Science Questions

9th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

9th Science Lesson 2 Questions in Tamil

2] இயக்கம்

1) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இயக்கம் என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தை பொருத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும்.

II. இந்த அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இயக்கத்தில் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு.

(குறிப்பு – இயக்கம் என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தை பொருத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இயக்கத்தில் உள்ளன. ஒரு பொருளானது இயங்குவது போல் தோன்றினாலும், உண்மையிலேயே அதுவும் இயக்கத்தில் உள்ளது. ஏனெனில் பூமியானது சூரியனை சுற்றி வருகிறது.)

2) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இயற்பியலில், பொருள்களின் நிலை மாறாமல் இருந்தால் அவை ஓய்வாக உள்ளன எனப்படும்.

II. ஒரு மேஜையின் மேல் இருக்கும் புத்தகம், பொருள் ஓய்வு நிலையில் இருப்பதை காட்டுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இயற்பியலில், பொருள்களின் நிலை மாறாமல் இருந்தால் அவை ஓய்வாக உள்ளன எனக் கொள்ளப்படும். பொருள்கள் தன் நிலையிலிருந்து மாறிக்கொண்டிருப்பின் அவை இயங்குகின்றன எனப்படும். உதாரணமாக ஒரு மேசையின் மேல் இருக்கும் புத்தகம், அறையில் உள்ள சுவர்கள் ஆகியவை ஓய்வு நிலையில் உள்ளன. சாலையில் ஓடுகின்ற கார் மற்றும் பேருந்துகள் இயக்க நிலையில் உள்ளன.)

3) இயற்பியலின் இயக்கத்தை எத்தனை வகைப்படுத்தலாம்?

A) மூன்று

B) நான்கு

C) ஐந்து

D) ஆறு

(குறிப்பு – இயற்பியலின் இயக்கத்தை நான்கு வகைப்படுத்தலாம். அவை, நேரான இயக்கம், வட்ட இயக்கம், அளவு இயக்கம் மற்றும் ஒழுங்கற்ற இயக்கம் என்பன ஆகும்.)

4) ஒரு புள்ளியை மையமாக கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருள்களின் இயக்கம்?

A) நேரான இயக்கம்

B) வட்ட இயக்கம்

C) அலைவு இயக்கம்

D) ஒழுங்கற்ற இயக்கம்

(குறிப்பு – ஒரு புள்ளியை மையமாக கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருள்களின் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும். நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம், நேரான இயக்கமாகும். வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் வட்ட இயக்கம் ஆகும்.)

5) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மகிழுந்து ஒன்று, முதல் ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும் கடக்கிறது எனில், அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.

II. சீரான இயக்கத்தில் கால இடைவெளிகளில் அளவு மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாக இருக்கலாம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மகிழுந்து ஒன்று, முதல் ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 60 கிலோ மீட்டர் தொலைவையும் கடக்கிறது எனில், அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம். ஒரு பொருள் நகரும்போது சமமான தொலைவுகளை சம கால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம்.)

6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருள் சம கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவினை கலந்தால் அது சீரற்ற இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என்று பொருளாகும்.

II. ஒரு பொருள் A என்னும் புள்ளியில் இருந்து B என்ற புள்ளி வரை கடக்கிறது எனில், அந்தப் பொருள் கடந்த நீளம் தொலைவு என்று அழைக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருள் நகரும்போது சமமான தொலைவுகளை சம கால இடைவெளியில் கடந்தால் அது சீரான இயக்கத்தை கொண்டிருக்கிறது எனக் கூறலாம். ஒரு பொருள் சம கால இடைவெளிகளில் சமமற்ற தொலைவு நடந்தால் அது சீரற்ற இயக்கத்தை மேற்கொண்டுள்ளது என கூறலாம்.)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. திசையை கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளம், அப்பொருள் கடந்த தொலைவு எனக் கூறலாம்.

II. தொலைவு என்பது எண் மதிப்பை கொண்ட திசையியிலி அளவுரு ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – திசையை கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளம், அப்பொருள் கடந்த தொலைவு எனக் கூறலாம். SI முறையில் அதை அளக்க பயன்படும் அலகு மீட்டர் ஆகும். தொலைவு என்பது எண் மதிப்பை மட்டும் கொண்ட திசையிலி அளவுரு (ஸ்கேலர்) ஆகும்.)

8) ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருள் ஒன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) நீளப்பெயர்ச்சி

B) இடப்பெயர்ச்சி

C) கால பெயர்ச்சி

D) திசை பெயர்ச்சி

(குறிப்பு – ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருள் ஒன்றின் விலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும்.இது எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டையும் கொண்ட திசையளவுரு (வெக்டர்) ஆகும்.SI அலகு முறையில் இடப்பெயர்ச்சியின் அலகு மீட்டர் ஆகும்)

9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வேகம் என்பது எவ்வளவு விரைவாக பொருள் ஒன்று இயங்குகிறது என்பதை குறிக்கிறது.

II. திசைவேகம் என்பது வேகத்தையும் அந்த பொருள் நகரும் திசையையும் குறிக்கிறது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வேகம் என்பது எவ்வளவு விரைவாக பொருள் ஒன்று இயங்குகிறது என்பதை குறிக்கிறது.திசைவேகம் என்பது வேகத்தையும் அந்த பொருள் நகரும் திசையையும் குறிக்கிறது. வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.)

10) SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு?

A) மீவி-1

B) மீவி-2

C) மீவி-3

D) எல்லாமே தவறு

(குறிப்பு – வேகம் என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும். இது ஒரு ஸ்கேலார் அளவாகும்.SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு மீவி1)

11) ஒரு பொருள் 16 மீட்டர் தொலைவை 4 நொடியில் கடக்கிறது எனில், அப்பொருளின் வேகம் என்ன?

A) 4 மீ/வி

B) 5 மீ/வி

C) 6 மீ/வி

D) எல்லாமே தவறு

(குறிப்பு – வேகம் = தொலைவு / நேரம்

வேகம் = 16 / 4 = 4 மீ/வி.

வேகம் = 4 மீ/வி)

12) ஒரு பொருள் 16 மீட்டர் தொலைவை 4 நொடியிலும், மேலும் 16 மீட்டர் தொலைவை இரண்டு நொடியிலும் கிடைக்கிறது எனில் அப்பொருளின் சராசரி வேகம் என்ன?

A) 5 மீ/வி

B) 5.33 மீ/வி

C) 6.7 மீ/வி

D) 7 மீ/வி

(குறிப்பு – பொருள் கடந்த மொத்த தொலைவு = 16 + 16 = 32 மீட்டர்.

மொத்த நேரம் = 4 + 2 = 6 வினாடி

சராசரி வேகம் = ஒத்த தொலைவு/ மொத்த நேரம் = 32/6 = 5.33 மீ/வி)

13) ஒரு மழைநாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட ஐந்து வினாடிக்குப் பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்டுபிடி.( காற்றில் ஒலியின் வேகம் = 346 மீ/வி)

A) 1670 மீ

B) 1730 மீ

C) 1810 மீ

D) 1860 மீ

(குறிப்பு – வேகம் = தொலைவு / காலம்

தொலைவு = வேகம் × காலம்

தொலைவு = 346 × 5

தொலைவு = 1730 மீ.)

14) SI முறையில் திசை வேகத்தில் அலகு என்ன?

A) மீவி-1

B) மீவி-2

C) மீவி-3

D) எல்லாமே தவறு

(குறிப்பு – திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எனப்படும். இது ஒரு வெக்டர் அளவாகும்.SI அளவீட்டு முறையில் திசை வேகத்திற்கான அலகு மீவி-1 ஆகும்.)

15) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும்.

II. SI அளவீட்டு முறையில் முடுக்கத்தின் அலகு மீவி-2 ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும். இது ஒரு வெக்டர் அளவாகும். SI அளவீட்டு முறையில் முடுக்கத்தின் அலகு மீவி-2 ஆகும். முடுக்கம் = திசைவேகம் மாற்றம் / எடுத்துக்கொண்ட நேரம்)

16) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

A) முடுக்கம் = ( v – u ) / t

B) முடுக்கம் = ( v + u ) / t

C) முடுக்கம் = ( v – u + t )

D) முடுக்கம் = ( v – u ) × t

(குறிப்பு – பொருள் ஒன்று தனது இசையை மாற்றாமல் நேர்கோட்டில் இயங்கும் ஒரு நிகழ்வினை கருதினால், முடுக்கம் = ( v – u ) / t எனக்கொள்ளலாம். இதில் v – இறுதித் திசை வேகத்தையும், u – தொடக்க திசை தேகத்தையும், t – நேரத்தையும் குறிக்கும்.)

17) கீழ்கண்டவற்றுள் எது எதிர் முடுக்கம் எனப்படும்?

A) v < u

B) v > u

C) v = u

D) v + u = 0

(குறிப்பு – இறுதி திசைவேகம், தொடக்கத்திசைவேகத்தை விட குறைவாக இருந்தால் திசை வேகமானது நேரம் செல்ல செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும். இது எதிர் முடுக்கம் எனப்படும்.)

18) v = u எனில் a வின் மதிப்பு?

A) a = 0

B) a = 1

C) a = v + u

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – v = u எனில், அதாவது இறுதி திசைவேகமும், தொடக்க திசைவேகமும் சமமாக இருந்தால், a = 0 ஆகும். அதாவது இறுதி திசைவேக தொடக்க திசை வேகத்திற்கு சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் சுழியாகும்.)

19) காலத்தை X – அச்சிலும், கடந்த தொலைவை Y – அச்சிலும் வரைந்தால், சீரான இயக்கத்திற்கான வரைபடம் எவ்வாறு இருக்கும்?

A) நேர்கோட்டில்

B) சாய்வுக்கோட்டில்

C) மேலும் கீழுமாய்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – காலத்தை X – அச்சிலும், கடந்த தொலைவை Y – அச்சிலும் வரைந்தால், சீரான இயக்கத்திற்கான வரைபடம் நேர்கோட்டில் இருக்கும். இந்த வரைபடத்தில் சாய்வு அதிகரிக்க அதிகரிக்க (அதிக மதிப்பு) வேகமும் அதிகரிக்கிறது.)

20) காலம் என்பதை X – அச்சிலும், திசைவேகம் என்பதை Y – அச்சிலும், வரைந்தால், அந்த வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு கீழ்க்கண்டவற்றுள் எதன் மதிப்பிற்கு சமமாக இருக்கும்?

A) இடப்பெயர்ச்சி

B) திசைபெயர்ச்சி

C) காலபெயர்ச்சி

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – காலம் என்பதை X – அச்சிலும், திசைவேகம் என்பதை Y – அச்சிலும், வரைந்தால், அந்த வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு இடப்பெயர்ச்சியின் எண் அளவிற்கு சமமாகும். சீரான முடுக்கப்பட்ட இயக்கங்கள் அனைத்திற்கும் திசைவேக – கால வரைபடம் ஒரு நேர்கோடாக அமையும்.)

21) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கன நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும்.

II. ஒரு பரிமாண சீரான இயக்கத்தில் சராசரி திசை வேகமும், உடனடி திசைவேகம் சமமாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கன நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும்.ஒரு பரிமாண சீரான இயக்கத்தில் சராசரி திசை வேகமும், உடனடி திசைவேகம் சமமாக இருக்கும். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும் உடனடி திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்றும் கூறலாம்.)

22) ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்து மூன்று சமன்பாடுகளை வழங்கியவர் யார்?

A) நியூட்டன்

B) கலிலியோ

C) ரூதர்போர்டு

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – நியூட்டன், ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் விளைவாக 3 சமன்பாடுகளின் தொகுப்பை வழங்கினார். இந்த சமன்பாடுகள் இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினை கூறுகின்றன)

23) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

A) V = u + at

B) V = u (at)

C) V = u – at

D) V = u / at

(குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், முதல் இயக்க சமன்பாட்டினை V = u + at என எழுதலாம்.)

24) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

A) S = ut + 1/2 at2

B) S = ut – 1/2 at2

C) S = ut + 1/2 at

D) S = ut – 1/2 at

(குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், இரண்டாம் இயக்க சமன்பாட்டினை S = ut + 1/2 at2 என எழுதலாம்.)

25) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

A) v2 = u2 + 2as

B) v2 = u2 – 2as

C) v2 = u2 / 2as

D) v2 = u + 2as

(குறிப்பு – a என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று, t காலத்தில், u என்ற தொடக்க திசை வேகத்தில் இருந்து v என்ற இறுதி திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெயர்ச்சி s எனில், மூன்றாம் இயக்க சமன்பாட்டினை v2 = u2 + 2as என எழுதலாம்.)

26) மகிழுந்து ஒன்றில் வேகத்தடையை பயன்படுத்தும்போது 6 மீ / வினாடி2 முடுக்கத்தை அது செல்லும் திசைக்கு எதிர் திசையில் ஏற்படுத்துகிறது. நிறுத்த கருவியை பயன்படுத்திய பிறகு இரண்டு விநாடி கழித்து மகிழுந்து நின்றது. அவ்வாறெனில் தொடக்க திசைவேகம் எவ்வளவு?

A) 10 மீட்டர் / வினாடி

B) 12 மீட்டர் / வினாடி

C) 14 மீட்டர் / வினாடி

D) 16 மீட்டர் / வினாடி

(குறிப்பு – கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்.

முடுக்கம் a = -6 மீ / வினாடி2

காலம் t = 2 வினாடி

இறுதிவேகம் v = 0

V = u + at

0 = u + ( -6 × 2 )

0 = u – 12

u = 12 மீ / வினாடி )

27) u = 12 மீ / வினாடி, t = 2 வினாடி, a = -6 மீ / வினாடி எனில், இடப்பெயர்ச்சி S =?

A) 10 மீட்டர்

B) 12 மீட்டர்

C) 14 மீட்டர்

D) 16 மீட்டர்

(குறிப்பு – S = ut + 1/2 at2

= [ ( 12 × 2 ) + 1/2 ( -6 × 2 × 2 )]

= 24 – 12

S = 12 மீட்டர் )

28) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காற்றுள்ள இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் கல் முதலில் தரையைத் தொடும்.

II. காற்றில்லாத இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் காகிதம் முதலில் தரையை தொடும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காற்றுள்ள இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டில் கல் முதலில் தரையைத் தொடும். ஆனால் காற்றில்லாத இடத்தில் கீழ்நோக்கி எறியப்படும் கல் மற்றும் காகிதம் ஆகிய இரண்டுமே சம நேரத்தில் தரையை தொடும். ஏனெனில் காற்று ஊடகத்தில் காற்றின் உராய்வு விசை அல்லது தடையின்றி தானே விழும் பொருளின் மீது ஒரு தடையை ஏற்படுத்துகிறது.)

29) தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசைவேகம்?

A) u = 0

B) u > 0

C) u < 0

D) இது எல்லாமே தவறு

(குறிப்பு – தடையின்றி கீழே விழும் பொருள்கள் முடுக்கமடையும்.உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருள்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கீழே விழும். முடுக்கம் a வுக்கு பதிலாக புவியீர்ப்பு முடுக்கம் g யை, பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருள்களுக்கான சமன்பாடுகளை பெறமுடியும். தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசை வேகம் பூஜ்ஜியமாகும்.)

30) கீழ்கண்டவற்றில் எது சரியானது?

A) v = gt

B) v = g + t

C) v = g – t

D) v = g / t

(குறிப்பு – தடையின்றி கீழே விழும் பொருள்கள் முடுக்கமடையும்.உள்ளீடற்ற பொருள் அல்லது திடப்பொருள் மற்றும் சிறிய அல்லது பெரிய பொருள்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கீழே விழும். முடுக்கம் a வுக்கு பதிலாக புவியீர்ப்பு முடுக்கம் g யை, பிரதியிடுவதால், தடையின்றி தானே கீழே விழும் பொருள்களுக்கான சமன்பாடுகளை பெறமுடியும். தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசை வேகம் பூஜ்ஜியமாகும். எனவே பின்வரும் சமன்பாடுகளை பெற முடியும். v = gt, s = 1/2 gt2, v2 = 2gh.)

31) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அப்பொருளின் திசை வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.

II. ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அப்பொருளின் திசை வேகம் படிப்படியாக குறைந்து, சுழி மதிப்பை பெறும்..

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிந்தால், அந்த பொருளின் திசை வேகம் படிப்படியாக குறைந்து பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறுகிறது. அப்போது அப்பொருளின் முடுக்கம் புவியீர்ப்பு முடுக்கத்துக்கு சமமாக இருக்கும்.)

32) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அது புவியீர்ப்பு திசைக்கு நேர் திசையில் செல்கிறது. மேலும் அதன் திசை வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.

II. ஒரு பொருளை மேல் நோக்கி எரியும் போது அது புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் செல்கிறது. மேலும் அதன் திசைவேகம் படிப்படியாக குறைகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருளை மேல் நோக்கி எறியும் போது அது புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் செல்கிறது. எனவே a என்பதற்கு பதிலாக – என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கீழ்நோக்கி செல்லும் போது, + என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.)

33) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது திசை மாறும் ஆனால், திசைவேகம் மாறாது.

II. பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது திசையும், திசை வேகமும் மாறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பொருள் ஒன்று வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும்போது, திசை மாறுவதால், திசை வேகமும் மாறுகின்றது. எனவே இது ஒரு முடுகுவிக்கப்பட்ட இயக்கமாகும். உதாரணமாக பூமி சூரியனை சுற்றி வருவது, நிலவு பூமியை சுற்றி வருவது, கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம் ஆகியவை சீரான வட்ட இயக்கங்கள் ஆகும்.)

34) சீரான வட்ட இயக்கத்தின் வேகம் கீழ்காணும் எந்த சமன்பாட்டினை கொண்டு அறியப்படுகிறது?

A) V = 2πr / t

B) V = 2πr + t

C) V = 2πr – t

D) V = 2πrt

(குறிப்பு – r, ஆரம் கொண்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் ஒரு பொருளானது ஒரு சுற்றுக்கு பின் தொடக்க நிலைக்கு திரும்பி வர எடுத்துக் கொண்ட காலம் T எனில், அதன் வேகம் V பின்வருமாறு கணக்கிடப்படுகிறது. வேகம் V = சுற்றளவு / எடுத்துக்கொண்ட காலம். அதாவது வேகம் V = 2πr / t)

35) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் எண் மதிப்பு அல்லது திசை மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம்.

II. வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட இயக்கத்தை கொண்டுள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் எண் மதிப்பு அல்லது திசை மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது எனலாம். ஆகவே, வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் கல் ஒன்று முடுக்கப்பட்ட இயக்கத்தை கொண்டுள்ளது. இந்த முடுக்கத்தை மையநோக்கு முடுக்கம் என்றும், அதனுடன் தொடர்புடைய விசையை மையநோக்கு விசை என்றும் அழைப்பர்.)

36) மையநோக்கு முடுக்கத்தின் சரியான சமன்பாடு எது?

A) a = v / r

B) a = vr

C) a = v2 / r

D) எல்லாமே தவறானது

(குறிப்பு – m, நிறை உடைய ஒரு பொருள், r ஆரமுடைய ஒரு வட்டப்பாதையில், v திசைவேகத்தில் செல்வதாக கருதினால், அதன் மையநோக்கு முடுக்கமானது, a = v2 / r ஆகும்.)

37) மையநோக்கு விசையின் எண் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

A) F = mv / r

B) F = mv2 / r

C) F = mv2r

D) F = mvr

(குறிப்பு – மையநோக்கு விசையின் எண் மதிப்பு, F = நிறை × மைய நோக்கு முடுக்கம், F = mv2 / r என்பதாகும்.)

38) 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 மீ / வினாடி வேகத்தில் 25 மீட்டர் ஆரம் உடைய வட்டத்தை சுற்றி வருகிறது.எனில் மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் எவ்வளவு?

A) 4 மீ / நொடி2

B) 6 மீ / நொடி2

C) 8 மீ / நொடி2

D) 10 மீ / நொடி2

(குறிப்பு – மகிழுந்து வட்டப்பாதையில் இயங்கும் போது, அதன்மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்திற்கான சமன்பாடு, a = v2 / r.

= ( 10 ) 2 / 25

= 100 / 25

= 4 மீ / நொடி2 )

39) 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்தின் மையநோக்கு முடுக்கம் 4 மீட்டர் / நொடி2 எனில் மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசை எவ்வளவு?

A) 3200 நியூட்டன்

B) 3400 நியூட்டன்

C) 3600 நியூட்டன்

D) 3800 நியூட்டன்

(குறிப்பு – மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசைக்கான சமன்பாடு F = ma

m = 900, a = 4

F = 900 × 4

F = 3600 நியூட்டன்.)

40) கீழ்க்கண்டவற்றுள் எந்த விசை மைய நோக்கு விசை போல செயல்படும்?

I. ஈர்ப்பு விசை

II. உராய்வு விசை.

III. காந்தவிசை

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்தவிசை, நிலைமின்னியல் விசை மற்றும் இது போன்ற எந்த ஒரு விசையும் மையநோக்கு விசை போலவே செயல்படும்.)

41) கீழ்க்கண்டவற்றுள் எது மையவிலக்கு விசைக்கு எடுத்துக்காட்டு ஆகும்?

I. பூமி சூரியனை சுற்றி வருவது

II. கடிகாரத்தின் வினாடி முள்ளின் இயக்கம்

III. துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தி.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) III மட்டும்

(குறிப்பு – வட்டப் பாதையின் மையத்திலிருந்து ஒரு பொருளின் மீது வெளிப்புறமாக செயல்படும் விசை, மையவிலக்கு விசை எனப்படும். மையவிலக்கு விசையானது மைய நோக்கு விசை செயல்படும் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். இதன் எண் மதிப்பு மையநோக்கு விசையின் எண் மதிப்பிற்கு சமமாக இருக்கும்.)

9th Science Lesson 3 Questions in Tamil

3] பாய்மங்கள்

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. திடப் பொருள்களின் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள விசையானது அதிகமாக உள்ளதால் அவற்றின் வடிவத்தையும், அளவையும் எளிதில் மாற்ற முடியாது.

II. திரவங்களும் வாயுக்களும் இணைந்த கூட்டு, பாய்மங்கள் என அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சிறிய இரும்பால் ஆன ஆணி ஒன்று நீரில் மூழ்குகிறது. ஆனால் மிக அதிகமான நிறை கொண்ட கப்பல் நீரில் மிதக்கிறது. இதற்கு காரணம் அழுத்தம் ஆகும். திடப் பொருள்களின் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள விசையானது அதிகமாக உள்ளதால் அவற்றின் வடிவத்தையும், அளவையும் எளிதில் மாற்ற முடியாது. ஆனால் திரவத்திலும், வாயுக்களிலும் (கூட்டாக பாய்மங்கள்) இவ்விசை குறைவாக உள்ளதால் அவற்றின் வடிவத்தை எளிதில் மாற்றலாம்.)

2) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும் விசையானது உந்துவிசை என அழைக்கப்படுகிறது.

II. உந்து விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பரப்பளவை சார்ந்ததாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மணற்பாங்கான பரப்பின் மீது நிற்கும் போது கால்கள் உள்ளே நடத்தப்படுகிறது. ஆனால் படுத்திருக்கும்போது அது நிகழ்வதில்லை. மணலில் நிற்கும்போது செயல்படும் விசையானது கால்களின் பரப்பிற்கு சமமான பரப்பளவில் செயல்படுகிறது. ஆனால் படுத்திருக்கும்போது உந்து விசை குறைவாக உள்ளது. எனவே உந்து விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது அது செயல்படும் பரப்பளவை சார்ந்துள்ளது.

3) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் என அழைக்கப்படுகிறது.

II. பரப்பளவு குறையும்போது அழுத்தம் அதிகரிக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை அழுத்தம் என அழைக்கப்படுகிறது. ஆகையால் ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசையே அழுத்தம் என்றும் நாம் கூறலாம். அழுத்தம் = உந்து விசை / தொடு பரப்பு ஆகும். பரப்பளவு அதிகரிக்கும் போது அழுத்தம் குறையும், பரப்பளவு குறையும்போது அழுத்தம் அதிகரிக்கும்.)

4) உந்துவிசையின் SI அலகு?

A) நியூட்டன்

B) கேண்டிலா

C) பாஸ்கல்

D) ஜுல்

(குறிப்பு – SI அலகுகளில், உந்து விசையின் அலகு நியூட்டன் (N). அழுத்தத்தின் அலகு நியூட்டன் மீட்டர் -2 (Nm-2).

5) ஒரு பாஸ்கல் என்பது?

A) 1 Nm-2

B) 10 Nm-2

C) 100 Nm-2

D) 1000 Nm-2

(குறிப்பு – பிரான்ஸ் நாட்டு அறிவியல் அறிஞரான ப்ளைஸ் பாஸ்கல் உள்ளவரை சிறப்பிக்கும் வகையில் ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் என்பது, ஒரு பாஸ்கல் (Pa) என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1 Pa = 1 Nm-2 ஆகும்.)

6) 90 கிலோ நிறையைக் கொண்ட மனிதன் ஒருவன் தன் இரு கால்களிலும் தரையில் நிற்கிறான். தரையுடன் கால்களின் பரப்பளவு 0.036 மீ-2 ஆகும். (g = 10 மீ வி-2). அவன் உடல் எவ்வளவு அழுத்தத்தை தரையில் ஏற்படுத்துகிறது என்பதை கண்டறி?

A) 20000 பாஸ்கல்

B) 22000 பாஸ்கல்

C) 25000 பாஸ்கல்

D) 27000 பாஸ்கல்

(குறிப்பு – மனிதனின் எடை (உந்து விசை)

F = mg = 90 கிகி × 10 மீ வி-2

F = 900 நியூட்டன்.

அழுத்தம், P = F / A

P = 900 நியூட்டன் / 0.036 மீ2

P = 25000 பாஸ்கல்.)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. திரவங்கள் மற்றும் வாயுக்கள் இரண்டும் பொதுவாக பாய்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

II. திடப் பொருள்களைப் போலவே பாய்மங்களுக்கும் எடை உண்டு.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – திரவங்கள் மற்றும் வாயுக்கள் இரண்டும் பொதுவாக பாய்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திடப் பொருள்களைப் போலவே பாய்மங்களுக்கும் எடை உண்டு. அதன் விளைவாக அவை அழுத்தத்தை கொண்டுள்ளன.)

8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு கொள்கலனில் நிரப்பப்படும் பாய்மமானது, அனைத்து திசைகளிலும், அனைத்துப் புள்ளிகளிலும் அழுத்தத்தை வெளிப்படுத்தும்.

II. பாய்மங்களில் உள்ள மூலக்கூறுகள் சீரற்ற மற்றும் வேகமான இயக்கத்தில் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு கொள்கலனில் நிரப்பப்படும் பாய்மமானது, அனைத்து திசைகளிலும், அனைத்துப் புள்ளிகளிலும் அழுத்தத்தை வெளிப்படுத்தும். பாய்மங்களில் உள்ள மூலக்கூறுகள் சீரற்ற மற்றும் வேகமான இயக்கத்தில் இருப்பதால், அனைத்து திசைகளிலும் சம அளவு நகரும் வாய்ப்பை பெற்றுள்ளன.)

9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. திரவங்களின் அழுத்தத்தினால், ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் பொருளின் மீதும் கொள்கலனின் சுவற்றின் மீதும் செயல்படும் விசையானது அவற்றின் மேற்பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும்.

II. காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றினை நீரினுள் அழுத்தும் போது அது உடனடியாக மேலே எழும்பும். இந்த நிகழ்வு நீரில் மேல்நோக்கிய அழுத்தம் ஒன்று செயல்படுவதை குறிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – திரவங்களின் அழுத்தத்தினால், ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் பொருளின் மீதும் கொள்கலனின் சுவற்றின் மீதும் செயல்படும் விசையானது அவற்றின் மேற்பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும். அதேபோல திரவங்களின் அழுத்தமானது பக்கவாட்டிலும் செயல்படுகிறது.)

10) திரவ அழுத்தத்தினை நிர்ணயிக்கும் காரணி கீழ்கண்டவற்றுள் எது?

I. ஆழம்

II. திரவத்தின் அடர்த்தி

III. புவியீர்ப்பு முடுக்கம்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – திரவங்களால் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும் அழுத்தமானது பின்வருவனவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. அவை ஆழம்(h), திரவத்தின் அடர்த்தி(ρ) மற்றும் புவியீர்ப்பு முடுக்கம்(g) என்பன ஆகும்.)

11) முழுதும் நீர் நிரப்பப்பட்டு மேலே மற்றும் கீழே துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலில், மேலே இருக்கும் துளை வழியே நீர் வழிவதும், கீழே இருக்கும் துளை வழியே நீர் பீறிட்டு வெளியே வருவது கீழ்காணும் எந்த காரணத்தினால் ஆகும்?

A) நீரின் ஆழத்தில் அதிக அழுத்தம் இருப்பதால்

B) நீரின் ஆழத்தில் குறைந்த அழுத்தம் இருப்பதால்

C) கீழே இருக்கும் துளை பெரியதாக இருப்பதால்

D) இவை அனைத்தும் தவறு.

(குறிப்பு – பெரிய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் செங்குத்தாக சில சென்டி மீட்டர்கள் இடைவெளி விட்டு ஆணியின் உதவியுடன் துளையிட்ட பின்பு அதனுள் நீர் நிரப்ப வேண்டும். நீர் வெளியேறுவதை பார்க்கும்போது மேலே உள்ள துளையில் இருந்து வரும் நீர் வழிந்து வருவதையும், கீழே உள்ள துளைகளில் இருந்து வரும் நீர் பீறிட்டு வருவதையும் காண முடியும். நீரின் ஆழத்தில் அதிக அழுத்தம் இருப்பது தான் இதற்கான காரணமாகும்.)

12) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நீரின் ஆழத்தில் அதிக அழுத்தம் காணப்படும்.

II. திரவத்தின் அழுத்தம் அதன் அடர்த்தியை சார்ந்துள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இரு பிளாஸ்டிக் கொள்கலன்களில் வேறுபட்ட அடர்த்தியை கொண்ட இரு திரவங்களை( உதாரணமாக நீர் மற்றும் சமையல் எண்ணெய்) ஒரே அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரே உயரத்தில் இரண்டு கொள்கலன்களிலும் துளையிட வேண்டும். நீரானது சமையல் எண்ணையை விட அதிக வேகத்தில் பீறிட்டு வருவதை காண முடியும். இந்த நிகழ்வு திரவத்தின் அழுத்தமானது அதன் அடர்த்தியை சார்ந்துள்ளது என்பதை குறிக்கிறது.)

13) திரவத்தின் நிறைக்கான சரியான சமன்பாடு எது?

A) m = ρV

B) m = ρ / V

C) m = ρ + V

D) m = ρ – V

(குறிப்பு – திரவத்தம்பதின் அடிப்பகுதியிலுள்ள உந்துவிசை (F) = திரவத்தின் எடை ஆகும். ஆகையால் F = mg. திரவத்தின் நிறையானது திரவத்தின் பருமனை அதன் அடர்த்தியால் பெருக்கினால் கிடைக்கும்.அதாவது m = ρV என்பதாகும். )

14) திரவதம்பதினால் ஏற்படும் அழுத்தம் எவ்வாறு குறிக்கப்படுகிறது?

A) P = ρhg

B) P = ρh / g

C) P = ρ / hg

D) P = ρ + hg

(குறிப்பு – அழுத்தம் P = உந்துவிசை (F) / பரப்பளவு (A)

= mg / A

= ρAhg / A

திரவத் தம்பதினால் ஏற்படும் அழுத்தம் P = ρhg.)

