்.

8. தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அசோக் பூஷன் 

ஆ) AK சிக்ரி

இ) ரஞ்சன் கோகோய்

ஈ) J முகோபாதயா

  • ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரான அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக 4 ஆண்டுகள் / அவர் 70 வயது வரை எட்டும் வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2020 மார்ச்சில் அப்போதைய தலைவராக இருந்த நீதியரசர் S J முகோபாதயா ஓய்வுபெற்றதால், அப்பதவி காலியாக இருந்தது. மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் இராமலிங்கம் சுதாகரை, தேசிய நிறுவன சட்டத்தீர்ப்பாயத்தின் (NCLT) தலைவராகவும் அரசாங்கம் நியமித்துள்ளது.

9. ‘சர்தார் படேல் தலைமைத்துவ மையம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?

அ) நைனிடால்

ஆ) முசோரி 

இ) வாரணாசி

ஈ) நாக்பூர்

  • முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) ‘சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தை’ நாட்டிற்கு அர்ப்ப -ணித்தார் மத்திய மாநில பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங் -கள், டாக்டர் ஜிதேந்திர சிங். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் விழாவில் இது திறக்கப்பட்டது.

10. 2021 – தேசிய ஆயுர்வேத நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Ayurveda for Poshan 

ஆ) Ayurveda for COVID

இ) Aatmanirbhar Ayurveda

ஈ) Amrut Ayurveda

  • தேசிய ஆயுர்வேத நாளானது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தன்வந்திரி ஜெயந்தி அன்று கொண்டாடப்படுகிறது. “Ayurveda for Poshan” என்பது இந்த ஆண்டு (2021), தேசிய ஆயுர்வேத நாளுக்கானக் கருப்பொருள் ஆகும். இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சகுலாவில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் துணை மையத்தின் உட்கட்டமைப்
    -பை விரிவுபடுத்துவதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் `260 கோடி நிதியுதவி அறிவித்தார். நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வத்திற்காக தன்வந்திரி பகவான் வழிபடப்படுகிறார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: குடியரசுத்தலைவர் வழங்கினார்

2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தமிழகத்திலிருந்து மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார்பில் அவரின் மகன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, வடசென்னை மருத்துவர் மறைந்த திருவேங்கடம் சார்பில் அவரின் குடும்பத்தினர், 106 வயது பாப்பம்மாள் உள்ளிட்டோர் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் காலதாமதமாக கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகை தர்பார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:

பத்ம விபூஷண்: 15 மொழிகளில் 40,000 பாடல்களைப் பாடிய மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை அவரின் மகன் எஸ்.பி.பி. சரண் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

பிரபல மருத்துவர் பி எம் ஹெக்டே, அகண்ட அலைவரிசையில் ஃபைபர் ஆப்டிகல் தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானி நரேந்திர சிங் கபானி, சர்வதேச அளவில் முன்னிலையில் இருக்கும் ஒடியா சிற்பக் கலைஞர் சுதர்சன் சாகு, மறைந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹிதுதீன் கான், தொல்லியல் வல்லுநர் பிபி லால் உள்ளிட்ட ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

பத்ம பூஷண் விருது: பத்ம பூஷண் விருது 10 பேருக்கு வழங்கப்பட்டது. பின்னணிப் பாடகி கே எஸ் சித்ரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக இருந்தவருமான நிருபேந்தர மிஸ்ரா, முன்னாள் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றனர்.

அரசியல், பொதுவாழ்க்கையில் சாதனை படைத்த மறைந்த தருண் கோகோய் (அஸ்ஸாம் முன்னாள் முதல்வர்), மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் (முன்னாள் மத்திய அமைச்சர்) ஆகியோருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவர்களின் குடும்பத்தினர் பெற்றனர்.

பத்மஸ்ரீ: 102 பேருக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தேசிய கூடைப்பந்து வீராங்கனை பி அனிதா, வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயத்தில் புகழ்பெற்ற பாப்பம்மாள், கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு குறைந்த செலவில் கழிப்பறைகளை நிறுவி சுகாதாரத்தை நிலைநாட்டிய திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகர் மராச்சி சுப்புராமன், ஐடி துறை தொழில்முனைவோராகி, 5 கோடி பேர் பயன்படுத்தி வரும் மென்பொரு -ள்களைத் தயாரித்த ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றனர்.

