TnpscTnpsc Current Affairs

9th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

9th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 9th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘நி–க்ஷய் 2.0’ என்ற இணையதளத்துடன் தொடர்புடைய நோய் எது?

அ. புற்றுநோய்

ஆ. காசநோய்

இ. COVID–19

ஈ. இரத்த சோகை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. காசநோய்

  • இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிரதமர் காசநோய் (TB) முக்த் பாரத் அபியான், ‘நி–க்ஷய் 2.0’ என்ற இணையதளத்தை தொடங்கவுள்ளார். நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ‘நி–க்ஷய் 2.0’ என்பது காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக அளவிலான ஆதரவை வழங்கும் ஒரு டிஜிட்டல் தளமாகும். இது காசநோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் ஆதரவை வழங்குகிறது.

2. இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்காக மாணவிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும், ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • தமிழ்நாடு அரசானது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தை, ‘புதுமைப்பெண் திட்டம்’ என மாற்றியமைத்துள்ளது. இளங்கலைப்பட்டம், பட்டயப்படிப்பு, ஐடிஐ அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைத்தொடருவதற்காக, மாணவிகளுக்கு மாதந்தோறும் `1,000 உதவித்தொகையை இத்திட்டம் வழங்குகிறது. அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் இந்த நிதியுதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

3. பிரதமர் கதி சக்தி திட்டத்திற்கு இரயில்வே நிலத்தை நீண்டகால குத்தகைக்கு விடுவதற்கான கொள்கையின்படி, நில குத்தகையானது எத்தனை ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது?

அ. 10

ஆ. 15

இ. 25

ஈ. 35

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 35

  • பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக இரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்மூலம், இரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து அதிகரித்து அதன்மூலம் தொழிற்துறையின் சரக்குப் போக்குவரத்திற்கான செலவும் குறையும்; இரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். இக்கொள்கையின்மூலம் 1.2 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 300 சரக்குப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும். நிலத்தின் சந்தை மதிப்பில், ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டியில், 35 ஆண்டுகள் வரை சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலங்கள் நீண்டகால குத்தகைக்கு அளிக்கப்படவுள்ளன.

4. செப்.9ஆம் தேதியை, ‘இமயமலை வெற்றி நாள்’ என்று கொண்டாடுகிற மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. அஸ்ஸாம்

இ. உத்தரகாண்ட்

ஈ. சிக்கிம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தரகாண்ட்

  • இமயமலையின் சுற்றுச்சூழலையும் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.9ஆம் தேதி, ‘இமயமலை வெற்றி நாள்’ கொண்டாடப்படுகிறது. இது கடந்த, 2015ஆம் ஆண்டில், உத்தரகாண்டின் அப்போதைய முதல்வரால் அதிகாரப்பூர்வமாக இமயமலை நாளாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டில், அப்போதைய முதலமைச்சர் ஹரிஷ் இராவத், இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான செய்தியைப்பரப்புவதற்காக மாநிலம் முழுவதும் செப்.9ஆம் தேதியை ‘இமயமலை வெற்றி நாள்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

5. மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது தொழிற்முறை வாழ்வில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த இந்திய செஸ் வீரர் யார்?

அ. குகேஷ் D

ஆ. பிரக்ஞானந்தா R

இ. விதித் குஜராத்தி

ஈ. நிஹால் சரின்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பிரக்ஞானந்தா R

  • 17 வயதான இந்திய சதுரங்க வீரர் R பிரக்ஞானந்தா தனது தொழிற்முறை வாழ்வில் நார்வே செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தார். FTX கிரிப்டோ கோப்பையில் தனது இறுதிப்போட்டியில் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இருந்தாலும், 7 சுற்றுகள் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

6. புவிசார் குறியீடு பெற்ற, ‘மிதிலா மக்கானா’ பயிரிடப்படுகிற மாநிலம் எது?

