9th September 2020 Current Affairs in Tamil & English

9th September 2020 Current Affairs in Tamil & English

9th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

9th September Tamil Current Affairs 2020

9th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயலி சேவையை, ‘LiGo’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள காப்பீட்டு நிறுவனம் எது?

அ. HDFC எர்கோ

ஆ. ICICI புருடென்ஷியல்

இ. ஆயுள் காப்பீட்டுக் கழகம்

ஈ. கனரா – HSBC OBC

 • ICICI புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது சமீபத்தில், கூகிள் உதவியாளரில் ‘லிகோ’ என்ற செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குரல்வழி இயலியை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீடுதாரர்கள், இந்தச் சேவையைப் பயன்படுத்தி, எளிய குரல் பணிப்புகளை வழங்குவதன் மூலம், தயாரிப்புகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு விடை காணலாம்.
 • அந்நிறுவனத்தின் கூற்றுப்படி, காப்பீடுகள் குறித்த விவரங்களைப்பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில், ‘கூகிள் அசிஸ்டெண்ட்’ வசதியை செயல்படுத்தி, அவர்களின் காப்பீடு எண் அல்லது அலைபேசி எண்ணைக் கூறலாம்.

2.புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசையின்படி, மார்க் சுக்கர்பெர்க்கை விஞ்சி, உலகின் மூன்றாவது பெருஞ்செல்வந்தராக மாறியுள்ளவர் யார்?

அ. பில் கேட்ஸ்

ஆ. எலோன் மஸ்க்

இ. மெக்கென்சி ஸ்காட்

ஈ. வாரன் பபே

 • புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசையின்படி, முன்னணி விண்வெளி நிறுவனமான SpaceX’இன் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், தற்போது உலகின் மூன்றாவது செல்வந்தர் ஆவார். 49 வயதான அவர், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்கை இப்பட்டியலில் விஞ்சியுள்ளார். எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு $115.4 பில்லியன் டாலர்களாகவும், சுக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு $110.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடங்களை முறையே பில் கேட்ஸ் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் பிடித்துள்ளனர்.

3. NPCI’இன் அண்மைய தரவுகளின்படி, 2020 ஆகஸ்டில் 1.62 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கண்ட கட்டணஞ்செலுத்து முறை எது?

அ. UPI

ஆ. IMPS

இ. AePS

ஈ. FASTag

 • சமீபத்தில், இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) அடிப்படையிலான கொடுப்பனவுகள், 2020 ஆகஸ்டில், 1.62 பில்லியன் பரிவர்த்தனைகளைக்கண்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 918 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்திருந்ததை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 8 சதவீதம் இது உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்புடை `2.98 டிரில்லியனாகும்; அது, கடந்த ஆண்டின் மதிப்பை விட `1.54 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.

4.சிங்கப்பூரில், எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற இந்தியா வம்சாவளி நபர் யார்?

அ. சியாம் சீ டோங்

ஆ. பிரிதம் சிங்

இ. இந்திராணி

ஈ. சில்வியா லிம்

 • சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. பிரிதம் சிங்கின் தொழிலாளர் கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பிரிதம் சிங் அவர்களை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அவைத் தலைவர் இந்திராணி இராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச்சார்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

5.அண்மையில் மேற்கத்திய & தெற்கத்திய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்?

அ. ரபேல் நடால்

ஆ. ரோஜர் பெடரர்

இ. நோவக் ஜோகோவிச்

ஈ. டொமினிக் தியம்

 • நியூயார்க்கில் நடந்த மேற்கத்திய & தெற்கத்திய ஓப்பன் டென்னிஸ் போட்டியில், மிலோஸ் ரவ்னிக்கை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் வென்றுள்ளார். இது, அமெரிக்காவில் அவர் வெல்லும் முப்பத்தைந்தாவது மாஸ்டர்ஸ் பட்டமாகும். இவ்வெற்றியின் மூலம், ஒவ்வொரு மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் இரண்டு முறை வென்ற ஒரே டென்னிஸ் வீரர் என்ற பெருமையை நோவக் ஜோகோவிச் உருவாக்கியுள்ளார்.