வடசென்னையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் புரிந்து சாமானிய மக்களுக்கு தொண்டாற்றி மறைந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், ‘சந்தமாமா’ பத்திரிகையின் கார்ட்டூன் கலைஞரான மறைந்த கே சி சிவசங்கர், கியர் தயாரிப்பில் புகழ்பெற்று ‘கியர்மேன்’ என அழைக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் பி சுப்பிரமணியன் ஆகியோருக்கான பத்மஸ்ரீ விருதுகளை அவர்களின் குடும்பத்தினர் பெற்றனர்.

40 ஆண்டுகளாக சமூக, கல்வி நோக்கங்களுக்காக பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய புதுச்சேரி கேசவசாமியும் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். பெங்களூரைச் சேர்ந்த பாரா தடகள வீரர் கே ஒய் வெங்கடேஷ் போன்றோர் பத்ம விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

2. தஞ்சாவூர் பெரிய கோயிலில் நவ.13-ல் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா நவ.13-ம் தேதி நடைபெற உள்ளது.

உலகமே வியக்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி சதயநட்சத்திரம் அன்று, சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா நவ.13-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

3. நம்பிக்கை தரும் கரோனா மாத்திரைகள்

கரோனாவுக்கு எதிரான போரில், உலக நாடுகள் தடுப்பூசிகளைப் பேராயுதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இரண்டு வகை மாத்திரைகள் புதிய ஆயுதங்களாக வந்திருப்பது கரோனா சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மெர்க் நிறுவனம், ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘EIDD 2801’ மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இது அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது.

தற்போது கரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர், டெக்சாமெத்தசோன், ‘ஒற்றைப் படியாக்க எதிரணு மருந்து’ (Monoclonal antibody) ஆகியவற்றின் வரிசையில் புதிதாக இந்த மாத்திரையும் சேர்ந்திருக்கிறது. ‘மோல்னுபிரவிர்’ (Molnupiravir) என்பது இதன் வணிகப் பெயர். பிரிட்டனில் இது ‘லேகேவ்ரியோ’ (Lagevrio) எனும் பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் கரோனாவுக்கு எதிராக வழங்கப்படும் வாய்வழி வைரஸ் மாத்திரை என்பது இதன் தனித்துவம்.

கரோனா தடுப்பூசிக்கு முதன்முதலில் அனுமதி அளித்த நாடு பிரிட்டன். ஆனாலும், அங்கு கரோனா பெருந்தொற்றுப் பரவல் இன்னமும் நீடிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அந்த நாட்டுக்கு இருக்கிறது. அதனால், இந்தப் புதிய மருந்துக்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்த வகையில் கரோனா தொற்றுப் பரவல் ஏறுமுகத்தில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளிடத்திலும் இது முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இந்தியாவில் இதைத் தயாரிக்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

மோல்னுபிரவிர் மாத்திரை கரோனா தொற்றைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்திவிடுவதால், தொற்றாளர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறைப்பதிலும், அவர்களின் உயிரைக் காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூன்று கட்ட ஆய்வுகளின்போது, மிதமான மற்றும் நடுத்தர பாதிப்பு ஏற்பட்ட கரோனா தொற்றாளர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடற்பருமன், இதயநோய், நீரிழிவு போன்ற துணை நோய்களில் ஏதாவது ஒன்று காணப்பட்ட கரோனா தொற்றாளர்களிடமும் ஆய்வு செய்யப்பட்டதில், இந்த மாத்திரை தொற்றாளர்களின் இறப்பு விகிதத்தை 50% குறைத்திருக்கிறது. 29 நாட்கள் அவர்களைத் தொடர்ந்து கவனித்த அளவில் இந்த மாத்திரை வழங்கப்பட்டவர்களில் யாரும் மரணமடையவில்லை எனவும், பொய் மாத்திரை (Placebo) வழங்கப்பட்டவர்களில் 8 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் மோல்னுபிரவிர் மாத்திரையின் பாதுகாப்புத் தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தொற்றாளர்களிடம் இது ஆய்வு செய்யப்பட்டதால், இதன் நம்பகத்தன்மையும் உறுதியாகியுள்ளது. இது கர்ப்பிணிகளிடம் ஆய்வு செய்யப்படவில்லை என்பது மட்டுமே குறை.

எப்படி வேலை செய்கிறது?