அ. ஆந்திரப் பிரதேசம்

ஆ. பீகார்

இ. கர்நாடகா

ஈ. மேற்கு வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பீகார்

  • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலையைப்பெற உதவும் வகையில், அரசாங்கம் சமீபத்தில் ‘மிதிலா மக்கானா’வுக்கு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. இதன் தாவரவியல் பெயர், ‘Euryale Ferox Salisb’ ஆகும். இது ஒரு சிறப்பு வகை நீர்வாழ் தாமரைப்பொரி ஆகும். ‘மிதிலா மக்கானா’ பீகாரின் மிதிலா பகுதியிலும் நேபாளத்தின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. பாகல்பூரின் ஜர்தாலு மாம்பழம், கதர்னி தான் (அரிசி), நவாடாவின் மாகாய் பான் மற்றும் முசாபர்பூரின் ஷாஹி லிச்சிக்குப் பிறகு புவிசார் குறியீடு பெறும் பீகாரைச் சார்ந்த ஐந்தாவது பொருள் இதுவாகும்.

7. UN இணைய ஆளுகை கருத்துக்கள தலைமைத்துவ அரங்கிற்கு நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ. அல்கேஷ் குமார் சர்மா

ஆ. நந்தன் நிலேகனி

இ. K V காமத்

ஈ. கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அல்கேஷ் குமார் சர்மா

  • ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்திய மூத்த அதிகாரி அல்கேஷ் குமார் சர்மாவை இணைய ஆளுமை கருத்துக்களத்தின் தலைமைத்துவ குழுவில் சேர்த்துள்ளார். உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புகழ்பெற்ற டிஜிட்டல் ஆளுமை நிபுணர்களில் அவரும் ஒருவர். அவர் ராஜஸ்தானை சேர்ந்த 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும் அமைச்சரவை செயலகத்தில் முன்னாள் செயலாளராகவும் உள்ளார். அவர் இதற்கு முன்னர் UNDPஇல் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான தேசிய திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

8. தேசிய குடும்பநல கணக்கெடுப்பு 2019–21’இன்படி, இந்தியாவில் பிறப்பின் போதான பாலின விகிதம் என்ன?

அ. 110

ஆ. 108

இ. 105

ஈ. 101

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 108

  • பியூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் பிறக்கும்போது நிலவும் பாலின விகிதம், ஒவ்வொரு 100 ஆண் குழந்தைகளுக்கும் பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, சற்று சீராக உள்ளது. 2015–16இல் 100 பெண் குழந்தைகளுக்கு 109 ஆண் குழந்தைகளாக இருந்த பாலின விகிதம், 2019–21இல் 100 பெண் குழந்தைகளுக்கு 108 ஆண் குழந்தைகளாக குறைந்துள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019–21இன் தரவு காட்டுகிறது. இந்தியாவில், ‘காணாமல் போகும்’ பெண் குழந்தைகளின் சராசரி ஆண்டு எண்ணிக்கை 2010இல் இருந்த சுமார் 4.8 இலட்சத்திலிருந்து 2019இல் 4.1 இலட்சமாகக் குறைந்துள்ளது.

9. ஆசியாவின் மிகப்பெரிய அமுக்கப்பட்ட உயிரிவாயு ஆலை தொடங்கப்பட்டுள்ள மாநிலம்/UT எது?

அ. பஞ்சாப்

ஆ. கேரளா

இ. சத்தீஸ்கர்

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பஞ்சாப்

  • பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய அமுக்கப்பட்ட உயிரிவாயு ஆலையானது சமீபத்தில் அதன் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியது. இந்திய எண்ணெய் நிறுவன விற்பனை நிலையத்திற்கு இந்த உயிரி வாயு விநியோகம் செய்யப்படுகிறது. எரித்தலைத் தடுக்கும் நோக்கோடு பஞ்சாப் ஆற்றல் மேம்பாட்டு நிறுவனமானது 42 கூடுதல் அமுக்கப்பட்ட உயிரிவாயு திட்டங்களை நெல் வைக்கோல் மற்றும் பிற விவசாய மீதங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கவுள்ளது.