15) 0.85 மீ திரவதம்ப உயரமுள்ள நீர் (அடர்த்தி, ρw = 1000 கிகி மீ-3 ) எனில் அது செலுத்தும் அழுத்தம் என்ன?

A) 8000 பாஸ்கல்

B) 8200 பாஸ்கல்

C) 8500 பாஸ்கல்

D) 8700 பாஸ்கல்

(குறிப்பு – நீரினால் ஏற்படும் அழுத்தம் = hρwg

= 0.85 மீ × 1000 கிகி மீ-3 × 10 மீ வி-2

= 8500 பாஸ்கல்

நீரினால் ஏற்படும் அழுத்தம் = 8500 பாஸ்கல் ஆகும்.)

16) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு திரவத் தம்பத்திலுள்ள அழுத்தமானது, அத்திரவதம்பத்தின் ஆழம், அடர்த்தி ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது.

II. குறிப்பிட்ட ஆழத்தில் திரவத்தின் அழுத்தமானது, அந்த திரவத்தினைக் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தையோ அல்லது அதில் உள்ள திரவத்தின் அளவையோ பொறுத்துள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு திரவத் தம்பத்திலுள்ள அழுத்தமானது, அத்திரவதம்பத்தின் ஆழம், அடர்த்தி மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட ஆழத்தில் திரவத்தின் அழுத்தமானது, அந்த திரவத்தின் ஐ கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தையோ அல்லது அதில் உள்ள திரவத்தின் அளவைப் பொறுத்தது அல்ல. அது ஆழத்தை மட்டுமே பொருத்தது.)

17) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காற்றானது இடத்தை அடைத்துக்கொள்ளும். மேலும் அதற்கு எடை உள்ளது என்பதால் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

II. வளிமண்டல அழுத்தம் என்று குறிப்பிடுவது, கடல் மட்டத்தில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பூமியானது குறிப்பிட்ட உயரம் வரை( ஏறத்தாழ 300 கிலோ மீட்டர்) காற்றால் சூழப்பட்டுள்ளது. இதனை புவியின் வளிமண்டலம் என்று அழைக்கிறோம். காற்றானது இடத்தை அடைத்துக் கொள்ளும். மேலும் அதற்கு எடை உள்ளது என்பதால் காற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமானது வளிமண்டல அழுத்தம் என அழைக்கப்படுகிறது. வளிமண்டல அழுத்தம் என்று குறிப்பிடுவது, கடல் மட்டத்தில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.)

18) சராசரி வளிமண்டல அழுத்தம்?

A) 101.3 kpa

B) 103.3 kpa

C) 105.3 kpa

D) 107.3 kpa

(குறிப்பு – மனிதனின் நுரையீரல் கடல்மட்ட வளிமண்டல அழுத்தத்தில்(101.3 kpa) சுவாசிப்பதற்கு ஏற்ப தகுந்த தகவமைப்பை கொண்டுள்ளது. உயரமான மலைகளின் மேலே செல்லும்போது அழுத்தம் குறைவதால், மலையேறுபவர்களுக்கு உயிர்வாயு உருளை இணைந்த சிறப்பான சுவாசிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.)

19) முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானி உருவாக்கியவர் யார்?

A) பாஸ்கல்

B) கலிலியோ

C) டாரிசெல்லி

D) நியூட்டன்

(குறிப்பு – மண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது. இத்தாலிய இயற்பியலாளர், டாரிசெல்லி என்பவர் முதன் முதலாக பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கினார்.)

20) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பாதரச காற்றழுத்தமானியில் ஒரு முனை திறந்தும், ஒரு முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடி குழாயை பாதரசம் நிரப்பப்பட்டிருக்கும்.

II. காற்றழுத்தமானி அதிலுள்ள பாதரசத்தை வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்துடன் சமன் செய்து இயங்குகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பாதரச காற்றழுத்தமானியில் ஒரு முனை திறந்தும், ஒரு முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடி குழாயினுள் பாதரசம் நிரப்பப்பட்டு, தலைகீழாக ஒரு கொள்கலனில் வைக்கப்பட்ட ஒரு அமைப்பை கொண்டிருக்கும். தலைக்கீழாக கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும். காற்றழுத்தமானி அதிலுள்ள பாதரசத்தை வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்துடன் சமன் செய்து இயங்கும்.)

21) பாதரசத்தின் அடர்த்தி?

A) 13000 கிகி மீ-3

B) 13200 கிகி மீ-3

C) 13400 கிகி மீ-3

D) 13600 கிகி மீ-3

(குறிப்பு – பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ-3 ஆகும். நீரின் அடர்த்தி 1000 கிகி மீ-3 ஆகும். கடல் நீரின் அடர்த்தி 1025 கிகி மீ-3 ஆகும்.)

22) ஒரு குறிப்பிட்ட நாளில் கடல் மட்ட அளவில் பாதரசத்தின் அழுத்தம் 760 மிமீ எனில், வளிமண்டல அழுத்தத்திற்கு சமமான 760 மிமீ பாதரச தம்பத்தினால் ஏற்படும் அழுத்தம் என்ன?

A) 1.013 × 103 பாஸ்கல்

B) 1.013 × 105 பாஸ்கல்

C) 1.013 × 107 பாஸ்கல்

D) 1.013 × 109 பாஸ்கல்

(குறிப்பு – அழுத்தம் P = ρhg.

= 760 × 10-3 மீ × 13600 கிகி மீ-3 × 9.8 கிகி வி-2

= 1.013 × 105 பாஸ்கல்

அழுத்தம் = = 1.013 × 105 பாஸ்கல் )

23) வளிமண்டல அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) atm

B) atp

C) atc

D) ats

(குறிப்பு – வளிமண்டல அழுத்தம் (Atmospheric pressure) என்பது புவியின் வளிமண்டலத்தால் (Earth’s atmosphere) அதன் மேற்பரப்பில் ஒர் அலகில் உணரப்படும் அழுத்தமாகும். வளிமண்டல அழுத்தம் atm அழைக்கப்படுகிறது. இது பார் (bar) என்றும் அழைக்கப்படுகிறது.)

24) 1 atm என்பது?

A) 0.1013 பார்

B) 1.013 பார்

C) 10.13 பார்

D) 101.3 பார்

(குறிப்பு – வளிமண்டல அழுத்தம் atm அழைக்கப்படுகிறது. இது பார் (bar) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வலகு அதிகமான அழுத்த மதிப்புகளை குறிப்பிட பயன்படுகிறது.

1 atm = 1.013 × 105 பாஸ்கல்

1 பார் = 1 × 105 பாஸ்கல்

ஆகையால், 1 atm = 1.013 பார் ஆகும்.)

25) ஒவ்வொரு 1மீ2 பரப்பளவிலும் ____________ அளவுள்ள விசை செயல்படுகிறது.

A) 0.1013 கிலோ நியூட்டன்

B) 1.013 கிலோ நியூட்டன்

C) 10.13 கிலோ நியூட்டன்

D) 101.3 கிலோ நியூட்டன்

(குறிப்பு – 1 atm = 1.013 × 105 பாஸ்கல்

1 பார் = 1 × 105 பாஸ்கல்

ஆகையால், 1 atm = 1.013 பார் ஆகும்.

கிலோ பாஸ்கலின் அளவில் இதன் மதிப்பை கூறும்போது, வளிமண்டல அழுத்தமானது, 101.3 கிலோ பாஸ்கல் ஆகும். ஒவ்வொரு 1மீ2 பரப்பளவிலும் 1.013 கிலோ நியூட்டன் அளவுள்ள விசை செயல்படுகிறது)

26) இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள பாதரச காற்றழுத்தமானி 732 மிமீ அளவினை பாதரச தம்பத்தில் குறிக்கிறது எனில், வளிமண்டல அழுத்தத்தை கணக்கிடுக. பாதரசத்தின் அடர்த்தி, ρ = 1.36 × 104 கிகி மீ-3 எனவும், g = 9.8 மீவி-2 எனவும் கொள்க.

A) 0.976 × 105 பாஸ்கல்

B) 9.76 × 105 பாஸ்கல்

C) 97.6 × 105 பாஸ்கல்

D) 976 × 105 பாஸ்கல்

(குறிப்பு – ஆய்வகத்தில் வளிமண்டல அழுத்தம்,

P = ρhg

= 733 × 10-3 × 1.36 × 104 × 9.8

= 9.76 × 104 பாஸ்கல்

= 0.976 × 105 பாஸ்கல் )

27) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வாகனங்களின் டயர்களில் உள்ள அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தை விட அதிகமாக இருக்கும்.

II. நம் உடலில் உள்ள ரத்த அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தை விட குறைவாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நமது அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் வளிமண்டல அழுத்தத்தில் நடைபெறுகின்றன. இந்த செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாக நடைபெறுவதால் நாம் அவற்றை உணர்வது கூடக் கிடையாது. ரத்த அழுத்தம் மற்றும் வாகனங்களின் டயர்களில் உள்ள அழுத்தம் ஆகியவை வளிமண்டல அழுத்தத்திற்கு அதிகமாக உள்ள அழுத்தத்தை குறிக்கும். எனவே, தனிச்சுழி அழுத்தம் என்பது முழுமையான வெற்றிடத்தை பூஜ்ஜிய குறிப்பாக கொண்டு கணக்கிடப்படுவதாகும்.)

28) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வளிமண்டல அழுத்தத்தை விட அதிகமான அழுத்தத்தை கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் = வளிமண்டல அழுத்தம் – அளவி அழுத்தம்

II. வளிமண்டல அழுத்தத்தை விட குறைவான அழுத்தத்தை கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் = வளிமண்டல அழுத்தம் + அளவி அழுத்தம்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – தனிச்சுழி அழுத்தம் என்பது முழுமையான வெற்றிடத்தை பூஜ்ஜிய குறிப்பாக கொண்டு கணக்கிடப்படுவதாகும்.வளிமண்டல அழுத்தத்தை விட அதிகமான அழுத்தத்தை கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் = வளிமண்டல அழுத்தம் + அளவி அழுத்தம் என கொள்ளப்படும்.வளிமண்டல அழுத்தத்தை விட குறைவான அழுத்தத்தை கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் = வளிமண்டல அழுத்தம் – அளவி அழுத்தம் என கொள்ளப்படும். )

29) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வளிமண்டல அழுத்தத்தை விட கடலின் உள்ளே அழுத்தம் அதிகமாக இருக்கும்.

II. வாகனங்களின் டயர் அழுத்தம்psi என்னும் அலகுகளில் குறிக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வளிமண்டல அழுத்தத்தை விட கடலின் உள்ளே அழுத்தம் அதிகமாக இருக்கும். இவ்வளவு அதிகமான அழுத்தத்தை நம்முடைய மென்மையான திசுக்களும், ரத்த நாளங்களும் தாங்கிக்கொள்ள இயலாது. எனவே ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சிறப்பான உடைகளை அணிந்தும், கருவிகள் கொண்டும் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். பொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் psi என்னும் அலகுகளில் குறிக்கப்படுகிறது. psi இன்னும் அலகு ஒரு அங்குலத்தில் செயல்படும் ஒரு பாஸ்கல் அழுத்தம் ஆகும்.)

30) அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்து திசைகளிலும் சீராக கடத்தப்படும் என்பது?

A) பாஸ்கல் விதி

B) நியூட்டன் விதி

C) பாயில்ஸ் விதி

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – பாஸ்கல் தத்துவமானது பிரான்ஸ் நாட்டின் கணிதம் மற்றும் இயற்பியல் மேதையான பாஸ்கலின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. “அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்து திசைகளிலும் சீராக கடத்தப்படும்” என்பது பாஸ்கல் விதி ஆகும்.)

31) நீரியல் அழுத்தியின் அடிப்படையாக அமைந்துள்ளது விதி எது?

A) பாஸ்கல் விதி

B) நியூட்டன் விதி

C) பாயில்ஸ் விதி

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – இதுவரை உருவாக்கப்பட்ட முக்கியமான இயந்திரங்களுள் ஒன்றான நீரியல் அழுத்தியின் அடிப்படையாக பாஸ்கல் விதி அமைந்துள்ளது. வெவ்வேறு குறுக்குவெட்டு பரப்பைக் கொண்ட இரு உருளைகளை நீரியல் அழுத்தி இயந்திரம் கொண்டுள்ளது.)

32) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நீரியல் அழுத்தியில் வெவ்வேறு குறுக்குவெட்டு பரப்பைக் கொண்ட இரு உருளைகள் உள்ளது. இரு உருளைகளும், இரு பிஸ்டன்களை கொண்டுள்ளது.

II. சிறிய பிஸ்டனில் செயல்படும் அழுத்தமும், பெரிய பிஸ்டனில் செயல்படும் அழுத்தமும் சமமாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நீரியல் அழுத்தியில் வெவ்வேறு குறுக்குவெட்டு பரப்பைக் கொண்ட இரு உருளைகள் உள்ளது. இரு உருளைகளும், இரு பிஸ்டன்களை கொண்டுள்ளது. இவ்விரு உருளைகளுடனும் ‘a’ மற்றும் ‘A’ என்ற குறுக்குவெட்டு பரப்பளவைக் கொண்ட பிஸ்டன்கள் இணைக்கப்பட்டுள்ளன.சிறிய பிஸ்டனில் செயல்படும் அழுத்தமும், பெரிய பிஸ்டனில் செயல்படும் அழுத்தமும் சமமாக இருக்கும்.)

33) 2000 கிலோ கிராம் எடை கொண்ட வாகனத்தை தூக்குவதற்கு நீரியல் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. வாகனம் இருக்கும் பிஸ்டனின் பரப்பளவு 0.5 மீ2 மற்றும் விசை செயல்படும் பிஸ்டனின் பரப்பளவு 0.03 மீ2 எனில், வாகனத்தை தூக்குவதற்கு தேவைப்படும் குறைந்த அளவு விசை யாது?

A) 1126 N

B) 1146 N

C) 1166 N

D) 1176 N

(குறிப்பு – வாகனம் உள்ள பிஸ்டனின் பரப்பளவு (A1) = 0.5 மீ2

வாகனத்தின் எடை (F1) = 2000 கிகி × 9.8 மீ வி-2

F2 என்ற விசை செயல்படும் பரப்பளவு (A2) = 0.03 மீ2

P1 = P2

F1 / A1 = F2 / A2

F2 = ( F1 / A1 ) × A2

F2 = ( 2000 × 9.8) ( 0.03 / 0.5 )

F2 = 1176 N )

34) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நீரின் அடர்த்தி மற்றும் மண்ணெண்ணெயின் அடர்த்தி முறையே 1 கி / செமீ3 மற்றும் 0.8 கி / செமீ3 ஆகும்.

II. ஒரு பொருளின் அடர்த்தியை அதன் ஓரலகு பருமனுக்கான நிறை என்று குறிப்பிடலாம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஓரலகு பருமனுக்கான நீரின் நிறை 250 கி / 250 செமீ3 ஆகும். ஓரலகு பருமனுக்கான மண்ணெண்ணையின் நிறை 200 கி / 250 செமீ3 ஆகும்.நீரின் அடர்த்தி மற்றும் மண்ணெண்ணெயின் அடர்த்தி முறையே 1 கி / செமீ3 மற்றும் 0.8 கி / செமீ3 ஆகும்.)

35) அடர்த்திக்கான குறியீடு?

A) ஆல்பா ( α )

B) பீட்டா ( β )

C) காமா ( Ɣ )

D) ரோ ( ρ )

(குறிப்பு – அடர்த்தியின் SI அலகு கிலோகிராம் / மீட்டர்3 அல்லது கிகி / மீ3. மேலும் கிராம் / சென்டிமீட்டர்3 (கி/மீ3) எனவும் இதைக் குறிப்பிடலாம். அடர்த்திக்கான குறியீடு ரோ ( ρ ) எனப்படுகிறது.)

36) நீரின் எந்த வெப்பநிலையில், அதன் அடர்த்தியுடன் பொருள்களின் அடர்த்தியை ஒப்பிடுவது வழக்கமாக உள்ளது?

A) 0°C

B) 2°C

C) 4°C

D) 6°C

(குறிப்பு – இரண்டு பொருள்களின் அடர்த்தியை ஒப்பிடுவதற்கு அவற்றின் நிறைகளை கண்டறிய வேண்டும். பெரும்பாலும் 4°C வெப்பநிலையில் நீரின் அடர்த்தியுடன் பொருள்களின் அடர்த்தியை ஒப்பிடுவது தான் வழக்கமாக உள்ளது. ஏனெனில் 4°C வெப்பநிலையில் நீரின் அடர்த்தி 1 கிசெமீ3 ஆகும்.)

37) ஒப்படர்த்தியின் சரியான சமன்பாடு எது?

A) ஒப்படர்த்தி = பொருளின் நிறை / நீரின் நிறை (4°C)

B) ஒப்படர்த்தி = பொருளின் நிறை – நீரின் நிறை (4°C)

C) ஒப்படர்த்தி = பொருளின் நிறை × நீரின் நிறை (4°C)

D) ஒப்படர்த்தி = பொருளின் நிறை + நீரின் நிறை (4°C)

(குறிப்பு – ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது அப்பொருளின் அடர்த்திக்கும், 4°C வெப்பநிலையில் நீரின் அடர்த்திக்கும் உள்ள விகிதம் என்று வரையறுக்கப்படுகிறது.

ஒப்படர்த்தி = பொருளின் அடர்த்தி / நீரின் அடர்த்தி (4°C)

அடர்த்தி = நிறை / பருமன் என்பதால்

ஒப்படர்த்தி = ( பொருளின் நிறை / பொருளின் பருமன் ) / ( நீரின் நிறை / நீரின் பருமன் )

ஆனால் பொருளின் பருமனும், நீரின் பருமனும் சமமாக உள்ளதால்,

ஒப்படர்த்தி = பொருளின் நிறை / நீரின் நிறை (4°C) ஆகும்.)

38) ஒப்படர்த்தியை அளக்கும் கருவி எது?

A) பாரோமீட்டர்

B) பிக்நோமீட்டர்

C) ஸ்பைரோமீட்டர்

D) ஸ்பிக்மோமீட்டர்

(குறிப்பு – பிக்நோமீட்டர் ( Pycnometer) என்ற உபகரணத்தை கொண்டு ஒப்படர்த்தியை அளக்க முடியும். பிக்நோமீட்டர் உண்பதற்கு அடர்த்தி குடுவை என்று மற்றொரு பெயரும் உண்டு. இக்குடுவையானது மெல்லிய துளையிடப்பட்ட அடைப்பாணை கொண்டுள்ளது.)

39) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பிக்நோமீட்டர் கொண்டு ஒப்பிடப்படும் பொருள் நீர் எனில் ஒப்படர்த்திக்கு பதிலாக தன்னடர்த்தி (Specific gravity) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

II. கொடுக்கப்பட்டுள்ள பொருளின் அடர்த்திக்கும் அதே பருமன் உள்ள ஒப்பிடப்படும் பொருளின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவு ஒப்படர்த்தியை குறிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பிக்நோமீட்டர் ( Pycnometer) என்ற உபகரணத்தை கொண்டு ஒப்படர்த்தியை அளக்க முடியும். பிக்நோமீட்டர் உண்பதற்கு அடர்த்தி குடுவை என்று மற்றொரு பெயரும் உண்டு. இக்குடுவையானது மெல்லிய துளையிடப்பட்ட அடைப்பாணை கொண்டுள்ளது. இக்குடுவையை திரவத்தினால் நிரப்பி இவ்வடைப்பானால் மூடினால் குடுவையில் உள்ள உபரி திரவம் இதில் உள்ள துளையின் வழியே வெளியேறி விடும். வெப்பநிலை சீராக இருக்குமானால், இக்கொடுமை எப்போதும் ஒரே அளவு பருமன் கொண்ட திரவத்தை அதனுள் கொண்டிருக்கும்.)

40) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின் அப்பொருளானது திரவத்தில் மிதக்கும்.

II. நீரைவிட, மரத்தின் அடர்த்தி குறைவானது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவது அல்லது மிதப்பது குறிப்பிட்ட அந்தப் பொருளின் அடர்த்தியை கொடுக்கப்பட்டுள்ள அந்தத்திரவத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின் அப்பொருளானது திரவத்தில் மிதக்கும். மரத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் மரம் நீரில் மிதக்கிறது.)

41) 12 செமீ நீளமும் 11 செமீ அகலமும், 3.5 செமீ தடிமனும் கொண்ட ஒரு வினோதமான பொருள் உன்னிடம் உள்ளது. அதன் நிறை 1165 கிராம் எனில், அதன் அடர்த்தி யாது?

A) 1.5 கி செமீ-3

B) 2.5 கி செமீ-3

C) 3.5 கி செமீ-3

D) 4.5 கி செமீ-3

(குறிப்பு – பொருளின் அடர்த்தி = நிறை / பருமன்

= 1155 கி / 12 × 11 × 3.5

= 1155 / 462

= 2.5 கி செமீ-3 )

42) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு திரவத்தின் அடர்த்தி அல்லது ஒப்படர்த்தியை நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி திரவமானி எனப்படும்.

II. திரவமானி மிதத்தல் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு திரவத்தின் அடர்த்தி அல்லது ஒப்படர்த்தியை நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி திரவமானி (Hydrometer) எனப்படும். திரவமானி மிதத்தல் தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. ஒரு திரவத்தில் மூழ்கியுள்ள திரவமானியின் பகுதியினால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடையானது, திரவமானியின் எடைக்கு சமமாக இருக்கும்.)

43) திரவ மானியின் அடிப்பகுதி ஆனது கீழ்காணும் எதனால் நிரப்பப்பட்டிருக்கும்?

A) நீர்

B) பாதரசம்

C) கந்தகம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – திரவமானியானது அடிப்பகுதியில் கோள வடிவத்தினாலான குடுவையையும் மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டுள்ளது. குழாயின் அடிப்பகுதியானது பாதரசம் அல்லது காரீயத் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது திரவமானியானது மிதப்பதற்கும், திரவங்களில் செங்குத்தாக நிற்பதற்கும் உதவுகிறது.)

44) கீழ்க்கண்டவற்றுள் எது திரவமானியின் தத்துவத்தை பின்பற்றுவன ஆகும்?

I. பால்மானி

II. சர்க்கரைமானி

III. சாராயமானி

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – திரவமானி கலை பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்றபடி அளவுதிருத்தம் (Callibaration) செய்து பாலின் அடர்த்தியைக் கண்டறியும் பால்மானி (Lactometer), சர்க்கரையின் அடர்த்தியை கண்டறியும் சர்க்கரைமானி (Saccharometer) மற்றும் சாராயத்தின் அடர்த்தியை கணக்கிடும் சாராயமானி (Alcoholometer) போன்றவை உருவாக்கப்படுகின்றன.)

45) பால்மானியில் குறியீடுகள் எதில் தொடங்கும்?

A) 10 முதல்

B) 15 முதல்

C) 20 முதல்

D) 25 முதல்

(குறிப்பு – பால்மானி என்பது ஒரு வகையான திரவமானி ஆகும். இது பாலின் தூய்மையை கண்டறிய பயன்படும் ஒரு கருவி ஆகும். பாலின் தனிடர்த்தி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பால்மானி வேலை செய்கிறது. பால் மானியின் சோதனைக்குழாய் மேல்பகுதியில் 15 இல் தொடங்கி அடிப்பகுதியில் 45 வரை அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும்.)

46) எந்த வெப்பநிலையில் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்?

A) 50°F

B) 60°F

C) 70°F

D) 80°F

(குறிப்பு – பால்மானியின் உள்ளே வெப்பநிலைமானியும் இருக்கலாம். அது அடிப்பகுதியில் உள்ள குமிழ் முதல், அளவீடுகள் பிரிக்கப்பட்ட மேற்பகுதி வரை அமைந்திருக்கும். 60°F வெப்ப நிலையில்தான் பால் மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்.)

47) பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு?

A) 30

B) 32

C) 34

D) 36

(குறிப்பு – ஒரு பால்மானி பாலில் உள்ள அடர்த்தியான வெண்ணையின் அளவை அளவிடக் கூடியது. வெண்ணையின் அளவு அதிகமானால், பால்மானி பாலில் குறைவாக மிதக்கும். பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு 32 ஆகும். பெரும்பாலும் பால் பதனிடும் இடங்களிலும், பால் பண்ணைகளிலும் இவை பயன்படுகின்றன.)

48) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருள், பாய்மங்களில் முழுமையாகவோ அல்லது ஓரளவிற்கோ மூழ்கியிருக்கும் போது, அப்பொருளானது சுற்றியுள்ள பாய்மத்தினால் மேல்நோக்கிய உந்து விசையை உணர்கிறது.

II. இந்த விசையானது மிதப்பு விசை என்று அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – திரவங்களின் கீழ் பகுதிகளில் உள்ள அழுத்தம் மேல் பகுதியில் உள்ளதை விட அதிகமாக உள்ளது. இந்த அழுத்த வேறுபாடு அப்பொருள் மீது ஒரு விசையை செலுத்தி அப்பொருளை மேல்நோக்கி உந்துகிறது. இந்த விசையை மிதப்பு விசை (Buoyant force) என்றும் இந்த நிகழ்வை மிதப்பு தன்மை (Buoyancy) என்றும் அழைக்கிறோம்.)

49) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பெரும்பாலான மிதக்கும் பொருட்கள் அதிக பருமனையும் குறைந்த அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.

II. ஒரு பொருளானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையை விட குறைவான எடையைக் கொண்டிருந்தால் அத்தகைய பொருள்கள் நேர்மறையான மிதக்கும் தன்மையைக் கொண்டவை என அழைக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருளானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையை விட குறைவான எடையைக் கொண்டிருந்தால் அத்தகைய பொருள்கள் நேர்மறையான மிதக்கும் தன்மையைக் கொண்டவை என அழைக்கப்படும். மாறாக ஒரு பொருளின் எடையானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையைவிட அதிகமாக இருந்தால் அப்பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசை குறைந்து அந்த பொருள் மூழ்கிவிடும். நன்னீரை விட உப்பு நீர் (கடல் நீர்) அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும்.)

50) கார்ட்டீசியன் மூழ்கி கீழ்கண்டவற்றுள் எதனால் ஆனது?

A) செம்மண்

B) களிமண்

C) கல்

D) இவை ஏதும் இல்லை

(குறிப்பு – கார்ட்டீசியன் மூழ்கி (Cartesian driver) சோதனையானது மிதப்பு தன்மையின் தத்துவம் செயல்படும் விதத்தை விளக்குகிறது இது களிமண்ணை கொண்டதொரு பேனா மூடி ஆகும். கார்ட்டீசியன் மூழ்கியானது மிதப்பதற்கு தேவையான போதிய அளவு திரவத்தினாலும், மீதி பகுதியில் காற்றினாலும் நிரப்பப்பட்டுள்ளது.)

51) நீர்நிலை சமநிலையின் (Hydrostatic balance) தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?

A) கலிலியோ

B) நியூட்டன்

C) பாஸ்கல்

D) ஆர்க்கிமிடிஸ்

(குறிப்பு – பாஸ்கல் விதியின் விளைவு ஆக்கிமிடிசின் தத்துவம் ஆகும். வரலாற்றுக் குறிப்புகளின் படி குளியல் தொட்டியில் அமர்ந்திருக்கும்போது தனது எடையில் ஏற்பட்ட வெளிப்படையான இழப்பை கவனித்த பிறகு நீர்நிலை சமநிலையின்(Hydrostatic balance) தத்துவத்தை ஆர்க்கிமிடிஸ் உருவாக்கினார்.)

52) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும்போது அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும் என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவம் ஆகும்.

II. ஒரு பொருள் முழுமையாகவோ பகுதியாகவோ ஓய்வு நிலையில் உள்ள பாய்மத்தில் மூழ்கும்போது அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான மேல் நோக்கு விசையை உணரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருள் முழுமையாகவோ பகுதியாகவோ ஓய்வு நிலையில் உள்ள பாய்மத்தில் மூழ்கும்போது அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான மேல் நோக்கு விசையை உணரும். இந்த மேல் நோக்கு விசையினால் பொருள் தன் எடையின் ஒரு பகுதியை இழக்கிறது. எடையில் ஏற்பட்ட இந்த இழப்பு மேல்நோக்கு விசைக்கு சமமாக உள்ளது.)

53) கீழ்காணும் விதிகளில் எது மிதத்தல் விதி ஆகும்?

I. பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருள் ஒன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்கு சமம் ஆகும்.

II. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும், மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பின்வரும் இரண்டு விதிகள், மிதத்தல் விதிகள் என அழைக்கப்படுகின்றன.அவை பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருள் ஒன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்கு சமம் ஆகும். இரண்டாம் விதியானது மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும், மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும் என்பதாகும். மிதப்பு விசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் என அழைக்கப்படுகிறது.)

9th Science Lesson 4 Questions in Tamil

4] மின்னூட்டமும் மின்னோட்டமும்

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நிறை, நீளம் ஆகியவற்றைப் போலவே மின்னூட்டமும் அனைத்து பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப் பண்பாகும்.

II. அணுக்கள் எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகிய துகள்களை மட்டும் கொண்டுள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நிறை, நீளம் ஆகியவற்றைப் போலவே மின்னூட்டமும் அனைத்து பருப்பொருள்களுக்கும் உரிய ஒரு அடிப்படைப் பண்பாகும். பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் ஆனவை. அணுக்கள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்களை கொண்டுள்ளன.)

2) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. புரோட்டான்கள் நேர் மின்னூட்டமும், எலக்ட்ரான்கள் எதிர் மின்னோட்டமும் பெற்றுள்ளன.

II. நியூட்ரான்களுக்கு மின் சுமை இல்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – புரோட்டான்கள் நேர் மின்னூட்டமும், எலக்ட்ரான்கள் எதிர் மின்னோட்டமும் பெற்றுள்ளன. நியூட்ரான்களுக்கு மின் சுமை இல்லை. இந்த மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டம் ஆகும். தற்காலத்தில் மின்சாரம் என்பது முக்கியமான ஆற்றல் மூலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.)

3) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அணுவிற்குள் அணுக்கரு உள்ளது. அணுக்கருவின் உள் நேர் மின்னோட்டம் கொண்ட புரோட்டான்களும், மின்னூட்டம் அற்ற நியூட்ரான்களும் உள்ளது.

II. அணுக்கருவை சுற்றி எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அணுவிற்குள் அணுக்கரு உள்ளது. அணுக்கருவின் உள் நேர் மின்னோட்டம் கொண்ட புரோட்டான்களும், மின்னூட்டம் அற்ற நியூட்ரான்களும் உள்ளது. அணுக்கருவை சுற்றி எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. அவ்வளவு புரோட்டான்கள் உள்ளனவோ அவ்வளவு எலக்ட்ரான்களும் ஒரு அணுவினுள் அமைந்துள்ளது. பொதுவாக அனைத்து அணுக்களும் நடுநிலைத் தன்மை உடையவை ஆகும்.)

4) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு அணுவில் இருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அந்த அணு நேர் மின்னோட்டத்தை பெறும். அது எதிர் அயனி என அழைக்கப்படும்.