6.COVID-19 தொற்றுநோய் காரணமாக 25 வகையான சுகாதார சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்த ஓர் ஆய்வை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. உலக நலவாழ்வு அமைப்பு

இ. UNICEF

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

 • உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) ஓர் ஆய்வின்படி, COVID-19 தொற்றுநோயால், 25 வகையான நலவாழ்வுச் சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு சேவைகள் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பரவா நோய்களைக்கண்டறிதல் & சிகிச்சையளித்தல் சேவை இரண்டாவது மிகவும் பாதிப்புக்குள்ளான சேவையாக உள்ளது. இந்த ஆய்வில், 94% நாடுகள் தங்கள் முயற்சிகளை COVID-19’ஐ கையாளுவதில் மட்டுமே கவனம் செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

7. 1 பில்லியன் டன் எரிபொருள் உற்பத்தியை அடைவதற்காக, 2023-24ஆம் ஆண்டளவில் `1.22 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ள பொதுத்துறை நிறுவனம் எது?

அ. இந்திய நிலக்கரி நிறுவனம்

ஆ. ONGC

இ. NHPC

ஈ. NTPC

 • 1 பில்லியன் டன் எரிபொருள் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்காக, பல்வேறு திட்டங்களில் `1.22 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய உள்ளதாக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் இந்திய நிலக்கரி நிறுவனம் அறிவித்தது. நிதியளிக்கப்படவுள்ள மொத்த 500 திட்டங்களில், 2023-24ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி அகழ்வு, சுரங்க உட்கட்டமைப்பு மற்றும் திட்ட மேம்பாடு தொடர்பான திட்டங்களில், இந்திய நிலக்கரி நிறுவனம் ஒரு பெரும்பங்கை முதலீடு செய்யும். நிலக்கரி உற்பத்தியில் இந்திய நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு 7.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

8.7 ஆண்டுகளில், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் மெயின் டிரா போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?

அ. சுமித் நாகல்

ஆ. பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன்

இ. ரோகன் போபண்ணா

ஈ. யூகி பாம்ப்ரி

 • US ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், அமெரிக்காவின் பிராட்லி கிளானை வீழ்த்தி சுமித் நாகல் வெற்றியை வசப்படுத்தினார். இவ்வெற்றியின்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு US ஓப்பன் போட்டியின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் பெற்றுள்ளார். இறுதியாக, கடந்த 2013ஆம் ஆண்டில் சோம்தேவ் தேவ்வர்மன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

9. நடப்பாண்டில் (2020) வரும் உலக தேங்காய் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Invest in Coconut to save the world

ஆ. Coconuts and Nutrition World

இ. Coconuts and COVID-19

ஈ. Coconuts in Asian and Pacific regions

 • ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (APCC) நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. APCC என்பது ஆசியா & பசிபிக் நாடுகளுக்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (UN-ESCAP) உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “உலகைக்காக்க தேங்காயில் முதலீடு செய்யுங்கள்”.

10.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தவுள்ள நகரம் எது?

அ. டோக்கியோ

ஆ. பெய்ஜிங்

இ. மாஸ்கோ

ஈ. புது தில்லி

 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அண்மையில் இரஷ்யாவுக்கு புறப்பட்டார். அவர் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுகுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பதற்கான எந்த நிரலும் வெளியிடப்படவில்லை.

1. Which Insurance company has launched AI–based chatbot service named ‘LiGo’?

[A] HDFC Ergo

[B] ICICI Prudential

[C] Life Insurance Corporation

[D] Canara–HSBC OBC

 • ICICI Prudential Life Insurance has recently launched an AI–powered voice chatbot named ‘LiGo’, on Google Assistant. The customers and policy holders can use this service to resolve their queries on products by giving simple voice commands. As per the company, customers can activate ‘Google Assistant’ on their Android smartphones and say their policy number or mobile number for details on their policies.

2. As per the Bloomberg Billionaires Index, who surpassed Mark Zuckerberg to become the third–richest person in the world?

[A] Bill Gates

[B] Elon Musk

[C] MacKenzie Scott

[D] Warren Buffet

 • As per the Bloomberg Billionaires Index, the CEO of the leading space company SpaceX, Elon Musk is now the third–richest person in the world. The 49–year old billionaire has surpassed Facebook co–founder Mark Zuckerberg. Elon Musk’s net worth raised to USD115.4 billion while that of Zuckerberg is USD 110.8 billion. The first and the second positions were featured by Bill Gates and Jeff Bezos respectively.