10. உலகளாவிய AI உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. சவூதி அரேபியா

இ. பிரான்ஸ்

ஈ. ஸ்பெயின்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சவூதி அரேபியா

  • சவூதி அரேபியாவானது இந்த ஆண்டு (2022) செப்டம்பரில் உலகளாவிய AI உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பை, “மனிதகுலத்தின் நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு” என்ற கருப்பொருளின்கீழ் ஏற்பாடு செய்ய உள்ளது. நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நமக்கு முன்னிருக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் AI தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதுபோன்ற பல்வேறு தலைப்புகளில் இதன் சமயம் விவாதம் நடைபெறும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. நியூசிலாந்துக்கான புதிய இந்தியத் தூதர் நியமனம்

நியூசிலாந்து நாட்டுக்கான புதிய இந்தியத்தூதராக, வெளியுறவுப்பணி மூத்த அதிகாரி நீத்தா பூஷண் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 1994-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப்பணி அதிகாரியான இவர், தற்போது வெளியுறவு அமைச்கத்தின் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான கூடுதல் செயலாளராக உள்ளார்.

நியூசிலாந்துக்கான இந்தியத்தூதராக இருந்த முக்தேஷ் பர்தேசிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, G20 கூட்டமைப்புக் -கான இந்திய செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நியூசிலாந்துக்கான இந்தியத் தூதராக நீத்தா பூஷண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பத்திரிகை, கலாசாரம், தகவல் பிரிவு தலைவராகப் பணியாற்றியவர். இதேபோல், ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவுக்கும் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

9th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘Ni–kshay 2.0 portal’, which was launched recently, is associated with which disease?

A. Cancer

B. Tuberculosis

C. COVID–19

D. Anaemia

Answer & Explanation

Answer: B. Tuberculosis

  • Indian President Droupadi Murmu is set to launch the Pradhan Mantri TB Mukt Bharat Abhiyan ‘Ni–kshay 2.0’ portal. The Union Ministry of Health and Family Welfare has set a target for eradication of tuberculosis by 2025. Nikshay 2.0 is a digital platform for community support for the persons with TB. It provides additional patient support to improve treatment outcome of tuberculosis patients.

2. Which state launched ‘Pudhumai Penn Scheme’, to provide monthly financial assistance for female students to complete UG programmes?

A. Tamil Nadu

B. Odisha

C. Karnataka

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • The Tamil Nadu government launched the Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme, also known as the ‘Pudhumai Pen Scheme’. It provides a monthly grant of Rs 1,000 to female students to pursue a bachelor’s degree, diploma, ITI, or any other recognised course. Those who attended government schools from Class 6 to 12 will be eligible for the financial aid.

3. As per the policy for long–term leasing of railway land for PM Gati Shakti, what is the tenure up to which land lease is provided?

A. 10

B. 15

C. 25

D. 35

Answer & Explanation

Answer: D. 35

  • The Union Cabinet approved a policy for long–term leasing of railway land for the PM Gati Shakti programme. The new policy will facilitate to provide land lease for a longer period of up to 35 years as against five years at present. The new policy will enable the development of infrastructure and more cargo terminals. It has also cut down land lease fee from 6 percent to 1.5 percent.

4. Which state celebrates September 9 as ‘Himalaya Diwas’?

A. Bihar

B. Assam

C. Uttarakhand

D. Sikkim

Answer & Explanation

Answer: C. Uttarakhand

  • Himalaya Diwas is celebrated every year on 9th September in the state of Uttarakhand, with an aim to conserve Himalayan ecosystem and region. It was officially declared as Himalaya Day in 2015 by the state’s then Chief Minister. In 2014, the then Chief Minister Harish Rawat officially declared September 9 as ‘Himalaya Diwas’, to be celebrated across the State to spread the message of conservation of the Himalayan ecosystems.

5. Which Indian chess player has recorded third consecutive win in his career against Magnus Carlsen?

A. Gukesh D

B. Praggnanandhaa R

C. Vidit Gujrathi

D. Nihal Sarin

Answer & Explanation

Answer: B. Praggnanandhaa R

  • 17–year–old Indian chess prodigy, R. Praggnanandhaa recorded a third consecutive win in his career against the Norwegian great Magnus Carlsen. Praggnanandhaa defeated the reigning 5–time World Chess Champion in his final match at the FTX Crypto Cup.  Carlsen went on to win the FTX Crypto Cup while the Indian Grand Master finished at second place in the tournament.

6. ‘Mithila Makhana’, which was awarded geographical indication (GI) tag, is cultivated in which state?

A. Andhra Pradesh

B. Bihar

C. Karnataka

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Bihar

  • The government has recently awarded geographical indication (GI) tag to ‘Mithila Makhana’, to help farmers get the maximum price for their produce. Its botanical name is ‘Euryale Ferox Salisb’ and it is a special variety of aquatic fox nut. Mithila Makhana is cultivated in the Mithila region of Bihar and some parts of Nepal. It is the fifth product from Bihar after Bhagalpur’s Jardalu Mango, Katarni Dhaan (rice), Nawada’s Maghai Paan and Muzaffarpur’s Shahi Litchi.

7. Which Indian has been appointed to the UN Internet Governance Forum (IGF) Leadership Panel?

A. Alkesh Kumar Sharma

B. Nandan Nilekani

C. K V Kamath

D. Kris Gopalakrishnan

Answer & Explanation

Answer: A. Alkesh Kumar Sharma

  • UN Secretary–General Antonio Guterres has appointed senior Indian bureaucrat Alkesh Kumar Sharma to the inaugural Internet Governance Forum (IGF) Leadership Panel. He is among 10 distinguished digital governance experts selected from across the globe. He is a 1990 batch IAS officer from Rajasthan and a former Secretary in the Cabinet Secretariat. He has earlier served the UNDP as the national project director for Urban Development and Poverty Alleviation.

8. As per the National Family Health Survey 2019–’21, what is India’s sex ratio at birth?

A. 110

B. 108

C. 105

D. 101

Answer & Explanation

Answer: B. 108

  • As per a recent study by the think tank Pew Research Center, India’s sex ratio at birth, the number of girl children born for every 100 boys, has normalised slightly. The data from the National Family Health Survey 2019–’21 shows that the sex ratio at birth narrowed from 109 boys per 100 girls in 2015–’16 to 108 boys per 100 girls in 2019–’21. The average annual number of baby girls ‘missing’ in India also fell from about 4.8 lakh in 2010 to 4.1 lakh in 2019.

9. Asia’s largest Compressed Biogas (CBG) plant has commenced production in which Indian state/UT?

A. Punjab

B. Kerala

C. Chhattisgarh

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: A. Punjab

  • Asia’s largest Compressed Biogas (CBG) plant in the Sangrur district of Punjab has recently started commercial production. The Bio–gas is being supplied to the Indian Oil Corporation Ltd (IOCL) outlet. Punjab Energy Development Agency has allocated 42 additional CBG projects based on paddy straw and other agro–residue to prevent stubble burning.

10. Which country is the host of Global AI Summit?

A. Australia

B. Saudi Arabia

C. France

D. Spain

Answer & Explanation

Answer: B. Saudi Arabia

  • Saudi Arabia is set to organise the second edition of the Global AI Summit in September this year, under the theme ‘Artificial Intelligence for the Good of Humanity’. The upcoming event will be participated by experts from government agencies and major technology companies around the world. It will discuss a number of topics, with the aim of finding solutions to the current challenges and maximizing the use of the AI technologies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!