II. ஒரு அணுவில், ஒரு எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அந்த அணு எதிர் மின்னோட்டத்தை பெறும். அது நேர் அயனி என அழைக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு அணுவில் இருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அந்த அணு நேர் மின்னோட்டத்தை பெறும். அது நேர் அயனி என அழைக்கப்படும். ஒரு அணுவில், ஒரு எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அந்த அணு எதிர் மின்னோட்டத்தை பெறும். அது எதிர் அயனி என அழைக்கப்படும். உதாரணமாக, சீப்பைக் கொண்டு நம் தலை முடியை திடமாக சீவும்போது, நமது தலை முடியிலிருந்து எலக்ட்ரான்கள் வெளியேறி சீப்பின் நுனிகளை அடைகின்றன. எலக்ட்ரான்களை இழந்ததால் முடி நேர் மின்னூட்டத்தையும், எலக்ட்ரான்களை பெற்றதால் சீப்பு எதிர்மின்னூட்டத்தையும் அடைகின்றன.)

5) மின்னூட்டம் கீழ்க்காணும் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?

A) கூலூம்

B) வாட்

C) கிலோவாட்

D) ஜுல்

(குறிப்பு – மின்னூட்டம் (Electric charge), கூலூம் (Coulomb) என்ற அலகினால் அளவிடப்படுகிறது. மேலும் அது ‘q’ என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கூலூம் என்பதன் குறியீடு ‘C’ என்பதாகும்.)

6) எலக்ட்ரானின் மின்னூட்டம் எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது?

A) e

B) p

C) n

D) – e

(குறிப்பு – எலக்ட்ரானின் மின்னூட்டம் ‘e’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. எலக்ட்ரான் என்னும் சொல்லானது 1894 ஆம் ஆண்டுமுதல் வழக்கத்தில் உள்ளது. இச்சொல், 1544-1603 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த, இங்கிலாந்தின் அரசியாரின் மருத்தவரான, வில்லியம் கில்பெர்ட் (William Gilbert) என்பார் ஆண்ட electric force என்னும் சொல்லிலிருந்து பெறப்பெற்றது)

7) எலெக்ட்ரான் என்பதன் மதிப்பு?

A) 1.6 × 10-19 C

B) 1.5 × 10-19 C

C) 1.4 × 10-19 C

D) 1.3 × 10-19 C

(குறிப்பு – எலெக்ட்ரான் என்பதன் மதிப்பு e = 1.6 × 10-19 C என்பதாகும். எனவே எந்த ஒரு மின்னூட்டமும் (q) அடிப்படை மின்னூட்டமான எலக்ட்ரானின் மின்னூட்டத்தின் (e) முழு எண் மடங்காக இருக்கும். அதாவது q = ne)

8) 1 C பின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?

A) 6.25 × 1018 எலக்ட்ரான்கள்

B) 6.25 × 1019 எலக்ட்ரான்கள்

C) 6.25 × 1020 எலக்ட்ரான்கள்

D) 6.25 × 1021 எலக்ட்ரான்கள்

(குறிப்பு – ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம் e = 1.6 × 10-19 C

q = ne அல்லது n, = qe

= 1 / 1.6 × 10-19

= 6.25 × 1018 எலக்ட்ரான்கள்)

9) செயல்முறையில் பயன்படுத்தப்படும் மின்னூட்ட அலகுகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. மைக்ரோகூலூம்

II. நேனோகூலூம்

III. பிகோகூலூம்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – செயல்முறையில் மைக்ரோகூலூம், நேனோகூலூம் மற்றும் பிகோகூலூம் ஆகிய மின்னோட்ட அலகுகளை நாம் பயன்படுத்துகிறோம். மைக்ரோகூலூம் – 10-6 C, நேனோகூலூம் – 10-9 C, பிகோகூலூம் – 10-12 C ஆகும்.)

10) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இயல்பாகவே மின்னூட்டங்கள் கூட்டல் பண்பிற்கு உட்பட்டவை ஆகும்.

II. ஒரு அமைப்பின் மொத்த மின்னூட்டமானது அதில் உள்ள அனைத்து மின்னூட்டங்களின் குறியியல் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இயல்பாகவே மின்னூட்டங்கள் கூட்டல் பண்பிற்கு உட்பட்டவை ஆகும். ஒரு அமைப்பின் மொத்த மின்னூட்டமானது அதில் உள்ள அனைத்து மின்னூட்டங்களின் குறியியல் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு அமைப்பில் +5 C மற்றும் -2 C ஆகிய இரு மின்னூட்டங்கள் இருப்பதாக இருந்தால், அந்த அமைப்பின் மொத்த மின்னூட்டம் +3 C ஆகும்.)

11) இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலைமின்னியல், நியூட்டனின் எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?

A) முதலாம் விதி

B) இரண்டாம் விதி

C) மூன்றாம் விதி

D) நான்காம் விதி

(குறிப்பு – இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலைமின்னியல், நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் இயங்குகிறது. ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும், இன்னொரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை எதிர்வினை ஆகவும் செயல்படுகின்றன.)

12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை இரு வகைப்படும்.

II. ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விரட்டும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை (F) இரு வகைப்படும். அவை கவர்ச்சி விசை மற்றும் விலக்கு விசை. ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விரட்டும். வேறின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவரும். மின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை மின்விசை என அழைக்கப்படும்.)

13) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு மின்னூட்டத்தை சுற்றி அதன் மின் விசையை வேறொரு சோதனை மின்னூட்டம் உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும்.

II. மின்புலம் பெரும்பாலும் கோடுகளாலும், மின்புலத்தின் திசை அம்பு குறிகளாளும் குறிக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு மின்னூட்டத்தை சுற்றி அதன் மின் விசையை வேறொரு சோதனை மின்னூட்டம் உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும். மின்புலம் பெரும்பாலும் கோடுகளாலும், மின்புலத்தின் திசை அம்பு குறிகளாளும் குறிக்கப்படும். ஒரு சிறு நேர் மின்னூட்டத்தின் மீது செயல்படும் விசையின் திசையே, மின்புலத்தின் திசை எனக் கொள்ளப்படும்.)

14) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்புலத்தை குறிக்கும் கோடுகள் மின்விசை கோடுகள் என அழைக்கப்படுகின்றது.

II. மின்விசை கோடுகள் ஓர் ஓரலகு நேர் மின்னோட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவு கோடுகள் ஆகும்.

III. மின் விசைக்கோடுகள் என்பது கற்பனைக் கோடுகள் ஆகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மின்புலத்தை குறிக்கும் கோடுகள் மின்விசை கோடுகள் என அழைக்கப்படுகின்றது. மின்விசை கோடுகள் ஓர் ஓரலகு நேர் மின்னோட்டம் மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவு கோடுகள் ஆகும். மின் விசைக்கோடுகள் என்பது கற்பனைக் கோடுகள் ஆகும். அக்கோடுகளின் நெருக்கம் மின்புலத்தின் வலிமையை குறிக்கும்.)

15) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு தனித்த நேர் மின்னூட்டத்தின் மின்விசை கோடுகள் ஆரவழியில் வெளிநோக்கி இருக்கும்.

II. ஒரு தனித்த எதிர் மின்னூட்டத்தின் மின்விசை கோடுகள் ஆரவழியில் உள்நோக்கி இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு தனித்த நேர் மின்னூட்டத்தின் மின்விசை கோடுகள் ஆரவழியில் வெளிநோக்கி இருக்கும். ஒரு தனித்த எதிர் மின்னூட்டத்தின் மின்விசை கோடுகள் ஆரவழியில் உள்நோக்கி இருக்கும். ஒரு புள்ளியில் வைக்கப்படும் ஓரலகு நேர் மின்னூட்டத்தினால் உணரப்படும் விசையே அப்புள்ளியில் மின்புலம் எனப்படும்.)

16) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை மின்னழுத்தம் எனப்படும்.

II. ஒரு மின்னோட்டத்தை சுற்றி ஒரு மின்புலம் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை மின்னழுத்தம் எனப்படும். ஒரு மின்னோட்டத்தை சுற்றி ஒரு மின்புலம் இருக்கும். இப்புலத்தினுள் இருக்கும் பிறிதொரு மின்னூட்டம் விசையை உணரும். மறுதலையாக முதல் மின்னூட்டமும் விசையை உணரும்.)

17) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. எலக்ட்ரான்கள் அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைவான மின்னழுத்தத்தை நோக்கி பாய்கின்றன.

II. ஒரு மின்னழுத்த வேறுபாடானது, ஒரு மின்கலத்தினாலோ அல்லது மின்கல அடுக்கினாலோ வழங்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றுக்கு கடத்தும் பாதை அளிக்கப்பட்டால், எலக்ட்ரான்கள் அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைவான மின் அழுத்தத்திற்கு அப்பாதை வழியே பாய்கின்றன. பொதுவாக மின்னழுத்த வேறுபாடானது, ஒரு மின்கலத்தினாலோ அல்லது மின்கல அடுக்கினாலோ வழங்கப்படுகிறது.)

18) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நேர் மின்னூட்டங்களின் இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படும்.

II. எலக்ட்ரான்களின் இயக்கம் எலக்ட்ரான் மின்னோட்டம் என்று அழைக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – எலக்ட்ரானின் கண்டுபிடிப்புக்கு முன் நேர் மின்னூட்டங்களின் இயக்கத்தில் தான் மின்னோட்டம் அடங்கியுள்ளது என்று அறிவியலாளர் நம்பினர். மேலும் எலக்ட்ரானின் கண்டுபிடிப்புக்கு பின்னரும், மின்னோட்டத்தை பற்றிய அடிப்படை புரிதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நேர் மின்னூட்டங்களின் இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படும். எலக்ட்ரான்களின் இயக்கம் எலக்ட்ரான் மின்னோட்டம் என்று அழைக்கப்படும்.)

19) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்சுற்று படங்களில் நேர்மின்வாயை நீளமான கோட்டுத்துண்டினால் குறிப்பர்.

II. மின்சுற்று படங்களில் எதிர்மின்வாயை சிறிய கோட்டுத்துண்டினால் குறிப்பர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்சுற்று படங்களில் நேர்மின்வாயை நீளமான கோட்டுத்துண்டினால் குறிப்பர். மின்சுற்று படங்களில் எதிர்மின்வாயை சிறிய கோட்டுத்துண்டினால் குறிப்பர். மின்கல அடுக்கு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மின்கலங்களின் தொகுதியாகும்.)

20) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும்.

II. மின் சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும். மின் சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும். அதாவது கம்பியின் ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டு பரப்பை q அளவு மின்னோட்டம் t காலத்தில் கடந்து இருந்தால், மின்னோட்டத்தின் அளவு I = q / t ஆகும்.)

21) மின்னோட்டத்தின் SI அலகு?

A) கூலூம்

B) ஜுல்

C) ஆம்பியர்

D) வாட்

(குறிப்பு – மின்னூட்டத்தின் SI அலகு ஆம்பியர் (Ampere) ஆகும். அதன் குறியீடு ‘A’ என்பதாகும். ஆம்பியர் என்பது கம்பி ஒன்றில் குறுக்குவெட்டு பரப்பை ஒரு வினாடியில், ஒரு கூலூம் அளவிலான மின்னூட்டம் கடக்கும் போது உருவாகும் மின்னோட்டம் ஆகும்.)

22) கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

I. 1 ஆம்பியர் = 1 கூலூம் / 1 வினாடி

II. 1 A = 1 C / 1 s

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் தவறானது

D) இரண்டும் சரியானது

(குறிப்பு – ஆம்பியர் என்பது கம்பி ஒன்றில் குறுக்குவெட்டு பரப்பை ஒரு வினாடியில், ஒரு கூலூம் அளவிலான மின்னூட்டம் கடக்கும் போது உருவாகும் மின்னோட்டம் ஆகும்.

அதாவது,

1 ஆம்பியர் = 1 கூலூம் / 1 வினாடி

(அல்லது) 1 A = 1 C / 1 s (அல்லது) 1 A = 1 C s-1 ஆகும்.)

23) மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவியின் பெயர் என்ன?

A) அம்மீட்டர்

B) வோல்ட்மீட்டர்

C) வாட்மீட்டர்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி அம்மீட்டர் (Ammeter) அல்லது மின்னோட்டமானி என அழைக்கப்படும். அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். )

24) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. எந்த மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட வேண்டுமோ அதில் அம்மீட்டரை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்.

II. அம்மீட்டரின் சிவப்பு முனையின் (+) வழியே மின்னோட்டம் நுழைந்து, கருப்பு முனையின் (-) வழியே வெளியேறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் தவறானது

D) இரண்டும் சரியானது

(குறிப்பு – எந்த மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட வேண்டுமோ அதில் அம்மீட்டரை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும். அம்மீட்டரின் சிவப்பு முனையின் (+) வழியே மின்னோட்டம் நுழைந்து, கருப்பு முனையின் (-) வழியே வெளியேறும். அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும்)

25) கம்பி ஒன்றின் குறுக்குவெட்டு பரப்பை 25 கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி காலத்தில் கடந்து சென்றால், அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன என்பதை கணக்கிடு.

A) 0.5 A

B) 1 A

C) 1.5 A

D) 2 A

(குறிப்பு – தீர்வு

I = q / t

I = 25 C / 50 s

I = 0.5 Cs-1

I = 0.5 A )

26) விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.2 A. விளக்கு ஒரு மணி நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?

A) 700 C

B) 720 C

C) 740 C

D) 760 C

(குறிப்பு – தீர்வு

I = q / t எனில், q = It

1 மணி = 1 × 60 × 60 = 3600 s

q = It = 0.2 A × 3600 s

q = 720 C )

27) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு வட்டவடிவ தாமிரக் கம்பி எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளது.

II. ஒரு தாமிரகம்பியினுள் நிரம்பி இருக்கும் எலக்ட்ரான்கள் எந்த ஒரு குறிப்பிட்ட திசையிலும் இயங்குவதில்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு வட்டவடிவ தாமிரக் கம்பி எலக்ட்ரான்களால் நிரம்பி உள்ளது. எனினும் ஒரு தாமிரகம்பியினுள் நிரம்பி இருக்கும் எலக்ட்ரான்கள் எந்த ஒரு குறிப்பிட்ட திசையிலும் இயங்குவதில்லை. அவற்றை ஒரு குறிப்பிட்ட திசையில் இயக்க, விசை ஒன்று தேவைப்படுகிறது.)

28) மின் இயக்கு விசையின் குறியீடு?

A) Ζ

B) Γ

C) ε

D) δ

(குறிப்பு – மின்கலங்களும் மற்ற மின்னாற்றல் மூலங்களும், மின்னூட்டங்களை தள்ளுவதால், எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி இயங்குகிறது. இது மின் இயக்கு விசை என்று அழைக்கப்படுகிறது. மின் இயக்குவிசையின் குறியீடு ε (Epsilon) ஆகும்.)

29) மின்னியக்கு விசையின் சமன்பாடு என்ன?

A) ε = Wq

B) ε = W / q

C) ε = W + q

D) ε = W – q

(குறிப்பு – ஒரு மின்னாற்றல் மூலத்தின் மின்னியக்கு விசை என்பது, ஓரலகு மின்னூட்டமானது (q) மின்சுற்றை ஒருமுறை சுற்றிவர செய்யப்படும் வேலை (W) ஆகும். அதாவது ε = W / q ஆகும்.)

30) மின்னியக்கு விசையின் SI அலகு?

A) ஜுல்

B) கூலூம்

C) ஜுல் / கூலூம்

D) ஜுல் / வினாடி

(குறிப்பு – ε = W / q என்பது மின்னியக்கு விசையின் சமன்பாடு ஆகும். இதில் W என்பது செய்யப்பட்ட வேலை ஆகும். q என்பது மின்னூட்டம் ஆகும். மின்னியக்கு விசையின் SI அலகு ஜுல் / கூலூம் (JC-1) அல்லது வோல்ட் (v) ஆகும்.)

31) ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5 V எனில், 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றை சுற்றி அனுப்ப தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?

A) 0.25 J

B) 0.5 J

C) 0.75 J

D) 1 J

(குறிப்பு – தீர்வு

ε = 1.5 V ; q = 0.5 C

ε = W / q

W = εq

W = 1.5 × 0.5

W = 0.75 J )

32) ஒரு மின் ஆற்றல் கீழ்காணும் எந்த ஆற்றலாக மாற்றப்படுகிறது?

A) வெப்ப ஆற்றல்

B) எந்திர ஆற்றல்

C) ஒளி ஆற்றல்

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொதுவாக ஒரு மின் விளக்கையோ, ஒரு மின்விசிறியையோ அல்லது ஏதேனும் ஒரு மின்கருவியையோ இணைத்தப்பின், அதன் வழியே மின்னோட்டத்தை செலுத்துகிறோம். இதனால் மின்கலம் அல்லது மின் ஆற்றல் மூலத்தில் உள்ள குறிப்பிட்ட அளவு மின் ஆற்றல் ஒளி ஆற்றலாகவோ, எந்திர ஆற்றலாகவோ, வெப்ப ஆற்றலாகவோ மாற்றப்படுகிறது.)

33) மின்னழுத்த வேறுபாட்டின் குறியீடு?

A) A

B) Z

C) V

D) H

(குறிப்பு – மின் விளக்கு அல்லது இதர பிற மின் கருவிகள் வழியாக செல்லும் ஒவ்வொரு கூலூம் மின்னோட்டத்தினாலும் பிறவகைகளாக மாற்றப்படும் மின்னாற்றலின் அளவு அந்த மின் கருவிக்கு குறுகிய உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டை சார்ந்தே இருக்கிறது. மின்னழுத்த வேறுபாட்டின் குறியீடு V ஆகும். V = W / q ஆகும்.)

34) மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு?

A) ஜுல்

B) கூலூம்

C) வோல்ட்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – மின்னழுத்த வேறுபாடு V = W / q. இங்கு, W என்பது செய்யப்பட்ட வேலை, அதாவது பிற வகை ஆற்றல்கள் ஆக மாற்றப்பட்ட மின் ஆற்றலின் அளவு (ஜூலில்) ஆகும். q என்பது மின்னூட்டத்தின் அளவு (கூலூமில்). மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னியக்கு விசை இவை இரண்டிற்கும் SI அலகு வோல்ட் (V) ஆகும்.)

35) ஒரு மின் சூடேற்றியின் வழியாக 2 × 104 C மின்னூட்டம் பாய்கிறது. 5 MJ அளவு மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது எனில், சூடேற்றியின் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாடு?

A) 200 V

B) 250 V

C) 300 V

D) 350 V

(குறிப்பு – தீர்வு

V = W / q

V = 5 × 106 J / 2 × 104 C

V = 250 V )

36) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி வோல்ட் மீட்டர் ஆகும்.

II. ஒரு கருவியின் குறுகிய காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டை அளக்க வோல்ட் மீட்டர் ஒன்றை அதற்கு பக்க இணைப்பாக இணைக்க வேண்டும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி வோல்ட் மீட்டர் ஆகும். ஒரு கருவியின் குறுகிய காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டை அளக்க வோல்ட் மீட்டர் ஒன்றை அதற்கு பக்க இணைப்பாக இணைக்க வேண்டும். மின்விளக்கு ஒன்றின் மின்னழுத்த வேறுபாட்டை அடைந்திட வேண்டும் எனில், மின்விளக்கு ஒருபக்க இணைப்பாக வோல்ட் மீட்டரை இணைக்க வேண்டும்.)

37) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வோல்ட் மீட்டரின் சிவப்பு நேர்முனை மின்சுற்றின் நேர்க்குறி (+) கருடனும் அதன் கருப்பு எதிர்முனை மின்சுற்றின் எதிர்க்குறி (-) பக்கத்துடனும் மின் சாதனத்திற்கு குறுக்கே இணைக்கப்பட வேண்டும்.

II. ஒரு கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்ப்பின் அளவே மின்தடை (R) எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்ப்பின் அளவே மின்தடை (R) எனப்படும். வெவ்வேறு மின்பொருள்களின் மின்தடை வெவ்வேறாக இருக்கும்.)

38) கீழ்காணும் எந்த உலோகத்தின் மின்தடை புறக்கணிக்தக்க அளவில் இருக்கும்?

I. தாமிரம்

II. அலுமினியம்

III. இரும்பு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களின் மின்தடை புறக்கணிக்கத்தக்க அளவில் இருக்கும். எனவேதான் அவை நற்கடத்திகள் என அழைக்கப்படுகின்றன. மாறாக நிக்ரோம், வெள்ளீய ஆக்சைடு உள்ளிட்ட பொருள்கள் மின்னோட்டத்திற்கு அதிக மின்தடையை அளிக்கின்றன. அவை மின் கடத்தாப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.)

39) கீழ்காணும் எந்த பொருள் சிறிய மின்னோட்டத்தை கூட கடத்தாதவை ஆகும்?

A) கண்ணாடி

B) ரப்பர்

C) பல்படிமம்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கண்ணாடி, பல் படிமம் என்ற பாலிமர், ரப்பர் மற்றும் காகிதம் உள்ளிட்ட பொருள்கள் சிறிதும் மின்னோட்டத்தைக் கடத்தாதவை ஆகும். இவை மின்காப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.)

40) மின்தடையின் SI அலகு?

A) ஜுல்

B) ஓம்

C) கூலூம்

D) வாட்

(குறிப்பு – மின்தடையின் SI அலகு ஓம் (Ohm) ஆகும். இதன் குறியீடு Ω ஆகும். ஒரு கடத்தியின் வழியாக ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாயும் போது அதன் முனைகளுக்கு இடையிலான மின்னழுத்த வேறுபாடு 1 வோல்ட் எனில், அந்த கடத்தியின் மின்தடை 1 ஓம் ஆகும்.)

41) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்தடையை பயன்படுத்தி ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவை கட்டுப்படுத்த முடியும்.

II. மின்தடையை அளிக்கும் பொருள்களுக்கு மின்தடையங்கள் என்று பெயராகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்தடையை பயன்படுத்தி ஒரு மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவை கட்டுப்படுத்த முடியும். மின்தடையை அளிக்கும் பொருள்களுக்கு மின்தடையங்கள் என்று பெயராகும். மின் தடையங்கள் நிலையாகவும் இருக்கலாம் அல்லது மாறும் மதிப்புடையனவாகவும் இருக்கலாம்.)

42) ஒரு மின் சுற்று படத்தின் முக்கிய கூறுகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது?

I. மின்கலம்

II. இணைப்பு கருவி

III. சாவி

IV. மின்தடை

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஒரு மின் சுற்று படத்தின் நான்கு முக்கிய கூறுகளாவன, மின்கலம், சாவி, இணைப்புகம்பி மற்றும் மின்தடை அல்லது மின்பளு என்பன ஆகும். இதைத் தவிர பிறர் மின் கருவிகளும் ஒரு மின்சுற்றில் பயன்படுத்தப்படலாம். அவற்றை குறிப்பதற்கு சீரான குறியீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.)

43) என்னும் குறியீடு எதை குறிக்கும்?

A) மின்கலம்

B) மின்கல அடுக்கு

C) நேர் மின்னோட்ட மூலம்

D) சாவி

(குறிப்பு – மேற்கண்ட குறியீடு மின்கலத்தை குறிக்கும். இது ஒரு மின்சுற்று படத்தின் நான்கு முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.)

44) என்னும் குறியீடு கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிப்பிடுகிறது?

A) மின்னழுத்தமானி

B) மின்விளக்கு

C) சாவி

D) மின் உருகு இழை

(குறிப்பு – மேற்கண்ட குறியீடு, ஒரு மின் சுற்று படத்தில் உள்ள மின்விளக்கை குறிக்கிறது. ஒரு மின் சுற்று படத்தில் மின்னழுத்தமானி, மின் உருகு இழை, கம்பி சுருள், வெப்ப தடையம் போன்ற பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.)

45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தொடர் இணைப்பில் உள்ள மின்சுற்றில் அனைத்து புள்ளிகளிலும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.

II. தொடர் இணைப்பில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதை இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – தொடர் இணைப்பில் ஒவ்வொரு கருவியும் ஒன்றை ஒன்று அடுத்து ஒன்றாக ஒரே தடத்தில் இணைக்கப்படுகின்றன. தொடரிணைப்பில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கும். அதாவது தொடர் இணைப்பில் உள்ள மின்சுற்றில் அனைத்துப் புள்ளிகளிலும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.)

46) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பக்க இணைப்பு சுற்றுகளில் ஒரே மின்னியக்கு விசை மூலத்துடன் வெவ்வேறு கருவிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடங்களில் இணைக்கப்படுகின்றன.

II. பக்க இணைப்பு சுற்றில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பக்க இணைப்பு சுற்றுகளில் ஒரே மின்னியக்கு விசை மூலத்துடன் வெவ்வேறு கருவிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடங்களில் இணைக்கப்படுகின்றன. பக்க இணைப்பு சுற்றில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்கும். பக்க இணைப்புகளில் ஒவ்வொரு தனித்தனி மின்னோட்டத்தின் கூட்டு தொகையானது இணைப்பை நோக்கி வரும் அல்லது இணைப்பை விட்டு வெளியேறும்.)

47) ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாயும்போது கீழ்க்காணும் எந்த விளைவு ஏற்படும்?

I. வெப்ப விளைவு

II. வேதி விளைவு

III. காந்த விளைவு

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஒருமின் சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, பலவித விளைவுகளை அது ஏற்படுத்துகிறது. அவற்றுள் முதன்மையானவை வெப்ப விளைவு, வேதி விளைவு மற்றும் காந்த விளைவு ஆகும். மின்னோட்டத்தின் பாய்வு எதிர்க்கப்டும்போது வெப்பம் உருவாகிறது.)

48) மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

I. ஜுல் வெப்பமேறல்

II. ஜுல் வெப்பமாற்றம்

IlI. ஜுல் வெப்பவிளைவு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மின்னோட்டத்தின் பாய்வு எதிர்க்கப்படும்போது, வெப்பம் உருவாகிறது. ஒரு கம்பியிலோ அல்லது மின்தடையத்திலோ எலக்ட்ரான்கள் இயங்கும் போது அவை தடையை எதிர்கொள்கின்றன. இதை கடக்க வேலை செய்யப்பட வேண்டும். இதுவே வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு ஜுல் வெப்பமேறல் அல்லது ஜுல் வெப்ப விளைவு என்று அழைக்கப்படுகிறது)

49) கீழ்க்காணும் எந்த பொருள் ஜுல் வெப்பவிளைவு அடிப்படையில் இயங்குகிறது?

I. மின் சலவைப் பெட்டி

II. நீர் சூடேற்றி

III. வறுதட்டு

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு ஜுல் வெப்பமேறல் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இவ்விளைவை ஜுல் என்ற அறிவியல் அறிஞர் விரிவாக ஆய்வு செய்தார். மின் சலவை பெட்டி, நீர் சூடேற்றி, ரொட்டி வறுத்தட்டு உள்ளிட்ட மின் வெப்ப சாதனங்களின் அடிப்படையாக இந்த விளைவே விளங்குகிறது. மின் இணைப்பு கம்பிகளில் கூட சிறிதளவு மின்தடை காணப்படுவதால்தான் எந்த ஒரு மின் சாதனமும், இணைப்பு கம்பியும் பயன்படுத்தியபின் சூடாக காணப்படுகின்றன.)

50) வெப்ப விளைவு மற்றும் வேதி விளைவு ஆய்வுகளை எந்த மின்னியக்கு விசை கொண்ட மின்கலங்களை கொண்டு செய்ய வேண்டும்?

A) 5 V

B) 9 V

C) 12 V

D) 25 V

(குறிப்பு – வெப்ப விளைவு மற்றும் வேதி விளைவு ஆய்வுகளை 9 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலங்களை கொண்டுதான் செய்ய வேண்டும். ஏனெனில் 9 V மின்கலம் மின் அதிர்ச்சியை தராது. மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளில் கொடுக்கப்படும் 220 V மாறுமின்னோட்டத்தை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் பெரும் மின் அதிர்ச்சி ஏற்பட்டு உடல் பெருமளவில் பாதிக்கக்கூடும்.)

51) தாமிரக் கம்பி மற்றும் கார்பன் தண்டு ஆகியவற்றைக் கொண்டு மின்னாற்பூச்சு (மின் முலாம் பூசுதல்) மேற்கொண்டால் பயன்படுத்தப்படும் கரைசல் என்ன?

A) தாமிர சல்பேட் கரைசல்

B) தாமிர சல்பைட் கரைசல்

C) கந்தகம் கரைசல்

D) நைட்ரிக் ஆசிட்

(குறிப்பு – கார்பன் தண்டை மின்கலத்தின் எதிர்மின்வாயுடனும், தாமிர கம்பியை நேர் மின்வாயுடனும் இணைத்து தாமிர சல்ஃபேட் கரைசலில் வைத்து, மின்னோட்டம் ஏற்படுத்தினால், சிறிது நேரத்திற்குப் பின்னர் கார்பன் தண்டின் மீது தாமிர படிவத்தை காணமுடியும். இது மின்னாற்பூச்சு அல்லது மின்முலாம் பூசுதல் எனப்படும். இதை மின்னோட்டத்தின் வேதி விளைவினால் ஏற்படும் நிகழ்வாகும்.)

52) கரைசலில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மின்னாற்பகுப்பு

B) மின்னோட்ட பகுப்பு

C) மின்கல பகுப்பு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – தாமிர சல்பேட் கரைசலில் மின்னோட்டம் பாயும்போது எலக்ட்ரான் மற்றும் தாமிர நேர் அயனி இரண்டுமே மின்னோட்டத்தை கடத்துகின்றன. கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு மின்னாற்பகுப்பு எனப்படும். மின்னோட்டம் பாயும் கரைசல் மின்பகு திரவம் எனப்படும். கரைசலில் அமர்த்தப்படும் நேர்மின்வாய் ஆனோடு (Anode) எனவும், எதிர்மின்வாய் கேதோடு (Cathode) எனவும் அழைக்கப்படுகிறது.)

53) மூளையில் இருந்து பிற உறுப்புகளுக்கு மின்னோட்டம் எந்த மண்டலம் மூலமாக பயணிக்கின்றன?

A) நரம்பு மண்டலம்

B) எலும்பு மண்டலம்

C) தசை மண்டலம்

D) ரத்த மண்டலம்

(குறிப்பு – மனித உடலில் மின்னூட்டம் துகள்களின் இயக்கத்தால் மிகவும் வலிமை குன்றிய மின்னோட்டம் உருவாகிறது. இதை நரம்பு இணைப்பு சைகை என்பர். இத்தகைய செய்கைகள் மின்வேதி செயல்களால் உருவாகின்றன. மூளையிலிருந்து புகழுக்கு நரம்பியல் மண்டலம் மூலமாக இவை பயணிக்கின்றன.)

54) மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் யார்?

A) அலெக்ஸ் ரிச்சர்ட்

B) ரூதர்போர்டு

C) அயர்ஸ்டெட்

D) கேம்பெல்

(குறிப்பு – மின்னோட்டம் தாங்கிய கடத்தி, அதற்கு குத்தான திசையில் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இதையே மின்னோட்டத்தின் காந்த விளைவு என்பர். அயர்ஸ்டெட் (Oersted) இன்று அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு மற்றும் வலது கை கட்டை விரல் விதி ஆகியவை இதனை வழிமொழிகிறது.)

55) வலது கை கட்டை விரல் விதியின்படி கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்னோட்டத்தின் திசை வலதுகை கட்டை விரலின் திசையில் இருக்கவேண்டும்.

II. காந்தப் புலத்தின் திசை வலது கையின் மற்ற விரல்களின் திசையிலும் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வலது கை கட்டை விரல் விதி அயர்ஸ்டெட் (Oerstet) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விதியின் படி, மின்னோட்டத்தின் திசை வலதுகை கட்டை விரலின் திசையிலும், காந்தப் புலத்தின் திசை வலது கையின் மற்ற விரல்களின் திசையிலும் இருக்கும்.)

56) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மின்னூட்டங்கள் மூன்று வகைப்படும்.

II. மின்னோட்டமானது, நேர்திசை மின்னோட்டம் (Direct Current) மற்றும் மாறுதிசை மின்னோட்டம் (Alternative Current) என வகைப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அன்றாட வாழ்வில் இருவித மின்னோட்டங்களை நாம் பயன்படுத்துகிறோம்.அவை நேர்திசை மின்னோட்டம் (Direct Current) மற்றும் மாறுதிசை மின்னோட்டம் (Alternative Current) ஆகும்.)

57) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின் சுற்றுகளில் மின்னோட்டமானது அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கு, நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையில் இருக்கும்.

II. உண்மையில், எலக்ட்ரான்கள் மின்கலத்தின் எதிர் மின்வாயிலிருந்து, நேர் மின்வாய்க்கு நகர்கின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின் சுற்றுகளில் மின்னோட்டமானது அதிக மின் அழுத்தத்தில் இருந்து குறைந்த மின் அழுத்தத்திற்கு, நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையில் இருக்கும். உண்மையில், எலக்ட்ரான்கள் மின்கலத்தின் எதிர் மின்வாயிலிருந்து, நேர் மின்வாய்க்கு நகர்கின்றன. இரு முனைகளுக்கு இடையே மின்னழுத்த வேறுபாட்டை நிலைநிறுத்த மின்கல அடுக்கு பயன்படுகிறது.)

58) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நேர்திசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும்.

II. ஒரே திசையில் மின்னூட்டங்கள் இயங்குவதால் ஏற்படுவதே நேர்திசை மின்னோட்டம் ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நேர்திசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும். ஒரே திசையில் மின்னூட்டங்கள் இயங்குவதால் ஏற்படுவதே நேர்திசை மின்னோட்டம் ஆகும். நேர்திசை மின்னோட்டத்தின் பிற மூலங்கள் சூரிய மின்கலங்கள், வெப்ப மின்னிரட்டைகள் ஆகியனவாகும்.)

59) கீழ்க்காணும் கருவிகளுள் எது நேர்மின்விசையோட்டத்தை பயன்படுத்துகின்றன?

A) கைபேசி

B) மின் விசைப்பலகை

C) வானொலிப்பெட்டி

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பல மின்னணு சுற்றுகள் நேர்திசை மின்னோட்டத்தை பயன்படுத்துகின்றன. நேர்திசை மின்னோட்டத்தை பயன்படுத்தி வேலை செய்யும் கருவிகளுள் சில கைபேசி, வானொலிப்பெட்டி, மின் விசைப்பலகை, மின்சார வாகனங்கள் உள்ளிட்டவை ஆகும்.)

60) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின் தடையத்திலோ அல்லது மின் பொருளிலோ மின்னோட்டத்தின் திசை மாறி மாறி இயங்கினால் அது மாறுதிசை மின்னோட்டம் எனப்படும்.

II. மாறுதிசை மின்னோட்டம் காலத்தை பொறுத்து அது சைன் வடிவ முறையில் மாறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின் தடையத்திலோ அல்லது மின் பொருளிலோ மின்னோட்டத்தின் திசை மாறி மாறி இயங்கினால் அது மாறுதிசை மின்னோட்டம் எனப்படும். மாறுதிசை மின்னோட்டம் காலத்தை பொறுத்து அது சைன் வடிவ முறையில் மாறும். இயல்புடையது இந்த மாறுபாட்டை அதிர்வெண் என்ற பண்பை கொண்டு விவரிக்க முடியும்.)

61) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் மாறுதிசை மின்னோட்டம் ஆகும்.

II. நேர்திசை மின்னோட்டத்தை, மாறு திசை மின்னோட்டமாக மாற்றும் கருவி திருத்தி எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் மாறுதிசை மின்னோட்டம் ஆகும். நேர்திசை மின்னோட்டத்தில் மட்டுமே இயங்கக் கூடிய சாதனங்களை மாறுதிசை மின்னோட்டத்தில் இயக்க வேண்டுமெனில், முதலில் மாறுதிசை மின்னோட்டத்தை, நேர்திசை மின்னோட்டமாக மாற்ற ஒரு கருவி தேவை. அதற்கு பயன்படும் கருவிக்கு திருத்தி அல்லது இணக்கி என்று பெயர்.)

62) நேர்திசை மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக மாற்ற பயன்படும் கருவியின் பெயர் என்ன?

A) திருத்தி

B) மாற்றி திருத்தி

C) நேர்மாற்றி

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – நேர்திசை மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக மாற்ற பயன்படும் கருவியின் பெயர் நேர்மாற்றி அல்லது புரட்டி எனப்படும்.)

63) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மாறுதிசை மின்னோட்டத்தின் மின்னழுத்த மதிப்பை மின்மாற்றி என்ற பொறியைக் கொண்டு எளிதில் மாற்ற இயலும்.

II. அதிக தொலைவுக்கு மாறுதிசை மின்னோட்டத்தை அனுப்பும்போது ஏற்று மின்மாற்றிகளைப் பயன்படுத்தி மின் அழுத்தத்தை உயர்த்திய பின் அனுப்ப வேண்டும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மாறுதிசை மின்னோட்டத்தின் மின்னழுத்த மதிப்பை மின்மாற்றி என்ற பொறியைக் கொண்டு எளிதில் மாற்ற இயலும். அதிக தொலைவுக்கு மாறுதிசை மின்னோட்டத்தை அனுப்பும்போது ஏற்று மின்மாற்றிகளைப் பயன்படுத்தி மின் அழுத்தத்தை உயர்த்திய பின் அனுப்ப வேண்டும். இதனால் ஆற்றல் இழப்பு வெகுவாக குறையும்.)

64) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மாறுதிசை மின்னோட்டத்தை எளிதில் நேர்திசை மின்னோட்டமாக மாற்ற முடியும்.

II. நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குதல் எளிது ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மாறுதிசை மின்னோட்டத்தை எளிதில் நேர்திசை மின்னோட்டமாக மாற்ற முடியும். நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குதல் எளிது ஆகும். பல வகையில் பயன்படும் மின்காந்தத் தூண்டலைக் மாறுதிசை மின்னோட்டத்தினால் உருவாக்க முடியும்.)

65) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்முலாம் பூசுதல், மின் தூய்மையாக்குதல் ஆகியவற்றை நேர்திசை மின்னோட்டத்தை கொண்டு மட்டுமே செய்ய முடியும்.

II. நேர் மின்னூட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம் ஆகிய இரண்டின் மூலமாகவும் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்முலாம் பூசுதல், மின் தூய்மையாக்குதல், மின் அச்சு வார்த்தல் ஆகியவற்றை நேர்திசை மின்னோட்டத்தை கொண்டு மட்டுமே செய்ய முடியும். நேர்மின்னூட்ட வடிவில் மட்டுமே மின்சாரத்தை சேமிக்க முடியும்.)

66) இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறுமின்னோட்டத்தின் மின் அழுத்தம்?

A) 200 V

B) 220 V

C) 240 V

D) 440 V

(குறிப்பு – இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் முறையே 220 V 50 Hz ஆகும். மாறாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அவை முறையே 110 V மற்றும் 60 Hz ஆகும்.)

67) கீழ்க்காணும் எந்த செயல்களினால் மின்சார விபத்துகள் நிகழ்கிறது?

I. பாதுகாப்பு கையுறையின்றி, மின்கம்பிகளை தொடுதல்.

II. மின் பொறுத்துவாய்களில் மிகை பாரமேற்றல்.

III. பொருத்தமற்ற முறையில் மின் சாதனங்களை பயன்படுத்துதல்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மின்னூட்டம் செல்லும் வெற்றுக்கம்பியை தொடக்கூடாது. பாதுகாப்பு கையுறைகளை அணிந்து கொண்டோ, மின்காப்பு உடைய முக்காலியின் மீது நின்று கொண்டோ அல்லது ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டுதான் மின்சாரத்தை கையாளவேண்டும். ஒரே மின் பொருத்துவாயில், பல மின் சாதனங்களை பொருத்துவது விபத்தை ஏற்படுத்தும். மின்சாதனங்களை அவற்றின் வரையளவுக்கு தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.)

68) உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை ஏறக்குறைய ____________ ஓம் ஆகும்.

A) 1,00,00

B) 1,00,000

C) 10,00,000

D) 10,000

(குறிப்பு – உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை ஏறக்குறைய 1,00,000 ஓம் ஆகும். நம் உடலில் தண்ணீர் இருப்பதால், மின்தடையின் மதிப்பு சில நூறு ஓம் ஆகக் குறைந்துவிடுகிறது. எனவே, ஒரு மனித உடல் இயல்பிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தியாக உள்ளது. ஆகவே, மின்சாரத்தை கையாளும் போது நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.)

9th Science Lesson 5 Questions in Tamil

5] காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முற்காலங்களில் காந்தங்கள் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டன. கப்பல் மாலுமிகள் கப்பலின் திசையை அறிய காந்தங்களை பயன்படுத்தினர்.

II. காந்தங்கள் மொத்தம் மூன்று வகைப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்தங்கள் மனிதர்களை ஈர்க்கக்கூடிய பொருட்களாகவே உள்ளன. புகழ்வாய்ந்த அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்பவர் கூட தனது குழந்தை பருவத்தில் காந்தங்களால் ஈர்க்கப்பட்டதாக கூறியுள்ளார். முற்காலங்களில் காந்தங்கள் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டன. கப்பல் மாலுமிகள் கப்பலின் திசையை அறிய காந்தங்களை பயன்படுத்தினர்)

2) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்தங்கள், இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் என இருவகைப்படும்.

II. இயற்கை காந்தம் என்பவை உலகின் பல இடங்களில் உள்ள பாறை மற்றும் மணற்படிவுகளில் காணப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நம்மை சுற்றி இரு வகையான காந்தங்கள் உள்ளன. அவை இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் என்பன ஆகும். இயற்கையாகவே கிடைக்கக்கூடிய காந்தம் இயற்கை காந்தம் எனப்படும். இவை உலகின் பல இடங்களிலுள்ள பாறைகள் மற்றும் மணற்படிவுகளில் காணப்படுகின்றன.)

3) கீழ்க்காண்டவற்றுள் எது மிகவும் வலிமையான இயற்கை காந்தமாகும்?

A) லிக்னைட்

B) மேக்னடைட்

C) பாக்சைட்

D) குப்ரைட்

(குறிப்பு – மேக்னடைட் எனும் காந்தக்கல்லே மிகவும் வலிமையான இயற்கை காந்தம் ஆகும். இயற்கை காந்தங்களின் காந்தப் பண்புகள் நிலையானவை. அவை எப்போதும் அழிக்கப்படுவதில்லை. முற்காலத்தில் காந்த கற்கள் திசைகாட்டிகளாக பயன்படுத்தப்பட்டன. மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தம் செயற்கை காந்தம் எனப்படும்.)

4) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்தங்கள் அவற்றை சுற்றிலும் கண்ணுக்கு புலப்படாத புலத்தைக் கொண்டுள்ளன.

II. காந்தத்தை சுற்றி உள்ள காந்த தன்மையை உணர கூடிய இடம், காந்தப்புலம் என அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்தங்கள் அவற்றை சுற்றிலும் கண்ணுக்கு புலப்படாத புலத்தைக் கொண்டுள்ளன. அவை காந்த பொருள்களை ஈர்க்கின்றன. காந்தத்தை சுற்றி உள்ள காந்த தன்மையை உணர கூடிய இடம், காந்தப்புலம் என அழைக்கப்படுகிறது.)

5) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்த புலத்தில் ஒரு சிறிய திசைகாட்டி வைப்பதன் மூலம் ஒரு காந்தத்தை சுற்றியுள்ள காந்தப்புலத்தின் திசையை அறியலாம்.

II. காந்தப்புலம் காற்றில் மட்டுமல்லாமல்,அனைத்து வகையான பொருட்களையும் ஊடுருவி செல்லும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்த புலத்தில் ஒரு சிறிய திசைகாட்டி வைப்பதன் மூலம் ஒரு காந்தத்தை சுற்றியுள்ள காந்தப்புலத்தின் திசையை அறியலாம். காந்தப்புலம் காற்றில் மட்டுமல்லாமல்,அனைத்து வகையான பொருட்களையும் ஊடுருவி செல்லும். பூமி அதன் காந்தப்புலத்தை அதுவாகவே உருவாக்குகிறது. இது சூரியனின் சூரிய காற்றிலிருந்து பூமியின் ஓசோன் அடுக்கைப் பாதுகாக்கிறது.)

6) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்தப்புல கோடு காந்த புலத்தில் வரையப்பட்ட ஒரு வளைவான கோடு ஆகும்.

II. காந்தப்புல கோடுகள் வடதுருவத்தில் தொடங்கி, தென் துருவத்தில் முடிவடையும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்தப்புலகோடு காந்தப் புலத்தில் வரையப்பட்ட ஒரு வளைவான கோடு ஆகும். இதன் எந்த ஒரு பள்ளியிலும் வரையப்படும் தொடுகோடானது காந்தப்புலத்தின் திசையை காட்டுகிறது. காந்தப்புல கோடுகள் வடதுருவத்தில் தொடங்கி, தென் துருவத்தில் முடிவடையும்.)

7) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்தப்பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை ஆகும்.

II. காந்தப்பாயம் என்பது Φ என்னும் குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்தப்பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை ஆகும். காந்தப்பாயம் என்பது Φ என்னும் குறியீட்டால் குறிக்கப்படுகிறது. காந்தப்பாயம் என்பதன் SI அலகு வெபர் என்பதாகும்.)

8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்தவிசை கோடுகளுக்கு செங்குத்தாக அமைந்த, ஓரலகு பரப்பை கடந்து செல்லும் காந்தவிசை கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி எனப்படும்.

II. காந்தப்பாய அடர்த்தியின் SI அலகு Wb/m2 என்பதாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்தவிசை கோடுகளுக்கு செங்குத்தாக அமைந்த, ஓரலகு பரப்பை கடந்து செல்லும் காந்தவிசை கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி எனப்படும். காந்தப்பாய அடர்த்தியின் SI அலகு Wb/m2 என்பதாகும்.)

9) ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையை கண்டறிய பயன்படுத்தும் முறை?

A) புவிக்காந்த உருப்பதித்தல்

B) புவிகாந்த திசை மாற்றம்

C) புவிகாந்த திசை தேடல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – சில கடல் ஆமைகள் (லாஜர்ஹெட் கடல் ஆமை) வைகை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன. ஒரு ஆராய்ச்சியில்,ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையை கண்டறிய புவிகாந்த உருபதித்தல் என்னும் முறையை கையாளுகின்றனஎன்று கூறப்படுகிறது. புவியின் பல்வேறு இடங்களில் உள்ள காந்தப்புலவலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை ஆமைகள் ஆகும்.)

10) கீழ்க்கண்டவற்றுள் எது காந்த விசைக்கோடுகளின் பண்புகளுள் அல்லாதது?

A) காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் உட்புறம் ஊடுருவி செல்லும் தொடர் வளைவுக்கோடுகள் ஆகும்.

B) காந்தவிசை கூடுதல் காந்தத்தின் தென்துருவத்தில் தொடங்கி, வடதுருவத்தில் முடிவடையும்.

C) காந்த விசைக்கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கு ஒன்று வெட்டிக் கொள்ளாது.

D) காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் அதிகமாக இருக்கும்.

(குறிப்பு – காந்தவிசை கோடுகளின் பண்புகள் ஆவன, காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் உட்புறம் ஊடுருவி செல்லும் தொடர் வளைவுக்கோடுகள் ஆகும். காந்தவிசை கூடுதல் காந்தத்தின் தென்துருவத்தில் தொடங்கி, வடதுருவத்தில் முடிவடையும். காந்த விசைக்கோடுகள் ஒருபோதும் ஒன்றுக்கு ஒன்று வெட்டிக் கொள்ளாது. காந்த விசைக்கோடுகள் காந்தத்தின் நடுப்பகுதியை விட துருவங்களில் அதிகமாக இருக்கும். வளைகோட்டின் எந்த ஒரு புள்ளியிலும் வரையப்படும் தொடுகோடானது காந்தப்புலத்தின் திசையை காட்டுகிறது.)

11) மின்னோட்டத்தின் காந்த விளைவினை கண்டறிந்தவர் யார்?

A) ஹான்ஸ் டேவிட்

B) ஹான்ஸ் ஸ்டீபன்

C) ஹான்ஸ் மெக்கரேன்

D) ஹான்ஸ் கிறிஸ்டியன்

(குறிப்பு – 1820 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள், ஹான்ஸ் கிறிஸ்டியன் அயர்ஸ்டெட் என்ற டேனிஷ் இயற்பியலாளர், மின்னோட்டத்தின் காந்த விளைவினை கண்டறிந்தார். மின்சுற்று மூடப்பட்டு கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்த போது காந்த ஊசியானது விலகியதை அவர் கண்டறிந்தார்.)

12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஹான்ஸ் கிறிஸ்டியன் மேற்கொண்ட மின்னோட்டத்தின் காந்த விளைவினை கண்டறியும் முயற்சியில், மின் சுற்று திறந்த நிலையில் இருந்தபோது அதன் வழியாக மின்சாரம் பாயவில்லை. அப்போது இரு காந்த ஊசிகளும் வட துருவத்தை காட்டின.

II. மின்சுற்று மூடப்பட்டு மின்சாரம் பாய்ந்த போது, திசைகாட்டும் கம்பிகள் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் விலகலடைந்தன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஹான்ஸ் கிறிஸ்டியன், XY என்னும் ஒரு கம்பியை வட தென் திசையில் இருக்குமாறு அமைத்தார். அவர் கம்பியின் மேல் A, எனும் புள்ளியில் ஒரு காந்த திசைக் காட்டியையும், கம்பியின் கீழ் B, எனும் புள்ளியில் மற்றொரு காந்த திசைக் காட்டியையும் வைத்தார். மின் சுற்று திறந்த நிலையில் இருந்தபோது அதன் வழியாக மின்சாரம் பாயவில்லை. அப்போது இரு காந்த ஊசிகளும் வட துருவத்தை காட்டின. மின்சுற்று மூடப்பட்டு மின்சாரம் பாய்ந்த போது, திசைகாட்டும் கம்பிகள் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் விலகலடைந்தன.)

13) கீழ்காணும் எந்த விதியை பயன்படுத்தி மின்னோட்டம் பாயும் மின் கடத்தியை சுற்றி உள்ள காந்த கோடுகளின் திசையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்?

A) வலக்கைப் பெருவிரல் விதி

B) இடக்கை பெருவிரல் விதி

C) நியூட்டன் இரண்டாம் விதி

D) பாய்ல்ஸ் விதி

(குறிப்பு – வலக்கை பெருவிரல் விதியை பயன்படுத்தி, மின்னோட்டம் பாயும் மின் கடத்தியை சுற்றி உள்ள காந்த கோடுகளின் திசையை எளிதாக புரிந்துகொள்ள முடியும். பெருவிரல் மேல் நோக்கிய நிலையில் இருக்கும் படி உங்களது வலது கையின் நான்கு விரல்களை பிடிக்கும்போது, மின்னோட்டத்தின் திசையானது பெருவிரலை நோக்கி இருந்தால், காந்த கோடுகள் உங்கள் மற்ற நான்கு விரல்களின் திசையில் இருக்கும்.)

14) மின்னோட்டம் பாயும் கம்பியால் உருவாகும் காந்தப்புலத்தின் வலிமை கீழ்காணும் எதனை சார்ந்து இருக்கும்?

I. கம்பியின் மின்னோட்டம்

II. தம்பி யிலிருந்து புள்ளியின் தூரம்.

III. கம்பியில் இருந்து புள்ளியின் திசை அமைப்பு.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மின்னோட்டம் பாயும் கம்பியால் உருவாகும் காந்தப்புலத்தின் வலிமை கம்பியின் மின்னோட்டம், கம்பியில் இருந்து புலியின் தூரம், கம்பியில் இருந்து புள்ளியின் திசை அமைப்பு,மற்றும் ஊடகத்தின் காந்த இயல்பு போன்றவற்றை சார்ந்திருக்கும். காந்த விசைக்கோடுகள் மின்கம்பிக்கு அருகில் வலுவாகவும், அதை விட்டு விலகி செல்லும் போது குறைவாகவும் உள்ளது.)

15) ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புல திசை அல்லாத வேறு ஒரு திசையில் நகரும் மின்னூட்டமானது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர் யார்?

A) லாரன்ஸ்

B) டேவிட்

C) பாரடே

D) வில்லியம்

(குறிப்பு – ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புல திசை அல்லாத வேறு ஒரு திசையில் நகரும் மின்னூட்டமானது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர் H.A. லாரன்ஸ் என்பவராவார். காந்தவியல் லாரன்ஸ் விசை என அழைக்கப்படுகிறது.)

16) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. காந்தப்புலத்தின் திசையை தவிர வேறு திசையில் வைக்கப்படும் ஒரு நகரும் மின்னூட்டத்தை கொண்ட மின் கடத்தியின் மீது ஒரு விசையானது செயல்பட்டு கடத்தியில் இயக்கத்தை உருவாக்கும்.

II. மின்னோட்டம் பாயும் கடத்திக் அருகே ஒரு காந்த ஊசி வைக்கப்பட்டால், ஊசியின் வடக்கு திசையில் ஒரு காந்தபுலம் உருவாகும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – காந்தப்புலத்தின் திசையை தவிர வேறு திசையில் வைக்கப்படும் ஒரு நகரும் மின்னூட்டத்தை கொண்ட மின் கடத்தியின் மீது ஒரு விசையானது செயல்பட்டு கடத்தியில் இயக்கத்தை உருவாக்கும். மின்னோட்டம் பாயும் கடத்திக் அருகே ஒரு காந்த ஊசி வைக்கப்பட்டால், ஊசியின் வடக்கு திசையில் ஒரு காந்தபுலம் உருவாகும். இது காந்த புலத்தில் வைக்கப்பட்ட இடத்தில் கடத்தியில் உருவாகும் விசை அல்லது காந்தவியல் லாரன்ஸ் விசை என்று அழைக்கப்படுகிறது.)

17) ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும் மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர் யார்?

A) லாரன்ஸ்

B) டேவிட்

C) பாரடே

D) வில்லியம்

(குறிப்பு – ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும் மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர் மைக்கேல் பாரடே என்னும் அறிஞர் ஆவார். இவர் 1821ஆம் ஆண்டு, நிரந்தர காந்தத்தின் காந்தப் புலமும், மின்னோட்டம் பாயும் கடத்தியால் உருவாக்கப்படும் காந்தப் புலமும் செயல்புரிந்து, மின் கடத்தியில் ஒரு விசையை உருவாக்குகிறது என்று கண்டறிந்தார்.)

18) கீழ்க்காணும் சமன்பாடுகளில் எது சரியானது?

A) F = IL / B

B) F = ILB

C) F = IB / L

D) F = BL / F

(குறிப்பு – L நீளம் கொண்ட ஒரு கடத்தி வழியாக, I மின்னோட்டம் பாயுமானால், அதன் மூலம் உருவாகும் விசை F என்பதன் சமன்பாடு,

F = ILB என்பதாகும். இதில் B என்பது காந்தப்புலம் ஆகும்.)

19) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்னோட்ட விசையானது கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் maற்றும் கடத்தியின் நீளம் ஆகியவற்றுக்கு நேர்த்தகவில் உள்ளது.

II. மின்னோட்ட விசையானது கடத்தி வைக்கப்பட்டிருக்கும் காந்தப் புலத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்னோட்ட விசையானது கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் maற்றும் கடத்தியின் நீளம் ஆகியவற்றுக்கு நேர்த்தகவில் உள்ளது. மின்னோட்ட விசையானது கடத்தி வைக்கப்பட்டிருக்கும் காந்தப் புலத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். மின்னோட்டம் மற்றும் காந்தப் புலத்திற்கு இடையே உள்ள சாய்வின் கோணமும் காந்த விசையை பாதிக்கிறது.)

20) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கடத்தி காந்தப்புலத்திற்கு செங்குத்தாக இருக்கும்போது, விசை அதிகபட்சமாக இருக்கும்.

II. கடத்தி காந்தப்புலத்திற்கு இணையாக இருக்கும்போது, விசை சுழியாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்னோட்டம் மற்றும் காந்தப் புலத்திற்கு இடையே உள்ள சாய்வின் கோணமும் காந்த விசையை பாதிக்கிறது. கடத்தி காந்தப்புலத்திற்கு செங்குத்தாக இருக்கும்போது, விசை அதிகபட்சமாக இருக்கும். கடத்தி காந்தப்புலத்திற்கு இணையாக இருக்கும்போது, விசை சுழியாக இருக்கும்.)

21) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. விசை என்பது ஒரு வெக்டர் அளவாகும்.

II. விசை என்பதன் திசையை பெரும்பாலும் ஃப்ளெம்மிங் இடதுகை விதிப்படி தெரிந்துகொள்ள முடியும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – விசை என்பது ஒரு வெக்டர் அளவாகும். அது எண்மதிப்பையும் திசையையும் கொண்டுள்ளது. எனவே, விசை செயல்படும் திசையையும் நாம் அறிந்து கொள்ளமுடியும். என்பதன் திசையை பெரும்பாலும் ஃப்ளெம்மிங் இடதுகை விதிப்படி தெரிந்துகொள்ள முடியும்.)

22) ஃப்ளெம்மிங் இடக்கை விதிப்படி கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இடது கரத்தின் பெருவிரல்,ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவை மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்க வேண்டும்.

II. மின்னோட்டத்தின் திசை நடுவிரலும், காந்தப்புலத்தின் திசையை சுட்டு விரலும், கடத்தி இயங்கும் திசையை பெருவிரலும் குறிக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஃப்ளெம்மிங் இடக்கை விதிப்படி,இடது கரத்தின் பெருவிரல்,ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவை மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்க வேண்டும். மின்னோட்டத்தின் திசை நடுவிரலும், காந்தப்புலத்தின் திசையை சுட்டு விரலும், கடத்தி இயங்கும் திசையை பெருவிரலும் குறிக்கும்)

23) 5A மின்னோட்டம் பாயும் 50 செமீ நீளமுடைய கடத்தியானது, 2 × 10-3 T வலிமையுடைய காந்தப்புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தி மீது செயல்படும் விசையை கண்டுபிடிக்க.

A) 5 × 10-3 N

B) 6 × 10-3 N

C) 7 × 10-3 N

D) 8 × 10-3 N

(குறிப்பு – தீர்வு

கடத்தியில் செயல்படும் விசை,

F = ILB

F = 5 × 50 × 10-2 × 2 × 10-3

F = 5 × 10-3 N ஆகும்.)

24) காந்தபுலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளம் உடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை F க்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தப்புலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்.

A) மூன்று மடங்கு அதிகரிக்கும்

B) ஐந்து மடங்கு அதிகரிக்கும்

C) ஆறு மடங்கு அதிகரிக்கும்

D) பத்து மடங்கு அதிகரிக்கும்

(குறிப்பு – தீர்வு

F = ILB

F = 4(I) × (L/2) × 3(B)

F = 6 F

எனவே,விசை ஆறு மடங்கு அதிகரிக்கும்.)

25) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு மின்கடத்தியின் அருகில் மற்றோரு மின்கடத்தியை வைக்கும்போது, முதல் மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலத்தினால் இரண்டாம் மின்கடத்தியில் ஒரு விசை செலுத்தப்படுகிறது.

II. இரண்டாம் மின் கடத்தியில் சுற்றியுள்ள காந்தப்புலத்தினால், முதல் மின் கடத்தியில் ஒரு விசை செலுத்தப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு மின்கடத்தியின் அருகில் மற்றோரு மின்கடத்தியை வைக்கும்போது, முதல் மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலத்தினால் இரண்டாம் மின்கடத்தியில் ஒரு விசை செலுத்தப்படுகிறது. இரண்டாம் மின் கடத்தியைச் சுற்றியுள்ள காந்தப்புலத்தினால், முதல் மின் கடத்தியில் ஒரு விசை செலுத்தப்படுகிறது. இந்த இரு விசைகளும் ஒரு மதிப்பினை கொண்டிருந்தாலும் மாறுபட்ட திசையில் இருக்கும்.)

26) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை மக்கள் மின்னியல் மற்றும் காந்தவியல் ஆகியவை தனித்தனி பிரிவுகள் என்று நினைத்தார்கள்.

II. மின்னியல் மற்றும் காந்தவியல் ஆகியவற்றை ஒன்றுடனொன்று ஐக்கியமாகி மின்காந்தவியல் என்னும் தனி பாடமாக உருவாக்கியவர் அயர்ஸ்டெட் ஆவார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஃப்ளெம்மிங் இடது கை விதிப்படி, இரண்டு கடத்திகளிலும் ஒரே திசையில் மின்னோட்டம் பாயுமானால்,இரண்டு கடத்திகளின் மீது செயல்படும் விசைகளும் ஒன்றையொன்று நோக்கி செயல்படும். அப்படியானால் அவற்றுக்கு இடையே உருவாகும் விசை கவர்ச்சி விசை ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை மக்கள் மின்னியல் மற்றும் காந்தவியல் ஆகியவை தனித்தனி பிரிவுகள் என்று நினைத்தார்கள். மின்னியல் மற்றும் காந்தவியல் ஆகியவற்றை ஒன்றுடனொன்று ஐக்கியமாகி மின்காந்தவியல் என்னும் தனி பாடமாக உருவாக்கியவர் அயர்ஸ்டெட் ஆவார்)

27) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு கடத்தியில் மின்னோட்டம் பாயும்போது, அதனை சுற்றி காந்தப்புலம் உருவாகி,கடத்தியானது காந்தம் போல் செயல்படும்.

II. இருபதாம் நூற்றாண்டில்தான் காந்த கல்லில் உள்ள எலக்ட்ரான்களின் இயக்கத்தால் தான் காந்தவியல் பண்பு உருவாகிறது என்பதை அறிய முடிந்தது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு கடத்தியில் மின்னோட்டம் பாயும்போது, அதனை சுற்றி காந்தப்புலம் உருவாகி, கடத்தியானது காந்தம் போல் செயல்படும். ஆனால் மின்னோட்டம் பாயாத ஒரு காந்தக் கல் எவ்வாறு காந்தமாக முடியும் என நாம் வியக்கலாம். இருபதாம் நூற்றாண்டில்தான் காந்த கல்லில் உள்ள எலக்ட்ரான்களின் இயக்கத்தால் தான் காந்தவியல் பண்பு உருவாகிறது என்பதை அறிய முடிந்தது)

28) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின் சுற்றில் மின்னோட்டமானது மின்கலத்தின் எதிர்முனையில் இருந்து நேர் முனைக்கு செல்வதால் மின்னோட்டம் உருவாகிறது. இதன் விளைவாக காந்தப்புலம் உருவாகிறது.

II. இயற்கை காந்தங்கள் மற்றும் நாம் கடைகளில் வாங்கும் செயற்கையான காந்தங்களில், உட்கருவை சுற்றி வரும் எலக்ட்ரான்களின் இயக்கத்தால் மின்னோட்டம் தூண்டப்பட்டு காந்தப்பண்புகள் உருவாகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – எல்லாப் பொருள்களிலும் எலக்ட்ரான்கள் உட்கருவை சுற்றி வந்தாலும், காந்தப் பொருள்கள் என்று அழைக்கப்படும் சில பொருள்களில் உட்கருவை சுற்றி உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் சேர்க்கப்பட்டு, நிலையான காந்தபுலம் உருவாகிறது.)

29) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவியே மின் மோட்டார் ஆகும்.

II. மின் மோட்டார்கள் தண்ணீர் பம்ப், மின்விசிறி, சலவை இயந்திரம், சாறு பிழியும் கருவி மாவரைக்கும் இயந்திரம் முதலியனவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவியே மின் மோட்டார் ஆகும். மின் மோட்டார்கள் தண்ணீர் பம்ப், மின்விசிறி, சலவை இயந்திரம், சாறு பிழியும் கருவி, மாவரைக்கும் இயந்திரம் முதலியனவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும் ஒரு கடத்தியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தியை இயங்க செய்கிறது.இதுவே மின் மோட்டாரின் தத்துவமாக உள்ளது.)

30) மின்மோட்டார் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை கொண்டிருக்கும்?

I. ஒரு எளிய கம்பிச்சுருள்

II. காந்தம்.

III. கார்பன் தூரிகை

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மின்மோட்டாரின்னுள் ஒரு எளிய கம்பிச்சுருள், ஒரு காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவில் வைக்கப்பட்டிருக்கும். எளிய கம்பிச்சுருளானது கார்பன் தூரிகை மற்றும் திசைமாற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு நிலையான காந்தப்புலத்தின் உள்ளே வைக்கப்படும் மின் சுருள் ஒன்றின்மீது திருப்பு வளைவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை கொண்டு, ஒரு மோட்டார் எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.)

31) மின் மோட்டாரில் மின்னோட்டத்தின் திசையை மாற்ற பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?

A) பிளவு வளைய திசைமாற்றி

B) வட்டவடிவ திசை மாற்றி

C) சதுரவடிவ திசைமாற்றி

D) கோண திசைமாற்றி

(குறிப்பு – மின் மோட்டாரில் மின்னோட்டத்தின் திசையை மாற்ற,பிளவு வளைய திசைமாற்றி என்னும் ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன் தூரிகையுடன் இணைக்கப்பட்டிருக்கும். பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது, முனையங்களுடன் இணைந்து இருக்கும்போது சுருளில் மின்னோட்டம் இருக்காது. )

32) மின் மோட்டாரில் உள்ள சுருளின் சுழற்சி வேகம் கீழ்க்காணும் எந்த காரணிகளால் அதிகரிக்கும்?

I. கம்பியில் உள்ள மின்னோட்டத்தின் வலிமையை அதிகரிப்பதால்.

II. கம்பி சுருளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால்

III. கம்பி சுருளின் பரப்பளவை அதிகரிப்பதால்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மின் மோட்டாரில் உள்ள சுருளின் சுழற்சி வேகம் பின்வரும் காரணிகளால் அதிகரிக்கும். கம்பி சுருளில் உள்ள மின்னோட்டத்தின் வலிமையை அதிகரிப்பதால், கம்பி சுருளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், கம்பி சுருளின் பரப்பளவை அதிகரிப்பதால் மற்றும் காந்தப் புலத்தின் வலிமையை அதிகரிப்பதால் சுருளின் சுழற்சி வேகம் அதிகரிக்கும்.)

33) மைக்கேல் பாரடே எந்த ஆண்டு மின்னியக்கு விசையை கண்டுபிடித்தார்?

A) 1830 ஆம் ஆண்டு

B) 1831 ஆம் ஆண்டு

C) 1832 ஆம் ஆண்டு

D) 1833 ஆம் ஆண்டு

(குறிப்பு – மின்னோட்டம் பாயும் கம்பியை சுற்றி காந்தபுலம் உருவாகிறது என அயர்ஸ்டெட் நிரூபித்தார். 1831 ஆம் ஆண்டு, கடத்தியுடன் இணைந்த காந்தப்பாயம் மாறும்போது, கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசை (emf – electro motive force) உற்பத்தி செய்ய முடியும் என்பதை விளக்கினார் மைக்கேல் பாரடே.)

34) மைக்கேல் பாரடே செய்த சோதனை குறித்த கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மைக்கேல் பாரடே இரு கம்பி சுருள்களை ஒரு தேனிரும்பு வளையத்தின் மீது சுற்றி வைத்தார். இடது பக்கத்தின் சுருளுடன் ஒரு மின்கலம் மற்றும் சாவியை இணைத்தார்.வலதுபக்க சுருளுடன் கால்வனோமீட்டரை இணைத்தார்.

II. சாவியை இணைத்தவுடன் கால்வனோமீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது. சாவியை அணைக்கும்போது எந்த மாற்றமும் நிகழவில்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பாரடே தனது சோதனையின் போது, இரு கம்பி சுருள்களை ஒரு தேனிரும்பு வளையத்தின் மீது சுற்றி வைத்தார். இடது பக்கத்தின் சுருளுடன் ஒரு மின்கலம் மற்றும் சாவியை இணைத்தார்.வலதுபக்க சுருளுடன் கால்வனோமீட்டரை இணைத்தார். சாவியை இணைத்தவுடன் கால்வனோமீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது. அதேபோல சாவியை அணைக்கும்போது, கால்வனாமீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது. ஆனால் இது எதிர்திசையில் நிகழ்கிறது. இதிலிருந்து மின்னோட்டம் உற்பத்தியாவது நிரூபிக்கப்படுகிறது.)

35) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கம்பி சுருளுக்கு உள்ளே காந்தத்தை மேலும் கீழும் இயக்கும் போது மின்னோட்டம் ( காந்தத்தின் இயக்கம் மற்றும் சுருளின் இயக்கத்தால்) உருவாகிறது.

II. அதிக சுருள்கள் இருந்தால், அதிக மின்னழுத்தம் உருவாக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மைக்கேல் பாரடேவின் இரண்டாம் சோதனையில், இரு கம்பி சுருள்களை ஒரு தேனிரும்பு வளையத்தின் மீது சுற்றி வைத்தார். இடது பக்கத்தின் சுருளுடன் ஒரு மின்கலம் மற்றும் சாவியை இணைத்தார்.வலதுபக்க சுருளுடன் கால்வனோமீட்டரை இணைத்தார். கம்பி சுருளுக்கு உள்ளே காந்தத்தை மேலும் கீழும் இயக்கும் போது மின்னோட்டம் ( காந்தத்தின் இயக்கம் மற்றும் சுருளின் இயக்கத்தால்) உருவாகிறது. அதிக சுருள்கள் இருந்தால், அதிக மின்னழுத்தம் உருவாக்கப்படும்)

36) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கம்பிச் சுருளை நிலையாக வைத்து, காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்னோட்டம் ஏற்படும்.

II. காந்தத்தை நிலையாக வைத்து கம்பிச்சுருளை காந்தப் புலத்தின் உள்ளேயும் வெளியேயும் நகர்த்தினால், மின்னோட்டம் தூண்டப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மேற்கண்ட இரண்டு சோதனைகளிலும் மின்னோட்டம் ஏற்படுகிறது மைக்கேல் பாரடே கண்டறிந்தார். மேற்கண்ட சோதனைகளிலிருந்து காந்தப்பாயம் மாறும்போது காந்த புலத்தில் வைக்கப்பட்ட மின்சுற்றில் ஒரு மின் இயக்க விசை உருவாகும் எனவும்,அந்த மின்னியக்கு விசையின் மதிப்பு,காந்தப்பாய மாறுபாடு விதத்தைப் பொறுத்து அமையும் எனவும் மைக்கேல் பாரடே முடிவு செய்தார்.)

37) தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை எந்த விதியால் விளக்கப்படுகிறது?

A) ஹேன்ஸ் விதி

B) லென்ஸ் விதி

C) பாயில்ஸ் விதி

D) நியூட்டன் விதி

(குறிப்பு – தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை,லென்ஸின் விதியால் விளக்கப்படுகிறது. கம்பி சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டம் ஆனது, அது உருவாக காரணமாக இருந்த காந்தப்பாய மாற்றத்தை எதிர்க்கும் என்பதே லென்ஸ் விதியாகும். தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை ஃப்ளெம்மிங் வலதுகை விதி மூலம் விளக்க முடியும்.)

38) கீழ்கண்டவற்றுள் எது மைக்கேல் பாரடேவின் கண்டுபிடிப்பு அல்ல?

I. மின்காந்த தூண்டல்

II. டயா காந்தத்தன்மை

III. ரேடியம் கதிர்வீச்சு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மைக்கேல் பாரடே (22 செப்டம்பர் 1791 – 25 ஆகஸ்ட் 1867) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆவார். அவர் மின் காந்தவியல் மற்றும் மின் வேதியியல் போன்ற அறிவியல் பிரிவுகளுக்கு பெரும் பங்களித்தார். அவரது முக்கிய கண்டுபிடிப்புகளில் அடிப்படை மின்காந்த தூண்டல், டயா காந்தத்தன்மை மற்றும் மின்னாற்பகுப்பு ஆகியவை ஆகும்.)

39) ஃப்ளெம்மிங் வலதுகை விதிப்படி கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?

I. சுட்டு விரல் காந்தப்புலத்தின் திசையையும் குறிக்கும்.

II. நடுவிரல் மின்னோட்டத்தின் திசையை குறிக்கும்.

III. ஆள்காட்டி விரல் கடத்தி இயங்கும் திசையை குறிக்கும்.

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) எல்லாமே தவறு

(குறிப்பு – ஃப்ளெம்மிங் வலதுகை விதிப்படி, பெருவிரல்,சுட்டு விரல்,நடுவிரல் ஆகியவற்றை நீளவாக்கில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நீட்டும்போது,சுட்டு விரல் காந்தப்புலத்தின் திசையையும், பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால்,நடுவிரல் மின்னோட்டத்தின் திசையை குறிக்கும்.)

40) ஃப்ளெம்மிங் வலதுகை விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மின்னியற்றி விதி

B) மின்மாற்றி விதி

C) மின்னியக்கு விதி

D) மின்னேற்று விதி

(குறிப்பு – ஃப்ளெம்மிங் வலதுகை விதிப்படி, பெருவிரல்,சுட்டு விரல்,நடுவிரல் ஆகியவற்றை நீளவாக்கில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நீட்டும்போது,சுட்டு விரல் காந்தப்புலத்தின் திசையையும், பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால்,நடுவிரல் மின்னோட்டத்தின் திசையை குறிக்கும். இது மின்னியற்றி (Generator rule) விதி என்றும் அழைக்கப்படுகிறது.)

41) ஒரு மின்னியற்றி கீழ்க்கண்டவற்றுள் எவற்றை கொண்டிருக்கும்?

I. ஒரு நிலை காந்தம்

II. வட்ட வடிவ கம்பி சுருள்

III. பேட்டரி

IV. நழுவு வளையங்கள்

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) I, II, IV மட்டும் சரி

(குறிப்பு – ஒரு மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றியில் (Alternative Current), ஒரு நிலை காந்தத்தின் இரு துருவங்களுக்கு இடையில் அமைக்கப்பட்ட சுழலும் வகையிலான மின் சட்டம் எனப்படும் செவ்வக வடிவ கம்பிச்சுருள் இருக்கும். இந்த சுருளின் இரண்டு முனைகளும் இரண்டு நழுவ வளையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு வெப்பத்தை கடத்தும் தூரிகைகள் நழுவ வளையங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரு வளையங்களும் ஒரு உட்பக்க அச்சின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே மின்னியற்றியாகும்.)

42) மின்னியற்றியில் மின்னோட்டத்தை பெற எதை பயன்படுத்த வேண்டும்?

A) இரண்டு நழுவ வளையங்கள்

B) ஒரு நழுவ வளையம்

C) ஒரு பிளவு வளையம்

D) இரண்டு பிளவு வளையம்

(குறிப்பு – மின்னியற்றியில் நேர் மின்னோட்டத்தை (Direct Current) பெற, ஒரு பிளவு வளைய திசை மாற்றியை பயன்படுத்த வேண்டும். இந்த அமைப்பில் ஒரு தூரிகை எப்போதும் மேல் நோக்கியே மின் சட்டக் கையுடனும், மற்றோரு தூரிகை எப்போதும் கீழ் நோக்கிய மின் சட்டக்கையுடனும் தொடர்பு கொண்டிருக்கும். எனவே மின்னோட்டமானது ஒரே திசையில் உருவாக்கப்படும்.)

43) மின்மாற்றி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும், உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்கு பயன்படும் கருவியின் பெயர் மின்மாற்றி ஆகும்.

II. மின்மாற்றி என்னும் கருவி மின்காந்த தூண்டல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாகவும், உயர் மின்னழுத்தத்தை குறைந்த மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்கு பயன்படும் கருவியின் பெயர் மின்மாற்றி ஆகும். மின்மாற்றி என்னும் கருவி மின்காந்த தூண்டல் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. இது ஒன்றுக்கொன்று காப்பிடப்பட்ட முதன்மை மற்றும் துணை சுருள்களை கொண்டது.)

44) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஏற்று மின்மாற்றியில் முதன்மைச் சுருள் வழியாக 110/120 V மின்சாரம் செலுத்தப்பட்டு, துணை சுருள் வழியாக 220/440 V என வெளிவருகிறது.

II. மின்மாற்றியில் முதன்மை சுருள் வழியாக பாயும், மாறும் மின்னோட்டமானது இரும்பு வளையத்தில் காந்தப்புலத்தை தூண்டுகிறது. இரும்பு வளையத்தின் காந்தபுலம் துணை சுருளில் மாறுகின்ற மின்னியக்கு விசையை தூண்டுகிறது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மின்மாற்றியில் முதன்மை சுருள் வழியாக பாயும், மாறும் மின்னோட்டமானது இரும்பு வளையத்தில் காந்தப்புலத்தை தூண்டுகிறது. இரும்பு வளையத்தின் காந்தபுலம் துணை சுருளில் மாறுகின்ற மின்னியக்கு விசையை தூண்டுகிறது. முதன்மை மற்றும் துணை சுருள்களில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மின்னழுத்தத்தை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.)

45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை, உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மின் மாற்றி, ஏற்று மின்மாற்றி என்று அழைக்கப்படுகிறது.

II. ஏற்று மின்மாற்றியில், முதன்மைச் சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கையைவிட, துணை சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை, உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மின் மாற்றி, ஏற்று மின்மாற்றி என்று அழைக்கப்படுகிறது. ஏற்று மின்மாற்றியில், முதன்மைச் சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கையைவிட, துணை சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதாவது Vs > Vp. மற்றும் Ns > Np)

46) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை, குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மின் மாற்றி, இறக்கு மின்மாற்றி என்று அழைக்கப்படுகிறது.

II. இறக்கு மின்மாற்றியில், முதன்மைச் சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கையைவிட, துணை சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை, குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மின் மாற்றி, இறக்கு மின்மாற்றி என்று அழைக்கப்படுகிறது. இறக்கு மின்மாற்றியில், முதன்மைச் சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கையைவிட, துணை சுருளில் உள்ள கம்பி சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதாவது Vs < Vp மற்றும் Ns < Np ஆக இருக்கும்.)

47) ஒரு மின்மாற்றியில் ஆற்றல் இழப்பு கீழ்காணும் எவற்றின் அடிப்படையில் ஏற்படும்?

I. வெப்பம்

II. ஒலி

III. ஒளி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு ஏற்று மின் மாற்றி மின்னழுத்தத்தை அதிகரிக்கிறது, ஆனால் மின்னோட்டத்தை குறைகிறது, மற்றும் மறுதலையாகவும் அமையும். அடிப்படையில் வெப்பம், ஒலி போன்ற வடிவில் ஒரு மின்மாற்றியில் ஆற்றல் இழப்பு ஏற்படும்.)

48) கீழ்காணும் சமன்பாடுகளில் எது சரியானது?

A) N1 / N2 = Vp / Vs

B) N2 / N1 = Vp / Vs

C) N1 / N2 = Vp × Vs

D) N1 × N2 = Vp / Vs

(குறிப்பு – மின் மாற்றிகள் தொடர்பான சூத்திரங்கள் பின்வரும் சமன்பாடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

முதன்மை பொருள்களின் எண்ணிக்கை N1 / துணை சுருள்களின் எண்ணிக்கை N2 = முதன்மைச் சுருளின் மின் அழுத்தம் Vp / துணை சுருளின் மின் அழுத்தம் Vs )

49) நேர் திசை மின்னோட்ட மூலத்துடன் ஒரு மின்மாற்றியை பயன்படுத்த முடியாது என்பதற்கான சரியான காரணம்?

காரணம் I. முதன்மைச் சுருளில் மின்னோட்டம் நிலையாக இருக்கும். அப்போது துணை சுருளுடன் இணைக்கப்பட்ட காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

காரணம் II. துணை சுருளில் மின்னோட்டம் நிலையாக இருக்கும். அப்போது முதன்மை சுருளுடன் இணைக்கப்பட்ட காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டு காரணமும் சரி

D) இரண்டு காரணமும் தவறு

(குறிப்பு – நேர் திசை மின்னோட்ட மூலத்துடன் ஒரு மின்மாற்றியை பயன்படுத்த முடியாது. ஏனெனில், முதன்மைச் சுருளில் மின்னோட்டம் நிலையாக இருக்கும். அப்போது துணை சுருளுடன் இணைக்கப்பட்ட காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது.)

50) ஒரு மின்மாற்றியின் முதன்மைச் சுருளில் 800 சுற்றுகள் உள்ளது. துணை சுருள் 8 சுற்றுகளைக் கொண்டுள்ளது. இது ஒரு 220 V, AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?

A) 2.0 வோல்ட்

B) 2.2 வோல்ட்

C) 2.4 வோல்ட்

D) 2.6 வோல்ட்

(குறிப்பு – தீர்வு

ஒரு மின்மாற்றியில்,

Es / Ep = Ns / Np

Es = Ns / Np × Ep

Es = 8 / 800 × 220

Es = 220 / 100

வெளியீடு மின்னழுத்தம் Es = 2.2 வோல்ட் ஆகும்.)

51) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு ஒலிபெருக்கியின் உள்ளே ஒரு நிலை காந்தத்தின் முன் மின்காந்தம் வைக்கப்படுகிறது. மின்காந்தம் அசையாமல் இருக்குமாறும், மின்காந்தம் இயங்கும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கும்.

II. ஒலிப்பெருக்கி மின்காந்தத்தின் தத்துவத்தை பயன்படுத்தும் சாதனமாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு ஒலிபெருக்கியின் உள்ளே ஒரு நிலை காந்தத்தின் முன் மின்காந்தம் வைக்கப்படுகிறது. மின்காந்தம் அசையாமல் இருக்குமாறும், மின்காந்தம் இயங்கும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கும். மின்காந்த சுருளின் வழியாக மின்சாரத் துடிப்புகள் கடந்து செல்லும்போது, அதன் காந்த புலத் திசை வேகமாக மாறுகிறது. இது நிலை காந்தத்தால் ஈர்க்கப்படும், விலக்கப்படும் முன் பின் நகர்வதால் அதிர்வடைகிறது என்பது இதன் பொருளாகும். இந்த அதிர்வுகள் நமது காதுகளை சுற்றி உள்ள காற்றுக்கு ஒலி அலைகளை ஊடுருவச் செய்கிறது.)

52) காந்தத்தூக்கல் தொடர்வண்டியில் எத்தனை வகை காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன?

A) ஒரே ஒரு வகை

B) இரண்டு வகை

C) மூன்று வகை

D) எல்லாமே தவறு

(குறிப்பு – காந்தத்தூக்கல் முறையில் ஒரு பொருளானது மின்காந்த புலத்தினால் உயர்த்தப்படுகிறது. காந்தத்தூக்கல் தொடர்வண்டியில் இரு வகை காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று சக்கரத்தை விலக்கி தொடர்வண்டியை தண்டவாளத்தில் இருந்து மேலே தூக்குகிறது. இன்னொன்று வண்டியை முன்புறம் வேகமாக தள்ளுகிறது.)

53) மின்காந்தவியல் கொள்கைகளை பயன்படுத்தும் மருத்துவ உபகரணம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) ஸ்டெதஸ்கோப்

B) தெர்மோமீட்டர்

C) ஸ்கேனர்கள்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – தற்போது மின்காந்தப் புலங்கள் புற்று நோய்க்கான உடல் வெப்ப உயர்வு சிகிச்சைகள் மற்றும் காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (MRI) போன்ற மேம்பட்ட மருத்துவ உபகரணங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்காந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் பிற உபகரணங்கள் ஆவன ஸ்கேனர்கள், X-Ray உபகரணங்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் ஆகும்.)

9th Science Lesson 6 Questions in Tamil

6] ஒளி

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒளி என்பது ஆற்றலின் வடிவம் ஆகும்.

II. ஒளி மின்காந்த அலை வடிவத்தில் பரவுகின்றது.

III. ஒளியின் பண்புகளையும், அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒளியியல் என்று அழைக்கப்படுகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒளி என்பது ஆற்றலின் வடிவம் ஆகும். ஒளி மின்காந்த அலை வடிவத்தில் பரவுகின்றது. ஒளியின் பண்புகளையும், அதன் பயன்பாடுகளையும் பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு ஒளியியல் என்று அழைக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் நாம் பல ஒளியியல் கருவிகளை பயன்படுத்துகிறோம். கல்வி, அறிவியல், பொழுதுபோக்கு ஆகிய தளங்களில் தொலைநோக்கிகள், புகைப்படக்கருவிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.)

2) ஒரு சமதள ஆடியில், ஒரு புள்ளியின் மேல் படும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

A) உள் கதிர்

B) படு கதிர்

C) குத்துக்கோடு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – ஒரு சமதள ஆடியில், O என்னும் புள்ளியில் அந்த ஆடியின் மேல்படும் கதிர் படுகதிர் எனப்படும். இந்த கதிரை ஆடி எதிரொளிக்கும். அவ்வாறு எதிரொளிக்கும் கதிர், எதிரொளிப்பு கதிர் என அழைக்கப்படும்.)

3) குத்துக்கோடுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) சாய்வு கோணம்

B) படு கோணம்

C) விழு கோணம்

D) எதிரொளிப்பு கோணம்

(குறிப்பு – குத்துக்கோடுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் படுகோணம் எனப்படும். குத்துக்கோடுடன் எதிரொளிப்பு கதிர் ஏற்படுத்தும் கோணம் எதிரொளிப்பு கோணம் என அழைக்கப்படும். மேலும் படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும்.)

4) எதிரொளிப்பு விதி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு ஒளியானது எதிரொளிக்க படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைய வேண்டும்.

II. படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு ஒளியானது எதிரொளிக்க படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைய வேண்டும். மேலும் படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும். இவையே எதிரொளிப்பு விதி என அழைக்கப்படுகிறது.)

5) இடவல மாற்றம் (Lateral Inversion) என்பதில் Lateral என்னும் வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?

A) அரேபிய மொழி

B) கிரேக்க மொழி

C) லத்தீன் மொழி

D) பிரெஞ்சு மொழி

(குறிப்பு – இடவல மாற்றம் (Lateral Inversion) என்பதில் Lateral என்னும் வார்த்தையானது பக்கம் என்று பொருள்படும் Latus என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. பக்கவாட்டில் ஏற்படும் மாற்றம் இடவல மாற்றம் எனப்படும். இது ஒரு சமதள ஆடியில் ஏற்படுவது போல் தோன்றும் இடவல மாற்றம் ஆகும்.)

6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இடவல மாற்றம் என்பது ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் ஆகும்.

II. உண்மையில் இடவல மாற்றம் ஆடியால் ஏற்படுகிறது.

III. இடவல மாற்றம் என்பது நம் புலனுணர்வினால் ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இடவல மாற்றம் என்பது ஒரு ஒளியியல் மாயத்தோற்றமே ஆகும். உண்மையில் இடவல மாற்றம் ஆடியால் ஏற்படுவதில்லை. அது நம் புலனுணர்வினால் (Perception) ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும்.)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொலிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் எனப்படும்.

II. மெய்பிம்பம் எப்போதும் நேரான பிம்பமாகவே இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொலிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் எனப்படும். மேலும் அது, எப்போதும் தலைகீழாகவே இருக்கும். மெய் பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியும்.)

8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் ஒன்றை ஒன்று சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மாயபிம்பம் எனப்படும்.

II. மாயபிம்பத்தை திரையில் வீழ்த்த முடியாது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பொருளில் இருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் ஒன்றை ஒன்று சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும் போது சந்தித்தால், அதனால் உருவாகும் பிம்பம் மாயபிம்பம் எனப்படும். மாய பிம்பம் எப்போதுமே நேரான பிம்பமாகவே இருக்கும். மேலும் அதை திரையில் வீழ்த்த முடியாது.)

9) ஆடியில் ஒருவரது முழு உருவம் தெரிய வேண்டுமெனில் கீழ்க்காணும் எந்த விதியை பூர்த்தி செய்ய வேண்டும்?

I. ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தில் பாதியாவது இருக்க வேண்டும்.

II. ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நிலைப்பேழையில் (பீரோ) உள்ள ஆடியின் முன் நின்றால், நம் முழு உருவமும் தெரிகிறது. ஏனெனில், ஆடியில் ஒருவரது முழு உருவமும் தெரிய வேண்டுமெனில், ஆடியின் உயரம் அந்த நபரின் உயரத்தில் பாதியாவது இருக்க வேண்டும். அதாவது, ஆடியின் உயரம் = உங்கள் உயரம் / 2)

10) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. எதிரொளிப்பு விதிகள், வளைந்த பரப்புகள் உள்ளிட்ட அனைத்து எதிரொளிக்கும் பரப்புகளுக்கும் பொருந்தும்.

II. பொதுவாக பயன்படுத்தப்படும் வளைவு ஆடி, கோளக ஆடி ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – எதிரொளிப்பு விதிகள், வளைந்த பரப்புகள் உள்ளிட்ட அனைத்து எதிரொளிக்கும் பரப்புகளுக்கும் பொருந்தும். பொதுவாக பயன்படுத்தப்படும் வளைவு ஆடி, கோளக ஆடி ஆகும். பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு கூட வளைவு ஆடியே ஆகும்.)

11) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

II. சில கோளக ஆடிகளில் எதிரொலிக்கும் பகுதி உள்பக்கமாக வளைந்திருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள், கோளக ஆடிகள் எனப்படும். சில கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருக்கும்.)

12) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருப்பது குழியாடி எனப்படும்.

II. கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருப்பது குவியாடி எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சில கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள் பக்கமாக வளைந்திருக்கும். அதாவது, கோளத்தின் மையத்தை நோக்கி அப்பகுதி பார்த்துள்ளபடி இருக்கும். இவை குழியாடிகள் எனப்படும். சில வகை கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருக்கும். அவை குவியாடிகள் எனப்படும்.)

13) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு குழியாடியைக் கொண்டு இணையாகச் செல்லும் சூரிய கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க இயலும்.

II. சமதள ஆடியின் தன்மையை விட குழியாடியின் தன்மை சிக்கலானது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு குழியாடியைக் கொண்டு இணையாகச் செல்லும் சூரிய கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க இயலும். வளைவு ஆடிகளில் எதிரொளிக்கும் பரப்பு கோளத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள், கோளக ஆடிகள் எனப்படும்.)

14) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொருளின் ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் எண்ணற்ற கதிர்கள் அனைத்து திசைகளிலும் செல்கின்றன.

II. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.அவை i) ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொலிக்கப்பட்ட பின்பு, அதே பாதையில் திருப்பி செல்லும் ii) முக்கிய குவியம் வழியாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொலித்த பின் முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும் போன்றவை ஆகும்.)

15) குவியாடி தோன்ற அவசியமான விதிகளில் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

I. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும்.

II. ஆடி மையத்தில் படும் ஒளிக்கதிர் படுகோன் அதற்கு சமமான கோணத்தில், ஒரு திசையில் எதிரொளிக்கப்படும்.

III. ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, அதேபாதையில் திரும்பி செல்லும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை கீழ்காணும் விதிகள் தீர்மானிக்கின்றன. அவை i) ஆடியின் வளைவு மையம் வழியாக செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்ட பின்பு, அதேபாதையில் திரும்பி செல்லும், ii) ஆடி மையத்தில் படும் ஒளிக்கதிர் படுகோன் அதற்கு சமமான கோணத்தில், ஒரு திசையில் எதிரொளிக்கப்படும் iii) குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் நிலை மற்றும் தன்மையை சில விதிகளை கொண்டு பின்பற்ற வேண்டும் போன்றவை ஆகும்.)

16) குழி ஆடி ஒன்றின் முதன்மை அச்சில் வைக்கப்படும் பொருள் ஒன்றின் பிம்பத்தின் நிலை, அளவு மற்றும் தன்மையை கீழ்க்கண்டவற்றுள் எது தீர்மானிக்கிறது?

I. ஈரிலா தொலைவில் பொருள் வைக்கப்படும்போது பொருளில் இருந்து குழி ஆடி வந்தடையும் ஒளிக்கதிர்கள் இணையானவையாக இருக்கும். இதனால் தலைகீழான மிகவும் சிறியதான மெய் பிம்பம் தோன்றும்.

II. வளைவு மையத்திற்கு அப்பால் பொருள் வைக்கப்படும்போது, பொருளை விட சிறியதான தலைகீழான பிம்பம் தோன்றும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஈரிலா தொலைவில் பொருள் வைக்கப்படும்போது பொருளில் இருந்து குழி ஆடி வந்தடையும் ஒளிக்கதிர்கள் இணையானவையாக இருக்கும். இதனால் தலைகீழான மிகவும் சிறியதான மெய் பிம்பம் தோன்றும். மேலும் பிம்பம் முக்கிய குவியத்தில் உருவாகும். வளைவு மையத்திற்கு அப்பால் பொருள் வைக்கப்படும்போது, பொருளை விட சிறியதான தலைகீழான பிம்பம் தோன்றும். அதாவது பிம்பத்தின் நிலையானது முக்கிய குவியம் மற்றும் வளைவு மையத்திற்கு இடையில் இருக்கும்.)

17) வளைவு மையம் மற்றும் முக்கிய குவியத்திற்கு இடையே பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தில் நிலை எங்கு இருக்கும்?

A) C க்கு அப்பால்

B) C க்கு முன்னால்

C) C க்கு அருகில்

D) C இருக்கும் இடத்தில்

(குறிப்பு – வளைவு மையம் மற்றும் முக்கிய குவியத்திற்கு இடையே பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தில் நிலை அல்லது இடம் C க்கு அப்பால் இருக்கும். மேலும் பிம்பத்தின் தன்மை பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பமாக இருக்கும்)

18) முக்கிய குவியம் F, இல் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் தன்மை?

A) மாயப் பிம்பமாக இருக்கும்

B) மெய்பிம்பமாக இருக்கும்

C) எந்த பிம்பமும் தெரியாது, மாய பிம்பமும் தெரியாது

D) எல்லாமே தவறு

(குறிப்பு – முக்கிய குவியம் F, இல் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் தன்மை திரையில் எந்த பிம்பமும் தெரியாது, மேலும் மாய பிம்பமும் தெரியாது. கருத்தியல் படி பிம்பத்தின் நிலையானது பிம்பம் ஈரிலாத்தொலைவில் கிடைக்கும்.)

19) முக்கிய குவியம் F க்கும் ஆடி மையம் P க்கும் கையில் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் நிலை?

A) ஆடிக்கு முன்புறம் தோன்றும்

B) ஆடிக்கு பின்புறம் தோன்றும்

C) இருக்கும் இடத்தில் தோன்றும்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – முக்கிய குவியம் F க்கும் ஆடி மையம் P க்கும் கையில் பொருள் வைக்கப்படும்போது பிம்பத்தின் நிலை ஆடிக்கு பின்புறம் தோன்றும். மேலும் பிம்பத்தின் தன்மை பெரியதாக்கப்பட்ட, நேரான மாய பிம்பமாக இருக்கும்.)

20) பொருத்துக

I. வளைவு மையம் – a) F

II. முக்கியக் குவியம் – b) C

III. ஆடி மையம் – c) AB

IV. ஒளிக்கதிர் – d) P

A) I-b, II-a, III-d, IV-c

B) I-b, II-a, III-c, IV-d

C) I-d, II-a, III-b, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – குழி ஆடி மற்றும் குவி ஆடி கொண்டு பிம்பங்களை உருவாக்க கீழ்கண்டவை அவசியமாகிறது. அவை வளைவு மையம் (C), முக்கிய குவியம் (F), ஆடி மையம் (P), ஒளிக்கதிர் (AB) போன்றவை ஆகும். ஆடியின் அச்சு MM’ என குறிக்கபடுகிறது.)

21) கதிர் வரைபடங்களின் தூரத்தை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீட்டு மரபு எது?

A) கார்டீசியன் குறியீட்டு மரபு

B) கிரேக்கன் குறியீட்டு மரபு

C) கலிலியோ குறியீட்டு மரபு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – கதிர் வரைபடங்களின் தூரத்தை கணக்கிடுவதற்கு கார்டீசியன் குறியீட்டு மரபுகள் என்ற குறியீட்டு முறையை நாம் பயன்படுத்துகிறோம். இந்த முறைப்படி ஆடியின் மையம் (P) ஆதிபுள்ளியாகவும் முதன்மை அச்சு X-அச்சாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)

22) கீழ்காணும் குறியீட்டு மரபுகளில் எது தவறானது?

I. பொருள் எப்போதும் ஆடிக்கு வலதுபுறமே வைக்கப்படுகிறது.

II. அனைத்து தொலைவுகளும் ஆடி மையத்திலிருந்தே (P) அளவிடப்படுகின்றன.

III. முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) இவை எல்லாமே சரி

(குறிப்பு – குறியீட்டு மரபுகள் பின்வருமாறு i) பொருள் எப்போதும் ஆடிக்கு இடதுபுறமே வைக்கப்படுகிறது, ii) அனைத்து தொலைவுகளும் ஆடி மையத்திலிருந்தே அளவிடப்படுகின்றன, iii) படுகதிரின் திசையிலுள்ள தொலைவுகள் நேர்க்குறியாகவும் அதற்கு எதிர்திசையில் அளக்கப்படும் தொலைவுகள் எதிர்குறியாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, iv) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும்,அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்குறியாக கருதப்படுகின்றன. என்பனவாம்.)

23) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன.

II. முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு கீழ் நோக்கியும் உள்ள தொலைவுகள் எதிர்க்குறியாக கருதப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – i) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு மேல் நோக்கியும் உள்ள தொலைவுகள் நேர்க்குறியாக (+) கருதப்படுகின்றன. ii) முதன்மை அச்சுக்கு செங்குத்தாகவும் அதற்கு கீழ் நோக்கியும் உள்ள தொலைவுகள் எதிர்க்குறியாக கருதப்படும். இவை கார்டீசியன் குறியீட்டு மரபுகள் என அழைக்கப்படுகின்றன.)

24) கீழ்க்கண்டவற்றுள் எது சரியான ஆடி சமன்பாடு ஆகும்?

A) 1/f = 1/u + 1/v

B) f = 1/u + 1/v

C) 1/f = u + v

D) 1/f = uv

(குறிப்பு – பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v), குவிய தொலைவு (f) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆடி சமன்பாடு எனப்படும்.

ஆடி சமன்பாடு, 1/f = 1/u + 1/v ஆகும்.)

25) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதை கோளக ஆடியின் உருப்பெருக்கம் குறிக்கும்.

II. பிம்பத்தின் அளவிற்கும்,பொருளின் அளவிற்கும் இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதை கோளக ஆடியின் உருப்பெருக்கம் குறிக்கும். பிம்பத்தின் அளவிற்கும்(hi), பொருளின் அளவிற்கும் (h°) இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. அதாவது m = hi / h° என்று குறிப்பிடப்படுகிறது.)

26) கீழ்காணும் சமன்பாடுகளில் எது சரியானது?

A) m = – v / u

B) m = vu

C) m = – vu

D) m = v + u

(குறிப்பு – பிம்பத்தின் தொலைவு மற்றும் பொருளின் தொலைவை கொண்டு உருpபெருக்கத்தின் தொலைவை கணக்கிட முடியும். அதாவது,

m = hi / h° மற்றும் m = – v / u எனில்

m = hi / h° = – v / u ஆகும்.

உருபெருக்கத்தின் மதிப்பில் எதிர் குறி (-ve), பிம்பம் மெய்பிம்பம் என்பதையும், நேர்குறி (+ve), பிம்பம் மாய பிம்பம் என்பதையும் குறிக்கும்.)

27) 10 செமீ குவிய தொலைவு கொண்ட குழி ஆடி ஒன்றிலிருந்து 15 செமீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செமீ உயரம் கொண்ட பொருளின் பிம்பத்தின் தொலைவு?

A) – 15 செமீ

B) – 30 செமீ

C) – 45 செமீ

D) – 60 செமீ

(குறிப்பு – தீர்வு

பொருளின் தொலைவு = – 15 செமீ

குவிய தொலைவு, f = -10 செமீ.

ஆடி சமன்பாடு = 1/v + 1/u = 1/f

1/v + 1/-15 = 1/10

1/v – 1/15 = -1/10

1/v = -1/10 + 1/15

1/v = (-3+2) / 30

1/v = -1/30

v = -30 செமீ ஆகும்.)

28) 10 செமீ குவிய தொலைவு கொண்ட குழி ஆடி ஒன்றிலிருந்து 15 செமீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செமீ உயரம் கொண்ட பொருளின் பிம்பத்தின் தொலைவு -30 செமீ எனில், பிம்பத்தின் உயரத்தை கணக்கீடு செய்.

A) 2 செமீ

B) 3 செமீ

C) 4 செமீ

D) 5 செமீ

(குறிப்பு – தீர்வு

m = -v / u

m = (-30) / (15)

m = – 2

m = h2 / h1என்பதை நாம் அறிவோ இங்கு பொருளின் உயரம் h1 = 1 செமீ

-2 = h2 / 1

h2 = -2 × 1 = -2 cm

எனவே பிம்பத்தின் உயரம் = 2 செமீ

இங்கு எதிர் குறி வந்துள்ளது. எனவே பிம்பம் முதன்மை அச்சுக்கு கீழே ஏற்படுகிறது.))

29) குழியாடியிலிருந்து 16 செமீ தொலைவில் வைக்கப்படும் 2 செமீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செமீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தை காண்க.

A) – 20 செமீ

B) – 22 செமீ

C) – 24 செமீ

D) – 26 செமீ

(குறிப்பு – தீர்வு

பொருளின் உயரம், h1 = 2 செமீ

பிம்பத்தின் உயரம், h2 = -3 செமீ

உருப்பெருக்கம் m = -3 / 2 = – 1.5 செமீ

ஆனால், m = -v / u

இங்கு பொருளின் தொலைவு u = – 16 செமீ மதிப்புகளை பிரதியிட,

– 1.5 = – (v) / (-16)

– 1.5 = v / 16

v = 16 × (-1.5)

v = – 24 cm

பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் 24 செமீ தொலைவில் இருக்கும். (எதிர்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதை குறிக்கிறது.)

30) கீழ்காணும் குழியாடியின் பயன்களில் சரியானது எது?

I. ஒப்பனை ஆடிகளில் குழியாடி பயன்படுத்தப்படுகிறது.

II. கை மின்விளக்குகளில் குழியாடி பயன்படுத்தப்படுகிறது.

III. வாகனங்களில் முகப்பு விளக்குகளில் குழியாடி பயன்படுத்தப்படுகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பல் மருத்துவர் / காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் தலையில் ஒரு பட்டை கட்டப்பட்டு அதில் ஒரு வட்டவடிவ ஆடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒளி மூலத்திலிருந்து வரும் இணைக்கதிர்கள் அந்த ஆடியின் மீது படும்படி வைக்கப்படும். அந்த ஆடி நம் உடலில் காணப்படும் சிறு பகுதியின் (பல், தொண்டை) மீது அந்த ஒளியை குவித்து ஒளியூட்டும். கை மின்விளக்கு, வாகனங்களின் முகப்பு விளக்கு மற்றும் தேடும் விளக்கு ஆகியவற்றில் பயன்படுகிறது.)

31) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. குழியாடிகள் ஆற்றல் வாய்ந்த ஒளியைப் பாய்ச்ச உதவுகின்றன.

II. குழியாடி எதிரொளிப்பான்கள் அறை சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – குழியாடிகள் ஆற்றல் வாய்ந்த ஒளியைப் பாய்ச்ச உதவுகின்றன. குழியாடி எதிரொளிப்பான்கள் அறை சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய குழியாடிகள் சூரிய சூடேற்றியில் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பனை ஆடி என்பதும் ஒரு குழியாடி ஆகும்.)

32) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முதன்மை அச்சுக்கு இணையான கதிர் கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம்.

II. முதன்மை அச்சுக்கு இணையான கதிர் கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கீழ்காணும் இரண்டு கதிர்களை கொண்டு குவியாடியால் ஏற்படும் பிம்பத்தை வரையலாம். முதல்கதிர் : முதன்மை அச்சுக்கு இணையான கதிர் (விதி 1) இரண்டாம் கதிர் : வளைவு மையத்தை நோக்கி செல்லும் கதிர் (விதி 2). குவி ஆடிக்கு பின் புறமுள்ள கதிர்கள் அனைத்தும் புள்ளி கோட்டினால் குறிக்கப்படும்.)

33) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. குவி ஆடிகள் வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக பயன்படுகின்றது.

II. குவி ஆடிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு மற்றும் தேடும் விளக்கு ஆகியவற்றில் பயன்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – குவி ஆடிகள் வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடியாக பயன்படுகின்றது. அவை பொருளை விட சிறியதான, நேரான, மாய பிம்பத்தையே எப்போதும் உருவாக்குகின்றன. பின்னே வரும் வாகனங்கள் அருகில் நெருங்கி வரும்போது, பிம்பத்தின் அளவும் அதிகரிக்கின்றது. ஆடியை விட்டு வாகனங்கள் விலகும்போது பிம்பம் சிறியதாக ஆகின்றது.)

34) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சமதள ஆடியின் பார்வைப்புலத்தை விட குவியாடியின் பார்வைப்புலம் பெரியது.

II. போக்குவரத்து பாதுகாப்பு கருவியாக சாலைகளில் குவி ஆடி பயன்படுத்தப்படுகிறது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – போக்குவரத்து பாதுகாப்பு கருவியாக சாலைகளில் குவி ஆடி பயன்படுத்தப்படுகிறது. மலைப்பாதைகளில் காணப்படும் குறுகிய சாலைகளில் கூர்ந்த வளைவுகளில் முன்னே வரும் வாகனங்களை காண இயலாத இடங்களில் குவி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்காடிகளில் ஆளில்லா பகுதிகளை கண்காணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.)

35) வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடிகளில் கீழ்காணும் எந்த சொற்றொடர் காணப்படுகிறது?

A) Objects in the mirror are farer than they appear

B) Objects in the mirror are closer than they appear

C) Objects in the mirror will appear as close

D) Objects in the mirror closer, be careful

(குறிப்பு – வாகனங்களின் பின்னோக்கு கண்ணாடிகளில் எழுதப்பட்டுள்ள சொற்சொடர் “objects in the mirror are closer than they appear” என்பதாகும். அதாவது ஆடியில் பிம்பம் தோன்றும் தொலைவை விட பொருள்கள் மிக அருகில் உள்ளது என்பது இதன் பொருளாகும். இதனால் வாகனங்களில் ஆடியில் தெரியும் வாகனம், மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக வாகன ஓட்டிகள் உணர்ந்து மிக பாதுகாப்பாக வண்டியை ஓட்ட கூடும்.)

36) 20 செமீ குவிய தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து, ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில், முதல் மகிழுந்தின் ஆடியில் இருந்து பார்க்கும்போது இரண்டாவது மகிழுந்து எங்கு இருக்கும்?

A) 19.15 செமீ

B) 19.25 செமீ

C) 19.35 செமீ

D) 19.55 செமீ

(குறிப்பு – தீர்வு

பிம்பத்தின் இடத்தை ஆடி சமன்பாட்டை கொண்டு அறிதல்,

1/f = 1/u + 1/ v

1/20 = 1/(-600) + 1/v

1/v = 1/20 – 1/-600

1/v = 1/20 + 1/600

1/v = 30+1 / 600

1/v = 31 / 600

V = 600 /31

v = 19.35 செமீ.)

37) 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒளியின் வேகத்தை கணக்கிட முயன்ற அறிவியல் அறிஞர் யார்?

A) நியூட்டன்

B) ஆர்க்கிமிடிஸ்

C) கலிலியோ கலிலி

D) ரூதர்போர்டு

(குறிப்பு – 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிலியோ கலிலி (1564 – 1642) என்ற இத்தாலிய அறிவியல் அறிஞர் ஒளியின் வேகத்தை கணக்கிட முயன்றார். கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.)

38) ஓலே ரோமர் எந்த ஆண்டு வியாழன் கோளின் 12 நிலவுகளில் ஒன்றை அவதானித்து, ஒளியின் திசைவேகத்தை தோராயமாக கணக்கிட்டார்?

A) 1660 ஆம் ஆண்டு

B) 1665 ஆம் ஆண்டு

C) 1670 ஆம் ஆண்டு

D) 1675 ஆம் ஆண்டு

(குறிப்பு – ஓலே ரோமர் என்ற டேனியே வானியலாளர் 1665 ஆம் ஆண்டு வியாழன் கோளின் 12 நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன்மூலம் ஒளியின் திசைவேகத்தை தோராயமாக கணக்கிட்டார். இதன் மூலம் அவரது கணக்கீட்டின் படி ஒளியின் வேகம் கிட்டத்தட்ட 2,20,000 கிமீ / வி என அறியப்பட்டது.)

39) 1849 ஆம் ஆண்டு பூமியில் ஒளியின் வேகத்தை முதன்முதலாக கணக்கிட்டவர் யார்?

A) அர்மண்ட் ஃபிஷே

B) அர்மண்ட் வில்லியம்

C) அர்மண்ட் வியூபே

D) அர்மண்ட் கின்ஸ்

(குறிப்பு – 1849 ஆம் ஆண்டு, முதன்முதலாக ஆர்மண்ட் ஃபிஷே என்பவரால் பூமியில் (நிலத்தில்) ஒளியின் வேகம் கணக்கிடப்பட்டது. இன்று வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ஏறக்குறைய மிகச்சரியாக 3,00,000 கிமீ / வி என கணக்கிடப்பட்டுள்ளது.)

40) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சில உயிரினங்கள் இயல்பாகவே தங்களுக்குள் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளன.

II. கடலின் ஆழத்தில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன் போன்றவை தங்களை மற்ற உயிர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஒளிரும் அல்லது மின்னுகின்ற பண்பை பெற்றுள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சில உயிரினங்கள் இயல்பாகவே தங்களுக்குள் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளன. கடலின் ஆழத்தில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன் போன்றவை தங்களை மற்ற உயிர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஒளிரும் அல்லது மின்னுகின்ற பண்பை பெற்றுள்ளன. இந்தப் பண்பிற்கு உயிரி ஒளிர்தல் என்று பெயராகும். )

41) நேரான எழுதுகோல் ஒன்றை, 45° கோணத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள முகவையுள் வைத்து பார்க்கும் போது எழுதுகோல் எவ்வாறு தெரியும்?

A) நேராக தெரியும்

B) உடைந்தது போல தெரியும்

C) 90° வளைந்தது போல தெரியும்

D) இவை எல்லாமே தவறு

(குறிப்பு – நேரான எழுதுகோல் ஒன்றை, 45° கோணத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ள முகவையுள் வைத்து பார்க்கும் போது எழுதுகோல் உடைந்தது போல தெரியும். காரணம், காற்று தண்ணீர்இடைமுகப்பில் ஒளிவிலகல் ஆகும். ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு ஒளி சாய்வாக செல்லும்போது அதன் பாதையில் விலகல் ஏற்படுகிறது.)

42) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒளிபுகும் ஓர் ஊடகத்தின் இருந்து,மாறுபட்ட அடர்த்தி உடைய மற்றொரு ஒளிபுகும் ஊடககத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது.

II. அடர் குறை ஊடகத்தில் ஒளியின் திசை வேகம் அதிகமாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒளிபுகும் ஓர் ஊடகத்தின் இருந்து,மாறுபட்ட அடர்த்தி உடைய மற்றொரு ஒளிபுகும் ஊடககத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது. இவ்விலகளுக்கு (பாதையின் திசையில் மாறுபாடு) ஒளியின் திசை வேகத்தில் ஏற்படும் மாறுபாடே காரணமாகும். ஒளியின் திசைவேகம் அது செல்லும் ஊடகத்தின் தன்மையை பொறுத்தே அமைகிறது. அடர் குறை ஊடகத்தில் (அதாவது குறைந்த ஒளியியல் அடர்த்தி) ஒளியின் திசை வேகம் அதிகமாகவும் அடர்மிகு ஊடகத்தில் (அதிக ஒளியியல் அடர்த்தி) திசை வேகம் குறைவாகவும் இருக்கும்.)

43) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தில் ஒரு ஒளிக் கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது.

II.அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒரு ஒளிக்கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தில் ஒரு ஒளிக் கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை நோக்கி விலகல் அடைகிறது. அடர் மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு ஒரு ஒளிக்கதிர் செல்லும்போது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது. அடர்மிகு ஊடகத்தின் பரப்பிற்கு குத்தாக அதன்மீது படும் ஒளிக்கதிர் விலகல் அடைவதில்லை.)

44) ஒளி விலகல் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) நியூட்டன் விதி

B) பெல் விதி

C) ஸ்நெல் விதி

D) கூலும் விதி

(குறிப்பு – ஒளி விலகல் விதி ஸ்நெல் விதி என அழைக்கப்படுகிறது. விதி 1 : படுகதிர், விலகு கதிர், படு புள்ளியில் இரு ஒளி புகும் ஊடகங்களுக்கு இடையிலான தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன. விதி 2 : கொடுக்கப்பட்டுள்ள இரு ஊடகங்களுக்கு, குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு மாறிலி. i என்பது படுகோணம், ர் என்பது விலகு கோணம் எனில், sin i / sin r = மாறிலி ஆகும்.)

45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மாறிலி என்பது முதல் ஊடகத்தை பொறுத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளி விலகல் எண் எனப்படும்.

II. மாறிலி ‘ μ ‘ என்னும், கிரேக்க எழுத்தால் குறிக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மாறிலி ‘ μ ‘ என்னும், கிரேக்க எழுத்தால் குறிக்கப்படும். மாறிலி என்பது முதல் ஊடகத்தை பொறுத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளி விலகல் எண் எனப்படும் ( அதாவது 1μ2 என்று குறிக்கப்படும்.) இதற்கு அலகு இல்லை. ஏனெனில் இது இரு ஒத்த அளவுகளின் தகவு ஆகும்.)

46) கீழ்க்காணும் சமன்பாடுகளில் எது சரியானது?

A) μ = வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்

B) μ = வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் + ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்

C) μ = ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் / வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – வெவ்வேறு ஊடகங்களில் செல்லும் ஒளியின் திசைவேகத்தை பொருத்தும் ஒளிவிலகல் எண்ணை நாம் வரையறுக்க முடியும்.

அதாவது, μ = வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் / ஊடகத்தில் ஒளியின் திசைவேகம்

பொதுவாகக் கூறினால்

μ = ஊடகம் 1இல் ஒளியின் திசைவேகம் / ஊடகம் 2இல் ஒளியின் திசைவேகம் )

47) காற்றில் ஒலியின் திசைவேகம் 3 × 108 மீ/வி, கண்ணாடியில் 2 × 108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன?

A) 1.25

B) 1.5

C) 1.75

D) 2.0

(குறிப்பு – தீர்வு

μ = ஊடகம் 1இல் ஒளியின் திசைவேகம் / ஊடகம் 2இல் ஒளியின் திசைவேகம்

aμg = 3 × 108 / 2 × 108

aμg = 3 / 2

aμg = 1.5 ஆகும் )

48) அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளி செல்கிறது.படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45° மற்றும் 30° ஆகும். எனில் முதல் ஊடகத்தை பொருத்து இரண்டாவது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணை கணக்கீடுக.

A) 1.404

B) 1.414

C) 1.214

D) 1.314

(குறிப்பு – தீர்வு

1μ2 = sin i / sin r

1μ2 = sin 45° / sin 30°

1μ2 = (1√2) / (1/2)

1μ2 = √2

1μ2 = 1.414 )

49) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தை நோக்கி ஒளி செல்லும் போது, அது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது.

II. அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் போது, அடர் குறை ஊடகத்தில் அதன் விலகு கோணம் அதிகரிக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தை நோக்கி ஒளி செல்லும் போது, அது குத்துக்கோட்டை விட்டு விலகி செல்கிறது. அடர்மிகு ஊடகத்தில் படுகோணம் அதிகரிக்கும் போது, அடர் குறை ஊடகத்தில் அதன் விலகு கோணமும் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r = 90° என்ற பெருமை மதிப்பை அடைகிறது. இப்படுகோணமே மாறுநிலைக்கோணம் எனப்படும்.)

50) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. படு கோணத்தின் மதிப்பு, மாறு நிலை கோணத்தை விட அதிகமாக உள்ளபோது, விலகு கதிர் வெளியேறாது.

II. குறிப்பிட்ட படுகோணத்திற்கு விலகு கோணத்தின் மதிப்பு r = 90° என்ற பெருமை மதிப்பை அடையும்போது, இப்படுகோணமே மாறுநிலைக்கோணம் எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – படு கோணத்தின் மதிப்பு, மாறு நிலை கோணத்தை விட அதிகமாக உள்ளபோது, விலகு கதிர் வெளியேறாது. ஏனெனில் r = 90°. எனவே அதே ஊடகத்திலேயே ஒளி முழுவதுமாக எதிரொளிக்கப்படுகிறது. இதுவே முழு அக எதிரொளிப்பு ஆகும்.)

51) முழு அக எதிரொளிப்பிற்கான கீழ்க்காணும் நிபந்தனைகளுள் எது சரியானது?

I. ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.

II. அடர் மிகு ஊடகத்தில் படு கோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – முழு அக எதிரொளிப்பு ஏற்படுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் அவசியம். அவை ஒலியானது அடர் மிகு ஊடகத்தில் இருந்து (எ.கா தண்ணீர்) அடர் குறை ஊடகத்திற்கு (எ.கா காற்று) செல்ல வேண்டும். அடர்மிகு படுகோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.)

52) கீழ்கண்டவற்றுள் எது முழு அகஎதிரொளிப்பு ஆகும்?

I. கானல் நீர்

II. வைரம் ஜொலிப்பது

III. விண்மீன்கள் மின்னுவது.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் செல்லும்போது தொலைவில் தண்ணீர்த் திட்டுகள் தோன்றுவதை காணலாம்.இது ஒரு மாய தோற்றம் ஆகும். ஒளிக்கதிர் காற்றில் ஒளிவிலகல் அடைந்து குத்து கோட்டை விட்டு விலகல் அடைகிறது. மேலும் மாறுநிலை கோணத்தை விட படுகோணம் அதிகமாக இருப்பதால், முழு அக எதிரொலிப்பு அடைகிறது. எனவே கானல்நீர், வைரம் ஜொலிப்பது மற்றும் விண்மீன்கள் மின்னுவதற்கு காரணம் முழு அக எதிரொலிப்பே ஆகும்.)

53) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒளியிழைகள் என்பவை நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட பல கண்ணாடி இழைகளினால் உருவாக்கப்பட்ட, இழைக்கற்றைகள் ஆகும்.

II. நீண்ட தொலைவு களுக்கு ஒலி-ஒளி செய்திகளை அனுப்ப ஒளி இழைகள் பயன்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒளியிழைகள் (Optical fibre) என்பவை நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட பல கண்ணாடி இழைகளினால் உருவாக்கப்பட்ட, இழைக்கற்றைகள் ஆகும். ஒவ்வொரு இழையும் உள்ளகம் (core) மற்றும் பாதுகாப்பு உறை (Cladding) ஆகிய இரு பகுதிகளால் ஆனது. வெளியே உள்ள பாதுகாப்பு உறையின் ஒளிவிலகல் எண்ணை விட, உள்ளகப் பொருளின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருக்கும். ஒளியிழைகள் முழு அக எதிரொளிப்பின் அடிப்படையில் செயல்படுகின்றன.)

54) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒளி இழைகள் அதிக நெகிழும் தன்மை உடையவை.

II. ஒளி இழைகளில் ஒருமுனையில் அனுப்பப்படும் ஒளி செய்கை நெடுகிலும் பல முழு அக எதிரொளிப்புகளுக்கு உட்பட்டு, இறுதியாக மற்றோரு முனையில் வெளியேறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒளி இழைகள் அதிக நெகிழும் தன்மை உடையவை. ஒளி இழைகளில் ஒருமுனையில் அனுப்பப்படும் ஒளி செய்கை நெடுகிலும் பல முழு அக எதிரொளிப்புகளுக்கு உட்பட்டு, இறுதியாக மற்றோரு முனையில் வெளியேறும். பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளுக்கு பதிலாக சிறு கீறல்களின் மூலம், வேண்டிய சிகிச்சைகள் செய்திடவும், உடல் உள் உறுப்புகளை காணவும் இவை மருத்துவர்களுக்கு உதவுகின்றன.)

55) இழை ஒளியியலின் தந்தை என் கீழ்காணும் எந்த நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் அழைக்கப்படுகிறார்?

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ரஷ்யா

(குறிப்பு – இந்தியாவை சேர்ந்த நரிந்தர் கபானி என்ற இயற்பியலாளர் இழை ஒளியியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் 1956 ஆம் ஆண்டு Optical fibre என்னும் பதத்தை உருவாக்கினார்.)

9th Science Lesson 7 Questions in Tamil

7] வெப்பம்

1) ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது என்ன விளைவுகள் ஏற்படும்?

a) சுருங்குதல்

b) விரிவடையும்

c) உருகுதல்

d) கரைதல்

விளக்கம்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அந்தப் பொருளிலுள்ள மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெற்று அதிர்வடையத் தொடங்கும். இதனால் அருகில் இருக்கும் மூலக்கூறுகளும் அதிர்வடையத் தொடங்கும். எனவே விரிவடைதல் ஏற்படுகிறது.

2) கூற்று (கூ): வெயில் காலங்களில் அதிக வெப்ப ஆற்றல் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்கின்றது.

காரணம் (கா): இதனால் தான் இரயில் பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும்.

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அந்தப் பொருளிலுள்ள மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெற்று அதிர்வடையத் தொடங்கும். இதனால் அருகில் இருக்கும் மூலக்கூறுகளும் அதிர்வடையத் தொடங்கும். எனவே விரிவடைதல் ஏற்படுகிறது. வெயில் காலங்களில் அதிக வெப்ப ஆற்றல் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்கின்றது. இரயில் பாதைகளில் சிறிய இடைவெளி விடப்படிருக்கும்.

3) திட, திரவம், வாயு பொருட்களில் எந்த பொருள் வெப்பப்படுத்தும்போது அதிகமாக விரிவடைகிறது?

a) திடப்பொருட்கள்

b) திரவப் பொருட்கள்

c) வாயுப்பொருட்கள்

d) திடத்திரவ பொருட்கள்

விளக்கம்: திடப்பொருட்களை விட திரவப் பொருட்கள் அதிகமாக விரிவடையும். ஆனாலும், வாயுப்பொருட்கள் இவை இரண்டையும்விட அதிகமாக விரிவடையும். பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது அது நீராக மாறுகிறது. மேலும் வெப்பப்படுத்தினால் நீர் ஆவியாக மாறுகிறது. ஆகவே திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது திரவப்பொருளாக மாறுகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது அது வாயு நிலைக்கு மாறுகிறது. வெப்பநிலையைக் குறைக்கும் போது தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது.

4) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு?

i) ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அந்தப் பொருளிலுள்ள

மூலக்கூறின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது.மூலக்கூறுகள் அதிர்வடைவதால் பொருளின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

ii) பொருளை குளிர்விக்கும் போது வெப்ப ஆற்றல் வெளியேறி அதன் வெப்பநிலை குறைகிறது.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

விளக்கம் : ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது அந்தப் பொருளிலுள்ள மூலக்கூறின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. மூலக்கூறுகள் அதிர்வடைவதால் பொருளின் வெப்பநிலைஅதிகரிக்கிறது.பொருளை குளிர்விக்கும் போது வெப்ப ஆற்றல் வெளியேறி அதன் வெப்பநிலை குறைகிறது.

5) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

i) வெப்பம் ஒரு வகையானஆற்றலாக இருப்பதால் அது வேதியியல் மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

ii) வேதிவினைகளின் வேகத்தையும் வெப்ப ஆற்றலே தீர்மானிக்கிறது.

iii) வேதி வினைகள் தொடங்குவதற்கு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.

a) i), ii), iii), சரி

b) i), ii), iii), தவறு

c) i), ii), சரி

d) i), iii), தவறு

விளக்கம் : வெப்பம் ஒரு வகையான ஆற்றலாக இருப்பதால் அது வேதியியல் மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வேதி வினைகள் தொடங்குவதற்கு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது. அதுபோல வேதிவினைகளின் வேகத்தையும் வெப்ப ஆற்றலே தீர்மானிக்கிறது.

6) கூற்று (கூ) ஒரு கதிர்வீச்சு பொருளில் இருக்கும் வெப்பமானது அதே இடத்தில் தங்கி இருக்காது.

காரணம் (கா) அதிக வெப்பத்தில் இருக்கும் பொருட்கள் வெப்பத்தை இழந்து குளிர்வடையும். அதுபோல குளிர்ந்த பொருட்கள்சுற்றுப்புறத்தில் இருந்து வெப்பத்தைப் பெற்று வெப்பமடையும். rh

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம்: வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருட்களை ஒன்று சேர்த்தால், அதிக வெப்பநிலையில் இருக்கும் பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு வெப்ப ஆற்றல் பரவுகிறது.

7) வெப்பமானது எந்த மூன்று வழிகளில் பரவுகிறது.

i) வெப்பக் கடத்தல்

ii) வெப்பச் சலனம்

iii) வெப்பக் கதிர்வீச்சு

a) i), ii), iii), சரி

b) i), ii), iii) , தவறு

c) i), ii), சரி

d) i), iii), தவறு

விளக்கம் : வெப்பமானது மூன்று வழிகளில் பரவுகிறது.

வெப்பக் கடத்தல் ii) வெப்பச் சலனம் iii) வெப்பக் கதிர்விச்சு

8) திடப்பொருட்களில் மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்திருக்கும்?

a) மிகவும் நெருக்கமாகவும் இயக்கம் இல்லாமலும் அமைந்திருக்கும்.

b) மிகவும் நெருக்கமாக

c) இயக்கம் இல்லாமலும் அமைந்திருக்கும்.

d) இயக்கத்துடனும்

விளக்கம்: திடப்பொருட்களில் மூலக்கூறுகள் மிகவும் நெருக்கமாகவும் இயக்கம் இல்லாமலும் அமைந்திருக்கும். திடப்பொருளின் ஒரு முனையினை வெப்பப்படுத்தும் போது அந்த முனையில் இருக்கும் மூலக்கூறுகள் வெப்பஆற்றலை உட்கவர்ந்து தங்கள் நிலையில் இருந்துகொண்டே முன்னும் பின்னுமாக வேகமாக அதிர்வடைகின்றன.

9. கூற்று (கூ): திடப்பொருளின் ஒரு முனையினை வெப்பப்படுத்தும் போது அந்த முனையில் இருக்கும் மூலக்கூறுகள் வெப்பஆற்றலை உட்கவர்ந்து தங்கள் நிலையில் இருந்துகொண்டே முன்னும் பின்னுமாக வேகமாக அதிர்வடைகின்றன

காரணம் (கா): அதிர்வடையும் போது அருகில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு வெப்ப ஆற்றலைக் கடத்துகின்றன. இதனால் அருகிலிருக்கும் மூலக்கூறுகளும் அதிரத் தொடங்குகின்றன. திடப்பொருளில் இருக்கும் அனைத்து மூலக்கூறுகளும் வெப்ப ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் வரை இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம் : திடப்பொருளின் ஒரு முனையினை வெப்பப்படுத்தும் போது அந்த முனையில் இருக்கும் மூலக்கூறுகள் வெப்பஆற்றலை உட்கவர்ந்து தங்கள் நிலையில் இருந்துகொண்டே முன்னும் பின்னுமாக வேகமாக அதிர்வடைகின்றன. அதிர்வடையும் போது அருகில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு வெப்ப ஆற்றலைக் கடத்துகின்றன. இதனால் அருகிலிருக்கும்மூலக்கூறுகளும் அதிரத் தொடங்குகின்றன. திடப்பொருளில் இருக்கும் அனைத்து மூலக்கூறுகளும் வெப்ப ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் வரை இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

10) அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு

a) வெப்பக் கடத்தல்

b) வெப்ப சலனம்

C) வெப்பக் கதிர்விச்சு

d) வெப்பக் காற்று

விளக்கம் : அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் எனப்படும்.

11) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு?

i) உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள். அதனால் தான், அலுமினியப் பாத்திரங்களை சமையலுக்குப் பயன் படுத்துகிறோம்.

ii) பாதரசம் சிறந்த வெப்பக்கடத்தியாக இருப்பதால் அதை வெப்ப நிலைமானியில் பயன்

படுத்துகிறோம்.

iii) நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளை உடுத்துகிறோம். கம்பளி ஒரு அரிதிற் கடத்தி. எனவே உடலின் வெப்பத்தை வெளிப் புறத்திற்குக் கடத்தாமல் வைத்திருக்கும

a) i), ii), iii), சரி

b) i), ii), iii), தவறு

c) i), ii), சரி

d) i), iii), தவறு

விளக்கம்: உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள். அதனால்தான், அலுமினியப் பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். பாதரசம் சிறந்த வெப்பக்கடத்தியாக இருப்பதால் அதை வெப்ப நிலைமானியில் பயன்படுத்துகிறோம். நாம் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளை உடுத்துகிறோம். கம்பளி ஒரு அரிதிற் கடத்தி. எனவே உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்குக் கடத்தாமல் வைத்திருக்கும்.

12. கூற்று (கூ): வாயுக்களை வெப்பப்படுத்தும் போது வெப்ப மூலத்திற்கு அருகில் உள்ள மூலக்கூறுகள் முதலில் வெப்பமடைந்து விரிவடைகின்றன

காரணம் (கா): அதனால் அவற்றின் அடர்த்தி குறைகிறது. இத்தகைய மூலக்கூறுகள் மேலே செல்லச் செல்ல கனமான மூலக்கூறுகள் கீழே வெப்ப மூலத்திற்கு அருகில் வருகின்றன. இங்கு, மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுகிறது

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம் : வாயுக்களை வெப்பப்படுத்தும் போது வெப்பமூலத்திற்கு அருகில் உள்ள மூலக்கூறுகள் முதலில் வெப்பமடைந்து விரிவடைகின்றன. அதனால் அவற்றின் அடர்த்தி குறைகிறது. இத்தகைய மூலக்கூறுகள் மேலே செல்லச் செல்ல கனமான மூலக்கூறுகள் கீழே வெப்பமூலத்திற்கு அருகில் வருகின்றன. இங்கு, மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுகிறது.

13) ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை என்ன என்று கூறலாம்?

a) வெப்பக் கடத்தல்

b) வெப்பச் சலனம்

C) வெப்பக் கதிர்விச்சு

d) வெப்பக் காற்று

விளக்கம் : ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை வெப்பச் சலனம் எனலாம்.

14) கூற்று (கூ): சூடான காற்று பலூன்களின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று மூலக்கூறுகள் வெப்பமடைந்து மேல் நோக்கி நகரத் தொடங்கும்.

காரணம் (கா): இதனால் சூடானகாற்று பலூனின் உள்ளே நிரம்புகிறது. அடர்த்தி குறைந்த சூடான காற்றினால் பலூன் மேல்நோக்கிச் செல்கிறது சூடான காற்று மேல்நோக்கிச் செல்வதால் பலூனின் மேற்பகுதியில் இருக்கும் குளிர் காற்று கீழ்நோக்கி நகர்கிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

a) கூற்று (கூ) மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விளக்கம் : சூடான காற்று பலூன்களின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று மூலக்கூறுகள் வெப்பமடைந்து மேல் நோக்கி நகரத் தொடங்கும். இதனால் சூடானகாற்று பலூனின் உள்ளே நிரம்புகிறது. அடர்த்தி குறைந்த சூடான காற்றினால் பலூன் மேல்நோக்கிச் செல்கிறது. சூடான காற்று மேல்நோக்கிச் செல்வதால் பலூனின் மேற்பகுதியில் இருக்கும் குளிர் காற்று கீழ்நோக்கி நகர்கிறது. இந்தச்செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

15) பகல்நேரங்களில் நிலப்பரப்பு, கடல் நீரைவிட அதிகமாக சூடாகிறது. இதனால் நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்புகிறது, கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனை என்ன வென்று அழைக்கின்ரோம்?

a) கடல் காற்று

b) நிலக்காற்று

c) வெப்ப காற்று

d) மணல் காற்று

விளக்கம்: பகல்நேரங்களில் நிலப்பரப்பு, கடல் நீரைவிட அதிகமாக சூடாகிறது. இதனால் நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்புகிறது, கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனை கடல் காற்று என்கிறோம்.

16) இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரைவிட விரைவில் குளிர்வடைகிறது. கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது. இதனை என்ன வென்று அழைக்கின்ரோம்?

a) கடல் காற்று

b) நிலக்காற்று

c) வெப்ப காற்று

d) மணல் காற்று

விளக்கம்: இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரைவிட விரைவில் குளிர்வடைகிறது. கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது. இதனை நிலக்காற்று என்கிறோம்.

17) கீழ்கண்டவற்றில் எது காற்றோட்டத்தை உருவாக்குகிறது?

i) காற்றானது, அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து அழுத்தம் குறைவான பகுதிக்குச் செல்லும்.

ii) சூடானகாற்று மேலெழும்பிச் செல்வதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது.

iii) ஆகவே குளிர்ந்த காற்று அதிக அழுத்தப் பகுதியில் இருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி நகர்கிறது.

a) i), ii), iii), சரி

b) i), ii), iii), தவறு

c) i), ii), சரி

d) i), ii), தவறு

விளக்கம்: காற்றானது, அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து அழுத்தம் குறைவான பகுதிக்குச் செல்லும். சூடானகாற்று மேலெழும்பிச் செல்வதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது. ஆகவே குளிர்ந்த காற்று அதிக அழுத்தப் பகுதியில் இருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி நகர்கிறது. இதுவே காற்றோட்டத்தை உருவாக்குகிறது.

18) எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொறு இடத்திற்குப் பரவுவதை நாம் என்ன என்று அழைக்கின்றோம்?

a) வெப்பக் கடத்தல்

b) வெப்பச் சலனம்

C) வெப்பக் கதிர்விச்சு

d) வெப்ப ஆற்றல்

விளக்கம்: எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொறு இடத்திற்குப் பரவுவதை நாம் வெப்பக் கதிர்வீச்சு என்கிறோம்.

19) வெப்பக் கடத்தலும், வெப்பச் சலனமும் எங்கு நடைபெறாது?

a) வெற்றிடத்தில்

b) வெளிப்புறத்தில்

c) நிலப்பரப்பில்

d) கடல்ப்பரப்பில்

விளக்கம்: வெப்பக் கடத்தலும், வெப்பச் சலனமும் வெற்றிடத்தில் நடைபெறாது. அவைகள் நடைபெற பருப்பொருட்கள் தேவைப்படும். ஆனால் வெப்பக்கதிர் வீச்சு நடைபெற பருப்பொருட்கள் தேவையில்லை. இதனால் வெற்றிடத்தில் கூட வெப்பக்கதிர்வீச்சு நடைபெறும்.

20) வெப்பக் கடத்தலும், வெப்பச் சலனமும் நடைபெற எது தேவைப்படும்?

a) திடப்பொருட்கள்

b) திரவப் பொருட்கள்

c) வாயுப்பொருட்கள்

d) பருப்பொருட்கள்

விளக்கம்: வெப்பக் கடத்தலும், வெப்பச் சலனமும் வெற்றிடத்தில் நடைபெறாது. அவைகள் நடைபெற பருப்பொருட்கள் தேவைப்படும்.

21) வெப்பக்கதிர் வீச்சு நடைபெற இது தேவையில்லை?

a) திடப்பொருட்கள்

b) திரவப் பொருட்கள்

c) வாயுப்பொருட்கள்

d) பருப்பொருட்கள்

விளக்கம்: வெப்பக்கதிர் வீச்சு நடைபெற பருப்பொருட்கள் தேவையில்லை. இதனால் வெற்றிடத்தில் கூட வெப்பக்கதிர்வீச்சு நடைபெறும்.

22) கூற்று (கூ): வெப்பக் கதிர்வீச்சை ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாகவும் கருதலாம்.

காரணம் (கா): வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின் காந்த அலைகளாக பரவும் நிலையை வெப்பக்கதிர்வீச்சு என்கிறோம்.

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம் : வெப்பக் கதிர்வீச்சை ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாகவும் கருதலாம். வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின் காந்த அலைகளாக பரவும் நிலையை வெப்பக்கதிர்வீச்சு என்கிறோம்.

23) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு?

i) வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பான்கள் ஆகும். கோடை காலங்களில் அவை நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன.

ii) சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதியில் கறுப்பு நிற வண்ணத்தைப் பூசியிருப்பார்கள். கறுப்பு நிறமானது அதிக கதிர்வீச்சினை உட்கவரும்.

iii) விமானத்தின் புறப்பரப்பு மிகவும் பளபளப்பாகஇருக்கும். இதனால் சூரியனிலிருந்து விமானத்தின் மீது விழும் கதிர்வீச்சின் பெரும்பகுதியானது பிரதிபலிக்கப்படுகிறது.

a) i), ii), iii), சரி

b) i), ii), iii), தவறு

C) i), ii), சரி

d) i), ii), தவறு

விளக்கம்: வெள்ளை நிற ஆடைகள் சிறந்த வெப்பபிரதிபலிப்பான்கள் ஆகும். கோடை காலங்களில் அவை நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றன. சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதியில் கறுப்பு நிற வண்ணத்தைப் பூசியிருப்பார்கள். கறுப்பு நிறமானது அதிக கதிர்வீச்சினை உட்கவரும். விமானத்தின் புறப்பரப்பு மிகவும் பளபளப்பாக இருக்கும். இதனால் சூரியனிலிருந்து விமானத்தின் மீது விழும் கதிர்வீச்சின் பெரும்பகுதியானது பிரதிபலிக்கப்படுகிறது.

24) வெப்பநிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

a) ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைத்தான் நாம் வெப்பநிலை என்கிறோம்.

b) ஒரு பொருளின் வெப்பதின் அளவைத்தான் நாம் வெப்பநிலை என்கிறோம்.

c) ஒரு பொருளின் குளிர்ச்சியின் அளவைத்தான் நாம் வெப்பநிலை என்கிறோம்.

d) திடப்பொருட்களை கொண்டு

விளக்கம்: ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைத்தான் நாம் வெப்பநிலை என்கிறோம். ஒரு பொருளின் வெப்பம் அதிகரிக்கும் போது வெப்ப நிலையும் அதிகரிக்கும்.

25) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு?

i) வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K).

ii) தினசரி பயன்பாட்டில் செல்சியஸ் (˚C) என்ற அலகும் பயன்படுத்தப்படுகிறது.

a) i), ii), சரி

b) i), ii), தவறு

C) i) சரி

d) ii) சரி

விளக்கம்: வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K). தினசரி பயன்பாட்டில் செல்சியஸ் (˚C) என்ற அலகும் பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமானியின் உதவியுடன் வெப்பநிலை அளவிடப்படுகின்றது.

26) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு?

வெப்பநிலையை அளவிடுவதற்கு எந்த அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன?

i) ஃபாரன்ஹீட் அளவீடு

ii) செல்சியஸ் அல்லது சென்டிகிரேடு அளவீடு

iii) கெல்வின் அளவீடு அல்லது தனித்த அளவீடஎதனின் உதவியுடன் வெப்பநிலை அளவிடப்படுகின்றது?

a) i), ii), iii), சரி

b) i), ii), iii), தவறு

c) i), ii), சரி

d) i), iii), சரி

விளக்கம்: வெப்பநிலையை அளவிடுவதற்கு மூன்று அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

i. ஃபாரன்ஹீட் அளவீடு

ii. செல்சியஸ் அல்லது சென்டிகிரேடு அளவீடு

iii. கெல்வின் அளவீடு அல்லது தனித்த அளவீடஎதனின் உதவியுடன் வெப்பநிலை அளவிடப்படுகின்றது

27) பொருத்துக?

i) ஃபாரன்ஹீட் அளவீட்டன் உறைநிலைப் புள்ளி – 1) 32 ˚F

Ii) செல்சியஸ் அளவீட்டன் உறைநிலைப் புள்ளி – 2) 0˚C

Iii) ஃபாரன்ஹீட் அளவீட்டின் ஆவியாதல் புள்ளி – 3) 212 ˚F

iv) செல்சியஸ் அளவீட்டன் ஆவியாதல் புள்ளி – 4) 100 ˚C

(i), (ii), (iii), (iv),

a) 1 2 3 4

b) 2 4 3 1

c) 3 1 4 2

d) 4 3 2 1

விளக்கம்: ஃபாரன்ஹீட் அளவீட்டில் 32 ˚F உறைநிலைப் புள்ளியாகவும், 212 ˚F ஆவியாதல் புள்ளியாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. செல்சியஸ் அளவீடு: செல்சியஸ் அளவீட்டில் 0˚C உறைநிலைப் புள்ளியாகவும், 100 ˚C ஆவியாதல் புள்ளியாகவும் உள்ளது.

28) செல்சியஸ் அளவீட்டை ஃபாரன்ஹீட் அளவீடாக மாற்றுவதற்குத் தேவையான சமன்பாடு என்ன?

a) F = 9/5 C + 32

b) C = 5/9 (F – 32)

c) K = C + 273.15

d) F=K

விளக்கம்: செல்சியஸ் அளவீட்டை ஃபாரன்ஹீட் அளவீடாக மாற்றுவதற்குத் தேவையான சமன்பாடு:F=9/5 C+32

29) ஃபாரன்ஹீட் அளவீட்டை செல்சியஸ் அளவீடாக மாற்றுவதற்குத் தேவையான சமன்பாடு என்ன?

a) F = 9/5 C + 32

b) C = 5/9 (F – 32)

c) K = C + 273.15

d) F=K

விளக்கம்: ஃபாரன்ஹீட் அளவீட்டை செல்சியஸ் அளவீடாக மாற்றுவதற்குத் தேவையான சமன்பாடு: C = 5/9(F – 32)

30) கெல்வின் அளவீடு, எவ்வாறு வழங்கப்படுகிறது?

a) தனித்த அளவீடு

b) ஃபாரன்ஹீட் அளவீடு

c) செல்சியஸ் அளவீடு

d) சென்டிகிரேடு அளவீடு

விளக்கம்: கெல்வின் அளவீடு, தனித்த அளவீடு என்றும் வழங்கப்படுகிறது. கெல்வின் அளவீட்டில் 0 K என்பது தனிச்சுழி வெப்பநிலை ஆகும். ஒரு பொருளின் மூலக்கூறுகள் மிகக்குறைந்த ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருக்கும் வெப்பநிலை தனிச் சுழி வெப்பநிலை ஆகும்.

31) கெல்வின் அளவீட்டில் 0 K என்பது என்ன வெப்பநிலை?

a) தனிச் சுழி

b) நீரின் கொதிநிலை

c) பனிக்கட்டியின் உருகுநிலை

d) பொருளின் தன்மை

விளக்கம்: கெல்வின் அளவீட்டில் 0 K என்பது தனிச் சுழி வெப்பநிலை ஆகும். ஒரு பொருளின் மூலக்கூறுகள் மிகக்குறைந்த ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருக்கும் வெப்பநிலை தனிச் சுழி வெப்பநிலை ஆகும்.

32. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு?

i) ஒரு பொருளின் மூலக்கூறுகள்மிகக்குறைந்த ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருக்கும் வெப்பநிலை தனிச் சுழி வெப்பநிலை ஆகும்.

ii) 273.16 K வெப்பநிலையில் நீரின் திட, திரவ மற்றும் வாயு நிலைகள் ஒன்றிணைந்து காணப்படும்.

iii) நீரின் மும்மைப் புள்ளியின் 1/273.15 பங்கு ஒரு கெல்வின் ஆகும்.

iv) செல்சியஸ் மற்றும் கெல்வின் அளவீடுகளிடையேயான தொடர்பு: K = C + 273.15

a) (i), (ii), (iii), (iv), சரி

b) (i), (ii), (iii), (iv), தவறு

c) (i), (ii), (iii), சரி

d) (i), (ii), தவறு

விளக்கம்: ஒரு பொருளின் மூலக்கூறுகள் மிகக்குறைந்த ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருக்கும் வெப்பநிலை தனிச் சுழி வெப்பநிலை ஆகும். 273.16 K வெப்பநிலையில் நீரின் திட, திரவ மற்றும் வாயு நிலைகள் ஒன்றிணைந்து காணப்படும். நீரின் மும்மைப் புள்ளியின் 1/273.15 பங்கு ஒரு கெல்வின் ஆகும். செல்சியஸ் மற்றும் கெல்வின் அளவீடுகளிடையேயான தொடர்பு: K = C + 273.15

33) ஒரு வாயுவின் அழுத்தமும் கன அளவும் கருத்தியலில் சுழியாக மாறும் வெப்பநிலைக்கு என்ன பெயர்?

a) தனிச் சுழி வெப்பநிலை

b) நீரின் கொதிநிலை

c) பனிக்கட்டியின் உருகுநிலை

d) பொருளின் தன்மை

விளக்கம்: ஒரு வாயுவின் அழுத்தமும் கன அளவும் கருத்தியலில் சுழியாக மாறும் வெப்பநிலைக்கு தனிச் சுழி வெப்பநிலை என்று பெயர். அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தமும் -273.15˚ வெப்பநிலையில் சுழியாகிவிடும். இதனைத் தான் தனிச் சுழி வெப்பநிலை அல்லது 0 K என்கிறோம்.

34) அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தமும் எந்த வெப்பநிலையில் சுழியாகிவிடும்?

a) -273.15˚C

b) +273.15˚C

C) 100 ˚C

d) 0 ˚C

விளக்கம்: அனைத்து வகையான வாயுக்களின் அழுத்தமும் 273.15˚C வெப்பநிலையில் சுழியாகிவிடும். இதனைத் தான் தனிச் சுழி வெப்பநிலை அல்லது 0 K என்கிறோம்.

35) பொருத்துக?

A) நீரின் கொதிநிலை வெப்பநிலை கெல்வின் – 1) 373.15

B) பனிக்கட்டியின் உருகுநிலை வெப்பநிலை கெல்வின் – 2) 273.15

C) தனிச் சுழி வெப்பநிலை கெல்வின் – 3) 0

D) நீரின் கொதிநிலை வெப்பநிலை செல்சியஸ் – 4) 100

(A), (B) (C), (D),

a) 1 2 3 4

b) 2 4 3 1

c) 3 1 4 2

d) 4 3 2 1

36) கூற்று (கூ): பூமியின் நிலப்பரப்பு காலை நேரங்களில் குளிர்ச்சியாகவும் மதிய வேளைகளில் சூடாகவும் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் ஏரியில் இருக்கும் தண்ணீரின் மேற்பரப்பு காலையிலும் மதிய வேளையிலும் ஓரளவுக்கு ஒரே வெப்பநிலையில் தான் இருக்கும்.

காரணம் (கா): நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் சூரியனிடமிருந்து ஒரே அளவில் வெப்பத்தைப் பெற்றாலும் அவற்றின் வெப்பநிலைகள் மாறுகின்றன. வெப்பத்தை உட்கவரும் மற்றும் வெளிவிடும் பண்புகள் இரண்டிற்கும் வேறுபடுகின்றன.

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம்: பூமியின் நிலப்பரப்பு காலை நேரங்களில் குளிர்ச்சியாகவும் மதிய வேளைகளில் சூடாகவும் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் ஏரியில் இருக்கும் தண்ணீரின் மேற்பரப்பு காலையிலும் மதிய வேளையிலும் ஓரளவுக்கு ஒரே வெப்பநிலையில் தான் இருக்கும். நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும் சூரியனிடமிருந்து ஒரே அளவில் வெப்பத்தைப் பெற்றாலும் அவற்றின் வெப்பநிலைகள் மாறுகின்றன. வெப்பத்தை உட்கவரும் மற்றும் வெளிவிடும் பண்புகள் இரண்டிற்கும் வேறுபடுகின்றன.

37) வெப்பத்தை வெளிவிடும் அல்லது உட்கவரும் பண்பு கீழ்கண்ட எந்த காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது?

1. பொருளின் நிறை

2. பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு.

3. பொருளின் தன்மை.

a) 1, 2, 3 சரி

b) 1, 2, 3 தவறு

c) 1, 2, சரி

d) 1, 3, சரி

விளக்கம்: வெப்பத்தை வெளிவிடும் அல்லது உட்கவரும் பண்பு மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

1. பொருளின் நிறை 2. பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு. 3. பொருளின் தன்மை.

38) தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு என்ன?

a) Jkg-1 K-1

b) F = 9/5 C + 32

c) C = 5/9 (F – 32)

d) K = C + 273.15

விளக்கம்: தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு Jkg-1 K-1 ஆகும். J/kg°C மற்றும் J/g°C அலகுகளையும் பயன்படுத்துவோம்.

39) எல்லா விதமான பொருட்களிலும் அதிக தன் வெப்ப ஏற்புத் திறன் கொண்ட பொருள் என்ன?

a) நீர்

b) வாயு

c) மண்

d) மரம்

விளக்கம்: எல்லா விதமான பொருட்களிலும் அதிக தன் வெப்ப ஏற்புத் திறன் கொண்ட பொருள் நீர். நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் 4200 J/kg°C எனவே, தன்னுடைய வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக்கொள்ளும். அதனால்தான் வாகனங்களில் இருக்கும் வெப்பம் தணிக்கும் அமைவுகளில் நீர் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.

40) நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் என்ன?

a) 4200 J/kg°C

b) 4000 J/kgC

c) 3800 J/kg°C

d) 6000 J/kg°C

விளக்கம்: நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் 4200 J/kg°C. தன்னுடைய வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக்கொள்ளும்.

41) கூற்று (கூ): வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக்கொள்ளும்.

காரணம் (கா): அதனால்தான் வாகனங்களில் இருக்கும் வெப்பம் தணிக்கும் அமைவுகளில் நீர் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்தொழிற்சாலைகளிலும் இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தைத் தணிப்பதற்கும் நீர் பயன்படுகிறது.

a) கூற்று மற்றும் காரணம் (கா) இரண்டுமே சரி, கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது.

b) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.

c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விளக்கம் : வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக்கொள்ளும். அதனால்தான் வாகனங்களில் இருக்கும் வெப்பம் தணிக்கும் அமைவுகளில் நீர் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகளிலும் இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தைத் தணிப்பதற்கும் நீர் பயன்படுகிறது.

42) ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளை 1°C வெப்பநிலைக்கு உயர்த்துவதற்குக் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் என்ன?

a) தன் வெப்ப ஏற்புத் திறன்

b) பொருளின் நிறை

c) பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு.

d) பொருளின் தன்மை.

விளக்கம்: ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளை 1°C வெப்பநிலைக்கு உயர்த்துவதற்குக் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் தன் வெப்ப ஏற்புத் திறன். ஒரு பொருளின் நிறை முழுவதையும் 1°C வெப்பநிலைக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் வெப்ப ஏற்புத் திறன் ஆகும்.

43) வெப்ப ஏற்புத் திறனின் SI அலகு என்ன?

a) J/K.

b) Jkg-1 K-1

c) K

d) C

விளக்கம்: வெப்ப ஏற்புத் திறனின் SI அலகு J/K. இதனை cal/°C, kcal/°C அல்லது J/°C எனவும் குறிப்பிடலாம்.

44) பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வு என்ன?

a) நிலை மாற்றம்

b) பொருள் மாற்றம்

c) வெப்ப ஏற்புத் திறன்.

d) பொருளின் தன்மை

விளக்கம்: பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலை மாற்றம் என்கிறோம்.

C:\Users\hp\Downloads\IMG_20201118_122747.jpg

45) ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு என்ன?

a) உருகுதல்

b) உறைதல்

c) ஆவியாதல்

d) குளிர்தல்

விளக்கம்: ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உருகுதல் ஆகும்.

46. ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவ நிலையில் இருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்வு என்ன?

a) உருகுதல்

b) உறைதல்

c) ஆவியாதல்

d) குளிர்தல்

விளக்கம்: ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவ நிலையில் இருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்வு உறைதல் ஆகும். ஒரு திடப்பொருள் தன் நிலையை திரவநிலைக்கு மாற்றும் வெப்பநிலை உருகுநிலை எனப்படும். இதன் மாறுதிசை நிலைமாற்றம் உறைதல் ஆகும்.

47) நீரைப் பொறுத்தவரை உருகுநிலை மற்றும் உறைநிலை இரண்டும் ——–ஆகும்.

a) -273.15˚C

b) +273.15˚C

C) 100 ˚C

d) 0 ˚C

விளக்கம்: வெப்பநிலையில் திரவப்பொருள் திடப்பொருளாக மாறுகிறதோ அந்த வெப்பநிலை உறைநிலை ஆகும். நீரைப் பொறுத்தவரை உருகுநிலை மற்றும் உறைநிலை இரண்டும் 0°C ஆகும்.

48) ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு என்ன?

a) உருகுதல்

b) உறைதல்

c) ஆவியாதல்

d) குளிர்தல்

விளக்கம்: ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும். எந்த வெப்பநிலையில் திரவப்பொருள் வாயுநிலைக்கு மாறுகிறதோ அந்த வெப்பநிலை அதன் கொதிநிலை ஆகும்.

49) வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவமாக மாறும் நிகழ்வு என்ன?

a) உருகுதல்

b) உறைதல்

c) ஆவியாதல்

d) குளிர்தல்

விளக்கம்: வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவமாக மாறும் நிகழ்வு குளிர்தல் ஆகும். எந்த வெப்பநிலையில் வாயு தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றுகிறதோ அந்த வெப்பநிலை ஒடுக்க நிலை ஆகும். நீருக்கு கொதிநிலையும் ஒடுக்க நிலையும் 100°C ஆகும்.

50) எந்த வெப்பநிலையில் வாயு தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றுகிறதோ அந்த வெப்பநிலை என்ன?

a) ஒடுக்க நிலை

b) நீரின் கொதிநிலை

c) பனிக்கட்டியின் உருகுநிலை

d) ஆவியாதல்

விளக்கம்: எந்த வெப்பநிலையில் வாயு தன் நிலையை திரவ நிலைக்கு மாற்றுகிறதோ அந்த வெப்பநிலை ஒடுக்க நிலை ஆகும்.

51) நேரடியாக வாயு நிலைக்கு மாறும் திடப்பொருட்கள் யாவை?

a) உலர் பனிக்கட்டி, அயோடின், உறைந்த கார்பன்டைஆக்சைடு, நாப்தலின்.

b) மண்

c) மரம்

d) காற்று

விளக்கம்: உலர் பனிக்கட்டி, அயோடின், உறைந்த கார்பன் டைஆக்சைடு, நாப்தலின் போன்ற திடப்பொருட்களை வெப்பப்படுத்தும் போது திரவ நிலைக்கு மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறிவிடுகின்றன.

52) வெப்பப்படுத்தும் போது திடப்பொருட்கள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு என்ன?

a) பதங்கமாதல்

b) உறைதல்

c) ஆவியாதல்

d) குளிர்தல்

விளக்கம்: வெப்பப்படுத்தும் போது திடப்பொருட்கள் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு பதங்கமாதல் எனப்படுகிறது. வெப்பநிலை மாறும்பொழுது வெப்பத்தின் அளவைப் பொறுத்து ஒரு பொருளின் நிலைமாற்றத்தின் வெவ்வேறு படிநிலைகள்.

53) வெப்பநிலை மாறாத நிலையில் ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல் என்ன?

a) உள்ளுறை வெப்பம்

b) தன் உள்ளுறை வெப்பம

c) பதங்கமாதல்

d) குளிர்தல்

விளக்கம்: வெப்பநிலை மாறாத நிலையில் ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல் உள்ளுறை வெப்பம் ஆகும்.

54) ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது வெப்பநிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றல் என்ன?

a) உள்ளுறை வெப்பம்

b) தன் உள்ளுறை வெப்பம்

c) பதங்கமாதல்

d) குளிர்தல்

விளக்கம்: ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது வெப்பநிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றல் தன் உள்ளுறை வெப்பநிலை ஆகும்.

55) தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு என்ன?

a) J/kg

b) கெல்வின் (K).

c) J/K

d) JKg-1 K-1

விளக்கம்: ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது வெப்பநிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றல் தன் உள்ளுறை வெப்பநிலை ஆகும். தன் உள்ளுறை வெப்பத்தின் SI அலகு J/kg.

9th Science Lesson 8 Questions in Tamil

8] ஒலி

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒலியானது ஒரு வித ஆற்றல் ஆகும்.

II. அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர்வடைவதால் உண்டாகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒலியானது ஒருவித ஆற்றலாகும். அது நமது செவியை அடையும்போது உணர்வை ஏற்படுத்துகின்றது. அனைத்து ஒலிகளும் பொருட்கள் அதிர்வடைவதாலேயே உண்டாகின்றன. இந்த அதிர்வுகள் ஒரு ஊடகத்தின் வழியே ஆற்றலாக பரவி நம் செவியை அடைகின்றன.)

2) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மனிதர்களால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டுணர முடியும்.

II. ஒலியின் சுரப்பண்பும் (quality) ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறாக இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மனிதனின் செவிகளால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டு உணர முடியும். ஒலியின் செறிவானது ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருந்தால் அந்த ஒலியை நம் செவிகள் கேட்க இயலாது. ஒலியின் சுரப்பண்பும் (quality) ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறாக இருக்கும்.)

3) ஒலி அலைகள் கீழ்காணும் எவற்றின் மூலம் பரவும்?

I. காற்று

II. நீர்

III. எஃகு

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒலி அலைகள் பரவுவதற்கு காற்று, நீர், எஃகு போன்ற பொருள்கள் தேவை. ஒளி அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியாது. இதனை மணிச்சாடி போதனை மூலம் விளக்க முடியும்.)

4) மணிச்சாடி கீழ்க்கண்டவற்றுள் எதனை கொண்டிருக்கும்?

I. நூல்

II. மின்சார மணி

III. வெற்றிடமாக்கும் பம்பு

IV. தக்கை

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – ஒரு மின்சார மணி மற்றும் ஒரு மணிச்சாடியை எடுத்துக் கொள்வோம். மின்சார மணியானது காற்றுப்புகாத மணிச்சாடியினுள் பொருத்தப்பட்டுள்ளது. மணியை ஒலிக்க செய்யும் போது நாம் ஒலியைக் கேட்க முடியும். வெற்றிடமாக்கும் பம்பின் மூலம் ஜாடியில் உள்ள காற்றை சிறிது சிறிதாக வெளியேற்றும் போது, ஒலியின் அளவு சிறிது சிறிதாகக் குறைகிறது. இது வெற்றிடத்தில் ஒலி பரவாது என்பதை காட்டுகிறது.)

5) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒலியானது ஒலி மூலத்திலிருந்து ஒரு ஊடகத்தின் வழியே கேட்பவரின் செவியை சென்றடைகிறது.

II. பொருள் அதிர்வடையும்போது, அது அதனை சுற்றியுள்ள ஊடகத்தின் துகள்களையும் அதிர்வடைய செய்கிறது.

III. எனினும் ஊடகத்தின் துகள்கள் இடம்பெயர்வதில்லை.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒலியானது ஒலி மூலத்திலிருந்து ஒரு ஊடகத்தின் வழியே கேட்பவரின் செவியை சென்றடைகிறது. பொருள் அதிர்வடையும்போது, அது அதனை சுற்றியுள்ள ஊடகத்தின் துகள்களையும் அதிர்வடைய செய்கிறது. எனினும் ஊடகத்தின் துகள்கள் இடம்பெயர்வதில்லை. ஒலி மூலத்திலிருந்து அதன் பாதிப்பு மட்டுமே இலக்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.)

6) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பொருள் ஒன்று அதிர்வடையும் போது, அந்த பொருளிற்கு அருகிலுள்ள துகளானது தனது சமநிலை புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது. இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையை செலுத்தி, அதன் காரணமாக அருகில் உள்ள துகள் தனது ஓய்வு நிலையில் இருந்து நகர்ந்து செல்கிறது.

II. அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்த பின்னர் முதல் தனது பழைய நிலையை வந்தடையும். ஒலியானது நமது செவியை அடையும் வரை இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பொருள் ஒன்று அதிர்வடையும் போது, அந்த பொருளிற்கு அருகிலுள்ள துகளானது தனது சமநிலை புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது. இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையை செலுத்தி, அதன் காரணமாக அருகில் உள்ள துகள் தனது ஓய்வு நிலையில் இருந்து நகர்ந்து செல்கிறது. அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடையச் செய்த பின்னர் முதல் தனது பழைய நிலையை வந்தடையும். ஒலியானது நமது செவியை அடையும் வரை இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒலி மூலத்தினால் உருவாகும் பாதிப்பு மட்டுமே செல்கிறது. ஆனால் துகள்கள் அதே நிலையில்தான் இருக்கிறது.)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஊடகத்தில் உள்ள அனைத்து துகள்களும் தங்களது சமநிலை புள்ளியிலிருந்து அதிர்வு எனப்படும் முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளும்.

II. அதிர்வானது முன்னோக்கி செல்லும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஊடகத்தில் உள்ள அனைத்து துகள்களும் தங்களது சமநிலை புள்ளியிலிருந்து அதிர்வு எனப்படும் முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளும். இதனால் அதிர்வானது முன்னோக்கி செல்கின்றது. முன்னோக்கி செல்லும் அதிர்வு அலை என அழைக்கப்படுகிறது.)

8) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன.

II. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு கம்பி சுருளின் சில பகுதிகளில் சுருள்கள் நெருக்கமாகவும், சில பகுதிகளில் நெகிழ்ச்சியாகவும் இருப்பதை காணமுடியும். கம்பிச்சுருள் அதிர்வுறும்போது நெருக்கமும், நெகிழ்வும் கம்பிகளின் வழியே நகர்ந்து செல்லும். இவ்வாறு நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன)

9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒலி என்பது ஒரு நெட்டலையாகும்

II. ஊடகத்தில் உள்ள துகள்கள் நெருக்கமும் நெகிழ்ச்சியும் அடையும் போது அதன் வழியே ஒலி அலைகள் செல்ல முடிகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நெருக்கமும், நெகிழ்ச்சியுமாக செல்லும் அலைகள் நெட்டலைகள் என அழைக்கப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுன்றன. ஒலி என்பது ஒரு நெட்டலையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள் நெருக்கமும், நெகிழ்ச்சியும் அடையும் போதுதான் அதன் வழியே ஒலி அலைகள் செல்ல முடியும். நெடுக்கும் என்பது துகள்கள் அருகருகே இருக்கும் பகுதியாகும். நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும்.)

10) ஒரு ஒலியலையை முழுமையாக வரையறுக்க கீழ்க்கண்டவற்றுள் எவை தேவை?

I. வீச்சு

II. அதிர்வெண்

III. அலைவுக்காலம்.

IV. அலைநீளம்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வீச்சு, அதிர்வெண், அலைவுக்காலம், அலைநீளம் மற்றும் வேகம் அல்லது திசைவேகம் ஆகிய பண்புகளைக் கொண்டு ஒரு ஒலி அலையை முழுமையாக வரையறுக்க முடியும்.)

11) வீச்சு என்பதன் பொருள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும்.

II. வீச்சு அதிகமாக இருந்தால், ஒலி உரத்த ஒலியாகவும், வீச்சு குறைவாக இருந்தால் மென்மையான ஒலியாகவும் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும். வீச்சு அதிகமாக இருந்தால், ஒலி உரத்த ஒலியாகவும், வீச்சு குறைவாக இருந்தால் மென்மையான ஒலியாகவும் இருக்கும். வீச்சின் SI அலகு மீட்டர் ( மீ ) ஆகும்.)

12) வீச்சு, எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?

A) A

B) P

C) V

D) S

(குறிப்பு – ஒலி அலையானது, ஒரு ஊடகத்தின் வழியே செல்லும் போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியில் இருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி, வீச்சு எனப்படும். வீச்சானது ‘A’ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. இதன் SI அலகு மீட்டர் (மீ) ஆகும்.)

13) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அதிர்வு அடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது, அதிர்வெண் என அழைக்கப்படுகிறது.

II. அதிவெண்ணானது ‘t’ என்னும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அதிர்வு அடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது, அதிர்வெண் என அழைக்கப்படுகிறது. அதிவெண்ணானது ‘n’ என்னும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz) அல்லது செ-1 ஆகும்.)

14) மனிதனின் செவிகள் எந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகளை மட்டும் கேட்டுணரமுடியும்?

A) 20 Hz முதல் 20,000 Hz வரை

B) 100 Hz முதல் 20,000 Hz வரை

C) 300 Hz முதல் 20,000 Hz வரை

D) 720 Hz முதல் 20,000 Hz வரை

(குறிப்பு – 20 Hz முதல் 20,000 Hz வரையிலான அதிர்வெண்கள் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் செவிகள் கேட்டுணர முடியும். 20 Hz க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் குற்றொலிகள் எனப்படும். அதிர்வெண் 20,000 Hz க்கு அதிகமான ஒலி, மிகை ஒலி அல்லது மீயோலி எனப்படும்.)

15) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அலைவுக்காலத்தின் SI அலகு வினாடி ஆகும்.

II. அலைவுக்காலம் மற்றும் அதிர்வெண் ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர் விகிதத்தில் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அதிர்வுறும் துகள், ஒரு முழுமையான அதிர்வுக்கு எடுத்துக்கொள்ளும் காலம், அலைவுக்காலம் எனப்படும். இது ‘T’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு, வினாடி ஆகும். அலைவுக்காலம் மற்றும் அதிர்வெண் ஆகியவை ஒன்றுக்கொன்று எதிர் விகிதத்தில் உள்ளன.)

16) அலைநீளம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இது λ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.

II. அலைநீளத்தின் SI அலகு மீட்டர் (மீ) ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அதிர்வுறும் துகளொன்று, ஒரு அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில் அலை பரவும் தொலைவு அலைநீளம் எனப்படும். ஒரு ஒலி அலையில் இரண்டு நெருக்கங்கள் மற்றும் நெகிழ்வுகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவே ஒரு அலைநீளம் எனப்படும். அலைநீளமானது, λ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.)

17) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு திசைவேகம் அல்லது வேகம் எனப்படும்.

II. ஒலியின் திசைவேகம் அல்லது வேகம் ‘V’ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு வினாடி நேரத்தில் ஒலி அலை கடக்கும் தொலைவு திசைவேகம் அல்லது வேகம் எனப்படும். ஒலியின் திசைவேகம் அல்லது வேகம் ‘V’ என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. இதன் SI அலகு மீ வி-1 ஆகும்.)

18) ஒலியை கீழ்காணும் எந்த காரணியை கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்த முடியும்?

I. ஒலி உரப்பு மற்றும் ஒலி செறிவு

II. சுருதி

III. தரம்

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒலிகளை பின்வரும் காரணிகளைக் கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்த முடியும். அவை, ஒலி உரப்பு மற்றும் ஒலி செறிவு, சுருதி மற்றும் தரம் என்பனவாகும்.)

19) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒலியின் உரப்பு பண்பானது அதன் செறிவை சார்ந்து இருக்கிறது

II. ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாக செல்லும் ஆற்றலின் அளவு செறிவு என வரையறுக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒலியின் உரப்பு பண்பானது அதன் செறிவை சார்ந்து இருக்கிறது. ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாக செல்லும் ஆற்றலின் அளவு செறிவு என வரையறுக்கப்படுகிறது. ஒலியின் செறிவானது டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது.)

20) ஒலியின் செறிவானது கீழ்காணும் எந்த காரணிகளை சார்ந்துள்ளது?

I. ஒலி மூலத்தின் வீச்சு

II. ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே உள்ள தொலைவு

III. ஒலி மூலத்தின் மரபு

IV. ஊடகத்தின் அடர்த்தி

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஓரிடத்தில் கேட்கும் ஒலியின் செறிவானது பின்வரும் காரணிகளை சார்ந்துள்ளது. அவை, ஒலி மூலத்தின் வீச்சு, ஒலி மூலத்திற்கும் கேட்பவருக்கும் இடையே உள்ள தொலைவு, ஒலி மூலத்தின் பரப்பு, ஊடகத்தின் அடர்த்தி மற்றும் ஒலிமூலத்தின் அதிர்வெண் என்பன ஆகும்.)

21) யாருடைய நினைவாக ஒலியின் செறிவானது டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது?

A) கிரஹாம் பெல்

B) வில்லியம் பெல்

C) கேம்பெல்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – தொலைப்பேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் ஆவார். அவருடைய நினைவாக ஒலியின் செறிவானது டெசிபெல் (dB) என்ற அலகால் அளவிடப்படுகிறது.)

22) பொருத்துக

I. ராக்கெட் ஏவுதல் – a) 60 dB

II. உரையாடல் – b) 180 dB

III. கொதிகலன் தொழிற்சாலை – c) 140 dB

IV. ஜெட் விமானம் புறப்படும் ஒலி – d) 100 dB

A) I-b, II-a, III-d, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-d, III-a, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – ஒலியின் செறிவானது 120 dB விட அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்தும். இலை சருகின் சப்தம் 10dB ஆகும். அமைதியான அறை 20dB கொண்டிருக்கும். மெதுவாக பேசுதல் 30dB அளவில் இருக்கும். ராக்கெட் ஏவுதல் 180dB இருக்கும்.)

23) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சுருதி என்பது ஒலியானது கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பாகும்.

II. அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலாகவும் குறைந்த சுருதி கொண்ட ஒலிகள் கனத்ததாகவும் இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சுருதி என்பது ஒலியானது கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் ஒலியின் பண்பாகும். அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலாகவும் குறைந்த சுருதி கொண்ட ஒலிகள் கனத்ததாகவும் இருக்கும். இரண்டு இசைக் கருவிகளால் எழுப்பப்படும் ஒரே வீச்சை இந்த இரண்டு ஒலிகள் வேறுபட்ட அதிர்வெண்களை கொண்டிருந்தால், அவை ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.)

24) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இரண்டு வெவ்வேறு இசைக் கருவிகளால் எழுப்பப்பட்ட ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்துவதற்கு தரம் என்ற பண்பு பயன்படுகிறது.

II. ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒலி, தொனி (tone) என்று அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இரண்டு வெவ்வேறு இசைக் கருவிகளால் எழுப்பப்பட்ட ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்துவதற்கு தரம் என்ற பண்பு பயன்படுகிறது. ஒரே ஒரு அதிர்வெண்ணை கொண்ட ஒலி, தொனி (tone) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு தொனிகளின் தொகுப்பு இசைக்குறிப்பு (Note) என்று அழைக்கப்படுகிறது. தொனி என்பதன் வேறு பெயர் சுரம் (Timre) என்பதாகும்.)

25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மீட்சித்தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது, ஒலியானது ஓரளவு காலத்தில் கடந்த தொலைவே ஒலியின் வேகம் என்று அழைக்கப்படுகிறது

II. ஒலியின் வேகம் = λ / T என்று வழங்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மீட்சித்தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது, ஒலியானது ஓரளவு காலத்தில் கடந்த தொலைவே ஒலியின் வேகம் என்று அழைக்கப்படுகிறது.

வேகம் (v) = ஒரு அலைநீளம் (λ) / ஒரு அலைவுகாலம் (T).

வேகம் (v) = λ / T [ T = 1 / n ]

வேகம் (v) = n λ. )

26) ஒரு ஒலி அலையின் அதிர்வெண் 2 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 5 செமீ எனில் 1.5 கிமீ தூரத்தை கடக்க, அது எடுத்து கொள்ளும் காலம் என்ன?

A) 5 வி

B) 10 வி

C) 15 வி

D) 20 வி

(குறிப்பு – வேகம் = n λ

n = 2000 ஹெர்ட்ஸ், λ = 0.15 மீ

v = 0.15 × 2000 = 300 மீ செ-1

வேகம் (v) = 1500 / 300 = 5 வி )

27) 20°C வெப்பநிலையில் 22 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலியின் அலைநீளம் என்ன?

A) 15.64 × 10-6 m

B) 18.64 × 10-6 m

C) 19.64 × 10-6 m

D) 21.64 × 10-6 m

(குறிப்பு – λ = v / n

இங்கே, v = 344 ms-1

n = 22 Mhz = 22 × 106 Hz

λ = 344 / 22 × 106

λ = 15.64 × 10-6 m

λ = 15.64 μm.]

28) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பரவுகிறது.

II. வானத்தில் இடி இடிக்கும் போது முதலில் மின்னலை காண்கிறோம், பின்னர் இடி ஒலியை கேட்கிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பரவுகிறது. வானத்தில் இடி இடிக்கும் போது முதலில் மின்னலை காண்கிறோம், பின்னர் இடி ஒலியை கேட்கிறோம். ஆகவே ஒலியானது ஒளியைவிட மிக குறைவான வேகத்திலேயே செல்கிறது என்பதை நாம் அறியமுடிகிறது.)

29) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒலியின் வேகமானது, திடப்பொருளைவிட வாயுவில் மிக குறைவாக இருக்கும்.

II. எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒலியின் வேகமானது, திடப்பொருளைவிட வாயுவில் மிக குறைவாக இருக்கும். எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும். உதாரணமாக, காற்றில் 0°C வெப்பநிலையில் ஒலியின் வேகம் 330 மீ வி-1 ஆகும்.)

30) 25°C வெப்பநிலையில் ஊடகத்தின் வேகத்தை பொருத்துக.

I. அலுமினியம் – a) 6040 மீவி-1

II. நிக்கல் – b) 6420 மீவி-1

III. எஃகு – c) 5950 மீவி-1

IV. இரும்பு – d) 5960 மீவி-1

A) I-b, II-a, III-d, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-d, III-a, IV-c

D) I-c, II-a, III-d, IV-b

(குறிப்பு – திடப்பொருள்களான அலுமினியம், நிக்கல், எஃகு, இரும்பு, பித்தளை, கண்ணாடி போன்றவற்றின் வேகம் முறையே 6420 மீவி-1, 6040 மீவி-1, 5960 மீவி-1, 5950 மீவி-1, 4700 மீவி-1 மற்றும் 3980 மீவி-1 ஆகும்.)

31) ஒலியானது காற்றைவிட __________ மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும்.

A) ஐந்து

B) ஆறு

C) ஏழு

D) எட்டு

(குறிப்பு – ஒலியானது காற்றைவிட ஐந்து மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். கடல் நீரில் ஒலியின் வேகம் மிக அதிகமாக (அதாவது 5500 கிமீ / மணி) இருப்பதால், கடல் நீருக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று எளிதில் பேசிக்கொள்ள முடியும்.)

32) காற்றில் ஒலியின் வேகம்?

A) 300 மீவி-1

B) 400 மீவி-1

C) 500 மீவி-1

D) 600 மீவி-1

(குறிப்பு – ஒரு பொருளின் வேகமானது, காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீவி-1 )அகிகமாகும் போது அது மீயொலி வேகத்தில் செல்கிறது. துப்பாக்கி குண்டு, ஜெட் விமானம், ஆகாய விமானங்கள் போன்றவை மீயொலி வேகத்தில் செல்பவையாகும்.)

33) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருளானது காற்றில், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.

II. இந்த அதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவை கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருளானது காற்றில், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவை கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை ஒலி முழக்கம் என்கிறோம்.)

34) கீழ்கண்டவற்றுள் எது எதிரொலித்தல் விதிகள் ஆகும்?

I. ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்க வேண்டும்.

II. ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைய வேண்டும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு ரப்பர் பந்து சுவற்றில் பட்டு பிரதிபலிப்பது போல் ஒலியானது திடப்பொருள் அல்லது திரவத்தின் மீது பட்டு பிரதிபலிக்கும். ஒலி எதிரொலிப்பதற்கு, வழவழப்பான அல்லது சொரசொரப்பான ஒரு பெரிய பரப்பு தேவைப்படுகிறது. அந்த விதிகளாவன, ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்க வேண்டும். ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைய வேண்டும்.)

35) கீழ்கண்டவற்றுள் எது பலமுறை எதிரொலிப்பதின் பயனாகும்?

A) குழல் பெருக்கி

B) ஒலிபெருக்கி

C) குழல்கள்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – குழல்பெருக்கி, ஒலிபெருக்கி, குழல்கள், நாதஸ்வரம், செனாய், தாரை போன்ற இசைக் கருவிகள் யாவும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் ஒரு குழாயினை தொடர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பானது ஒலியை பெருக்கமடைய செய்து கேட்பவரை நோக்கி முன்னேறி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.)

36) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. உயரமான கட்டிடங்கள் மலைகள் போன்ற பரப்புகளில் அருகே நின்று கை தட்டினாலோ அல்லது குரல் எழுப்பினாலோ சிறிது நேரம் கழித்து அதை நாம் மீண்டும் கேட்க முடியும். இது எதிரொலி என அழைக்கப்படுகிறது.

II. ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு ஒலியானது தொடர்ந்து மூளையில் உணரப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – உயரமான கட்டிடங்கள் மலைகள் போன்ற பரப்புகளில் அருகே நின்று கை தட்டினாலோ அல்லது குரல் எழுப்பினாலோ சிறிது நேரம் கழித்து அதை நாம் மீண்டும் கேட்க முடியும். இது எதிரொலி என அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு ஒலியானது தொடர்ந்து மூளையில் உணரப்படுகிறது. எனவே, எதிரொலிக்கபட்ட ஒலியை தெளிவாக கேட்க வேண்டும் எனில் ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம் குறைந்தது 0.1 விநாடியாக இருக்கவேண்டும்.)

37) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒலியின் வேகம் 340 மீவி-1 என்றும், ஒலி மற்றும் எதிரொலிக்கு இடைப்பட்ட காலம் 0.1 விநாடியாக இருந்தால், ஒலி பயணித்த தொலைவு?

A) 30 மீ

B) 32 மீ

C) 34 மீ

D) 36 மீ

(குறிப்பு –

ஒலியின் வேகம் = 340 மீவி-1

எதிரொலிக்க எடுத்த நேரம் = 0.1 வி

ஒலி பயணித்த தூரம் = 340 × 0.1

ஒலி பயணித்த தூரம் = 34 மீ.)

38) எதிரொலியை தெளிவாக கேட்க வேண்டுமானால் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம் எத்தனை மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்?

A) 10 மீ

B) 12 மீ

C) 15 மீ

D) 17 மீ

(குறிப்பு – எதிரொலியை தெளிவாக கேட்க வேண்டுமானால் எதிரொலிக்கும் பரப்பு குறைந்தபட்சம் 17 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தொலைவானது காற்றின் வெப்ப நிலையைப் பொருத்து மாறுபடும். தொடர் அல்லது பலமுறை எதிரொலித்ததினால் எதிரொலியை ஒரு முறைக்கு மேலும் கேட்க இயலும்.)

39) ஒருவர் தனது துப்பாக்கியை சுட்ட 5 வினாடிக்குப் பிறகு எதிரொலியை கேட்கிறார். அவர் குன்றை நோக்கி 310 மீ முன்னோக்கி நகர்ந்து மீண்டும் சுடுகிறார். இப்பொழுது 3 வினாடிக்குப் பிறகு எதிரொலியை கேட்கிறார் எனில் ஒலியின் வேகம் எவ்வளவு?

A) 300 மீ/வி-1

B) 310 மீ/வி-1

C) 320 மீ/வி-1

D) 330 மீ/வி-1

(குறிப்பு – தொலைவு = வேகம் × காலம்

முதல் முறை சுடும்போது ஒளி கடந்த தொலைவு 2d = v × 5 ( சமன்பாடு 1)

இரண்டாவது முறை சுடும்போது ஒளி கடந்த தொலைவு, 2d – 620 = v × 3 (சமன்பாடு 2)

சமன்பாடு 2 ஐ மாற்றி எழுதினால்,

2d = ( v × 3 ) + 620

5v = 3v + 620

2v = 620

v = 320 மீ/வி-1 )

40) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பெரிய அறைகளில் ஏற்படுத்தப்படும் ஒலியானது, அறையின் சுவர்களில் பட்டு மீண்டும் எதிரொலிப்பு அடைந்து அதன் கேட்கும் தன்மை சுழியாகும் வரை நீடித்திருக்கும்.

II. பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர் முழக்கம் எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கலையரங்கம், பெரிய அறைகள் திரையரங்கம், ஒலிப்பதிவு கூடங்கள் போன்றவற்றில் ஏற்படும் அதிகமான எதிர் முழக்கம் விரும்பத்தக்கது அல்ல. ஏனெனில் இசையை ரசிக்கவோ, பேச்சை தெளிவாக கேட்கவோ இயலாது. எதிர் முழக்கத்தை குறைப்பதற்கு கலையரங்கத்தின் மேற் கூரை, சுவர்கள் போன்றவை ஒலியைச் கவரும் தன்மை கொண்ட பொருள்களால் மூடப்பட்டிருக்கும்.)

41) கீழ்க்கண்டவகைகளில் எது ஒலியை உட்கவரும் தன்மை கொண்டவை?

I. நார் அட்டை

II. திரைசீலை

III. பிளாஸ்டர்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) எல்லாமே

(குறிப்பு – ஒலியை உட்கவரும் தன்மை கொண்ட பொருள்கள் நார் அட்டை, திரைசீலைகள், பிளாஸ்டர் போன்றவை ஆகும். கலையரங்கம், திரையரங்கம் போன்றவைகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரை போன்றவை இத்தகைய பொருட்களால் மூடப்பட்டிருக்கும். இவை எதிர் முழக்கத்தை குறைக்கும்.)

42) மீயொலி பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நாய்களால் மீயொலியை கேட்க முடியாது.

II. மீயொலி, மனித உடலின் உறுப்புகளை ஆராய்வதற்கு பயன்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – 20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிகமான அதிர்வெண்ணை கொண்ட ஒலி அலைகள் மீயொலி அலைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த அலைகளை மனித செவிகளால் உணர முடியாது. ஆனால், விலங்குகள் இவற்றை கேட்டுணர முடியும். நாய்களால் மீயொலியை கேட்க முடியும். மீயொலி அலைகளின் முக்கியமான பயன், மனித உடலின் உறுப்புகளை ஆராய்வதற்கு இவை பயன்படுகின்றன.)

43) எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்தும் விலங்கு எது,

I. வௌவால்

II. திமிங்கிலம்

III. ஆமை

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வௌவால், டால்பின் மற்றும் சில திமிங்கிலங்கள் மீயொலியை என்படுத்தும் முறை ஆகிய எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் பொருட்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. வவ்வால்கள், இந்த முறை மூலம் இருட்டான குகைகளில் பயணிப்பதோடு, தங்களுக்கு தேவையான இரையையும் பெற்றுக் கொள்கின்றன.)

44) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மீயொலி அலைகள் உடலினுள் செலுத்தப்படும் போது எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன.

II. மீயொலி அலைகள் கடல் கண்காணிப்பிலும், மருத்துவ ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மீயொலி அலைகளை உடலினுள் செலுத்தும்போது, அவை உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன. இந்த அலைகள் கண்டறியப்பட்டு, ஆராயப்பட்டு கணினியில் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் வரைபடத்திற்கு எதிரொலி ஆழ வரைவு (Echogram) என்று பெயர்.)

45) மீயொலியின் பயன்களில் சரியானது எது?

I. பொருள்களின் மீது உள்ள மிகச்சிறிய துகள்களை நீக்குவதற்கு, அப்பொருள்கள் மியோலி செல்லும் திரவத்தினுள் வைத்து தூய்மைப்படுத்தப்படுகிறது.

II. உலோகபட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை மீயொலி அலைகளை கொண்டு கண்டறிய முடியும்.

III. மீயொலி அலைகள் மூலம் இதயத்தின் பல்வேறு பகுதிகளின் வரைபடத்தை உருவாக்க முடியும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொருள்களின் மீது உள்ள மிகச்சிறிய துகள்களை நீக்குவதற்கு, அப்பொருள்கள் மீயொலி செல்லும் திரவத்தினுள் வைத்து தூய்மைப்படுத்தப்படுகிறது. உலோக பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை மீயொலி அலைகளைக் கொண்டு கண்டறிய முடியும். மீயொலி அலைகளைக் கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறுசிறு துகள்களாக உடைக்க முடியும்.)

46) சோனார் (SONAR) என்ற கருவியை கொண்டு நீருக்கு அடியில் உள்ள பொருளின் எந்த தகவலை அறிய முடியும்?

I. தூரம்

II. திசை

III. வேகம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியில் உள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றை கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலியை பரப்பக்கூடிய சாதனமும், மீயொலியை உணரக் கூடிய உணர்வியும் உள்ளது.)

47) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சோனார் கருவி மூலம் பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை கொண்டு, நீருக்கு அடியில் இருக்கும் பொருளின் தொலைவை கண்டறிய முடியும்.

II. பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளி ‘t’ எனவும், நீரின் வேகத்தை ‘v’ எனவும் குறிப்பிடுவர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சோனார் கருவி மூலம் பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை கொண்டு, நீருக்கு அடியில் இருக்கும் பொருளின் தொலைவை கண்டறிய முடியும். பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளி ‘t’ எனவும், நீரின் வேகத்தை ‘v’ எனவும் குறிப்பிடுவர். அவ்வாறெனில் மீயொலியானது கடந்த தொலைவு 2d / t = v ஆகும்.)

48) எதிரொலி நெடுக்கம் (echo-ranging) என்பதன் பயன் என்ன?

I. நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள் ஆகியவற்றின் இடத்தை கண்டறிய முடியும்.

II. நீருக்கு அடியில் உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றின் இருப்பிடத்தை அறிய முடியும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சோனார் கருவிக்கொண்டு நீருக்கு அடியில் உள்ள பொருள்களின் தொலைவை கண்டறியும் முறை எதிரொலி நெடுக்கம் (echo-ranging) என்று அழைக்கப்படுகிறது. கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றின் இடத்தை கண்டறிவதற்கும் இந்த முறை பயன்படுகிறது.)

49) ஒரு கப்பலில் இருந்து அனுப்பப்படும் மீயொலியானது கடலுக்கு அடியில் உள்ள பொருளின் மீது எதிரொலிக்கப்பட்டு 3.42 வினாடிக்கு பிறகு மீண்டும் வந்தடைகிறது. கடல்நீரில் மீயொலியின் வேகம் 1531 எனில் கப்பலிலிருந்து கடலின் அடிப்பகுதி வரை உள்ள தொலைவு எவ்வளவு?

A) 2600 மீ

B) 2612 மீ

C) 2618 மீ

D) 2624 மீ

(குறிப்பு – மீயொலி கடந்த தொலைவு = 2 × கடலின் ஆழம்

தொலைவு = வேகம் × நேரம் என்பதால்,

2d = வேகம் × நேரம்

d = 5236 / 2

d = 2618 மீ )

50) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மின்னொலி இதய வரைபடம் (ECG) என்பது இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறை ஆகும்.

II. இந்த முறையில் இதயத்தில் இருந்து பெறப்படும் ஒலியானது மின் சிக்னல்களாக மாற்றப்படுகின்றன.

III. ECG என்பது நேரத்தைப் பொறுத்து மாறக்கூடிய இதய தசைகளின் மின்சார செயல்பாடுகளை குறிப்பதாகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மின் ஒலி இதய வரைபடம் என்பது இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறையாகும். இது இதயத்தை பற்றி அனேக தகவல்களை அளிக்கின்றது. மேலும் இதயநோய் நோயாளிகளைப் பற்றிய ஆய்வில் இது மிக முக்கியமான பகுதியாக உள்ளது. பொதுவாக பகுப்பாய்வு செய்வதற்காக தாள்களின் மீது, பதிவு செய்யப்பட்ட சிக்னல்கள் அச்சிடப்படுகின்றன.)

51) செவியின் வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) செவிமடல்

B) வெளிக்காது மடல்

C) செவிக்குழாய்

D) செவிப்பறை

(குறிப்பு – செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியை சேகரிக்கிறது. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளி செவிகுழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது.)

52) நடு செவியில் உள்ள எலும்புகளில் அல்லாதது எது?

A) பட்டை

B) அங்கவடி

C) சுத்தி

D) காரை

(குறிப்பு – வெளி செவி குழாயின் முடிவில், செவிப்பறை (Tympanic membrane) உள்ளது. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது, செவிப்பறையின் வெளிப்பகுதியில் உள்ள அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது. அதுபோலவே காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது, செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது. இவ்வாறாக செவிப்பறை ஆனது அதிர்வு அடைகின்றது. இந்த அதிர்வானது, நடுச்செவியில் உள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி) பலமுறை பெருக்கமடைகிறது.)

53) செவிக்குள் உருவாகும் மின் சைகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) காக்லியா

B) காஸ்லியா

C) கால்சியா

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்தவேறுபாடானது, காக்லியா (Cochlea) மூலம் மின் கைகளாக மாற்றப்படுகின்றது. இந்த மின் சைகைகள் காது நரம்பு வழியே மூளைக்குச் செலுத்தப்படுகின்றன. மூளையானது அவற்றை ஒலியாக உணர்கின்றது.)

 

Previous page 1 2