வழக்கத்தில், தொற்றாளரின் செல்களில் கரோனா வைரஸ் வேகவேகமாக நகலெடுத்துப் பெருகி வளரும் குணமுடையது. மோல்னுபிரவிர் மாத்திரை கரோனா வைரஸின் மரபணு வரிசையில் நகலெடுக்க உதவுகிற முக்கியமான நொதிகளை மாற்றியமைத்துப் பல்வேறு பிழைகளை உண்டாக்கிவிடுவதால், எப்போதும்போல் நகலெடுப்பதில் கரோனா வைரஸுக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதன் நகலெடுப்பு வேகம் குறைந்துவிடுகிறது. உடலில் வைரஸ் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இப்படி, கரோனா தொற்று ஆரம்பத்திலேயே அடங்கிவிடுகிறது.

கரோனா வைரஸிடம் இதுவரை காணப்பட்ட காமா, டெல்டா, டெல்டா பிளஸ், மியூ என எல்லா வகை வேற்றுருவங்களின் தொற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மோல்னுபிரவிர் மாத்திரைக்கு உள்ளது என்பது கூடுதல் நன்மை. உலக அளவில் 53 லட்சம் பேரை பலிவாங்கியிருக்கும் கரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவர இது ஓர் அருமருந்தாக அமையும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட, ஏதேனும் ஒரு துணைநோயுள்ள கரோனா தொற்றாளருக்கு அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களுக்குள் தொற்றை உறுதிசெய்து, இந்த மாத்திரையைக் கொடுத்துவிட வேண்டும். ஒரு வேளைக்கு 800 மி.கி. வீதம் தினமும் இரண்டு வேளைகளுக்கு மொத்தம் 5 நாட்களுக்கு இதை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் மேற்பார்வையில், வீட்டில் இருந்துகொண்டே இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்பது மற்றொரு நன்மை.

பைசர் மாத்திரை

மெர்க் நிறுவனத்தைப்போலவே பைசர் நிறுவனமும் ‘PF-07321332/Ritonavir’ எனும் கரோனா மாத்திரையைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்றுக் கழகத்தின் (FDA) அனுமதிக்காக இந்த நிறுவனம் காத்திருக்கிறது. ‘பேக்ஸ்லோவிட்’ (Paxlovid) எனும் வணிகப் பெயரில் இது சந்தைக்கு வர இருக்கிறது; கரோனா தொற்றை ஆரம்பநிலையிலேயே தடுத்து, தொற்றாளருக்கு இறப்பு ஏற்படுவதை 89% தவிர்த்துவிடும் ஆற்றல் கொண்டது. இதைக் கர்ப்பிணிகளுக்கும் வழங்கலாம் என்பது கூடுதல் நன்மை.

இதுவும் கரோனா தொற்றின் அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டிய மாத்திரைதான். ஒரு வேளைக்கு 2 மாத்திரைகள் வீதம் தினமும் இரண்டு வேளைகளுக்கு மொத்தம் 5 நாட்களுக்கு எடுக்கப்பட வேண்டும். இது, கரோனா வைரஸ் நகலெடுக்கத் தேவையான ‘புரோட்டியேஸ்’ நொதியின் உற்பத்தியைத் தடுத்துவிடுவதால், தொற்றாளரிடம் இதன் எண்ணிக்கை கட்டுப்படுகிறது. தொற்று தீவிரமாவது மட்டுப்படுகிறது.

பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத இந்த இரண்டு வகை மாத்திரைகள் வழங்கப்படுவது நடைமுறைக்கு வரும்போது, தொற்றாளர்களுக்குச் சளிப் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதும், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டியதும், அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை பெறவேண்டியதும் முக்கியமாகின்றன. அதற்கு அரசுகளும் சமூகமும் தயாராக வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

அடுத்ததாக, தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கரோனா மாத்திரைகளின் பயன்பாடு அவசரமாகத் தேவைப்படுகிறது எனவும், தடுப்பூசிகள் மிகக் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் கரோனா தொற்றாளர்களுக்கு இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தித் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் எனவும் வல்லுநர்கள் யோசனை கூறியுள்ளனர். ஆக மொத்தத்தில், தடுப்பூசியுடன் இந்த மாத்திரைகளும் பயனுக்கு வந்துவிட்டால், அடுத்தடுத்த கரோனா அலைகள் எத்தனை வந்தாலும், உயிராபத்து இல்லாமல் அவற்றை எதிர்கொள்ள முடியும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