3. As per the recent data from NPCI, which mode of payment clocked 1.62 billion transactions in August 2020?

[A] UPI

[B] IMPS

[C] AePS

[D] FASTag

 • As per the recent data released by National Payments Corporation of India (NPCI), the Unified Payments Interface (UPI)–based payments clocked 1.62 billion transactions in August.
 • This mode of payment has been rising around 8 per cent and during the same month last year, there were 918 million transactions. The transaction recorded last month was worth Rs 2.98 trillion which is also greater than Rs 1.54 trillion a year ago.

4. Who has taken charge as the first Leader of the Opposition in Singapore?

[A] Chiam See Tong

[B] Pritam Singh

[C] Indranee

[D] Sylvia Lim

 • The Indian–origin politician of Singapore has created history by taking charge as the first Leader of the Opposition in Singapore. Though there have been de–facto leaders of the Opposition in the past, this is the first time the position is being officially recognised. Pritam belongs to the Workers’ Party that had won 10 parliamentary seats out of the 93 seats.

5. Who has recently won the Western & Southern open tennis tournament?

[A] Rafael Nadal

[B] Roger Federer

[C] Novak Djokovic

[D] Dominic Thiem

 • World No. 1 Novak Djokovic has won the Western & Southern Open tennis tournament against Milos Raonic, at New York. This victory is his 35th Masters title in USA. With this victory, Djokovic has created history by becoming the only male tennis player to win every Masters event twice. The opponent Milos Raonic is from Canada and currently ranked at No. 30.

6. Which organization released a survey that finds over half of the 25 kinds of health services is disrupted due to COVID–19?

[A] WEF

[B] WHO

[C] UNICEF

[D] IMF

 • According to a survey by World Health Organization (WHO), countries have witnessed disruptions in at least half of the 25 kinds of health services, due to COVID–19 pandemic.
 • Immunisation services were the most affected while diagnosis and treatment of non–communicable diseases (NCD) was the second–most impacted. The report states that 94% of the countries in survey concentrated their efforts only on tackling COVID–19.

7. Which public sector unit is set to invest Rs.1.22 lakh crore by 2023–24, to achieve 1 billion tonnes of fuel output?

[A] Coal India Ltd

[B] ONGC

[C] NHPC

[D] NTPC

 • State–owned Public sector undertaking Coal India announced that it is set to invest over Rs 1.22 lakh crore on various projects to achieve 1 billion tonnes of fuel output. Out of the total 500 projects to be funded, CIL will invest a major part in projects related to coal evacuation, mine infrastructure and project development by 2023–24. Coal India also posted a 7.1 per cent year–on–year growth in coal output.

8. Who became the first Indian to win a Grand Slam singles main draw match in seven years?

[A] Sumit Nagal

[B] Prajnesh Gunneswaran

[C] Rohan Bopanna

[D] Yuki Bhambri

 • Indian ace Tennis player Sumit Nagal became the first Indian to win a Grand Slam singles main draw match in seven years. The 23–year old entered the second round of the ongoing US Open tournament. He defeated Bradley Klahn of the United States in the men’s singles first round. Prior to this achievement, Somdev Devvarman had reached the second round of the Australian Open, French Open, and US Open.

9. What is the theme of the World Coconut Day 2020?

[A] Invest in Coconut to save the world

[B] Coconuts and Nutrition World

[C] Coconuts and COVID–19

[D] Coconuts in Asian and Pacific regions

 • Every year, September 2 is observed as World Coconut Day across the world. It is celebrated to create awareness about the importance of the coconut and its benefits. It also commemorates the foundation day of the Asian and Pacific Coconut Community (APCC). APCC is a body operating under the aegis of the United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UN–ESCAP). This year, the theme is ‘Invest in Coconut to save the world’

10. Which city is the host of the Shanghai Cooperation Organisation (SCO) Defence Ministers’ Meet?

[A] Tokyo

[B] Beijing

[C] Moscow

[D] New Delhi

 • The Shanghai Cooperation Organisation (SCO) Defence Ministers’ Meet is to be hosted in the city of Moscow, Russia. Union Defence Minister of India Rajnath Singh has recently left for Russia to attend the meet. He is also expected to hold talks with his Russian counterpart Sergey Shoigu. However, no schedule has been made for meeting with the Chinese Defence Minister.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *