Tnpsc

9th October 2020 Current Affairs in Tamil & English

9th October 2020 Current Affairs in Tamil & English

9th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

9th October 2020 Tnpsc Current Affairs in Tamil

9th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.இந்தியாவில் உள்ள மரபுசாரா துறைகள் & நுண் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக $1.9 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ள நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. ஜெர்மனி

 • மரபுசாரா துறை தொழிலாளர்கள் உட்பட இந்தியாவில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மக்களுக்கு உதவுவதற்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை $1.9 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்படும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

2.உலக நலவாழ்வு அமைப்பால், “நலமான முதுமை தசாப்தம்” என்று அறிவிக்கப்பட்டுள்ள தசாப்தம் எது?

அ. 2018 – 2028

ஆ. 2020 – 2030

இ. 2021 – 2031

ஈ. 2022 – 2032

 • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) 2020-2030’ஐ “நலமான முதுமை தசாப்தம்” என அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும் அக்.1 அன்று பன்னாட்டு முதியோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. முதியோரின் நலன் மற்றும் சிறப்புத்தேவைகளில் கவனஞ்செலுத்துவதற்காக ஐநா அவை இந்த நாளை அறிவித்தது. “Pandemics: Do They Change How We Address Age and Ageing?” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

3.இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் சந்தையின் பெயரென்ன?

அ. Go Tribal

ஆ. Tribes India

இ. Local to Global

ஈ. India Tribe

 • மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் சந்தையை, “பழங்குடியினர் இந்தியா மின்-சந்தை” என்ற பெயரில் தொடங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இச்சந்தை தொடங்கப்பட்டது. TRIFED’இன் இம்முயற்சி, நாட்டின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த பழங்குடி நிறுவன -ங்களின் உற்பத்தி மற்றும் கைவினைப்பொருட்களைக் விற்பனை செய்யும்.
 • ஜார்க்கண்டின் பாகூரைச் சேர்ந்த சந்தால் பழங்குடியினரால் சேகரிக்கப்பட்ட பாகூர் தேனையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.

4.பதிப்பாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்கத்திற்காக பணஞ்செலுத்த உறுதிபூண்டுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ. பேஸ்புக்

ஆ. கூகுள்

இ. அமேசான்

ஈ. ஆப்பிள்

 • உலகெங்குமிருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்‌கப்படும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இதற்காக, ‘கூகுள் நியூஸ் ஷோகேஸ்’ என்றவொன்றை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

5. ‘Asteroid Mining Robot’ என்று பெயரிலான உலகின் முதல் சுரங்கப்பணி மேற்கொள்ளும் எந்திரத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

 • உலகின் முதல் சுரங்கப் பணி மேற்கொள்ளும் ரோபோவை வரும் நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு சீனா அனுப்பவுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள தனியார் நிறுவனமான ஆர்ஜின் ஸ்பேஸ் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோ, “சிறுகல் சுரங்க ரோபோ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரோபோ இடம்பெற்றுள்ள NEO-1 என்ற விண்கலத்துடன் சீனத்தின் லாங் மார்ச் ஏவுகலம் விண்ணுக்குச் செல்லவுள்ளது.

6. “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

 • மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது பட்டியலினத்தவர்களுக்கான கூட்டு மூலதன நிதியத்தின்கீழ், “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலினத்தைச் (SC) சார்ந்த மாணாக்கரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு எண்ணத்தை ஊக்குவிக்கும்நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

7. புதிய பொது வழங்கல் முறை அங்காடிகளுள் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. உத்தர பிரதேசம்

இ. இராஜஸ்தான்

ஈ. மேற்கு வங்கம்

 • புதிய பொது வழங்கல் முறை அங்காடிகளுள் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க இராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் மகளிர்க்கு அதிகாரமளிக்கும் விதமாக முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த முடிவை எடுத்துள்ளார். ‘சஹ்யோக் எவம் உபர் யோஜனா’வுக்கு `11 கோடி கூடுதல் செலவினத்துக்கும் அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், மகளின் திருமணத் தேவைக்கு நிதி தேவைப்படும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

8.விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, எந்தப் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது?

அ. இந்தியக் கடற்படை

ஆ. இந்திய இராணுவம்

இ. இந்தியக்கடலோரக் காவல்படை

ஈ. இந்திய வான்படை

 • விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, இந்தியக்கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டியுள்ளது. விரைவு ரோந்துக்கப்பல் வரிசையில் இந்த நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பலாக இது உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட, அசாம் மாநிலத்தைச் சார்ந்த பதின்மவயது விடுதலைப் போராளியின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

9.இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) எவ்வாண்டில், வீனஸ் திட்டத்தை தொடங்கவுள்ளது?

அ. 2022

ஆ. 2023

இ. 2024

ஈ. 2025

 • இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனது வெள்ளிக் கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் ‘வீனஸ்’ திட்டத்தை, எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவிள் தொடங்க முன்மொழிந்துள்ளது. பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES, இந்தப் பயணத்தில் ISRO உடன் கைகோர்க்கவுள்ளது. தற்போது, இருநாடுகளும் 2022’க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ISRO’இன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ குறித்து ஈடுபட்டு வருகின்றன.

10.எந்த அமைப்புக்கான புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ளார்?