4. அதிகரிக்கும் தனிநபர் கடன்கள்: பொருளாதார நிலை மோசமாவதன் அறிகுறி

வங்கிகளால் அளிக்கப்பட்டுவரும் பல்வேறு வகையான கடன்களில் தனிநபர் கடன்களின் அளவு மட்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது நாட்டின் பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறியாகத் தோன்றவில்லை. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மற்ற கடன்களைக் காட்டிலும் தனிநபர் கடன்களே அதிகமாக உள்ளன. இதற்கு முன் எப்போதும் இப்படி தனிநபர் கடன்களின் அளவு, தொழில் துறைக் கடன்கள் உள்ளிட்ட மற்ற கடன்களின் அளவைக் கடந்ததில்லை.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டாம் காலாண்டு வரையிலும் வங்கிகளிடமிருந்து அளிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகை ரூ.109.5 லட்சம் கோடி எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், தொழில் துறைக்கு வழங்கப்பட்ட இதுவரையிலுமான மொத்தக் கடன் ரூ.28.3 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது; விகிதாச்சாரக் கணக்கில், மொத்தக் கடனளவில் 27%-லிருந்து 26%- ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், மொத்தத் தனிநபர் கடன்கள் ரூ.29.2 லட்சம் கோடி உயர்ந்தும் 25%-லிருந்து 27%-ஆக அதிகரித்தும் உள்ளன.

தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட கடனளவு குறைந்திருப்பதற்கு, அடிப்படைத் தொழில்களை நடத்துவோர் தாம் வழக்கமாக வாங்கும் கடன்களின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது ஒரு முக்கியமான காரணம். இரும்பு மற்றும் எஃகு, உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் ஆகிய அடிப்படைத் தொழில் துறையினர் வாங்கும் கடன்களின் அளவு குறைந்துள்ளது. சாலைகள், துறைமுகங்கள், மின்சக்தி ஆகிய துறைகள் வாங்கும் கடனளவு அதிகரித்துள்ளது என்றாலுமேகூட அதுவும்கூட உள்கட்டமைப்புத் துறையில் நேர்மறையான கடன் வளர்ச்சியாக பார்க்கப்படவில்லை.

வழக்கமாக ஜூலை தொடங்கி செப்டம்பரில் முடியும் காலாண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நேர்மறையாக மதிப்பிடப்படும். அடுத்த காலாண்டு, பண்டிகைக் காலம் என்பதால் தொழில் துறையில் செய்யப்படும் புதிய முதலீடுகள் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்ற அடிப்படையில் வரவேற்கப்படும். ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், பெருந்தொழில் துறையினர் வாங்கிய கடன்கள் வழக்கத்தைக் காட்டிலும் 5% குறைந்துள்ளது. தொழில் துறையின் கடன் வளர்ச்சி விகிதம் 2.3% குறைந்துள்ளது. அதற்கு மாறாக, இந்த ஆறு மாதங்களில் வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், நகைக் கடன்கள் உள்ளிட்ட தனிநபர் கடன்களின் அளவு வழக்கத்தைக் காட்டிலும் ரூ.73,000 கோடி வரையில் அதிகரித்துள்ளது. வங்கிகளால் இதுவரை வழங்கப்பட்டுள்ள தனிநபர் கடன்கள் மொத்தம் ரூ.29.2 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதற்கும் அதுவே காரணம்.

கடன் வளர்ச்சி, தொழில் துறை உற்பத்தியில் நேரடி விளைவை ஏற்படுத்துவது. கடன் வளர்ச்சி விகிதம் நிலையாக இருந்தால்தான் வட்டியும் நிலையாக இருக்கும். சேமிப்புக்கான சூழலையும் அது உருவாக்கும். தவிர, தனிநபர் கடனளவை அதிகரிப்பதால் குறுகிய கால அளவுக்குப் பணப் புழக்கத்தை ஏற்படுத்தலாமேயொழிய, அதனாலேயே பொருளாதார நிலையை மீட்டெடுத்துவிட இயலாது.

5. சேதி தெரியுமா?

அக்.29: ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‘மெட்டா’ என்று மாற்றப்பட்டுள் -ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸகர்பர்க் அறிவித்துள்ளார்.

நவ.1: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

நவ.1: இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து, அவசர பயன்பாட்டுப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்தது.

