General TamilTnpsc

General Tamil Model Question Paper 15

61. பெருமை + களிறு-பெருங்களிறு.

புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு

(அ) ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல்

(ஆ) ஈறுபோதல், அடியகரம், ஐயாதல்

(இ) ஈறுபோதல், ஆதிநீடல், முன்நின்ற மெய் திரிதல்

(ஈ) ஈறுபோதல், இனமிகல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஈறுபோதல், இனமிகல்

விளக்கம்:

பெருமை + களிறு-பெருங்களிறு.

“ஈறுபோதல்” என்ற விதிப்படி நிலைமொழி ஈற்று “மை” விகுதி கெட்டுப் “பெரு + களிறு” என்றானது. பின் “இனம் மிகல்” என்ற விதிப்படி வருமொழி முதல் வல்லினத்திற்கு(க்) இனமான மெல்லினம் (ங்) மிகுந்து “பெருங்களிறு” என்றானது.

62. “நல்லொழுக்கம் ஒன்றே – பெண்ணே

நல்ல நிலை சேர்க்கும்

புல்லொழுக்கம் தீமை – பெண்ணே

பொய்யுரைத்தல் தீமை”

– இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) ஒன்றே

(ஆ) பெண்ணே

(இ) சேர்க்கும்

(ஈ) தீமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பெண்ணே

63. “சேர்” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்

(அ) சேர்ந்து

(ஆ) சேர்க

(இ) சேர்ந்த

(ஈ) சேர்ந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சேர்ந்த

விளக்கம்:

சேர்-வேர்ச்சொல்; சேர்ந்து-வினையெச்சம்;

சேர்க-வியங்கோள் வினைமுற்று;

சேர்ந்த-பெயரெச்சம்;

சேர்ந்தவர்-வினையாலணையும் பெயர்;

சேர்ந்தது-வினைமுற்று

64. கம்பரின் நூல் பட்டியலில் கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத நூல் எது?

(அ) ஏரெழுபது

(ஆ) அபிராமி அந்தாதி

(இ) சரசுவதி அந்தாதி

(ஈ) திருக்கை வழக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அபிராமி அந்தாதி

விளக்கம்:

அபிராமி அந்தாதியை இயற்றியவர் அபிராமி பட்டர். அவரது இயற்பெயர் சுப்பிரமணிய ஐயர்.

65. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. ஏற்றப்பாட்டு – 1. ஒருவகை மீன்

ஆ. நாரை – 2. நீர் நிலை

இ. குறவை – 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு

ஈ. குளம் – 4. கொக்கு வகை

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 2 4 3 1

(இ) 1 2 4 3

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 4 1 2

66. கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.

“ஊழி பெயரினும் தாம்பெயரார் ——“

(அ) சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்

(ஆ) தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்

(இ) பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு

(ஈ) சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

விளக்கம்:

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்

– திருக்குறள் 989

அதிகாரம்-சான்றாண்மை; பிரிவு-பொருட்பால்; இயல்-குடியியல்.

பொருள்: “சால்புடைமை” என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஊழிக்காலத்தில் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

67. “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்.

(அ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம், இருபா இருப்ஃது

(ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது

(இ) நாலடியார், திருக்குறள்

(ஈ) அகநானூறு, திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) நாலடியார், திருக்குறள்

68. சுரதா எழுதிய நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்ற நூல்.

(அ) சுரதாவின் கவிதைகள்

(ஆ) துறைமுகம்

(இ) தேன்மழை

(ஈ) கவரும் சுண்ணாம்பும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தேன்மழை

விளக்கம்:

கவிஞர் சுரதா. இயற்பெயர்-தி.இராசகோபாலன்.

பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே “சுரதா” ஆயிற்று. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலக்கானப் பரிசை இவரின் “தேன்மழை” என்ற நூல் பெற்றது. தேன்மழை என்ற நூலில் “இயற்கையெழில்” முதல் “ஆராய்ச்சி” ஈறாக பதினாறு பகுதிகளாக இவரது கவிகைள் இடம் பெற்றுள்ளன.

69. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்

(அ) மறைமலையடிகள்

(ஆ) பரிதிமாற்கலைஞர்

(இ) சுந்தரம் பிள்ளை

(ஈ) திரு.வி.க

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்:

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். “சூரிய நாராயண சாஸ்திரியார்” என்ற தம் பெயரை “பரிதிமாற் கலைஞர்” என மாற்றிக் கொண்டார். “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் பெற்றவர்.

இவரின் படைப்புகள்:

தனிப்பாசுரத்தொகை, சித்திரக்கவி.

“ரூபாவதி”, “கலாவதி” – நாடக நூல்கள்.

நாடகவியல் – செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நாடக இலக்கண நூல்.

70. ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?

(அ) தூது

(ஆ) உலா

(இ) பள்ளு

(ஈ) அந்தாதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) உலா

விளக்கம்:

உலா: 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் “உலா” ஒன்றாகும். இறைவனையோ, அரசனையோ அல்லது மக்களுள் சிறந்தவரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவர்கள் வீதியில் உலா வரும்போது ஏழுபருவத்தைச் சார்ந்த பெண்களும் காதல் கொள்வதாய் கலி வெண்பாவால் பாடப்படுவதாகும்.

ஏழு பருவங்களைச் சார்ந்த பெண்கள்.

பருவங்கள் வயது

பேதை 5-7

பெதும்பை 8-11

மங்கை 12-13

மடந்தை 14-19

அரிவை 20-25

தெரிவை 26-32

பேரிளம் பெண் 33-40

“உலா” என்பது அகப்பொருள் துறையில் பெண்பாற்கைக்கிளை வகையைச் சார்ந்தது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!