அ. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு

ஆ. இந்திய தடகள கூட்டமைப்பு

இ. இந்திய விளையாட்டு ஆணையம்

ஈ. இந்திய ஒலிம்பிக் சங்கம்

 • இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இப்புதிய இலச்சினை, விளையாட்டு ஆளுமைகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை திறமையாளர்களாக உருவாக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பயணத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. கடந்த 1982’இல் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவப்பட்டது. இது, இந்தியாவில் விளையாட்டுக்கான மையமாக இருந்துவருகிறது.

1. Which country is to provide USD 1.9 million to support informal sector and micro enterprises in India?

[A] Japan

[B] United States of America

[C] United Kingdom

[D] Germany

 • The United States has committed $1.9 million to support vulnerable people in India including those involved in informal sector workers. This financial assistance from US Agency for International Development (USAID) is provided by the American people to partners in India. This will support the Revive alliance, to address challenges caused by unemployment & income gaps faced by workers.

2. Which decade is named as the “Decade of Healthy Ageing”, as per the World Health Organisation?

[A] 2018–2028

[B] 2020–2030

[C] 2021–2031

[D] 2022–2032

 • The World Health Organization has designated 2020–2030 as the “Decade of Healthy Ageing”. International Day of Older Persons is observed on Oct.1 every year. United Nations designated this day to focus on the well–being and special needs of the elderly people. The UN theme of the International Day of Older Persons 2020 is “Pandemics: Do They Change How We Address Age and Ageing?”.

3. What is the largest handicraft and organic products marketplace of India, to be launched?

[A] Go Tribal

[B] Tribes India

[C] Local to Global

[D] India Tribe

 • Union Minister of Tribal Affairs Arjun Munda is to launch India’s largest handicraft and organic products marketplace named “Tribes India e–Marketplace”. This marketplace will be launched on the occasion of Gandhi Jayanti. This initiative of TRIFED will showcase the produce and handicrafts of tribal enterprises from all parts of the country. The Minister will also launch Pakur Honey, gathered by Santhal Tribals from Pakur, Jharkhand.

4. Which technology company has committed to pay publishers for their content?

[A] Facebook

[B] Google

[C] Amazon

[D] Apple

 • Google has planned to pay publishers globally for their news over the next three years. The CEO of Google, Sundar Pichai said the new product called Google News Showcase will be launched first in Germany. It will be unveiled in Belgium, India, the Netherlands and other countries. Google will pay publishers to create high–quality content for the news feature.

5. Which country is to send the world’s first mining robot named ‘Asteroid Mining robot’ into space?

[A] India

[B] United States of America

[C] China

[D] Israel

 • China is expected to send the world’s first mining robot into space by November 2020 through a private Beijing company, Origin Space. The mining robot named as an ‘Asteroid mining robot’ will be a part of the preliminary assessment to identify and extract valuable resources. The spacecraft NEO–1 will be launched onboard a Chinese Long March rocket.

6. The “Ambedkar Social Innovation and Incubation Mission (ASIIM)” has been launched by which ministry?

[A] Ministry of MSME

[B] Ministry of Social Justice and Empowerment

[C] Ministry of HRD

[D] Ministry of Tribal Affairs

 • The Ambedkar Social Innovation and Incubation Mission (ASIIM) has been launched by the Ministry of Social Justice and Empowerment under the Venture Capital Fund for SCs. The mission has been launched with an aim to promote innovation and entrepreneurship among Scheduled Caste students studying in higher educational institutions.

7. Which state has decided to give 30% of the new Public Distribution System shops to women?

[A] Kerala

[B] Uttar Pradesh

[C] Rajasthan

[D] West Bengal

 • The state Government of Rajasthan has decided to give 30% of the new Public Distribution System (PDS) shops to women. The decision has been taken by the Chief Minister Ashok Gehlot, to empower the women in the state.
 • The state has also approved an additional budget of Rs.11 crore to “Sahyog Evam Uphar Yojna”, where financial assistance is provided to needy families for daughter’s marriage.

8. The Fast Patrol Vessel “Kanaklata Barua” has been inducted into which Defence force?

[A] Indian Navy

[B] Indian Army

[C] Indian Coast Guard

[D] Indian Air Force

 • A Fast Patrol Vessel named “ICGS Kanaklata Barua” has been commissioned into the Indian Coast Guard. The ship is built by Garden Reach Shipbuilders and Engineers Ltd (GRSE) and is the fifth and last in a series of FPVs built by the company. The ship has been named after a teen age freedom fighter of Assam who was shot dead during the Quit India Movement. Related Questions

9. Indian Space Research Organisation (ISRO) is set to launch Venus mission by which year?

[A] 2022

[B] 2023

[C] 2024

[D] 2025

 • The Indian Space Research Organisation (ISRO) has proposed to launch its Venus mission by the year 2025. French space agency CNES would also participate in the mission. Presently, the two nations are working closely on ISRO’s human space mission Gaganyaan that aims to send 3 Indians to space by 2022.

10. Sports Minister of India has unveiled a new logo for which organization?

[A] All India Football Federation

[B] Athletics Federation of India

[C] Sports Authority of India

[D] Indian Olympic Association

 • The Union Sports Minister Kiren Rijiju has unveiled a new logo of Sports Authority of India (SAI). The new logo signifies SAI’s journey of transformation from identifying grassroot level talent to creating sporting excellence in India. SAI was established in 1982 and has been an epicentre for sports in India.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!