நவ.3: தற்போது விதிக்கப்பட்டுவரும் கலால் வரியிலிருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

நவ.3: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2023 உலகக் கோப்பை வரை இப்பொறுப்பில் அவர் இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

நவ.4: விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு இந்திய விமானப் படை குரூப் கேப்டனாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நவ.5: தாம்பரம் பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்தது.

நவ.6: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான (ஐஓசி) உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தின் தேர்வுக் குழுவில் இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா இடம்பெற்றார்.

6. ஆப்கன் சூழல் குறித்து ஆலோசனை: 7 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் தில்லி வருகை

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்ற பின்னர் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழல் குறித்து ஆலோசனை நடத்த இந்தியா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க ரஷியா, ஈரான் மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகா்கள் செவ்வாய்க்கிழமை தில்லி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க சீனா, பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முன்கூட்டியே திட்டமிட்ட கூட்டங்கள் உள்ளதால் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில் -லை என சீனாவும், இந்தக்கூட்டத்தை புறக்கணிப்பதாக பாகிஸ்தானும் அறிவித்தன.

எனினும், இந்தக் கூட்டத்தில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்பட மொத்தம் 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கனில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உருவாகியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், பாதுகாப்பு சவால்கள், ஆப்கன் மக்களுக்கு அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என இந்திய தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் தலிபான்களை அங்கீகரிக்காத நாடுகள் என்றும், ஆப்கன் நிலைமையில் ஒருமித்த கருத்துகளை இந்த நாடுகள் கொண்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

7. நவ.11-இல் தில்லியில் ஆளுநர்கள் மாநாடு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நவ.11ஆம் தேதி ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் 51ஆவது மாநாடு தில்லியில் உள்ள அவரது மாளிகையில் நடைபெறுகிறது.

இதில், குடியரசு துணைத்தலைவர் M வெங்கையா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கலந்துகொள்கின்றனர். ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடக்கும் நான்காவது மாநாடு இதுவாகும்.

8. சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் மனிகா-அர்ச்சனா ஜோடி ‘சாம்பியன்’

உலக டேபிள் டென்னிஸ் வாய்ப்புக்கான சர்வதேச போட்டி சுலோவெனியா நாட்டின் லாஸ்கோ நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, 11-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யிடியிடம் மோதினார். விறுவிறுப்பான இந்த மோதலில் வாங் யிடி 11-7, 7-11, 13-11, 10-12, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் மனிகாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த மனிகா வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, அர்ச்சனா கமாத் ஜோடியினர் 11-3, 11-8, 12-10 என்ற நேர் செட் கணக்கில் சகோதரிகளான மெலானி டையாஸ்- அட்ரினா டையாஸ் (பியுர்டோ ரிகோ) இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.

9. விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்!

சீன விமானப் படை பெண் விமானியான வாங் யாபிங் (41), விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தாா். இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை அவா் படைத்துள்ளாா்.

சீனா ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 450 கி.மீ. உயரத்தில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாகங்களை விண்கலங்கள் மூலம் பலகட்டங்களாக சீனா கொண்டு சென்றுள்ளது. அதன் மையத் தொகுதியான ‘தியான்ஹே’ ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்ஷோ-13 என்ற விண்கலம் மூலம் வாங் யாபிங் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரா்கள் கடந்த அக். 16-ஆம் தேதி விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனா். அவா்களில் வாங் யாபிங், ஷாய் ஷிகாங் ஆகியோா் விண்வெளி நிலையத்தின் மையத் தொகுதியான தியான்ஹேயிலிருந்து வெளியே வந்து கட்டமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் உள்ள விண்கலம் அல்லது விண்வெளி நிலையத்திலிருந்து அதன் பராமரிப்பு, கட்டமைப்புப் பணிக்காக வீரா்கள் வெளியே வருவது ‘விண்வெளி நடை’ எனப்படுகிறது.

‘அந்த வகையில் இருவரும் திங்கள்கிழமை சுமாா் 6.30 மணி நேரம் விண்வெளியில் நடந்து தமது பணிகளை முடித்துவிட்டு மையத் தொகுதிக்குத் திரும்பியதாக’ சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. அப்போது மூன்றாவது விண்வெளி வீரரான யீ குவாங்ஃபு மையத் தொகுதியின் உள்ளே இருந்து அவா்களுக்கு உதவி புரிந்ததாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை… இதற்கு முன்னதாக, 1984-ஆம் ஆண்டுமுதல் 2019, அக்டோபா் வரை மொத்தம் 15 பெண்கள் 42 முறை விண்வெளி நடையில் பங்கேற்றுள்ளனா். ரஷியாவை சோ்ந்த ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா என்பவா்தான் விண்வெளியில் நடந்த முதல் பெண் ஆவாா்.

சாதனைப் பெண்: ஷான்டாங் மாகாணத்தைச் சோ்ந்த வாங் யாபிங், 5 வயது பெண் குழந்தைக்குத் தாய் ஆவாா். 1997-இல் சீன ராணுவத்தின் விமானப் படையில் விமானியாக சோ்ந்தாா். பின்னா், சீன ராணுவத்தின் விண்வெளிப் பிரிவில் 2010-இல் இணைந்தாா். இப்போதைய விண்வெளிப் பயணத்துக்காக அவா் 2019, டிசம்பரில் தோ்வு செய்யப்பட்டாா்.

சென்ஷோ விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவா், ஏற்கெனவே மையத் தொகுதிக்குள் இருந்தவாறு மாணவா்களுக்கு விரிவுரை நிகழ்த்தினாா். இதை நாடு முழுவதும் உள்ள 80,000 பள்ளிகளைச் சோ்ந்த 6 கோடி மாணவா்கள் கண்டு பயனடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘விண்வெளி நடையில் பெண்கள் பங்கேற்பது விண்வெளித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றாலும் வாங் யாபிங்கின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என சா்வதேச விண்வெளி வீரா்கள் கூட்டமைப்புக்கான போக்குவரத்துக் குழுவின் துணைத் தலைவா் யாங் யுகுவாங் குறிப்பிட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

10. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6 முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நடப்பு சாம்பியன் டானியல் மெட்வதேவுடன் (25 வயது, 2வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (34வயது) 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 15 நிமிடம் போராடி வென்று பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை 6வது முறையாக கைப்பற்றினார். ஏற்கனவே 2009, 2013, 2014, 2015, 2019ல் அவர் இங்கு பட்டம் வென்றிருந்தார். சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் பைனலில் தன்னை தோற்கடித்த மெட்வதேவுக்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தார்.

மேலும், ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் இது ஜோகோவிச் வெல்லும் 37வது பட்டமாகும். இந்த வரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (36 பட்டம்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்ததாக, இத்தாலியின் டுரின் நகரில் வரும் 14ம் தேதி தொடங்கும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடரில் ஜோகோவிச் களமிறங்குகிறார். இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள, சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள்: 1. ஜோகோவிச், 2. மெட்வதேவ் (நடப்பு சாம்பியன்), 3. அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), 4. ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 5. ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), 6. மேட்டியோ பெரட்டினி, 7. ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), கேஸ்பர் ரூட் (நார்வே).

1. Indian Railways has introduced a special train ‘Gati Shakti Superfast Special train’ between which cities?

A) Delhi–Patna 

B) Delhi–Varanasi

C) Varanasi–Kevadia

D) Delhi–Nainital

  • Indian Railways has introduced a special train ‘Gati Shakti Superfast Special train’ between Delhi and Patna. The Anand Vihar Terminal – Patna – Anand Vihar Terminal Gati Shakti Superfast Special train has been launched for the convenience of the passengers during this festive season.

2. Shaktikanta Das has been appointed as the Governor of the Reserve Bank of India for how many years, from 2021?

A) Two years

B) Three years 

C) Four years

D) Five years

  • The Appointments Committee of the Cabinet reappointed Shaktikanta Das, Governor of the Reserve Bank of India (RBI) for three years beyond 10.12.2021 or until further orders. Shaktikanta Das, a retired Indian Administrative Services (IAS) officer, assumed charge as the 25th governor of the RBI effective December 12, 2018. He had also served as a member of the 15th Finance Commission for a year.
  • Benegal Rama Rau served RBI Governor between July 1, 1949, and January 14, 1957 and that is the longest such tenure so far.

3. Which Union Ministry has initiated reforms in public procurement and project management to help MSMEs?

A) Ministry of MSME

B) Ministry of Finance 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Food Processing Industries

  • The Finance Ministry has initiated reforms in public procurement and project management to execute projects and provide payments to the micro, small and medium enterprises (MSMEs) on time. The new guidelines permit alternative methods for selection of contractors. Whereas, the old system gives weightage to the lowest commercial bid.

4. Which sector of people made up the largest share of total suicides, as per NCRB data on suicides?

A) Daily Wage Earners 

B) House–wives

C) Unemployed Persons

D) Farmers

  • As per the data by National Crime Records Bureau (NCRB), a total of 37,666 daily wage workers died by suicide in 2020, who made up the largest share of total suicides. They are followed by House–wives and persons in farming sector. As per the report, the country reported more than 1.53 lakh suicides last year highest in the last 10 years.
  • It also cited that an average of 31 children died by suicide every day in India in 2020. As many as 11,396 children died by suicide in 2020, at an 18 per cent rise from 2019.

5. Which Union Ministry has announced competitions for Deshbhakti Geet writing?

A) Ministry of External Affairs

B) Ministry of Culture 

C) Ministry of Rural Development

D) Ministry of Electronics and IT

  • Ministry of Culture has announced three competitions under Azadi ka Amrit Mahotsav. They are Deshbhakti Geet writing, Rangoli Making and Lori writing. The competitions have been launched from Tehshil and Taluka level to National level. The initiative was announced by Prime Minister Narendra Modi in Mann Ki Baat.
  • This competition will be held for a couple of months and the rewards to the winners will be presented by the Ministry.

6. ‘Dairy Sahakar’, a scheme recently launched, will be implemented by which Union Ministry?

A) Ministry of Agriculture and Family Welfare

B) Ministry of Rural Development

C) Ministry of Cooperation 

D) Ministry of Food Processing Industries

  • Amit Shah, Union Minister Cooporation launched the “Dairy Sahakar” scheme at Anand, Gujarat, during the celebration of 75th Foundation Year of Amul.
  • The Dairy Sahakar scheme will be implemented by NCDC, under Ministry of Cooperation, with a total investment of Rs 5000 crore. Under the scheme, financial support will be extended to eligible cooperatives for various activities such as milk procurement, processing, quality assurance, value addition, branding, packaging, marketing, transportation and storage of products and exports.

7. Which state has documented the odonate fauna for the first time?

A) Tamil Nadu

B) Kerala 

C) Andhra Pradesh

D) Karnataka

  • A group of entomologists have documented the odonate fauna in the state of Kerala for the first time. Kerala is home to 181 species of dragonflies and damselflies. It also nurtures 68 species that are endemic to the Western Ghats. According to the study, the odonates of the Western Ghats stands at 207, of which 80 species are endemics.

8. Who has been appointed as the new Chairperson of the National Company Law Appellate Tribunal (NCLAT)?

A) Ashok Bhushan 

B) A K Sikri

C) Ranjan Gogoi

D) J Mukhopadhaya

  • Retired Supreme Court Judge–Justice Ashok Bhushan has been appointed as the new Chairperson of the National Company Law Appellate Tribunal (NCLAT), for four years or till he attains 70 years. The post was left vacant by the retirement of the then chairperson, Justice S J Mukhopadhaya, in March 2020.
  • The government also appointed retired Chief Justice of Manipur High Court, Justice Ramalingam Sudhakar, as the chairperson of the National Company Law Tribunal (NCLT).

9. ‘Sardar Patel Leadership Centre’ has been inaugurated at which place?

A) Nainital

B) Mussoorie 

C) Varanasi

D) Nagpur

  • Union Minister of State Personnel, Public Grievances, Pensions, Dr Jitendra Singh dedicated “Sardar Patel Leadership Centre” to the nation at Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA), Mussoorie.
  • This was inaugurated on the occasion of Rashtriya Ekta Diwas, marking the birth anniversary of Sardar Vallabhbhai Patel.

10. What is the theme of the ‘National Ayurveda Day 2021’?

A) Ayurveda for Poshan 

B) Ayurveda for COVID

C) Aatmanirbhar Ayurveda

D) Amrut Ayurveda

  • The National Ayurveda Day is celebrated on the occasion of Dhanwantari Jayanti (Dhanteras) since 2016. This year, the theme of the National Ayurveda Day is ‘Ayurveda for Poshan’. Union Minister for Ayush Sarbananda Sonowal announced a corpus ₹260 crore for expanding the infrastructure of National Institute of Ayurveda’s satellite centre at Panchkula in Himachal Pradesh. Lord Dhanvantari is a God, who is worshipped for good health and wealth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!